எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, January 15, 2020

விஷமக்காரக் குஞ்சுலு!

 குட்டிக்குஞ்சுலு விஷமம் தாங்கலை. ப்ளே ஸ்கூல்லேருந்து வந்ததும் நேரா எங்க அறைக்கு வந்து இரண்டு பேரையும் எழுப்பிவிடும். என்னோடக் கைத்துண்டில் ஊதா நிறத்தில் ஒன்று தான் அதுக்குப் பிடித்த நிறம். அதையும் அதோடு கூட வைச்சுக்கப்  போனால் போகிறதுனு இன்னொன்றையும் எடுத்துக்கொண்டு விளையாட ஆரம்பிக்கும். அது தூக்கிப் போடும் நாங்க பிடிக்கணும். "ரெடி" சொல்ல வராது. "வெவி"னு சொல்லும். ஒன்றிலே இருந்து 20 வரைக்கும் நன்றாகச் சொல்லுகிறது. எல்லா நிறங்களும் உடனே கண்டு பிடித்துச் சொல்லுகிறது. பழங்கள் பெயர், சூரியன், சந்திரன், நக்ஷத்திரங்கள்னு எல்லாமும் தெரிகிறது.

விஷமக்காரக் கண்ணன்க்கான பட முடிவுகள்  விஷமக்காரக் கண்ணன்க்கான பட முடிவுகள்


விஷமக்காரக் கண்ணன்க்கான பட முடிவுகள்  விஷமக்காரக் கண்ணன்க்கான பட முடிவுகள்


விஷமக்காரக் கண்ணன் பாட்டுத் தான் இதுக்குப் பொருத்தம்னு தோன்றுகிறது. ஆரம்பத்தில் எல்லாம் சமர்த்தாக, சாதுவாக விளையாடும். என்னோட கைத்துண்டு நான்கை வைத்துக்கொண்டு அதைப் பந்து போல் சுருட்டிப் போட்டு விளையாடுவோம். இதில் தாத்தா, பாட்டி இருவரும் பங்கேற்க வேண்டும். இல்லைனா கத்தும்! இஃகி,இஃகி,இஃகி! அப்புறமா "ஓகே" என்று சொல்லும். நாமும் ஓகே சொல்லணும். தலையில் அந்தத் துண்டைக் கட்டி விட்டு லாலாலல்லா என்று பாடும். நாமும் பாடணும். அப்புறமா "ஆஹா!" என்று சொல்லும். நாமும் அப்படியே சொல்லணும். நடு நடுவில் நமக்குப் பாடம் எல்லாம் எடுத்துடும். இது பர்ப்பிள் என ஒரு துண்டைக்காட்டிச் சொல்லும். நாமும் ஆமாம் பர்ப்பிள் தான் என்பதை ஆமோதிக்கணும். இப்படி ஒவ்வொரு கலராகச் சொல்லிக் கொண்டு வரும். எல்லாம் சரியாகச் சொன்னதும் தானே கைதட்டிவிட்டு நம்மையும் கைதட்டச் சொல்லும்.

அப்புறமா அதுக்குத் திடீர்னு குஷி வந்துடுச்சுன்னா அவ்வளவு தான். என்னை உலுக்கி எடுத்துடும். உடனே அவங்க அம்மாவையோ அப்பாவையோ கூப்பிடறேன்னு சொல்லிட்டு அவங்க பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால் கிளு கிளுனு சிரித்துக்கொண்டு படுக்கையில் என் பக்கம் அடுக்கி வைத்திருக்கும் தலையணகளுக்கு இடையில் புகுந்து கொண்டு ஒரு தலையணையை மேலே போட்டுக் கொண்டு தன்னை மறைத்துக் கொள்ளும். மறைத்துக் கொண்டால் போதுமா! கிளு கிளு சிரிப்பையும் ஆடும் குட்டிக்கால்களையும், குட்டிக்கைகளையும் மறைக்கவா முடியும்! அதுக்கு என்னமோ இப்படிச் செய்தால் தான் இருப்பது அம்மாவுக்கும், அப்பாவுக்கும் தெரியாதுனு நினைப்பு.

அடுத்து அவங்க வரலைனு நிச்சயம் ஆனதும் ஒவ்வொரு தலையணையாக் கீழே தூக்கிப் போட்டுவிட்டு அவற்றை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி விட்டு "டவர்" என்று சொல்லும். அட, ஆமாம், என்போம். உடனே ஒரு தலையணையைக் கொஞ்சம் சரிவாக வைச்சுட்டு, "பாட்டி, ஸ்லைட்! கம், ப்ளே!" என்று சொல்லும். பாட்டி அதில் சறுக்கினால் அவ்வளவு தான்! நான் விளையாடலைனதும் ஒரு கத்துக் கத்தி ஆக்ஷேபத்தைத் தெரிவிக்கும். பிறகு தானே அதில் சறுக்கு மரத்தில் சறுக்குவது போல் சறுக்கும். நமக்கு இங்கே திக்,திக்! எங்கேயானும் கட்டிலில் இடிச்சுக்கப் போறதேனு. அது கவலையே படாது. உடனே ஏறிக்கொண்டு என் கழுத்தைக் கட்டிக் கொண்டு தலைப் பின்னல் அதுக்கு வேடிக்கையா இருக்கும். அதைப் பிடித்து உலுக்கும்.  . கடகடவெனச் சிரிப்பும் வேறே. தீராத விளையாட்டுப் பிள்ளை பாடலில் வரும் பின்னலைப் பின்னின்று இழுப்பான்! கண்ணன்! என்னும் வரிகள் தான் நினைவில் வரும்.


ஆயிற்று! நாங்கள் ஊருக்குப் போகும் நாள் நெருங்கிட்டு வருது. ஊருக்குப் போனப்புறமா என்ன செய்யப் போகிறதோனு பயமாவும் கவலையாகவும் இருக்கு. பகல் பொழுதுகள் பள்ளியில் போயிடும். ஆனால் வரச்சேயே தேடும். கொஞ்ச நாட்களில் மறக்கும் என்கிறார்கள் ஆனால் இது அப்படி எல்லாம் மறக்கிற குழந்தையாத் தெரியலை. சாப்பாடு சாப்பிடப் படுத்தலோ படுத்தல். குறிப்பாகச் சில உணவுகள் தான் பிடிக்கும். எல்லாமும் சாப்பிடறதில்லை. குழந்தையோட விளையாட்டையும் பேச்சையும் கேட்கவும், ரசிக்கவும் தான் வந்தோம் அது நடக்கிறது.


அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவர் வாழ்க்கையிலும் பால் பொங்குவதைப் போல் மகிழ்ச்சி பொங்கட்டும்.

42 comments:

  1. பொங்கல் நாள் வாழ்த்துகள் 

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜேகே அண்ணா!

      Delete
  2. குழந்தையோடு விளையாடுவது சொர்க்கத்தில் இருப்பது போன்றது வேறென்ன வேண்டும் ?

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, உங்க பேத்தியும் முகம் பார்த்துச் சிரிக்க ஆரம்பிச்சிருப்பா. கை, கால் விரல்களை எல்லாம் சரியா இருக்கானு பார்த்துச் சோதனை பண்ணுவாளே! நல்லா இருக்காளா? உங்களை அடையாளம் வைச்சுக்கொள்கிறாளா? குழந்தைகள் என்றும் குழந்தைகள் தாம்! வீடே விளக்கேற்றி வைச்சாப்போல் இருக்கும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் பொங்கல் வாழ்த்துகள்.

      Delete
  3. தீராத விளையாட்டுப் பிள்ளைதான்!   சுவாரஸ்யமான விஷமங்கள்.   அந்தக் காலத்தில் நமக்கெல்லாம் பாட்டி தாத்தாவோடு எப்போதும் சேர்ந்திருந்த கொடுப்பினை இந்தக் காலா குழந்தைகளுக்கு இல்லை!

    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், நான் எழுதினது கொஞ்சம் தான். வீட்டுச் சுவரெல்லாம் அவள் கை வண்ணம் தான்! அவ அப்பாவோட அலுவலக அறைக்குப் போனால் எதை எடுப்பாளோ என்று பயம்மாக இருக்கும். நாற்காலிகள், பெஞ்சுகள் எல்லாவற்றையும் போட்டு மேலே ஏறி எல்லாத்தையும் எடுப்பாள். பெண் குழந்தைக்கு இந்த விஷமம் ரொம்பவே ஜாஸ்தி. தி.வா கிட்டேப் பேச்சு வாக்கில் சொன்னப்போ "துர்கா"னு பெயரை வைச்சுட்டுக் குழந்தையை சாதுவா இருக்கச் சொன்னா எப்படி என்கிறார்! :))))))

      Delete
  4. வாழ்க்கை ஒரு வட்டம் என்பது இதுதானோ. 60 வயதுக்கு மேல் குழந்தை பருவம் தானாக திரும்பி வந்து குழந்தையுடன் குழந்தை ஆகி விடுகிறோம். நம் குழந்தைகளைக் காட்டிலும் நம் பேரக் குழந்தைகளிடம் விளையாடவும் செய்யும் தவறுகளை பொறுத்துக் கொள்ளவும் செய்கிறோம். 

    ReplyDelete
    Replies
    1. எனக்கு நினைவு தெரிஞ்சதில் இருந்து தோழர்கள் சின்னக் குழந்தைகள் தான் ஜேகே அண்ணா. என் வயசுப் பெண்களோடு பள்ளி அளவில் தான் சிநேகம். மற்றபடி அக்கம்பக்கம் உள்ள குழந்தைகள் எல்லாம் எங்க வீட்டில் என்னோடு தான் விளையாடும். ஆகவே எத்தனை வயசு ஆனாலும் குழந்தைகளோடு விளையாடுவது என்பது பிடித்த விஷயம்.

      Delete
    2. நானும் இப்படித்தான் கீசாக்கா, என் வட்டம் எப்பவும் குழந்தைகளோடு அல்லது மிகவும் வயதானவர்களோடுதான்:) ஹா ஹா ஹா..

      Delete
    3. ஹாஹாஹா, பெயர் மாத்தியாச்சா? சொல்லணும்னு இருந்தேன். மறந்துட்டேன். ஆனாலும் பூந்தளிர்னு உங்களை நீங்களே சொல்லிக்கிறது கொஞ்சம் இல்லை நிறையவே ஓவரா இல்லையோ? :))))))

      Delete
  5. Happy makara sankranti. Blessings to Natkat Natavarlalkishan

    ReplyDelete
    Replies
    1. தப்பான பதிவுக்கு வந்து கருத்துச் சொல்லி இருக்கீங்கனு நினைக்கிறேன்.

      Delete
    2. Illiye. Happy pongal correct time thaan. Kunjulu natvarlslkishan illiya?

      Delete
  6. எக்ஸ்டன்ஷன் வாங்கி இன்னும் ஆறுமாதம் இருங்கோ .....கிடைக்கும் சந்தோஷத்தை விட்டு விட்டு போகாதிங்கோ

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, பையர் பச்சை அட்டை வாங்கணும்னு முனைந்து கொண்டிருக்கார். முன்னரே வாங்கறதா இருந்தது தான். வாங்கி இருந்தால் பத்து வருஷம் ஆகி இருக்கும். :)))) இப்போவும் வேண்டாம் என்றே சொல்லிட்டு இருக்கோம் மதுரைத் தமிழரே! இவங்க அங்கே வந்தால் நல்லா இருக்கும்! ஆனால் வர முடியாது! :(

      Delete
  7. அனைவரது இல்லத்திலும் பால் பொங்கட்டும்.. அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  8. பொங்கல் நல் வாழ்த்துக்கள். பாட்டிகளுக்கு பேரன் பேத்திகள் பற்றி பேசுவது பிடித்த விஷஉஅம். நானும் (பதிவில்) பொங்கல் வாழ்த்தில் பேரனை போட்டு இருந்தேன். நீங்கள் பேத்தியின் விஷமம் பற்றி போட்டு இருக்கிறீர்கள். நீங்கள் பார்க்கவில்லை
    ஊருக்கு போய் நினைத்து கொள்வது தான் நம் வேலை.
    பேத்தியுடன் பொங்கலை மகிழ்ந்து கொண்டாடி மகிழ்ந்து இருங்கள்.
    வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, இன்னமும் உங்க பதிவுக்கு வரலை. ஆனால் முகநூலில் போட்டிருப்பதைப் பார்த்தேன். பேரனுக்கு ஆசிகள். பொங்கல் கொண்டாட்டம் முடிந்து விட்டது. குழந்தை பள்ளிக்குப் போய்விட்டாள். வீட்டில் இருந்திருந்தால் தாத்தாவை ஒரு பூவை எடுத்துப் போட விட்டிருக்க மாட்டாள். :)))) நான், நான், என ஓடி வந்து விடுவாள்.

      Delete
  9. மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி முனைவர் ஐயா!

      Delete
  10. குழந்தைகள் விளையாட்டுகள் அற்புதம்.
    பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
    அதுவும் இந்தக் குட்டி ரொம்ப அழகா விளையாடுகிறது.

    அம்மா அப்பா கிட்ட விஷமம் செய்தால் அவ்வளவு எடுபடாது.
    தாத்தா பாட்டி ஸ்பெஷல் தான்.
    அமெரிக்காப் பேரனும் இங்க இருப்பவனும்
    பேசிக்கொள்வது பாட்டி எப்போது போகலாம்
    எப்போது வரணும் என்று தான்.நீ இல்லைன்னால் ரொம்ப டிஃபிகல்ட்
    என்று இவன் இப்பவே சொல்ல ஆரம்பிச்சுட்டான்.
    மனசுக்கு ஆறுதல் இவர்கள் தான். நல்ல பதிவு கீதா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, ஆமாம், இந்தக் குழந்தைகள் தாம் மனசுக்கு ஆறுதல். அவங்க விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும். இந்தக் காலத்தில் பிள்ளைக் குழந்தைகள் சாதுவாக இருக்கும் போல! இது விஷமம் தாங்கலை!

      Delete
  11. குழண்தைகள் வளர்ந்து விட்டால் ...அவர்களின் குணமே மாறி விடும்பிற்காலத்தில் நினைவுபடுத்துவதும் பிடிக்காது அப்போது நான் வளர்ந்து விட்டேனே என்று சொல்லும்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி ஐயா, அவங்க வயசுக்கு ஏற்றாற்போல் பேச வேண்டும் இல்லையா? இப்போ எங்க அப்புவும் அப்படித் தான். பாசம் எல்லாம் உண்டு. ஆனால் பெரிய பெண் என்னும் நினைப்பில் வாட்சப்பில் தான் எதானாலும் சொல்லுவாள். அவள் விருப்பத்திற்கேற்ப வளைந்து கொடுத்து விடுவேன்.

      Delete
  12. நல்லா எஞ்சாய் பண்ணுங்க. இதெல்லாம் கிடைக்க கொடுத்துவச்சிருக்கணும். வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நெல்லைத் தமிழரே, பேரன், பேத்திகளோடு வாழக் கொடுத்து வைச்சிருந்தாலும் சில தாத்தா, பாட்டிமார்க்கு அது பிடிப்பதில்லை. மூஞ்சியையும், முகத்தையும் காட்டுவார்கள். இந்த இன்பம் என்னன்னே அவங்களுக்குத் தெரிஞ்சுக்க ஆர்வம் இருக்காது. கடுகடுவென இருப்பார்கள். கொடுத்து வைக்காத ஜென்மங்கள்.

      Delete
  13. ///மறைத்துக் கொண்டால் போதுமா! கிளு கிளு சிரிப்பையும் ஆடும் குட்டிக்கால்களையும், குட்டிக்கைகளையும் மறைக்கவா முடியும்! அதுக்கு என்னமோ இப்படிச் செய்தால் தான் இருப்பது அம்மாவுக்கும், அப்பாவுக்கும் தெரியாதுனு நினைப்பு.//
    ஹாஹா :) அந்த காட்சி அற்புதமான காட்சி .குழந்தையுடன் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிங்க அக்கா .இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் 

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல், ஆமாம் அற்புதமான காட்சி தான். கையை எங்கே காணோமே என்றால் உடனே தலையணையை இழுத்துவிட்டுக் கொண்டு கைகளை மறைச்சுக்கும். கிடுகிடுனு கட்டிலில் ஏறும் விரைவைப்பார்த்தால் எனக்குப் பயம்மா இருக்கும். கீழே விழுந்துடுமோனு!

      Delete
  14. இன்றைய போஸ்ட்டை குட்டிக் குஞ்சுலுவுக்கு டெடிகேட் பண்ணிட்டீங்களோ... குழந்தைகளின் அட்டகாசம் சொல்லி முடியாதவைதானே.. பார்க்கப் பார்க்க இனிமை, அதுவும் அப்பா அம்மாவைக் காட்டிலும் தாத்தா பாட்டியுடன் தான் அதிகமாக விளையாடுவார்கள்.

    //இது பர்ப்பிள் என ஒரு துண்டைக்காட்டிச் சொல்லும். நாமும் ஆமாம் பர்ப்பிள் தான் என்பதை ஆமோதிக்கணும்.//

    ஹா ஹா ஹா வேறு வழி?:) மறுத்தால் கீசாக்காவைக் கட்டிலால உருட்டிப்போடுவா குஞ்சுலு ஹா ஹா ஹா.. கீசாக்கா எதுக்கும் ஸ்ரெடியா இருந்து கொள்ளுங்கோ:)

    ReplyDelete
    Replies
    1. வாங்க கருங்காலி, இது வரை வைச்சுக்கொண்ட பெயர்களிலேயே இதான் அருமையா இருக்கு! இஃகி,இஃகி,இஃகி, ஆமாம், குட்டிக் குஞ்சுலுவுக்கு இந்தப் பதிவைக் கொடுத்துட்டேன். ரொம்ப நாள் முன்ன்ன்னே எழுதி வைச்சது. இப்போத் தான் எடுத்து வெளியிட்டேன். நிறங்கள் எல்லாம் கரெக்டாச் சொல்லிடும். உண்மையாகவே பர்ப்பிள் நிறத் துண்டு தான் அது. என்னோட பிங்க் துண்டையும் பர்ப்பிள் துண்டையும் பார்த்தால் விடாது! இரண்டும் அதற்குப் பிடிச்ச நிறம். அதோட முதல் பிறந்த நாளைக்குப் பர்ப்பிள் நிறத்தில் தான் பட்டுப்பாவாடை வாங்கிக் கொடுத்தோம். அந்தப் பாவாடைக்கு வாய் இருந்தால் அழுதிருக்கும். அத்தனை முறை கட்டியாச்சு. இப்போத் தான் அதைக் கண்ணில் படாமல் மறைச்சு வைச்சிருக்கா அவ அம்மா.

      Delete
  15. //"பாட்டி, ஸ்லைட்! கம், ப்ளே!" என்று சொல்லும்//

    ஹா ஹா ஹா கீசாக்கா 24ம் திகதி சனி அங்கிள் இடம் மாறுறாராம்ம்:)) எதுக்கும் கட்டில் காலைப் பிடிச்சுக்கோங்க:)) ஊருக்கு நலமாகப் போகோணுமெல்லோ ஹா ஹா ஹா..

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா,ஹா, அது பாட்டியாவே நினைச்சுக்கலைனு தோணுது. என்னையும் அதோட ஃப்ரண்டுனு நினைக்குது போல! அது விளையாடும் எல்லா விளையாட்டையும் என்னையும் விளையாடச் சொல்லும். அப்படி விளையாடலைனால் ஒரே கத்தல் தான்!

      Delete
  16. //ஆயிற்று! நாங்கள் ஊருக்குப் போகும் நாள் நெருங்கிட்டு வருது. ஊருக்குப் போனப்புறமா என்ன செய்யப் போகிறதோனு பயமாவும் கவலையாகவும் இருக்கு. ///

    நீங்க எப்படி தைரியமாக ஊருக்கு வந்திருக்கப் போறீங்க குட்டியைப் பிரிஞ்சு என நான் கவலைப்படுறேன்.. ஆனா பயணம் போவோருக்கு பெரிசாக பிரிவு தெரிவது குறைவு, பயணம் அனுப்பிப்போட்டு அதே இடத்தில் இருப்போருக்குத்தான் கவலை அதிகம்... என்ன செய்வது, இக்காலத்தில் இப்படிப் பிரிவுகள் சாதாரணமாகி விட்டன.. எல்லோரும் பாவம் தான் என்ன பண்ண முடியும்...

    இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் கீசாக்கா.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், கருங்காலி, நாமளும் இங்கே இருக்க முடியறதே இல்லை. அவங்க வந்தாலும் வந்துட்டு ஓடறதிலேயே இருப்பாங்க! என்னவோ, எங்க பெண், பிள்ளை இருவருமே இப்படி வெளிநாட்டு வாசம் செய்வாங்கனு நாங்க நினைக்கலை. ஆனால் அவங்க ஜாதகத்திலே எங்க பிள்ளை எங்கே இருப்பாரோ அங்கே தான் பெண் இருப்பானு சொன்னாங்க. ஆனால் பெண் தான் கல்யாணம் ஆனதுமே அம்பேரிக்கவாசியாகிட்டா. பையர் அதுக்கப்புறமா ஐந்து வருடங்கள் கழிச்சுத் தான் வந்தார்.

      Delete
  17. குழந்தையுடன் இருக்க முடியாமல் ஊருக்குத் திரும்பி வருவது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். ஆனாலும் வந்து தானே ஆகவேண்டும். இனிய நினைவுகளுடன் திரும்பி வாருங்கள்.

    பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், பிரிவு தவிர்க்க முடியாதது. குழந்தை ஏங்கிப் போகாமல் இருந்தால் சரி! வேறே என்ன நினைக்க முடியும்? எங்க பொண்ணு வீட்டுக்குப் போனாலே திரும்பி வந்ததும் எங்களிடம் கோபித்துக் கொண்டு அழுவாள்.

      Delete
  18. பேரக் குழந்தைகளோடு விளையாடுவதற்கு ஈடான இன்பம் கிடையாது. என் பேத்தியிடம் விஷமக்கார ஷிவானி என்று பாடுவேன். ஆரம்பத்தில் பேசாமல் இருந்த என் பேத்தி கொஞ்ச நாட்கள் கழித்து, நான் விஷமக்கார.. என்று தொடங்கியவுடன், ஷிவானி என்று தானே முடிப்பாள். இன்னும் கொஞ்ச நாட்கள் கழிந்து, விஷமக்கார பானு பாட்டி.. என்று குரும்புச் சிரிப்போடு பாடுவாள்.ஊரிலிருந்து வந்ததும் உங்களுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.  

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானு, உங்க பேத்தியும் உங்களை விட்டுப் பிரிந்து கனடா சென்றது உங்களுக்கும் கஷ்டமாய்த் தானே இருக்கும்! இந்த வெளிநாட்டு வாசத்தினால் உற்றம், சுற்றம், சொந்த நாட்டைப் பிரிந்து இருப்பது போன்ற கொடுமை வேறே ஏதும் இல்லை.

      Delete
  19. வணக்கம் சகோதரி

    தங்கள் பேத்தியின் விஷமங்கள் ரசிக்க வைக்கின்றன. பேச்சு நன்றாக வந்து விட்டால் இன்னமும், பேசி, பேசி நம்மை அசர வைப்பார்கள். நம் காலத்தை விட இந்த கால குழந்தைகளுக்கு எல்லா விபரங்களும் நன்கு புரிந்து நமக்கிணையாக விளையாடியோ, பேசியோ அசத்துகிறார்கள்.
    உங்களுக்குத்தான் பேத்தியை விட்டு வருவதற்கு நிறையவே கஸ்டமாக இருக்கும்.உங்களுக்கு குடியுரிமை கிடைத்தாலும், அங்குள்ள பருவ நிலை மாற்றங்கள் நீங்கள் நிரந்தரமாக தங்குவதற்கும் ஒத்து வராதில்லையா? அது வேறு சிரமங்கள். தங்கள் பேத்திக்கு வாழ்த்துக்கள். அங்கு அனைவரையும் கேட்டதாக கூறவும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  20. இனிய பொங்கல் வாழ்துகள்.

    குட்டிக் குஞ்சுலுவுடன் இனிய பொழுதுகள்.ரசித்திருங்கள். நாமும் மகிழ்கிறோம்.

    ReplyDelete