அரங்கனுக்குச் சேவை செய்யும் ஆண்டாளம்மாவைப் பற்றி ஏகப்பட்ட வாத, விவாதங்கள் ஒரு புறம் இருந்தாலும் ஆண்டாள் அரங்கனின் சேவையில் குறை வைப்பதில்லை. இந்தத் துலா மாசம் ஆரம்பிச்சதில் இருந்து தினமும் காவிரிக்கு அம்மாமண்டபம் படித்துறைக்கு வந்து அரங்கனின் அபிஷேஹத்துக்குக் காவிரி நீரைத் தன் முதுகில் சுமந்து சென்று கொடுத்து வருகிறாள். இந்த வருடமும் வந்து கொண்டிருக்கிறாள். சென்ற வருடம் கும்பாபிஷேஹம் நடைபெற இருந்ததால் இது நடைபெறவில்லை. இந்த வருடம் தினம் தினம் போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைத்தும் போக முடியவில்லை. காலை வேளையில் வீட்டின் வேலைகள் அடுத்தடுத்து வந்து மறக்கடித்து விடும். இப்போ இரண்டு நாட்களாகத் தான் நினைவில் வந்து நேற்றுப் போனால் ஆண்டாள் வேகமாகச் சென்று விட்டாள். இன்னிக்குப் போனால் ஆண்டாளே வரலை. :( யாரோ இறந்து விட்டதால் இன்னிக்கு ஆண்டாள் வருவதை நிறுத்தி விட்டதாகத் தெரிந்தது. நம் அதிர்ஷ்டம் அவ்வளவு தான் என்று நினைத்துக் கொண்டு முன்னர் போட்ட படத்தைப் பார்த்து மனதை ஆறுதல் படுத்திக் கொண்டேன். இது 2014 ஆம் ஆண்டு எடுத்த படம்.
மற்றபடி கோயிலில் திருவடி சேவை ஆரம்பித்து விட்டது. வியாழன் அன்று சென்று பார்த்து விட்டு வந்தோம். கூட்டம் இருந்தாலும் 50 ரூ. சீட்டு எடுத்துச் சென்றதில் கொஞ்சம் சீக்கிரம் தரிசனம் கிடைத்தது. யாகபேரரையும் திருவடி தரிசனம் பார்க்கையில் பார்த்துக் கொண்டேன். நம்பெருமாளுக்கும் அவருக்கும் நல்ல வித்தியாசம் தெரிகிறது. யாகபேரர் கொஞ்சம் ஒல்லியாக உயரமாக நீண்ட முகத்துடன் காணப்படுகிறார். நம்பெருமாள் அழகிய மணவாளர் தான்! குறுஞ்சிரிப்பு, குவிந்த மோவாய், குறும்புடன் பார்க்கும் கண்கள் என்று பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத வடிவம். இவரைக் கொஞ்ச நாட்களாய்ப் பார்க்கும் நமக்கே இப்படி இருக்கே. இவருக்குச் சேவை செய்தவர்கள் இவரைப் பிரிந்தபோது எப்படித் துடித்திருப்பார்கள் என்பதெல்லாம் இப்போது புரிகிறது! இவரும் எந்த மலைக்காடுகளிலோ ஒளிந்து வாழ்ந்திருக்கிறார்! அதன் வடுக்கள் அவர் முகத்தில் இப்போதும் காணலாம்,
நல்லதொரு பதிவு.
ReplyDeleteஹிஹிஹி, வேறே ஒண்ணும் சொல்றதுக்கு இல்லையே! :)
Deleteஇன்னும் இரண்டு நாள் பொறுத்திருந்து முயற்சியெடுத்து புதுப்படம் போட்டிருக்கக்கூடாதா? ஒருவாரத்துக்குள் இன்னொரு படம் போடுங்கள்.
ReplyDeleteசாஸ்திரம் மூலவரும் உற்சவரும் வெறும் கல்லோ சிற்பமோ அல்ல. அவைகள் உயிர்ப்புடன் உள்ள கடவுளர்கள் என்கின்றன. அப்படி இருக்கும்போது, நம்முடைய வெறும் பொருட்களுக்கே சொந்தம் கொண்டாடும் மனது, விக்ரகங்களின்பால் அதீதப் ப்ரேமை கொள்வதில் வியப்பேது?
ஆமாம், எனக்கு எப்போவுமே நம்பெருமாளைப் பார்க்கையில் எல்லாம் அவர் என்னுடன் ஏதோ பேசுவது போல் தோன்றும்.
Deleteஅப்புறம் நாளைக்குப் போய்ப் பார்க்கணும். இன்னும் ஒரு வாரம் தான் ஆண்டாள் காவிரியிலிருந்து நீர் எடுத்து வருவது! துலா மாசம் முடிஞ்சு கார்த்திகை பிறந்துடுச்சுன்னா ஆண்டாள் மீண்டும் வருவது சித்திரா பௌர்ணமிக்குத் தான். நடுவிலே ஒரு கருடசேவைக்கு கருட மண்டபத்துக்கு வருவாங்க. இங்கே அம்மா மண்டபம் வர மாட்டாங்க!
ஆண்டாள்தானே? மைலாப்பூர் போய் பாத்துட்டு வந்துடுங்க!
ReplyDeleteவந்திருக்காங்களே! நீங்க பார்த்துட்டீங்களோ? அதான்! எனக்குப் போன வருஷம் வந்தப்போவே போக முடியலை! :(
DeleteVatha vivatham? ????
ReplyDeleteஅது தனியாய்த் தான் போட வேண்டி வரும்! :) நவராத்திரி சமயம் நடந்தவை! :)))))
Deleteஆண்டாள்.... பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது....
ReplyDeleteதில்லி திரும்பியாச்சா? ஆண்டாளை தினம் மாலை ஐந்து மணிக்கெல்லாம் தெற்கு வாசலில் பார்க்கலாமே! :)
Deleteயானையைப்பார்ப்பதே மனதுக்குப் பிடித்தமான விஷயம் அதுவும் அரங்கன் கோவில் யானை என்றால் ஏதோ பந்தம் தோன்றுவது இயல்புதானே
ReplyDeleteஆமாம், இந்த யானை ஶ்ரீரங்கத்துக்கே செல்லம்!
Deleteயானை பழைய படம் என்று பார்த்ததுமே தெரிந்து கொண்டேன். பெருமாள் கோவில் தவிர வேறெங்கும் (கோவில்) செல்வதில்லையா?
ReplyDeleteஅது என்னமோ தெரியலை, இந்தத் தரம் தினம் காலையிலே போகறதுக்கு நினைவிருக்காது. ஆறரைக்கு அப்புறமா அடடா, பார்க்கலையேனு தோணும்! நாளைக்குப் பார்ப்போம் முடியுதானு! :(
Deleteஒரு பிள்ளையாரைப் புதுசாப் பிடிச்சிருக்கோம். சமயத்தில் அங்கேயும்போவோம். திருவானைக்கா கொஞ்சம் தூரம் என்பதால் அடிக்கடி போக முடியறதில்லை. இது மத்தியானம் மூணு மணிக்குக் கிளம்பிப் போனா நாலரைக்கு வீட்டுக்கு வந்துடலாம். :)))) அதோட நம்ம பெரிய ரங்குவைப் பார்த்தாலே நல்லது நடக்கும்!
Deleteஆண்டாளம்மாளின் புகைப்படம் ஸூப்பர்
ReplyDeleteஇரண்டு வருஷம் முன்னே எடுத்தது கில்லர்ஜி! :)
Deleteஉங்கள் பதிவுகளே பக்தியுடனானது. அதுவே கோயில் தரிசனம்தான். அன்புடன்
ReplyDeleteநன்றி அம்மா. நமஸ்காரங்கள்.
Deleteஉண்மைதான், அரங்கனை அனுபவித்தவர்களால் மற்றொரு வடிவத்தை ஏற்று கொள்வதோ, அனுபவிப்பதோ கொஞ்சம் கஷ்டம்தான்! அண்டர்கோன் மணி அரங்கனை கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாதே! என்பது 100% உண்மை.(சொந்த அனுபவம்). அது சரி, முக நூலில் கமெண்ட் எழுதினால் வராதா? இரெண்டாவது நபராக கமெண்ட் பண்ணியிருந்தேன், பப்லிஷ் ஆகவில்லை.
ReplyDeleteமுகநூலில் உங்கள் கமென்ட் எதுவும் காணோம். அதோடு அங்கே இருந்து இந்தப் பதிவுக்குக் கமென்ட் கொடுக்கும்படியான ஆப்ஷன் நான் தேர்ந்தெடுக்கவில்லை. முகநூலில் பார்த்தீர்களானால் அங்கேயே தான் கொடுத்திருக்கணும். அங்கே எதுவும் இல்லை! :(
Delete