எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, November 13, 2016

ஏடிஎம் மிஷின்கள் இயங்க இன்னும் 3 வாரங்கள் ஆகலாம்!

பிரதமருக்கு இதில் தனிப்பட்ட லாபம் இருப்பதாகப் பலரும் சொல்கின்றனர். அதைக் கேட்டால் சிரிப்பு வருது! இன்னும் சிலர் அவர் டீக்கடையில் வேலை செய்ததைக் கேலி செய்து டீக்கடைக்காரர் எல்லாம் ஆள வந்தால் இப்படித் தான் என்கின்றனர். பொருளாதார அறிவு அவருக்கு இல்லை என்றும் சொல்கின்றனர். ஒரு விஷயம் மட்டும் தெளிவு. சில்லறையாக நூறு, ஐம்பது, இருபது நோட்டுக்களை வங்கிகளுக்கு விநியோகித்திருக்கலாம். ஆனால் பணம் வங்கியில் போட்டுவிட்டுப் போவது தான் மக்களுக்கும் சிரமம் இல்லை, வங்கிப் பணியாளர்களுக்கும் சிரமம் இல்லை. ஏனெனில் ஒருவர் குறைந்த பட்சமாகப் பத்தாயிரம் போடுகிறார் எனில் அந்தப் பத்தாயிரத்தையும் நூறு ரூபாய் நோட்டுக்களாக இந்தக் கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் எண்ணி எண்ணிக் கொடுப்பது காசாளர்களுக்குக் கஷ்டமான ஒன்று.

அதற்காகத் தான் உங்கள் பணம் பத்திரமாக இருக்கிறது என்பதை உறுதி செய்யும் விதமாக வங்கியில் பணத்தைக் கணக்கில் சேர்க்கச் சொல்கின்றனர். அதையும் மீறித் தேவைப்படுபவரகளுக்கு 2,000 ரூபாய் நோட்டுகள் கொடுக்கின்றனர். சில்லறைத் தட்டுப்பாடு இருக்கிறது. 2,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லும் என்றாலும் அதை வாங்கிக் கொண்டு சில்லறை கொடுக்க யாரும் தயார் இல்லை. 2,000 ரூபாய்க்கும் பொருள் வாங்கச் சொல்கின்றனர். :) யாருமே அவங்களிடம் உள்ள நூறு ரூபாய், ஐம்பது ரூபாய் நோட்டுக்களை எடுப்பதில்லை! அது தான் பிரச்னையே! எல்லோருமே தங்களிடம் உள்ள ஐநூறு, ஆயிரம் நோட்டுக்களை மற்றவர்களிடம் தள்ளிவிட வேண்டும் என்றே நினைக்கின்றனர். ஏன் அவங்களே போய் மாத்திக்கக் கூடாதா?  வங்கிக் கணக்கு இருந்தால் தான் மாத்தலாம் என்றெல்லாம் இல்லையே!


இதிலே வேடிக்கை என்னன்னா ஆட்டோக்காரரும் எங்களுக்குப் பால் ஊற்றும் இளைஞரும் இதைப் பாராட்டி வரவேற்கிறார்கள் என்பதே! கிட்டத்தட்ட ஒரு பேட்டியே எடுத்தோம். அவங்க சொன்ன சிலவற்றைப் பொதுவில் பகிரமுடியாது! ஆனாலும் அவங்க வரை தெளிவாகவே இருந்தாங்க. இது நல்லது என்று சொல்கிறார்கள்.  பொதுவா நாம ஏழை மக்கள் என்றும் ஏழைகள் தான், அவங்க கிட்டே ஐநூறும் ஆயிரமும் எப்படி இருக்கும்னு சொல்வோம். அதே இந்த மாதிரி வந்துட்டா ஏழை மக்கள் ஐநூறையும் ஆயிரத்தையும் எப்படி மாத்துவாங்க, அவங்களுக்குக் கஷ்டம்னு சொல்லுவோம். ஏழை மக்களிடம் பணமே இருக்காது என்று சொல்லிக் கொண்டிருந்த நாம் இப்போ அவங்க ஐநூறையும், ஆயிரத்தையும் எப்படி மாத்துவாங்க என்று கேட்பது முரண்பாடாக இல்லையா?  என்ன, கொஞ்சம் வரிசையில் நின்று தான் மாற்ற வேண்டும்.  நாம் எல்லாவற்றிற்கும் வரிசையில் தான் நிற்கிறோம். இதுக்கும் நிற்பதில் என்ன வந்தது?

நாம ராகுல் காந்தி மாதிரிப் பெட்ரோலுக்குப் பணம் செலவழித்துக் காரில் வந்து மீடியாவுக்கு எதிரே போஸ் கொடுத்துக் கொண்டா பணம் போடுகிறோம்! அவங்கல்லாம் என்னிக்காவது வரிசையில் நின்றிருந்தார்களெனில் தெரிஞ்சிருக்கும். நாம் குழந்தைகளுக்குப் பள்ளியில் சேர்க்க விண்ணப்பம் வாங்கவே முதல் நாள் இரவிலிருந்து வரிசையில் நிற்போம். சினிமா டிக்கெட் வாங்க, அமெரிக்க விசா வாங்க நாள் கணக்காக நின்றவர்களைத் தெரியும், கோயில்களில் சுவாமி தரிசனத்துக்கு! ஆதார் அடையாள அட்டை பெற, வேலை வாய்ப்பு அலுவலகத்தில், சினிமா டிக்கெட் வாங்க, சமையல் எரிவாயு இணைப்புக்கு, மின்சார பில் கட்ட, டெலிஃபோன் பில் கட்ட, வீட்டு வரி கட்ட, வருமான வரி கட்ட! இன்னும் எத்தனை வேணும்? இதெல்லாம் வாரச் சம்பளக்காரங்களுக்கும், தினக்கூலிக்காரங்களுக்கும் பொருந்தாது என்கின்றனர்.   எத்தனை வாரச்சம்பளக்காரங்க சம்பளம் வாங்கியதும் டாஸ்மாக்குக்கும், சினிமாவுக்கும், ஓட்டலுக்கும் போறாங்க என்பதைச் சொல்ல முடியும்! தினக் கூலிக்காரங்க கூடப் போறாங்க! அவங்களோட பொழுது போக்கே இதானே! ஆகவே அவங்க கிட்டேயும் ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருக்கத் தான் செய்யும்.

ஏடிஎம் இயங்கலைனா அதுக்குக் காரணம் இருக்குனு என்பதை யாரும் புரிஞ்சுக்கலை. அவங்களே எதிர்பார்க்காத அளவுக்குப் புதிய நோட்டுக்களை இப்போதுள்ள ஏடிஎம் தொழில் நுட்பம் ஏற்க மறுக்கிறது. ஆகவே குறைந்த பட்ச அளவான நூறு ரூபாய்களை மட்டும் வைக்கிறாங்க. என்ன பிரச்னைன்னா ஏடிஎம்கள் இயங்காது என்பதை முன்கூட்டி அறிந்திருக்கவில்லை. பழைய நோட்டுகளை விட இப்போதைய 2,000 ரூபாய் நோட்டுகள் அளவில் சின்னது என்பதால் அதை ஏடிஎம் மிஷின்கள் ஏற்க மறுக்கின்றன. குறைந்த அளவிலான நூறு ரூபாய் நோட்டுக்கள் விரைவில் தீர்ந்துவிடுகின்றன. அதான் அனைவருக்கும் கிடைப்பதில்லை. மேலும் பணத்தை ஏடிஎம்மில் நிரப்புவது தனியார் ஒப்பந்ததாரர்கள். அவர்கள் ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு முறை வேண்டுமானால் ஒரு ஏடிஎம்மை நிரப்பலாம். குறையக் குறைய கிட்டே இருந்து நிரப்புவது கடினம். ஏனெனில் அதற்குத் தகுந்த ஆட்கள், காவல், பாதுகாப்பு போன்றவை அவர்களுக்குக் கிடைப்பது கடினம். மேலும் அவர்கள் ஏற்கெனவே 24X7 வேலை செய்கின்றனர். நகரில் ஒரு இடத்தில் மட்டுமா ஏடிஎம்? எத்தனை இருக்கின்றன!

உண்மையில் படித்த அறிவு ஜீவிகள் தான் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கிராமத்து ஏழை, எளிய ஜனங்கள் இல்லை! ஏடிஎம்கள் இயங்க இன்னும் மூன்று வார காலம் ஆகலாம் என்று அரசு அறிவிப்புச் செய்து விட்டது. இதையும் கிண்டல் செய்கின்றனர். மூன்று வாரம் கழித்து மூன்று மாதம் என்றும் மூன்று மாதம் கழித்து மூன்று வருடம் என்றும் சொல்வார்களாம்.  எதிலும் நம்பிக்கை வேண்டும். பொதுவாகத் தெரிவது என்னவெனில் இந்த வரிசையில் நிற்கும் மக்கள் அடித்துப் பிடித்துக் கொண்டெல்லாம் செல்லவில்லை. ஒழுங்காகவே செல்கின்றனர். பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தவில்லை. மக்கள் கட்டுப்பாட்டுடனேயே இருக்கின்றனர். ஆனால் எதிர்ப்பவர்களின் கருத்து மக்கள் மனதைப் பாதிக்காமல் இருக்க வேண்டும்.

முக்கியமாக வங்கிப் பணியாளர்களைக் குறித்துச் சொல்லியே ஆகவேண்டும். அனைவரும் இரவு, பகல் பாராமல் ஒத்துழைப்பதோடு மக்களிடம் கடுமையாகவும் நடந்து கொண்டதாக எங்கிருந்தும் புகார் வரவில்லை. ஆங்காங்கே ஓரிருவர் சொல்லி இருக்கலாமோ தெரியவில்லை. பொதுவாக அனைவரும் மக்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றனர். அரசுக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கின்றனர். இதற்கு வங்கிப் பணியாளர்களைப் பாராட்டியே ஆகணும். இதுக்கும் ஒரு சிலர் இப்போத் தானே வேலையே செய்யறாங்க என்று கேலி செய்கின்றனர். அவங்க வேலை செய்யாமல் பணப் பரிவர்த்தனை எப்படி நடந்தது என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. அன்றாட வரவு, செலவுக்கணக்கை ஒழுங்காகக் காட்டாமல் எந்த வங்கிப் பணியாளரும் தன் இடத்திலிருந்து வெளியேற முடியாது. அவங்க சொல்லும் கணக்குகள் பொது மேலாளர் மற்றும் தலைமைக்காசாளர் ஆகியோரின் கணக்குகளோடு ஒத்து இருந்தாக வேண்டும்! பல சமயங்களிலும் இரவு எட்டு, ஒன்பது மணி கூட ஆகும் வீட்டுக்குத் திரும்ப! 

28 comments:

 1. நோட்டுப் பிரச்சனை போய்டும்...
  சில்லறை பஞ்சம் தலைய பிரிச்சுப்போட்டு
  தாண்டவம் ஆடும் ....

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், நிலைமை விரைவில் சீரடையப் பிரார்த்திப்போம்.

   Delete
 2. மோடியின் எந்த செயலுக்கும் ஆதரவு .

  ReplyDelete
  Replies
  1. நல்லனவெல்லாம் பாராட்டத் தக்கதே!

   Delete
 3. புரியாதவர்களுக்குச் சொல்லிப் பயனில்லை. புரிந்தவர்களுக்குச் சொல்லத் தேவை இல்லை! வங்கிப் பணியாளர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். புலம்பல் இல்லை, எரிச்சல் காட்டவில்லை....

  ReplyDelete
  Replies
  1. உண்மை, இந்த அவசர நேரத்தில் வங்கிப் பணியாளர்களின் ஒத்துழைப்பும் காவல் துறையின் ஒத்துழைப்பும் பாராட்டத் தக்கது. அனைவருக்கும் மாற்றம் தேவைப் பட்டிருக்கிறது.

   Delete
 4. அருமையாக, தெளிவாக, இப்படி எனக்கு எழுத தெரியவில்லையே. என் செய்வேன்? பராபரமே! வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா, தங்கள் பாராட்டு கூச்சத்தையும் தருகிறது, ஊக்கத்தையும் தருகிறது. மீண்டும் நன்றி.

   Delete
 5. 'நல்லா எழுதியிருக்கீங்க. வங்கி ஊழியர்கள் நல்லா வேலை செய்து உதவுவதாகத்தான் செய்தி. (வங்கி ஊழியர் சங்கத் தலைவர் பேச்சுதான் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. எரிச்சலாகவும் இருந்தது).

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், ஊழியர் சங்கத் தலைவர் பேச்சைப் பெரிது பண்ண வேண்டாம்னு தான் அது குறித்து எதுவும் சொல்லலை! :) அவர் கருத்து அவருக்கு!

   Delete
 6. நல்ல விளக்கம் அதானே நாம் எதற்குதான் வரிசையில் நிற்கவில்லை ஓட்டுப்போடுவதற்குகூட வரிசையில் நிற்கிறோம் இன்றைய இன்னல் நாளைய பலனைத்தரும் என்று நம்புவோம்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், எல்லாவற்றிற்கும் வரிசையில் நிற்கத் தான் வேண்டி இருக்கிறது. அரசு மருத்துவமனை போனால் வெளி நோயாளிகளாக மருத்துவம் செய்து கொள்வோர் வரிசையில் காத்திருந்து தான் காட்டியாக வேண்டும். இதை மட்டும் பெரிது படுத்தறாங்க! :(

   Delete
 7. Shashi Tharoor ‏@ShashiTharoor 13m13 minutes ago

  Our government wants to move towards a cashless economy. Great start: No cash in ATMs. No cash in banks. No cash with people. Successful PM!
  0 replies 202 retweets 178 likes

  Tweet by Dr. Sasi Tharoor M.P

  ReplyDelete
  Replies
  1. அவரிடமிருந்து வேறே எதை எதிர்பார்க்க முடியும்? புதிய ஐநூறு ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வந்துவிட்டதைச் சொன்னாரா? சென்னை, அம்பத்தூர் வங்கிகளில் பணம் நாலாயிரம் மாற்றுவதற்கு இரண்டாயிரம் ஒரு நோட்டும் பாக்கிக்குச் சில்லறையாக நூறு ரூபாய் நோட்டுகளும் கொடுக்கிறார்கள் என எங்கள் உறவினர் தொலைபேசியில் பேசுகையில் சொன்னார். ஆனால் எங்களுக்கு இரண்டு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் தான் கிடைத்தன! மருந்துக்கடையில் டெபிட் கார்டில் மருந்து வாங்கிட்டோம். மளிகைக்கடைக்காரர் இரண்டாயிரம் வாங்கிக் கொண்டார். :)

   Delete
 8. http://www.vikatan.com/news/coverstory/72237-rs-500-rs-1000-ban-common-man-is-affected-more.art

  ReplyDelete
  Replies
  1. விகடன் என்னும் பெயரே இப்போதெல்லாம் பிடிக்கிறதில்லை. படிப்பதை நிறுத்தியே பல ஆண்டுகள் ஆகின்றன. என்றாலும் உங்கள் சுட்டிக்குப் போய்ப் பார்க்கிறேன்.

   Delete
 9. வங்கிப் பணியாளர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஏடி.எம்.கள் இயங்கினால் இந்த பிரச்சனை ஓரளவுக்கு தீர்ந்து போகும். நல்ல திட்டம். கொஞ்சம் அவசரப்படாமல் முன்கூட்டி ஏற்பாடுகள் செய்திருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும். ஏழைக் கூலித் தொழிலாளிகள் இதை வரவேற்கவே செய்கிறார்கள் என்பது உண்மை.நன்றி!

  ReplyDelete
  Replies
  1. உண்மை சுரேஷ், எங்க குடியிருப்பு வளாகத்தின் பாதுகாவலர்கள் மூவர், பெண் ஊழியர்கள் மூவர். மூவரும் இதனால் என்ன என்று தான் சொல்கின்றனர். பாதிப்பு இருப்பதாகச் சொல்லவில்லை. ஆனால் இங்கே ஏடிஎம்கள் இயங்கவே இல்லை! :( வங்கியில் பணம் கொடுக்கிறார்கள்.

   Delete
  2. முன்னேற்பாடுகள் என்றால் கீதா சகோ சொல்லியிருப்பது போல் சில்லறை நோட்டுகள் வங்கிகளில் கூடுதலாக இருந்திருக்கலாம். ஆனால் அப்படி முன்னெற்பாடுகள் செய்து என்றால் வெளியில் லீக் ஆகிவிட்டால் இந்த அளவிற்கு பதுங்கியவை வெளியில் வந்திருக்காது இல்லையா...எல்லாம் நன்மைக்கே

   Delete
  3. முன்னேற்பாடுகள் என்றால் கீதா சகோ சொல்லியிருப்பது போல் சில்லறை நோட்டுகள் வங்கிகளில் கூடுதலாக இருந்திருக்கலாம். ஆனால் அப்படி முன்னெற்பாடுகள் செய்து என்றால் வெளியில் லீக் ஆகிவிட்டால் இந்த அளவிற்கு பதுங்கியவை வெளியில் வந்திருக்காது இல்லையா...எல்லாம் நன்மைக்கே

   Delete
 10. பால் வாங்கக் காசில்லை. காய் வாங்கக் காசில்லை வங்கியில் இருப்பு இருந்தாலும் உபயோகமில்லை.இருந்த சில்லரை எல்லாம் செலவாய்விட்டது இன்னும் எத்தனை நாட்களோ. இப்போது இருக்கும் நிலையில் நிலைமை சீரடைய நாட்கள் ஆகும் போல் இருக்கிறது பண மில்லாமல் என்னதான் செய்ய முடியும்

  ReplyDelete
  Replies
  1. பாலெல்ல்லாம் நாங்க மாதாந்திரக் கணக்குக்குத் தான் வாங்குவதால் பிரச்னை இல்லை. மாதம் முடியும்போது பணம் கொடுத்தால் போதும். காய்களும் ஒரு வாரத்துக்குத் தேவையானதை முன் கூட்டியே வாங்கி விடுவோம். ஆகவே பிரச்னை இல்லை. மிஞ்சிப் போனால் காய்கள் வாங்க இரண்டு பேருக்கு நூறு ரூபாய்க்குள் ஆகும். அதுக்குப் பணம் இருக்கு! :)))))

   Delete
 11. புதிய கண்ணோட்டத்தில் உங்க பதிவு...அருமை..

  ReplyDelete
 12. இந்த நிலைமையையும் ஒரு அனுபவமாக எதிர்நோக்கினால், இதுவும் கடந்துவிடும். பொதுவா நாம, நம்ம தலைவர்களை நம்பணும். மதிக்கணும். அவர்களுக்கு, நமக்குத் தெரியாத, தெரியக்கூடாத ஏகப்பட்ட தகவல்கள் கிடைக்கும். அதை வைத்துத்தானே அவர்கள் ஒரு முடிவுக்கு வருவார்கள். அவர்கள் அடிமுட்டாள்களாக இருந்து, நாம் அவரை விட அதிக புத்திசாலிகளாக இருந்தால், நாமதானே பிரதம மந்திரியாக இருக்கவேண்டும். எத்தனை ஆலோசகர்கள், எத்தனை அறிவாளிகள் அவரைச் சுற்றி இருப்பார்கள். சில சமயம் சில முடிவுகள் தவறாக ஆகிவிடலாம். ஆனால், நோக்கத்தில் பழுது இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. இதுவும் ஓர் அனுபவம் தான். நோக்கத்தில் பழுது ஏதும் இல்லை. பிரச்னை எல்லாம் பணத்தை லட்சக்கணக்கில் வைத்துக் கொண்டு மாற்ற முடியாதவர்களுக்குத் தான்! :) நமக்கு அந்தக் கவலை இல்லை!

   Delete
 13. வித்தியாசமான கண்ணோட்டத்தில் அனைவருக்கும் பயன் தரும் பதிவு.

  ReplyDelete
 14. நாட்டுநடப்பை எட்ட இருந்து கவனித்து வரும் நம்மைப்போன்ற சாமானியர்களைப் பொறுத்தவரை, முதலைகளாக சித்தரிக்கப்படும்
  பெரும் கள்ளப்பண பேர்வழிகள் ,பெருவாரியாக
  1. அரசியல்வாதிகள்
  2. சினிமா துறையைச்சேர்ந்த பிரபலங்கள் --
  நடிகர்/நடிகைகளும் பிற படத்தயாரிப்பு /விநியோகம் துறைகளில்
  பொருளீட்டுபவர்களும்
  .3.மற்றும் பெரும் தனக்காரர்களான வாணிகம் செய்பவர்கள் --வாணிகம் includes general business ,big or small , Hospitals ,
  educational institutions ,AND Temples (!), and Religious Trusts ..

  இவர்கள் எல்லோரும் திருடனுக்குத் தேள் கொட்டின நிலையில் தானிருக்கிறார்கள் ..இவர்கள் நேராக எதிர்க்க வில்லையானாலும்
  இவர்களுடைய பிரதிநிதிகள் தான் பாராளுமன்றத்தில் கூக்குரலிட்டுக்கொண்டிருக்கிறார்கள் ! இந்தக் கூத்தில் கம்யூனிஸ்ட்டுகளும் AAP -யம் சேர்ந்து கொண்டிருப்பது தான்
  விசித்திரம் ..

  மாலி

  ReplyDelete