எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, November 10, 2016

கடவுள் இருக்கான் கொமாரு!

எதாக இருந்தாலும் சரி, இறைவன் துணை இருந்தால் சரியாகும் என்பதைக் கடந்த சில மாதங்களாக உணர முடிகிறது. எதிலும் மனம் பதியாமல் தவிப்புடன் இருந்து வந்த காலம் மாறும் என்னும் நம்பிக்கை தோன்றுகிறது. கூப்பிட்ட குரலுக்கு இறைவன் வருவான் என்பது உண்மை என்பதோடு அதைப் பூரணமாக உணர்ந்த நாட்கள்! ஒவ்வொரு நாளும் உணர முடிகிறது.  இந்த 2016 ஆம் வருடம் பிறந்தது கூடச் சரியாக நினவில் இல்லாமல் ஓடி விட்டது. இப்போது வருடம் முடியவும் போகிறது. கழிந்து போன நாட்கள் அனைத்தும் மறக்க முடியாத நாட்கள்! இன்னும் சொல்லப் போனால் என்னால் இணையத்தில் அதிகக் கவனம் செலுத்த முடியாமல் போன நாட்கள்! பதிவுகள் போடுவதைத் தள்ளிப் போட்டு வந்த நாட்கள்! எத்தனையோ பதிவுகள் ட்ராஃப்ட் மோடிலேயே இருக்கின்றன. அவற்றை வெளியிடவும் மனம் இல்லாமல் போய்விட்டது! :)

 இன்னிக்குக் கூடப் பாருங்க! சமைக்கும்போது பிரச்னை!

காலம்பர வழக்கம் போல் சமைக்க ஆரம்பித்துக் குக்கரை அடுப்பில் வைத்தேன். ரங்க்ஸ் கொஞ்சம் வெளியே செல்வதாகச் சொல்லிட்டுச் சென்றார். அவர் கீழே இறங்கி இருப்பார், இங்கே எரிவாயு தீர்ந்து போயாச்சு! ஒரு காலத்தில் சிலிண்டரை நானே தான் மாட்டிக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் என்னை சிலிண்டர் பொருத்த விடாமல் ரங்க்ஸே பொருத்துகிறார். ஆகவே அவர் வரணும். அடுப்பில் ஒரு  பக்கம் குக்கரும், இன்னொரு பக்கம் காய்கள் வேகவும் வைச்சிருந்தேன். இப்போ என்ன செய்யறதுனு ஒரு கணம் யோசனை. ரங்க்ஸ் முக்கியமான வேலையாப் போனதால் கூப்பிடுவது கஷ்டம்! ஆனால் நல்ல வேளையா   மின்சாரம் இருந்தது.  ரைஸ் குக்கர் கீழே இருந்திருந்தா அதிலே சாதத்தை மாற்றிட்டு இன்டக்‌ஷனில் மற்றவற்றைச்  சமைச்சிருக்கலாம். ஆனால் ரைஸ் குக்கர் மேலே இருந்தது. என்னால் ஏறி எடுக்க முடியாது. ஆகவே இன்டக்‌ஷனிலேயே குக்கரையும் வைச்சுடலாம்னு  நினைச்சேன்.

உண்மையிலேயே நல்லவேளைதான். ஏனெனில் பத்து நாட்களாக் காலை சமையல் ஆரம்பிக்கிறச்சே போகும் மின்சாரம் சமையல் முடிச்சும் வராது! சாப்பிடும்போது தான் வரும். குறைந்தது இரண்டு மணி நேரம்! இன்னிக்கு மின்சாரம் இருப்பதே கடவுள் செயல் தான் என நினைத்துக் கொண்டு குக்கரை இன்டக்‌ஷன் ஸ்டவுக்கு மாற்றினேன். இரண்டே நிமிடத்தில் குக்கர் விசில் அடிச்சுக் கூப்பிட்டது. பின்னர் காய்களையும் ஓர் அடி தட்டையான எவர்சில்வர் பாத்திரத்தில் மாற்றினேன். எனக்கு இந்த எவர்சில்வரில் சமைக்கவே பிடிக்காது. பாரம்பரியப் பாத்திரங்கள் தான் பயன்படுத்துவேன். குழம்பு வைக்கக் கல்சட்டி, ரசம் வைக்க ஈயச் சொம்புனு. காய்கள் வேக வைக்கவும்   செப்பு அடியில் பதிக்கப்பட்ட ஒரு பாத்திரம் இருக்கு! அது அடி கனம் என்பதால் அதில் வேக வைப்பேன். அதை இன்டக்‌ஷனில் வைக்க முடியாது. ஆகவே எவர்சில்வர் பாத்திரத்தில் மாற்றிக் காய்களைச் சமைத்தேன்.

ரசம் வைக்கவும் இன்னொரு எவர்சில்வர் பாத்திரம் எடுத்துக் கொண்டு அதில் வைத்தேன். மைசூர் ரசம்! இன்னிக்கு ரசமும், இரண்டு மூன்று காய்கள் மட்டும் சேர்த்து அவியல் மாதிரியும் பண்ணினேன். அவ்வளவு தான்! ஆகவே அதுவும் சீக்கிரம் கொதிக்க ஆரம்பிச்சது. சமையல் எப்போதும் போல் அரை மணி நேரத்துக்குள் முடிந்து விட்டது. இரும்புச் சட்டி, இரும்புக் கரண்டி ஆகியன இன்டக்‌ஷனில்வைக்கலாம். கரண்டி நிற்கவில்லை. ஆகவே சின்ன இரும்புச் சட்டியை வைத்து ரசத்துக்குத் தாளித்தேன். சமையல் முடிஞ்சது. ரங்க்ஸும் வந்தார். சிலிண்டரும் போட்டாச்சு. சமையல் பிரச்னைக்குத் தீர்வும் கிடைச்சது. :) அது மாதிரி ஒவ்வொரு பிரச்னையாகத் தீர்வு கிடைக்கணும்;கிடைக்கும். எல்லாத்தையும் பெரிய ரங்கு பார்த்துட்டுத் தானே இருக்கார்.


இப்போக் கொஞ்சம் பொழுதுபோக்குக்கு! :) ரொம்பவே சீரியஸா இருந்துட்டா நல்லா இருக்காதே! :)


இது தான் நான் ரசம் வைக்கும் ஈயக் கிண்ணம்

இப்போ இன்னிக்கு வைச்ச மைசூர் ரசம் பத்திப் பார்ப்போமா?  இது எங்க வீட்டிலே என் தம்பி மனைவி செய்யும் முறை. என் மாமியார் வீட்டிலே வேறே மாதிரிச் செய்வாங்க.அவங்க வைக்கிற  ரசம் நான் வைக்கிற சாம்பார் மாதிரி நீர்க்கவும் இல்லாமல் கெட்டியாவும் இல்லாமல் நிதானமா அடியிலே சாம்பார், மேலே ரசம்ங்கற பக்குவத்தில் இருக்கும். பருப்பு நிறையப் போடுவாங்க! மைசூர் ரசம்னாக் கேட்கவே வேண்டாம். பருப்பு அடியில் கெட்டியாக நிறைய இருக்கும். ஆனால் என் தம்பி மனைவி பண்ணினாலும், நான் பண்ணினாலும் ரசம் நீர்க்க ரசமாகத் தான் இருக்கும். பருப்புப் போட்டுத் தான் பண்ணுவோம். ஆனாலும் ரசம் அடியிலிருந்து ஒன்று போல் இருக்கும்.  அதற்குக் காரணம் வறுத்து அரைக்கும் பொருள்களில் உள்ள சின்ன மாற்றம். நீங்க துவரம்பருப்பு வறுத்து அரைக்கும் பொருள்களில் சேர்த்தால் ரசம் நீர்க்க வரும். அதே கடலைப் பருப்பு வறுத்து அரைச்சால் ரசம் கெட்டியாக இருக்கும். ரசப்பொடி செய்யும்போதும் அப்படித் தான்! துவரம்பருப்பு மட்டும் சேர்க்கணும். மிவத்தல் நூறு கிராம்னா கால்கிலோ தனியா போட்டுட்டு துபருப்பு 200 மிளகு நூறு னு சேர்த்துட்டு அதையும் வெறும் வாணலியில் வறுத்து மிஷினில் கொடுத்துத் திரிச்சுட்டு வைச்சா  ரசம் ரசமாக வரும். நான் கொத்துமல்லி விதை  இன்னும் கொஞ்சம் கூடச் சேர்ப்பேன். ஆனல் துபருப்புப் போட்டும் மேலே கடலைப்பருப்பும் போட்டால் அது ரசமா, சாம்பாரானு யோசிக்கணும்! அதுவே சாம்பாருக்கு வறுத்து அரைக்கையில் மிவத்தல், தனியா, கடலைப்பருப்பு, வெந்தயம், உபருப்பு வறுத்து அரைத்தால் சாம்பாருக்கு மாவு எல்லாம் கரைச்சு ஊற்றாமலேயே கெட்டியாக வரும்.  இப்போ இன்னிக்குச் செய்த மைசூர் ரசம் செய்முறை!

ரசம் அடுப்பில் கொதிக்கையில் எடுத்த படம்! :)

இரண்டு சின்ன மி.வத்தல்
ஒரு டேபிள் ஸ்பூன் கொத்துமல்லி விதை
 அரை டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பு
மிளகு ஒன்றரை டீஸ்பூன்
ஒரு டீஸ்பூன் ஜீரகம்
பெருங்காயம் ஒரு துண்டு
தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன்
எல்லா சாமான்களையும்  எண்ணெயில் வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்.

புளி ஒரு சின்ன எலுமிச்சை அளவு எடுத்துக் கரைத்துக் கொள்ளவும். புளிச்சாறு ஒரு கிண்ணம் இருக்கலாம்.
தக்காளி (தேவையானால் சின்னதாக ஒன்று)
பச்சை மிளகாய் சின்னதாக ஒன்று
உப்பு தேவையான அளவு

தாளிக்க நெய் இரண்டு டீஸ்பூன், கடுகு, சின்ன மிவத்தல், கருகப்பிலை, கொத்துமல்லி

துவரம்பருப்புக் குழைய வெந்தது ஒரு டேபிள் ஸ்பூன் அல்லது சின்னக் கிண்ணம் ஒன்று

துவரம்பருப்பில் மஞ்சள் பொடி சேர்த்துக் குழைய வேக வைக்கவும். புளிச்சாறில் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கருகப்பிலை, பச்சைமிளகாய், தக்காளி சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு புளி வாசனைபோகக் கொதித்ததும் வெந்த பருப்பை நன்றாக நீர் விட்டுக் கரைத்துத் தேவையான அளவுக்கு விளாவவும். வறுத்து வைத்துள்ள பொடியைச் சேர்க்கவும். ஒரு கொதி விடவும். கீழே இறக்கி வைத்து நெய்யில் கடுகு, மிவத்தல் கருகப்பிலை போட்டுப் பொரித்துத் தாளிதத்தை ரசத்தில் சேர்க்கவும். கொத்துமல்லி தூவிச் சூடான சாதத்துடன் பரிமாறவும்.

 ரசம் கெட்டியாக வேண்டுமானால்

இரண்டு மிவத்தல், தனியா, கடலைப்பருப்பு இரண்டு டீஸ்பூன், மிளகு மட்டும் ஒரு டீஸ்பூன் சேர்த்துப் பெருங்காயம் தேங்காயுடன் வறுத்து அரைத்துக் கொள்ளவும். புளிச் சாறைக் கொதிக்க விடுகையில் வீட்டில் இருக்கும் சாம்பார்ப் பொடி அல்லது ரசப்பொடியில் ஒரு டீஸ்பூன் பொடி போட்டுக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் அரைத்த விழுதைப் போட்டுக் கலந்து கொதிக்கவிட்டுத் துவரம்பருப்பை நீர் சேர்த்துக் கரைத்துக் கொண்டு ரசத்தில் சேர்க்கவும். இது கொஞ்சம் கெட்டியாக இருக்கும். தாளிதம் மேற்சொன்ன மாதிரித் தான்.


ஹிஹிஹி, நீங்க பாட்டுக்குத் திரைப்படம் பத்தித் தான் நான் எழுதி இருக்கேன்னு  நினைச்சுட்டு வந்தா அதுக்கு நானா  பொறுப்பு! நாங்க அப்படி எல்லாம் எழுதிடுவோமா! :))))

37 comments:

 1. என்றைக்கும் எதற்கும் கடவுளை நம்பும் உங்களுக்கு குறையேதும் இருக்காது. வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா! உண்மையில் நான் எழுதின பதிவு முழுமையும் படிச்சிருந்தால் புரிஞ்சிருக்கும்! :) எடுத்துட்டேன். ரொம்பவே தீவிரமாக எழுத வேண்டாம்னு! :)

   Delete
  2. "ரொம்பவே தீவிரமாக எழுத வேண்டாம்னு தோன்றியதால் எடுத்துட்டேன். " இப்படி எழுதி இருக்கணும். அர்த்தமே மாறி விட்டது! :)

   Delete
 2. எப்படியோ கொண்டு வந்து முடிச்சுப் போட்டு பதிவை முடிச்சு வச்சிட்டீங்க....
  ஆனாலும் ரசத்துக்கெல்லாம் கடவுளை அழைச்சிருக்க கூடாதுதான்.

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, ரசம் இல்லைனா வாழ்க்கையிலே ரசம் ஏது கில்லர்ஜி? எழுதின பதிவில் இரண்டு மூன்று முக்கியமான பத்திகளை நீக்கிட்டேன். அதுக்காக ரசத்தைப் பின்னாடி சேர்த்தேன். அது தனிப்பதிவாகப் போட்டிருக்க வேண்டியது! இதிலே சேர்த்துட்டேன். :)))))

   Delete
 3. நான் ரொம்ப அப்செட் ஆவது, ஹஸ்பண்டிடம் சமையல் சொல்லி, அவங்க காலோ, பாதியோ பண்ணி, சிலிண்டர் தீர்ந்துபோயிடுச்சு என்று சொல்லும்போது. இங்கெல்லாம் அது ஒரு பெரிய விஷயமே இல்லை. நீங்களும்தான், கட கடன்னு வேறவிதத்துல சமையலை முடிச்சுட்டீங்களே.

  இந்த ரசம் விரைவில் பண்ணிப்பார்க்கிறேன். இரண்டாவது முறைல பண்ணினா, முதல்ல வர்றவங்களுக்கு ரசமும் கொஞ்சம் தாமதமா வர்றவங்களுக்கு சாம்பாரும் போட்டுடலாம் போலிருக்கே (டூ இன் ஒன்). உங்களைமாதிரியே அவசர அவியலும் செய்துபார்க்கிறேன் (ஏதோ 2-3 காய்போட்டு).

  "கவலைப்படாதே கொமாரு'க்குப் பதிலாக 'இதுவும் கடந்து போகும்'னு தலைப்பு வச்சிருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. http://sivamgss.blogspot.in/2015/12/blog-post_23.html

   http://sivamgss.blogspot.in/2008/11/blog-post_26.html
   இதற்கு முன்னர் இம்மாதிரி சமைக்கும்போது பிரச்னைகள் வந்து சமாளித்த விதம்! படிச்சுப் பாருங்க.

   Delete
  2. சும்மா ஓர் ஈர்ப்பு இருக்கும் என்பதால் கவலைப்படாதே கொமாரு னு தலைப்பு! :) அதோட பதிவில் தீவிரமாக எழுதியதாலும் வைச்சேன். அவற்றை நீக்கிய பின்னரும் மாத்தலை! :)

   Delete
  3. தண்ணீரில் நின்று சமையல் செய்ததிலிருந்து, குமுட்டி அடுப்பில் காபி சாப்பிட்டதுவரை படிச்சுட்டேன். அரைமணி நேரத்தில் எப்போதும்போல் சமையல் முடிச்சுட்டேன் என்று சொன்னதையும் நோட் பண்ணிவிட்டேன். இனி உங்கள் மைசூர் ரசத்தில், 2 ஸ்பூன் துவரம்பருப்போட, 1 ஸ்பூன் பாசிப்பருப்பும் சேர்த்து மைசூர் ரசம் பண்ணி, எங்கள் பிளாக்குக்கு செய்முறை எழுதி உங்களை வம்புக்கு இழுக்கவேண்டியதுதான்.

   Delete
  4. ஹாஹாஹா, ரசத்திலே பாசிப்பருப்புச் சேர்த்துப் பண்ணுவது என்பது நான் எலுமிச்சை ரசம் வைக்கும்போது மட்டுமே! எலுமிச்சை ரசத்துக்குப் பாசிப்பருப்பைக் குழையக் கரைய விட்டு விட்டுப் பின்னர் தக்காளிச் சாறைச் சேர்த்து ரசப்பொடி, ப.மி. பெருங்காயம் உப்புச் சேர்த்துக் கொதிக்கவிட்டுப் பின்னர் விளாவித் தாளிக்கலாம். கொஞ்சம் ஆறியதும் எலுமிச்சைச் சாறு சேர்க்கணும். :) மற்ற ரசங்கள் என்றால் ருசி மாறும். :)

   Delete
  5. ஏன் இந்த அவசரம். நான் பண்ணி, ஶ்ரீராம் accept பண்ணி வெளியிடறவரை காத்திருக்கறதுதானே. உங்களுக்காக நான் உடுப்பி ரசம்னு பேர் மாத்தணும். ஆனாலும் உங்களுக்கு நல்ல அனுபவம். ரெடி டிக்‌ஷனரி மாதிரி.

   Delete
  6. ஹாஹாஹா அதெல்லாம் ஒரு ஃப்ளோவிலே வந்துடும்! :))) மத்தபடி ஆசை, தோசை,அப்பளம், வடை தான்! நீங்க ரசம் தயாரிக்கும் வரைக் காத்துட்டு இருக்க முடியாத்!!!!!!!!!!!!!!! :)))))))அதிலே பாருங்க அந்த ரசம் தாளிக்கையில் நெய்யிலே தாளிச்சுக் கொஞ்சம் மிளகு, ஜீரகப் பொடியையும் மேலே தூவினால்! ஆஹா! அடைக்குத் தொட்டுக்க நல்ல துணை! :)

   Delete
  7. சமைக்க ஆரம்பிச்சுத் தங்க விழா கொண்டாடியாச்சாக்கும்! :)

   Delete
  8. பவள விழாக் கொண்டாடுவதற்கும் (ஆரோக்கியத்தோட) வாழ்த்துக்கள். ஆரம்பகாலத்தில் சமையல்ல சொதப்பி புது டிஷ்ஷாக அமைந்த அனுபவத்தையும் எழுதுங்கள்.

   Delete
 4. கீதாஜி ... சூப்பர். அமைதியான வாழ்க்கைக்கு இந்த நம்பிக்கை மிகவும் அவசியம்தான்.. கலக்கிட்டீங்க. உள்ளம் தொட்டது.

  ReplyDelete
  Replies
  1. அட? நல்வரவு பவளசங்கரி. வாழ்த்துகளுக்கு நன்றி.

   Delete
 5. கொஞ்சம் சோகம், அதை மீறி நம்பிக்கை, ரசம் என்று அவியல் பதிவு. நல்ல முயற்சி!
  பி.கு.: நான் சோகமாக எதுவும் எழுதவில்லையே என்று கூறாதீர்கள், ஆரம்ப வரிகள் எனக்கு சோகமாக பட்டன.

  ReplyDelete
  Replies
  1. சோகத்தை மீறிய மன உளைச்சல். பொதுவாக வீட்டில் நடப்பவை வெளியே தெரியாதபடிக்குக் கவனமா இருப்பேன். ஆனால் இப்போது எல்லாவற்றையும் மீறியதால் இணையத்திலேயே பங்கெடுக்க முடியாமல் போச்சு! பலரும் என்ன ஆச்சு? ஏன் இந்த set back என்று கேட்கவே கொஞ்சம் கொஞ்சம் சொல்கிறேன். :) மற்றபடி இதையும் சமாளிச்சுட்டு வந்துடுவோம். உங்கள் அக்கறைக்கு நன்றி.

   Delete
  2. ரொம்ப கனமான பதிவோ படிக்க சோகமானதோ அதிகம் எழுதக் கூடாது என்றே இருக்கிறேன். நம் பிரச்னைகளை நாம் தானே சமாளிக்கணும்! அதனால் தான் பதிவை எடிட் செய்துவிட்டுப் பின்னர் இறுக்கத்தைத் தளர்த்த வேண்டி ரசத்தைக் கொண்டு வந்தேன். :)))))

   Delete
  3. "ரொம்ப கனமான விஷயங்கள் உள்ள பதிவோ" என்று படித்துக் கொள்ளவும்.

   Delete
 6. நாங்கள் இதுவரை இண்டக்ஷன் ஸ்டவ்வை சமையலுக்கு உபயோகித்தது இல்லை. வெந்நீர் வைக்கவும் பால்சுடப் பண்ணவும் மட்டுமே உபயோகித்திருக்கிறோம்.

  இந்த 'ஒரு தெய்வம் நேரில் வந்தது' அனுபவங்கள் எனக்கும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கிடைத்தது உண்டு.

  ஈயச் சொம்பு ரசம் சாப்பிட்டு நாட்களாகி விட்டன. கற்சட்டி சமையலும். நேற்று எங்கள் வீட்டில் எலுமிச்சை ரசம். என் பாஸ் அதை ஆண்டாள் ரசம் என்பார். அவர் அப்பா அப்படித்தான் சொல்வாராம்.


  ReplyDelete
  Replies
  1. நானும் இன்டக்‌ஷன் ஸ்டவிலே சமையல் செய்ததில்லை. ஒரே முறை எண்ணெய் வைத்து வடை தட்டி இருக்கேன். இரும்புச் சட்டியிலே. இப்போது வேறே வழியில்லாமல் செய்யும்படி ஆச்சு!

   Delete
 7. படிக்க ஆரம்பித்ததும் பதிவில் சோக ரசம் அதிகம் இருக்கும் என்று நினைத்தேன். படித்ததும் துவரம்பருப்பு ரசம்தான் என்று தெளிந்தேன்!

  ReplyDelete
  Replies
  1. சோக ரசம் இருந்ததைப் பிழிஞ்சு எடுத்துட்டேன். :)

   Delete
 8. ரசம் ... மணமா இருக்கு...

  ReplyDelete
  Replies
  1. உண்மையிலேயே இந்த ரசம் கொதிக்கையிலேயே நன்றாக வாசனை வரும். :)

   Delete
 9. சிலஸமயம் ஒன்றுமில்லாத காரியங்களுக்கெல்லாம் டென்ஷன் வந்து விடும். நாமே நம்முடைய சிறிய இயலாமையைப் பெரிதாக உணருவதால். உங்களுக்குச் சொல்லமுடியுமே தவிர எனக்கு அது பொருந்துவதில்லை. ஸமயத்தில் எல்லோரும் அப்படியே! காரணம் நாம் நினைத்தபடியே அது குறிப்பிட்ட காலத்தில் எதிர்பார்த்தபடி அமைய வேண்டும் என்ற எண்ணம் மனதில் பதிந்து போய்விட்டதால். இதில் உடல் நலமும் பங்கு கொள்கிறது. ரஸமான மணத்துடன் கதம்பமாக பதிவு பரிணமித்து விட்டது. எல்லாம் கச்சிதமாக முடியும். ஒருகரண்டி ரஸம் கூட விடுங்கள். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. நன்றி அம்மா. உண்மையிலேயே பெரிய ஆபத்திலிருந்து தப்பியதால் மனம் ஆண்டவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்கிறது. உடல் நலம் பற்றி அதிகம் மனசில் வைச்சுக்கறதில்லை. முடிஞ்சவரை சமாளிச்சுப்பேன். :)

   Delete
 10. ரசமான பதிவு சுவாரஸ்யம்! நன்றி!

  ReplyDelete
 11. ஒரு டவுட்டு - ஈய பாத்திரத்தில் அப்படியே அடுப்புல வெச்சு ரசம் பண்ணா, பாத்திரம் உருகிடாது ?

  ReplyDelete
  Replies
  1. தும்பி, வம்பி, அது நீங்க செய்யற வேலை. நாங்கல்லாம் ஈயப் பாத்திரத்தில் ஜலம் வைத்தோ அல்லது புளிக் கரைசல் விட்டுட்டோ அப்புறமாத் தான் அடுப்பில் வைப்போம்! இது எப்பூடி? :P:P:P:P:P

   Delete
 12. Enakku pathi puriyala. . Enna achu Amma? Ethunaalum seekiram sari aagirum. . Perum aala maatum koopidaama enga amma rangammavayum koopidunga :)

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம் ஒண்ணும் இல்லை. ஒரு சில பிரச்னைகளை எதிர்நோக்கினோம். சமாளிச்சாச்சு! அம்புடுதேன்! :))))) அதோடு உங்க தகவலுக்காக. ரங்கநாயகியைப் போய் முதல்லே பார்த்துட்டு அவங்க கிட்டே சொல்லிட்டுத் தான் பெரும் ஆளையே பார்ப்போம்! :)

   Delete
 13. பதிவு நிறைய நம்பிக்கை கொடுக்குது!!!... போன வருடம் திருக்கார்த்திகை தீபத்துக்கு முதல் நாள் காஸ் ஸ்டவ் ட்யூப் இணைப்பில் நெருப்பு பிடித்து பெரிதாய் எரிந்ததால், அடுப்பு உபயோகிக்க முடியாமல் போக, பண்டிகை சமையல், பொரி உருண்டை பாகு, ஓமப்பொடி எல்லாம் இன்டக்க்ஷனிலேயே செய்தேன்!. நல்லாவே வந்துது!. பாகு சீக்கிரம் வருது.. அது போல் எண்ணைப் பண்டங்கள், குறைந்த எண்ணையிலேயே சீக்கிரம் மொறுமொறுன்னு வருது அம்மா!.. டைம் பிரச்னை இல்லன்னாலும், இன்டக்க்ஷனின் சமைச்சா கொஞ்சம் பக்கத்துலயே நிக்கணுன்னு தோணுது!.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், சிரமமான நேரங்களில் எப்படிச் சமாளிக்கிறோம் என்பது தான் தேவையே! என்றாலும் நான் முழுக்க முழுக்க இன்டக்‌ஷனில் சமைச்சது இதுவே முதல் முறை! :) என்ன ஒண்ணுனா அடி தட்டையான எவர்சில்வர் பாத்திரங்கள் அல்லது இன்டக்‌ஷன் பேஸ் பாத்திரங்கள் பயன்படுத்தணும்.

   Delete
 14. மாயவரத்தில் இருக்கும் போது அங்கிருந்து இடை இடையே மதுரை வந்து சொந்த விட்டில் தங்கும் போது முழுக்க முழுக்க இன்டக்‌ஷன் ஸ்டவிலே தான் சமையல். கரண்ட் கட் ஆனால் தான் கஷ்டம்.

  நம் கஷ்டங்கள் நம்மோடு தான் கீதா. இறைவனிடம் முறையிட்டு விட்டு அவர் சரி செய்வார் என்ற நம்பிக்கையில் வாழ்க்கை ஓடிக் கொண்டு இருக்கிறது.

  ReplyDelete