எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, October 03, 2006

132. மறுபடி ரயிலும், நாங்களும்

ரயிலில் நாங்கள் போவது புதிசு எல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால் நாட்கணக்காக எங்களை மாதிரி யாரும் போயிருக்க மாட்டார்கள். முன்னே எல்லாம் ராஜஸ்தான் போகும்போது சலிக்காமல் மூன்று நாட்கள் ரயில் சரியான நேரத்துக்குப் போனாலே போக வேண்டும். லேட் என்றால் கேட்கவே வேண்டாம். சமீப காலத்தில் மங்களூர் போனபோதும் சரி, அப்புறம் மைசூரில் இருந்து திருச்சி போனபோதும் சரி இந்த ரெயிலுக்கு என்ன ஆச்சுன்னு

புரியவே இல்லை. Before time போய் விட்டது. இதிலே என்ன கஷ்டம் என்றால் அது போய்ச்

சேரும் நேரம்தான். காலை 4-30-க்குப் போக வேண்டும் என்றால் இது பாட்டுக்கு 3-45-க்கே போய் விடுகிறது. இது சரியாகப் போகலைனு தெரியுமா, போகுதுன்னு தெரியுமா? கூட

வருகிற அட்டெண்டரிடம் கேட்டுக் கொண்டே வரவேண்டும். அவர் நல்லாத் தூங்குவார். நம்மை

மாதிரியா? ராப்பூரா முழித்துக் கொண்டே வந்து ஸ்டேஷன் வரப் போகிறதுனு தெரிஞ்சதும் தூங்கும் என் கணவரை எழுப்ப வேண்டும். தூக்கம் தெளியாமல் இருக்கும் அவர்

தூக்கம் தெளிவதற்குள் ஸ்டேஷன் வந்துடும். அப்புறம் கீழே இறங்கி சாமானை இறக்கி என்று ஒரே அமர்க்களத்தில் தூக்கமாவது? ஒண்ணாவது? எல்லாம் போய்விடும்.

இம்முறை டெல்லி போகும்போது தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ்ஸில் தான் முன்பதிவு செய்திருந்தோம்.

இப்போவெல்லாம் ஜி.டி. வேண்டாதது ஆகி விட்டதே? ராஜ்தானியில் போகலாம் என்றால்

காலம்பர 3 மணிக்கே எழுந்துக்க வேண்டி இருக்கு. அந்த நேரம் கால் டாக்ஸி காரன் கூடத்

தூங்குகிறதாலே ஒரு 30முறையாவது கூப்பிட்டுக் கெஞ்சி நாங்க ரெயிலுக்குப் போக

வேண்டி இருப்பதைச் சொல்லிக் கெஞ்ச வேண்டி உள்ளது. அதனால் தமிழ்நாடு ராத்திரி 10 மணிக்குத் தானே, நிம்மதியாகப் போகலாம் என்று ப்ளான். போய்ப் படுத்துக் கொண்டாச்சு. மறுநாள் காலைக் காப்பி முன்னெல்லாம் "பாட் காபி" என்று கொண்டு வருவார்கள்.

ஆர்டர் எடுப்பார்களா என்றதற்கு இப்போவெல்லாம் இல்லை என்று சொல்லி விட்டார்கள். இவங்க கொடுக்கிற காபி என்ற திரவம், நம்ம ஏ.ஆர். காட்டரிங் சர்வீஸில் (ஏ.ராஜசேகரன், பம்பாய்.) கொடுக்கிற மாதிரி ஒரு சின்ன ஸ்பூனில் தான் இருக்கும். டிபன் என்ற பேரில் நெத்தியில் வச்சுக்கிற ஸ்டிக்கர் பொட்டு சைஸுக்கு இட்லி என்ற கல்லும், வடை என்ற செங்கல்லும் கிடைக்கும். கேசரி என்ற பெயரில் ராஜசேகரன் கொடுக்கும் ஒரு வஸ்து மஞ்சள் கலரில் இருக்கும். அது மட்டும் இல்லாமல் மற்றது உள்ள ஒரு பாக்கெட் ப்ரேக் ஃபாஸ்ட் என்ற பெயரில் வரும். எப்படியோ ராஜசேகரன் கொடுக்கும் சாப்பாட்டைச் சகித்துக் கொண்டு திரும்பத்

திரும்பக் கூப்பிடும் வி.வி.ஐ.பிக்களைப் போல அதையும் விடாமல் வாங்கிச் சாப்பிட்டதும் உண்டு. ஆனால் இம்முறை வீட்டிலேயே எல்லாம் செய்துகொண்டு எடுத்து
வந்துவிட்டதால் சரி, காப்பிக்குப் பார்த்துக்கலாம்னு இருந்தோம். காலையில் பார்த்தால் சீருடை

அணிந்த சிப்பந்திகளால் கொஞ்சம் தரமான நல்ல காஃபி கிடைத்தது, அதுவும் ஓரளவு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவிலேயே.ன்று ராத்திரி வரை ரெயில் சரியாக நேரத்தில் சென்று கொண்டிருந்தது.

ஆனால் தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ்ஸுக்கு எங்க மேலே ரொம்ப நாளா கோபம். அது எனக்குத் தெரியும். முன்னால் டெல்லியிலிருந்து வந்தபோதே நாங்க சென்னை வரை வராமல்

நடுவில் நாக்பூரில் இறங்கி விட்டோம். அதுக்கு அப்புறமும் நாக்பூரில் இருந்தே போனோம்.

பின்னால் இரண்டு முறை போனபோது நாக்பூர் மட்டுமே போய்வந்தோமா அது பயங்கரக்

கடுப்பில் இருந்தது எங்கள் கிட்டே. அதனால் மறுநாள் விடிகாலை ஆக்ராவுக்குச் சற்று

முன்னால் ரெயில் நின்றது பாருங்கள் மணிக்கணக்காக நின்று கொண்டே இருந்தது. யாருக்கும்

ஒண்ணும் புரியாமல், யார் முழிச்சுக் கொண்டிருந்தாங்க, நாங்க ஒரு 2,3 பேர்தான். மேல்

பெர்த்தில் இருந்து என் கணவர் நல்ல குறட்டை. அப்புறம் போய் அட்டெண்டரை எழுப்பிக்

கேட்டதில் ஆக்ராவுக்குச் சற்றுத் தள்ளி "ராஜா கி மண்டி" என்ற ஊரில் ரெயில் தண்டவாளத்தை

விட்டு இறங்கி விட்டதாகவும் அதை அப்புறப்படுத்தியதும்தான் இது கிளம்பும் என்றும் சொன்னார்.

ஆகவே இம்முறையும் நாங்கள் டெல்லி போய்ச் சேரும்போது காலை 11-30, அதுவும்

நிஜாமுதீனில் இறங்கினோம். ஆகிவிட்டது. அங்கே இருந்து குர்காம்ன்ல் இருக்கும் மைத்துனர்

வீட்டுக்குக் காரில் போகும்போது 12-50-க்கு மேல் ஆகிவிட்டது. அங்கே போனால் கரெண்டே

இல்லை. கேட்டால் கரெண்ட்டா அப்படின்னா என்று கேட்கிறார்கள். அங்கே ஹரியானாவில் கரெண்ட் என்பது மின்வாரியக் காரர்களுக்கு மனம் இருந்தால் மட்டும் கொடுக்கும் ஒரு

வஸ்து என்றும், பொது மக்களுக்குக் கரெண்ட் தேவை என்றால் ஜெனெரேட்டரோ

அல்லது இன்வெர்ட்டரோ வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னார்கள். ஆஹா,

தமிழ்நாடா? சொர்க்கம் அங்கேதான் என்று நினைத்துக் கொண்டோம்.

25 comments:

 1. Hhhhm, marupadi oru kaapi puraanam.
  intha TN makkal yen thaan kaapi mela paithiyama irukaangaloo?

  atha kudikaama irukkanum!nu manathai oru muga padutha mudiyalaiyaa? :)

  ReplyDelete
 2. ரயில் பயணம் நல்ல விசயம் தான். மகிழ்ச்சி தரக் கூடியது தான். நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் செல்லும் போது நல்லா இருக்கும். தனிமையில் பல தடவை ரயில் பயணங்களை அனுபவித்து உள்ளேன்.
  ஆனால் டில்லி போன்ற நீண்ட தூர பயணம் என்றால் ரொம்பவே போர் அடிக்குது. இரண்டு தடவை ரயிலில் சென்று இருந்தேன். இப்ப எல்லாம் ரயிலுக்கு டாடா சொல்லியாச்சு

  ReplyDelete
 3. ரயிலையும் உங்களையும் பிரிக்கவே முடியாது போல மேடம்..

  ReplyDelete
 4. ஸ்டேஷன் வரப் போகிறதுனு தெரிஞ்சதும் தூங்கும் என் கணவரை எழுப்ப வேண்டும். தூக்கம் தெளியாமல் இருக்கும் அவர்
  தூக்கம் தெளிவதற்குள் ஸ்டேஷன் வந்துடும். அப்புறம் கீழே இறங்கி சாமானை இறக்கி என்று ஒரே அமர்க்களத்தில் தூக்கமாவது? ஒண்ணாவது? எல்லாம் போய்விடும்.


  ஆனாலும் ரொம்ப அநியாயம் ஏதோ ஒருத்தர் சாதுவா இருக்காங்கிறத்துக்காக அவரை மூட்டை முடிச்சோடு சேர்க்கப்படாது.

  இப்போ லல்லுவின் ராஜியத்தில் ரயில்வே நல்லவே இருக்கு.
  இதுக்குதான் என்னைமாதிரி இருக்கனும் நோ டீ,னோ காப்பி காலை உணவு ஓட்ஸ் மட்டும்.
  என்ன பயணம் முன்னே பின்னே வருதோ நேப்பாளத்திற்கு பிறகு சென்னை --டெல்லியா?

  ReplyDelete
 5. //இவங்க கொடுக்கிற காபி என்ற திரவம், நம்ம ஏ.ஆர். காட்டரிங் சர்வீஸில் (ஏ.ராஜசேகரன், பம்பாய்.) கொடுக்கிற மாதிரி ஒரு சின்ன ஸ்பூனில் தான் இருக்கும். டிபன் என்ற பேரில் நெத்தியில் வச்சுக்கிற ஸ்டிக்கர் பொட்டு சைஸுக்கு இட்லி என்ற கல்லும், வடை என்ற செங்கல்லும் கிடைக்கும்//

  ROTFL :-)

  //காலையில் பார்த்தால் சீருடை

  அணிந்த சிப்பந்திகளால் கொஞ்சம் தரமான நல்ல காஃபி கிடைத்தது, அதுவும் ஓரளவு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவிலேயே.ன்று ராத்திரி வரை ரெயில் சரியாக நேரத்தில் சென்று கொண்டிருந்தது//

  லாலு பரவால்ல தான் போல இருக்கு :-)

  ReplyDelete
 6. //ஆனால் தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ்ஸுக்கு எங்க மேலே ரொம்ப நாளா கோபம்//

  இது உங்களுக்கே கொஞ்சம் ஜாஸ்தியா தெரியல :-)

  //தமிழ்நாடா? சொர்க்கம் அங்கேதான் என்று நினைத்துக் கொண்டோம்.//

  சொர்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா :-)

  ReplyDelete
 7. நானும் டெல்லிக்கு போகும் போது தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் தான் அது தான் வசதி அடுத்த நாள் மதியம் வரை சாப்பாடு எடுத்துக் கொண்டு போய் விடலாம், ரெயில்ல கொடுக்கற காபி நல்லாவா இருக்கு தமிழ்நாடு தாண்டினாலே நோ காபி தேநீர் தான் பெஸ்ட். அதுவும் ரெயில்ல கொடுக்கற காப்பி கழனித்தண்ணிக்கு சமம்:)

  ReplyDelete
 8. ஆப்பு, I will not entertain you with a spoon of coffee. OK? No coffee for you in your marriage. But the girl should/must be a coffee drinker. OK?
  இப்போ நான் எழுதினதுக்குக் காரணம் இப்போ தனியாரால் உணவுத்துறை ரெயில்வேயில் நிர்வகிக்கப் படுவதால் ஓரளவு தரமான காபி அல்லது டீ பொதுமக்களுக்குக் கிடைக்கிறது என்ற விஷயம் போய்ச் சேர வேண்டும் என்று தான். மொக்கை ஸ்பெஷலிஸ்ட்களுக்கு இதெல்லாம் புரியறது கஷ்டம். அதான் அடிக்கடி ஆப்பு வைக்க வேண்டி இருக்கு. :D

  ReplyDelete
 9. புலி என்ன வந்து மூணு நாள் கழிச்சு இன்னிக்குத் தான் நேரம் கிடைச்சுதா? ஆஃபீஸ் தொல்லை(வேலை) எல்லாம் தீர்ந்ததா? உங்களுக்கு என்ன? விமானத்திலே போவீங்க, ஐ.நா. ஆள் நீங்க, என்னை மாதிரியா? :D

  ReplyDelete
 10. ஹி,ஹி,ஹி, கார்த்திக், இன்னும் நான் முதல் முதல் பம்பாய் சென்ற புராணம் வேறு இருக்கிறது. (அதுவும் ரெயிலில்)எழுதலாமா வேணாமானு யோசிட்டு இருக்கேன்.

  ReplyDelete
 11. முன்னே பின்னே எல்லாம் இல்லை சார், பிரயாண அனுபவம் அங்கே தனியா வருது. இது அப்போ அப்போ என் நினைவுகள் இங்கே வரும், அவ்வளவு தான்.

  ReplyDelete
 12. அது மட்டும் இல்லை, ச்யாம், முக்கிய ஸ்டேஷன்களில் ரெயில் நிற்கும்போது கட்டாயமாகக் கழிவறைச் சுத்தம் செய்து பெட்டிகளைச் சுத்தம் செய்து, வாசனை ஸ்ப்ரே அடித்து என்று ஒரே அமர்க்களம் தான். ஆனால் இது ஒரு நல்ல அணுகுமுறை. ரெயில் பெட்டி சுத்தமாகப் பராமரிக்கப் படுகிறது, நல்ல விஷயம் தானே?

  ReplyDelete
 13. ஹி,ஹி,ஹி, ச்யாம், நிஜமாவே தமிழ்நாடு எக்ஸ்ப்ர்ஸ்ஸுக்கு எங்க மேலே கோபம் தான், ஒரு முறை கூட டெல்லியில் இருந்து சென்னை வரை முழுசாப் பிரயாணம் செய்யவில்லை, இந்த முறை போனோமா, அதுக்கு எங்களை விடவே மனசில்லை.

  ReplyDelete
 14. வேதா, இப்போ அப்படி இல்லை. பால் மட்டும் சூடாகக் கொண்டு வருகிறார்கள். காபி அல்லது டீத் தூளாக வைத்திருக்கிறார்கள். நாம் என்ன கேட்கிறோமோ அது கிடைக்கிறது. டீ என்றால் டிப், டிப் தான் என்றாலும் நல்ல தரமான டீத்தூள் தான். வட இந்தியாவில் டீ குடித்தவர்களுக்குப் புரியும். காபியும் நெஸ்கபே பொடி தான். நமக்கு நேரே கலந்து தருகிறார்கள். குறைந்த பட்சமாக 150மி.க்குக் குறையக் கூடாது என்று ரெயில்வேயில் சட்டம் இருக்கிறது. அந்த அளவும் இருக்கிறது.

  ReplyDelete
 15. மறுபடி இன்னிக்கு ஆன்மீகப் பக்கத்துக்குப் போய்ப் பார்த்தா, நறநறநற நறநற நறநறநறநறநற.

  ReplyDelete
 16. ennai aala kanom nu tedininga parunga romba danx:) kannu ellam thanni negizhndu pochu seekiram varen, en systemoda!

  ReplyDelete
 17. வாங்க, சீக்கிரம் ஆப்பு வைக்க ஆளே இல்லாமல் போரடிக்குது.

  ReplyDelete
 18. தமிழ்நாடு தாண்டினாலே நோ காபி தேநீர் தான் பெஸ்ட். அதுவும் ரெயில்ல கொடுக்கற காப்பி கழனித்தண்ணிக்கு சமம்:)

  @வேதா ஒருவேளை நீங்க வருது தெரிந்துதான் போட்டு இருப்பார்கள்.அர்சி கூட பருத்திகொட்டை மாதிரி இருக்குமே.

  ReplyDelete
 19. //ஹரியானாவில் கரெண்ட் என்பது மின்வாரியக் காரர்களுக்கு மனம் இருந்தால் மட்டும் கொடுக்கும் ஒரு
  வஸ்து//

  ரொம்ப பேர் சொல்லி இருக்காங்க.. வடமாநிலத்துக்கு நம்ம தமிழ்நாடு எவ்வளவோ பரவா இல்லைன்னு.. உண்மை தான் போலிருக்கிறது மேடம்

  ReplyDelete
 20. enaku therinja varai bihar romba mosam nu solluvanga.. epdiyo nama pozhapu inda alavukavadu odude andavan puniyathile :)

  ReplyDelete
 21. ask me the train travel any point of time - I will be holding three time tables of south , south central and konkal lines. During 2002 was the most difficult suddenly southern railways issued three timetables for three division and south central and konkan you cnat get in chennai. and making the connecting trains is very difficult again 2004 thank got souther railways made it one single time table.

  Your travel is planned one and thank god you had been in Ac coach to have a waiter to help you inform stations.

  I used to get down out khammam at 2.30 am. If you sleep a bit next stop you can wake up will be hyderabad. ... some time get down at 11 pm and get the connecting train at 3 am intha adventurellam neriya pannirukken..

  North not much ventured except those time of delhi travelling. once during a holiday ( like a europeans what they call as back packers) i do vacation across india like eurpeans do. suddenly thought of going to ghaya . after going to Itarsi - decieded not just ghaya but will go prayag, kasi , allahabad and gaya. so change of train i did from itarsi to allahabad. then i realised what is tamil nadu and tamilnadu transportation is !

  " one beautiful comment i will never forgt"

  " areeeey beta baruuthu neghi thoo khya aruthu hai na sonnekaylleyeea"

  ReplyDelete
 22. known stranger,
  In sleeping class also the helper and conductors are there to help the passengers. May be some are doing good and some are not. But do not say it is only in A/C. I travelled in sleeping class also. And still travelling sometimes.
  About the change, in the Railways originally it was planned in BJP ruling time and started while MR. Vajpayee was our P.M. And it is now getting profit due to that plan only. And Mr. Lalu is gaining name without doing nothing. It came in the 8-10-06 Kalki issue also. But nobody or no magazine or no dailies is praising this issue, or the Govt. run by Mr.Vajpayee. Actually I was about to write it as a special issue. If Mr.Lalu is that much clever in doing things for the people, then why Bihar is still a backward state and people were struggling in his rule?

  ReplyDelete
 23. And about the travelling we used to travel in General compartment also even if the travelling was a planned one. Because due to derailment and other types of disturbances we never travelled safe or sound. And we are habituated to it. That is all. There are so many matters which are not told.

  ReplyDelete
 24. I dont buy your theory - I would say it was from the period of PVR period. Vajapayee travelled the pony and BJP too. PVR is a underdog silent man architecture of Indian change of colour in many quaters who dont get the credit of. Manmohan a brain behind ( my theory) BJP just travelled on the pony.

  My greatest adventure of travelling unreserved was from chennai to delhi - but as been a seasoned traveller by train - i knew to trvel with least luggage and where to change train at which station to avoid travelling in same train if needed. ( like changing buses in betweeen to reach a destination - i once . enna - time was bit longer - never travell in unreserved at night while going north is my view - so when ever night comes - take a passenger train to next big station - so you sleep a bit comfortably in the passenger train then again a long distance train. I wish one day i write a book on Indian train travel - Did to the breath of india by train - a bit pride there in the way i say.

  ReplyDelete
 25. I do not ask you to buy my theory. Because there are some unsung heroes in the Govt. whose work is not recognised. That does not mean they are not patriots and were riding in a pony. Because we never give them opportunity. They got it once and tried to rectify the past errors but to no avail. May be you are aware of the Navy people in Bombay, who fought before independence and were not recognised by Gandhi. But they did a right thing and fought for our country. Today nobody think about them and the younger generation didn't even hear of them. You must read Mr.Narasaiya"s stories and some of the true incidents about them. And I am an admirer of Mr.Rao, and his silent achievements. That is the reason he was left behind.

  ReplyDelete