எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, November 30, 2020

வரகு தேன்குழலுக்குப் பரிசு!

போட்டி முடிவுகள்  

நம்ம ஏடிஎம்மோட சஹானா மின்னிதழ்த் தளத்திலே தீபாவளிக்கான போட்டி ஒண்ணு வைச்சிருந்தாங்க. மறக்க முடியாத தீபாவளி நினைவுகள்/சமையல் குறிப்பு, தீபாவளிக்கான பக்ஷணங்கள் செய்முறை. அப்புறமாக் குழந்தைங்களுக்கும் படம் வரையும் போட்டி எல்லாம் வைச்சிருந்தாங்க. சென்னையைச்சேர்ந்த மதுரா பொட்டிக் இதற்கான ஸ்பான்சரை ஏற்றிருந்தாங்க. அதில் தீபாவளி பக்ஷணங்கள் செய்முறையில் நான் வரகு தேன்குழல் செய்முறையும், திரிபாகம் செய்முறையும் அனுப்பி வைச்சேன். மறக்க முடியாத தீபாவளி நினைவுகளையும் பகிர்ந்திருந்தேன். எல்லாம் வெளிவந்தப்போ மத்தவங்களோட நினைவுகள்/செய்முறைகள் எல்லாம் இன்னும் நல்லா இருக்கேனு தோன்றியது. ஆனால் சிறு தானிய உணவு என்பதால் வரகு தேன்குழலுக்கு ஆறுதல் பரிசேனும் கிடைக்கலாம் என எதிர்பார்த்தேன். ஆனால் முதல் பரிசே கொடுத்திருக்காங்க. திரிபாகத்துக்குப் பரிசு எதிர்பார்த்தேன். வரலை. இரண்டாம் பரிசு நம்ம வெங்கட் மனைவிக்குக் கிடைச்சிருக்கு. அவங்களும் நன்றாகச் செய்து காட்டிப் பகிர்ந்திருந்தாங்க. 

நினைவுகள் எழுதியதற்குப் பரிசெல்லாம் கிடைக்கலை. நம்ம பரிவை குமாருக்குக் கிடைச்சிருக்கு. பொதுவா நான் எந்தப் போட்டியிலும் கலந்து கொண்டது இல்லை. வைகோ சார் விமரிசனப் போட்டி வைச்சிருந்தப்போத் தான் விடாமல் என்னைத் தொந்திரவு பண்ணிப் பங்கெடுக்க வைத்தார். குறிப்பிட்ட அளவுக்குப் பரிசுகளும் கிடைத்தன. அதுக்கப்புறமா நான் கலந்து கொண்டது இந்தப் போட்டி தான். இதில் முதல் பரிசு கிடைத்தது உண்மையிலேயே சந்தோஷமாக உள்ளது. இதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஓவியப் போட்டியில் குழந்தைகளுக்கானதில் முதல் பரிசு என் தங்கை (சித்தி பெண்) பேத்திக்குக் கிடைத்திருக்கிறது. குழந்தை உண்மையிலேயே நன்கு வரைந்திருந்தாள். மற்றக் குழந்தைகளும் சோடை போகவில்லை. என்னுடன் சேர்ந்து இரண்டாம், மூன்றாம் பரிசைப் பகிர்ந்தவர்களுக்கும் பரிவை குமாருக்கும், தங்கை பேத்திக்கும் வாழ்த்துகள். மேலே கொடுத்த சுட்டியில் உள்ள யூ ட்யூபில் பரிசு பெற்றோர் பற்றிய விபரங்களைக் காணலாம். 

26 comments:

  1. முதல் பரிசுக்கு வாழ்த்துகள். மிகுந்த மகிழ்ச்சி.

    ReplyDelete
  2. பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்! மேலும் தொடரட்டும்!

    ReplyDelete
  3. பாராட்டுகள் கீசா மேடம். காணொளி பிறகு பார்க்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. பரிசு பெற்றவர்களை யூ ட்யூப் மூலம் சொல்லி இருக்கார்.

      Delete
  4. அடடா. நல்ல செய்தி.
    அன்பு வாழ்த்துகள் மா. உங்களுக்கும், பரிவை குமாருக்கும், தங்கை பேத்திக்கும்
    மகிழ்ச்சி நிரம்பிய பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி. ஆதிக்கும் சமையல் குறிப்பில் 2 ஆம் பரிசு கிடைத்துள்ளது, பாராட்டுகளுக்கு நன்றி.

      Delete
  5. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.  உங்கள் திறமைகள் உங்களுக்கே தெரியவில்லை.  நீங்கள் இன்னும் பல பரிசுகள் வெல்ல வாழ்த்துகள்.

    திருமதி வெங்கட்டுக்கும் பரிவை குமாருக்கும் வாழ்த்துகள்.  உங்கள் தங்கை பேத்திக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, ஶ்ரீராம், எனக்கும் திறமை இருப்பதாகச் சொன்னதுக்கு நன்றி. வாழ்த்துகளுக்கும் நன்றி.

      Delete
  6. வாழ்த்துக்கள் மேடம்.
    நேற்று கிண்டிலில் பாரம்பரியச் சமையல்கள் என்ற நூல் கிடச்சது உங்க பெயர் ல.
    அது நீங்க எழுதின நூலா?

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி அரவிந்த். ஆமாம், "பாரம்பரியச் சமையல்கள்" என்னுடைய புத்தகம் தான். ஞாயிறன்று வெளியிடப் பட்டது. இந்த வாரம் சனிக்கிழமை மத்தியானம் முடிய இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம்.

      Delete
  7. முதல் பரிசு பெற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகள் மாமி.திரிபாகம் மீண்டும் செய்து பார்க்கணும். வரகரிசி தேன்குழலும் செய்து பார்க்கிறேன்.பரிசு பெற்ற பரிவை குமார் சகோவுக்கும், உங்கள் தங்கை பேத்திக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆதி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள், பாராட்டுகள். திரிபாகம் சுலபமாக வந்துடும் உங்களுக்கு. பாதம், பிஸ்தா, முந்திரிகளைச் சேர்த்ததும் அதிகம் கிளறக் கூடாது.

      Delete
  8. வாழ்த்துக்கள் மாமி, a well deserved recognition to you. Saijanani உங்க தங்கை பேத்தியா? ஆஹா எனக்கு இந்த விசயம் தெரியாதே... நல்ல திறமை இருக்கு,மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. ஏடிஎம், இதெல்லாம் உங்களால் தான். தங்கை பேத்தி நன்றாக வரைவாள் எனத் தங்கை சொல்லி இருக்காள். ஆனால் நான் இப்போது தான் பார்த்தேன். மீண்டும் நன்றி உங்களுக்கு.

      Delete
  9. வாழ்த்துக்கள் மாமி, a well deserved recognition to you. Saijanani உங்க தங்கை பேத்தியா? ஆஹா எனக்கு இந்த விசயம் தெரியாதே... நல்ல திறமை இருக்கு,மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  10. முதல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்! 

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாராது வந்த மாமணியே! நன்றி.

      Delete
  11. கீதாக்கா வரகு தேன் குழம் அங்கும் பார்த்து கருத்து இட்ட நினைவு

    வாழ்த்துகள் கீதாக்கா, ஆதிக்கும் வாழ்த்துகள்!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அது இருக்கும் ஒரு 2,3 வருஷம் தி/கீதா.

      Delete
  12. உங்க தங்கை பேத்திக்கும் வாழ்த்துகள்!

    பரிவை குமாருக்கும் வாழ்த்துகள்!

    கீதா

    ReplyDelete
  13. Congrats geethaa akkaa.

    ReplyDelete