எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, January 21, 2020

பனிக்கட்டிச் சிற்பங்களை மட்டும் பாருங்கள்!

சில படங்கள் ஒரே மாதிரி வருவதாகச் சொல்லி இருந்தார் கில்லர்ஜி! அதைத் தவிர்க்க இயலாது. இரண்டு பக்கங்களிலும் அடுத்தடுத்து முதலில் அலங்காரங்கள் ஆனதும் தொடர்ந்து ஒன்றை ஒன்று ஒட்டியே எல்லாச் சிற்பங்களும் வருகின்றன. ஒன்றை எடுத்தால் முழுதும் எடுக்கும்போது அடுத்ததில் பாதி சேர்ந்து வரும் அல்லது வளைந்து செல்லும் பாதையின் பின் புறம் இருப்பதில் ஒரு பகுதி தெரியும். அமைப்பு அப்படி. இங்கே நினைவில் இருப்பனவற்றுக்கு மட்டுமே விளக்கம் கொடுக்கிறேன். சிலது நினைவில் இல்லை.இந்த கோபுரம் எந்த நாடுனு தெரியலை. ஆனால் இங்கே டாலஸில் இதே போல் ஒரு கோபுரம் பொண்ணு அழைத்துச் சென்று பார்த்தோம். அதைப் பற்றிப் பின்னால். இது அநேகமா ஏதோ ஒரு ஐரோப்பிய நாடுனு நினைவு.


இதைப் பார்க்கப் பிள்ளையார் மாதிரி இருக்கு இல்ல? நம்ம ரங்க்ஸ் தான் காட்டினார் உம்மாச்சி பாருனு!


எகிப்திய பிரமிடுகளின் மாதிரிக்கு அந்தப் பக்கம் ஆர்க்டிக், வடதுருவத்து மனிதன். அடுத்துக் கீழே ஆர்க்டிக் முழுசும் பார்க்கலாம். பின்னால் சுதந்திர தேவி சிலையின் மாதிரி தெரியும். அதைக் கிட்டவும் போய் எடுத்திருக்கேன். அதனால் அதுவும் வரும்.
விளையாட்டு வீரர்கள். எந்த நாடுனு நினைவில் இல்லை. குறிப்பாவது எடுக்கிறதாவது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனக் காது, கண், மூக்கு எல்லாம் எரியக் கைவிரல்கள், கால் விரல்கள் விரைப்பாக ஆக உள்ளுக்குள்ளே நெஞ்சுக்குள் குளிர் பரவ! என்னோட கர்வபங்கம்.


சுதந்திர தேவி சிலையும் பின்னாலும் பக்கவாட்டிலும் வேறு நாடுகளின் சிற்பங்களில் ஒரு பகுதியும்


இது எல்லோரும் ஏற முயன்றார்கள்னு நினைக்கிறேன். ஆனால் ஏறுவதற்கான இடம் இல்லை. அது தனியா அமைக்கப்பட்டிருந்தது. கீழே இருப்பது கன்னி மேரினு நினைவு.

இயேசு சிலுவையில்!


இன்னும் படங்கள் இருக்கின்றன. நான் தேர்ந்தெடுத்துத் தான் போடுகிறேன். அடுத்த இரு பதிவுகளில் படங்களே வரும். இதைத் தவிர்த்து விளக்கு அலங்காரங்களின் படங்கள் வேறே. அதுவும் நிறையத்தான். இத்தனைக்கும் ஒரு பகுதி எடுக்கவே முடியலை. களைத்து விட்டோம்.


மாயன் கலாசாரச் சிலைகள்னு நினைவு.30 comments:

 1. அந்த கோபுரம் போன்ற ஹோட்டல் அபுதாபியில் இருக்கிறது அதை மையமாக வைத்து செதுக்கி இருக்கலாம் ???

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி, அந்த மாதிரி கோபுரம் டாலஸில் மேலே ஏறிப் பார்த்தோம். படங்கள் எடுத்திருக்கேன். கொஞ்சம் பின்னால் அவையும் வரும்.

   Delete
 2. படங்கள் பார்த்தேன்.
  பனிக்கட்டிகளில் சிற்பங்கள் செய்பவர்களை பாராட்ட வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி, இங்கே மட்டுமில்லை, இன்னும் சில இடங்கள் போனவையும் படங்கள் நிறைய எடுத்திருக்கேன். டாலஸில் ஒரு ம்யூசியத்திலும் படங்கள் எடுத்தேன். கெனடி மெமோரியல் போனோம். ஆனால் படங்கள் எடுக்க அனுமதி இல்லை. ஆஸ்வால்ட் கெனடியை எங்கே நின்று சுட்டானோ அந்த இடத்திலிருந்து கெனடி வீதி வலம் வந்த பகுதியெல்லாம் நன்றாய்ப் பார்த்தோம்

   Delete
 3. மருந்தைச் சாப்பிடும்போது குரங்கை நினைக்க வேண்டாம் மாதிரியான தலைப்பு.

  இதெல்லாம் கீசா மேடத்துக்கு மட்டுமே தோணும். தலைப்பைப் பார்த்துவிட்டு கேமராவுக்கு பின் முதுகைக் காட்டும் பெண்ணைத் தேடினேன். ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லைத் தமிழரே, நான் தலைப்புக் கொடுத்ததின் காரணமே வேறே! எந்தப் படம் எந்த நாடுனு தெரியாது, ஆகவே படங்களை மட்டும் பாருங்கனு சொன்னேன். அது வேறே அர்த்தத்தையும் கொடுக்கும்னு இப்போத் தான் புரியுது. :(((((

   Delete
 4. இயேசு எங்க சிலுவையில் இருக்கார்? இது மலைப் பிரசங்கம் செய்யும் போஸ். சிலுவையில் இருக்கும்போது இடுப்பில் சிறிய துணி மட்டுமே உண்டு

  ReplyDelete
  Replies
  1. நெ/த. கைகளை விரித்துக் கொண்டு நிற்பதே சிலுவையில் நிற்கிறாப்போல் இருக்கேனு சொன்னேன்.

   Delete
  2. ஆம், நானும் சொல்ல நினைத்தேன்.

   Delete
 5. கலர் கலராக இருப்பதால் இடத்தின் குளிர் தாக்கம் படங்கள்ல தெரியலை.

  ரொம்ப குளிரா இருந்ததா? சிலைகளை யாரும் தொட முடியாதபடி வச்சிருந்தாங்களா?

  உங்களுக்கு நல்ல அனுபவமா இருந்திருக்குமே

  ReplyDelete
  Replies
  1. நெ.த. பனிக்கட்டிக் கீழே, மேலே, சுற்றி! அதை அப்படியே உறைநிலையிலேயே வைத்திருக்கவேண்டிக் கொடுக்கப்பட்டிருக்கும் குளிர். கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. சிற்பங்களை எதுக்குத் தொட்டுப் பார்க்கணும்? கை, கால்கள் அசையுதேனு சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தோம்.

   Delete
 6. அமெரிக்காவின் பல இடங்களை வடித்திருக்கிறார்கள். அருமையான சிற்பங்கள்.
  அந்த மங்கிய விளக்கொளியில் ,நல்ல படங்களை எடுத்திருக்கிறீர்கள்.
  பிள்ளையார் மாதிரி தெரிவது ஏப்ரஹாம் லிங்கன். மேலே இருப்பதும் இன்னோரு அமெரிக்கத் தலைவர். எல்லாம் சௌத் டகோடா மவுண்ட் ரஷ்மோர்
  அற்புத சிற்பங்கள்.
  நான் அங்கே போகும்போது கிடைத்த பிரமிப்பிலிருந்து இன்னும் மீளவில்லை.
  ஐஸ் குகைக்குள் போய்வந்த பாதிப்பு விலகவே
  சில மணித்துளிகளாகும்.
  அதிசயிக்கத்தக்க வேலைப்பாடுகள். அந்த டவர் சியாட்டில் ஸ்பேஸ் நீடில்.
  மிக மிக நன்றி கீதா மா.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, நான் அம்பேரிக்காவில் எங்கேயுமே சுத்திப் பார்க்கப் போனதில்லை. போனால் உள்ளூர் மட்டும் தான். அதனால் எனக்கு இந்த இடங்கள் தெரியலை. நீங்க வந்து விளக்கம் கொடுத்ததுக்கு ரொம்பவே நன்றி. நான் வெவ்வேறு நாடுனு நினைச்சிருந்தேன். ரொம்ப ரொம்ப நன்றி வல்லி. நீங்க சொன்னப்புறமாப் பார்த்தா லிங்கன் தெரியறார். :)))) மூக்கைப் பார்த்துட்டுப் பிள்ளையார் மாதிரி இருக்கேனு நினைச்சோம்.

   Delete
 7. நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 8. புகைப்படங்கள் மிகவும் அழகாய் இருக்கின்றன!

  ReplyDelete
  Replies
  1. நன்றி மனோ சாமிநாதன்!

   Delete
 9. நன்றாக இருக்கின்றன. வல்லி அக்கா சொல்லும் முன் நானும் பிள்ளையார் என்றே நினைத்தேன். பின்னர்தான் லிங்கன் கண்ணுக்குத் தெரிந்தார். ஹாஹா!

  ReplyDelete
  Replies
  1. வாங்க பானுமதி, ரசித்ததுக்கு நன்றி.

   Delete
  2. //நானும் பிள்ளையார் என்றே நினைத்தேன். பின்னர்தான் லிங்கன் கண்ணுக்குத் தெரிந்தார். ஹாஹா!//

   தட் 'நாயக்கண்டா கல்லக்காணோம்; கல்லக்கண்டா நாயக்காணோம்' மோமண்ட்!

   Delete
  3. ஹாஹாஹா, பலருக்கும் பிள்ளையாராகக் காட்சி கொடுத்திருக்கார். :)

   Delete
 10. The statue of JESUS CHRIST is known as CHRIST the Redeemer. It is in Rio De Janeiro. He is calling everyone to follow him.

  ReplyDelete
 11. வணக்கம் சகோதரி

  பனிக்கட்டி சிற்பங்கள் மிகவும் அழகாக உள்ளது.அந்த இரண்டாம் படம் பூகோள உருண்டை மாதிரியான அமைப்பா?

  கோபுரம் போலுள்ள சிலை,
  தலைவர்கள் சிலை,
  சுதந்திர தேவி சிலை,
  ஏசுபிரான் சிலை,
  கன்னி மாதா சிலை,
  மாயன் கலாசார சிலைகள் என அத்தனையும் மிக அழகாக வடிவமைத்து உள்ளார்கள். நீங்களும் அத்தனை குளிருலும் அருமையாக படங்கள் எடுத்து எங்களுக்காக பகிர்ந்துள்ளீர்கள். நன்றி.

  நீங்கள் குறிப்பிட்ட பிள்ளையார் சிலை முதலில் பார்க்கும் போது பிள்ளையார் ஏதோ தபேலாவை வைத்துக் கொண்டிருக்கிற மாதிரி எனக்கு கற்பனையில் தெரிந்தது. பின் கருத்துரையில், சகோதரி வல்லி அவர்கள் கூறியதை பார்த்து படத்தை பெரிதாக்கி பார்த்தும் ஆபிரகாம் லிங்கன் சிலை மூக்கு முழியுடன் கண்ணுக்கு புலப்பட்டது. ஆனால் இதையெல்லாம் நுணுக்கமாக செய்து பத்திரமாக நிர்வகிப்பது கடினமான செயல்தான் இல்லையா? அவர்களுக்கு பாராட்டுக்கள். எங்களுக்காக குளிரை பொருட்படுத்தாமல், படங்கள் எடுத்து விளக்கமளித்த தங்களுக்கும் மிக்க நன்றிகள். நேற்று இரவே வந்து கருத்தளிக்க நினைத்தேன். இயலவில்லை.. என் தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, எப்போ வந்தால் என்ன? வருகையே மகிழ்ச்சி தரும். தாமதமாக வந்து விரிவாகக் கருத்து சொன்னதுக்கு நன்றி. அப்போ எல்லாம் எந்த எந்த நாடுனு புரிந்தே பார்த்தோம். அவற்றை விரிவாக எழுதி வைச்சுக்க நினைச்சுக் கை விரல்கள் அசையவே இல்லை! :)))))) நாம அனைவருமே லிங்கனைப் பார்த்துட்டுப் பிள்ளையார்னு நினைச்சிருக்கோம். வல்லிக்கு அங்கெல்லாம் போனதினால் தெரிஞ்சிருக்கு. நாங்க அதிகம் வெளியே சுற்றிப் பார்க்கப் போவதில்லை. முக்கியக் காரணம் சாப்பாடு! :)))))

   Delete
 12. எனக்கு அந்தப் படத்தைப் பார்த்தால் பிள்ளையார் மாதிரியில்லை!  அதற்கான அடையாளமே இல்லையே!

  ReplyDelete
  Replies
  1. என்னமோ நமக்கெல்லாம் உம்மாச்சின்னாலே முதல்லே பிள்ளையார் தானே!

   Delete
 13. சில படங்களுக்கான குறிப்பை படத்துக்குக் கீழேயேயும், சில படங்களுக்கான குறிப்பை படத்துக்கு மேலேயும் கொடுத்திருக்கிறீர்கள் போல...

  ReplyDelete
  Replies
  1. ஒரே மாதிரிப் படங்களில் இரண்டு படங்களுக்கும் நடுவில் கொடுத்திருக்கேன். இரண்டுக்கும் சேர்த்து.

   Delete
 14. பனிக்கட்டிச் சிகரங்கள் அனைத்தும் அழகு!

  கர்வபங்கம் - :) சில சமயங்களில் இயற்கை நம்மை இப்படி உணர வைக்கும்!

  ReplyDelete