எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, October 05, 2006

133. தலைவிக்கு மிரட்டல்?

வ.வா.சங்கத்தின் நிரந்தரத் தலைவலி(வி), வடமாநில மற்றும் நேபாளம், சீனா ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் சென்று அங்கே வெற்றிக்கொடி நாட்டி வந்தது அனைவரும் அறிந்ததே! இது இப்படி இருக்கத் தலைவி வெளிநாடு சென்ற சமயம் பார்த்துப் பெனாத்தலாரும், டுபுக்குவும் சங்கத்தில் சேர்ந்ததின் மர்மம் நீடிக்கிறது. இது பற்றி அறிய நம் உளவுப்படையை அனுப்பி இருக்கிறோம். இருந்தாலும் நேற்று திடீரென்று தலைவிக்கு வந்த ஒரு மிரட்டலுக்கும், இந்தத் திடீர் சேர்க்கைக்கும் சம்மந்தம் இருக்குமோவெனத் தோன்றுகிறது.

தலைவி பங்களூர் சென்ற சமயம் அம்பி குண்டர் படைத் தலைவரை அழைத்துக் கொண்டு வந்து தலைவியை மிரட்ட முயன்றதும், தலைவி அதற்கு பயப்படாமல் எதிர்த்து நின்றதும், பின் குண்டர் படைத் தலைவர்," தலைவியின் பக்கமே நான், தலைவியின் புகழ் ஓங்குக! இனி என் வாழ்நாளெல்லாம் தலைவியின் புகழைப் பரப்புவதே என் கொள்கை!" என்றெல்லாம் சொன்னதும் அனைவரும் அறிந்ததே! இத்தனை நாளாகத் தலைவியின் பக்கம் இருந்து வந்த குண்டர் படைத் தலைவர் நேற்று த் திடீரெனத் தலைவிக்குத் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்ததாக நம்பத் தகுந்த செய்தி வட்டாரங்கள் கூறுகின்றன.

இவ்வளவு நாளாக 'PROXY' குரல் கொடுத்து வந்த குண்டர் படைத் தலைவர் நேற்றுத் தன் சொந்தக் குரலில் தலைவியுடன் பேசி இந்த மிரட்டலை விடுத்ததாகத் தெரிகிறது. பெனாத்தலார் சங்கத்தில் சேர்ந்த சிறிது நாளிலேயே டுபுக்குவும் சேர்ந்ததின் பின்னணி இதுதான் என உறுதிபடத் தெரிகிறது. திரு டுபுக்கு அவர்கள் அம்பிக்கும், குண்டர் படைத் தலைவருக்கும் சகோதரர் என்று இந்த வலை உலகு நன்கு அறியும். சமீபத்தில் திருநெல்வேலியில் வலைப்பதிவர் மஹாநாடு கூட்டிய டுபுக்கு அது தோல்வி அடைந்தது பற்றி மிகுந்த மனவருத்தமுடன் இருந்த வேளையில் சங்கப் பிரவேசம் நடந்து உள்ளது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? கூடிய சீக்கிரம் அம்பியும் சேருவார் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது. தலைவியைத் தலைமைப் பதவியில் இருந்து அகற்றும் முயற்சியில் இது ஒன்றாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. தனக்குப் பாதுகாப்புக்காகத் தலைவி "எலிப்படை" தரவேண்டும் எனவும், AtoZ உள்ள சிறப்புப் பாதுகாப்பு வேண்டும் எனவும் கேட்டிருக்கிறார். சங்கத்துச் சிங்கங்களே, புலிகளே, எலிகளே, பொங்கி எழுங்கள். வீறு கொண்டு எழுந்து உங்கள் தலைவியைக் காக்க வாருங்கள். வெற்றி வேல்! வீரவேல்! :D :D :D

21 comments:

 1. நாங்க இருக்கும்போது வேற யார் வந்து தலைவியை மிரட்டுவது?

  ReplyDelete
 2. கருணாநிதி பாணியில்

  வ.வா.சங்கத்தில் இல்லாவிடினும் தலைவிக்கு ஆபத்து என்று தெரிந்ததுமே முதன்முதலாகக் குரல் கொடுத்தவன் நாந்தான். முந்தாநேற்று பழுத்த தக்காளியில் நேற்று வைக்கப்பட்டு இன்று ஊசிய ரசங்கள் எல்லாம் கொதிக்கும் இந்தக் காலத்தில் காலகாலத்திற்குமான ஊறுகாய்கள் உறைப்பதில் வியப்பென்ன இருக்க முடியும்!

  நாயாய் பேயாய் பூனையாய்ப் புலியாய் காட்டு விலங்குகளாய்த் திரிவது விலங்களுக்கே உரியது. நமக்கு? குண்டர் என்ற பெயரில் தொண்டர் இருந்தால் சுண்டல் கிடைக்காது என்பது தெரியாதா!

  பாயும் புலி, பதுங்கும் சிங்கம், வீர வேங்கை என்றெல்லாம் பெயரெடுத்த மண்ணின் மைந்தனாம் சொல்லின் செல்வனாம் என்றெல்லாம் புகழ விரும்பிய பொழுது அந்தப் புகழை விரும்பாது பகட்டுக்காரர்களில் காலில் விழுந்த கருமத்தை என்ன சொல்வது!

  ஆகவே! அப்பாவின் மகளே வருக! நிலையான தலைமை தருக!

  A to Z பாதுகாப்பு ஆங்கிலப் பாதுகாப்பு. ஆகையால் அ முதல் ஃ பாதுகாப்பு வழங்குவோருக்கும் வரிவிலக்கு கொடுக்கப்படும் என்பதை மனமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

  ReplyDelete
 3. ஜெயலலிதா பாணியில்,

  பெரியோர்களே தாய்மார்களே கழக உடன்பிறப்புகளே! ஒரு பெண் என்பதால் தலைவிக்கு மிரட்டல் விடுத்தவர்களை என்ன செய்யலாம்! தூக்கில் போட வேண்டும் அல்லவா! (கூட்டத்தில் ஒருவர் சோறு கொண்டு வந்த தூக்கைத் தூக்கி காட்டுகிறார். விசில் பறக்கிறது. கைதட்டல் விண்ணைப் பிளக்கிறது)

  எங்களை என்னவென்று நினைத்தாய்? கழகத்தில் தூக்குத் தூக்கிகள் நிறைய உண்டு. எந்த பஸ்களையும் கொளுத்தாமல் எந்த கட்டிடத்தையும் உடைக்காமல் யாரையும் துன்புறுத்தாமல் ஒரு இடைஞ்சலும் இல்லாமல் இருக்கவே நாங்கள் விரும்புகிறோம். அது பொறுக்கவில்லையா!

  வலைப்பதிவுகளிலே எக்கச்சக்கமாக வலைப்பூவை பினாமி பெயரில் வைத்திருக்கும் இவர்களா சங்கத்தைக் காப்பாற்றப் போகிறார்? மக்களே ஏமாந்து விடாதீர்கள். பெனாத்தலும் டுபுக்கும் சேர்ந்தது திடீர்க் கூட்டணி. சந்தர்ப்பவாதக் கூட்டணி. ஒவ்வொரு தேர்தலுக்கும் நாம் தேடித்தேடி அமைக்கும் கூட்டணிதான் உண்மையான அரசியல் கூட்டணி. அந்தக் கூட்டணி நிலைக்கவே நான் விரும்புகிறேன்.

  அப்படியில்லாமல் யாராவது எதிர்க்க நேர்ந்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுகிறேன்.

  ReplyDelete
 4. அப்போ தலைவியை பாத்துப் பேசணமுன்னா எலிக்குட்டி சோதனை எல்லாம் உண்டுன்னு சொல்லுங்க. அதைத்தானே டோண்டு சார் ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கார்.

  ReplyDelete
 5. Mookaiyooooo Mokkai!

  en kuralukkum en Srini kuralukkum vithyaasam theriyalai! athuku ipdi oru mookai pathivu! karumam! :)

  ReplyDelete
 6. அதானே, பார்த்தா சிபி மாதிரிதான் இருந்தது. சந்தேகத்தோடு இருந்தேன். இப்போ சரியாப் போச்சு. தளபதி, இது நியாயமா? தர்மமா? நான் இப்போவெல்லாம், "குமார" என்ற பேச்சே எடுப்பதில்லை. குமரன் பதிவில் கூடப் போய் எட்டிப் பார்ப்பதோடு சரி,பின்னூட்டமே கொடுப்பதில்லை. அப்புறமும் இப்படியா மிரட்டுவது? :D

  ReplyDelete
 7. ஹி,ஹி,ஹி, ராகவன், எனக்காகத் தாங்கள் செய்யும் தொண்டு சிறந்தது, உகந்தது,எமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் பதிவில் எத்தனை பின்னூட்டம் வேண்டுமோ அத்தனையும் என் சார்பில் சங்கத்துச் சிங்கங்கள் அளிப்பார்கள். தங்களுக்கு மிகவும் உகப்பான பரிசு இது அல்லவா? (தமிழ் நல்லா வந்திருக்கா?) :D

  ReplyDelete
 8. இ.கொ. அதெல்லாம் சங்கத்து ஆளுங்களுக்கு இல்லை. மத்தவங்களுக்குத் தான். அது சரி, என்ன கொஞ்ச நாளா சங்கத்துப் பக்கம் ஆளே காணோம்?

  ReplyDelete
 9. ஆப்பு,
  இது நல்லாவே இல்லைன்னா எது நல்லா இருக்கும்? ரொம்பப் புகை விடாதீங்க. உடம்புக்கு ஆகாது. நேத்திக்கு அம்பி, தம்பின்னு என்னை ஏமாத்தினது யார்? நான் வித்தியாசம் கண்டு பிடிச்சதாலே தான் இந்தப் பதிவே! நீங்களே ஒரு மொக்கை ஸ்பெஷலிஸ்ட், இதிலே என்னோட பதிவைப் பார்த்துப் பொறாமை! நறநறநறநறநற :D

  ReplyDelete
 10. ஆண்டவா! ப்ராஜெக்ட் கோடு கோடுனு மண்டை காயுதேனு இங்க வந்தா, இது அதுக்கு மேல கண்ண கட்டுதே.. கைலை நாதா நீ இத கொஞ்சம் கேக்க கூடாதா?

  ReplyDelete
 11. இந்த பதிவை படிச்சதுல ஒரே ஒரு விஷயம் தான் தெளிவாகுது, நேத்து வந்த தொலைப்பேசியால் தலைவிக்கு தலை குழம்பி போய் நம்மையும் சேர்த்து குழப்புகிறார். தலைவியை இப்படி தடுமாற வைத்தவர் யார்? யார்? யார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்?

  ReplyDelete
 12. தலைவிக்கு நேர்ந்த இந்த அவமானத்தை என்னால் சகிக்க முடியவில்லை.ஆகவே நான் இப்பவே நெல்லை,கல்லிடை சென்று,டுபுக்குவையும் சந்தித்து மேலும் எப்படி பயமுறுத்தலாம் என்று ஒரு அறிக்கை வந்தவுடன் சமர்ப்பிக்கிறேன்

  திருநெல்வெலி சீமையிலே வார்த்தை பேசுவது குறைச்சல் அருவாதான் அதிகமா பேசும்.எலிப்படைப் போறாது மகளிர் கருப்பு பூனை படையிலிருந்து வேதா(ளம்).பொற்கொடி,எல்லாரையும் வரவழைங்க

  ReplyDelete
 13. தலைவிக்கு நேர்ந்த இந்த அவமானத்தை என்னால் சகிக்க முடியவில்லை.ஆகவே நான் இப்பவே நெல்லை,கல்லிடை சென்று,டுபுக்குவையும் சந்தித்து மேலும் எப்படி பயமுறுத்தலாம் என்று ஒரு அறிக்கை வந்தவுடன் சமர்ப்பிக்கிறேன்

  திருநெல்வெலி சீமையிலே வார்த்தை பேசுவது குறைச்சல் அருவாதான் அதிகமா பேசும்.எலிப்படைப் போறாது மகளிர் கருப்பு பூனை படையிலிருந்து வேதா(ளம்).பொற்கொடி,எல்லாரையும் வரவழைங்க

  ReplyDelete
 14. தலைவிக்கு நேர்ந்த இந்த அவமானத்தை என்னால் சகிக்க முடியவில்லை.ஆகவே நான் இப்பவே நெல்லை,கல்லிடை சென்று,டுபுக்குவையும் சந்தித்து மேலும் எப்படி பயமுறுத்தலாம் என்று ஒரு அறிக்கை வந்தவுடன் சமர்ப்பிக்கிறேன்

  திருநெல்வெலி சீமையிலே வார்த்தை பேசுவது குறைச்சல் அருவாதான் அதிகமா பேசும்.எலிப்படைப் போறாது மகளிர் கருப்பு பூனை படையிலிருந்து வேதா(ளம்).பொற்கொடி,எல்லாரையும் வரவழைங்க

  ReplyDelete
 15. தலைவி இதே ரேஞ்சுல புலம்பிட்டு இருந்தா...இனி வர போற பதிவுல எல்லாம் இது பாக்கிஸ்தான்னின் சதி,அமெரிக்காவின் விதி, சீனாவின் கதி...என்றெல்லாம் புலம்பினாலும் ஆச்சர்யம் இல்ல....

  ReplyDelete
 16. பொற்கொடி,
  என்ன இது? உங்க தலைவிக்கு ஒண்ணுன்னா பொங்கி எழ வேண்டாமா? கீழே வேதா(ள்) பாருங்க! எப்படி ஆவேசமாக் கேட்டிருக்காங்க, இதெல்லாம் பால பாடம், முதலில் கத்துக்கிட்டு வாங்க, போங்க, ஆஃபீஸ் வேலை எல்லாம் அப்புறம் :D

  ReplyDelete
 17. வேதா(ள்), தொல்லைபேசியில் தொல்லை கொடுத்தது, நம்ம குண்டர் படைத் தலைவர் தான். அவர் "நான் அம்பி"னு சொல்ல பின்னணியில் அம்பி சொந்தக் குரலில் சிரிக்க, நான் ஏமாறவே இல்லையே? அப்போவே புரிஞ்சு போச்சு இது நமக்கு வந்த மிரட்டல்னு. அதுவும் டுபுக்கு சேர்ந்துட்டாரா? சங்கத்திலே! என்னை நீக்கச் சதி! "சென்னை வந்து உங்களை கவனிச்சுக்கறேன்னு" சொல்லி இருக்கார். பார்க்கலாம். நான் "ஃபூஊ"னு ஊதிட மாட்டேன் ஊதி. :D

  ReplyDelete
 18. தி.ரா.ச. சார்,
  அதெல்லாம் வேண்டாம்,. நான் போட்ட கடிதம் வந்து சேர்ந்துட்டதான்னு பார்த்து ஆப்பு கிட்டேச் சொல்லுங்க. சும்மா உங்களுக்கு அட்ரஸ் எழுதத் தெரியாதுனு, தான் எழுதிய நினைவிலேயே சொல்லிட்டிருக்கார். இப்போ நீங்க சாட்சி. கட்சி மாறிடாதீங்க! :D

  ReplyDelete
 19. ச்யாம்,
  முன்னாலேயே ஏன் சொல்லலை? அது தான் இப்போ முஷாரஃப் இந்த மாதிரி புத்தகம் வெளியிட்டிருக்கிறாரா? கடவுளே இது பாகிஸ்தானின் சதியா இருக்குமோ? :D

  ReplyDelete
 20. good was just feeling ennada ithu what happened to geetha commedy onnum pannaliyeenu

  ReplyDelete
 21. enna aniyayamda ithu..fone call olunga attend panathuku ipdi oru buildupa...rama ramaa...

  ReplyDelete