எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, October 15, 2006

139. என்னுடைய ரயில் அனுபவங்கள்

முதல் முதல் நாங்க ராஜஸ்தான் போன போது என் பெண் 11/2 வயசுக் குழந்தை. அங்கே இருந்து மாற்றலில் சிகந்திராபாத் வரும்போது பையனுக்கு 11/2 வயசு ஆகி இருந்தது. ஆகவே நாங்கள் நசிராபாத்தைப் பற்றிச் சொல்லும்போது எல்லாம் அவங்க இரண்டு பேரும் கதை மாதிரிக் கேட்பார்கள். மறுமுறை அதே ஊர் போனபோது நாங்க எல்லாரும் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. சென்னையில் அவ்வளவாக நண்பர்கள் இல்லாத இரண்டு பேரும் அங்கே போய் நிறைய நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. இங்கே சென்னையில் எங்க ஏரியாவிலேயே இவங்க இரண்டு பேர் மட்டும்தான் கேந்திரிய வித்யாலயாவில் படிச்சது. மத்தக் குழந்தைகள் எல்லாம் மாநில அரசுப் பாடத்திட்டம். அதனாலேயும், இவங்க பள்ளி நேரம் வித்தியாசப் பட்டதாலேயும், எல்லாரும் பள்ளிக்குப் போகும் முன்னேயே போயிடுவாங்க, லீவு நாளில் இருந்து வேறுபடும். அதனால் இங்கே நண்பர்கள் குறைவு. இரண்டு பேருக்கும் அங்கே ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அந்த மாதிரியான ஒரு சந்தோஷமான சூழ்நிலையில் தான் திடீரென எங்களுக்கு குஜராத்தில் ஜாம்நகருக்கு மாற்றல் ஆனது. நாங்கள் யாருமே எதிர்பார்க்கலை. எப்பவும் போல என் கணவர் எந்த மாற்றமும் காட்டாமல் போவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை ஆரம்பிக்க எங்களுக்கு இஷ்டமே இல்லை.

குஜராத் போனால் அப்படி இருக்கும், இப்படி இருக்கும் என்று எல்லாம் எங்களிடம் சொல்லப் பட்டது. ஒரு மத்திய அரசு ஊழியர், அதுவும் பாதுகாப்புக் கணக்கு அலுவலில் இருப்பவர், field area வில் போட்டாலும் போய்த்தான் ஆகணும். இது ஒண்ணும் அப்படி இல்லையே? அமைதியான இடம்தானே, மேலும் நமக்கு இந்த முறை ஊருக்குள்ளேயே க்வார்ட்டர்ஸ் இருக்கிறது. அதனால் நகர வாழ்க்கையும் கிடைக்கும் என்றெல்லாம் என் கணவர் சமாதானம் பண்ணி ஒரு வழியாக சாமான்கள் பாக்கிங் முடிந்து ஒரு வாரத்துக்கு எல்லார் வீட்டிலும் சாப்பாடு சாப்பிட்டு, (அதெல்லாம் அங்கே மாற்றல் ஆகிப் போனாலோ அல்லது மாற்றல் ஆகி வந்தாலோ ஒரு வாரத்துக்கு ஓசிச் சாப்பாடு கிடைத்து விடும். எல்லாவிதமான மாநிலச் சாப்பாடும் கிடைக்கும்.) ஒரு வழியாகப் புறப்படும் தினம் வந்தது. எனக்கோ அந்த வீட்டை விடவே இஷ்டம் இல்லை.

நசிராபாத்தில் நாங்கள் இருந்த பங்களாவில் தோட்டத்தில் தினமும் மயில்கள் வந்து நாட்டியம் ஆடிக் கொண்டிருக்கும். மிக அழகிய லான். சுற்றிப் பலவிதமான பூச்செடிகள். அதிலே பலவிதமான வண்ணங்களில் பூக்கள். நம்ம குடியரசுத் தலைவரின் "மொகல் கார்டன்" ரேஞ்சுக்குப் பரிபாலனம் செய்து வந்தோம். எங்கள் மாலியும் (தோட்டக்காரர்) எங்கே எங்கே நல்ல செடிகள் கிடைக்குமோ தேடித் தேடிக் கொண்டு வைப்பார். போதாத குறைக்குப் பின்னால் உள்ள பெரிய தோட்டத்தில் பீன்ஸ், காரட், பட்டாணி, அவரை, கத்திரி, மிளகாய் என்று அந்த அந்த சீசனுக்கு ஏற்ற காய்கறிகள் என் கணவர் போடுவார். (தோட்டக் கலையில் ஆர்வம் அதிகம்.) என் மாமனாரும் அவர் பங்குக்கு எங்கே இருந்தோ எப்படிக் கேட்டாரோ தெரியாது, (ஹிந்தியே தெரியாது, பேசினாலும் புரியாது.) வாழை, முருங்கை போன்றவை சமையல் அறைக்குப் பக்கத்தில் வருமாறு போட்டிருந்தார்.

லானுக்கு அருகே ஒரு மேடை. அதில்தான் பறவைகளுக்குத் தானியங்கள் இறைப்போம். பலவிதமான பறவைகள் வரும். கிளிகள் கொத்துக் கொத்தாக வரும். எல்லாம் "கீக்கீ" என்று கத்திக் கொண்டே தானியங்களைக் கொத்தும்போதும், மாடப்புறாக்களும், மணிப்புறாக்களும், வெண்புறாக்களும் பறக்கும் சப்தமும், முயல்கள் ஓடும் நேர்த்தியும் பார்க்கவே பரவசம் ஊட்டும். மழை நாளில் வராந்தாவில் நாற்காலி போட்டுக் கொண்டு உட்கார்ந்தால் மயிலின் "அக்காவ்" என்ற கூவலும், செம்போத்துப் பறவைகளின் கூச்சலும், தேன் சிட்டுப் பறவைகள் பூச்செடிகளில் வந்து தேன் குடிக்கும்போது போட்டுக் கொள்ளும் சண்டையும் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத இன்பமாக இருக்கும். தன் நீண்ட பெரிய சிறகுகளைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு மயில்கள் வந்து பறக்க முடியாமல் பறந்து வீட்டுக் கூரை மேல் உட்கார்ந்து சிறகுகளை விரித்துக் கொண்டு நாட்டியம் ஆடும். காக்கைகள் குயில்குஞ்சைத் துரத்தும் போது காக்கையை விரட்டி விடுவோம். வானில் இருந்து விர்ர்ரெனப் பறந்து வரும் பருந்துக்கு ஆகாரம் ஆன பறவைகளைப் பார்த்து வருத்தமாக இருக்கும். நான் வந்து உட்கார்ந்தால் ஏதோ போடப் போகிறேன் என்று சுற்றி வந்து உட்காரும் சிட்டுக் குருவிகள். பயமே இருக்காது. தினம் தினம் அரிசி போடுவதால் ஒருவிதப் பிணைப்பு உண்டாகி இருந்தது. இத்தனையும் விட்டுட்டுப் போகணுமே என்று நினைத்தால் மனம் தாளவே இல்லை. இதனாலும், சாப்பாடுகள் தவிர்க்க முடியாமல் வெளியே சாப்பிட்ட காரணத்தினாலும் எனக்கு வயிறு சரியில்லாமல் போய் உடல் நிலை சரியில்லை. ஊருக்குப் போகும் நாளும் வந்தது. எல்லாரும் ஸ்டேஷனுக்குப் போக வண்டியில் ஏறினோம். மாலை, மரியாதைகளுடன் வழி அனுப்பி வைத்தார்கள். ஸ்டேஷனில் அஹமதாபாத் போகும் வண்டிக்காகக் காத்து இருந்தோம். அது டெல்லியில் இருந்து அஜ்மேர் வழியாக வந்து நசிராபாத் வந்து பின் ப்யாவர், பிக்கானீர் வழியாக அஹமதாபாத் போகிறது. அஜ்மேரில் இருந்த் காலை 9-00 மணிக்குக் கிளம்பி நசிராபாத்துக்கு 9-15-க்கு வரும். மாலை7-30 அளவில் அஹமதாபாத் போய்ச் சேரும். அங்கிருந்து ஜாம்நகருக்கு பம்பாயில் இருந்து வரும் செளராஷ்ட்ரா மெயிலில் எங்களுக்கு டிக்கெட் வாங்கி இருந்தது. நசிராபாத் ஸ்டேஷன் வந்தோம். ரயில் காலை 10-00 மணி ஆகியும் வரவில்லை.

12 comments:

  1. ரயில் அனுபவம் என்று சொல்லி விட்டு, ரயில் தவிர மற்றது எல்லாத்தையும் சொல்லி உள்ளீர்கள்.
    ஒ இது இண்ட்ரோவா, மெயினுக்கு சீக்கிரம் வாங்க...... அவ்வ்வ்

    மயில் உங்களை அக்காவ் கூப்பிட்டுச்சா, இதனால் நீங்க சொல்ல வரும் கருத்து........ என்னங்க

    ReplyDelete
  2. பேசாம மயில் அனுபவம்னு தலைப்பு வெச்சிருக்கலாம்.. அடடே 15 வயசுப் பொண்ணுக்கு 2 குழந்தைகளாமே?

    ReplyDelete
  3. தலைவிய பார்த்து ரயிலே பயந்து போச்சுனா...நாங்க எல்லாம் என்ன ஜுஜுபி.... :-)

    ReplyDelete
  4. //மயில் உங்களை அக்காவ் கூப்பிட்டுச்சா, இதனால் நீங்க சொல்ல வரும் கருத்து//

    கரெக்டா கேட்ட பங்கு...இந்த மயில் அக்கானு சொல்லுச்சு, குயில் தங்கச்சினு சொல்லுச்சுனு எல்லாம் கதை விட்டு எங்கள ஏமாத்த முடியாது :-)

    ReplyDelete
  5. சிவா,
    மயிலைப் பார்த்து இருக்கீங்களா முதலில்? :D
    மயில் கூவுவது அக்காவ் னு தான் இருக்கும். இது கூடத் தெரியலியே? வேணும்னா நம்ம கைப்புள்ளயைக் கேளுங்க, சொல்லுவார்.
    இதனால் நான் சொல்ல வரும் கருத்து நான் ஒரு சின்னப் பொண்ணு என்றுதான். புரிஞ்சாச் சரி. :D

    ReplyDelete
  6. இந்தப்பதிவிலே நான் என்னோட வயசைப் பத்தியே ஒண்ணும் சொல்லலியே? உங்களுக்கு என்ன சும்மாச் சும்மா அதிலேயே சந்தேகம்? பேசாமல் படிச்சுட்டுப் பதிவுக்கு சம்மந்தமா புத்திசாலித் தனமாக் கேள்வி கேளுங்க. :D

    ReplyDelete
  7. ஹி,ஹி,ஹி, ச்யாம், ரயிலோ, மயிலோ நம்மளைப் பார்த்துப் பயந்தால் நல்லாத் தானே இருக்கு. அப்புறம் கதை எல்லாம் இல்லை. நிஜமா நடந்தது. மயில் "அக்காவ்"னுதான் கத்தும். ஒரு மயிலை அனுப்பறேன் புதரகத்துக்கு. வந்ததும் சொல்லுங்க. :D

    ReplyDelete
  8. நல்லா தான் எழுதி இருக்கீங்க! ரயிலுக்கு இது டிரெயிலர் பதிவா?

    //அடடே 15 வயசுப் பொண்ணுக்கு 2 குழந்தைகளாமே?
    //
    @porkodi, ஹிஹி, இதுக்கே இப்படி சொல்றியே? 15 வயசு பொண்ணை பெங்க்ளுரில் நேர்ல பார்த்த உன் அண்ணாக்கு (எனக்கு) எப்படி இருக்கும்? :)

    //இந்த மயில் அக்கானு சொல்லுச்சு, குயில் தங்கச்சினு சொல்லுச்சுனு எல்லாம் கதை விட்டு எங்கள ஏமாத்த முடியாது //
    @syam, ஒரு வார்த்தை!னாலும் திரு வார்த்தையா சொன்ன லே ஷ்யாம்! :)

    ReplyDelete
  9. //சிவா,
    மயிலைப் பார்த்து இருக்கீங்களா முதலில்? :D//

    ஹலோ யாருக்கிட்ட, நாங்க மயிலையும் பாத்து இருக்கோம், மயிலா நடிச்ச மூ சீ தேவியையும் பார்த்து இருக்கோம். யாருக்கிட்ட என்ன கேள்வி கேட்குறீங்க.....

    ReplyDelete
  10. ஹி,ஹி,ஹி, புலி ரொம்ப வேகத்திலே இருக்கு போல் இருக்கு, அப்புறம் சாவகாசமாக் கவனிக்கிறேன். இப்போ ராகுகாலப் பூஜைக்குப் போறேன்.

    ReplyDelete
  11. ஆப்பு, ஆப்புப் பத்தலை போல் இருக்கு, ஊருக்குப் போற சந்தோஷமா? இருக்கட்டும், வந்து பார்த்துக்கறேன். நறநறநறநற

    ReplyDelete
  12. hmm the experience of transfer much provided. I do know these hassals and advantages of getting transfer once in 3 years. hassal and advantage - one thing that helped me by this transferable job of dad is how to do professional packing - indulged in this movers and packers job where where those movers packers available those days at economical cost. One thing that I learnt to do packing of every thing for long distance transportation. you may write this as a blog post. you may be knowing the difficulty as well as advantages

    ReplyDelete