இன்னிக்கு சூப்பர் சந்திரன் தெரியும்னு சொன்னாங்களா! காலையிலிருந்து காத்துட்டு இருந்தேன். இன்னிக்குனு பார்த்து ஒரே மேக மூட்டம். என்றாலும் ஐந்தே முக்காலுக்கே மாடிக்குப்போய்க் காத்திருந்தேன். ஆறு மணிக்கு மெல்ல எட்டிப் பார்த்தார் சந்திரனார். உடனே ஓரிரு க்ளிக்குகள். முடிஞ்சால் நாளைக் காலம்பரயும் போய்ப் பார்க்கிறேன். நாளைக்குத் தான் நம்ம யானையார் கடைசி நாளாக இங்கே காவிரிக்கு வருவார். புதன்கிழமையிலிருந்து கொள்ளிடத்துக்குப் போவார். அதனால் நாளைக்கு ஆண்டாளம்மாவையும் பார்க்கணும். சந்திரனையும் பார்க்கணும். பார்ப்போம்.
மேகங்கள் மறைக்கத் தான் செய்தன! என்ன செய்ய முடியும். மேலேயும் கீழேயும் அழகாக மேகங்கள்!
ஜூம் பண்ணித் தான் எடுத்திருக்கேன் என்றாலும் நிலா மட்டும் தனியாத் தெரியும்படி எடுக்க முடியலை என்பதோடு இன்னும் பெரிதாகக் காட்டும்படியும் எடுக்கத் தெரியலை. அதோடு மரங்களும், டெலிஃபோன், அலைபேசி கோபுரங்களும் நிறைய இருப்பதால் என்ன தான் அவற்றை நீக்க முயன்றாலும் அவை இடம் பெற்றே தீர்கின்றன. குறைகளைப் பொறுத்துக் கொள்ளவும். நிலா இன்னும் கொஞ்சம் மேலே வந்ததும் எடுத்திருக்கலாம். ஆனால் அப்போது இந்த அளவுப் பெரிசாத் தெரியுமானு சந்தேகம்!
எடுத்த இதையே டெலிபோன் டவரை இல்லாமல் செய்யலாமே....
ReplyDeletecropping செய்திருக்கணும். செய்யலை! :(
Deleteநாளை க்ராப்பிங் எல்லாம் செய்துட்டுப் போட்டுப் பார்க்கலாம்.
Deletehttp://killergee.blogspot.ae/2016/11/dewa.html
Deleteநிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது...
ReplyDeleteநிலாவே வா... செல்லாதே வா...
நிறைய நிலாப்பாடல்கள் இருந்தாலும் இரண்டு மட்டும்....
வாங்க ஶ்ரீராம், நீங்களும் படம் காட்டுவீங்கனு நினைச்சேன். :)
Deleteமேடம்... இது நிலாவா அல்லது காலையில் எழும் சூரியனா? எங்கள் ஊரில் நிலா வெள்ளையானா தெரியுது. இருந்தாலும், நீங்களே 'ஜூப்பர் மூன்' என்று சொல்லிவிட்டீர்கள். இன்று இரவும் நாளை அதிகாலையிலும் இங்கு பார்க்கிறேன். உங்களுக்குத் தெரிந்த அதே நிலவு என் கண்ணிலும் விழுகிறதா என்று.
ReplyDeleteநெ.த. சரியாப் போச்சு போங்க! நிலா உதயம் ஆகிறச்சே பார்த்ததே இல்லைனு நினைக்கிறேன். இங்கேயும் அப்புறமா வெள்ளை கலந்த ஆரஞ்சு நிறம் வரும். இது கிழக்கே தோன்றும்போதே எடுத்தது. :) சரியா மாலை ஆறு மணிக்குத் தலை காட்டினார் சந்திரனார்.
Deleteகுறையை விட்டுவிடுவோம். நிறையைக் காண்போம்.
ReplyDeleteநன்றி ஐயா!
Deleteஜூப்பர் மூன்..சூப்பர்
ReplyDeleteநன்றி அனுராதா!
Deleteஇன்றைய செய்தித் தாளில் சந்திரன்புகைப்படம் பார்த்த பின்தான் இந்த நிகழ்வே தெரிந்தது இப்போது பலரது பதிவுகளிலும் சூப்பர் சந்திரன் பற்றிய பதிவுகளும் புகைப்படங்களும்
ReplyDeleteசூப்பர் சந்திரன் சூப்பர்.
ReplyDeleteஅட! அருமை எடுக்க நினைத்து எடுக்க முடியாமல் போனது உங்கள் ஃபோட்டோவைப் பார்த்தாயிற்று..
ReplyDeleteகீதா