எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, November 25, 2016

மனிதரில் எத்தனை முகம்!

கடந்த சில மாதங்களாகக் கிடைத்த அனுபவங்களில் இருந்து மனிதரின் முகங்கள் எப்படி எல்லாம் மாறும் என்பதை இப்போது தான் நன்கு புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன் என்று சொல்லலாம். காரியம் ஆகணும்னா காலைப்பிடி என்பது வெறும் சொலவடை மட்டுமல்ல, உண்மையும் அதுதான் என்பது புரிந்தது. அவங்க காரியம் ஆகவேண்டி எங்கள் காலைப் பிடித்தவர்கள் அனைவரும் அந்த வேலை தேவையில்லை என்றானதும் எங்களை நடத்திய முறை வியப்புக்குரியதாக ஆகி விட்டது. நம் அழைப்புகளுக்கு எவ்விதமான பதிலும் இருக்காது! கண்டுகொள்ளவே மாட்டாங்க! அவங்களுக்குத் தேவைனா நம்மைக் கொஞ்சமும் வெட்கப்படாமல் தொடர்பு கொண்டு தேவையைச் சொல்வாங்க! இது தான் கலியுகமோ என்றெல்லாம் தோன்றியது.


ஒரு வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை சீரடைந்து வருகிறது. என்றாலும் இன்னமும் பூரணமாக ஆகவில்லை. முக்கியமான பிரச்னைகள் தீர்க்கப்பட்டு விட்டன.  கடந்த சில மாதங்களாகவே போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கை! அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு! கவலை, விசாரங்கள்! தூக்கமில்லா இரவுகள்! ஆனால் இந்த மோசமான அனுபவங்கள் மூலம் மனிதர்களைப் பற்றிய அறிவு மேம்பட்டிருக்கிறது. கஷ்டமான சமயங்களில் மனிதர்கள் நடந்து கொள்ளும் விதமும், நம்மை நடத்தும் விதமும் புரிய வந்திருக்கிறது.

நாம் எந்தக் காரியத்துக்காக ஒருத்தரைத் தொடர்பு கொள்கிறோமோ அந்த நபர் மனம் இருந்தால் தான் நம் தொடர்புக்கு எதிர்வினையாற்றுவார். இல்லைனா இல்லை தான்! ஒரு நாள் இரண்டு நாள் இல்லை! நாள் கணக்கில், மாசக்கணக்கில்!  அதே நபர் நம்மிடம் அவர் வேலைக்குத் தொடர்பு கொள்வது எனில் கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் முன்னால் நடந்து கொண்டதை மறந்துவிட்டு அதிகாரமாக நம்மிடம் அவர் வேலையை முடித்துக் கொள்கிறார். ஆக மற்றவர் உணர்வுகளோ அவங்களோட அவசரமோ இங்கே யாருக்கும் முக்கியம் இல்லை! அவங்க அவங்களோட நிலைமையை வைச்சு அதற்கேற்றபடி தான் நடந்துக்கறாங்க. 

அதே போல் நம்மிடமிருந்து வாங்கிக்க வேண்டியதை ஒரேயடியாக வாங்கிக் கொள்பவர்கள் திரும்பக் கொடுக்கையில் அப்படித் தருவதில்லை. ஏதோ நாம் தான் அவங்களிடம் அவங்க பொருளைக் கேட்கிறோம் என்பது போல் நடந்து கொண்டு அலைக்கழித்துத் தான் கொடுக்கிறார்கள். அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக! நாம கேட்டாலும் ஏதோ அவங்க கிட்டே அவங்களோட சொந்தப் பொருளைக் கேட்கிறாப்போல் பேச்சு வேறே! இப்போத் தர முடியாதுனா என்ன பண்ணுவீங்க என்று கிண்டல், கேலி! இத்தனைக்கும் நம் பொருளை,  நமக்குச் சொந்தமானதைத் தான் நாம் கேட்கிறோம். அதுக்கே இப்படி!  சுயநலம் என்பது அதிக அளவில் மனிதரைப் பிடித்து ஆட்டுகிறது என்பதும் புரிந்தது. இது மட்டுமா?

 இன்னும் சிலர் வேறே மாதிரி! எப்போவும் அவங்களைச் சுற்றியே நாம் வரணும், அவங்க தான் மையப் பொருளாக இருக்கணும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டு எல்லாவற்றிற்கும் தானாக வலுவில் வந்து நம்மை எதையும் செய்யவிடாமலோ யோசிக்க விடாமலோ தடுப்பார்கள்.  எவரையும் கலந்து ஆலோசிக்காமல்  தன்னுடைய சொந்த நலனுக்காகச் செய்து கொண்ட ஏற்பாடுகளைச் சூழ்நிலை காரணமாகத் தனக்கு ஏற்றபடி மாற்றிக் கொண்டு தன்னை ஒரு தியாகியாகக் காட்டிக் கொள்ளுகிறார்கள், இத்தகைய  மனிதர்களைப் பார்த்தாலும் சிரிப்புத் தான் வருகிறது.  உழைப்பே இல்லாமல் பெயர் வாங்கிக் கொண்டு இருப்பதையும் பார்த்தாகி விட்டது!  நம் உழைப்பு எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது! 

என்றாலும் கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்கும் ஒரு சில சம்பவங்கள், நிகழ்ச்சிகள் மூலம் நம்பிக்கை என்னமோ குறையவே இல்லை! மொத்தத்தில் இதுவும் கடந்து போகும்!  எல்லோரும் நான் என்னுடைய அனுபவங்களையே எழுதுவதாகச் சொல்கிறார்கள், இப்படியும் சிலர்! :) ஆனால் நான் என்னோட அனுபவத்திலிருந்து கற்றவற்றைத் தானே பகிர முடியும்? மற்றவங்க அனுபவம் வேறாக இருக்கும் இல்லையா! அதை அவங்க சொல்லித் தான் நான் தெரிஞ்சுக்க முடியும்! ஒரே விஷயத்தில் அவங்க அனுபவம் வேறே, என்னோட அனுபவம் வேறேனு தான் இருக்கும்.

உதாரணமாக இந்த ரூபாய் நோட்டுக்கள் மாற்றுவதையே எடுத்துக்கோங்க. நாங்க அறிவிப்பு வந்த மூன்றாம் நாள் வியாழனன்று வங்கியில் சேமிப்புக்கணக்கில் சேர்த்துவிட்டோம். சில்லறை நோட்டுக்கள் கைவசம் கொஞ்சம் இருப்பதால் பிரச்னை இல்லை. ஆனாலும் மருந்துகள் வாங்கவோ, காய்கறிகள் வாங்கவோ டெபிட் கார்ட் தான் பயன்படுத்துகிறோம். குறைந்த பட்சமாக 150 ரூபாய் வரைக்கும் நாம் வாங்கும் பொருள் இருக்கணும் என்கிறார்கள். ஆகவே இது வசதியாகவும் இருக்கிறது. ஆனாலும் சிலருக்கு இது கொஞ்சம் பிரச்னையாகவும் கஷ்டமாகவும் இருக்கிறது. பால் வாங்கக் காசு இல்லை என்று சிலர் புலம்பல்! புலம்புபவர்கள் எல்லாம் நல்ல வேவலையில் இருப்பவர்கள். அவங்களால் மாதாமாதம் பாலுக்கு முன் பணம் கட்டி வாங்க முடியும். அல்லது மாதம் முடிந்ததும் பால் பணத்தைக் கொடுத்துத் தீர்க்க முடியும்! அப்படியானவங்க தான் அதிகம் புலம்பல்!

ஆனால் மும்பையிலும் சரி, இங்கே சென்னையிலும் சரி, ஶ்ரீரங்கத்திலும் சரி ஆட்டோ ஓட்டுநர்கள் சில்லறைத் தட்டுப்பாட்டால் சிரமப்படுவதாகத் தெரியவில்லை.  சென்னையிலாவது ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு சிலர் பிரச்னை என்றனர். மும்பையில் அப்படி இல்லை. சில்லறை கிடைப்பதோடு அங்கே வங்கிகளிலும் பணம் மாற்றுவதற்கான கூட்டம் அதிகம் இல்லை. அதோடு இங்கே ஶ்ரீரங்கத்திற்கு சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் அதிகம் வருகிறது. நேற்றுத் திருச்சி போயிருந்தப்போ கடைத்தெருவில் எப்போதும் போல் கூட்டம். மக்கள் யாரும் எவ்விதக் கஷ்டமும் படுவதாகத் தெரியவில்லை. எப்போதும் போல் நடைபாதை வியாபாரிகள் கடை வைத்திருக்கின்றனர். வியாபாரமும் நடக்கிறது.

இத்தனைக்கும் அரசு பலவிதமான சலுகைகளைக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது.  இதனால் நாம் கண்ட முக்கியமான ஆதாயம் என்னவெனில் காஷ்மீரில் கல்லெறி குறைந்து சகஜ வாழ்க்கை ஆரம்பித்திருப்பதோடு அல்லாமல் காஷ்மீர் முஸ்லிம் ஒருவர் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதி இருப்பதும் தான். இதற்காகவேனும் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது நன்மையையே தந்திருக்கிறது எனலாம். 

32 comments:

  1. ஒருவரது அனுபவங்கள் மற்றவர்களுக்கும் பாடமாக அமையலாம். நானும்படித்துக் கொள்கிறேன். எல்லாம் நன்மைக்கே.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்ம், நான் விரிவாக எழுதலை! :) என்றாலும் அனைவருக்குமே பாடமாகத் தான் இருக்கும்.

      Delete
  2. :-(( இதுக்குத்தான் எதிர்பார்ப்பு இல்லாம இருக்கணும் என்கிறது. கொஞ்சம் கஷ்டம்தான்., இருந்தாலும்....

    ReplyDelete
    Replies
    1. தம்பி, அநாவசியமான எதிர்பார்ப்பெல்லாம் இல்லை! ஒருத்தருக்கொருத்தர் போட்டுக்கொண்ட ஒப்பந்தப்படி நடக்கணும்! அது போல் நடக்காததால் விளைந்த ஏமாற்றம். மற்றபடி வேலை நடக்காததால் நஷ்டம் ஒன்றும் இல்லை. :)

      Delete
  3. உம்.... விரல்ல மை வெக்கப்போறேன்னு சொன்னதும் கூட்டம் காணாமப்போயிடுத்து. ஏன்னு யோசிச்சு பாருங்க!

    ReplyDelete
    Replies
    1. அதையும் கீழ்த்தட்டு மக்கள் பெரும்பான்மையாக வரவேற்கிறார்கள். இந்த அறிவிப்பு வந்த மறுநாளே திருச்சி கடைத்தெருவில் சில்லறை வியாபாரிகள் வியாபாரம் சுறுசுறுப்பாக நடந்ததைப் பார்த்தோம். அப்போ அவசரத்தில் இருந்ததால் படம் எடுத்துப் போட முடியவில்லை. :(

      Delete
  4. சாமானியர்களுக்கு பாதிப்பு என்று இடது சாரிகள் புலம்புகிறார்கள்! நான் சந்தித்த சாமானியர்களோ சரியான நடவடிக்கை என்று மோடியை புகழ்கிறார்கள்! அது இருக்கட்டும் உங்கள் பிரச்சனைகளில் இருந்து சீக்கிரம் விடுபட இறைவனை வேண்டுகின்றேன்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், சுரேஷ், முக்கியமாகத் தீவிரவாதிகளுக்குச் சேமிப்பைச் செலவு செய்வது கஷ்டம் என்பதால் தீவிரவாதம் குறையும் என்கிறார்கள், பார்ப்போம். நல்லதே நடக்கட்டும்.

      Delete
  5. வரிக்கு வரி நீங்க எழுதியிருக்கறதெல்லாம் சத்தியம்!.. நான் இந்த மாதிரி நிறையப் பாத்திருக்கேன்!.. இங்க பெங்களூரில் தெரிந்த வரையில் அவ்வளவா இல்லன்னு தான் சொல்லணும்... குறிப்பா, நெருங்கின உறவு மனுஷங்களே இப்படியெல்லாம் நடந்துக்கும் போது ரொம்பவே கஷ்டமா இருக்கும்.. நம்ம வீட்டுக்கு வந்துட்டா நம்ம எல்லாத்தையும் விட்டுக் குடுக்கணும். ஆனா அவங்க வீட்டுக்கு போயிட்டா, என்னமோ அவங்க வீட்டுக்குள்ள நுழைய விட்டதுக்கே விழுந்து கும்பிடணுன்னு எதிர்பார்க்கறது.. ஆயிரம் உதவி நாம செஞ்சாலும், நமக்கு ஒண்ணுன்னு வரும் போது, 'எதிர்பார்த்து (நாம எதிர்பார்க்கலைங்கறது தெரிஞ்சாலும்) செய்யறது உதவி கிடையாது, அவங்கவங்க கஷ்டத்த அவங்கவங்களே பாத்துக்கணும்!' அப்படின்னு நாம கேக்காமலே விளக்கம் குடுத்துட்டுப் போயிட்டே இருப்பாங்க..

    என் அனுபவத்துல, அக்கம்பக்கத்துக்காரங்க, நல்ல நண்பர்கள் சிலர், இவங்களால தான் வாழ்ந்திட்டிருக்கேன்!..

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்ம் சொந்தத்திலும் இப்படி உண்டு என்றாலும் இப்போது ஏற்பட்ட அனுபவங்கள் எல்லாம் எங்கள் பையர் வயதுள்ளவர்களிடமிருந்து பெற்றவை! சொந்தமெல்லாம் இல்லை! :) தங்கள் காரியத்திற்காக எப்படி எல்லாம் நடந்துக்கறாங்க என்று பார்த்து நொந்து போயிட்டோம்.

      Delete
    2. மற்றபடி கஷ்டங்களை எதிர்கொள்வது பிரச்னையே அல்ல. நான் சொல்ல வந்ததைச் சரியாச் சொல்லலைனு நினைக்கிறேன். நாங்கள் நடத்தப்பட்ட விதம்! ஏதோ பிச்சைக்காரர்கள் போலவும் அவங்களோட தயவிலே வாழ்வது போலவும் உருவாக்கப் பட்டோம்! அதான்!

      Delete
  6. மனிதர்கள் பல விதம்...... எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பல சமயங்களில் சந்தர்ப்பவாதிகளாகத் தான் இருக்கிறார்கள்.... நானும் இப்படி நிறைய அடிபட்டிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம் ஏற்பட்டிருக்கும். நன்றி.

      Delete
  7. கீதா மேடம்... உலகமே நீங்கள் எழுதியுள்ளதுபோல்தான். ஒவ்வொரு நாளும் நமக்குக் கற்றுக்கொள்ளும் நாளே. பிரசவ வைராக்யம்.. மயான வைராக்யம் இரண்டும் உடனே மறந்துவிடக் கூடியவைதான். தன்னலமுள்ளவர்களால்தான் உலகம் நிரம்பியுள்ளது. நமக்கு மறதி என்ற ஒன்றைக் கொடுத்துள்ளது நமது நன்மைக்குத்தான்.

    நாங்கள்லாம் 500/1000 ரூ தடையை வரவேற்கிறோம் என்றாலும் ஊரில் உள்ள சாதாரண, பாமர மக்கள் பாதிக்கப் படுகிறார்களா என்பது தெரிவதில்லை. ரொம்பக் கஷ்டமில்லை என்று நீங்கள் சொல்லியிருப்பது நிறைவைத் தருகிறது.

    ReplyDelete
    Replies
    1. பொதுவாக சாமானிய மக்கள் அனைவரிடமும் 500 ரூபாய் நோட்டுக்கள் குறைவாகவே இருக்கின்றன. 500, ஆயிரம் நோட்டுக்கள் நடுத்தர, உயர் நடுத்தர மக்களிடமே அதிகம். அவர்கள் பெரும்பான்மையானவர்கள் வங்கிக்கணக்கில் இருக்கின்றனர். ஆகவே பிரச்னை இல்லை. கிராமங்களிலும் பெரிய அளவில் பாதிப்பில்லை. இங்கே திருச்சியைச் சுற்றி உள்ள கிராமங்களைப் பொறுத்தவரையிலும் பாதிப்பு இருப்பதாகச் சொல்லவில்லை. ஆனால் ஒரு சில மளிகைக்கடைக்காரர்கள் 2000 ரூபாய் நோட்டை வாங்கிக் கொண்டு சில்லறை கொடுக்க மறுத்தனர். இது எங்களுக்கே நடந்தது. 2000 ரூபாய்க்கும் பொருட்கள் வாங்கணும்னு சொன்னாங்க. அப்புறமா கார்ட் மூலம் பரிவர்த்தனை செய்தோம்.

      Delete
  8. மனிதர்கள் பழகும் முறை பார்த்து அலுப்பா இருக்கு. என்னமோ போங்க......ன்னுட்டு நாம் நம்ம வேலையைப் பார்த்துக்கிட்டு இருக்கணும்......

    ReplyDelete
    Replies
    1. அப்படித் தான் இருக்கணும். ஆனால் நம்ம பொருள் அவங்களிடம் இருக்கும்போது அதைத் திரும்ப வாங்கணும் இல்லையா? அதனால் தான் பிரச்னையே! என்றாலும் வெளியே வந்து விட்டோம். :) கடவுளுக்கு நன்றி.

      Delete
  9. புலம்புபவர்கள் எப்பவும் புலம்பத்தான் செய்வார்கள் கீதா.
    நன்மை செய்யாவிட்டலும் தீமை செய்யாமல் இருப்பவர்களே மேல்.
    உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களுக்காக வருந்துகிறேன். அதுவும் இவ்வளவு நல்ல மனிதர்களுக்கு
    சங்கடம் என்றால் இன்னும் வருத்தம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் இந்த 2016 மிகுந்த பிரச்னைகளுக்கிடையே கடந்து கொண்டிருக்கிறது. இனி வரும் நாட்கள் நல்லவையாக அமையப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை காப்பாற்றி வந்த ஆண்டவன் கைவிட மாட்டான்.

      Delete
  10. இறைவன் அருளால் வந்த துன்பங்களை வென்று விடுவீர்கள்.
    நாங்களும் பிரார்த்த்னை செய்து கொள்கிறோம்.
    எங்களுக்கும் சில துனபங்கள் ஏற்பட்டு இருக்கிறது, உங்களைப் போல் இறைவன் கைவிடமாட்டான் என்றுதான் நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. நல்வரவு கோமதி அரசு! இறைவன் கைவிடுவதில்லை என்பது உண்மையே!

      Delete
  11. ஏதேதோ சொல்லியிருக்கீங்க - அடப்பாவமே உங்களுக்கேவா இதல்லாம் அப்படின்னுதான் தோணறது.

    ReplyDelete
    Replies
    1. மதுரையம்பதி, பாவமெல்லாம் வேண்டாம். என்னோட தன்னம்பிக்கையைக் குலைக்கும் சொல் அது! மற்றபடி நான் என்ன உலக மஹா அதிகாரம் படைத்தவளா என்ன? "உங்களுக்கேவா இதெல்லாம்" என்பதற்கு! சாமானியத்திலும் சாமானியம்! :)

      Delete
  12. Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.


    Therefore do not ever think of what you have loaned to others, write them off as SBI did. Just deposit your 500 and 1000 notes in Bank and do not withdraw this deposit. MODI has given you a real opportunity to open your eyes and realise that money is not everything.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஜேகே அண்ணா! நான் யாருக்கெல்லாம் கடன் அதாவது நன்றிக்கடன் பட்டிருக்கேன் என்பதற்குக் கணக்கே இல்லை. அதை எல்லாம் தள்ளுபடி செய்யும் எண்ணமும் இல்லை. மற்றபடி யாருக்கும் பணக்கடன் பட்டதில்லை! ஒரு பைசாவாக இருந்தாலும் உடனடியாகத் தீர்த்துவிட்டுத் தான் மறுவேலை.

      மோதிக்கு வேறே வேலையே இல்லையா என்ன? என்னோட பிரச்னைகளை எல்லாம் அவர் தெரிஞ்சு வைச்சுட்டுத் தான் இந்த அறிவிப்பைச் செய்வதற்கு! :)))) நல்ல தமாஷ் போங்க! :))))) இதெல்லாம் அவர் அறிவிக்கும் முன்னரே கடந்த ஆறேழு மாதங்களாக எங்கள் பிரச்னைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. :)

      Delete
    2. //MODI has given you a real opportunity to open your eyes and realise that money is not everything.//

      I am saying about this 500 1000 business. Once powerful these notes have become worthless by MODI magic.

      paname ithuvum poyyada. verum kakithaththin mathippada.ippave 2000 nottum sellaatha kaasu polaththaan ellorudaiya kaiyilum appadiye thengi nirkirathu.

      Delete
    3. நன்றி மீள் வருகைக்கு!

      Delete
  13. அனுபவங்கள் பலவிதம் பதிவுகளில் எழுதி ஆற்றாமையை வெளிப்படுத்தலாம் அதுவே பிறருக்குப் படிப்பினையாகவும் இருக்கலாம் எதுவும் கடந்து போகும்

    ReplyDelete
    Replies
    1. பொதுவாக நம் அனுபவங்களிலிருந்து மற்றவர் தெரிந்து கொள்ள வேண்டியே எழுதி வருகிறேன். என்றாலும் பலருக்கும் அது ஒரு குறையாகத் தெரிகிறது. தன்னைச் சுற்றியே வட்டம் போட்டுக் கொண்டு பார்ப்பதாகச் சொல்கின்றனர். மத்தவங்க வாழ்க்கையிலே நான் எப்படிக் குறுக்கிட முடியும்? அதோடு அவங்க அனுபவம் வேறேயாத் தான் இருக்கும். :)

      Delete
  14. உங்கள் பிரச்சனைகளும் மனச் சோர்வும் விரைவில் தீர கடவுளை வேண்டுகிறேன்.

    நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான். 500,1000 ருபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததில் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், மக்கள் எப்படியோ சமாளிக்கிறார்கள். எதிர்கட்சிகளும், ஊடககங்களும்தான் இதை பெரிது படுத்துகின்றன.

    ReplyDelete
    Replies
    1. ரொம்பவே பெரிது படுத்துகின்றன. :(

      Delete
  15. எல்லா அனுபவங்களுமே நமக்குப் பாடங்களே! அது போன்று பிறருக்கு ஏற்படும் அனுபவங்களும் கூட நமக்குத் தெரிய வரும் போது நேரிடையாகவோ மறைமுகமாகவோ, அதிலிருந்தும் பாடம் கற்கலாம். அனுபவத்தைப் போல மிகப் பெரிய ஆசிரியர், வழிகாட்டி இல்லை எனலாம்...தங்கள் பிரச்சனைகள் எல்லாம் தீர்வாகி நல்லதொரு நேரம் தொடங்கி தங்கள் உடல் மற்றும் மனமும் நலத்துடன் இருக்கப் பிரார்த்தனைகள்

    ReplyDelete