இது தான் எகிப்தோ? பாலைவனம்னு சுட்டிக்காட்ட ஒட்டகங்கள் இருக்கின்றன.
அட! இதானே பிரமிட்? அப்போ நேத்திக்குப் பார்த்தது? ஙே!!!!!!!!!!!!!!!!!!!!!
என்னவாக்கும் இதெல்லாம்? கீழே?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இது ஏதோ நுழைவாயிலாட்டமா இருக்கே!
இது ஏதோ வீடு மாதிரி இல்லையோ? படிக்கட்டுகள் இருக்கும் போல!
அது என்ன கறுப்பு, சிவப்பு வளையம்?
அட! நம்ம ரங்க்ஸ்! இங்கே வந்து நிக்கறாரே! ஏசுவோடு சேர்த்துத் தான் படம் எடுக்கச் சொன்னார். எடுத்தேன்! இங்கே எப்பூடி?
கிறிஸ்துமஸ் மர அலங்காரங்கள். இம்மாதிரி நிறையவே காண முடியும். நம்ம கில்லர்ஜிக்குப் பிடிக்காது என்பதால் ஒரு சில மட்டும்! இஃகி,இஃகி,இஃகி!
எதிரே உள்ள கட்டிடம் என்ன கட்டிடம்? ???????
மாமா மாறுவேஷத்தில் இருக்கும் ஜேம்ஸ்பாண்ட் மாதிரிஇருக்கிறார்! படங்கள் சில என்ன என்றே சட்டென தெரிய மாட்டேன் என்கிறது!
ReplyDeleteவாங்க ஸ்ரீராம்! நீண்ட விடுமுறைக்குப் பின்னர் வருகைக்கு நன்றி. முடிஞ்சால் முந்தைய 2 பதிவுகளைப் படித்தால் கொஞ்சம் புரியும். எந்த நாட்டைச் சேர்ந்ததுனு எனக்கும் தான் புரியலை! இஃகி,இஃகி,இஃகி, குறிப்புக்கள் எடுத்துக்க முடியலை! குளிரில் விரைச்சுப் போயிட்டோம்.
Deleteபனிக்கட்டியில் சிற்பங்களா? சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். கலைநயத்துடன் இருக்கிறது.
ReplyDeleteஆமாம், விளக்கத்துக்கு முந்தைய பதிவுகளை நேரம் இருந்தால் பார்க்கவும். நன்றி.
Deleteபனிகட்டி சிற்பங்கள் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteநன்றி.
Deleteஎனக்கு "கிருஸ்துமஸ் மரம் பிடிக்காது" என்று கதை கட்டி விட்டீர்களே...
ReplyDeleteஹாஹா, கில்லர்ஜி, அப்படி எங்கே சொன்னேன்? ஒரே மாதிரிப் படங்கள் உங்களுக்குப் பிடிக்கலைனு சொன்னேன். :))))))
Deleteஎன்ன இது துப்பறியும் சாம்பு அம்பேரிக்காவில் என்று நான் திகைத்தேன் (காற்றாலை பக்கம் நிற்பவர்.) . அப்புறம் தான் தெரிஞ்சுது நம்ப சாம்பு மாமா தான் துப்பறியும் சாம்பு என்று.
ReplyDeleteஉங்களிடம் உள்ள ஒரேகுறை. போட்டோ போகஸ் ஆவதற்குள் பட்டனை அமர்த்தி விடுவீர்கள். அதே போல் நடக்கும்போதே போட்டோ பட்டனை அமுக்கவீர்கள். உங்களுடைய காமெரா மற்றும் செல்போன் எல்லாம் லைட் போகஸ் எல்லாம் தானே செட் செய்ய 2 செகண்ட் பிடிக்கும். நின்னு நிதானமாய் எடுங்கள். Jayakumar
கொஞ்சம் நின்னு படம் எடுக்கும்படி அங்கே வாய்ப்புக் கிடைக்கலை ஜேகே அண்ணாநின்று கொண்டு ஃபோகஸ் எல்லாம் பார்த்துக் க்ளிக் செய்யும்போது பார்த்து யாரானும் குறுக்கே வருவாங்க அல்லது பின்னாலிருந்து இடித்துக் கொண்டு போவார்கள். இவ்வளவு தான் முடிஞ்சது. சும்மாவே நாம எடுக்கிற படங்கள் எல்லாம் ஏனோதானோவென்று தான் இருக்கும். கூட்டத்தில் எடுக்கும் அளவுக்குப் பயிற்சி இல்லை..
Deleteஅட!! இறுதி நம்ம கோவில் மிகவும் அழகு.
ReplyDeleteவாங்க மாதேவி, எங்களுக்கும் நம்ம கோயில் மாதிரித் தான் தெரிஞ்சது.
Deleteமுக்கால் வாசி எகிப்திய சிற்பங்கள் தான். அதே சிங்கம், ஸ்பிங்க்ஸ்,
ReplyDeleteஒசிரிஸ்,ரா, நெஃப்ரிடிடி ,மற்றும் ஃபரொஸ்.
காவல்காக்கும் பூனைகள்.
சிங்கம். நன்றாகச் செய்திருக்கிறார்கள்.
ஒரு அசப்பில் துப்பறியும் சாம்பு என்று நினைத்துவிட்டேன். நல்ல
கம்பீரம் மாமா.
ஓஓ, நன்றி வல்லி. விரிவான விளக்கத்துக்கு நன்றி.
Deleteநன்றாக இருக்கிறது அம்மா.....
ReplyDeleteசில படங்கள் கொஞ்சம் ஷேக் ஆகிவிட்டன போல...
நன்றி.
Deleteமிக அருமை. ரசிக்கும்படி உள்ளது.
ReplyDeleteநன்றி.
Deleteஆஆஆஆஆ இன்னமும் குளிருதே எனப் பார்த்தேன் கீசாக்காவின் பனி..பனி.. படங்கள் கலங்கலாக இருப்பினும் போட்டுக் காட்டாமல் விட மாட்டேன் எனக் கங்கணம் கட்டியிருக்கிறா கீசாக்கா:))..
ReplyDeleteஆஆஆஆ ஸ்ரீராமின் கொமெண்ட் பார்த்தே, ஜக்கெட்டில் ஒளிஞ்சிருக்கும் மாமாவைக் கண்டு பிடிச்சேன் ஹா ஹா ஹா...
@அதிரடி, இங்கே நேற்று,முந்தாநாளெல்லாம் மழை, காற்று, இன்று வெயில்! மாறி மாறி அடிக்கும் சீதோஷ்ணம் உடலைப் படுத்துகிறது! ஹாஹா, மாமாவை நிறையத் தரம் போட்டிருக்கேனே அதிரடி! நீங்க அப்போல்லாம் இந்த வலைப்பக்கம் எட்டிக் கூடப்பார்த்தது இல்லை. :P :P :P
Deleteசிற்பங்களை எதுக்கு தொட்டுப் பார்க்கணும்னு சொல்லியிருந்தீங்க. பனிக்கட்டியை எந்த வித்த்தில் பார்த்தாலும் தொட்டுப் பார்க்கணும், அதன் குளிர்ச்சியை அனுபவிக்கணும்னு தோணாதா? என்ன ரசனையோ...
ReplyDeleteஅப்படி எல்லாம் பனிக்கட்டியைத் தொட்டுப் பார்க்கும் ஆவல் எங்களில் யாருக்கும் வரலை அல்லது ஆவலே இல்லை. இங்கே மெம்பிஸில் பனி பெய்யும்போதே வெளியே போய் அதை எல்லாம் எடுக்க வேண்டாம். அங்கேபோய் நடக்க வேண்டாம் என்றே எச்சரிப்பார்கள். பூமியில் பனி படிந்திருக்கும்போது கூடக் கவனமாக நடந்து செல்ல வேண்டும். கீழே விழாமல் பார்த்துக்கணும் என்றெல்லாம் எச்சரிக்கை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். மேலும் இந்தச் சிற்பங்கள் பார்வைக்காக வைத்துள்ளவை. அவற்றைத் தொடக்கூடாது எனவும் தொடாமலே பார்க்கணும் என்பதும் தானே முக்கியமான எல்லோரும் சொல்லுவது! Yarlvanan,Germany
Deleteஅதன் குளிர்ச்சி தான் எங்கள் கண்கள், மூக்கு, வாய் (புகையாக வரும்) மற்றும் கை, கால்களின் விரைப்புத் தன்மையிலேயே தெரிந்து விடுமே!
சிற்பங்கள் நல்லாருக்கு. இயற்கையான வெண் அல்லது நிறமற்ற நிறத்தில் இருந்திருந்தால் இன்னமும் அழகாக இருந்திருக்குமோ?
ReplyDeleteநன்றாக இருக்காது நெல்லைத்தமிழரே, வர்ணம் கொடுக்காமல் நினைத்துப் பார்க்கவும்!
Deleteபரவாயில்லை.... அம்பேரிக்கா போய், மாமாவை நடுநடுங்க வச்சிட்டீங்களே.... உங்களுக்கு இல்லை... பனிக்கட்டிகளுக்கு... ஹா ஹா
ReplyDeleteஎல்லோருமே தான் நடுங்கிக் கொண்டு இருந்தோம். :))))
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஇன்றைக்கும் பனிக்கட்டி சிற்பங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கின்றன.
எல்லோருமே குளிருக்கு அடக்கமாக உடை மேல் உடை அணிந்து வித்தியாசமாகத்தான் இருக்கின்றனர். நீங்கள் அனைவரும் அங்குள்ள குளிரை எப்படித்தான் தாங்கினீர்களோ.? பாவம்.தங்கள் பேத்தியும் எப்படித்தான் தாங்கினாளோ?
கிறிஸ்துமஸ் மரங்கள் பனிச்சிற்பங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன.
கடைசி படம் நம்மூர் கோவிலை எனக்கும் நினைவுபடுத்தியது.
வரிசையாக அமர்ந்திருக்கும் அந்த பனிச்சிற்பங்கள் என்னவாக இருக்கும்? எனக்கு நம்மூர் கோவில்கள் பிரகாரத்தில் அமர்ந்திருக்கும் நாயன்மார்கள் நினைவு வந்தது. ஹா ஹா ஹா. அத்தனை குளிரிலும் வரிசையாக அழகான படங்களை எடுத்து எங்களுக்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வீட்டை விட்டுக் கிளம்பும்போது குளிரெல்லாம் தாங்குவேன் எனப் பெருமையாகப் பீத்திக் கொண்டு தான் போனேன் கமலா! ஆனால் அங்கே உள்ள குளிர் கற்பனை கூடச் செய்ய முடியாத குளிர்! உண்மையிலேயே எங்க பேத்தி மட்டுமல்ல இன்னும் சின்னஞ்சிறு குழந்தைகளும் வந்திருந்தன. அவற்றுக்கெல்லாம் எப்படி இருந்திருக்கும், சொல்லக் கூடத் தெரியாத வயசு என நினைத்துக் கொண்டோம். எனக்கும் நாயன்மார் நினைவு தான் வந்தது. கடைசிப் படம் என்னனு வல்லி தான் சொல்லணும்.
Deleteபனிச் சிற்பங்கள் அழகு.
ReplyDelete