பனிக்கட்டிச் சிற்பங்கள் பார்வைக்கு இன்னமும் இருக்கின்றன. ஆனால் எல்லோரும் அதை ரசிக்கவில்லை என்பதோடு திரும்பத் திரும்பப் போட்டு அனைவருக்கும் அறுவையாக ஆகிவிட்டது என்றும் தோன்றுகிறது.ஆகவே இன்னிக்குக் கொஞ்சமாக ஐஸ்லான்டின் சிற்பப் படங்களைப் போட்டு விட்டு நாளைக்கு விளக்கு அலங்காரப் படங்களைத் தொடர்கிறேன். அவையும் நிறைய இருக்கின்றன. நான் எடுத்தது சுமார் ஒரு மைல் தூரத்துக்குத் தான். அதன் பின்னர் சுமார் முக்கால் மைல் தூரத்துக்கான விளக்கு அலங்காரங்களைப் படம் எடுக்க முடியலை. அசதியும், கால் வலியும் வந்து விட்டது. அவரால் செல்லைக் கைகளில் பிடித்துப் படம் எடுக்க முடியலை. பையர், மருமகள், குழந்தையைக் கவனிக்க வேண்டி இருந்தது. ஆகவே விளக்கு அலங்காரங்கள் எடுத்தவற்றில் இருந்து தேர்ந்தெடுத்துப் போடுகிறேன்.
வேறே சில படங்கள் இருந்தாலும் இதைத் தொடர்ந்த விளக்கு அலங்காரங்களைக் கொஞ்சம் போல் போட்டுவிட்டுப் பின்னர் மற்றவற்றிற்குத் தொடரணும். எல்லோரும் பார்த்து ரசிக்கிறாற்போன்ற இடங்களுக்கு எங்கும் செல்லவில்லை. பையர் அலுவலக வேலையை வீட்டில் வந்தும் செய்கிறார். அவருக்கு நேரமே இருப்பதில்லை. பெண்ணிற்குப் பெரிய பெண்ணின் படிப்புத் தவிர்த்து அப்புவின் படிப்புக்காகக் குழந்தையைக் கூட்டிக் கொண்டு தினம் ஒரு வகுப்புக்குச் செல்ல வேண்டி உள்ளது. சனி, ஞாயிறுகளில் அவங்க வீடு சுத்தம் செய்தல், ஒரு வாரத்துணிகளைத் துவைத்துத் தயார் செய்தல், அன்னிக்குத் தான் பால், தயிர், மளிகை சாமான்கள், ஒரு வாரத்துக்கான காய், கனிகள்னு வாங்கி வைச்சுக்கணும். ஆகவே வார நாட்களை விட வார இறுதி நாட்கள் காற்றாய்ப் பறந்து விடும்.
இந்தச் சறுக்கில் மேலே ஏறிப் பின்னர் கீழே சறுக்கி விளையாடுவதற்காகச் செய்யப் பட்டிருந்தது. ஆனால் நாங்கள் மேலே ஏறவில்லை. இதோடு சிறிது தூரத்தில் முடிவடைந்ததால் பார்த்துக்கொண்டே மேலே போய்ப் பின்னர் வெளியேறி விட்டோம். பையர் குழந்தையைத் தூக்கிக் கொண்டு சென்றார். மருமகளும் ஏறவில்லை என்றாள்.
காரிபியன் கிறிஸ்துமஸுக்கான அலங்காரங்கள் மேலேயும், கீழேயும்.
வேறே சில படங்கள் இருந்தாலும் இதைத் தொடர்ந்த விளக்கு அலங்காரங்களைக் கொஞ்சம் போல் போட்டுவிட்டுப் பின்னர் மற்றவற்றிற்குத் தொடரணும். எல்லோரும் பார்த்து ரசிக்கிறாற்போன்ற இடங்களுக்கு எங்கும் செல்லவில்லை. பையர் அலுவலக வேலையை வீட்டில் வந்தும் செய்கிறார். அவருக்கு நேரமே இருப்பதில்லை. பெண்ணிற்குப் பெரிய பெண்ணின் படிப்புத் தவிர்த்து அப்புவின் படிப்புக்காகக் குழந்தையைக் கூட்டிக் கொண்டு தினம் ஒரு வகுப்புக்குச் செல்ல வேண்டி உள்ளது. சனி, ஞாயிறுகளில் அவங்க வீடு சுத்தம் செய்தல், ஒரு வாரத்துணிகளைத் துவைத்துத் தயார் செய்தல், அன்னிக்குத் தான் பால், தயிர், மளிகை சாமான்கள், ஒரு வாரத்துக்கான காய், கனிகள்னு வாங்கி வைச்சுக்கணும். ஆகவே வார நாட்களை விட வார இறுதி நாட்கள் காற்றாய்ப் பறந்து விடும்.
படங்கள்நன்றாய் வந்திருக்கின்றன உங்கள் ஆர்வம்தெரிகிறது
ReplyDeleteநன்றி ஐயா. ஆனால் யாரும் வரலை! :))))))
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபடங்கள் அழகாக வந்திருக்கின்றன. முதல் படம் வெறும் குளிர் உடுப்பு மட்டும் தெரிகிறது. (தலையை காணவில்லை. பார்த்தவுடன் கொஞ்சம் திக்.. திக்.. ஹா ஹா ஹா.) அது பனிக்கட்டியினால் செய்ததா? ஆனால் அதன் அருகில் ஒரு அம்மா இருப்பது போல் இருக்கிறதே...! அவர் அந்த உடுப்புச் சிற்பத்தை தொட்டு பார்க்கிறாரோ ? இல்லை அவரும் பனிக்கட்டி சிற்பமா?
கடல் வாழ் உயிரினங்களையும் (மீன்கள், ஆமை) பனிக்கட்டி கொண்டு அழகாக செய்திருக்கிறார்களா? பனிச்சறுக்கில் சறுக்கி விளையாட குழந்தைகளுக்கு மட்டுந்தான் முடியுமென நினைக்கிறேன். பெரியவர்களும் அதில் ஆடலாமா? எல்லா படங்களும் நன்றாக உள்ளது. குளிரில் ரொம்ப நேரம் நின்று நின்று படமெடுப்பது சிரமம்தான்..! இவ்வளவு தூரம் நீங்கள் பொறுமையாக படங்கள் எடுத்து பகிர்ந்ததே பெரிய விஷயம்.. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆட்கள் இருக்காங்க கமலா, அவங்க முகம் தெரிய வேண்டாம்னு எடுத்ததால் அப்படி வந்திருக்கு. மற்றப் படங்களையும் பார்த்துப் பாராட்டியதுக்கு நன்றி. இன்னமும் நிறையவே இருக்கு. ஆனால் தேர்ந்தெடுத்துத் தான் போட்டிருக்கேன். இதுக்கே யாரும் எட்டிப் பார்க்கலை. :) இஃகி,இஃகி,இஃகி!
Deleteபனிச்சறுக்கில் விளையாடக் குழந்தைகளைத் தனியாக அனுப்ப முடியாதே! அதனால் பெரியவர்கள் தான் அழைத்துச் சென்றனர்.
Deleteபடங்கள் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteஅவர்கள் வாழ்க்கை முறையில் வார இறுதி நாட்கள் காற்றாய்ப் பறந்து விடும் தான்.
வாங்க கோமதி, வாரம் இரண்டு நாட்கள் விடுமுறைனு பேரு தான். சனிக்கிழமை வந்ததுமே விடுமுறை முடிஞ்சுட்டாப்போல் இருக்கு! :)))) ஆனால் இங்கே இவங்களுக்கு இதான் பிடிக்கிறது. பழகி விட்டது அல்லவா 20 வருஷங்களாக!
Deleteபடங்கள் சுவாரஸ்யம்.
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், சுருக்கமான கருத்து. பணிச்சுமை வீட்டிலும் அலுவலகத்திலும் குறைஞ்சிருக்கா? புது இடத்தில் இருந்து அலுவலகம் செல்ல வசதியா இருக்கா? பழக இன்னும் சில மாதங்கள் ஆகும்.
Deleteரசிக்கும்படியான படங்கள்தான் சகோ.
ReplyDeleteநன்றி கில்லர்ஜி. உங்கள் வீட்டில் நடந்த துக்க நிகழ்வினால் நீங்கள் வலை உலகம் வர இன்னும் சில நாட்கள் ஆகுமோனு நினைச்சிருந்தேன். விரைவில் அந்த இழப்பிலிருந்து மீண்டு வரப் பிரார்த்திக்கிறேன்.
Deleteஅன்பு கீதா மா. இந்தக் குளிரில் நீங்கள் படம் எடுத்ததே
ReplyDeleteஅதிசயம்.
எல்லாமே வண்ணத்தோடு நன்றாக வந்திருக்கின்றன.
அமெரிக்க வாழ்க்கை இப்படித்தான். 7 நாட்களும் உழைப்பு.
பிறகு குழந்தைகளின் படிப்பு.
எல்லோரும் நலமாக இருக்கட்டும்.
வாங்க வல்லி, கை விரல்கள் எல்லாம் விரைத்து விட்டது. மூக்கு நுனி சிவந்து பின்னர் நீலமாக ஆக ஆரம்பித்து விட்டது. அதற்குள்ளாகப் படங்களை ஒரு மாதிரி எடுத்துவிட்டு நாங்க இரண்டு பேரும் வெளியே வந்துவிட்டோம். அப்புறமா அரை மணி கழிச்சுப் பையரும், மருமகளும் குழந்தையுடன் வந்தார்கள். ஜில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லோ ஜில்ல்ல்ல்ல்ல்ல்
Deleteபடங்கள் அழகு.
ReplyDeleteஎவ்வளவு மெனக்கெட்டு எல்லாம் செய்கிறார்கள்...
நன்றி வெங்கட். ஆமாம் எல்லாவற்றுக்கும் ஆர்வம் கூடிய உழைப்புத் தேவை!
Deleteவண்ண அலங்காரங்கள்.
ReplyDelete