ஹி,ஹி,ஹி,ஹி, எல்லாரும் கொடுத்திருக்கிற பின்னூட்டத்துக்கு ரொம்ப டாங்க்ஸு., டாங்க்ஸு, டாங்க்ஸு. என்னடா மூணு நாளா ஆளே காணோம்னு ரொம்பவே சந்தோஷமா இருந்திருப்பீங்க. அதான் ரொம்ப சோதிக்க வேண்டாம்னு வந்துட்டேன். (அப்புறமா நிஜமாவே மறந்துடுவீங்க.)செவ்வாய்க்கிழமை நிஜமாவே சில பிரச்னைகள் இருந்ததாலே அதைக் கவனிக்கிற
மூடில் இருந்தேன். அதான் ஹரிஹரனுக்கும், கார்த்திக்குக்கும் அவசரப் பின்னூட்டம் கொடுத்தேன். ஏன்னா நம்ம ஸ்டைல் பின்னூட்டம் கொடுக்கிற மாதிரி சமயம் இல்லை. அதுக்கு
அப்புறம்தான் ஹைலைட்டே. அன்னிக்கு ராத்திரி தற்செயலா ஜி-மெயில் பார்க்கும்போது
சூடானிலிருந்து புலி கூப்பிட்டது. புலி கூப்பிட்ட உடனே போகாமல் இருக்க முடியுமா? போனால் சிறிது நேரம் "சாட்'டறதுக்குள்ளேயே ஜி-மெயில் நாகை சிவா ஆஃப் லைன்னு சொல்கிறது. என்னடா இதுன்னு பார்த்தால், "There may be some technical problem. You
cannot give or receive chatting. Try after 30 seconds."அப்படின்னு message வருது. மறுபடி வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சேனு அலுப்போடு மறுபடி கனெக்ஷன் வாங்கிப் போய்ப் புலிகிட்டே விஷயத்தைச் சொன்னால் புலிக்கு ஒரே சிரிப்பு. "உங்க கம்ப்யூட்டருக்குக் கூட நீங்க கிள்ளுக்கீரையா இருக்கீங்கன்னு" சொல்லி ஒரே சிரிப்பு. :D நம்ம தலை எழுத்து
இப்படி இருக்கும்போது என்னத்தைச் சொல்றது? பேசாமல் வந்தேன்.
அதுக்கப்புறம் புதன்கிழமை சிறிது நேரம் உட்கார்ந்ததுமே கோவிந்தா, கோவிந்தா, தான்.
எல்லாம் போச்சு. என்னடான்னு பார்த்தால், google-ல் internal server error 500 அப்படின்னு message. பல்லைக் கடித்துக் கொண்டு கணினியை மூடினேன்.
சாயந்திரம் மெயில் பார்த்துட்டு ஏதாவது கமெண்ட் வந்திருக்கா பார்க்கலாம்னு கம்ப்யூட்டரைத்
திறந்தால் "Yahoo HomePage" வரவே இல்லை. மறுபடி மறுபடிமுயற்சித்ததில் யாஹூ வந்தது.
சரினு ப்ளாக் திறக்கப் போனால் என்னோட ப்ளாக்கை நான் பார்க்கக் கூடாது என்று சொல்லி
விட்டது. You are not authorized to see this page அப்படின்னு மெஸேஜ். நீயாச்சு உன்
மெஸேஜும் ஆச்சுனு ஒரே வெறுப்பு. போயிட்டேன். நேத்திக்கு வெளியே போயிட்டேன்.
வரமுடியலை.சாயங்காலம் தான் வந்தேன். சாயங்காலம் எல்லாம் கணினியில் உட்கார்ந்தால்
என்னோட "protocol" என்ன ஆறது? நடைப் பயிற்சி போயிட்டேன்.
அதுக்குள்ளே அம்பி காலைல கூப்பிட்டு "என்ன விஷயம்?" னு கேட்டார். நான் சொன்னதும் ரொம்ப சந்தோஷம்,என்னோட ப்ளாக் எனக்கே திறக்கல்லைன்னதும், பிள்ளையாருக்குத் தேங்காய் உடைக்கிறேன்னு சொல்லி இருக்கார். திரு நடேசன் கூப்பிட்டு, "என்ன, ஓம் நமச்சிவாயா, அப்புறம் வரலை? என்னோட கமெண்ட் பார்த்து பயமான்னு கேட்டார். நான் தான் எல்லாரையும் பயமுறுத்திட்டு இருக்கிறப்போ நான் யாரைப் பார்த்துப் பயப்படறது? "அதெல்லாம் இல்லை. நான் ரொம்ப ஸ்போர்ட்டிவ் ஆக்கும். எது வேணா சொல்லுங்க," னு ரொம்பப் பெருமையாச் சொல்லி வச்சிருக்கேன். பின்னே என்னைப் பத்தி நான் பெருமையாப் பேசாமல் யார் பேசுவாங்க? இன்னிக்கு வேதா(ள்) கூப்பிட்டு," நேத்திக்கு மெயில் கொடுத்தேனே, ஏன் இன்னும் 2 நாளா ஒண்ணும் எழுதலை? உடம்பு சரியில்லையா?" னு ரொம்ப அன்பா விசாரணை. எனக்கு கண் கலங்கி, நாத் தழுதழுத்துப் பேச்சே வரலை. அதான் இப்போ எழுதிடலாம்னு.
இப்போ ஹரிஹரனுக்கும் கார்த்திக்குக்கும் நம்மளோட ஸ்டைலில் ஒரு பதில்: படிப்பாங்களா இல்லையா தெரியலை!
ஹரிஹரன், நான் குதிரையிலே ஏறி உப்புச் சத்தியாக்ரஹம் மட்டும் இல்லை, நம்ம ஜான்ஸி ராணி காலத்துக்கும், ராணி மங்கம்மா காலத்துக்குமே போயிட்டேன், குதிரை கூட என்னை அப்படித்தான் நினைச்சுட்டு இருந்திருக்கு.
காரத்திக்: ஒரு சின்னப் பொண்ணை எல்லாரும் வறுத்து எடுக்கிறாங்க பாருங்க, அவங்க வயசு பத்திச் சும்மாக் கேட்டு, நீங்க முதல் மந்திரியா(அதாவது தாற்காலிகமா) வரணும்னா முதலில் இதுக்கு ஒரு சட்டம் கொண்டு வாங்க, பார்க்கலாம். நீங்க முதல் மந்திரியா வரலாமா? வேண்டாமானு நான் முடிவு செய்யறேன்.
அப்பாடா 3 நாள் ஜாலியா இருந்தோம். இப்ப பாருங்கோ உங்களுக்கு வயசுனாலேயும் பிரச்சினை வயசு ஆனதாலேயும் பிரச்சினை. இதுக்குதான் 60லிருந்து 70 வரை ஒரு நெம்பரைச் சொல்லி சமாளிக்கலாம் இல்லே இருந்தாலும் என்ன ஆச்சு ஏது ஆச்சுன்னு ஒரு பயமும் இருந்தது.இன்னிக்கி பதிவை பாத்த அப்புறம்தான் நிம்மதி ஆச்சு.
ReplyDeleteகுதிரையில போக பர்மிஷன் வாங்கிட்டிங்களா...??
ReplyDelete//இன்னிக்கு வேதா(ள்) கூப்பிட்டு," நேத்திக்கு மெயில் கொடுத்தேனே, ஏன் இன்னும் 2 நாளா ஒண்ணும் எழுதலை? உடம்பு சரியில்லையா?" னு ரொம்ப அன்பா விசாரணை. எனக்கு கண் கலங்கி, நாத் தழுதழுத்துப் பேச்சே வரலை. அதான் இப்போ எழுதிடலாம்னு.//
ReplyDeleteவேதா இதுக்கு எல்லாம் நீங்க தான் காரணமா.... உங்களாஆஆஆஆஆ
//காரத்திக்: ஒரு சின்னப் பொண்ணை எல்லாரும் வறுத்து எடுக்கிறாங்க பாருங்க, அவங்க வயசு பத்திச் சும்மாக் கேட்டு, நீங்க முதல் மந்திரியா(அதாவது தாற்காலிகமா) வரணும்னா முதலில் இதுக்கு ஒரு சட்டம் கொண்டு வாங்க, பார்க்கலாம். நீங்க முதல் மந்திரியா வரலாமா? வேண்டாமானு நான் முடிவு செய்யறேன்//
ReplyDeleteகீதா மேடம், நாங்க எல்லாம் ஏற்கனவே முதலமைச்சர் ஆகியாச்சு.. குரூப்பா, பாவனா கையத் தட்டுன்னு ஆட்டமும் போட்டாச்சு..
நீங்களும் தான்..எவ்ளோ பிஸியா இருந்தாலும் நல்ல பட்டுசேலையா கட்டிகிட்டு நயகரா ஃபால்ஸ்க்கு ஷூட்டிங்கு வாங்க..விவரம் நம்ம பதிவுல பாருங்கோ..செலவு எல்லாம் கட்சி நிதி தான்..கவலைப்படாதீங்க..
//உங்க கம்ப்யூட்டருக்குக் கூட நீங்க கிள்ளுக்கீரையா இருக்கீங்கன்னு//
ReplyDeleteஇந்த மாதிரி ரகசியத்தை எல்லாம் ஏம்பா வெளில சொல்றீங்க..பாவம்பா நம்ம கீதா மேடம்
////உங்க கம்ப்யூட்டருக்குக் கூட நீங்க கிள்ளுக்கீரையா இருக்கீங்கன்னு//
ReplyDeleteஇந்த மாதிரி ரகசியத்தை எல்லாம் ஏம்பா வெளில சொல்றீங்க..பாவம்பா நம்ம கீதா மேடம் //
நான் எங்கப்பா வெளிய சொன்னேன். அவங்களா உளறிட்டாங்க. அதுக்கு நான் என்ன பண்ணுறது. இது மட்டுமா கேட்டேன், இன்னும் ஏகப்பட்டது கேட்டேன். எல்லாத்தையும் அவங்களே உளறவாங்க பாரு
geetha paatti, enna udambu mudialanu scene potutu padhivu ellam potrukinga? seri illa onum unga kita vara vara, soliten :)
ReplyDeleteஹி,ஹி,ஹி, சார், உங்களை விட உங்கள் அபிமான சிஷ்யனுக்கு ரொம்பவே சந்தோஷம். என்னத்தைச் சொல்றது? எல்லாரும் மொக்கை மொக்கைப் பதிவா எழுதிட்டு சுந்தரத் தமிழிலே நான் செய்யற கலைச் சேவையைப் பார்த்த்த்த்த்த்துப் பொறாமை, இந்த மாதிரி எழுத வரலியேனு, கொஞ்சம் கண்டிச்சு வைங்க.
ReplyDeleteஅப்புறம் இந்த ஃபோட்டோவெல்லாம் மெயிலில் அனுப்புங்கனு சொல்றீங்களே?மெயிலில் அனுப்பத் தெரிஞ்சால் upload-ம் செய்திருப்பேனே? இப்படியா மானத்தை வாங்கறது? :D
சின்னப்புள்ளங்கறதாலே கேள்வியும் இல்லை சின்னப்புள்ளத் தனமா இருக்குது? பதிவிலே கவனம் செலுத்துங்க. ஆரம்பிச்சுட்டு அப்புறம் ஒண்ணுமே காணோம். திடீர் திடீர்னு வந்து செக் வைப்பேன்.
ReplyDeleteஹி,ஹி,ஹி, புலி, அந்தப் "புலியோதரை"யும் "கொழுக்கட்டை" விஷயமும் தானே நான் அதெல்லாம் உளறவே மாட்டேனே, சரியா? எனக்கு அதைப் பத்தி எல்லாம் ஒண்ணுமே தெரியாது.
ReplyDeleteகார்த்திக், நான் தான் உங்க பதிவிலே உங்களுக்கு முன்னாலேயே வந்து மிரட்டியாச்சு. நேத்துப் பார்க்கலை போலிருக்கு. நான் சரிங்கற வரை போனால் போகுதுன்னு நீங்க முதலை அமைச்சர், சீச்சீ, முதல் அமைச்சர். அதுக்கப்புறம், நடக்கறதே வேறே, வேறே என்ன எல்லாம் நடக்குமோ அந்த ஜீவன்கள் எல்லாம் நடக்க ஆரம்பிக்கும்.
ReplyDeleteஅது சரி, கிள்ளுக் கீரைன்னா என்ன அர்த்தம்? கீரையும் கிள்ளு வாங்கிக்குமா? பாவம் இல்லை அது? கிள்ளாத கீரைன்னே வச்சிக்கலாமே?
ReplyDeleteஹி,ஹி,ஹி, வேதா, சிவா முதுகிலே டின் கட்டிட்டார் போல இருக்கு, ரொம்ப சந்தோஷம். நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டீங்க. இருந்தாலும் உங்களுக்கு அவசரம் தான். அதான் போட்டுக் கொடுத்துட்டேன். இது எப்படி இருக்கு? :D
ReplyDeleteபோர்க்கொடி, எனக்கு எப்பவுமே வர கால்வலிதான் அன்னிக்கு வந்திருந்தது. நான் தான் அனாவசியமா சிக்-குன் குனியாவோன்னு பயந்துட்டேன். சீன் ஒண்ணும் காட்டலை,நறநறநறநற.
ReplyDeleteஎன் மெயிலுக்குப் பதிலே இல்லை, நற நற நற நறநற நற.
@போர்கொடி எங்க தங்கத்தலைவியைப் பற்றி தகாத வார்த்தை வேண்டாம். நாங்க என்ன பயந்து பயந்தா பதிவும் பின்னுட்டமும் போடரோம்.இல்லை பின்னிட்டத்தை அப்படியே சென்சார் பன்னி மறைத்து விடுகிரோமா.இல்லை போன்டாவுக்கும் சமோசாவுக்கு மட்டும் வாயத்தறக்கறோமா.
ReplyDeleteஹி,ஹி,ஹி, சார், ரொம்ப டாங்க்ஸு, டாங்க்ஸு, தங்கத் தலைவின்னு புகழ்ந்ததுக்கு. ரொம்பத் தன்னடக்கத்தோட ஒத்துக்கறேன். :D
ReplyDelete