எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, January 26, 2020

காப்பி அடிப்பதனால் என்ன பயன் என்கொல்??????? :(

முகப்புப் பக்கம்  இங்கேயும் நீக்கச் சொல்லிக் கோரிக்கை விடுத்திருக்கிறேன்.

ஹரிஹரன் பால சுப்ரமணியன் February 7 2019    copied and pasted by this person

மஞ்சளில் ஒரு ஊறுகாய்   My Post about turmeric pickle

படம் இங்கே! பதிவு அங்கே! My second post about the turmeric pickle

இந்தச் சுட்டிகளில் போய்ப் பார்க்கவும். அப்பட்டமான காப்பி, பேஸ்ட் என்பது தெரியும்.

மஞ்சளில் ஒரு ஊறுகாய் என என்னோட சாப்பிடலாம் வாங்க பக்கத்தில் ஒரு பதிவு 2015 ஆம் ஆண்டில் போட்டிருந்தேன். அதையே மறுபடியும் அதே 2015 ஆம் ஆண்டில் என்னோட எண்ணங்கள் வலைப்பக்கத்தில் சுட்டி கொடுத்துவிட்டு ஊறுகாய் செய்தவற்றின் படமும் போட்டிருந்தேன். சாப்பிடலாம் வாங்க வலைப்பக்கம் போட்டிருந்த அந்தப் பதிவில் முதல் இரண்டு பத்தியில் கொஞ்சம் வம்பு வளர்த்துவிட்டு "ஊறுகாய்க் காலம் தொடங்கப் போகிறது!" வரியிலிருந்து ஆரம்பித்து செய்முறையை எழுதி இருந்தேன். படங்கள் போடவில்லை. அதன் பின்னர் ஊறுகாயைப் படம் எடுத்து படம் இங்கே! பதிவு அங்கே!" எனச் சுட்டி கொடுத்துப் பதிவும் எண்ணங்கள் வலைப்பக்கம் போட்டிருந்தேன்.

அந்த ஊறுகாய் செய்முறையை ஹரிஹரன் பாலசுப்ரமணியன் என்பவர் தன்னுடைய "ஊர்க்கோடாங்கி" என்னும் வலைப்பக்கம், "ஊறுகாய்க் காலம் தொடங்கப் போகிறது!" என்னும் வரியிலிருந்து ஆரம்பித்து (முதல் இரண்டு பத்திகளை விட்டுவிட்டார். அவை என்னோட சொந்த வம்பு என்பதால் கண்டு பிடிச்சுடுவாங்கனு பயமோ என்னமோ! ) அப்படியே வரிக்கு வரி வார்த்தை மாறாமல் 2019 ஆம் வருடம் ஃபெப்ரவரி மாதம் ஏழாம் தேதி காப்பி, பேஸ்ட் பண்ணி இருக்கார். அதைக் காப்பி, பேஸ்ட் பண்ணியதோடு அல்லாமல் தன்னுடைய பதிவு போலவும் கொடுத்திருக்கார். என்றாலும் நான் பயன்படுத்தும் சில வார்த்தைகள் எனக்கு மட்டுமே நன்கு தெரியும். என் பதிவைப் படிக்கிறவங்களுக்கும் நன்கு தெரியும். ஆகவே முதல் வார்த்தையைப் படிக்கும்போதே புரிந்து விட்டது. என்றாலும் ஒரு முறைக்குப் பல முறை அங்கே போய், என்னுடைய பதிவுகளிலும் போய் சோதனைகள் செய்து விட்டு இந்த மாபெரும் திருட்டுத்தனத்தை இங்கே பலரும் அறிய வெளியிடுகிறேன்.

அந்தப் பதிவில் போய்க் கருத்துக்கள் மூலம் என் கண்டனங்களையும் ஆக்ஷேபங்களையும் தெரிவித்திருக்கிறேன். நண்பர்கள் அனைவரும் மூன்று பதிவுகளையும் பார்த்துப் படித்துவிட்டுத் தங்கள் கருத்தைச் சொல்லவும். இம்மாதிரி என்னோட "சிதம்பர ரஹசியம்" மற்றும் "லலிதாம்பாள் சோபனம்" "பிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்!" மின்னூல்கள்,   சுமங்கலிப் பிரார்த்தனை பற்றிய பதிவு எனப் பல பதிவுகள் களவாடப் பட்டிருக்கின்றன. இவற்றில் லலிதாம்பாள் சோபனம் எழுதியவரை மட்டும் முகநூல் மூலம் கண்டு பிடித்துச் சண்டை போட்டு அவற்றை நீக்க வைத்தேன். அந்த சோபனமே இன்னொரு இடத்திலும் பதிவாகி உள்ளது. அவங்களைக் கேட்டதுக்குப் பதிலும் சொல்லலை. நீக்கவும் இல்லை. என்ன பிழைப்போ! ரொம்ப வருத்தமாக இருக்கிறது. கண்களில் பட்டதை உடனே பகிர்கிறேன். இன்னும் எத்தனை எத்தனை பதிவுகளோ! யார் யாரோ?  குறைந்த பட்சம் என்னுடைய பெயரையாவது சொல்லி இவங்க பதிவில் இருந்து எடுத்திருக்கேன் எனக் குறிப்பிட்டிருக்கலாம்.

முகநூலில் வரகூரார் அண்ணா அவர்களால் என்னுடைய பதிவுகள் பலவும் என் பெயரையும் குறிப்பிட்டுப் படத்தையும் போட்டுப் பகிரப்படுகின்றன. மனதுக்கே நிறைவாய் இருக்கும்.

25 comments:

  1. எப்படி உங்கள் கவனத்துக்கு வந்தது?  கண்டுபிடிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்துடன் அடித்திருப்பார் என்று நினைக்கிறேன்.  

    ReplyDelete
    Replies
    1. ஆதி முகநூலில் மஞ்சள் ஊறுகாய் போட்டது பற்றிச் சொல்லி இருந்தார் ஸ்ரீராம். நான் என்னுடைய முறையைச் சொல்வதற்காக லிங்கை கூகிளில் போட்டால் இது வருது! :( க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  2. நீங்கள் பொங்குவது ஒரு விதத்தில் கொஞ்சம் ஓவர் என்று தோன்றுகிறது. இணையம் என்பது ஒரு பொது வெளி. யார் வேண்டுமென்றாலும் எதை வேண்டும் என்றாலும் அங்கே கொட்டலாம். அதற்கு கட்டணம  இல்லை. அதனால் அதை மறு  பிரசுரம் செய்ய தடை இல்லை. ஆனால் மறு பிரசுரம செய்வோர் அதன் முதல் ஆசிரியரின் பெயரையும் அவர்க்கு நன்றியையும் தெரிவித்து பிரசுரம் செய்ய வேண்டும். 
    எவ்வளவோ இலவச தளங்களில் (விக்கி, வேர்ட்பிரஸ், பிளாக், மற்றும் கூகிள்) இருந்து எவ்வளவோ செய்திகளை நாம் சேகரிக்கிறோம். அவற்றை எல்லாம் நாம் எதையாவது மீள் பதிவு செய்யும்போது பொதுவாக ஒரு நன்றி கூறிவிட்டு நம்முடைய தளங்களில் உபயோகிக்கிறோம். அவ்வளவே. அதனால் இதையும் சும்மா ஒரு மன்னிப்புடன் விட்டு விடுங்கள் . ஒரு ஊறுகாய் சமாச்சாரத்திற்கு இவ்வளவு பொங்குவது கொஞ்சம் கூடுதல் ஆகத்  தோன்றுகிறது. 
    சாதாரணமாக இந்த பதிவை உங்கள் தளத்தில் எத்தனை பேர் பார்த்திருப்பார்கள். தற்போது கொஞ்சம் பரவலாக நிறைய பேர் பார்ப்பார்கள் அல்லவா? அப்படி சமாதானம் செய்து கொள்ளுங்கள்.
    DD அவர்கள் எப்போதும் அவருடைய பதிவில் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி என்று தெரிவிப்பார். 
    classroom2007.blogspot.com இத்தளத்தில் ரைட் க்ளிக் டிசேபிள் செய்யப்பட்டு காப்பி பேஸ்ட் செய்யமுடியாத  படி இருக்கும். அதே போன்று உங்கள் பதிவையும் செய்யலாமே. DD உதவுவார். 


    Jayakumar 

    ReplyDelete
    Replies
    1. சொல்லுவது எளிது. பொது வெளி எனில் எல்லோருடைய உழைப்பையும் திருடச் சொல்லவில்லை. உங்களைப் போன்ற ஆதரவாளர்கள் இருப்பதால் தான் இம்மாதிரி ஆட்களுக்கு தைரியம் கூடுகிறது. ஒவ்வொரு பதிவையும் போடுவதற்கு நான் எத்தனை உழைத்தேன், எத்தனை புத்தகங்களைப் படித்தேன், சிதம்பரத்திற்கு எத்தனை முறை சென்று தீக்ஷிதர்களிடம் கலந்து ஆலோசித்தேன் என்பதெல்லாம் எங்க இருவருக்கும் தான் தெரியும். அது போலவே மற்றவைகளும். உழைப்பின் மூலம் தான் உருவாகிறது. இது வெறும் ஊறுகாய் தானே என நீங்கள் சொல்லலாம். அதை அவரே எப்படிச் செய்வது எனப் பகிரலாமே! வெறும் ஊறுகாயை என்னோட பதிவில் இருந்து திருடியா போடணும்? அதுவும் வரிக்கு வரி! போய்ப் படிச்சுப் பாருங்க, அப்போத் தான் தெரியும். லலிதாம்பாள் சோபனம் எழுதும்போது சௌந்தரிய லஹரி, தெய்வத்தின் குரல், அபிராமி அந்தாதி, லலிதா சஹஸ்ரநாமம், தேவி மஹாத்மியம் இத்தனையையும் படித்துப் புரிந்து கொண்டு தெரிந்தவர்களைக் கேட்டுக் கொண்டு இது சரியா எனத் தெரிந்து கொண்டே எழுதினேன். ஒவ்வொரு நாளும் (நவராத்திரி என்பதால்) பதிவு வரணும்.வீட்டு வேலைகளுக்கு இடையில் கொலுவுக்கு வருபவர்களையும் கவனித்துக் கொண்டு தயார் செய்திருக்கேன். சும்மாச் சொல்லிட்டுப் போவது ரொம்பவே எளிது.

      Delete
    2. மஞ்சளில் ஊறுகாய் செய்வது தெரியும் என்றால் அவர் 2015 ஆம் ஆண்டிற்கு முன்னரே போட்டிருக்கலாமே! நான் போட்டு நாலு வருஷம் கழிச்சுத் தான் புதுசாய்ச் சொல்வது போல் போட்டிருக்கார்! என்னைப் பொறுத்தவரை இது மன்னிக்க முடியாத குற்றம். முகநூலில் பல குழுமங்களில் என்னுடைய சமையல் பதிவுகளில் இருந்து ஆன்மிகப் பதிவுகள் வரை மறு பிரசுரமாக வந்தது. அவ்வளவு ஏன்? இப்போ மார்கழி மாசத்தில் என்னுடைய திருவெம்பாவைப் பதிவை ஒரு மின்னூல் என்னுடைய பெயரைப் போட்டு மறு பதிப்புச் செய்தது. அதற்கு முன்னால் என்னிடம் அனுமதி வாங்கினார்கள்.

      Delete
    3. வணக்கம் சகோதரி

      உண்மைதான் சகோதரி. இது மன்னிக்க முடியாத குற்றம்தான். என்ன செய்வது? தங்கள் ஆதங்கம் எனக்கும் புரிகிறது.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    4. நன்றி கமலா!

      Delete
  3. வணக்கம் சகோதரி

    தங்கள் தாக்கம், ஆதங்கம், வருத்தம் புரிகிறது. எப்படித்தான் மற்றொருவர் யோசித்து எழுதி சேர்த்த எழுத்து (விலைமதிப்பற்ற) முத்துக்களை களவாடிக் கொள்ள இவர்களுக்கு மனம் வருகிறதோ? சொந்தமாக கற்பனை வளத்துடன் யோசிக்க கூட திறமையற்றவர்கள் ஏன் பதிவுகள் எழுதும் ஆசையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.?

    முன்பு இப்படித்தான் 2015 லோ என்னவோ சிவராமன் என்பவர் என் பதிவுகள் உட்பட நம் வலைத்தள சகோதர சகோதரிகள் பதிவுகளையும் மிக அழகாக காப்பி பேஸ்ட் செய்து தன் வலையில் போட்டு திருப்தியடைந்து வந்தார். ஒரு சகோதரி (மைதிலி என நினைக்கிறேன்.) மூலம் கண்டுபிடித்து சொல்ல நாங்கள் போய் அவர் வலைத்தளம் பார்த்து அதிர்ச்சியடைந்தோம். ஏனெனில் அவர் எழுதியது (இல்லை. இல்லை களவாடியது) முக்கால்வாசியும் எங்களுடையதே..! ஹா. ஹா. ஹா.

    காப்பி அடிப்பது பள்ளியிலிருந்தே நம் மக்களின் மனதில் ஊறி வருவதுதானே...என்று சமாதானப்படுத்திக் கொண்டு நான் அதையே வைத்து ஒரு பதிவாக (கவிதையாக) என் பதிவில் பதிவுலகத்திருட்டு என்ற பெயரில் எழுதி வைத்தேன். அதையும் அவர் சத்தமில்லாமல் எடுத்துப் போயிருப்பார். அது வேறு விஷயம்...!

    தங்கள் கோபம் நியமானதுதான்.. நீங்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு சென்று பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    என் தளத்திற்கு வந்து தாங்கள் கருத்து தெரிவித்தமைக்கு நன்றிகள். நேற்று மதியத்திலிருந்து நாங்கள் கொஞ்சம் வெளியில் சென்று விட்டதால் உடனே பதிலளிக்க இயலவில்லை. இன்று அளிக்கிறேன். மன்னிக்கவும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் இது குறித்துப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வந்தது கமலா. இத்தகைய திருடர்களுக்குக் கொஞ்சமும் வெட்கம் என்பதே இருக்காது போல. அடுத்தவர் எழுதினதைத் திருடி எடுத்துத் தன் பெயரில் போட்டுக் கொள்ளுவது எத்தனை துரோகம் என்பது புரியாமலா செய்வார்கள்? அவர் பதிவுப் பக்கங்களில் பதிவைக் காப்பி, பேஸ்ட் பண்ண முடியாதபடிக்கு ரைட் க்ளிக்கை டிசேபிள் செய்து வைத்திருக்கிறார். அதையும் சோதித்துப் பார்த்தேன். இன்னொரு சகோதரியும் முகநூலில் சொன்னார்.

      Delete
    2. ஒண்ணும் அவசரம் இல்லை. நேரம் இருக்கையில் பதில் கொடுங்கள். எனக்கெல்லாம் உங்களைப் போல் இரவு பனிரண்டு மணி விழித்துக் கொண்டு உட்கார்ந்து கணினியில் வேலை செய்ய முடியாது. தூக்கம் வராமல் படுத்துக் கொண்டே இருப்பேனே தவிர, எழுந்து வந்து கணினியில் உட்காருவது எல்லாம் இல்லை. இதோ, இப்போப் போய் விடுவேன். பின்னர் நாளைக் காலை தான் வேலைகள் முடிந்து.

      Delete
  4. உண்மையில் கோபம்வரக்கூடிய விஷயமே

    ReplyDelete
    Replies
    1. புரிதலுக்கு நன்றி ஐயா. இது ஒன்றும் சங்கப்பாடல்கள், ராமாயணம், மஹாபாரதம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற பொதுவான விஷயம் அல்ல, யார் காப்பி அடித்தால் என்ன, இணையம் என்பது பொதுவெளி எனச் சொல்வதற்கு

      Delete
  5. மனதுக்கு வருத்தம் தரும் விஷயம் தான்.
    உழைத்து பாடுபட்டு எழுதியதை இப்படி காப்பி, பேஸ்ட் செய்வது அநியாயம் தான்.

    அவர்களுக்கு மனசாட்சி என்பது இல்லை போலும்.
    உங்கள் பெயரை குறிப்பிட்டு பகிர்ந்து இருக்கலாம்.
    உங்கள் பதிவுகளை இனி காப்பி பேஸ்ட் செய்ய முடியாதபடி செய்து விடுங்கள்.
    என்ன எங்களுக்கு பிடித்த வரிகளை காப்பி பேஸ்ட் செய்து பின்னூட்டம் இட முடியாது .

    ReplyDelete
    Replies
    1. மனசாட்சி இருந்திருந்தால் தான் இத்தனை நேரம் வருத்தம் தெரிவித்திருப்பாரே! இது வரைக்கும் அவரிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை.

      Delete
  6. தங்களது கோபம் நியாயமானதே...

    பிறரது பதிவை அப்படியே வெளியிடுபவர்களுக்கு எவ்விதத்திலும் ஆதரவு செல்லக்கூடாது என்பது எனது கருத்து...

    ஒரு பதிவை மனப்பூர்வமாக உருவாக்கி வெளியிடுபவர்களுக்குத் தான் அதன் அருமை தெரியும்...

    எனது பதிவுகள் பலவும் Fb ல் வேறு வேறு பெயர்களில் வந்திருக்கின்றன...

    மீள் பதிவுக்கு நன்றி என்று சுட்டிக் காட்டும் போது அதனைக் கொஞ்சமும் பொருட்படுத்துவது இல்லை...

    எங்கள் பிளாக்கில் வெளியாகும் எனது படைப்புகள் என்ன ஆகின்றனவோ ...

    தெரியவில்லை...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் துரை, நீங்களும் பல முறை சொல்லி இருக்கிறீர்கள். கில்லர்ஜியும் சொல்லி இருந்தார். ஏன் தான் இப்படிப் பெயருக்கு ஆசைப்பட்டுக்கொண்டு இன்னொருவர் எழுத்தைத் திருடுகிறார்களோ! :((((

      Delete
    2. முன்பே ஒரு முறை இது போல நடந்திருக்கு இல்லையா
      கீதா மா.
      நமக்கோ தெரிந்தவர்கள் பதிவுகளைப் பதிவைப் பார்த்து
      பதில் சொல்லக்கூட சில சமயம் நேரம் இல்லை.
      இவர்கள் தேடித்தேடிக் காப்பி செய்வார்கள் போலிருக்கிறது.
      மிக வருந்த வேண்டிய விஷயம் மா.
      திண்டுக்கல் தனபாலன் உதவியை எடுத்துக் கொள்ளுங்கள்.

      Delete
    3. வாங்க வல்லி, வருகைக்கு நன்றி. இது மாதிரி நாலைந்து முறைகள் நடந்து விட்டது. எவ்வளவோ சொல்லியும் இப்படித் தான் செய்கின்றனர்.

      Delete
  7. மற்றவர்கள் உழைப்பைத் திருடுவது என்பது மிகவும் கேவலமான ஒரு செயல்.'தெருவில் ஒலித்து தேய்ந்த குரல்கள்'என்னும் என் பதிவினை தன் பதிவு போல யாரோ ஒரு மகானுபாவர் எடுத்தாள அது வாட்ஸாப்பில் உலா வந்து எனக்கே திரும்பி வந்தது. ஏன் மங்கையர் மலரிலேயே 90களில் நான் எழுதிய அனுப்பி அதில் பிரசுரமான துணுக்குகளை வேறு பெயர்களில் மீண்டும் பிரசுரித்திருந்தார்கள்.

    ReplyDelete
    Replies
    1. அநேகமாக அனைவருக்கும் இந்த அனுபவம் இருக்கும் என நம்புகிறேன், பானுமதி. எப்படித்தான் திருடித் தன் பெயரில் போட்டுக்கொள்ளும் மனம் வருகிறதோ, தெரியவில்லை.

      Delete
  8. இது போல எனக்கும் நடந்திருக்கிறது. மற்றவர்கள் உழைப்பை திருடுவது மிகவும் கேவலம்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லவில்லை, நான் புலம்புகிறேன். அதான் வித்தியாசம்.

      Delete
  9. மனவருத்தம்தான்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மாதேவி, கொஞ்ச நஞ்சம் இல்லை. இன்னமும் உறுத்துகிறது.

      Delete
  10. வருத்தமான விஷயம் தான். சிலருக்கு இப்படிச் செய்வதில் மகிழ்ச்சி கிடைக்கிறது. பல சமயங்களில் என் பதிவுகள்/படங்கள் இப்படியான மறுபதிப்புகள் செய்திருக்கிறார்கள்.

    கீழேயுள்ள சுட்டி நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பதால் தந்திருக்கிறேன்!

    http://rekharaghavan.blogspot.com/2013/10/blog-post.html

    ReplyDelete