எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, January 18, 2020

அம்பேரிக்கப் பொங்கலும், கனுவும்!

அம்பேரிக்காவுக்கு முதல்லே வந்தப்போவும் தீபாவளி வந்தது, கார்த்திகை வந்தது, பொங்கல் வந்தது. எல்லாமும் இங்கே கொண்டாடுவதைப் பார்த்துட்டு வெறுத்துப் போச்சு! அதுக்கப்புறமா இரண்டாம் முறை வந்தப்போத் தான் அப்பு பிறந்தாள். அதுக்காக வந்துட்டுப் புரட்டாசி மாசம் நவராத்திரிக்கு இந்தியா போயாச்சு. அதன் பின்னர் வந்தப்போ நவராத்திரி முடிஞ்சு வந்தோம். ஆனால் தீபாவளி கொண்டாடினோம். அதைப் பத்தி எழுதிக் கூட இருக்கேன். பின்னர் கார்த்திகையை இங்கே முடிச்சுட்டுப் பொங்கல் சமயம் மெம்பிஸ் போனதாலே அங்கே பொங்கல். பொங்கல் சமயம் அங்கே ஸ்நோஃபால் இருந்ததால் வீட்டை விட்டு வெளியே வராமல் பொங்கல், மகள் வீட்டு வழக்கப்படி குழம்புனு பண்ணி வீட்டுக்குள்ளேயே சாப்பிட்டாச்சு! அதுக்கப்புறமா வந்தப்போப் பண்டிகை கொண்டாடும் சூழ்நிலைகள் இல்லை. போன முறை வந்தப்போ மாமியார் காலம் ஆனதிலே கார்த்திகையை இங்கே வந்த மறுநாளே கொண்டாடியதோடு சரி. இம்முறை தான் இங்கே பொங்கல் கொண்டாட்டம். என்னத்தைப் பொங்கல்! கோயில்களில் பொங்கல் மேளா வைத்திருக்காங்க. மீனாக்ஷி கோயிலில் பொங்கல் பட்டி மன்றம் ஞானசம்பந்தன் கலந்துக்கறாராம். பாரதி கலை மன்றம் ஏற்பாடு. டிக்கெட் 15 டாலர்னு நினைக்கிறேன். அதுவும் அடுத்த வாரம்.

பையர்  இங்கே வீடு குடித்தனம் வந்ததுமே பொங்கலுக்கு என்று மஞ்சள் போட்டிருந்தோம். அது ஒவ்வொரு வருஷமும் புதுசாத் துளிர்  வந்து வந்து திரும்பப் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த வருஷம் பையர் சந்தையில்(இங்கேயும் உழவர் சந்தை உண்டுன்னாலும் இது இந்தியக் கடைகளிலோ அல்லது அம்பேரிக்காக் கடைகளிலோ தெரியலை) பச்சை மஞ்சள் நிறைய வாங்கிட்டு வந்துட்டார். ஆகவே அதையே வைச்சுக்கலாம்னு முடிவு. அதைத் தவிர்த்துக் கரும்பு, வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் (நல்லவேளையா காய் நல்லா இருந்தது. கார்த்திகைக்கு வாங்கினது வீணாகி விட்டது.)என எல்லாமும் ரெடி. வெண்கலப்பானை தான் இல்லை. இந்தியாவில் கூட்டுக்குடும்பமாக இருந்த வரையில் முன்னெல்லாம் ஒரு படி வெண்கலப்பானையில் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தோம். கூட்டுக் குடும்பமா இருந்தப்போ அது! அதுக்கப்புறமா அரைப்படி வெண்கலப் பானைக்கு மாறி இப்போக் கால்படி வெண்கலப்பானையில் தான் சுமார் பத்து வருஷங்களுக்கும் மேலாக வைக்கிறேன். கொடுக்க ஆள் இல்லை. அம்பத்தூர் எனில் அண்ணா வீடு, சுற்று வட்டாரங்களில் நண்பர்கள்னு கொடுப்பேன். அங்கேயும் சரி, இங்கேயும் சரி வீட்டு வேலை செய்பவர்கள் பொங்கல் அன்னிக்கு நாம எது கொடுத்தாலும் வாங்க மாட்டாங்க! எங்க வீட்டிலேயும் பொங்கல் தான்! நாங்களும் பூஜை செய்யறோம்னு சொல்லிடுவாங்க. ஆகவே அவங்களுக்கெல்லாம் கொடுக்க முடியாது. கால் படி வெண்கலப்பானையில் 200 கிராமுக்கும் குறைவா அரிசி+பருப்புப் போட்டுப் பொங்கல் செய்தால் வெல்லம் சேர்த்ததும் அதில் முக்காலுக்கு வந்துடும். அதையே மறுநாள் கணுப்பொடிக்கும் வைச்சுக்கொள்ளணுமே!

இங்கே இவங்களுக்கெல்லாம் வெண்கலப்பானை, கல்சட்டி, இரும்பு தோசைக்கல் (இப்போத்தான் இங்கேயும் இரும்பு தோசைக்கல்)என்றால் பிடிக்கிறதில்லை. அது நேரம் எடுக்கும், காஸ் செலவு என்பது அவங்க நினைப்பு. ஆனால் அதான் சீக்கிரம் ஆவதோடு உணவுப் பதார்த்தங்கள் சீக்கிரம் ஆறாமலும் இருக்கும் என்பது தெரியவில்லை. ஆகவே இங்கே வெண்கலப்பானை எல்லாம் இல்லை. குக்கர் தான். அந்தக் குக்கர் சேலம் ஸ்டீலில் செய்தது. கனமென்றால் அவ்வளவு கனம். இந்த மாதிரிக் குக்கர் இந்தியாவில் எங்கேயுமே கிடைப்பதில்லை. இது ஏற்றுமதிக்குனு தயாரிக்கிறாங்கனு நினைக்கிறேன். பையர் இங்கே வந்ததில் இருந்து இந்தக் குக்கரைத் தான் வைச்சுட்டு இருக்கார். அதில் தான் முதல் வருஷம் இங்கே வந்தப்போவும் சர்க்கரைப் பொங்கல் பண்ணினேன். அதிலேயே வைச்சுடலாம்னு முடிவு பண்ணி வைச்சு எல்லாமும் தயார் செய்தாச்சு. பையருக்கு அலுவலகம் உண்டு. அவர் அலுவலகம் போயிட்டார்.  குஞ்சுலுவும் பள்ளிக்குப் போயிடுத்து. நாங்க 3 பேர்தான் வீட்டிலே. எல்லாமும் முடிச்சுப் பூஜை பண்ணலாம்னா அன்னிக்குனு பார்த்து மழை, மேக மூட்டம். வெளியே பேடியோவில்(Patio) தான் பூஜை செய்வதாக இருந்தது. பின்னர் அந்தக் காற்று, மழைக்கு அவருக்கு ஒத்துக்குமோ ஒத்துக்காதோ என நினைத்து முன்னறைக் கூடத்தில் ஜன்னல் வழியே சூரியனார் எட்டிப் பார்ப்பார். அங்கேயே பூஜைக்கு எல்லா ஏற்பாடும் செய்து கோலம் போட்டால் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். கோலமே தெரியலை! விடு, போதும்னு சொல்லிட்டார். மற்றபடி எல்லாவற்றையும் வைத்துப் பூஜை செய்து முடிக்கும்போது 12 மணி ஆகி விட்டது. அதுக்கப்புறமாச் சாப்பிட்டோம்.பூக்கள் போட்டிருக்கும் இடத்தில் தான் சூரியக் கோலம் போட்டிருந்தேன். அது தெரியவே இல்லை. சர்க்கரைப் பொங்கல் குக்கரில், பாத்திரத்தில் அன்னம், பருப்பு, தட்டிலும், கிண்ணங்களிலும், ஐந்து வகைக் கூட்டுகள் உளுந்து வடை. சூரியனுக்கு உளுந்து ப்ரீதி என்பதால் உளுந்து வடை! அதைத் தவிர்த்து மோர்க்குழம்பும், ரசமும் வைத்திருந்தேன். எல்லாம் சாப்பிட்டுக் கூட்டு மிச்சம் எல்லாம் கலந்து எரிச்ச குழம்பும் பண்ணி வைச்சுட்டேன் மறுநாள் கணுவுக்காக.

கீழே உள்ள படம் பேடியோவில் (Patio) கணுப்பொடி வைத்தது. நானும் மருமகளுமாக வைத்தோம். இதற்கு முன்னால் வைச்சப்போ வீட்டுக்குள்ளேயே வைச்சுட்டுத் தட்டை எடுத்துப் போய் வெளியே வைச்சோம். இந்த வருஷம் இங்கேயே வைக்கலாம் என மருமகள் சொன்னாள். ஆகவே அங்கேயே வைத்தோம். ஆயிற்று, இந்த வருஷப் பண்டிகைகளை இங்கே அம்பேரிக்கா வந்து கொண்டாடி முடிச்சாச்சு. குழந்தைகளுடன் பண்டிகைகள் கொண்டாட முடியவே இல்லை என்பதால் தான் இந்த வருஷம் பண்டிகைகளுக்கு இங்கே இருக்கும்படி பார்த்துக் கொண்டு வந்தோம்.41 comments:

 1. அம்பேரிக்கா பொங்கல் பகிர்வு அருமை.
  குழந்தைகளுடன் பண்டிகையை இறைவன் அருளால் கொண்டாடிவிட்டீர்கள்.

  மகன், பேரன், மருமகள் பொங்கல் அன்று விடுமுறை எடுத்து விட்டார்கள்.

  அடுத்த வருடம் நானும் சின்ன பானையில் பொங்கல் வைக்க வேண்டும். மாயவரத்தில் வாங்க ஆள் இருக்கும்.
  இங்கு குடியிருப்புக்குள் யாரையும் உள்ளே விடுவது இல்லை.

  மீதம் இருக்கும் பொங்கலை மாடுகளுக்கு கொடுத்து விட்டோம். வீதி எங்கும் குப்பை மேட்டில் தான் பசுக்கள் நிற்கிறது.

  படங்கள் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி, என்னிடம் ஆழாக்குப் போடும் வெண்கலப் பானையில் இருந்து ஒரு படி வரை இருக்கு. அதைப் பருப்புக் குண்டு என்று சொல்லுவோம். இன்னமும் வைச்சிருக்கேன். கல்யாணத்தில் சீராகக் கொடுத்தது. 4 பானைகளை மட்டும் பெண்ணுக்குக் கொடுத்தேன். அவள் பயன்படுத்தவில்லை. எங்க குடியிருப்பிலும் வெளி ஆட்கள் வர முடியாது தான். காய்கள், பிள்ளையார், மாவடுக்காலத்தில் மாவடுனு வந்தால் கீழேயே இருப்பார்கள். பாதுகாவலர்கள் தொலைபேசி மூலம் அழைப்பார்கள். நாங்க போய்த் தேவை எனில் வாங்கிப்போம். ஸ்ரீரங்கத்தில் தெருக்களில் மாடுகள் அலைவதையோ, நாய்கள் சுற்றுவதையோ அதிகம் பார்க்க முடியாது. நாய்களாவது அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கண்களில் படும். மாடுகளைத் தெருக்களில் காணவே முடியாது. அம்மா மண்டபம் தொழுவத்தில் போய்ப் பசுக்களுக்குக் கொடுக்கவும் முடியாது. மாட்டுச் சொந்தக்காரர் கோபப்படுவார். இதை எல்லாம் மாட்டுக்குக் கொடுத்தால் வயிற்றுப் போக்கு வந்தால் நீங்களா கவனிப்பீங்கனு சத்தம் போடுவார். ஆகவே அங்கே மாடுகளுக்குக் கொடுக்க முடியாது. அம்மாமண்டபம் வாசலில் இருப்பவங்களுக்குக் காசு தான் தேவை.

   Delete
 2. அமெரிக்காவிலிருந்தாலும் சிறப்பாகக் கொண்டாடி விட்டீர்கள்.  வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீராம், எத்தனையோ சமரசங்கள் செய்து கொள்ள வேண்டும். ஆனால் குழந்தைகளுடன் இருப்பது தான் மன மகிழ்ச்சி.

   Delete
 3. பொங்கல் அன்று ரசம்,சாம்பார்  செலவே ஆகாது.  பொங்கல் சாப்பிட்டு விட்டு நடையைக் கட்டவே தோன்றும்!  இங்கு அப்படிதான் ஆயிற்று.

  ReplyDelete
  Replies
  1. எங்க மாமியார் வீட்டில் சாம்பார் வைப்பதில்லை. மோர்க்குழம்பு தான். நான் ஒரு சின்னத் தம்பளர் அளவுக்குத் தான் வைப்பேன். ரசமும் அப்படியே. வெறும் பொங்கல் மட்டும் எவ்வளவு சாப்பிட முடியும்? அதனால்!மோர்க்குழம்பு மிஞ்சினால் வடைகளைப் போட்டு விடுவேன். ரசத்தை எரிச்ச குழம்பில் விட்டுக் கலந்து சூடு பண்ணிடுவேன். வீணாகாது.

   Delete
 4. குஞ்சுலு பள்ளி சென்றதால் தான் இத்தனையும் செய்ய முடிந்தது. பள்ளியில் இருந்து வந்ததும் பொங்கல் குறும்பு என்ன செய்தது. கரும்பை ஒளித்து வைத்ததா? Jayakumar

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜேகே அண்ணா, உண்மைதான். எல்லாவற்றையும் அது எடுத்து வைத்துக் கொண்டு "மைன்! மைன்!" சொல்லிக் கொண்டு கொடுக்க மாட்டேன் என்று சொல்லும். :))))))) பள்ளியில் இருந்து வந்ததும் பூஜை செய்த இடத்தைப் பார்த்துட்டு ஒரே சந்தோஷம், "உம்மாச்சி?" எனக் கேட்டுவிட்டுத் தானும் பூக்களைப் போடணும்னு சொல்லிட்டு (நல்லவேளையாப் பூக்கள் இருந்தன!) பூவைப் போட்டுவிட்டு அழகாய் நமஸ்காரம் செய்தது.

   Delete
  2. இன்னிக்கு என்னோட புடைவையை (வெளியே போகும்போது கட்டிக்கொண்டு போனது). எடுத்து வைத்துக்கொண்டு மடிக்கத் தர மாட்டேன், இது என்னோடது என்கிறது! :))))))))

   Delete
 5. பொங்கல் சிறப்பாக சென்றமைக்கு வாழ்த்துகள்.

  இந்தியாவில் தயாராகும் முதல் தரமான பொருள்கள் இந்தியாவுக்கு அல்ல!
  எல்லாமே அயல் தேசங்களுக்குதான் மீன் உள்பட இந்தியாவில் எவ்வளவு பெரிய இறால் மீன் உள்ளது என்பதை அபுதாபியில்தான் பார்த்தேன்.

  இந்தியாவில் கண்டதில்லை, காணவும் முடியாது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி, பாராட்டுக்கு நன்றி. நீங்கள் சொல்வது உண்மை தான். ஆயத்த ஆடைகளையும் அவ்வாறே பார்த்திருக்கேன். இந்தியாவிலிருந்து வருபவை தரமான துணிகளோடும் தையல்கள் ஒழுங்காய்ச் சீராகவும் இருக்கும். அந்த மாதிரி ஆயத்த ஆடைகள் இந்தியாவில் கிடைக்காது தான். இப்போது தான் ஒரு சிலவற்றில் கொஞ்சம் நல்ல தரமான ஆடைகளை விற்கின்றனர். கை துடைக்கும் சின்னத் துண்டுகள், இங்கே சில்க் மாதிரி வழவழவென இருக்கும். நாம் திருப்பூரிலேயே வாங்கினாலும் அந்தத் தரம் இருப்பதில்லை.

   Delete
 6. தரைல என்ன சிவப்பா? வாட்டர்மெலன் மாதிரி?? வெண்கல பானை, தோசை கல்லா!! தேவுடா யார் தேய்க்க? கை தேச்சு தேச்சு டொடக் ஆயிடுத்து ஒருவருஷத்திலேயே:( கல்கத்தா இலுப்பச்சட்டி brown ஆ உள்ளே தூங்கறது . பிசுக்கு சொரண்டி மாளல ஆசையா இருந்தாலும் தாமாய் தேய்க்க வேண்டி இருக்கறதுனால எடுக்கறது இல்லை. எங்க தாயம்மா வை நெனைச்சுப்பேன்! எப்படி பளிச்சுன்னு தேச்சு வைப்பா பாவம்னு. பாவம் எப்படி அவ கை வலிச்சிருக்கும்னு தோணும். எண்ணை சமாச்சாரமும் பண்ணறது இல்லை இதுக்கு பயந்துண்டு. மீனாட்சி அம்மாளை எடுத்து படிச்சிட்டு மூடிடுவேன் ஆசையா இருந்தா:)இனிமே வீட்டுல ஏறித் துடைக்க பெயிண்ட் அடிக்கெல்லாம் த்ராணியும் இல்லை. இப்ப இப்ப ஊதுபத்தியே குறைச்சிட்டேன். விளக்கு மட்டும் விட மனசில்லை, . அதுவும் ஸ்பைக்கி வெள்ளி விளக்குனா ஆனைமேலே அகல் விளக்கு அம்பாரித்தான். கோலம் கார்பெட்ல முடியாது. வெளிலயா,காத்து தூக்கிண்டு போயிடும்:( உள்ள பலகை பண்ணி வச்சிருக்கேன். அது என்ன நம்ப ஊரு பழுக்கா பலகையா பளீச்சின்னு தெரிய?? வெள்ளை வெளேர்னு டிம்பர். கோலம் போட்டதை சொன்னாதான் தெரியும்:(அதுனால sticker . வாழ்க giri ட்ரடேர்ஸ். நட்டுவெச்ச மஞ்சள் குருத்து வந்திருக்கு. இலை வரத்துக்குள்ள இந்த வருஷம் வின்டர் வந்துடும் போல இருக்கு, தோண்டி எடுத்து நானே மஞ்சள் தீத்திண்டு மறுபடி புதைச்சு வச்சிருக்கேன்:) இல்லைங்காம உள்ள வச்சதுனால வாழை இல்லை மட்டும் உண்டு. இவர் ஒட்டக கதை நானும் நீயும் வெளியேபோகவேண்டியதுதான் என்கிறார். அது ஓங்கி உலகு அளந்து கொண்டிருக்கு ceiling வரை:(( இப்படியாகத்தானே வெளில பண்டிகை புராணம் காலம் காலமாய் 35 வருஷமா:)))Join the club.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜெயஸ்ரீ, தரையில் சூரியக் கோலம் போட்டிருந்தேன். தரையின் டைல்ஸ் நிறம் காரணமாகத் தெரியலை. அதில் ரோஜா இதழ்களால் அர்ச்சனை பண்ணியது தான் சிவப்பாகத்தெரிகிறது. கல்கத்தா இலுப்பச்சட்டி எங்க பெண்ணுக்கும் கொடுத்திருக்கேன். சுத்தமாகவே இருக்கிறது 20 வருடங்களாக. ஒண்ணும் பிரச்னை இல்லை. அதிகம் உஷ்ணத்தில் சமைக்கலைனால் பழுப்பு நிறம் வருவதில்லை. எப்போவுமே அடுப்பைச் சின்னதாகவே வைத்துச் சமைத்துப் பழகி விட்டது. இங்கே வந்த முதல் வருஷம் அடை பண்ணினப்போ புகை கண்டுபிடிப்பான் அலற ஆரம்பித்து விட்டது. அப்புறமாப் பெண் அதன் வாயை அடக்கும் விதம் சொல்லிக் கொடுத்தாள். அதன் பிறகு எண்ணெய் வைத்தால் முதலில் புகை கண்டுபிடிப்பானின் வாயை மூடிடுவோம். இங்கேயே பெண் வீடு கிரஹப்ரவேசம், பையர் வீடு கிரஹப்ரவேசம், குழந்தை ஆண்டு நிறைவு, கணபதி ஹோமம்னு எல்லாமும் பண்ணி இருக்கோமே! ஒண்ணும் பிரச்னை இல்லை.

   Delete
  2. இங்கே அநேகமாகக் கோயில்களிலும், கோயில்களில் இருக்கும் குருக்கள்/பட்டாசாரியார் வீடுகளிலும் பித்தளை, வெண்கலம் அதிகம் பார்க்கலாம். மெம்பிஸ் பக்கம் நாஷ்வில் பிள்ளையார் கோயில் குருக்கள் தினமும் வெண்கலப்பானையில் தான் பிரசாதம் பண்ணி எடுத்து வருவார். அடிக்கடி அங்கே போனதில் பார்த்திருக்கேன். அதே போல் இங்கே மீனாக்ஷி கோயிலிலும் பார்க்கலாம். அவங்க குடியிருப்புக்களிலும் வெளியே கற்களை வைத்து அடுப்பு மூட்டிச் சர்க்கரைப் பொங்கல் வைப்பதையும் வெண்கலப்பானையில் சாதம் வைப்பதையும் பார்த்திருக்கேன். அவ்வளவு ஏன்? நம்ம தோழி கோமதி அரசுவின் மகன், மருமகள் இருவரும் ஒவ்வொரு வருடமும் வீட்டுக்கு வெளியே அடுப்பு மூட்டி அவர் கைகளால் செய்த பானையில் தான் பொங்கல் வைக்கிறார்கள்.

   Delete
  3. என் மகனை குறிப்பிட்டதற்கு ந்னறி.
   இந்த முறை, வெங்கலபானையில் வைத்தாள் மருமகள், பேரன் சிறுவீட்டு பொங்கல் என்று பால் காய்ச்சியது மட்டும் மண்பானையில்.

   Delete
  4. மீள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோமதி!

   Delete
 7. அருமையான விழக்காலம். வாழ்த்துகள் கீதாமா.
  நீங்கள் பூஜை செய்த அழகும் பூக்களும் நன்றாக இருக்கிறது.
  சிகாகோ என்றால் வெளியே தலை காட்டமுடியாது.
  இங்கும் பொங்கல் இனிதாக நிறைவேறியது.
  மருமகள் மகன் இருவருக்கும் அலுவலக வேலை அதிகம்.
  அதனால் பண்டிகை சுருங்கி விட்டது.
  அது ஒரு பொற்காலம்னு பழைய நாட்களை நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

  இந்த வருடம் நீங்கள் குழந்தைகளோடு பண்டிகை நாட்களில் இருப்பது மிக மகிழ்ச்சி.
  அருமையான பதிவு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, வீட்டில் அரளி பூத்துக் கொண்டிருந்தது. இப்போக் குளிர், மழை, காற்று அதிகமாக இருப்பதால் பூக்கள் இல்லை. ஆகவே மருமகள் ரோஜாக்கொத்து வாங்கி வந்தாள். அதைத் தான் உதிர்த்து அர்ச்சனை. பழைய காலம் பொற்காலம் தான். யார் என்ன சொன்னாலும் அதைப் போல் வராது தான்.

   Delete
 8. / அங்கேயே பூஜைக்கு எல்லா ஏற்பாடும் செய்து கோலம் போட்டால் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். கோலமே தெரியலை! விடு, போதும்னு சொல்லிட்டார்./அதுதெரியாமல்தான் உங்களுக்கு கோலம்போடத் தெரியுமா என்று கேட்டேன்போலும் இது நிஜமாகவே தெரியதது கனு என்றால் என்ன

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜிஎம்பி ஐயா, அந்தத் தரையில் இருக்கும் டைல்ஸின் நிறத்தில் கோலம் எடுபடவே இல்லை. ஏழு சுற்றுச் சூரியக் கோலம் தான் போட்டிருந்தேன்.

   Delete
  2. கோலப்பொடியில் கொஞ்சம் மஞ்சள் போடி அல்லது சிவப்பு குங்குமம் சேர்த்தால் கலர் கிடைக்குமே!Jayakumar

   Delete
  3. மீள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜேகே அண்ணா. நான் இந்தக் கல்க் கோலமாவு வாங்குவதில்லை. அரிசி மாவு தான். அதில் குங்குமம் கலந்தே போட்டேன். எடுபடவில்லை.

   Delete
 9. ஆனந்தம் ஆனந்தம் பாடும் ..
  மனம் ஆசையில் ஊஞ்சல் ஆடும்...

  அமேரிக்கப் பொங்கல்.. ஆனந்தப் பொங்கல்..

  பொங்கலோ பொங்கல்..
  பொங்கலோ பொங்கல்!...

  ReplyDelete
  Replies
  1. நன்றி துரை. பொங்கல் இனிமையாகக் கழிந்தது. இறைவனுக்கு நன்றி.

   Delete
 10. அமெரிக்கப் பொங்கல் கட்டுரை சுவையாக இருந்தது. ரசித்துப் படித்தேன். சமீபகாலங்களில் நான் எவர்சில்வர் வெங்கலப் பானையில் தான் பொங்கல் சமைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ரசனைக்கும் கருத்துக்கும் நன்றி கௌதமன் சார்.

   Delete
 11. http://swamysmusings.blogspot.com/2015/07/blog-post.html?m=1

  ReplyDelete
  Replies
  1. மிக அருமை உங்கள் கோவைப் பயண நினைவலைகள். நல்லதொரு நட்பு!

   Delete
 12. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. கோலமே தெரியலையா இல்லை கோலம். போடத்தெரியலையா :)

  ReplyDelete
  Replies
  1. என்ன திராச சார், வம்பு? இத்தனை வருஷங்கள் கழிச்சு இந்தப்பகம் எங்கே?

   Delete
 14. ///பூக்கள் போட்டிருக்கும் இடத்தில் தான் சூரியக் கோலம் போட்டிருந்தேன். அது தெரியவே இல்லை. //

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அவ்ளோ குட்டியாகப் போட்டால் எப்பூடித் தெரியும், மாமாவுக்கே உங்கட கோலம் பொறுக்க முடியாமல் பூவைப் போட்டு மறைச்சுட்டார்ர்... புவஹா புவஹா.. சிரிச்ச்சேன்:)..

  ReplyDelete
  Replies
  1. குட்டியா எல்லாம் போடலை பசுந்தளிர்! பெரிசாத் தான் சூரிய கிரணங்கள் ஏழு வரும்படிப் போட்டிருந்தேன். கோலம் மாக்கோலம் போட்டால் கூட இங்கே தெரியறதில்லை. இது அரிசி மாவு! பூக்களைப் போட்டதும் மறைச்சுடுச்சு!

   Delete
 15. அதுசரி ஏன் கீசாக்கா பொங்கல் எனில் மண்பானைதானே தேடி வாங்குவார்கள்.. நீங்கள் வெண்கலப் பானை என்கிறீங்களே...

  ReplyDelete
  Replies
  1. எங்க அம்மா வீட்டுப் பக்கமும் சரி, மாமியார் வீட்டுப் பக்கமும் சரி மண் அடுப்புத் தான் புதுசா வாங்குவாங்க பசுந்தளிர்! பானை வாங்கினதில்லை. மண்பானையில் சமைப்பதும் இல்லை. கல்சட்டி, வெண்கலம், பித்தளை புழங்குவோம். இப்போ என் தம்பி மனைவி மண் சட்டியில் குழம்பு, கீரை சமைக்கிறாள்.அண்ணன் மருமகளும் சமைக்கிறாள்.

   Delete
  2. மாமியார் மண் அடுப்புப் பொங்கலுக்கு 2,3 நாட்கள் முன்னர் தானே புதுசாப் போடுவாங்க. பின்னர் அதைச் சாணி போட்டு மெழுகிக் கோலமெல்லாம் போட்டுப் பொங்கல் பண்டிகைக்குத் தயார்ப் படுத்துவது என் பொறுப்பு. பின்னாட்களில் அம்பத்தூர் வீட்டில் கொல்லைக் கிணற்றடியில் செங்கல் வைத்து அல்லது இரும்பு அடுப்பில் வெண்கலப்பானை வைத்துப் பொங்கல் பண்ணி இருக்கோம். அப்படியே கிணற்றடியிலேயே பொங்கல் சூரிய பூஜையும் பண்ணிடுவோம்.

   Delete
  3. இனிய பொங்கல் வாழ்த்துகள்.

   எங்கள் அம்மாவீட்டிலும் வெங்கல பொங்கல் பானை உண்டு. இப்போது அண்ணாஅவர்களும் அதில்தான் செய்கிறார்கள்.

   Delete
 16. மகிழ்ச்சியாகக் கொண்டாடிய பொங்கல்... எங்களுக்கும் மகிழ்ச்சிம்மா...

  பொங்கல் பானை - வெண்கலத்தில் எங்கள் வீட்டிலும் உண்டு. அளவு தான் குறைந்து கொண்டே வருகிறது! :( அம்மாவிடம் இருக்கும் சில வெண்கலப் பானைகள் தூக்குவதற்கே தனியாகச் சாப்பிட வேண்டும் எனத் தோன்றும் எங்களுக்கு சிறு வயதில்!

  ReplyDelete