ஹாப்பா ஸ்டேஷனில் இறங்கிய நாங்கள் ஊரைப் பார்த்து அதிர்ந்தோம் என்றால், எங்களுக்கு என்றுவந்த வண்டியைப் பார்த்தும் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். சாதாரணமாக நாங்கள் போவதற்கு ஜீப்பும், சாமான்கள் ஏற்ற வண்டியும் வரும். இந்த வண்டிகளில் ஏறுவது கஷ்டம். இன்னிக்கு இந்த நேரம் நாங்கள் வருவோம் என்று எதிர்பார்க்காத காரணத்தால் ஒரே ஒரு மட்டும் வந்திருந்தது.வண்டியை வெளியே எடுத்து வர அதுவும் ஜீப்பை எடுத்து வர முன்கூட்டி அனுமதி பெறவேண்டும். மேலும் நாங்கள் வரலை என்றால் என்ன செய்வது? அதனால் ஜீப்பை அனுப்பவில்லை. எல்லாரும் ரொம்பக் கஷ்டப்பட்டு அந்த வண்டியில் ஏறிக்கொண்டு கையில் கொண்டுவந்த சாமான்களையும் ஏற்றிக் கொண்டோம். ப்ரேக்வானில் வந்த மற்றசாமான்கள் ஸ்டேஷனிலேயே இறக்கி இருந்தார்கள்.அது பின்னால் பெரிய வண்டி கொண்டு வந்து ஏற்றிக் கொள்ளலாம் என்று வீட்டுக்குப் போனோம். அலுவலக நண்பர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தன் வீட்டில் நாங்கள் சாப்பிட ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறினார். போகும் வழி எல்லாம் பலநாள் மழை கண்டது போல்க் காய்ந்து இருந்தது. ஊரே ஒரு வித வெறுமையில் இருப்பது போல் இருந்தது. மனம் பதியவே இல்லை. திரும்ப ராஜஸ்தான் போக ஏங்கியது.
ஒருமாதிரியான தவிப்புடன் நாங்கள் எங்கள் க்வார்ட்டர்ஸ் இருந்த பகுதிக்கு வந்து சேர்ந்தோம். ஜாம்நகர் ராஜா ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில் ஊருக்கு நடுவே மக்கள் வசதிக்காகச் சில படை வீரர்களை வைத்துக் குடியிருப்பு ஏற்படுத்தி இருந்திருக்கிறார். பின்னால் ஆங்கிலேயர் காலத்திலும் அங்கேயே சில படைவீரர்கள் தங்கி இருந்திருக்கிறார்கள். . ஊருக்கு நடுவே இருப்பது வசதி என்பதால் அங்கேயே இருந்து வருகிறது. மற்ற ராணுவத்தினர் ஊரைவிட்டுத் தள்ளி கண்டோன்மெண்டில் இருந்து வந்தார்கள். அங்கேயும் குடியிருப்பு உண்டு என்றாலும், என் கணவரின் அலுவலகம் இங்கே இருந்த காரணத்தாலும் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து என் கணவரின் பதவிக்கு ஏற்ற குடியிருப்பை இங்கே நிரந்தரமாக்கி வைத்திருந்த காரணத்தாலும் என் கணவர் இங்கேயே இருக்கலாம் என நினைத்தார். முன்னால் ராஜா காலத்தில் சொலேரியம் இருந்திருக்கிறது. ஆகவே ரோடின் பெயரே சொலேரியம் ரோடு தான். பக்கத்தில் அரசாங்கப் பொது மருத்துவ மனையும், அதைச் சேர்ந்த கல்லூரியும். ரோடில் திரும்பினால் செக்போஸ்ட் தாண்டி ராணுவக் குடியிருப்பு. அங்கே நுழைந்தோம். சாலையின் கடைசியில் போனால் அங்கேயும் ஒரு பெரிய தடுப்பு. பக்கத்தில் கிராமங்கள் இருந்ததால் பொதுஜனங்கள் இந்தப் பாதையை உபயோகிக்காமல் இருக்கவாம். சாதாரணமாக அனுமதி பெற்ற பால்காரரில் இருந்து அடிக்கடி வரும் சிலரைத் தான் உள்ளே விடுவார்கள். இது வேறே ஊருக்குள் இருக்கிறது. சுற்றி ஊர், நடுவில் இந்த அலுவலகங்களும், இதைச் சேர்ந்த குடியிருப்புக்களும். பார்த்தாலே வீடுகள் எல்லாம் கட்டிப் பல ஜென்மம் ஆகி இருக்கும் போல் இருக்கிறதே என நினைத்தேன்.
வீட்டுக்கு முன்னால் வண்டி நின்றது. இறங்கும் முன் குயில் கூவும் சப்தம். உடனேயே குழந்தைகள் இருவரும்," அம்மா உன் பறவை இங்கேயும் இருக்கு", என்றனர். அவ்வளவாக அதில் விருப்பம் இல்லாமல் கீழே இறங்கினேன். வீடு காம்பவுண்டில் இருந்து சற்றுத் தூரத்தில் இருந்தது. என்றாலும் நசிராபாத் "மால் ரோடு" வீடு இன்னும் உள்ளே போக வேண்டும். காம்பவுண்டில் இருந்து உள்ளேயே ஒரு 1/2 கி.மீ போல் போக வேண்டும். போகும் பாதை பூராக் கவிதை தான். இது அப்படி இல்லை. சுற்றி வேப்ப மரங்கள் இருந்தாலும் பச்சை பார்த்தால் வெளிறிப் போய் இருந்தது. புத்தம்புதிய வேப்ப இலைகளை நல்ல பச்சை நிறத்துடனும், வேப்பம்பூக்களின் மணத்துடனும் பார்க்கும் போது மனதில் ஏற்படும் இனம் தெரியாத சந்தோஷம் ஏற்படவே இல்லை. சரினு ஒரு மாதிரியா மனசைத் தேத்திக் கொண்டு வீட்டிற்கு வந்தோம்.
கூட வந்த ஆஃபீஸ் நண்பர்கள் இருவரும்," நேத்துத் தான் ஆளை வைத்துச் சுத்தம் செய்தோம்." என்றார்கள். தட்டிக் கதவு. மேலே ஏறச் சில படிகள். நடுவில் வண்டியை இறக்கச் சாய்வாகப் ப்ளாட்பார்ம் போட்டிருந்தது. மேலே ஏறிக் கதவைத் திறந்து செருப்பைக் கழற்றி விட்டு உள்ளே காலை வைத்தால் 2" புழுதி காலில் ஒட்டுகிறது. சரி, வராந்தா வெளியே இருக்கிறதாலே அப்படி இருக்கும்னு உள்ளே நுழைந்தோம். மூன்று பெரிய அறைகள். ஒன்று படுக்கை அறையாகவும்,சற்று உள்ளே இருந்தது. வெளியே இருந்த ஒரு அறை உட்காரும் இடமாகவும் அதற்கு அப்பால் ஒரு அறை சமையல், சாப்பாடு அறையாகவும் உபயோகிக்க வேண்டும் என்றனர். வராந்தாவை ஒட்டி ஒரு பத்துக்கு 4 என்ற அளவில் ஒரு சிறிய அறை. சாமான் போடலாம் என்றார்கள். சமையல் அறையில் சாமான் வைக்க எதுவுமே இல்லை. சமைக்க மேடை கூட இல்லை. முன்னால் இருந்தவர்கள் வேலைக்குப் போய்க் கொண்டிருந்ததால் சமையலுக்கு ஆள் இருந்ததாகவும் அவங்க மேஜையிலேயே சமைத்ததாகவும் சொன்னார்கள். பார்த்தால் ஏதோ விடுதி மாதிரி இருந்ததே தவிர வீடு என்ற எண்ணமே வரவில்லை. ஜன்னல் எல்லாம், கார்த்திக் ஏதோ ஒரு படத்தில், "இது ஜன்னல் மாதிரி," என்று ரோஜாவிடம் சொல்வாரே அது மாதிரிக் கையால் கழட்டி விட்டுப் பின் மீண்டும் மாட்டலாம். அப்படி இருந்தது. அப்போ அந்தப் படம் வரவில்லை. இல்லாட்டி அந்த வீட்டில் எடுக்கச் சொல்லி இருந்திருக்கலாம். அதுக்கு அப்புறம் அந்தப் படம் வந்தப்போ நினைச்சேன். நம்ம வீட்டைப் பார்த்துட்டுத் தான் எடுத்திருப்பாங்களோன்னு. இந்த வீட்டில் குடித்தனம் செய்ய வேண்டும், குறைந்தது மூன்று வருஷங்களுக்காவது. என்ன செய்யப் போகிறேன்? என் கணவர், "சாயந்திரம் பால் காய்ச்ச வேண்டும். பால்காரரை அனுப்புங்க." என்று சொன்னது கனவு மாதிரிக் கேட்டது. சத்தமாய் அழவேண்டும் போல் இருந்தது.
மின் விநியோகம் சீராக இல்லாததாலும், வீட்டிலும் வேலை இருப்பதாலும் பின்னூட்டங்களுக்கு உடனேயே பதில் கொடுக்க முடியாது. மன்னிக்கவும்.
ReplyDelete//என்ன செய்யப் போகிறேன்? என் கணவர், "சாயந்திரம் பால் காய்ச்ச வேண்டும். பால்காரரை அனுப்புங்க." என்று சொன்னது கனவு மாதிரிக் கேட்டது. சத்தமாய் அழவேண்டும் போல் இருந்தது//
ReplyDeleteஅழுதீங்களா இல்லியா? சில சமயம் நாம் நினைப்பது நடப்பதில்லை ஆனாலும் எப்படியோ அட்ஜஸ்ட் செய்து கொள்வோம். பின்னால் அதை பற்றி நினைத்து பார்ப்பதும் பகிர்ந்து கொள்வதும் மகிழவாக இருக்கும். அந்த கார்த்திக் பட 'ஜன்னலும்' உங்களுக்கு அப்படித் தான் என நினைக்கிறேன். சரியா?
தலைவிக்கும் தலைவியின் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDelete//சொன்னது கனவு மாதிரிக் கேட்டது. சத்தமாய் அழவேண்டும் போல் இருந்தது.//
ReplyDeleteஅழுதிங்களா இல்லையா... அத சொல்லுங்க முதல
தீபாவளி வாழ்த்துக்கள்
//மின் விநியோகம் சீராக இல்லாததாலும்//
ReplyDeleteபொற்கொடி, கொடுத்த வேலைய ஒழுங்கா பாக்குற மாதிரி இருக்கே
//வீட்டிலும் வேலை இருப்பதாலும் //
என்ன மேடம்..தீபாவளி பலகாரம் செய்ற வேலையா.. கொஞ்சம் எனக்கும் அனுப்பி வைக்கலாமே.. இனிய தீபாவளி வாழ்த்துக்கள் மேடம்
//பார்த்தாலே வீடுகள் எல்லாம் கட்டிப் பல ஜென்மம் ஆகி இருக்கும் போல் இருக்கிறதே //
ReplyDeleteஆனாலும் அந்த மாதிரி வீடுகள்ல சில விஷயங்கள் ரசிக்கிற மாதிரி இருக்குமே, கீதா
//கார்த்திக் ஏதோ ஒரு படத்தில், "இது ஜன்னல் மாதிரி," என்று ரோஜாவிடம் சொல்வாரே அது மாதிரிக் கையால் கழட்டி விட்டுப் பின் மீண்டும் மாட்டலாம்.அப்போ அந்தப் படம் வரவில்லை. இல்லாட்டி அந்த வீட்டில் எடுக்கச் சொல்லி இருந்திருக்கலாம்//
ReplyDeleteஒரே வரில எல்லாம் புரிந்தது.. சினிமாவே பிடிக்காதுன்னு சொல்லிட்டு...அதெப்படி சினிமா உதாரணம் சொல்லலாம், தலைவியே.. உங்கள் கொள்கை என்னவாயிற்று?
நல்ல பதிவு..எல்லாம் கண்முன்னால் வந்தது போல இருந்தது
Amaa அதென்ன.. நான் உங்களுக்கு பின்னூட்டம் தராம போயிடுவேனா தலைவியே.. இப்படி மூச்சுக்கு முந்நூறு தடவை தலைவின்னு உங்களை கூப்பிடறவனை பாத்து..பின்னூட்டம் போடுன்னு நீங்க கேட்கலாமா..
ReplyDeleteதீபாவளி நல்வாழ்த்துக்கள் geetha madam! அப்புறமா வந்து comment போடறேன்!
ReplyDeleteஇருந்துட்டா மட்டும் உடனேயே பதில் வந்துட போகுதாக்கும்.. :)
ReplyDeleteபேய்க்கு சரியான பங்களா தானே குடுத்துருக்காங்க, அதுக்கு என்ன சலிப்பு ;)
கைப்புள்ள, அதெல்லாம் அவ்வளவு சுலபத்தில் அழ மாட்டேன். அப்புறம் நம்மோட பலவீனம் குழந்தைகளுக்குப் புரிஞ்சு போகுமே, அதனால் தான். இருந்தாலும் அப்போ என்னோட மனநிலைமை அது தான்.
ReplyDeleteபின்னால் கார்த்திக் நடித்த படத்தில் அந்த சீன் வரும்போது எல்லாம், "நம்ம ஜாம்நகர் வீடு போல் இருக்கு,"னு பேசிக் கொள்வோம். கவனிக்கவும், "நம்ம ஜாம்நகர்"
தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி.
.புலி, அது என்ன சொல்லி வச்சாப்பல எல்லாருமே நான் அழுதேனா இல்லையாங்கறதயே கேட்கிறீங்க? இல்லை அழவே இல்லை. அழணும்போல் மனநிலை. அதைப் புரிய வைத்தேன்.
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி.
கார்த்திக், கூப்பிட்டாத் தான் வரீங்க, இல்லாட்டி எங்கே வரீங்க? :D :D
ReplyDeleteஅதான் நீங்க கொடுத்த வேலையைப் போர்க்கொடி ஒழுங்கா பார்க்கிறாங்களே தெரியலை?
தீபாவளிப் பலகாரம் செய்யறதுன்னு இல்லை. கொஞ்சம் உறவினர் வருகையும் ஜாஸ்தி. அதான் நேரம் இல்லை.
தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி.
அப்புறம் கார்த்திக், அந்த வீட்டிலே ரசிக்கிற விஷயங்கள் எழுதறேன் பாருங்க ரசிக்க முடியுதான்னு.
ReplyDeleteசினிமா பிடிக்காதுன்னு எங்கே சொல்லி இருக்கேன், சினிமா பத்தின அறிவு இல்லைன்னு சொன்னதா நினைவு, பிடிக்காதுன்னா இப்போதைய படங்கள் பிடிக்கலைங்கற அர்த்தத்தில் சொல்லுவேன். மத்தபடி பெரிய கொள்கை எல்லாம் நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. பல கதாநாயகர்கள் முகமே தெரியாது. நீங்க எழுதறது புரிஞ்சு பதில் சொல்லணும் இல்லையா? எனக்குப் பிடிச்ச நடிகர்களிலே இப்போதைய ஹீரோவான "சூர்யா" சொல்லி இருக்கேன்னு நினைக்கிறேன்.
ReplyDeleteஇந்தியத் தேவதைக்கு என்னுடைய தீபாவளி வாழ்த்துக்களும், நன்றியும். என்ன தீபாவளி பர்ச்சேஸ் முடியலியா? நேரமே இல்லைங்கறீங்க?
ReplyDeleteபோர்க்கொடி, உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹஹஹ்ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ்ஹஹ்ஹஹஹஹஹ்ஹஹஹஹ்ஹஹஹ்ஹ்
ReplyDelete"நானே வருவேன், அங்கும் இங்கும்"
//கவனிக்கவும், "நம்ம ஜாம்நகர்"//
ReplyDeleteநம்ம ஜாம்நகர், நம்ம நசீராபாத்...தலைவியோட லிஸ்ட்ல வேற என்னென்ன "நம்ம" இருக்குன்னு சொன்னா எல்லாரும் தெரிஞ்சிக்குவாங்க இல்ல?
:)
//புலி, அது என்ன சொல்லி வச்சாப்பல எல்லாருமே நான் அழுதேனா இல்லையாங்கறதயே கேட்கிறீங்க?//
ReplyDeleteசீன நாட்டு முரட்டுக் குதிரையையே மண்டியிட வைச்ச எங்கள் புரட்சித் தலைவி "எதற்கும் கலங்கிடாத வீராங்கனை"ஆஃப்டர் ஆல் புழுதியைப் பாத்து அழுதாங்களா இல்லியான்னு தெரிஞ்சிக்க தொண்டர்கள் எல்லாருக்கும் ஒரு ஆர்வம் தான். உங்களையே கலங்க வச்சுதுன்னா படா கில்லாடியான ஜன்னலாத் தான் இருக்கும், பேஜாரான புழுதியாத் தான் இருக்கும். என்னப்பா நான் சொல்றது?
இப்ப ஆமா ஆமான்னு சவுண்ட் வரும் பாருங்களேன்(கவுத்துடாதீங்கப்பா!)
:)
Deepawali nal vazhuthukkal Geetha
ReplyDelete--SKM
கீதா மேடம்,
ReplyDeleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்.