எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, October 06, 2006

134. என்னைக் கவர்ந்த மிகச் சிறந்தவை

இப்போ தான் ஒரு சங்கிலிப் பதிவு எழுதினேன். மறுபடி ஒண்ணு. இப்போ கார்த்திக் மாட்டி விட்டுட்டார். பதிவிலும் வந்து கேட்டுட்டார் ஏன் எழுதலைன்னு. நாம அவ்வளவு பிரபலம்னு இப்போதான் புரியுது(ஹிஹிஹிஹி).அதான் ஆளாளுக்கு எழுதச் சொல்றாங்க.இப்போ எனக்குப் பிடிச்ச விஷயங்கள் ஒண்ணொண்ணா எழுதறேன்.

1.செய்வதற்குச் சிறந்த விஷயம்:
வீட்டிலே ஒவ்வொரு விஷயத்தையும்,நானே கவனிக்கிறது ரொம்பப் பிடிக்கும். முன்னே எல்லாம் அப்படித்தான் இருந்தேன். இப்போவெல்லாம் குறைச்சுக் கிட்டேன். இருந்தாலும் இன்னும் வீடு நான் சுத்தம் செய்தால்தான் எனக்குத் திருப்தியாக இருக்கும். அதுபோல சமையல் வேலையும். நானே பொறுப்பு ஏற்றுப் பண்ணுவது பிடிக்கும்.

2.சிறந்த பரிசு:
நான் பள்ளியில் படிக்கும்போது ஒரு முறை பேச்சுப் போட்டியில் வாங்கிய முதல் பரிசு.அப்போவெல்லாம் கவிதை எழுதப் பிடிக்கும். இப்போ கவிதைன்னா காத தூரம் போகிறேன். என்னோட கவிதை வாரிசு இப்போ என்னோட அண்ணா பெண். நல்லாக் கவிதை எழுதுவாள். அதை நான் முத்தமிழில் போடுவேன்.

3.நான் கேட்ட மிகச் சிறந்த விஷயம்:
என்னோட ஆசிரியர் என்னை, "very diplomatic. jem of a student" என்று பாராட்டியது. இப்போவும் சொல்லிப் பெருமை(!) அடித்துக் கொள்வேன்.

4.நான் சொன்ன மிகச் சிறந்த சொல்:
எத்தனையோ இருக்கு, எதைச் சொல்றதுனு புரியலை. பொதுவா யார் என்ன உதவி கேட்டாலும் உடனே, நான் இருக்கேன், கவலைப்படாதீங்கனு சொல்லுவேன். அதைத் தான் சொல்லணும்.அம்பி சொல்றது ரொம்பச் சரி. ஏன்னா, நானே இப்போ வேறு யாராவது வீட்டு வேலைக்குக் கூட உதவுகிற மாதிரி இருக்கேன். இதிலே நான் போய் இன்னொருத்தருக்கு உதவ எப்படி முடியும்? ஆகவே நான் சொன்னதில் மிகச் சிறந்தது என்ன என்றால் இப்போ அம்பியாலே இந்த உண்மையை ஒத்துக் கொண்டது மட்டும்தான். வேறே எதுவும் சிறந்ததாத் தெரியலை.

5.நடந்தவையில் மிகச் சிறந்தது:
இதைப் பத்தி ஒரு பதிவே போட்டு விட்டேன். என் வாழ்க்கையில் அதுதான் மிகச் சிறந்த தருணம். Link: sivamgss.blogspot.com/2006/06/64.html

6.மிகச் சிறந்த மனிதர்: என் கணவர் தான். சந்தேகமே இல்லை.

7.மிகச் சிறந்த நண்பர்: இதுவும் டிட்டோ.

8.மிகச் சிறந்த தருணம்.: என் பெண் என்னை அம்மானு கூப்பிட்டதுதான். வேறே என்ன?

9.மிகச் சிறந்த புத்தகம்: தேவனின் எல்லாப் புத்தகங்களும். கல்கியின் "அமரதாரா".

10.மிகச் சிறந்த வலைபதிவு: என்னோடது தான். ஹி ஹி ஹி ஹி.சகல விதமான ரசங்களும்,(தக்காளி,மிளகு,மைசூர் ரசம் உள்பட) கொண்டதாச்சே!

11.மிகச் சிறந்த இடம்: மதுரை, பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தது ஆச்சே? அப்புறம் அரவங்காட்டில் நாங்கள் இருந்த குடியிருப்புப் பகுதி.

12.மிகச் சிறந்த உணவு: நான் சமைக்கிறதிலா? அல்லது நான் சாப்பிடறதிலா? நான் சமைக்கிறது என்றால் மசால் வடையும், உளுந்து வடையும் ஸ்பெஷல், மசால் தோசையும் அப்புறம் கை முறுக்கு. சாப்பிடுவது என்றால் ரசம் சாதம், அப்பளம்தான்.

13.மிகப் பிடித்த பாடல்: சமீப காலமாய்க் "குறையொன்றுமில்லை" தவிர, அருணா சாய்ராமின் மீரா பஜனும், மஹாராஜபுரம் சந்தானத்தின்,"ஆடாது அசங்காது வா" பாட்டும் பிடிக்கும். ஆனால் எப்பவும் தூக்கத்தில் கூட பங்கஜ் உதாஸின், "சிட்டி ஆயி ஹை, வதன் கி சிட்டி ஆயி ஹை" நினைவு வந்தால் என்னை அறியாமல் அழ ஆரம்பிப்பேன்.

14.Best Hangout: இதுக்கு எதை எழுதறதுனு தெரியலை. நசீராபாத்தில் நாங்கள் இருந்த ஆஃபீஸர்ஸ் க்வார்ட்டர்ஸ் என்று சொல்லலாம். மழை நாளில் ரசிக்க நிறைய விஷயங்கள் உண்டு. வீட்டுக் கூரை மேல் மயில் ஏறிக் கூவ, வீட்டு லானில், முயல்குட்டிகள் பொந்துகளைப் பார்த்து ஓட, அந்தச் சிறு மழையில் என் பையனும், அவன் சிநேகிதனும் முயல் பிடிக்க ஓடுவார்கள். அப்போது அங்கே தூவி இருக்கும் தானியங்களைச் சாப்பிட வரும் பறவைகள் "விர்ர்ர்ர்ர்ரென"ச் சப்தம் இட்டுக் கொண்டுச் சற்றுத் தூரம் பறந்துவிட்டுத் திரும்பி வரும் காட்சி.

15.சாப்பிட்ட இடம்: கல்யாணம் ஆன புதிதில் ஒரு நாள் ஆஃபீஸில் இருந்து நான் நேரே செண்ட்ரல் வர, அவரும் வந்தார், இருவரும் ஏதோ வாங்க நடந்தே NSC Bose Road போனோம். இப்போவும் அங்கே போனால் நடந்துதான் போகிறது. அப்போ ராத்திரி ரொம்ப நேரம் ஆகவே சாப்பாடு சாப்பிட ஹோட்டல் தேட ஒருத்தர் ஆர்மினியன் தெருவில் உள்ள(இப்போ இந்த ஹோட்டல் இருக்கா) "ஹோட்டல் பாலிமார்"க்குப் போகச் சொல்ல அங்கே சாப்பிட்ட சாப்பாடு இன்னும் மறக்க முடியாது.

16.பிடித்த பொழுதுபோக்கு: நிறையச் செய்திருக்கிறேன். தையல், எம்ராய்டரி, பூவேலை என்று. ஆனால் மனம் ஒன்றுவது புத்தகம் படிப்பதிலே மட்டும் தான். என் நாத்தனார் எல்லாம் எப்படி அலுக்காமல் இப்படிப் படிக்கிறாய்? என்று கேட்பார்கள். அவங்க எல்லாம் பொழுது போக்குவது பேசுவதில். எனக்குப் பேச்சுக் கம்மிதான்.

17.பிடித்த சீரியல்: "நாகா" எந்தத் தலையீடும் இல்லாமல் எடுக்கும் சீரியல்கள் எல்லாம். வீட்டுக்கு வீடு லூட்டி முதல் பாகம். இப்போ,"விஸ்வரூபம்" சீரியல் ல்ராஜ் டிவியில். என் பெண்ணோடு சாட் செய்து கொண்டே பார்க்க வேண்டி உள்ளது. அப்புறம் அவளுக்கு வேலை இருக்குமே, அதனால் இந்தத் தியாகம்.

18.பிடித்த நிர்வாகி; ஹி ஹி ஹி ஹி, இதுவும் நான் தான். இல்லாட்டி எங்க குடும்பத்தை நான் நிர்வாகம் பண்ணி இருக்க முடியுமா? அதுவும் சின்ன வயசிலே இருந்து, சின்ன வயசு வரை.

19.பிடித்த இசை அமைப்பாளர்:விஸ்வநாதன், ராமமூர்த்தி சேர்ந்து இசை அமைத்த போது உள்ள இசை. எம்.பி.சுப்ரமண்யத்தின் இசையில் தேசபக்திப் பாடல்கள், குறிப்பாக, "ஸாரே ஜஹான்ஸே அச்சா"

20.பிடித்த குழு: இப்போ இருக்கும் வலைப்பதிவர் குழுதான். மத்தபடி குழுவெல்லாம் இருக்கும்படி நான் எங்கேயும் எந்த ஊரிலேயும் தொடர்ந்து இருக்கலையே.

21.பிடித்த பானம்: வெந்நீர். மட்டும் தான். அப்போ அப்போ சிறிது சுக்குப் பொடி போட்டுக் கொள்வேன்.

22.பிடித்த quote: பாரதி சொன்ன எல்லாமே.

23.பிடித்த பெண்மணி: இது எல்லாருக்குமே அவங்க அம்மாவாத்தான் இருக்கும். கூடுதலாக என் அம்மாவைப் பெற்ற என் பாட்டியும் கூட.

24.பிடித்த குழந்தை: என்னோட குழந்தைகள் தான், ஹி ஹி ஹி ஹி.

25.பிடித்த பாட்டு: "கணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்." பள்ளியில் முதன் முதல் பிள்ளையாரைப் பாட்டின் மூலம் வணங்கச் சொல்லிக் கொடுத்த பாட்டு.

26.பிடித்த டான்ஸர்:எங்க வீட்டுக் காரர்னு சொல்வேன்னு பார்க்கறீங்களா/ இல்லை, கமலா லட்சுமணன். பழைய படங்களில் அவரின் நாட்டியத்தைப் பார்க்கும்போது அவர் உடல் எப்படி அவருக்கு ஒத்துழைக்கிறது என்று புரியும். அந்த நளினம் மற்ற நாட்டியக் காரரிடம் நான் காணவில்லை.

27:பிடித்த படம்: ஸ்ரீதர் டைரக் ஷனில் வந்த எல்லாப் படமும். பாலசந்தரின் ஆரம்ப காலப் படங்கள். ஹிந்தியில் சஞ்சீவ் குமார், ஜெயா பாதுரி நடித்த படங்கள்.மற்றும் லகான்.

28.பிடித்த நடிகர்: முன்னாலே ஜெமினி பிடிக்கும். அப்புறம் சிவகுமார், சூர்யா, கார்த்திக். இப்போ நடிக்கிறதிலே ஒருத்தரும் மனதிலே பதியலை. ஸ்ரீகாந்த் கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் 2 படம்தான் பார்த்திருக்கேன். அதை வச்சுச் சொல்ல முடியாது.

29. பிடித்த வண்டி; நடை வண்டி. எப்பவும் நடந்து போறது தான் நல்லது.

30.பிடித்த சீன்: தேடித்தான் பார்க்கணும். சினிமா அவ்வளவா என்னைக் கவர்ந்தது இல்லை.

அப்பாடி, கார்த்திக், கை வலிக்குது. இன்னிக்குக் கைலைப் பயணத்துக்கு ஓய்வு. இல்லாட்டி அதை யாராவது படிக்கிறாங்களா என்ன? அதுக்கு ரசிகர்களே இல்லை. நற நற நற நறநற.

26 comments:

  1. //என்னோட ஆசிரியர் என்னை, "very diplomatic. jem of a student" என்று பாராட்டியது.//

    ha haaa, இது தான் பெரிய காமெடி! :))))

    உதவி!னா ஓடி வருவீங்க இல்ல? ஆமா! ஆமா! ஒத்துகறேன். :D

    ReplyDelete
  2. //இப்போ கார்த்திக் மாட்டி விட்டுட்டார்.//

    ரொம்ப நன்றி மேடம்..உண்மயிலே அருமையான தொகுப்பு.. வாழ்கைல சிறந்த தருணத்தை ஏற்கனவே எழுதி இருந்தாலும் அதுக்கு ஒரு சுட்டியை போட்டீங்கன்ன புதுசா வர்றவங்களுக்கு சுலபமா இருக்கும்ங்கிறது அடியேனின் எண்ணம்

    ReplyDelete
  3. ஒன்னொன்னும் கலாசல் தொகுப்பு.. இது மாதிரி பதிவுகள் நம்மளை கொஞ்சம் திரும்பி பாக்க வைக்கும்ங்கிரதுல சந்தேகமே இல்லை.. அதுக்கு உங்க பதிவு ஒரு சான்று

    ReplyDelete
  4. பின்னூட்ட மழை போதுமா.. இல்லை..இன்னும் வேணுமா..தலைவியே.. உண்மையில் சொல்லப்போனால் நீங்க தான் அடிக்கடி நம்ம வலைப்பக்கதிற்கு வர்றதில்லை.. அடைக்கடி வாங்க மேடம்.. தலைவி என்பதால் மிரட்டாமல் கேட்டுகொள்கிறேன் :-))

    ReplyDelete
  5. என்னைக் கவர்ந்த மிகச் சிறந்த பதிவு





    உருப்படியானதும் கூட..:::))

    ReplyDelete
  6. அட உங்க பதிவோட ஒவ்வொரு வரிலயும் உங்க வயசு 61 சீ 16 னு தெள்ளத் தெளிவா தெரியுதே!!

    ReplyDelete
  7. 5-6 கேள்விக்கு நம்ம பதில் ஒத்து போகுது பாத்தீங்களா.. அதானே அதெப்படி பாட்டி ஜாடை பேத்திக்கு இல்லாம போகும்? என் பாட்டியின் முறுக்குனு அங்கே நா சொன்னத சரியா நினைவு வெச்சு இங்க போட்டுட்டீங்களே! சபாஷ்!!

    ReplyDelete
  8. beautiful! romba nidhanaman porumaiya ezhudiyirukeenga!

    ReplyDelete
  9. அம்பி, ரொம்பவே பொறாமைப் படாதீங்க, ஸ்கூல் படிக்கிறச்சே நீங்க ரொம்பப் படுத்தினதை உங்க அம்மா சொல்லிட்டாங்கங்கிறதுக்காக இப்படியா? :D

    அடுத்தது, உண்மையிலேயே கொஞ்சம் யோசிக்க வேண்டியதுதான். ஏன்னா, இப்போவெல்லாம் முன்னை மாதிரி உதவிக்குப் போக முடியறதில்லை. so அது திருப்பிப் பெற்றுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  10. கார்த்திக், நீங்க சொல்லி இருக்கிற மாதிரி சுட்டி கொடுக்கிறேன். நேத்திக்கு என்னமோ உட்கார்ந்ததே கொஞ்ச நேரம் தான். அதுவே முடியாமல் போச்சு, இன்னிக்குச் சேர்க்கிறேன்.
    அப்புறம் நான் ஒண்ணும் கலாசல்னு நினைக்கலை. உங்க பாராட்டுக்கு நன்றி. உங்க பதிவுக்குத் தினமும் வரேன். சினிமா சம்மந்தப் பட்ட பதிவுகளாக இருந்தால் பின்னூட்டம் கொடுக்கிறது இல்லை. என்னா, அதிலே நமக்கு அறிவே இல்லை.

    ReplyDelete
  11. மின்னல், பாராட்டுக்கு நன்றி, நான் எழுதினதிலே இதுதான் உருப்படியானதுன்னு நினைக்கறீங்களா? grrrrrrrrrrr..........

    ReplyDelete
  12. பொற்கொடி,
    அதெல்லாம் என்னோட வயசைப் பத்தி ரொம்பவே அதிகமாக் கற்பனை பண்ண வேண்டாம். அப்புறம் நான் இன்னும் உங்க பதிவுக்கு வந்தே பார்க்கலை. அதுக்குள்ளே ஒத்துப் போகுதுன்னா எப்படி? நீங்க எழுதினதே இன்னும் தெரியாது.

    ReplyDelete
  13. இந்தியத் தேவதைக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

    ReplyDelete
  14. 5,6, கேள்விக்கு நான் என்னோட கணவர்ன்னு எழுதி இருக்கேன் பொற்கொடி, அப்போ உங்களுக்கும் கல்யாணம் ஆயிடுச்சா? சொல்லவே இல்லையே? எத்தனை குழந்தைகள்? எத்தனை பேரன், பேத்திகள்?:D

    ReplyDelete
  15. மேடம்,
    அருமையா எழுதிருக்கீங்க. உங்க பெர்சனாலிடியைப் பத்தி தெரிஞ்சிக்க முடியுது. நான் ரசிச்சு படிச்சது...

    8.மிகச் சிறந்த தருணம்.: என் பெண் என்னை அம்மானு கூப்பிட்டதுதான். வேறே என்ன?

    10.மிகச் சிறந்த வலைபதிவு: என்னோடது தான். ஹி ஹி ஹி ஹி.சகல விதமான ரசங்களும்,(தக்காளி,மிளகு,மைசூர் ரசம் உள்பட) கொண்டதாச்சே!

    14.Best Hangout: இதுக்கு எதை எழுதறதுனு தெரியலை. நசீராபாத்தில் நாங்கள் இருந்த ஆஃபீஸர்ஸ் க்வார்ட்டர்ஸ் என்று சொல்லலாம். மழை நாளில் ரசிக்க நிறைய விஷயங்கள் உண்டு. வீட்டுக் கூரை மேல் மயில் ஏறிக் கூவ, வீட்டு லானில், முயல்குட்டிகள் பொந்துகளைப் பார்த்து ஓட, அந்தச் சிறு மழையில் என் பையனும், அவன் சிநேகிதனும் முயல் பிடிக்க ஓடுவார்கள். அப்போது அங்கே தூவி இருக்கும் தானியங்களைச் சாப்பிட வரும் பறவைகள் "விர்ர்ர்ர்ர்ரென"ச் சப்தம் இட்டுக் கொண்டுச் சற்றுத் தூரம் பறந்துவிட்டுத் திரும்பி வரும் காட்சி.


    அப்படியே டைம் கெடக்கும் போது தலைவி எங்க வீட்டு பக்கமும் வந்துட்டு போங்க.

    உங்க புகுந்த வீடு(ராஜஸ்தான் :)) அடிப்படையா வச்சி ஒரு பதிவு போட்டுருக்கேன். நீங்க வந்து ஒரு கருத்து சொல்லலைன்னா அளுதுருவேன்...ஆமா. வரும் போது மின்னுது மின்னலையும் கூட்டிட்டு வாங்க. அவரையும் பாத்து ரொம்ப நாளாச்சு :)

    எனது சித்தூர்கட் செலவு

    ReplyDelete
  16. கைப்புள்ள, உங்க பதிவுக்கு முந்தாநாள் கூட அதாவது வியாழன் அன்று வந்தேன். அப்படியே சங்கத்துக்கும் வருகை தந்தேன். ரகசியமா வந்ததாலே(பின்னூட்டம் கொடுக்கலை) உங்களுக்குத் தெரியாமல் போச்சு, அவ்வளவுதான், அதெல்லாம் சங்கத்து ஆளுங்களையே விடறதில்லை, அப்போ அப்போ போய்க் கவனிக்கிறேன், நீங்க தலைவர், உங்க வீட்டுக்கு வராமலா?

    ReplyDelete
  17. மின்னல், கைப்புள்ள சொன்னதைப் பார்த்திங்க இல்லை?மரியாதையா அவர் வீட்டுக்கு வந்துட்டுப் போங்க. இல்லாட்டி உங்க மேலே ஒழுங்கு நடவடிக்கை, இது தலைவி ஆணை! :D

    ReplyDelete
  18. அம்பி,
    மாத்திட்டேன். சரியா?சமயத்திலே உங்களுக்குக் கூட நல்லாப் பின்னூட்டம் எழுத வருது, ஆச்சரியமா இல்லை? :D

    ReplyDelete
  19. //6.மிகச் சிறந்த மனிதர்: என் கணவர் தான். சந்தேகமே இல்லை.//

    "சந்தேகமே இல்லை"

    எங்க அப்பன் குதிருக்குள்ள இல்ல மாதிரியாக்கா?

    ReplyDelete
  20. //இப்போவெல்லாம் முன்னை மாதிரி உதவிக்குப் போக முடியறதில்லை. so அது திருப்பிப் பெற்றுக் கொள்கிறேன். //
    yeeh, neenga address ezhuthi poteengale oru letter, appave therinju pochu! en vaazhkaiyila ipdiyaa vilayadanum? Grrrrrrrrr.

    //5,6, கேள்விக்கு நான் என்னோட கணவர்ன்னு எழுதி இருக்கேன் பொற்கொடி, அப்போ உங்களுக்கும் கல்யாணம் ஆயிடுச்சா? //
    porkodi, konjam avasara pattutiyoo?
    paaru! paati ellam solli kaatra maathiri aayiduchu! :D


    //சமயத்திலே உங்களுக்குக் கூட நல்லாப் பின்னூட்டம் எழுத வருது,//
    ella TRC sir kooda sernthathu naala thaan! ;D

    ReplyDelete
  21. அம்பி, நா எதை சொல்லறேன்னு இந்த பாட்டிய வந்து என் பதிவ பாத்திட்டு சொல்லச் சொல்லுங்க! நாம மட்டும் தினம் வந்து பின்னூட்டம் போடணும், அதும் காய்ச்சலோட!

    கல்யாணம் ஆனா, 5-6 இல்ல, 25 கூட ஒத்துப் போகும் ;)

    ReplyDelete
  22. மனசு, வந்தால் உடனேயே போட்டுத் தாக்கறீங்களே? இது நல்லாவே இல்லை. நான் தலைவிங்கறது மறந்து போச்சா? :D

    ReplyDelete
  23. ஆப்பு,
    நீங்க நம்பறதுக்காக நான் தப்பா அட்ரஸ் எழுதினேன்னு சொல்ல முடியுமா? போஸ்டல் டிபார்ட்மெண்டின் லட்சணம் தெரிந்து கொண்டும் இப்படிச் சொல்லறீங்களே? ரொம்பவே அலையாதீங்க. கொஞ்சம் பொறுமை தேவை.

    பொற்கொடிக்கு நீங்க வேறே சொல்லித் தெரியணுமா என்ன?
    அதானே பார்த்தேன், உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதே! :D

    ReplyDelete
  24. பொற்கொடி,
    உங்களோட ப்ளாக்லே விழியனோட பதிவு முத்தமிழிலே நான் படிச்சுட்டேன்.
    அப்புறம் செப் 28-ம் தேதி பதிவுக்குப் பிறகு இந்த மாதிரி பதிவு ஒண்ணும் எழுதலை,. அதுதான் ஏற்கெனவே படிச்சுட்டேனே! அதில் ஒண்ணும் நீங்க சொன்ன மாதிரி ஒத்துமை எனக்குத் தெரியலை, அதான் சொன்னேன். போதுமா?

    உடம்பு இப்போ பரவாயில்லையா? இன்னிக்கு வலைப்பதிவர் மீட்டிங்கிலே உங்க உடம்புதான் ஹைலைட்.

    ReplyDelete
  25. என்னது வலைப்பதிவர் மீட்டிங்கா? அப்படினா!!?

    ReplyDelete
  26. ஹி,ஹி,ஹி,ஹி, பொற்கொடி, நீங்க மட்டும் தான் நான் இல்லாதபோது வலைப்பதிவர் மீட்டிங் போடுவீங்களா? நானும் போட்டேன். இன்னிக்குப் பதிவே அதான் ஹைலைட். இருங்க செக் பண்ணிட்டு வரேன்.

    ReplyDelete