நாயக னாய்நின்ற நந்தகோ பனுடைய
கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்!
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்,
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.
கொடியைக் குறித்துச் சொல்லி இருப்பதால் கொடிக்கோலமோ அல்லது தோரணக் கோலமோ போடலாம். மண்டபம், மாவிலைக் கொத்து என்றும் போடலாம்.
படங்களுக்கு நன்றி கூகிளார்
கண்ணன் வரச் சொன்னதாகவும், அவன் கைகளால் பறையை வாங்கிக் கொள்ள வந்திருப்பதாகவும், அவன் நாமத்தையே தாங்கள் அனைவரும் பாடி அவனைத் துயிலில் இருந்து எழுப்பப் போவதாகவும் வாயில் காப்போனிடம் ஆண்டாள் சொல்கிறாள். இங்கே பறை என்பது கொட்டுக் கொட்டும் பறையை மட்டும் குறிக்கவில்லை என்றே எண்ணுகிறேன். துயிலில் இருந்து கண்ணனை எழுப்புவது என்பதும் மறைபொருளாக யோக நித்திரையில் மூழ்கி இருக்கும் பெருமானின் திருநாமத்தைச் சொல்லி உருகி உருகிப் பாடி அவனோடு ஒன்றாய் ஐக்கியம் ஆவதற்கான ஏற்பாடுகள் செய்வதைக் குறிக்கும்.
கண்ணனின் இருப்பிடமோ வைகுந்தம். அங்கே அவனைக் காணச் செல்லும் முன்னர் வாயில் காப்போரிடம் அனுமதி பெற்றே செல்ல வேண்டும். வாயில் காப்போர் இங்கு மறைமுகமாக ஆசானைக் குறிக்கிறது என எண்ணுகிறேன். நம் மனக்கதவைத் திறக்கும் முகமாக ஆசான் துணை செய்யப் பறையாகிய ஞான கீதத்தைக் கண்ணன் கொடுப்பான் என்கிறாள் ஆண்டாள். குருமுகமாக இருண்டிருக்கும் மனக்கதவைத் திறந்து கண்ணனைக் கண்டு பிடித்தால் அவன் நமக்கு வேண்டிய ஞானத்தைத் தருவான். ஆகவே மறுக்காமல் உதவி செய்யுமாறு வாயில்காப்போனாகிய குருவிடம் வேண்டுகிறாள் ஆண்டாள்.
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே!= நந்தகோபன் ஆயர்களுக்கெல்லாம் தலைவன். ஆகவே அவன் மாளிகை மிகப் பெரியதாய் ஒரு கோயில் போல் உள்ளது. இப்போது ஆண்டாள் தான் அழைத்து வந்த பெண்களோடு நந்தகோபன் வீட்டுக்கே வந்துவிட்டாள் போலும். ஆனால் இங்கேயோ ஒவ்வொரு வாயில்கள், பல நிலைகள், பல காவலர்கள் இருப்பார்கள் போலும். ஒவ்வொன்றையும் கடந்தல்லவோ உள்செல்லவேண்டும். முதல்லே வாசலைக் கடக்க அவனைக் கேட்கிறாள்.
கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே!= நந்தனுடைய கொடிக்கம்பத்தில் கொடி கட்டப்பட்டுத் தெரிகிறது. வாயிலில் தோரணங்களும் கட்டப்பட்டிருக்கின்றன. அங்கேயும் ஒரு வாயில் காப்போன். அவனையும் இறைஞ்சுகிறாள் ஆண்டாள்.
மணிக்கதவம் தாள் திறவாய்= மணிகள் பொருந்திய அழகிய கதவின் தாளைத் திறக்க மாட்டாயா? என்று கெஞ்சுகிறாள். கண்ணன் உள்ளே இருக்கிறான். நம் மனமாகிய கோயிலுக்குள்ளே. அங்கே சென்று அவனை அடையத் தான் எத்தனை தடை! நம் செயல்களே நம்மைத் தடுக்கின்றன அன்றோ!
அந்த வாயிற்காப்போர்கள் கண்ணனுக்குத் தெரியுமா நீங்க வரதுனு கேட்கிறாங்க போல
ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்= அட, கண்ணன் அறியாதவனா? எங்களை அவனுக்கு நன்கு தெரியுமே! நாங்கள் ஆயர்பாடிச்சிறுமிகள் தாம் என்று ஆண்டாள் சொல்ல, சிறுமிகளாய் இருந்தாலும் ஏன் இப்போது வந்தீர்கள் என்று கேட்க, அவர்கள் எங்களுக்குப் பாவை நோன்புக்கான சாதனங்களைத் தருவதாய்க் கண்ணன் வாக்களித்திருந்தான். அதைப் பெற்றுச் செல்ல வந்தோம். வேறு ஒன்றும் இல்லை என்கிறாள். அவன் கருணா கடாக்ஷம், அவன் கடைக்கண் கடாக்ஷம் ஒன்றே இங்கே சுட்டப் பட்டிருக்கிறது. கண்ணனின் கருணைப் பார்வை ஒன்றே போதும் என்கிறாள் ஆண்டாள்.
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா! = தூய்மையான எண்ணங்களோடு, உள்ளம் முழுதும் கண்ணன் மேல் மாறாத பக்தியோடு வந்திருக்கிறோம் காவலனே, எங்களுக்கு வேறு எந்தவிதமான துர் எண்ணங்களும் இல்லை. கண்ணனைத் துயிலில் இருந்து எழுப்பு என்கிறாள் ஆண்டாள். பகவானின் பாதாரவிந்தங்களே சரண் என அடைந்தவர்களுக்கு, அவர்களுடைய முன்வினைகளையும் போக்கிவிட்டு அவன் தன் யோக நித்திரையிலிருந்தும் எழுந்து அவர்களைத் தன் அருட்பார்வையால் கடாக்ஷிப்பான். ஆனால் முன்வினைகளோ இங்கே தடுக்கின்றன. பக்தர்கள் கதறுகின்றனர். அம்மா, அம்மா, உன் கருணை ஒன்றே போதுமே, உன் கடைக்கண்பார்வை ஒன்றே போதுமே, உன் அருட்பார்வையை எங்கள் பக்கம் திருப்பாமல் மாற்றிவிடாதே கண்ணா, எங்களுக்கு அனுகிரஹம் செய் என்று கதறுகிறார்கள்.
நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.= இந்த மாபெரும் தடையாகிய கதவுகளை நீக்கிவிட்டு உள்ளே சென்று கண்ணனைச் சந்திக்க எங்களை அநுமதிப்பாய். இப்பிறவியில் செய்யும் புண்ணியங்களே, நற்செயல்களே நம்மை ஈசன் பால் கொண்டுவிடும். முன்வினைகளோ நாம் ஈசன் பால் செல்லமுடியாமல் தடுக்கும். ஆகவே நாம் தூயமனத்தவராய் எந்நேரமும் கண்ணன் புகழ் பாடுவது ஒன்றே குறிக்கோளாய்க் கொண்டு வேறு சிந்தனைகளை மனதில் நிறுத்தாமல் இருந்தால் கண்ணன் நம்மை ஆட்கொள்வான்.
கண்ணனோடு ஐக்கியமடைவதைப் பற்றி ஆண்டாள் கூறினால் பட்டத்திரியோ கண்ணன் இல்லாத இடமே இல்லை என்கிறார். அவன் அனைத்துள்ளும் இருக்கிறான். சர்வ வியாபி என்கிறார்.
மூர்த்த்நா மக்ஷ்ணாம் பதா வஹஸி கலு ஸஹஸ்ராணி ஸம்பூர்ய விஸ்வம்
தத் ப்றோத்க்ரம்யாபி திஷ்ட்டந் பரிமிதவிவரே பாஸி சித்தாந்தரேபி
பூதம் பவ்யஞ்ச ஸர்வம் பரபுருஷ பவாந் கிஞ்ச தேஹேந்த்ரியாதிஷ்
வாவிஷ்டோ ஹ்யுத்கதத்வாதம்ருத முகரஸம் சாநு புங்க்ஷே த்வமேவ
ஆயிரக்கணக்கான தலைகள், கண்கள், என உலகனைத்தும் வியாபித்து அதற்கும் அப்பால், அப்பாலுக்கும் அப்பால் வியாபித்து இருக்கும் பரம்பொருளே, உள்ளமாகிய சிதாநந்த வெளியிலே அனைவரின் சித்தத்துக்குள்ளும் பிரகாசிப்பதும் நீரே! இருந்ததும் நீரே, இருக்கிறதும் நீரே; இனி இருக்கப்போவதும் நீரே! உடலின் ஒவ்வொரு அணுவிலும் நீரே இருக்கிறீர்! சரீரத்திலும், இந்திரியங்களிலும் இருப்பதும் நீரே! எனினும் நீர் அனைத்திலும் பற்றில்லாமல் இருக்கிறீரே!
இணைய உலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். அனைவரின் பிரச்னைகளும் தீர்ந்து உடல் நலமும் ஆரோக்கியமாக இருக்கப் பிரார்த்திக்கிறோம்.
கீதா & சாம்பசிவம்
மீதான் 1ஸ்ட்டூஊஊ இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கீசாக்கா உங்களுக்கும் மாமாவுக்கும் மற்றும் அனைவருக்கும். உங்களிடத்தில் இன்னும் பிறக்கவில்லை என நினைக்கிறேன்.
ReplyDeleteவாங்க பச்சை, சிவப்பு, மஞ்சள் நிற அதிரடி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள். முதல் வரவுக்கு நன்னி ஹை!
Deleteபடித்தேன், ரசித்தேன்.
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துகள் கீதாக்கா.
Thank You Sriram.
Deleteமிக மிக அழகான எளிதில் புரியக் கூடிய விளக்கம். நேற்று
ReplyDeleteகேட்ட உரையிலும் குருவின் திருவருள் இருட்டை நீக்கி
வெளிச்சம் கொடுக்கும் என்றும் கேட்டேன்.
பறை பரிசு அருள் எல்லாம் அவனே தரவேண்டும். நல்ல நட்புகளையும் அவனே தருவான்.
உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் கீதாமா.
ஆமாம் வல்லி, மன இருளை நீக்குபவரே குரு என்பார்கள். மனதின் அந்தகாரம் நீங்கி அங்கே பரம்பொருள் ஒளிவடிவில் வந்து விட்டால் அப்புறம் இந்த மனிதவாழ்க்கைக்கு எதுவும் லட்சியம் இல்லையே! அதனால் அவ்வளவு எளிதில் கிட்டுவதில்லை. நமக்குக் கையில் கிடைத்த குருவைப் பார்க்க முடியாமல் செய்து விட்டது! :( நினைக்காத நாளே இல்லை.
Deleteஎங்கும் மகிழ்ச்சியே நிறையட்டும்..
ReplyDeleteஅன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
நன்றி துரை. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள், ஆசிகள்.
Deleteபாடலுக்கு விளக்கம் அருமை.கோலத்தேர்வு அருமை.
ReplyDeleteஉங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.
நன்றி கோமதி! உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள். உங்கள் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படப் பிரார்த்தனைகள்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஇன்றைய பாசுரம் அருமை. நேரே கண்ணனிடத்திலேயே தஞ்சம்.
/கண்ணனின் இருப்பிடமோ வைகுந்தம். அங்கே அவனைக் காணச் செல்லும் முன்னர் வாயில் காப்போரிடம் அனுமதி பெற்றே செல்ல வேண்டும். வாயில் காப்போர் இங்கு மறைமுகமாக ஆசானைக் குறிக்கிறது என எண்ணுகிறேன். நம் மனக்கதவைத் திறக்கும் முகமாக ஆசான் துணை செய்யப் பறையாகிய ஞான கீதத்தைக் கண்ணன் கொடுப்பான் என்கிறாள் ஆண்டாள். குருமுகமாக இருண்டிருக்கும் மனக்கதவைத் திறந்து கண்ணனைக் கண்டு பிடித்தால் அவன் நமக்கு வேண்டிய ஞானத்தைத் தருவான். ஆகவே மறுக்காமல் உதவி செய்யுமாறு வாயில்காப்போனாகிய குருவிடம் வேண்டுகிறாள் ஆண்டாள்/
ஆகா. குருவின் மூலமாகத்தான் ஞானத்தைப் பெற வேண்டும். அப்போது தானே ஞானத்துக்கே ஒருசிறப்பு வந்து அது நம்முடன் ஐக்கியமாகிறது. அருமையாகச் சொன்னீர்கள்.
பாடலும், விளக்கங்களும், கோலங்களும் அருமை. மிகவும் ரசித்தேன்.
/கண்ணனோடு ஐக்கியமடைவதைப் பற்றி ஆண்டாள் கூறினால் பட்டத்திரியோ கண்ணன் இல்லாத இடமே இல்லை என்கிறார். அவன் அனைத்துள்ளும் இருக்கிறான். சர்வ வியாபி என்கிறார்./
எல்லா இடத்திலும், பார்க்கும் இடம் தோன்றும் நீக்கமற நிறைந்திருப்பவன் இறைவன் என்ற தத்துவத்திற்கு தலைவணங்குகின்றேன். விளக்கங்களை ரசித்தேன். இன்றைய பக்திப்பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
ஆமாம் கமலா, வியாசருக்குக் காணும் இடமெல்லாம், கண்டவரெல்லாம் சுகராகத் தெரிய சுகரோ அனைத்திலும் பிரம்மத்தைக் கண்டு உணர்ந்து விடுகிறார். ஆனானப்பட்ட வியாசரே பிள்ளைப் பாசத்தில் தத்தளிக்கையில் நாமெல்லாம் எம்மாத்திரம்! குரு கிடைப்பதோடு அல்லாமல் அவரின் உபதேசம் மூலம் நம் மன இருட்டும் விலக வேண்டும். பதிவையும், கோலங்களையும் பாராட்டியதற்கு நன்றி.
Deleteபட்டத்ரியின் இன்றைய ஸ்லோகம் இனிமை.
ReplyDeleteகோலங்கள் அழகு.
புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
நன்றி ஏகாந்தன். ஆண்டாள் உங்களை இங்கே அடிக்கடி வர வைப்பதற்கு நன்றி.
Deleteஅழகான எளிய விளக்கம். பட்டத்ரியின் ஸ்லோகமும் சிறப்பு. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கும் நிறைந்திருக்கும் கண்ணன் எல்லா நன்மைகளையும் இந்த புத்தாண்டில் அளிக்கட்டும்.
ReplyDeleteநன்றி பானுமதி! உங்கள் வாழ்க்கையிலும் உங்கள் பிள்ளை, மாட்டுப்பெண் மூலம் சந்தோஷமான மாற்றங்கள் ஏற்பட்டு மனோபலம் அதிகரிக்க எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.
Deleteதொடர்கிறேன்...
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோ.
நன்றி கில்லர்ஜி!
Deleteபுத்தாண்டின் முதல் நாளில் மிகச் சிறப்பான பாசுரமும் விளக்கமும். மிக்க நன்றி கீதாம்மா...
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.