ஏற்கெனவே ஒரு சினிமா விமரிசனம் எழுதி இருக்கிறேன். படமே சரியாப் பார்க்காமல். இதுவும் கிட்டத் தட்ட அப்படித்தான் இருக்கும். நம்ம கார்த்திக்குக்கு ரொம்பக் குறை. அவரோட சினிமா பத்தின பதிவுகளிலே நான் பின்னூட்டம் கொடுக்கிறது இல்லைனு. அதான் இன்னிக்கு சினிமா பத்தி மட்டும் எழுதறதுன்னு ஒரு முடிவு. ஜாம்நகர் கதை நாளை வெளி வரும். இதிலிருந்து என்ன தெரிகிறதுன்னா நான் தான் நிரந்தரத் தலை(வலி)விங்கறதை அவர் அங்கீகாரம் செய்திருக்கிறதாலே தான் என்னுடைய பின்னூட்டம் முக்கியம்னு நினைக்கிறார்னு எனக்குப் புரிஞ்சது. அப்பா! எவ்வளவு பெரிய வாக்கியம் எல்லாம் எழுத வேண்டி இருக்கு பாருங்க, நான் தலைவிங்கறதாலே, ஆகவே சங்கத்துச் சிங்கங்களே, புலிகளே, எலிகளே, உடன் பிறப்புக்களே, உடன் பிறக்காதவர்களே எல்லாரும் என்னுடைய கஷ்டத்தைப் புரிந்து கொண்டு என்னைத் தலைவியாக அங்கீகரிக்க வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். சீச்சீ, இது என்ன தேர்தல் பிரசாரம் மாதிரிப் போகுது? சினிமா பத்தி இல்லை எழுதணும்? இருங்க விஷயத்துக்கு வரேன்.
நேத்திக்கு ஜெயா டி.வி.யிலே "காக்க காக்க" படம் போடப் போறதாக ஒரு வாரமாகச் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். படம் சாயந்திரம் 4-00 மணிக்குத் தான் ஆரம்பிக்கும். வழக்கமாகப் போகும் நடைப்பயிற்சி நேத்து தீபாவளி என்பதால் லீவு விட்டாச்சு. பார்க்கலாம்னு உட்கார்ந்தேன். தியேட்டரில் எல்லாம் படம் பார்த்து ரொம்பக் காலம் ஆச்சு. நாங்க சென்னையில் கடைசியாப் பார்த்தப் படம் "மை டியர் குட்டிச் சாத்தான்" தான். அதுக்கே நாங்க அம்பத்தூரில் இருந்து ஒரு 15 பேர் போல முன்பதிவு செய்துட்டுப் போனோம். எங்க அண்ணாவீட்டில் மன்னியும், அண்ணன் பையன், தம்பி மனைவி, அவங்களோட கைக்குழந்தை, பக்கத்து வீட்டுக்காரங்க, அவங்களோட பசங்க, நாங்க இரண்டுபேர், எங்களோட இரண்டு குழந்தைகள்னு போனோம். ஏதோ பிக்னிக் போறது மாதிரி ஒருத்தர் பூரி, கிழங்கு, ஒருத்தர் புளியோதரை, தயிர் சாதம் ஒருத்தர் புலவு என்று செய்து எடுத்துப் போய்த் தியேட்டரில் உட்கார்ந்து சாப்பிட்டு விட்டுப் படம் பார்த்தோம். படம் பார்க்க வந்தவர்களுக்கு எங்களைப் பார்க்கவே நேரம் போதவில்லை. ஏதோ எங்க சொந்தத் தியேட்டர் மாதிரி நினைத்துக் கொண்டு ரொம்ப சுதந்திரமாக உலாவினோம். ஏதோ காட்டில் இருந்து வந்திருப்பாங்க போலன்னு மத்தவங்க நினைச்சிருக்கலாம். எங்கள் தலைல விளக்கெண்ணெய் தடவிட்டு தலை வாரிக் கொண்டு மஞ்சள் கலரில் ஜவ்வந்திப் பூ வச்சுக்கலை. அதுதான் பாக்கி. மாட்டு வண்டிலே போகலை. பஸ்ஸில் போய் இறங்கினோம். அதுக்கு அப்புறம் நாங்க வடக்கே மாத்திப் போனதும் அங்கே திறந்தவெளித் திரையரங்கம் தான்.ராத்திரி 8-00 மணிக்கு மேல் தான் படம் ஆரம்பிக்கும். குளிர் நாட்களில் 7-00 மணிக்கு. எப்போ ஆரம்பிச்சாலும் வீடு தியேட்டர் கிட்டே இருந்ததாலே சாப்பாடு எல்லாம் முடித்துக் கொண்டு நிம்மதியாப் போய்ப் படம் பார்க்கலாம். இல்லாட்டியும் பையனோ, பெண்ணோ போய்ப் பார்த்துக் கொண்டு வருவார்கள். படம் எப்போ ஆரம்பிக்கிறதுன்னு. அதெல்லாம் கவலையே இல்லை. எல்லாரும் வந்ததும் தான் ஆரம்பிப்பாங்க.
இந்த மாதிரி எல்லாம் படம் பார்த்துட்டு இங்கே தியேட்டரில் போய் யார் பார்க்கிறது? அதனாலே எப்பவாவது யாராவது இன்னுமா இந்தப் படம் பார்க்கலைனு கேட்டால் அப்போ அந்தக் குறிப்பிட்ட படத்தின் காசெட் வாங்கிப் பார்க்கறதோட சரி. அதான் டி.வி.யிலே ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு ரசமாக நவரசத்திலேயும் படம் வருதே. இப்போவெல்லாம் அதுவும் பார்க்கிறது இல்லை. என் கணவருக்குக் குத்தகைக்குக் கொடுத்துட்டேன். நேத்துப் பார்க்க உட்கார்ந்தபோதே மணி 5-00 ஆயிடுச்சு. என்ன, வழக்கம் போல படம் பார்க்கணும்கிறதே மறந்துடுச்சு. என் கணவர் டி.வி. போட்டதும் தான் நினைவு வந்து ஜெயாவிலே நான் இன்னிக்குப் படம் பார்க்கணும்னு அறிவிப்பு செய்தேன்.
என் கணவர்:"என்ன படம்?"
நான்: "காக்க காக்க" சூர்யா, ஜோதிகா நடிச்சது.
அவர்:" என்னடி இது? கந்த சஷ்டி கவசம் சொல்றயோனு இல்லை நினைச்சேன்.
நான்: படத்தோட பேரே அதுதான். போலீஸைப் பத்தி ரொம்ப உயர்வா சொல்லி இருக்காமே? இத்தனை படம் பார்க்கறீங்க? இது தெரியலியே?"
அவர் உடனேயே சானலை மாற்றினார். படம் வந்தது. சூர்யா அடிபட்டு விழுந்திருக்க, (எங்கேன்னு எல்லாம் தெரியலை) அவர் நினைவுகளில் படம் ஓடுகிறது.
நான்: இது என்ன? எப்படி அடிபட்டது?
அவர்:அதெல்லாம் நினைவு இல்லை. ஆனால் ஜோதிகா செத்துப் போனதும் சூர்யா பழி வாங்குவார். அதான் முடிவு.
நான்:கோபத்துடன்,"இப்போ உங்களை யார் கதை கேட்டது? முன்னாலேயே சஸ்பென்ஸைச் சொல்லுவாங்களா?"
அவர்:நீ தானே கேட்டே? எனக்கு நினவு வரதைச் சொன்னேன்.
தலையில் அடித்துக் கொண்டு சானலை மாற்றினே. சன்னில் "சாமி"படம் ஓடிக் கொண்டிருந்தது. பார்க்க விருப்பம் இல்லாமல் பொதிகைக்குப் போனால் தேவதர்ஷிணி சீரியலுக்காக அழுது கொண்டிருந்தார். "பாதைகள்" சீரியல். ராஜ்ஜில் என்ன படம்னே புரியலை. விஜய்யில் ஜோடி நம்பர் ஒன். சரினு கே டி.வி.க்குப் போனால் ஸ்ரீகாந்த், சதா நடிச்ச ஏதோ ஒரு படம்.நாசர் ஊட்டி சேரிங் க்ராஸில் வந்து போக்குவரத்தை ஒழுங்கு செய்கிறார். சரி பார்க்காத படம், கதையும் தெரியாது, மேலும் ஸ்ரீகாந்த், சதா முதல்முறை ஜோடினு நினச்சுப் பார்க்க உட்கார்ந்தால் என் கணவர் மறுபடி (வெளியே எதுக்கோ போயிருந்தார்) உள்ளே வந்தார். படத்தைச் சில நிமிஷம் பார்த்துவிட்டு உடனேயே, "அட, இந்தப் படமா? இதிலும் சதா செத்துப் போவாங்க, அநேகமாகக் கொலை பண்ணுவாங்கனு நினைக்கிறேன்." என்றார்.பல்லைக் கடிச்சேன்.
இப்படி எல்லாப்படத்தையும் முன்னாலே பார்த்து விட்டு நான் பார்க்கும்போது கதையைச் சொன்னா என்ன செய்யறதுன்னு ஹிந்தி சானலுக்குப் போய் ஏதாவது பார்க்கலாம்னு சோனிக்குப் போனால் "சாந்தினி" படத்தை 108-வது முறையாகப் போட்டுக் கொண்டிருந்தார்கள். மற்ற சானல்களில் பார்க்கப் பிடிக்காமல் மனம் வெறுத்துப் போய்ப் புத்தகத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்தேன்.அவர் நிம்மதியாக ஏதோ ஒரு மலையாளச் சானலில் மோஹன்லால் படம் பார்க்க ஆரம்பித்தார்.
//நம்ம கார்த்திக்குக்கு ரொம்பக் குறை. அவரோட சினிமா பத்தின பதிவுகளிலே நான் பின்னூட்டம் கொடுக்கிறது இல்லைனு//
ReplyDeleteஅடே யப்பா.. நம்ம சொல் கூட அம்பலத்தில் ஏறுது போல..நன்றி தலைவியே
//இதிலிருந்து என்ன தெரிகிறதுன்னா நான் தான் நிரந்தரத் தலை(வலி)விங்கறதை அவர் அங்கீகாரம் செய்திருக்கிறதாலே தான் என்னுடைய பின்னூட்டம் முக்கியம்னு நினைக்கிறார்னு எனக்குப் புரிஞ்சது//
இது கொஞ்சம் ஒவரா தெரியுது தலைவியே.. ஆனாலும் பரவாயில்லை.. பதிவிக்கு அசை படாத தலைவின்னு நினச்சுக்குறேன்..
மேடம், மொத்தத்துல எந்த படத்தையுமே உருப்படியா பாக்கலைன்னு சொல்லுங்க..
ReplyDeleteசாமிக்கும் காக்க காக்கவிற்கு இடையே உள்ள சில ஒற்றுமைகள்..
ரெண்டு போலீஸ் பற்றிய படங்கள்
ரெண்டு படத்துக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசை.
ரெண்டு படத்தோட பேரும் கடவுளோட தொடர்புடையது
ரெண்டு படத்திலையும் கடைசில முக்கியமான ஒருவர் இறந்து போயிடுவார்..
இது எப்படி இருக்கு தலைவியே
//இப்படி எல்லாப்படத்தையும் முன்னாலே பார்த்து விட்டு நான் பார்க்கும்போது கதையைச் சொன்னா என்ன செய்யறதுன்னு .... புத்தகத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்தேன்.அவர் நிம்மதியாக ஏதோ ஒரு மலையாளச் சானலில் மோஹன்லால் படம் பார்க்க ஆரம்பித்தார்//
ReplyDeleteகடைசி வரை சினிமாவே பாக்கல.. ஆனா பதிவுக்கு தலைப்பு மட்டும் "நான் பாத்த சினிமா".. என்ன தலைவியே..
இப்படியாக ஒண்ணுத்துயும் பாக்கல? அதுக்கு இந்த அலம்பல்!! ஆண்டவா.. நீங்க காக்க காக்க பாத்துருக்கலாம், முடிவு என்னனு தெரிஞ்சாலும் எத்தன தடவை பாத்தாலும் எனக்கு இன்னும் குழப்பம் தான் :)
ReplyDeleteபரவாயில்லை ஒரே நேரத்தில் எல்லா சேனலும் பார்த்திட்டீங்களா..(இந்த ரிமோட்டை ஏன் தான் கண்டு பிடிச்சாங்களோ..)
ReplyDelete/அவர்:நீ தானே கேட்டே? எனக்கு நினவு வரதைச் சொன்னேன்/
நீங்கள் கேட்டதை மறந்து உங்கள் கணவரைத் திட்டுவது நியாயமே இல்லை..
நான், ஏதோ நீங்க சிறுவயதில் பார்த்த - நான் பார்க்காத :-))) சிவகவி, ஹரிதாஸ், திருநீலகண்டர், 1000 தலை வாங்கி அபூர்வ சிகாமணி போன்ற ஏதோ ஒரு படம் என்று நினைத்து ஆவலுடன் ஓடி வந்தேனே ஹூம்....
ReplyDelete:-)))
மொத்தத்திலே தினோம் வீட்டிலே குருசேஷ்த்திரம்தான்.பாவம் பணம் போட்டு டி.வி.வங்கினவருக்கு படம் பார்க்க உரிமையில்லை.என்ன ஒரு அடாவடி.கார்த்தி சொன்னது(?) சினிமா விமரிசனமா இல்லை பாதி சினிமா பாத்த விமரிசனமா? நமக்கு வரலைன்ன விட்டுடனம்.கோபம்,பல்லைக்கடித்தல் இது எல்லாம் தப்புன்னு சின்னபோன்னுக்கு யாராவது சொல்லக்கூடாதோ.
ReplyDeleteகார்த்திக், என்ன இது? தலைவிங்கற எண்ணமே இல்லாமல் ஓவராத் தெரியுதுனு எல்லாம் சொல்றீங்க? உங்க மேலே இனிமேல் சினிமாப் பதிவே போடக்கூடாதுன்னு தடை உத்தரவு பிறப்பிச்சாச்சு. நறநறநற :D
ReplyDeleteஎந்த சினிமா விஷயம்னாலும் உடனே ரெடியாச் சொல்லிடுங்க. அது சரி, சாமி படத்திலே யார் செத்துப் போறது? அது எனக்குத் தெரியாதே? :D
ஏதோ கொஞ்ச நேரமாவது டி.வி.க்கு முன்னாலே உட்கார்ந்தேனே, தவிர உங்களை மாதிரி உண்மைத் தொண்டரைத் தக்க வச்சுக்கணும்னா இப்படி சினிமா பத்தியும் எழுத வேண்டி இருக்கு. தலை எழுத்து! வேறே வழி இல்லை. :D
ஹி,ஹி,ஹி,வேதா, நான் மிரட்டவே வேணாம், இங்கே தமிழ்மணத்திலே அவங்க அவங்க துண்டைக்காணோம், துணியைக் காணோம்னு ஓடி வந்து முத்தமிழ்க்குழுமத்திலே இணையறாங்க, அங்கே பார்த்தா அவங்களுக்கு ஒரே அதிர்ச்சி, நாம தான் ஏற்கெனவே அங்கே எல்லாரையும் பயமுறுத்திட்டு இருக்கோமே? இப்போ என்ன செய்யறதுன்னு பேய்முழி முழிக்கறாங்க எல்லாரும். இது எப்படி இருக்கு? சமீபத்திய வரவு "தம்பி". மனுஷன் அரண்டு போயிருக்கார்னு நினைக்கிறேன். :D
ReplyDeleteஎன்னத்தை அலம்பி இருக்கேன் போர்க்கொடி, இது என்ன பாத்திரமா அலம்பறதுக்கு? அது சரி, முடிவு என்ன ஆச்சு சொல்லுங்க தெரிஞ்சுக்கறேன்.
ReplyDeleteஹி,ஹி,ஹி கணேசன், இன்னும் நான் சீரியல் பார்த்த கதை எல்லாம் ஒண்ணொண்ணா எழுதிட்டு வரேன், பாருங்க,
ReplyDeleteஅது என்ன சொல்லி வச்சாப்பல எல்லாரும் அவருக்கே சப்போர்ட் பண்ணறீங்க? நான் ஒருத்தி தலைமைப் பதவியைச் சுமக்க முடியாமச் சுமக்கும்போது? :D
வாங்கம்மா, வாங்க கொடியே, அதாவது லதாவே, என்ன இத்தனை நாளாக் காணோம்? நீங்க உங்க காலத்துப் படங்களோட விமரிசனம் எதிர்பார்த்து வந்து ஏமாந்துட்டீங்க போல் இருக்கு. ஹிஹிஹி, நாம தான் சின்னப் பொண்ணுன்னு தெரியாது? தனுஷ் படங்கள்தான் பார்ப்போம். :D
ReplyDeleteஹிஹிஹி, சார்,
ReplyDeleteகுருக்ஷேத்திரம் போயிட்டு வந்துட்டேன். சீக்கிரம் எழுதறேன். :D
அப்புறம் எல்லாமே உங்க ராஜ்ஜியத்தில் monopolyனு புரியுது. பாவம் சார் மேடம். :D
ஒழுங்கா படம் பார்த்தாலே உங்களுக்கு கதை புரியாது. அதான் சாம்பு மாமா கதை சொல்லி உதவி பன்றார். நல்லதுக்கே காலம் இல்லை! :)
ReplyDeleteஎதையாவது எழுதறதுக்குனே ஊர் ஊரா போவீங்க போலிருக்கு.. ஹும்ம்ம்..
ReplyDelete//சாமி படத்திலே யார் செத்துப் போறது? அது எனக்குத் தெரியாதே//
ReplyDeleteசாமி படத்துல விக்ரமின் அப்பா விஜயகுமார் இறந்து போயிடுவார் மேடம்
//தவிர உங்களை மாதிரி உண்மைத் தொண்டரைத் தக்க வச்சுக்கணும்னா இப்படி சினிமா பத்தியும் எழுத வேண்டி இருக்கு//
அப்பாடா.. இப்பவாவது உண்மை தொண்டர்னு ஒத்துகிட்டீங்களே.. ரொம்ப சந்தோசம் தலைவியே
இப்போதான் எனக்கு ஒரு ஜோக் ஞாபகம் வருது...பரிட்சைல தென்னை மரத்த பத்தி எழுத சொன்னா...ஒருத்தனுக்கு தெரியல...அதுனால பசு பத்தி பத்து பக்கம் எழுதிட்டு இந்த பசுவ தென்னை மரத்துல கட்டலாம்னு எழுதினானாம்...அந்த மாதிரி இருக்கு சினிமா விமர்சனம்னு சொல்லிட்டு அத தவிர எல்லாம் இருக்கு...என்ன பண்றது தலைவியா வேற போய்டீங்க...எல்லாம் எங்க head letter :-)
ReplyDeleteஅம்பி, ரொம்பவே புகையாதீங்க, உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதுங்கிறதாலே மத்தவங்க புத்திசாலின்னு ஒத்துக்க மாட்டேங்கறீங்களே? நறநறநறநற
ReplyDelete@போர்க்கொடி, என்ன சுரத்தே இல்லை? தீபாவளிக்கு ஜாஸ்தி சாப்பிட்டுட்டு அவதிப் படறீங்களோ?
கார்த்திக், தகவலுக்கு நன்றி, அப்புறம் ஒரு அதிர்ச்சித் தகவல், நான் உங்களை உண்மைத் தொண்டர்னுதான் ஒத்துட்டிருக்கேன், புரிஞ்சுக்குங்க, கனவு காண வேண்டாம், அப்துல் கலாம் சொன்னார்னு. அது எனக்கும் என்னை மாதிரிச் சின்னக் குழந்தைங்களுக்கும் சொன்னது. ஆகவே தொண்டர்களே, தொண்டிகளே, நானே தலைவி, நானே முதல் அமைச்சர், பிரதம மந்திரி எல்லாம். புரிந்து கொள்ளவும். எனக்குப் பதவி ஆசையே இல்லை. உங்களுக்குச் சேவை செய்யறதுக்காகவே உழைக்கிறேன். :D
ReplyDeleteஹி,ஹி,ஹி,ச்யாம், தலைவின்னு ஒத்துக்கிட்டதுக்கு டாங்ஸு, டாங்ஸு, அப்புறம் உங்களை எல்லாம் மகிழ்விக்கவே நாம் தலைவி என இருக்கிறோம். தன்னலம் கருதாது தொண்டர் நலத்துக்காக உழைக்கும் ஒரே தலைவி நான் தான், புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். :D
ReplyDeleteசுரத்தா.... ஏன் கேக்க மாட்டீங்க, வீட்டுல ஜாலியா காலை ஆட்டிண்டு இருந்தா எல்லா சுரத்தும் வரும், என் நிலை அப்படி இல்லியே :) நான் ஜாம்நகர்ல இருக்கேன்!
ReplyDelete//நான் ஜாம்நகர்ல இருக்கேன்! //
ReplyDeleteஜாம் நகர்ல நிறையா ஜாம் கிடைக்குமா? அப்படி கிடைச்சா ஒரு இரண்டு பாட்டில் பார்சல் பண்ணுகளேன்
கா.கா. நல்ல படம். அந்த படத்தையே உங்களால ஒழுங்கா பாக்கா முடியாட்டி, உங்க ரசனையை பற்றி நான் ஒரு முடிவு பண்ணனும் என்று நினைக்குறேன்.
ReplyDeleteசிவா, ஜாம்நகர்ங்கறது ராஜாவோட பேரிலே உள்ளது. Digjam அவங்களோடது தான். நீங்க கேக்கற ஜாம் கிடைக்காது.
ReplyDeleteஅப்புறம் படம் பார்க்க முடியாட்டி நான் என்ன செய்யறது? எல்லாம் என் head letterனுதான் தெரியுமே? :D
i love that word maanneee
ReplyDelete