நேத்திக்கு ஹரிஹரன், தி.ரா.ச. எல்லாருமே என்னோட வயசை ப்ளாட்டினம் ஜுபிலிக்கு அருகிலா எனக் கேட்டிருந்தார்கள். ஆகவே நான் என்னோட உண்மையான வயசை இங்கே சொல்றதாக ஒரு disclaimer கொடுக்கிறதாக எழுதி இருந்தேன். சொன்னபடி செய்யணும் இல்லையா? அதான் இது.
இதன் மூலம் என்னை அறிந்தவர், அறியாதவர், தெரிந்தவர், தெரியாதவர், புரிந்தவர், புரியாதவர், பின்னூட்டம் கொடுப்பவர், கொடுக்காதவர், என்னுடைய வலைப்பதிவுக்கு வருபவர், வராதவர், வலைப்பதிவு எழுதுபவர், எழுதாதவர்(எழுதாதவங்க பார்க்க முடியுமா) தெரியலை. எல்லாருக்கும் ஒரு நற்செய்தி என்னுடைய வயசு இப்போ 16 ஆக இருந்தது, நான் கைலை யாத்திரை சென்று வந்த உடனே 15 ஆகக் குறைந்து விட்டது என மனமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல் என்னைப்பாட்டி என்றோ கொள்ளுப் பாட்டி என்றோ சொல்லக் கூடாது என்று ஆப்பு அம்பியும், அவரின் பாசமலரான பொற்கொடியும்,(உடம்பு பரவாயில்லையா) எச்சரிக்கப் படுகிறார்கள். ஆப்பு, கவனிச்சு வச்சுக்குங்க, உங்க அருமைத் தங்கை பாசமலரிடமும் சொல்லி வைங்க. இது நல்லாவே இல்லைனு. அப்புறம் சங்க விதிமுறைகளின் படி இருவர் மீதும், அவர்களைத் தூண்டி விடுபவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படும். எல்லாரும் வருஷத்துக்கு ஒரு முறை வயசை மாத்தறாங்க. நான் பாருங்க, சொன்ன சொல் தவற மாட்டேன், ஒருமுறை சொன்னா சொன்னதுதான் பேச்சு மாறறதுன்னே கிடையாது. அது தான் தலைவி. ஹிஹிஹிஹிஹி இது தலைவியின் ஆணை. :D :D :D
(ஹிஹிஹி, மனசாட்சி சிரிக்கிறது.
என்ன சிரிக்கிறே? இது நான்.
ம.சா: இல்லை நீ கைலை யாத்திரையில் குதிரைப் பிரயாணம் செய்தியே அது நினைவு வந்தது.
நான்: என்ன அதிலே, வாயை மூடு. "பொட்" சத்தம் கேட்கிறது. மனசாட்சி வேதனை தாங்காமல் முனகுகிறது. "இரு, இரு, எனக்கும் ஒரு காலம் வரும், வச்சுக்கிறேன், உன்னை". நான் விழித்துப் பார்க்க அது பதுங்குகிறது. அப்பாடி, நிம்மதிப் பெருமூச்சு. என்னிடமிருந்துதான்.
நாட்டு மக்களுக்கு ரொம்ப பயனுள்ள பதிவு! இதை எல்லாம் மொக்கை!னு கூட சொல்ல முடியாது. மொக்கையோ மொக்கை! :D
ReplyDelete15 வருடம் முடிந்ததை கொண்டாடும் தலைவி வாழ்க வாழ்க....
ReplyDeleteஅப்போ எங்களுக்கு எல்லாம் வயசு -15 ஆ...
thangallada sami. yarangey- kavaniyingal - ivargallai.
ReplyDeletesangathu thallaivii seat kezhaya vekkannum da sami orru bombu.
அம்பி, இது பயனுள்ள பதிவு இல்லைன்னால், வேறே எது? ரொம்ப தீசல் வாசனை வருது, பார்க்கவும்.
ReplyDeleteச்யாம், போனாப் போகுது, உங்களுக்கு மட்டும் சலுகை தரேன். -15ன்னு வச்சுக்குங்க, அதுவும் முகிலுக்காக.
ReplyDeleteபுஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....... அறிந்த அந்நியரே, நீங்க வச்ச குண்டா இது? புஸ்ஸுனு போச்சே? ஹிஹிஹிஹி.
ReplyDeleteவேதா, ,உங்களுக்குப் பேரக்குழந்தை கூட இருக்கா? யாரு அது? அன்னிக்குக் கூட்டி வந்தீங்களே "நாயகர்" அவரா? ஆச்சரியமா இருக்கே?
ReplyDelete//ungala kanadi potukutu padinganu sonnen//
ReplyDeleteகரெக்ட். அப்படியே, லெட்டர் எழுதும் போதும் கண்ணாடி போட்டுக்க சொல்லுங்க. :D
உங்களுக்கு என்ன வயசுனு யாரு இப்ப கேட்டா? அது தான் இப்ப ரொம்ப முக்கியமா....
ReplyDeleteஇத விட எவ்வளவு முக்கியமான வேலை எல்லாம் இருக்கு....
அசினு யாருக்கு கிடைப்பா, நயன் தாரா மேட்டரு என்னாச்சு... அது போக இப்ப நம்ம பங்கு பாவனானு ஆரம்பிச்சு இருக்காரே.... இப்படி ஏகப்பட்ட மேட்டரு இருக்க... இது இப்ப தேவையா கேட்குறேன்... நம்ம பங்காளி ஷாம் சார்பாக....
என் சார்பா - என்னத்த சொல்ல.... நடத்துங்க நடத்துங்க.....
கீதாஜி,
ReplyDeleteகுதிரைலே ஏறி சவாரி செஞ்சீங்களா? இல்லை டைம் மிஷின்ல ஏறி பின்னால சவாரி செஞ்சீங்களா? அரை நூற்றாண்டு வருஷம் பின்னோக்கி போயிட்டீங்க!
தண்டியிலே காந்தி உப்புச் சத்தியாகிரஹம் போற காட்சியெல்லாம் மங்கலாவானும் தெரிஞ்சிருக்கணுமே?
:-)))
ஆப்பு, still you did not believe me. It is my time. what to tell? Grrrrrrrrrrrr
ReplyDeleteசிவா, மறுபடி என்ன போய் ஒளிஞ்சுக்கிட்டீங்க? இன்னும் வேலை முடியலியா?
ReplyDelete//இப்போ 16 ஆக இருந்தது, நான் கைலை யாத்திரை சென்று வந்த உடனே 15 ஆகக் குறைந்து விட்டது //
ReplyDeleteஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..எப்பா இப்பவே கண்ணை கட்டுதே.. மேடம்.. இன்னா இது உங்க எல்லா பதிவுலயும் வயசு ஒரு கான்செப்ட்டா இருக்கு..
ஹரிஹரன், இந்தப் பசங்க பண்ணற கலாட்டாவிலே நீங்களுமா? கடவுளே, உப்புச் சத்தியாக்ரஹத்தின் போது எங்க அப்பா, அம்மா கல்யாணமே ஆகலியே, இன்னும் கொஞ்ச நாள் போனால் எல்லாரும் சேர்ந்து எனக்குக் கைத்தடி கொடுத்து, கண்ணாடி போட்டு ஒரு சிலை வச்சிடுவீங்க போல இருக்கே. சுதந்திரப் போராட்ட வீரர்னு சொல்லாமல் சொல்றீங்களே? பாவம் அவங்க எல்லாம். நான் சுதந்திரத்துக்குப் பல வருஷம் கழிச்சுத் தான் பிறந்தேன், போதுமா?
ReplyDeleteமேடம், வயசாயிட்டா அவங்க எல்லாம் குழந்தைகள் மாதிரி.. அவங்க வயசை அறுபதில் இருந்து குறச்சு கிட்டே வரணும்னு கேள்விப்பட்டிருக்கேன்.. நீங்க தான் மேடம் கரீக்டா சொல்றீங்க.. அதனால 60 + (60-15) = 105..
ReplyDeleteமேடம்.. உங்க வயசு என்ன 105ஆ..
கார்த்திக், இப்போ உள்ள மன நிலையிலே உங்களுக்குத் தகுந்த பதில் கொடுக்கமுடியலை மன்னிக்கவும். ஹரிஹரனுக்கும் அதான் இந்த மாதிரி பதில் கொடுக்க வேண்டியதாப் போச்சு. அதே தான் உங்களுக்கும். புரிஞ்சுக்குங்க ப்ளீஸ்.
ReplyDeleteமத்தபடி உங்க பின்னூட்டத்தில் உள்ள கிண்டலைப் புரிந்து கொண்டேன்.
athu neenga vittaa ---- ---- namathu pochu.,....
ReplyDeleteஉங்க பேரன் வயச கேட்கல!!!!
ReplyDeleteகொஞ்சம் வயசாயிட்டதால தடுமாறி 51-ஐயும் 61-ஐயும் தான் 15, 16 -ன்னு போட்டுட்டீங்களோ?
ReplyDelete(யப்பா, உங்களுக்கு தமிழ்ல பிண்ணூட்டம் போட்ற்துக்குள்ள கண்ண கட்டுது சாமி...)
en pa bayamurutareenga?
ReplyDelete