எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, November 24, 2016

மற்றவை பின்னர்!

இந்த ஒரு வாரத்தில் எதுவும் தலைகீழாகப் போகலை. யாரும் தேடலை! யாரும் ஏன் பதிவுகள் வரலைனு கேட்கலை. நாம இல்லாமல் எதுவும் நடக்காமல் போகலை. ஆனாலும் திரும்ப வந்ததும் சந்தோஷமாத் தான் இருக்கு! ஆனால் இந்த ப்ளாகர் தான் டாஷ்போர்டையே காட்ட மாட்டேங்குது. என்னனு புரியலை! என்னை வேறு யாரோனு நினைச்சிருக்கானு தெரியலை.  தலைப்புக் கொடுக்கும் கட்டத்துக்கூ அருகே இது கீதா சாம்பசிவம்ங்கற பெயரிலே வெளியிடப்படுகிறதுனு ஒரு முன்னெச்சரிக்கை! என்ன ஆச்சு? எல்லோருக்கும் இப்படி இருக்கா?  ரீடிங் லிஸ்ட்ங்கற பெயரிலே நண்பர்களோட பதிவுகளைக் காட்டுது. டாஷ்போர்டை எடுத்துட்டு இப்படிப் போட்டிருக்காங்க போல! வலப்பக்கம் சைட் பாரிலே நான் தொடரும் பதிவர்களைக் காட்டுது!

போன புதன்கிழமை போகும்போது பல்லவனில் பாடாவதி போகி! ரயில் பெட்டி கட்ட ஆரம்பிச்ச நாட்களில் கட்டிய பெட்டி போல! ரொம்பவே மோசமா இருந்தது! அது தான் அப்படின்னா மும்பைக்குப் போன விமானமும் விமானங்கள் பறக்கத் தொடங்கியப்போ வாங்கினதோ, கட்டியதோ தெரியலை! ஏ.சி.யே வேலை செய்யலை. ஊழியர்களிடம் புகார் கொடுத்ததில் விமானம் கிளம்பியதும் சரியாகும்னு சொல்றாங்க. இது என்ன பேருந்துப் பயணமா? இல்லை ரயில் பயணமா? என்னத்தைச் சொல்ல! எல்லாப் பயணிகளும் அவதிப் பட்டார்கள். ஆனால் யாருமே கேட்டுக்கலை ஒரு சிலரைத் தவிர. அந்த ஒரு சிலரில் நாங்களும் உண்டு. நாம தான் வாயை வைச்சுட்டுச் சும்மா இருக்க மாட்டோமே!

சாப்பாடு திராபை! ஒரு வழியாப் போயிட்டு நேத்திக்குத் திரும்பியாச்சு. போன இடத்தில் படங்கள் எல்லாம் எடுக்கணும்னு காமிராவெல்லாம் கொண்டு போயும் ஒண்ணும் எடுக்க மனம் வரலை! சூழ்நிலை சரியாக அமையவில்லை. நம்ம அதிர்ஷ்டம் அப்படி! :) நேத்திக்குத் திரும்பும்போது விமானமும் புத்தம்புதியது. போன மாசம் தான் வாங்கி இருப்பாங்க போல! :) ஏசியும் வேலை செய்தது. இரவு வந்த மலைக்கோட்டை விரைவு வண்டியும் புத்தம்புதியது! நேரே தொழிற்சாலையிலிருந்து வந்திருக்கு போல! பெயின்ட் வாசனையே போகலை. வடிவமைப்பு அசத்தல்! ஆனால் ஏசியாக இருந்தாலும் முன்னால் மின் விசிறியும் இருந்தது. இப்போது புதிய வண்டிகளில் ஏசி பெட்டிக்கு மின் விசிறி இல்லை! மற்றபடி வண்டி சுத்தமோ சுத்தம்! ராத்திரி தூங்கத் தான் முடியலை. காலையிலே எழுந்துக்கணுமே! சரியான நேரம் ஶ்ரீரங்கத்துக்கு 3-54 அப்படினு போட்டிருந்தாங்க பயணச் சீட்டிலே. ஆனால் வண்டி வந்தது 4-30க்குத் தான். வீட்டுக்கு வந்து சேர்ந்தாச்சு.

மற்றவை பின்னர்! 

28 comments:

  1. அரங்கனைக் கேட்டதாச் சொல்லுங்கோ

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம், அரங்கனைப் போய்ப் பார்க்கணும். இப்போ வாரக்கடைசிக் கூட்டம் இருக்கும். திங்களுக்குப் பின்னர் தான் போகணும். அப்போக் கட்டாயமாச் சொல்றேன். :)

      Delete
  2. GOOGLE - நிறைய மாற்றம் வந்துள்ளது... பழகிக் கொள்ள வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் ஆமாம், என்ன என்னவோ மாற்றங்கள் டிடி

      Delete
  3. மாரல் ஆஃப் த ஸ்டோரி..... இனிமே திரும்பி மட்டுமே வரணும். போகக்கூடாது!

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் போகாம எப்படித் திரும்பறதாம்? :)

      Delete
  4. டேஷ் போர்ட் லேஅவ்ட் கடந்த சில தினங்களில மாறியாச்சு.

    ReplyDelete
  5. அரங்கத்துக்கே நீங்கள் பயணம் செய்வது பிடிக்கலையா அல்லது உங்களுக்கே பயணிக்கணுமேன்னு உள் மனதுல இருந்ததா? போகும்போது இரயில், விமானம்னு எதுவுமே நீங்க நினைச்சமாதிரி இல்லை. திரும்பும்போது எல்லாமே நல்லா அமைஞ்சிருக்கு.

    ReplyDelete
  6. //இந்த ஒரு வாரத்தில் எதுவும் தலைகீழாகப் போகலை. யாரும் தேடலை! யாரும் ஏன் பதிவுகள் வரலைனு கேட்கலை//

    வாங்க நாங்க எப்படி தேடுவோம் ? அதான் மும்பை போறோம்னு.... டிவியில் விளம்பரம் செய்துட்டுத்தானே போனீங்க,,,

    டாஷ்போர்டு எல்லோருக்கும்தான் மாறி இருக்கின்றது ஒரு கருத்துரை வெளியாகி இருப்பதைப் பார்த்தால் எல்லாம் அறிந்து விட்டீர்கள் என்றே தெரிகின்றது வாழ்க நலம் அடுத்து பயண அனுபவங்கள் வரும்.... வரட்டும்......

    ReplyDelete
    Replies
    1. ஹை, கில்லர்ஜி, சொல்லி இருந்தேனா? :)

      Delete
  7. ரீடிங் லிஸ்ட்ங்கற பெயரிலே நண்பர்களோட பதிவுகளைக் காட்டுது. டாஷ்போர்டை எடுத்துட்டு இப்படிப் போட்டிருக்காங்க போல! வலப்பக்கம் சைட் பாரிலே நான் தொடரும் பதிவர்களைக் காட்டுது!//

    எனக்கும் நேற்று இதே குழப்பம் இருந்தது. எல்லோருக்கும் இப்படித்தான் என்று தெரிந்து கொண்டேன். திண்டுக்கல் தனபாலன் அவர்களும் சொல்லி இருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளையா யுனிவர்சல் பிரச்னைனதும் மனசு சமாதானம் ஆயிடுச்சு! :)

      Delete
  8. வருக.... வருக...

    ஆமாம் ப்ளாகர் அமைப்பு சற்றே மாறியுள்ளது.

    படமே எடுக்கவில்லையா? பதிவெழுத விஷயமாவது தேறியதா?!!

    ReplyDelete
    Replies
    1. சற்றா? சரியாப் போச்சு போங்க! :) படம் எடுக்கலை. பதிவெழுத விஷயமா இல்லை. பல விஷயங்களையும் எழுதினால் சரியாக வராது என்பதால் சும்மா இருக்கேன். மும்பை போகாமலேயே பதிவுக்கான விஷயங்கள் இருக்கின்றன! :)

      Delete
  9. இருக்கும் அருமை இல்லாதபோது தெரியும்

    ReplyDelete
  10. மும்பை போய் வந்தீங்களா? வாழ்த்துக்கள்! ப்ளாக்கர மாற்றத்தால் நானும் கூட திடீரென்று கொஞ்சம் தடுமாற்றம் அடைந்தேன்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஷ், இப்போச் சில மாதங்களாக உங்களைப்பார்க்க முடியலை! இந்தப் பின்னூட்டமே இன்று தான் கிடைத்தது!

      Delete
  11. போட்ட பின்னூட்டம் காணோம்? கூகிளாரின் பசியா அல்லது உங்கள் பசியா?

    ReplyDelete
    Replies
    1. இப்போ வந்துடுச்சு இல்ல! :)

      Delete
  12. ஆமாம் எல்லோருக்குமே ப்ளாகர் மாற்றங்கள் காட்டுகிறது. நீங்கள் சொல்லியிருக்கும் அதே!

    ReplyDelete