ரொம்பவே சந்தோஷமா இருக்கு. எல்லாருக்கும் பேர் வச்சு அது அங்கீகாரமும் ஆயிடுச்சு. அம்பிக்கு "ஆப்பு", வேதாவுக்கு "வேதா(ள்)", பொற்கொடிக்குப் "போர்க்கொடி" (courtesy:Vedha), ஸ்ரினிக்குக் குண்டர் படைத் தலைவர், நாகை சிவாவுக்கு "சூடான் புலியோதரை" சீச்சீ "சூடான் புலி". இன்னும் பாக்கி இருக்கிறது, கார்த்திக்,(தலையாம், முதல் அமைச்சராம், இருக்கட்டும், பார்த்துக்கிறேன்.) ச்யாம்(என்னமோ நாட்டாமையாமே, நாட்டாமை? என்னைக் கேட்காமல் எப்படிப் பட்டம், பதவி கொடுக்கலாம்? நற நற நற நற).
முதலில் இந்தக் கார்த்திக்குக்கு ஏதாவது பேர் வச்சே ஆகணும். அவர் பாட்டுக்குப் புதுசு புதுசா ஏதோ எழுதி 50, 60னு பின்னூட்டம் வாங்கிட்டிருக்கார். ரொம்பப் புகையா வருதே? கண், மூக்கு எல்லாம் எரியுதே? இந்த ச்யாம், TBI News கொடுத்துச் சொந்தச் சரக்குக் கூடக் கிடையாது நூற்றுக் கணக்கில் பின்னூட்டம் வாங்கறார். அவங்க அவங்க என்னை மாதிரி நல்ல பதிவாப் போட்டுட்டு ஒரு பின்னூட்டத்துக்கே தவியாய்த் தவிக்கிறச்சே ஒரே இடத்தில் இத்தனை பின்னூட்டங்களா? வலை உலகில் கூட இந்த மாதிரிப் பாரபட்சமா? ஒருத்தருக்கேவா இத்தனை பின்னூட்டம் கொடுக்கிறது? எல்லாத்தையும் பகிர்ந்து கொடுக்கிற சோஷலிஸம் யாருக்குமே தெரியலியே? யார் எடுத்துச் சொல்றது? அதான் நான் தலைமைப் பொறுப்பை வேறே வேறு வழியில்லாமல் சுமந்துக் கிட்டு இருக்கேனே (உடனே என்னை தலைமைப் பதவியில் இருந்து இறக்க முயலவேண்டாம். தலைவர்கள் எல்லாம் வழக்கமா சொல்ற டயலாக் இதுதான்னு எனக்கு நல்லாத் தெரியும்.)
அதுவும் கட்சியின் நலனுக்காகவும், சங்கத்தின் சிறப்புக்காகவும் எத்தனை எத்தனை கஷ்டப்பட்டு களப்பணி, களம் இல்லாமல் பணி, வெளிநாடு போய்க் கட்சிக்காக உழைத்தல்னு பண்ணிட்டிருக்கேன். அந்த உரிமையில்தான் சொல்லிட்டு இருக்கேன். பின்னூட்டம் கொடுக்கிறவங்க சமமாகக் கொடுங்க. ஹோல்சேல்,ரீடெயில் எப்படிக் கொடுத்தாலும் சரி மத்தபடி எனக்குப் பதவி ஆசை எல்லாம் இல்லை. இந்த அம்பி மாதிரி அல்வா மந்திரிக்கெல்லாம் ஆசையும் படமாட்டேன். நல்லதாக முதலமைச்சர் மட்டும்தான் என் குறிக்கோள். கார்த்திக்கைப் பதவியில் இருந்து இறக்கறதுதான் ஒரே நோக்கம். அதுக்காகத் தான் உழைக்கிறேன். என் உழைப்பின் மேன்மையைப் புரிந்து கொண்டு எனக்காகப் பாடுபடும் தொண்டர்களான வேதா(ள்), போர்க்கொடி,சூடான் புலி போனால் போகிறது என்று தொண்டர்களில் ஒருவராக நான்அனுமதித்திருக்கும் ஆப்பு அம்பி, போன்றவர்களைச் சிறப்பிக்கும் விதமாக இந்தப் பதிவு.
ஹி,ஹி,ஹி, வேதா(ள்), அம்பி, புலி, போர்க்கொடி, நான் ஒண்ணும் கார்த்திக்கிடம் உங்களை எல்லாம் போட்டுக் கொடுக்கவே இல்லை. நீங்க எல்லாம் எனக்கு மெயிலில் சொன்ன மாதிரிதான் எழுதி இருக்கேன். சரியா?
// இந்தக் கார்த்திக்குக்கு ஏதாவது பேர் வச்சே ஆகணும்//
ReplyDeleteநல்ல லட்சியம் தலைவியே..சீக்கிரம் நல்லதொரு பேர் வையுங்க.. பாத்து வைங்க.. அசினுக்கு புடிக்கலைனா மாத்த வேண்டி வரும்..
//கார்த்திக்கைப் பதவியில் இருந்து இறக்கறதுதான் ஒரே நோக்கம்//
ReplyDeleteஅட இங்க பார்றா.. அரசியல்ல இதெல்லாம் சகஜம் மேடம்..இனிமே என்னை ஒண்ணும் பண்ண முடியாது.. கட்சி செயலாளர் வேதா முதல் ஒவ்வொரு அமைச்சரும் என் பக்கம்.. சத்தியத்தின் பக்கம்.. நேர்மையின் பக்கம்.. அன்பால சேர்ந்த இந்த கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது.. நாங்க இது மாதிரி எத்தனை 'அம்மா'க்களை பாத்திருப்போம்.. ஹிஹிஹி..
Karthik, grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDeleteஎங்க ஒரு நாளில் இரண்டு பதிவு போட்டா என்ன அர்த்தம் :x
ReplyDelete//ஹி,ஹி,ஹி, வேதா(ள்), அம்பி, புலி, போர்க்கொடி, நான் ஒண்ணும் கார்த்திக்கிடம் உங்களை எல்லாம் போட்டுக் கொடுக்கவே இல்லை.//
அவருக்கிட்ட நீங்க என்ன போட்டுக்குடுக்குறது. கார்த்திக் நம்ம சிஷ்யப்பிள்ளை தான். என்ன மேட்டருனு சொல்லுங்க பேசி தீர்த்து வைக்குறேன்.
//கார்த்திக் நம்ம சிஷ்யப்பிள்ளை தான். என்ன மேட்டருனு சொல்லுங்க பேசி தீர்த்து வைக்குறேன்.//
ReplyDeleteகுருவே சரணம்..சிவ குருவே சரணம்
//தலைவரே நீங்க சொன்னதிலேயே இதான் அல்டிமேட்//
ReplyDeleteநன்றி செயலாளரே.. உங்களை இன்றிலிருந்து கட்சியின் பொதுச் செயலாளராய் அறிவிக்கிறேன்
அடடா! பாட்டிய அம்மானு கூப்பிட்ட கார்த்திகேயனின் பரந்த உள்ளத்தப் பாராட்ட வார்த்தையே இல்ல மக்களே :) அவரு தான் தகுதியான முதலை ச முதல் அமைச்சர் :))
ReplyDeleteஒரு ரயில் வண்டி அளவுக்கு புகை வருது...இப்போதைக்கு கார்த்திக் CM அதுனால ஒன்னும் சொல்ல முடியாது..நீங்க ஆட்சி அமைச்சு எனக்கு அமைச்சர் பதவி குடுத்தீங்கனா...உங்களுக்கும் 100 கமெண்டுக்கு மேல வர ஆள் செட்டப் பண்ணலாம் :-)
ReplyDeleteகார்த்திக், என்ன இது, நீங்க பாட்டுக்கு நான் சொல்லச் சொல்ல க் கேட்காமல் தன்னிச்சையா அறிவிப்புக் கொடுக்கிறீங்க? உங்களை ஏன் கட்சியில் இருந்து நீக்கக் கூடாது?
ReplyDeleteபோர்க்கொடி, ABIG APPU IS WAITING FOR YOU. BE CAREFUL.
ReplyDeletesyaam,சி.எம்மா. சி.எம்? யாரு சி.எம். ஆக்கினது? தெரியுமா? அப்புறம் அன்னிக்கு உங்க ப்ளாகிலே வந்து பார்த்தால் நூற்றுக் கணக்கில் பின்னூட்டம், நான் விட்ட புகையிலே ப்ளாக் ஏதாவது ஆயிடப் போகுதுங்கற நல்ல எண்ணத்தோட பின்னூட்டம் கொடுக்காம வாபஸ் வாங்கினேன். உங்க தங்கிலீஷ் பதிவுக்கே இத்தனை பின்னூட்டமா? மறுபடி புகை வரலை? :D
ReplyDeleteஅப்புறம் நான் ஆட்சி அமைச்சா எல்லாப் பதவியும் முதலில் எனக்குத் தான். போனால் போகுதுன்னு முக்கியமில்லாத இலாகாக்களை ஒதுக்குறது பத்தி யோசிக்கலாம்.
hmm Prime minister post. comments neriya ethurparpu irrukku polla.
ReplyDelete