எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, October 25, 2006

144. வெற்றி நமதே!!!!!!!

ஹிஹிஹிஹி, தலைப்புக்கும் எழுதப்போறதுக்கும் சம்மந்தம் இருக்கான்னு தெரியலை. சும்மா மனசிலே தோணினது இந்தத் தலைப்புத் தான் வச்சுட்டேன், அடிக்க வராதீங்க, உங்களை நீங்களே அடிச்சுக்கறது வரவேற்கப்படுகிறது. இப்போ நாம் ஜாம்நகருக்கு மறுபடி போறோம். இன்னிக்குச் செய்திகளிலே ரொம்ப அடிபட்டுக் கொண்டிருக்கிறது. ரிலையன்ஸ் தீ விபத்தினாலே. நாங்க இருக்கும்போது ரிலையன்ஸ் கால் பதிக்க ஆரம்பித்து இருந்தது. டினா முனிமுக்கு (அம்பானியின் 2-வது மகனைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன். ஜாம்நகரில் இருந்து தான் ஆடைகள் பாரம்பரிய வழக்கப்படித் தைத்து, புடவை நெய்து போனது. ஜாம்நகர் புடவைகள் ரொம்பப் பிரசித்தம். ரொம்பவே விலையும் குறைச்சல். தற்சமயம் எப்படினு தெரியாது. இருந்தாலும் இங்கே எல்லாம் பார்க்கும்போது அங்கே கட்டாயம் குறைச்சலாகத் தான் இருக்கும். இப்போ நம்ம பிரச்னைக்கு வருவோம்.
&&&&&&&&&&&&&&&&&&&

சாயந்திரம் பால் காய்ச்ச வேண்டும்னு சொல்றாரே சமையல் அறையைச் சுத்தம் செய்து விட்டுக் குளிக்கலாம் என்று உள்ளே போகப்போனால் தமிழ் சினிமாவில் மர்ம மாளிகையில் இருக்குமே சிலந்தி வலை அது மாதிரி இருக்கிறது. நிஜமாவேக் கையால் அதை விலக்கி விட்டுக் கொண்டுதான் போகணும். தரையில் அங்குலம் இல்லை அடிக்கணக்கில் தூசி. முதலில் ஒரு துடைப்பம் வேண்டுமே. கையில் அதை எடுத்து வரவில்லை. பக்கத்தில் கேட்டு வாங்கிப் பெருக்கிக் கழுவிவிட்டுப் பின் கதவைத் திறந்தேன் ரொம்ப ஆசையுடன், கிச்சன் கார்டன் எப்படி இருக்கும் என்று பார்க்க. பார்த்தால் ரொம்ப வறண்டு போய் இருந்த பூமி. வீட்டுக் காம்பவுண்டுக்கு அப்புறம் ஒரு சிறிய சாலை இருந்தது. அது பொதுச் சாலை என்றும், பொது மக்கள் எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் பொது மருத்துவமனைக்கு அந்த வழியில் தான் போவார்கள் எனவும் சொன்னார்கள். அதற்கு அப்புறம் ஒரே வெட்ட வெளி தான். சில கிலோ மீட்டருக்கு அப்பால் சில வீடுகள் இங்கொன்றும், அங்கொன்றுமாக இருந்தன. அதற்கும் அப்பால் கடல் தான் இருந்தது. கப்பல்படைத் தளமும் இருந்தது. எங்கள் குழந்தைகள் இருவரும் எப்பவுமே எந்தச் சூழ்நிலையிலும், எந்த ஊரிலும் அனுசரித்துக் கொள்வார்கள். ரொம்பவும் யதார்த்தம் இரண்டு பேரும். ஆகவே சீக்கிரம் பொருந்தி விடுவார்கள் என நினைத்தேன்.

சென்னையில் என் அப்பா வீட்டில் ஒரு விசேஷம் என்பதால், நானும் குழந்தைகளும் ஜாம்நகரில் இருந்து சென்னை ஒரு 2 நாளில் போவதாக ஏற்கெனவே முடிவு செய்யப் பட்டிருந்தது. இப்போது தான் வந்ததாலும், ஜாம்நகர் அலுவலகத்தைத் தவிர கட்சில் உள்ள "புஜ்" ஜில் உள்ள அலுவலகமும் என் கணவரின் கீழ் இருந்ததால் அவர் நாடாறு மாதம், காடாறு மாதம் தான் இங்கிருந்து மாற்றல் வரும் வரைக்கும். ஆகவே அவர் எங்களுடன் சென்னை வரவில்லை. நாங்கள் சென்னை போகும் திட்டம் என் கணவரின் முதல் தம்பிக்குத் தெரியும் ஆதாலால் அவன் எங்களை பம்பாய் வந்து விட்டுப் பின் சென்னை போகும்படிக் கூறி இருந்தான். நாங்கள் அதுவரை பம்பாய் போனது கிடையாது. ஒவ்வொரு லீவிலும் போக முடியாமல் ஏதாவது தடை இருக்கும். இப்போ அவனுக்குக் குழந்தை வேறே பிறந்திருந்தது. நாங்கள் இன்னும் அந்தக் குழந்தையைப் பார்க்கவில்லை. எல்லாவற்றையும் உத்தேசித்தும் பம்பாயில் என் கணவரின் தாய்வழி உறவினர்கள் நிறைய இருந்ததாலும் அங்கே போய்விட்டே சென்னை போவதாக முடிவு செய்து அதற்குத் தகுந்தாற்போல் டிக்கெட் எடுக்கப் பட்டிருந்தது. செளராஷ்ட்ரா மெயில் துவாரகா அருகே இருக்கும் "ஓகா" என்னும் ஊரில் இருந்து ஜாம்நகர், ராஜ்கோட் வழியாகத் தான் அஹமதாபாத் வந்து பரோடா, சூரத் வழியாக பம்பாய் வரும். என் மைத்துனன் "போரிவிலி"யில் இருந்தான். அவன் அலுவலகக் குடியிருப்பு. அங்கே இருந்து "சர்ச் கேட்" பகுதியில் உள்ள அவன் அலுவலகத்துக்கு நேரே ரெயில் இருந்தது. அவன் மனைவியும் அதே அலுவலகத்தில் வேலை பார்த்தாள். இந்த செளராஷ்ட்ரா மெயில் காலை 6-20 மணி அளவில் "போரிவிலி" வரும். ஆகவே அவனுக்கு ஸ்டேஷன் வந்து கூட்டிப் போகவும் வசதி. இதற்கு முன்னால் என்றால் நாங்கள் அமர்க்களத்தோடு ஜாம்நகர் வந்தோமே அந்த
"ஹாப்பா ஜனதா" வண்டி தான். அது ஹாப்பாவில் இருந்து கிளம்புவதோடு இல்லாமல் போரிவிலிக்குக் காலை 4-30-க்கே போய்விடும். அவங்க தூக்கத்துக்கு இடைஞ்சல். எல்லாருக்கும் வசதியாக இந்த வண்டி ஏற்பாடு செய்து குறிப்பிட்ட நாளில் கிளம்பினோம்.

இதுவரை நான் தனியாகப் பிரயாணம் செய்தது என் பையன் பிரசவத்துக்கு மதுரை போகும் போதும், அங்கே இருந்து திரும்ப நசிராபாத் வரும்போதும் தான். மதுரை போகும்போது என் தம்பியும் ,அம்மாவும் நசிராபாத் வந்திருந்தார்கள் என்றாலும் தம்பி ரொம்பவே சின்னப் பையன். மொழிப் பிரச்னை. ஆகவே கிட்டத் தட்ட நான் தான் கூட்டிப் போனேன் என்று சொல்ல வேண்டும். திரும்ப வரும்போது அண்ணாவும், மன்னியும், என் சிறிய நாத்தனாரும் வந்தார்கள் என்றாலும் அதே பிரச்னைதான். அப்பவும் நான் தான் கூட்டி வந்தேன். இப்போ ரொம்ப நாள் கழிச்சு நாங்க 3 பேரும் தனியாகப் போகிறோம். அதுவும் முதல் முதல் பம்பாய்க்கு. என் மைத்துனன் வீட்டிலும் சரி, எங்களுக்கும் சரி அப்போ ஃபோன் வசதி இல்லை. ஆஃபீஸ் நம்பரில்தான் முக்கியமான விஷயம் இருந்தால் அண்ணா, தம்பி பேசிக் கொள்வார்கள். இல்லாவிட்டால் கடிதம் தான். ஆகவே என் மைத்துனன் போரிவிலியில் CWC க்வார்டர்ஸில் "தத்தபாடா ரோட்"டில் இருக்கிறான் என்று தெரியும். மற்றபடி அவன் அலுவலகம் சர்ச்கேட்டில் இருக்கிறது என்றும் தெரியும். வேறு ஒன்றும் தெரியாது. என் கணவரிடம் எதற்கும் ஸ்ரீதர் விலாசம் கொடுங்கள் என்றதற்கு அவர், உன்னை ரெயில் ஏற்றிவிட்டு அவன் ஆஃபீஸுக்கு ஃபோன் செய்து விடுகிறேன். மத்தியானம் 2-200க்கு ஏறினால் காலையில் போரிவிலி 7 மணிக்கு வீடு போயிடலாம் என்றார். என் மாமனார், மாமியார் வேறு அப்போ அங்கே தான் இருந்தார்கள். அதனாலும் நாங்கள் கட்டாயம் போக வேண்டி இருந்தது. வண்டியில் ஏறினோம். வண்டியும் கிளம்பியது. அப்பா வராமல் குழந்தைகளுக்குள் ஒரு வெறுமை, இருந்தாலும் வேறு வழி இல்லை. ராஜ்கோட் ஒரு மணி நேரத்தில் வந்தது. ராஜ்கோட்டில் ஒரு குடும்பம் ஏறியது. அவங்க வீட்டையே காலி செய்து இந்த ஸ்லீப்பர் க்ளாசில் ஏற்றினார்கள். எங்களுக்குக் கால் வைக்க மட்டும் இல்லை, கை வைக்கவும் இடம் இல்லை. பாத்ரூம் போகப் பச்சைக் குதிரை தாண்டிப் போகவேண்டி வந்தது. அவங்ககிட்டே சொன்னால் குஜராத்தியில் சண்டை மாதிரி ஏதோ சொல்கிறார்கள். ஏற்கெனவே வெறுப்பில் இருந்த நான் இன்னும் வெறுப்பில் ஆழ்ந்தேன். ஒரு வழியாகக் காலை வந்தது. 5-00 மணி இருக்கும். நான் தான் கொட்டக் கொட்ட முழிச்சுக் கொண்டு இருப்பேனே, அது போல எழுந்து உட்கார்ந்திருந்தேன். வண்டி "பால்கர்" என்னும் ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்தது. டீ வந்தது சாப்பிட்ட படி கேட்டேன், "போரிவிலிக்கு இன்னும் எத்தனை தூரம்?" சாய்வாலா சொன்னார்: "யே காடி டீக் ஸே ஜாதே தோ ஏக் கண்டே மே ஜாயேகி" என்றார். "என்ன இது இப்படிச் சொல்றாங்க!" என்று நினைத்தேன். வண்டி நின்று கொண்டிருந்தது. நேரம் போய்க் கொண்டிருந்தது.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

எதிர்க்கட்சிகளின் சதியால் தலைவியின் வீட்டில் மின் தடை ஏற்பட்டது என்று உளவுப்படைத் தகவல். தலைவி அதை முறியடித்து இன்று பதிவு போட்டுள்ளார். அதான் "வெற்றி நமதே!!!!!!", அப்பாடி ஒரு வழியாத் தலைப்புக்கு அர்த்தம் கண்டு பிடிச்சாச்சு.

19 comments:

 1. //என் கணவரின் கீழ் இருந்ததால் அவர் நாடாறு மாதம், காடாறு மாதம் தான் //

  ஆக, சாம்பு மாமா விக்ரமாத்திதன் என்றால், அவரை விடாது பற்றி இருக்கும் நமது கீதா மேடம்..... (பொற்கொடி, நீயே திருவாய் மலர்ந்து விடுமா!) :))))

  ReplyDelete
 2. //சாய்வாலா சொன்னார்: "யே காடி டீக் ஸே ஜாதே தோ ஏக் கண்டே மே ஜாயேகி" என்றார். "என்ன இது இப்படிச் சொல்றாங்க!" என்று நினைத்தேன். வண்டி நின்று கொண்டிருந்தது. நேரம் போய்க் கொண்டிருந்தது//

  அடடா! தலைவி என்ன இப்படி ஒரு சஸ்பென்ஸ்ல நிறுத்திட்டீங்க? நீங்க அடுத்த பதிவு போடற வரைக்கும் நாங்களாவே சி.ஐ.டி. சங்கர் மாதிரி எதாச்சும் துப்பு துலக்கி யோசிச்சிக்க வேண்டியது தானா?
  :)

  ReplyDelete
 3. தம்பி ரொம்பவே சின்னப் பையன்.
  ஆமாம் அக்காவே இன்னும் சின்னப் பொண்ணூனா தம்பிநிச்சயம் சின்னப் பையந்தானே.
  சும்மா சொல்லப்படாது. ரயிலில் ஏறிவிட்டாலே உங்களுக்கு கற்பனை பிச்சிக்கிட்டு போறது. வார்த்தைகள் தாமக வந்து விழுந்து பதிவுக்கு அழகூட்டுகிறது.ஒவ்வொரு பயணமும் ஒருexpedition தான்

  ReplyDelete
 4. என்னமோ நீங்க குதிரையில் ஏறி, அது முன்னங்கால் ரெண்டையும் உயரக் கயிறால் இழுத்து தூக்கி, நீங்களும் உங்க இடதுகையால குதிரையின் கயிறை பிடிச்சிகிட்டு, வலது கையை மேலதூக்கி வெற்றி நமதேன்னு சொல்வீங்கன்னு பாத்தா.. ஏதோ குளியலறையை சுத்தம் செய்தேன்..சமையல் அறையை சுத்தம் செய்தேன் ஒரே வீட்டு மேட்டர இருக்கு.. சே..சப்புன்னு ஆயிடுச்சே தலைவியே

  ReplyDelete
 5. //எங்கள் குழந்தைகள் இருவரும் எப்பவுமே எந்தச் சூழ்நிலையிலும், எந்த ஊரிலும் அனுசரித்துக் கொள்வார்கள். ரொம்பவும் யதார்த்தம் இரண்டு பேரும்//

  அப்படியே அப்பா மாதிரியே ரெண்டு பேரும் நல்லவங்கனு சொல்லுங்க :-)

  ReplyDelete
 6. வெகு அருமை கீதா.பாருங்க,அம்பியின் உதவியில்
  உங்க பதிவில் தமிழில் சொல்ல முடிந்தது.உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என நம்புகிறேன்.--SKM

  ReplyDelete
 7. உங்களுக்குத் தைரியம் இல்லைன்னா பொற்கொடி துணையா வரணுமா? நீங்களே சொல்லுங்க, போதும்.

  ReplyDelete
 8. கைப்புள்ள. சஸ்பென்ஸ் எல்லாம் ஒண்ணும் இல்லை. அதான் முழுசா இருக்கேனே, என்ன நடந்ததுங்கறது இன்னிக்கு மின் தடை எதுவும் இல்லாட்டி எழுதறேன். துப்பு எல்லாம் துலக்க வேண்டாம். அஹமதாபாத் வந்தாச்சா?

  ReplyDelete
 9. கற்பனைன்னே நினைச்சிட்டுப் படிங்க சார், பரவாயில்லை. ஆனால் என்னிக்காவது எங்க வீட்டிலே யாரையாவது சந்திக்கும்போது கேட்டுப் பாருங்க, உண்மையா, பொய்யானு தெரியும். என் HEAD LETTER (courtesy:Syam) சரியில்லைனு தெரியும். ஆனால் இது three, no no five much. :D

  ReplyDelete
 10. hi,hi,hi, கார்த்திக், குதிரைப் பயணத்தை ஒரு 2 பதிவுக்கான விஷயமா வச்சிருக்கேன். இப்போவே அவசரப்படாதீங்க.

  ReplyDelete
 11. ச்யாம், இப்போ முகில் இல்லையா, அவங்க அம்மா மாதிரி புத்திசாலியாவும் அழகாயும் :D, அது போலத்தான். :D

  ReplyDelete
 12. SKM, நீங்க இறக்கின இ-கலப்பை zipped folder-ல் இருந்திருக்கும். அதைத் திறக்க winzip வேணும். அதனால் உங்களால் திறந்திருக்க முடியாது. மற்றபடி இ-கலப்பையால் பிரச்னை எதுவும் இல்லை. நீங்கள் தமிழில் எழுத ஆரம்பிச்சது பத்தி ரொம்ப சந்தோஷம்.
  பி.கு: ஜிலேபி எல்லாம் தீர்ந்துடுச்சா? இன்னும் இருக்கா? மைதா ஜிலேபியா? உளுந்து ஜிலேபியா? கொஞ்சம் பார்சல் அனுப்புங்க, பார்ப்போம். :D

  ReplyDelete
 13. ஏம்மா நான் என்ன சொல்லிட்டேன்னு என்னை இந்த கிழி கிழிக்கிறீங்க.ரொம்ப கட்டுபடித்துக்கொண்டு இப்படி நல்லாதானே புகழ்ந்து எழுதினேன்.


  உங்களுக்கு கற்பனை பிச்சிக்கிட்டு போறது. வார்த்தைகள் தாமக வந்து விழுந்து பதிவுக்கு அழகூட்டுகிறது.ஒவ்வொரு பயணமும் ஒருexpedition தான்

  சரி இனிமே கையை கட்டிக்கொண்டு இருக்கேன்

  ReplyDelete
 14. //மற்றபடி இ-கலப்பையால் பிரச்னை எதுவும் இல்லை.//
  கலப்பையாவது மண்வெட்டியாவது!:D

  அட டா! இந்த அம்பி உதவி பண்ணி இருக்கானே! நாலு வார்த்தை பாரட்டுவோம்!னு தோணுதா? :)

  //பாருங்க,அம்பியின் உதவியில்
  உங்க பதிவில் தமிழில் சொல்ல முடிந்தது.//
  @SKM, மேன்மக்கள் மேன்மக்கள் தான்! நன்றிங்கோ! அதுவும் இங்க வந்து சொன்னதுக்கு. :)))

  ReplyDelete
 15. சார், சிரிப்பான்(smiley) :D போட்டிருக்கேனே பார்க்கலியா? இல்லாட்டி சிஷ்யன் பார்க்கக்கூடாதுன்னு உத்தரவு போட்டிருக்காரா? கையைக் கட்டிட்டு எல்லாம் உட்காரவேணாம், பின்னூட்டம் கொடுங்க போதும், இது 3 or 5 much இல்லைனு நினைக்கிறேன்.

  @ambi, பெருமை போதும், அங்கே போனால் அவங்க ப்ளாகிலே ஒண்ணு காணவே இல்லை. அதுக்கு ஏதாவது செய்யுங்க முதலிலே. அப்புறம் பெருமை அடிச்சுக்கலாம்.

  ReplyDelete
 16. //அங்கே போனால் அவங்க ப்ளாகிலே ஒண்ணு காணவே இல்லை. //

  daily oru mokkai poda avanga enna geetha madamaa? :)

  also Indian timing and US timing varies. soon they will post. pathunde irungo! :)))

  ReplyDelete
 17. கீதா,முழு பதிவு போடுகிற அளவிற்கு பொறுமை இல்லை.முதலிலேயே எழுத வராது சரியா,தமிழ் எழுதி முடிக்கிற்துக்குள்ளே என்ன எழுத வந்தேங்கிற்து மறந்து போய் விடுகிறது.
  ஜிலேபி உளுந்து அரைத்து செய்தது.மிக நன்றாக வந்தது.நவராத்திரியின் போது நிறைய பட்ஷணம் செய்ததால் தீபாவளிக்கு இது ஒன்றுதான்.
  இகலப்பை மீண்டும் Try செய்கிறேன்.மிக்க நன்றி.--SKM

  ReplyDelete
 18. மேட்டரு எழுதி அதுக்கு தலைப்பு வைப்பாங்க. நீங்க தலைப்பு வச்சு அதுக்கு மேட்டரு எழுதிறீங்க.....

  ஆனா சத்தியமா தலைப்புக்கும், மேட்டருக்கும் சம்பந்தமே இல்ல...

  ReplyDelete
 19. @அம்பி, கீழே உங்களுக்கான பதில் இருக்கு, படிச்சுக்குங்க.

  @சண்டைக்கோழி, நான் எழுதறதை எல்லாரும் கண்ணு வச்சதிலே ஒரு வாரமா எழுதவே முடியலை. இன்னிக்குப் பார்க்கிறேன். நீங்க மெதுவா எழுதுங்க. உங்க ப்ளாக் விலாசம் மாத்திட்டா சொல்லுங்க. வந்து சண்டை ஹிஹிஹி, பழக்க தோஷத்திலே வந்துடுச்சு, பின்னூட்டம் கொடுக்கலாம்.

  @புலி, சூடானிலே இன்னுமா வடை மிச்சம் இருக்கு? இங்கே வரதுக்கு இத்தனை நாள் ஆச்சு? காட்டுக்குப் போயிருந்தீங்களோ?

  @ஹெல்லொ உமாகோபு, தினமும் எழுதணும்னுதான் வரேன். ஆனால் இந்த மின்வாரியமும், மழையும் பண்ணற சதியாலே முடியலை. ஏற்கெனவே மிதந்துட்டு இருக்கோம். மழை இன்னும் விடவே இல்லை. மின்சாரம் போயிட்டுப் போயிட்டு வருது. பார்க்கலாம் இன்னிக்கு என்ன ஆகுதுன்னு?

  @வேதா(ள்) இது ஒண்ணும் சூப்பர் ஃபாஸ்ட் இல்லையே, மெயில் தானே மெதுவாத் தான் போகும்.

  ReplyDelete