எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, November 12, 2016

நோட்டுக்களை மாத்தியாச்சா?

நான்கு நாட்களாக தேசமே அல்லோலகல்லோலப் படுது! எல்லோரும் இதே பேச்சு! முகநூல், ஜி+, பதிவுகள் என எல்லாவற்றிலும் இதைக்குறித்தே ஆலோசனைகள்! கேள்விகள், பதில்கள்! எல்லாம் இந்த ரூபாய் நோட்டு விஷயம் தான் சொல்றேன். ஒரு விஷயம் முக்கியமாச் செய்திருக்கணும். எதுனு கேட்கறீங்களா? இப்போச் சொல்லப் போவது ரூபாய் நோட்டுக்கள் குறித்து தான்! ஆயிரம், ஐநூறு செல்லாது என அறிவிச்சவங்க அதை மாற்றுகையில் மக்களுக்குப் பயன்படும் வகையில் நூறு, ஐம்பது, இருபது, பத்து ரூபாய் நோட்டுக்களை நிறைய இருக்குமாறு வங்கிகளுக்கு வழங்கி இருக்கணும். ஆனால் அதிலே ஒரு சிரமம் இருக்கத் தான் செய்யும். எல்லாருமே குறைந்த பட்சமாகப் பத்தாயிரம் மதிப்புள்ள ஆயிரம், ஐநூறு நோட்டுக்களை மாற்றுகையில் எல்லோருக்கும் அந்தக் கூட்டத்தில் நூறு, ஐம்பது, இருபது ரூபாய்களை அந்த மதிப்பின்படி  எண்ணிக் கொடுப்பது சாத்தியமில்லை. ஆகவே பணத்துக்குப் பணம் என்னும் பேச்சுப்படி கொடுக்கும் பணத்தின் மதிப்பைத் திரும்பக் கொடுக்கின்றனர். ஆனால் அதை மாற்றுவது என்பது கையில் வேறே பணமே இல்லாதவர்களுக்குச் சிரமம் தான்.
ஆயிரம் ரூபாய் நோட்டு க்கான பட முடிவு  ஐநூறு ரூபாய் நோட்டு க்கான பட முடிவு

பழைய ஐநூறு நோட்டுக்களில் போலி அதிகம் இருப்பதால் புது நோட்டுக்களை இன்னமும் புழக்கத்தில் விடவில்லை. கொஞ்ச நாட்கள் ஆகும் என்கிறார்கள். ஆனால் சாமானிய மக்கள் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை வைத்துக் கொண்டு செய்வதறியாமல் விழிக்கத் தான் வேண்டி இருக்கிறது. இப்போ எங்களிடம் இருந்த குறைந்த பட்சத் தொகையான ஆயிரம், ஐநூறு நோட்டுக்களை டெபாசிட் செய்து விட்டோம். அதற்கு வங்கியில் இருந்து நாலாயிரம் ரூபாயே எடுக்க முடிந்தது. இப்போக் கையில் இருப்பது அந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் இரண்டு தான். மருந்து வாங்கணும், அரிசி மற்றச் சில பொருட்கள் வாங்கணும். இரண்டாயிரத்தைக் கொடுத்தால் அவங்க திருப்பிச் சில்லறை கொடுக்கையில் ஐநூறு ரூபாய் நோட்டுக்களைத் தான் கொடுப்பேன்னு அடம் பிடிக்கிறாங்க. அரிசி வேண்டுமானால் வாங்காமல் சமாளிக்கலாம். மருந்து வாங்க என்ன செய்வது? மருந்துக்கடையிலும் ஐநூறு ரூபாயாகத் தான் சில்லறை தருவேன் என்கிறார்கள்.

யாருமே அவர்களிடம் உள்ள நூறு ரூபாய்த் தாள்களைப் புழக்கத்தில் விடுவதற்கு யோசிக்கின்றனர். இந்த அறிவிப்பால் இந்த ஒரு சிரமம் இருக்கத் தான் செய்கிறது. மற்றபடி இதுவும் தாற்காலிகமானதே! மருந்துக்கடையில் வழக்கமான வாடிக்கையாளர் என்பதால் பணம் பின்னால் தருகிறேன் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் எல்லோருமே தங்களிடம் இருக்கும் பணத்தை வங்கியில் போய் மாற்றாமல் தங்களிடம் பொருட்கள் வாங்குபவர்களிடம் தள்ளி விடலாம் என்று நினைப்பது சரியல்ல. அரசாங்கமோ அனைவருமே வந்து மாற்றிக் கொள்ளலாம் என்று தானே சொல்லி இருக்கிறது. அப்படி இருக்கையில் வாடிக்கையாளர்களுக்குச் சில்லறை கொடுத்தால் என்ன? 

புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டு க்கான பட முடிவு

இத்தனை வருடங்களாக இடதுசாரியாக இருந்த காந்தி இந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டின் மூலம் வலது சாரியாகி விட்டார்! :)

படங்களுக்கு நன்றி கூகிளாண்டவர்!

மற்றபடி இந்த அறிவிப்பு தேசத்துக்கு நன்மை தரக் கூடிய ஒன்றே என்று அனைவருமே ஒப்புக் கொள்ளுவதோடு எல்லா வங்கிகளும் வங்கிக்கிளைகளும் இந்த விஷயத்தில் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதும் உண்மையிலேயே பிரமிப்பைத் தருகிறது. எல்லோருக்குமே ஓர் உத்வேகம் தோன்றி இருக்கிறது. ஆகவே முழு முனைப்புடன் இதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். இதை எதிர்ப்பவர்களும் உண்டு. முக்கியமாய் எதிர்க்கட்சிகள் மற்றும் ஒரு சில தலைவர்கள். என்றாலும் அவர்கள் குரல் அத்தனை எடுபடவில்லை என்பதே உண்மை.  முகநூலில் ஒருத்தர் இந்த விஷயத்தை ஐஎஸ் ஐஎஸ்ஸினால் பாதிப்புற்ற ஓர் சிறுவனோடு ஒப்பிட்டுக் காட்டி இருக்கிறார்.  அதிலும் பிரதமரை," டீக்கடைக்காரன்" என்று அழைத்து, டீக்கடைக்காரன்  செய்த கொடுமை என்றும் சொல்லி இருக்கிறார்.

எல்லோருமே பிறக்கும்போது வாயில் வெள்ளி ஸ்பூனுடன் பிறக்க முடியாது. ஆகவே 1978 ஆம் ஆண்டில் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த காலத்தில் எச்.எம்.படேல் என்னும் அருமையான நிதி மந்திரியின் காலத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவு இதே போன்றது. அப்போதும் ஆயிரம் ரூபாய், பத்தாயிரம் ரூபாய்கள் செல்லாது என்ற அறிவிப்புச் செய்யப்பட்டது, ஓர் பணக்காரர் இதைக் கேட்டு மாரடைப்பினால் இறந்தார் என்றும் சொல்லுவார்கள்.  அதற்கு முன்னர் 1946 ஆம் ஆண்டிலே இருந்த பிரிட்டிஷ் சர்க்காரினால் இம்மாதிரி ஒரு அறிவிப்புச் செய்யப்பட்டது. அப்போது நூறு ரூபாய்கள் என்று நினைக்கிறேன்.  அதன் பின்னர் இத்தகைய துணிச்சலான முடிவு டீக்கடைக்காரர் என்பதால் மோதியினால் தான் எடுக்க முடிந்திருக்கிறது. இதன் நன்மைகள் அநேகம்! பதிவு நீண்டு விடும். ஆகவே அனைவரும் தேசத்துக்காக நமக்கு ஏற்படும் சின்னச் சின்ன சிரமங்களைப் பொருட்படுத்தாமல் ஒன்று சேர்ந்து ஒத்துழைப்போம். 

இந்தச் சமயத்தில் தான் பலரும் பல விதங்களில் உதவி செய்வதைப் பார்க்கவும் முடிகிறது. சில கடைகளில் வலுவில் அவர்களே ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்கிக் கொண்டு சில்லறை கொடுக்கிறார்கள். திருநெல்வேலியில் ஒரு ஓட்டலில் யாரும் பணமே கொடுக்காமல் இலவசமாகச் சாப்பிடலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். வங்கி அதிகாரிகளும் வங்கி ஊழியர்களும் ரிசர்வ் வங்கியின் தென் மண்டல இயக்குநரும் திரும்பத் திரும்பத் தொலைக்காட்சியில் இது குறித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்கின்றனர். முன்னாடியே சொல்லிட்டு நேரம் கொடுத்துச் செய்திருக்கணும்னு பலருக்கும் எண்ணம். அப்படிச் செய்தால் கறுப்புப் பணம் பதுக்கப் பட்டிருப்பது அவசரம் அவசரமாக நகைகளாக தங்கமாக பொருட்களாக மாற்றப் பட்டிருக்கும் வெளி வராது. எல்லோரும் ஜாக்கிரதைப் படுத்தப்படுவார்களே! அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று தானே இந்த தடாலடி வேலையே! 

இதை மூட்டை மூட்டையாக வைத்திருந்தவர்களுக்குத் தான் அதிர்ச்சியே! நம்போன்ற சாமானியர்களுக்கு இல்லை. ஆகவே யாரும் எதுக்கும் கவலைப்படாமல் இருந்தாலோ போதும். அடுத்த வருடம் மார்ச் 31 ஆம் தேதி வரை இந்த நோட்டுக்களை மாற்ற நேரம் இருக்கு! நிதானமாக் கூட்டம் இல்லாத நேரத்திலே போய் மாத்திக்கலாம்! அப்புறமா இன்னொண்ணும் சொல்ல விட்டுப் போச்சு. ஸ்விஸ் பாங்கிலே இருந்த கறுப்புப் பணத்தை இங்கே கொண்டு வந்து மக்களுக்கெல்லாம் 15 லட்சம் கொடுக்கிறதா மோதி சொல்லி இருந்தாரே, கொடுத்தாரா என்னும் கேள்வி! ஸ்விஸ் பாங்கில் இருக்கும் பணத்தை விநியோகம் செய்தால் இந்திய மக்கள் தொகைக்கு ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் வரும் அளவுக்கு இருக்கிறது என்று தான் சொன்னதே! எல்லோருக்கும் கொடுக்கிறேன்னு எல்லாம் சொல்லலை! அதோடு அங்கே இருந்து பணத்தை மூட்டையாவா கட்டி எடுத்து வர முடியும்? அது எந்த உருவிலே இருக்குனு பார்த்து அதைச் சொந்தக்காரங்க சரியாகச் சொன்னால் அதற்கேற்றபடி வரி விதிப்பாங்க. அதான் நடக்கும்!

தொலைக்காட்சி சானல்களும், மற்றத் தலைவர்களும் இதில் பல குறைகளைக் கண்டாலும் பொதுவில் மக்கள் ஒத்துழைப்பு இருக்கத் தான் செய்கிறது. அதுவும் இங்கே முதியோருக்குத் தனியாகக் கூப்பிட்டு அவங்க பணத்தை மாற்றிக் கொடுக்கிறார்கள். மற்ற இடங்களிலும் அப்படியே செய்வதாகப் பலரும் கூறுகின்றனர். இவ்வளவு பெரிய நாடு, மக்கள் என்னும்போது ஆங்காங்கே ஓரிரு இடங்களில் தவறு நடக்கலாம். அதைச் சரி செய்ய முனைய வேண்டும். பிஜேபி அமைச்சர் மகள் கைகளில் இரண்டாயிரம் ரூபாய்க் கட்டுக்களை வைத்துக் கொண்டு காமிராவுக்கு போஸ் கொடுப்பது போன்றதொரு படம் வாட்ஸப்பிலும் முகநூலிலும் வைரலாகப் பரவி வருகிறது. உண்மையில் அது அந்த அமைச்சரின் மகளே இல்லை. அந்த அமைச்சருக்கு மகளே இல்லையாம். மகன்கள் தானாம். ரிசர்வ் வங்கியிலிருந்து மற்ற வங்கிகளுக்குச் செல்லும் பணம் பண்டில் பண்டிலாகக் காணக் கிடைப்பதை இப்படிப் படம் போட்டு மனதைத் தேற்றிக்க முயல்கின்றனர்.  படத்தைப் பெரிது பண்ணிப் பார்த்தால் இது ரிசர்வ் வங்கியின் செஸ்ட் என்பதும் அங்கிருந்து ஆக்சிஸ் வங்கி மற்றும் பாங்க் ஆஃப் இந்தியாவுக்குச் செல்லும் பண்டில்கள் என்பதும் தெரிய வருகிறது.

தகவலுக்கு நன்றி: திருமூர்த்தி வாசுதேவன்

20 comments:

 1. //1978 ஆம் ஆண்டில் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த காலத்தில் எச்.எம்.படேல் என்னும் அருமையான நிதி மந்திரியின் காலத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவு இதே போன்றது. அப்போதும் ஆயிரம் ரூபாய், பத்தாயிரம் ரூபாய்கள் செல்லாது என்ற அறிவிப்புச் செய்யப்பட்டது//

  அப்போது ’ஆயிரம் ரூபாய்’, ’ஐயாயிரம் ரூபாய்’ மற்றும் ’பத்தாயிரம் ரூபாய்’ ஆகிய மூன்றும் புழக்கத்தில் இருந்ததாகக் கேள்வி. இந்த மூன்றையுமே செல்லாது என அப்போது (1978-இல்) அறிவித்து விட்டார்களாம்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் வைகோ சார். நீங்க சொல்வது சரியே! :)

   Delete
 2. ATM ல நூறு ரூபாய் நோட்டு மட்டுமே வந்தது. ஸோ பிரச்னை இல்லை. வங்கியில் வேலை செய்பவர்கள் யாரும் சிறு முணுமுணுப்பு கூடக் காட்டவில்லை என்பது பெரிய விஷயம். இரண்டாயிரம் ரூபாய் நோட்டு பேப்பர் தரம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை போல...

  ReplyDelete
  Replies
  1. அதைப் பார்த்துக் கள்ள நோட்டுத் தயாரிக்கக் கூடாது என்பதற்காகப் பிரத்தியேகமாய்த் தயாரிக்கப்பட்டது. இப்போது நாம் சொல்லும் குறையே அதன் நிறை! அதையும் ஜெராக்ஸ் எடுத்துச் சிலர் மாட்டிக் கொண்டிருக்கின்றனர். அதுவும் தினசரிகளில் வந்துள்ளது.

   Delete
 3. நாயகன் படத்தில் பேரன் தாத்தாவிடம் கேட்பது போல் மோடி யிடம் அதே கேள்வியை கேட்கவேண்டும் என்று தோன்றுகிறது. "நீங்க நல்லவரா கெட்டவரா?" ஒன்று மட்டும் நிச்சயம். மன்மோகன் சிங் போன்று இருந்த இடம் தெரியாமல் இருந்ததற்கு பதிலாக எப்போதும் செய்திகளில் இடம் பெற்று விடுகிறார். சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார். மாற்றுக் கருத்துக்களை கிஞ்சித்தும் பரிசீலிப்பதில்லை. நானே ராஜா நான் சொல்வதே சட்டம் என்ற ரீதியில் நடந்து கொள்கிறார். இது நமையா தீமையா என்று தெரியவில்லை. இன்னொரு இந்திரா காந்தி ஆகாமல் இருந்தால் சரி.

  --
  Jayakumar
  ​​

  ReplyDelete
  Replies
  1. எதையும் நாம் பார்க்கும் கோணத்தில் இருக்கிறது. இது தவறு எனில் நாடு மொத்தமும் குழப்பங்களே விளைந்திருக்கும். நாங்க இந்த அறிவிப்பு வந்த மறுநாள் திருச்சி செல்ல ஶ்ரீரங்கத்திலிருந்து ஆட்டோவில் பயணம் செய்தோம். ஆட்டோக்காரர் இந்த அறிவிப்பைப் பாராட்டிப் பேசினார்! அதே போல் திரும்பி வரும்போதும் ஆட்டோக்காரர் தன்னிடமிருக்கும் நோட்டுக்களை எல்லாம் மறுநாள் வங்கியில் கட்டப் போவதாகச் சொல்லி இது நன்மை பயக்கும் என்றும் கள்ளப் பணம் வைத்திருப்பவர்களுக்கு அரசு ஆப்பு அடித்துள்ளது என்றும் சொன்னார். அவர் பேசிய எல்லாவற்றையும் இங்கே பகிர முடியாது. ஆக சாமானிய மக்கள் விபரம் தெரிந்தவர்களாகவே இருக்கின்றனர். காய்கறிக்காரரிலிருந்து எல்லோருமே இதைப் பாராட்டுகிறார்கள்.

   Delete
 4. ​பி.கு. நான் இன்னும் என்னிடம் இருக்கும் நோட்டுகளை மாற்றவில்லை. காய் வாங்க மட்டும் கொஞ்சம் ரூபாய் இருக்கிறது. மருந்து தீர்ந்தவுடன் தான் ​அல்லல் பட வேண்டி வரும்.

  ReplyDelete
  Replies
  1. மார்ச் 31 ஆம் தேதிக்குள் எப்போ வேண்டுமானாலும் மாத்திக்கலாம். என்ன ஒரு விஷயம்னா டிசம்பர் 31 க்குப் பிறகு ரிசர்வ் வங்கி சென்று தான் மாத்தணும்! :) பெரிய மருந்துக்கடைகள் எனில் அங்கே க்ரெடிட், டெபிட் கார்டுகளில் மருந்துகள் வாங்கலாம். :) நம்மை மாதிரி உள்ளவர்களுக்குப் பிரச்னை இல்லை. ஆனால் எங்க பால்காரரே டெபிட் கார்ட் வைத்திருப்பதாகச் சொல்கிறார்! அதான் எங்களுக்கு ஆச்சரியம்! :))))) ஆக இப்போது கார்ட் என்பது மெல்ல மெல்ல கீழ்மட்டத்துக்கும் பரவ ஆரம்பித்திருக்கிறது.

   Delete
 5. அருமையான, முழுமையான பதிவு. எனக்கு நேரம் வேறே மிச்சம். கீதாவின் சம்மதத்துடன், இதை அலாக்காக த் தூக்கி என் வலைபபழத்தில் போடலாம். சம்மதமா? மேடம். உலகவரலாற்றில் இத்தகைய நிதி மேல்ண்மை புரட்சி நடந்ததில்லை. ஹிட்லருக்கு டாக்டர் ஷாட் என்ற நிதியமைச்சர் இருந்தார். அவர் ஒரு அளவுக்கு மாயாஜாலம் செய்தார். ஆனாலும் ஹிட்லர் செத்தபின் ஜெர்மனி நாராய் கிழிந்து கிடந்தது. இன்று உலகில் அவர்கள் தான் முதலிடம். இந்தியாவில் இந்த நிகழ்வு நம் உன்னதத்திற்கு வழி செய்யும்.

  ReplyDelete
  Replies
  1. தாராளமாய் ஐயா! என்னிடம் சம்மதம் எல்லாம் கேட்கவேண்டாம். பாராட்டுகளுக்கு நன்றி.

   Delete

  2. இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.

   Delete
 6. பணத்தின் மதிப்பை உணர ஒரு நல்ல தருணம்.

  ReplyDelete
  Replies
  1. ஆம், ஐயா! உண்மை தான்.

   Delete
 7. நல்ல விதமாக சொல்லி இருக்கின்றீர்கள் நல்லது நடந்தால் சரிதான் அதேநேரம் இன்று 2000 ரூபாய் கள்ள நோட்டில் 2 பேர் கர்நாடகாவில் கைதாகி இருக்கின்றார்கள் என்ன சொல்வது எத்தனுக்கு எத்தன் எங்கும் உண்டு.
  மக்கள் மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றாதவரை நாடு வளராது இதுதான் நிதர்சனமான உண்மை.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் கில்லர்ஜி! அந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை ஜெராக்ஸ் செய்யப்பட்டவை. இதே மாதிரி ஐநூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு ஒருத்தர் மாட்டிக் கொண்டார். மக்கள் மனதில் மாற்றம் வர வேண்டும்.

   Delete
 8. ஆயிரம், ஐநூறு நோட்டுக்களை - கையில் அவ்வளவு பணம் வைத்திருக்கலாமா? அஞ்சு லட்சமாச்சே!.

  உங்கள் கட்டுரையின் தீம் நல்லது. நல்லதே எண்ணுவோம். நல்லதே நடக்கும். நான் நினைக்கிறது. பணம் உள்ளவர்களெல்லாம் குறுக்கு வழியில் பணத்தை மாற்ற பாஜக உதவக்கூடாது. அருண் ஜெட்லி, பி.சி.சி.ஐயில் உள்ள சிலருக்கு உதவியதைப்போல.

  ReplyDelete
  Replies
  1. அருண் ஜெட்லி பிசிசிஐக்காரங்களுக்கு உதவினதெல்லாம் பழங்கதை! அதை விடுங்க. பணம் உள்ளவங்க யாரும் குறுக்கு வழியில் மாற்றினதாய்த் தெரியவில்லை. செப்டெம்பர் வரை வங்கிகளில் போடப்பட்ட பணமும் அப்போது அரசு அறிவித்திருந்த கள்ளப் பணத்தைக் கட்டினால் வரிச் சுமை மற்றும் அபராதத்தில் இருந்து தப்பிக்கலாம் என்னும் திட்டத்தின் வெளிப்பாடே. அதில் முழு அளவில் பணம் வெளி வராததால் தான் இந்த அதிரடி நடவடிக்கை என்கின்றனர்.

   Delete
 9. இங்கே 500 ரூபாய், 1000 ரூபாய்
  கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு....

  ReplyDelete
  Replies
  1. நல்லது தானே, வங்கிக்குப்போய் வரிசையில் நிற்க வேண்டாம்.

   Delete
 10. இன்று தான் போய் மாற்றிக் கொண்டு, எடுத்துக் கொண்டு வந்தோம். வாசலில் க்யூ இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டே போனோம். உள்ளே அதிக ஆட்களை விடாமல் பத்து பத்து பேராக அனுமதித்தனர். நிதானமாக போய் நிதானமாக வேலையை முடித்துவிட்டு, நிதானமாக வெளியில் வந்தோம். எந்தவித உரசல்களும் இல்லை. நோட்டுக்களை மாற்றுவதற்கு போனபோது அங்கே ஒரு வாலண்டீர் உட்கார்ந்திருந்தார். நமது ஐடி, நிரப்பப்பட்ட படிவம் செக் பண்ணிக் கொடுத்தார். அதனால் பணப்பட்டுவாடா செய்யுமிடத்தில் அமைதியாக பணத்தை வாங்க முடிந்தது.
  எல்லோருக்கும் நன்றி சொல்லிவிட்டு வந்தோம் - சந்தோஷமாக.

  ReplyDelete