எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, October 07, 2017

திரு தமிழ் இளங்கோவுக்கு என்னுடைய பதில்!

இங்கே  தமிழ் இளங்கோ அவர்களின் பதிவுக்கான சுட்டி!

திரு தமிழ் இளங்கோ அவர்கள் பதிவில் அவர் சொல்லி இருந்தவற்றுக்கு என்னுடைய கருத்து! இவற்றை அங்கே சொல்லி இருக்கேன் என்றாலும் திரு ஜோதிஜி பதிவு மாதிரி இருக்கிறது என்று சொல்லவே பதிவாகவே போடலாம் என்னும் எண்ணத்திலும் அவர் பதிவைப் படிக்காதவர்களும் இருப்பார்களே அவங்களும் தெரிஞ்சுக்கலாம் என்பதாலும் இங்கே கொடுக்கிறேன்.  ஆகமங்கள் குறித்து நான் தேடித் தெரிந்து கொண்டவை பற்றி என்னுடைய "சிதம்பர ரகசியம்" நூலில் குறிப்பிட்டிருக்கிறேன். அது பற்றிய சுட்டிகள் கீழே!

இங்கே

இங்கே

இங்கே

இங்கே
ஆகமம் கற்காமல் யாரும் அர்ச்சகர் ஆக முடியாது. மேலும் கோயில்களில் வழிபாடு செய்யும் சிவாசாரியார்களுக்கும் எங்களைப் போன்ற சாதாரண பிராமணர்களுக்கும் பெரும் வேறுபாடுகள் உண்டு. சிவாசாரியார்கள் வேதம் மட்டும் கற்காமல் ஆகமம், கோயில் வழிபாட்டு முறைகள் போன்றவற்றோடு சிவ தீக்ஷையும் பெற்றிருப்பார்கள். அத்தகையோரே பெரிய கோயில்களில் கருவறைக்குச் சென்று வழிபாடுகள் நடத்த முடியும். மற்றவர்கள் அவருக்குத் துணையாக உதவிகள் செய்யலாம். இந்தப் படிப்பும் சுமார் பனிரண்டு வருடங்கள் படித்தாக வேண்டும். அப்படிப் படித்துக் கோயிலில் உள்ளே சென்று வழிபாடு செய்யும் தகுதி படைத்த நாடார் குல இளைஞர் ஒருவர்தென் மாவட்டத்தில் இருக்கிறார்.

பெரும்பாலும் சரியான புரிதல் இல்லாமலேயே உங்கள் பதிவு எழுதப் பட்டிருக்கிறதோ என எண்ணுகிறேன். இப்படிச் சொல்வதற்கு என்னை மன்னிக்கவும். வேறு யார் எழுதி இருந்தாலும் இப்படிச் சொல்லி இருப்பேனா என்பது சந்தேகம். இங்கே சொல்லலாம் என்று தோன்றியதாலேயே சொல்லி இருக்கேன்.

கட்டண தரிசனங்கள் கோயில்களில் எந்த அர்ச்சரகராலும் ஏற்படுத்தப்படவில்லை. அது அறநிலையத் துறை அதிகாரிகளால் செயல்படுத்தப்படுகிறது, பெரும்பாலான மக்கள் அதை எதிர்க்கிறார்கள். தென் மாவட்டங்களான நாகர்கோயில், சுசீந்திரம், கன்யாகுமரி, திருவட்டாறு ஆகிய இடங்களில் இந்தச் சிறப்பு தரிசனம் என்பது இல்லை. மக்கள் சாதாரணமாகச் சென்று போய்ப் பார்த்து வரலாம். கூட்டம் நிறைந்திருந்தாலும் மக்கள் தரிசனத்துக்கு இடையூறாகவோ தடங்கலாகவோ இல்லை. மாலை வேளையில் கன்யாகுமரியின் தரிசனம் செய்தோம். இரவு ஏழு மணிக்கு சுசீந்திரத்தில்! எல்லாம் நன்றாகவே பார்க்க முடிந்தது.

வைணவர்களிலும் மாற்று இனத்தைச் சேர்ந்த அந்தணரல்லாத ஒருவர் வைணவ ஆசாரியர்களில் ஒருவரான பட்டராக ஆகி உள்ளார். இது அவரவர் விருப்பம், படிப்பைத் தேர்ந்தெடுக்கும் முறை ஆகியவற்றைப் பொறுத்தது. வைணவ ஆகமங்களில் வைகானசம், பாஞ்சராத்ரம், முனித்ரயம் எனப் பிரிவுகள் உள்ளன. வைகானசம், பாஞ்சராத்ரம் குறித்து விளக்கங்களை என்னுடைய சிதம்பர ரகசியம் நூலில் நானும் கேட்டறிந்து விளக்கம் கொடுத்திருக்கிறேன். ஆகமவிதிகளைக் கற்றுக் கொடுக்கவெனச் சென்னையிலும் ஓர் பள்ளி உள்ளதாக அறிகிறேன். பெரும்பாலான சிவாசாரியார்கள் இங்கே திருச்சியில் உள்ள ஓர் பள்ளியிலேயே கற்கின்றனர் என்றும் அறிந்தேன். வெறும் வேதம் கற்பதோடு எதுவும் முடிந்து விடாது. எந்த வேதத்திலும் ஆகமங்கள் பற்றிக் குறிப்பிடவும் இல்லை. ஆகமப் படிப்பு தனி! வேதம் படித்தல் தனி! அதர்வ வேதத்தில் ஒரு சில குறிப்பிட்ட யாகங்கள், யக்ஞங்கள், பரிகார பூஜைகள் குறித்தும் சில தேவதைகளின் வழிபாட்டு முறைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆயுர்வேத வைத்திய முறை பெரும்பாலும் அதர்வ வேதம் சார்ந்தவை என்றே சொல்லப்படுகின்றன. சம்ஸ்கிருதப் புலமை இருந்தால் தவிர ஆயுர்வேதம் படிக்கவும் முடியாது!


கோயில் விளக்கு விஷயம். அந்தக் காலங்களில் கோயில்களில் இலுப்பெண்ணெய், ஆமணக்கு எண்ணெய், நல்லெண்ணெய் கலந்தே தீபங்கள், தீவட்டிகள் ஏற்றுவார்கள். கோயில்களுக்கு என உள்ள நிலங்களில் இலுப்பை மரங்கள், ஆமணக்கு மரங்கள்(கொட்டைமுத்துச் செடி என்பார்கள், சின்ன மரமாகக் காணலாம், வேலியோரங்களில் பெரும்பாலும் காணப்படும்.) எள் விதைப்பு போன்றவை நடைபெற்றுப் பெரும்பாலும் அந்த அந்தக் கிராமம் அல்லது கோயிலைச் சேர்ந்த கணக்குப் பிள்ளை, தர்மகர்த்தா ஆகியோர் முன்னிலையில் எண்ணெய்க்குத் தேவையானவை சேகரிக்கப்பட்டு எண்ணெய் எடுக்கப்பட்டுக் கோயில்களில் கொடுக்கப்படும். இப்போதெல்லாம் எல்லாமும் மாறி விட்டன. கோயில் சொத்துக்களைத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டியதாய் இருக்கிறது.

அப்புறமா இந்த கே.கே.பிள்ளை சொல்லி இருப்பது குறித்து!

ஹூம், எந்த அரசன் வடக்கே இருந்து பிராமணர்களை வரவழைத்தான் என்பதற்கு ஆதாரங்களைக் காட்டச் சொல்லுங்கள் அவரை!

அவருக்குப் "பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி" பற்றித் தெரியுமா? அறிந்திருக்கிறாரா? ஆயிரக்கணக்கான யாகங்களைச் செய்தவன் என்பார்கள். க்டைச்சங்க காலத்துக்கும் முந்தினவனாகக் கருதபப்டுகிறவன். "சின்னமனூர்ச் செப்பேடு" இவனைக் குறித்துக் குறிப்பிடுகிறது. இவன் தான் கடல் வடிவலம்ப நின்ற பாண்டியனாக இருக்குமோ என்னும் சந்தேகம் எனக்கு உண்டு. ஆனால் இவன் காலத்தில் தான் கடலை வற்றச் செய்த வேல் எறிந்ததாகவும், பின்னர் பிரளயம் ஏற்பட்டதாகவும் இவன் வாரிசே உயிர் பிழைத்து அடுத்த மனுவாக ஆனதாகவும் சொல்வார்கள். இந்த முதுகுடுமிப் பெருவழுதியைப் பற்றிப் பல புலவர்கள் பாடல்கள் புனைந்திருக்கின்றனர். வேள்விக்குடிச் செப்பேடு,
"கொல்யானை பலஓட்டிக்

கூடாமன்னர் குழாந்தவிர்த்த

பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி"

என்று சொல்கிறது.


இன்னும் மாங்குடி மருதனார், இவனைக் குறித்து, பல்சாலை முதுகுடுமித்

தொல்ஆணை நல்லாசிரியர்

புணர்கூட்டுண்ட புகழ்சால்

சிறப்பின்" என்று மதுரைக் காஞ்சியில் சொல்லி இருக்கிறார்.

https://tinyurl.com/y9hydqhs விக்கியின் இந்தச் சுட்டிக்குச் சென்றால் மேலும் இவனைக் குறித்த தகவல்களை அறியலாம். வடமொழியாகட்டும், தமிழாகட்டும் ஒன்றுக்கொன்று துணையாகவே இருந்து வந்திருக்கின்றன. வடமொழிப் புலவர்கள் வட நாட்டை விடத் தென் தமிழ்நாட்டில் தான் மிகுதி! வடமொழி அறியாமலா கம்பனும், வில்லி புத்துராரும் ராமாயணமும், மஹாபாரதமும் தமிழில் எழுதினார்கள்? ஆகவே தமிழ் பிராமணர்கள், வடக்கே இருந்து வந்தவர்கள் என்றெல்லாம் இல்லை. வடக்கே இருந்தும் வந்திருக்கிறார்கள் பிராமணர்கள் உள்படப் பெருவாரியான மக்கள் என்ற பொதுவான பொருளிலே தான் எடுத்துக் கொள்ளலாம். ஒரு சிலர் குறிப்பிட்ட வழிபாடுகளுக்கென வடக்கே இருந்து வரவழைத்திருக்கலாம். ஏனெனில் அதர்வ வேதம் தெரிந்தவர்கள் மிகவும் குறைவு. சாமவேதிகள் குறைவு. அப்படி நேரும் சந்தர்ப்பத்தில் வரவழைத்திருக்கலாம். காளிதாஸன் இயற்றாத வடமொழி நூல்களா? காளிதாஸன் பிராமணனே அல்ல என்பது எல்லோரும் அறிந்தது தானே!



சிதம்பரத்தில் ஆகம முறைப்படி வழிபாடுகள் நடைபெறவில்லை. வைதிக முறைப்படியே நடைபெறுகின்றன. சிதம்பரம் தீக்ஷிதர்கள் தங்களுக்குள்ளேயே மணவினை கொள்வார்கள், கொடுப்பார்கள். எங்களைப் போன்றவர்கள் அவர்களுடன் திருமண சம்பந்தம் வைத்துக் கொள்ள மாட்டோம். அவர்களும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். அப்படி இல்லாமல் மாற்றுச் சம்பந்தம் வைத்துக் கொண்டால் கோயிலுக்கு அவர்கள் வழிபட வரலாமே தவிர்த்து வழிபாடுகளில் பங்கெடுக்க முடியாது. கோயிலில் இருந்து அவர்கள் பங்கும் அவர்கள் குடும்பத்திற்குப் போய்ச் சேராது. இது அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்கும் பாதிப்பாக இருக்கும். அவர்களுக்குள்ளேயே சம்பந்தம் வைத்துக் கொண்டால் தான் கோயிலில் வழிபாடு செய்ய முடியும். அதற்கும் திருமணம் ஆகி இருக்க வேண்டும். திருமணம் ஆகாத பிரமசாரிகள் சிதம்பரம் கோயிலில் வழிபாடுகள் செய்ய முடியாது. ஆனால் மற்றச் சிவன் கோயில்களில் அப்படி இல்லை. பிரமசாரியான சிவாசாரியார்கள் உண்டு.


ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கு முதலில் என் நன்றி. ஆதங்கம் இருப்பது என்னமோ உண்மை தான்! ஆனால் பிராமணர்களைக் குற்றம் சொல்லுவதால் மட்டும் இல்லை. அதற்கேற்றாற்போல் பெரும்பான்மையானவர்கள் நடந்து கொள்ளுவதாலும் தான். இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புணர்வு வருகிறது. என்றாலும் பிராமணர்கள் தங்கள் நிலையை அவர்களாகவே தாழ்த்திக் கொண்டு விட்டார்கள் என்பதிலும் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது. மாற்றங்கள் பெரும்பாலும் பிராமண சமுதாயத்திலேயே ஏற்பட்டும் வருகிறது என்பதும் உண்மை.

போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும்! அனைத்தும் கண்ணனுக்கே! என்னும் மனப்பாங்கு என்னிடம் இருப்பதால் மனோபலத்தை மட்டும் கடவுளிடம் வேண்டிக் கொண்டு இருக்கிறேன்.

ஜோதிஜி திருப்பூர், நான் "தரம்பால்" அவர்களின் பரம ரசிகை. ஆங்கிலத்தில் "ப்யூட்டிஃபுல் ட்ரீ" என்னும் பெயரிலேயே வந்திருக்கும் புத்தகத்தைத் தரவிறக்கி வைத்துக் கொண்டு அவ்வப்போது படித்து வருவதோடு பலருக்கும் சிபாரிசும் செய்திருக்கிறேன். பெரியவர் ஜிஎம்பி ஐயா அவர்கள் பிராமணர் தவிர மற்றவர்க்குக் கல்வி மறுக்கப்பட்டது என்னும் பொருள்பட ஓர் பதிவு எழுதினபோது அதன் சுட்டியும் கொடுத்துப் படிக்கச் சொன்னேன். திறக்க முடியவில்லை என்று சொல்லி இருந்தார்! திரு மகாதேவன் எழுதியவற்றைப் பற்றிய விமரிசனம் "தமிழ் இந்து" தளத்தில், (ஹிந்தி ஆங்கிலப் பத்திரிகையின் தமிழ் த இந்து இல்லை) படித்திருக்கிறேன். தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வந்திருப்பதைப் படிக்க வேண்டும் என்னும் தணியாத ஆவலும் இருக்கிறது. ஃப்ரெஞ்ச் இந்தியா படித்ததில்லை என்றாலும் அது குறித்துக் கேள்விப் பட்டிருக்கேன்.


பிராகிருத மொழியிலும் கலப்புத் தமிழிலும் பேசி ஆட்சி புரிந்த மகேந்திர பல்லவன் காலத்தில் தமிழ் புத்துணர்ச்சி பெற்று பக்தி இலக்கியம் உருவானது. தமிழுக்கு பக்தி இலக்கியத்தை விட வேறு யாரும் தொண்டு செய்யவில்லை! வடமொழியைப் பேசியதால் நாட்டுக்குடிமக்களைத் தமிழில் பேசக் கூடாது என மகேந்திர பல்லவன் சொல்லியதாகவும் தெரியவில்லை. மன்னன் சைவ சமயம் திரும்பியதும் திருநாவுக்கரசர் அப்போது மாபெரும் சிறப்புடனேயே இருந்து வந்தார். ஞானசம்பந்தரும் அப்போது தான் தன் சிவத் தொண்டை தீந்தமிழில் பாமாலைகளாகப் புனைய ஆரம்பித்திருந்தார். அப்போது ஆரம்பித்து பாரதி, உ.வே.சா.வரை அனைவரும் சம்ஸ்கிருதம் அறிந்த தமிழ்ப்பண்டிதர்களே. தமிழுக்குப் பெரும் தொண்டாற்றினார்கள்.

மேலும் தமிழ்நாட்டில் பூணூல் தரித்தவர்கள் அனைவருமே பிராமணர்கள் என நினைக்கின்றனர். ஒரு சில ஸ்தபதிகள், பொன் ஆசாரிகள், தச்சர்கள் ஆகியோர் விஸ்வகர்மா எனப்படும் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவருக்கும் பெரும்பாலும் சம்ஸ்கிருத அறிவு இருந்தே வந்தது. அதிலும் ஸ்தபதிகள் எனப்படும் கல் தச்சர்களுக்கும், உலோக விக்ரஹங்கள் வடிப்பவர்களுக்கும் சம்ஸ்கிருத அறிவு இல்லை எனில் உளி பிடிக்க முடியாது. இவர்களும் செட்டியாரில் குறிப்பிட்ட இனத்தவரும் பூணூல் போட்டுக் கொள்வார்கள் என்பதோடு பிராமணர்களான எங்களைப் போல் ஆவணி அவிட்டத்தன்றும் பூணூல் மாற்றுவார்கள். இன்னும் வடநாடு போனால் க்ஷத்திரியர்களுக்கும் கட்டாயமாய்ப் பூணூல் உண்டு. சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் எல்லாருக்குமே உபநயனமும் இருந்து வந்தது என்பதை என்னுடைய "உபநயனம்" என்னும் நூலில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

பிராமணர்களை வடக்கே இருந்து வந்தவர்கள் எனில் சோழர்களை என்ன சொல்வது? சோழர்களின் பூர்விகம் வடநாடு தான். சூரிய வம்சம் எனத் தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள். முன் காலத்தில் வடக்கே இருந்த நாடுகளைத் தவிர்த்துத் தெற்கே பாண்டிய நாடு மட்டுமே பரந்து விரிந்திருந்ததாகச் சொல்வார்கள். இந்தச் சோழர்கள் சிபியின் வம்சம் என்றும் சொல்லிக் கொள்வார்கள் அந்த சிபி யார் தெரியுமா?

அந்த சிபி புறாவுக்காகத் தன்னையே அர்பணித்தப் பெருமை உடையவன். அவன் வழியில் வந்தவர்களே சோழ மன்னர்கள்.
ஆனால் அவன் ஆண்ட இடம் தமிழகப் பகுதி அல்ல.
அவன் ஆண்ட இடமே அவன் பெயரால் சிபி என்று அழைக்கப்படலாயிற்று. அவன் வம்சத்தில் வந்தவர்கள் சிபி, சிவி, சௌவிரர், சௌரதர் என்றெல்லாம் அழைக்கப்பட்டனர்.

அவன் வம்சாவளியில் பிறந்தவர்கள் எல்லாம் ஆங்காங்கே பரவி ஆட்சி அமைத்திருக்கின்றனர்.
அப்படி தமிழ் நாட்டுப் பகுதிக்கு வந்து ஆட்சி அமைத்தவன் சோழ வர்மன். அவனை முன்னிட்டு அவன் சந்ததியர் சோழர்கள் என்றழைக்கப்பட்டனர்.

சிபி என்னும் பெயரில் வேறு பெயர்கள், மஹாபாரதம், புராணங்களில் வந்தாலும், உசீனரன் மகனான, புறாவுக்காகத் தன் தசையை ஈந்த சிபி ஆண்ட இடம் சிந்து நதிப் பகுதி!!
சிபி என்னும் பெயரில் ஒரு இடம் இன்றும் பாகிஸ்தானில் உள்ளது.
அங்குள்ள மக்கள் சிபி வம்சத்தினர் என்று கூறிக்கொள்கின்றனர்.

ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வருகை தந்த சீன யாத்திரிகரான யுவாங் சுவாங் அவர்கள் இந்த இடத்தைப் பற்றி எழுதியுள்ளார்.
புறாவுகாகத் தன் தசையைக் கொடுத்த அரசனான சிபி இந்த நாட்டை ஆண்டான் என்றும் எழுதியுள்ளார்.

ஆகச் சோழர்களே வடக்கே இருந்து வந்தவர்கள் என்றிருக்க அவர்களைத் தமிழர்கள் இல்லைனு சொல்ல முடியுமா? 

64 comments:

  1. உங்களுடைய பின்னூட்டங்களையும் படித்தேன், இந்த இடுகையும் படித்தேன். ஒருவருடைய பெருமை அவர்களது செயல்களால்தானே ஒழிய குலத்தால் அல்ல. இதை எத்தனைமுறை யார் சொன்னாலும் ஏற்க மறுப்பவர்களை ஒன்றும் செய்யமுடியாது.

    தமிழ்நாடு என்று சொல்வதே myth. பாண்டிய மன்னனுக்கு உட்பட்ட இடங்களில் தமிழ் பரவிக்கிடந்தது. சோழர்கள், பல்லவர்கள் கலப்பு மொழி. அவர் பகுதிகளில் புத்த சமண சமயங்கள் வேறு கோலோச்சின. தமிழ் விரவிக்கிடந்த சேர்ர் அளம், மலையாளமும்ழியாக திரிபு பெற்றது.

    காலமாற்றங்களினால் எல்லா இடங்களிலும் மாற்றங்கள் வருவதைத் தடுக்க இயலாது.

    நிறைய விஷயங்கள் தெரிந்தவர் நீங்கள். பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. நீங்க சொல்வது சரியே! கோயில்களில் இந்தப் பிரசாதங்களை விற்பனை செய்ய ஆரம்பித்ததே அறநிலையத் துறை தான். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் காலை நிவேதனம் ஆன காஞ்சிபுரம் இட்லியை பட்டாசாரியார்கள் அவர்களுக்குக் கிடைக்கும் பங்கிலிருந்து அதிகாரிகளுக்குத் தெரியாமல் பக்தர்களுக்குப் பங்கிடுவார்கள். என்ன சொல்வது! கோயில் பிரசாதம் என்பதன் உள்ளார்ந்த பொருளே இப்போது இல்லாமல் வணிகமாக ஆகி விட்டது.

      Delete
  2. அங்கேயே உங்களைப் பாராட்டி தனி இடுகை தேவை எனக் கேட்க நினைத்தேன். இத்தனை ஆண்டுகளாக ரத்தத்தில் ஊறிப் போன அடங்கிப் போகும் குணம் தடுத்து விட்டது!! உங்களின் ஆராய்ந்து சொல்லும் அறிவின் நீட்சி ப்ரமிக்க வைக்கிறது! வாழ்த்துக்கள்.
    மற்ற மதங்களின் எல்லாரும் குருமார்கள் ஆகலாமா? அதற்கும் விதி முறைகள் உண்டல்லவா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க மிகிமா, படிச்சால் உங்களுக்கும் இதை எல்லாம் எழுதத் தோன்றும் தானே! எனக்கு மட்டும் இல்லை! :))

      அப்புறமா மற்ற மதங்கள் குறித்து நாம் பேசுவது முறையல்ல! அது எதுக்கு? வேண்டாமே! தப்பாய் நினைக்காதீங்க!

      Delete
  3. நீங்க மிகிமா என்று எழுதியதும் அட பெயர் நல்லாயிருக்கே என்று அவர் பெயரைப் பார்த்தால் மிடில் கிளாஸ் மாதவி.

    மற்ற மதங்களில் முன்பு எப்படி நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் தற்போது செல்வாக்கின் அடிப்படையில் தான் மதகுருமார்கள் உருவாகின்றார்கள். ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். இந்து மதங்களில் மட்டும் தான் சாதி என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு கிறிஸ்துவ மதம் குறித்து அதில் உள்ள மொத்த பிரிவினைகள் ஏதும் தெரியாது. ஒரு சின்ன சாம்பிள் தருகின்றேன். இதில் எப்படி குருமார்கள் உருவாகக்கூடும் என்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள் மாதவி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜோதிஜி! எல்லோருக்கும் செல்லப் பெயர் வைப்பது என் வழக்கம். அதன்படி மிகிமா என்னும் பெயர்! நெல்லைத் தமிழனுக்கு நெ.த. இப்படி ஏதேனும் வந்து மாட்டிக்கும். :)

      Delete
  4. இந்து மதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா?

    ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்! என்றார் பாரதியார்.

    ஜாதிகள் ஆயிரம் இருப்பினும் ஏற்றத் தாழ்வு பார்க்காமல் இருப்பது மேலான வாழ்க்கை. ஆனால் ஜாதிகளும் பிரிவுகளும் இந்துக்களிடம் மட்டும் தான் இருக்கிறதா?

    கொஞ்சம் சமூகத்தைச் சுற்றிப் பார்த்தால் பல விஷயங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. சுற்றிப் பார்ப்போம் வாருங்கள்!

    இந்துக்களிடம் தான் பல பிரிவுகள் இரு க்கின்றன என்றும் மற்றவர்கள் எல்லோரும் ஒரே மதம் ஒரே கடவுள் என்ற கொள்கையில் ஒன்றாக ஒற்றுமையாக இருப்பது போன்ற தோற்றத்தை ஊடகங்களும் திரைப்படங்களும் தொடர்ந்து பரப்பி தவறான செய்திகளை வருகின்றன.

    உண்மையில் கிறிஸ்த்துவம் மற்றும் இஸ்லாம் மதங்களிலும் பல்வேறு பிரிவுகள் இருக் கின்றன•

    முதலில் கிறித்துவ மதத்தில் எத்தனை பிரிவுகள் இருக்கின்றன என்பதை பார்ப்போம்.

    ஒரே கிறிஸ்து ஒரே பைபிள் ஒரே மதம் என்று சொல்ல‍ப்படும் கிறிஸ்துவ மதத்தில் . . .

    லத்தீன் கத்தோலிக்கர்கள், சிரியன் கத்தோலிக்க சர்ச்சுக்குள் நிழைய மாட்டார்கள்.

    இந்த இருபிரிவினரும் மார்தோமா சர்ச்சுக்குள் நுழையமாட்டார்கள்.

    இந்த மூன்று பிரிவினரும் பெந்தகோஸ்ட் சர்ச்சுக்குள் நுழைய மாட்டார்கள்.

    இந்நான்கு பிரிவினரும் (Salvation Army Church) சால்வேஷன் ஆர்மி சர்ச்சுக்குள் நுழையமாட்டார்கள்.

    இந்த ஐந்து பிரிவினரும் சென்வென்த் டே அட்வென்டிஸ்ட் சர்ச்சுக்குள் நுழைவதில்லை.

    இந்த ஆறு பிரிவினரும் (Orthodox Church.) ஆர்தோடாக்ஸ் சர்சுக் குள் நுழையமாட்டார்கள்.

    இந்த ஏழு பிரிவினரும் (Jacobite church) ஜேகோபைட் சர்ச்சுக்குள் நிழையாமாட்டார்கள்.

    இப்படி கிறிஸ்தவர்களில் 146 பிரிவினர்கள் கேரளாவில் மட்டுமே இருக்கிறார்கள் என்கிறது அந்த தகவல்.

    தமிழகத்தை எடுத்துக் கொண்டால் நாடார் கிறிஸ்தவர்கள், தலித் கிறிஸ்தவர்கள், வன்னியர் கிறிஸ்தவர்கள் என்று மதம் மாறிய பிரிவினர்கள் எல்லோரும் அவர்களது ஜாதியை கிறிஸ்தவ ஜாதியாக மாற்றி ஜாதி கிறிஸ்தவர்களாகவே வாழ்கிறார்கள்.

    இப்படி மதம் மாறிய கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பப் பிள்ளைகளுக்கு வரன் பார்க்கும் போது சொந்தப் பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்களாகவே பார்ப்பதும் நடக்கிறது.

    அவ்வளவு ஏன்,மாதாவைக் கும்பிடும் கிறிஸ்தவர்கள் ஏசுவை ஏற்றுக்கொள்வதில்லை.

    ஏசுவைக்கும்பிடும் கிறிஸ்தவர்கள் மாதாவைக் கும்பிடுவதில்லை.

    இரண்டுமே கிறிஸ்தவத்தின் கடவுள் என்றாலும் இவ்விரண்டு பிரிவினரும் ஏசுவயும் மாதாவையும் பரஸ்பரம் சாத்தான்களை ஏசுவதைப் போல ஏசுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஜோதிஜி.. வெளிப்படையா எழுதிட்டீங்க. இதில் நிறைய எழுதலாம். அதேபோன்று இஸ்லாமிலும், புத்த மத்த்திலும். மனித சமூகத்தில் பல பிரிவுகள் உண்டு. ஆனாலும் இந்து மத்த்தில் நிறைய சீர்திருத்தங்கள் வரவேண்டும். துரதிருஷ்டவசமாக பிரிவுகள் அதிகமாவதுபோல்தான் தோன்றுகிறது. பொதுவெளிக்கு இது உகந்த டாபிக் இல்லை.

      இதன் பரிமாணத்தையும், அதனால் இந்து மத்த்தில் ஏற்படும் தாக்கத்தையும், எப்படி அது செய்யப்படுகிறது என்பதையும் ஓரளவு நான் அறிந்தவன். That knowledge helps me to protect my near and dears. அரசுக்கு நிச்சயம் என்ன நடக்கிறது என்பது தெரியும்.

      Delete
    2. அவ்வளவு ஏன்,மாதாவைக் கும்பிடும் கிறிஸ்தவர்கள் ஏசுவை ஏற்றுக்கொள்வதில்லை.

      ஏசுவைக்கும்பிடும் கிறிஸ்தவர்கள் மாதாவைக் கும்பிடுவதில்லை.// யெஸ் ஜோதிஜி! நானும் கிறித்தவ பள்ளி, கல்லூரி என்று படித்ததாலும் எனது தோழியர் பெரும்பாலும் கிறித்தவர்கள் என்பதாலும் (நாகர்கோவிலாயிற்றே படித்தது எல்லாம்) நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள் அவர்களிடமிருந்து கற்றேன். என் தோழியருக்கிடையேவே கத்தோலிக்கு சிரியன் கிறித்தவர்ளுக்கிடையே விவாதங்கள் வரும்...நீங்கள் அவர்களது பிரிவுகளையும் இங்கு தெளிவாகச் சொல்லிவிட்டீர்கள். ஒரு சில விஷயங்களை இங்குப் பொதுவெளியில் பேச முடியாதுதான். நெத சொல்லியிருப்பது போல்...கிறித்தவர்கள் மட்டுமின்றி இஸ்லாமியரிடையேயும் பிரிவினைகள் உண்டு. அதைச் சொல்லப் போனால் நீண்டுவிடும் என்பதாலும் பொதுவெளி என்பதாலும் குறிப்பிடவில்லை....

      கீதா

      Delete
    3. பலதும் தெரிந்திருந்தாலும் வெளிப்படையாக நம் குற்றத்தை நாமே சொல்லிக் கொள்கிறாப்போல் சொல்லக் கூடாது என்பதால் எதுவும் சொல்லவில்லை. பகிர்வுக்கு நன்றி ஜோதிஜி!

      Delete
  5. ஒரு சர்ச்சைக்குரிய, விபரமறிந்தோரும் எளிதில் எடுத்துப்பேச விரும்பாத, ஆனால் உள்ளூர நினைத்து மருகும், தெளிவுபடுத்த விரும்பும் ஒரு விஷயத்தைத் தயங்காது, தைரியமாக எடுத்துக் கையாண்டிருக்கிறீர்கள் (ஒரு பதிவரின் பதிவுக்குப் பதிலென இது உருவம்பெற்று வந்தபோதிலும்). விஷய ஞானத்துடன், மேலதிகத் தகவல்களைத் திரட்டித் தந்து, சில தென்னாட்டு சரித்திர உண்மைகள், காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் நெறிமுறைகள், கோயிலொழுகு முறைகள், சமூக வழக்கங்கள் என நிறுவியிருப்பதால், ஒரு சாரமான, சுவாரஸ்யமான பதிவாக இது அமைந்திருக்கிறது. கருத்தாழமும், உங்களின் மனத்தெளிவும் ஒருங்கே மிளிர்கின்றன; பாராட்டுக்கள்.

    எதுவும், யார் உண்மைக்குள் ஆழமாகப் பயணித்துப் புரிந்துகொள்ள விரும்புகிறார்களோ, அவர்களுக்குப் புரிய வரும். புரிந்துகொள்ள மறுப்பவர்கள், தங்களின் மனதிற்குள்ளேயே சண்டித்தனம் செய்பவர்கள், குழப்பக் கும்மியடிப்பவர்கள் ஒவ்வொரு சமூகத்திலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் கொஞ்சம் பேர் இருக்கத்தான் செய்வார்கள் - விதவிதமான முகமூடிகளை மாட்டிக்கொண்டு. அவர்களை வெறுமனே கடந்து செல்லும் காலம்.

    ReplyDelete
    Replies
    1. யெஸ் ஏகாந்தன் சகோ! நல்ல கருத்து உங்கள் கருத்தை அப்படியே டிட்டோ செய்கிறேன்...

      கீதா

      Delete
    2. ரொம்ப ரொம்ப நன்றி ஏகாந்தன் அவர்களே! கோயிலொழுகு முறைகள் குறித்து எழுதப் போனால் இப்போது முடியாது! ஶ்ரீரங்கம் பற்றித் தொகுப்பு எழுதுவதால் அதை எல்லாம் முடிஞ்சப்போ தேடிப் பிடிச்சுப் படித்தும் ஆடியோக்களில் கேட்டும் வருகிறேன். என்ன ஒரு பிரச்னைன்னா தொடர்ந்து எழுதுவது என்பது வாய்க்கவில்லை! பல்வேறு பிரச்னைகள்! :) மற்றபடி உங்கள் பாராட்டுகளுக்கு என் உளமார்ந்த நன்றி.

      நன்றி தில்லையகத்து/கீதா.

      Delete
  6. வணக்கம் சகோ
    பதிவுக்காக எவ்வளவு சரித்திர விடயங்களை அலசி இருக்கின்றீர்கள்.

    //பிராமணர்கள் தங்கள் தரத்தை தாங்களே தாழ்த்திக்கொண்டார்கள் என்பதில் ஓரளவு உண்மை இருக்கிறது//

    இது காலத்தின் (கோலம்) மாற்றம் எல்லா சமூகமும் இதில் சிக்கி சீரழிந்து இருக்கிறது காரணம் வேகமான வாழ்க்கை முறையை நோக்கி எல்லோரும் பணமே பிரதானம் என்று ஓடிக்கொண்டு இருக்கிறோம்.

    நானறிந்த ஸ்தபதி எல்லா ஆகம விதிகளும் தெரியும் மிகச்சிறந்த சிற்பி மாலையானால் வேறு உலகத்தில் பயணிப்பவர் ஆம் "மொடாக்குடிகாரன்" இந்த மாற்றம் பலரை காவு வாங்கி உள்ளது.

    இப்பதிவின் வழி நிறைய விடயங்கள் அறிய வைத்தமைக்கு நன்றி.

    செல் வழி இல்லையெனில் இன்னும் எழுதி இருப்பேன் - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, நீங்கள் சொல்வது உண்மையே! ஸ்தபதிகள் எல்லோருமே நல்லவர்களாக இருப்பதில்லை என்பது உண்மையே! நீங்கள் சொன்னாற்போல் சிலரை அம்பத்தூரில் இருந்தப்போ நாங்களும் பார்த்திருக்கோம். முடிஞ்சால் வந்து இன்னும் எழுதுங்க!

      Delete
  7. மேடம் அவர்களுக்கு நன்றி. எனது பதிவினில் திரு ஏகாந்தன் அவர்கள் பின்னூட்டம் ஒன்றை எழுதிய பிறகுதான் நீங்கள் எழுதிய இந்த பதிவினைத் தெரிந்து கொண்டேன்.

    நான் இன்று மதியம் திருச்சிடவுன் பக்கம் சென்று விட்டு இப்போதுதான் திரும்பினேன். இனிமேல்தான் எனது வலைப்பதிவில் உள்ள அன்பர்களின் கருத்துரைக்கும், உங்கள் வலத்தளத்திற்கும் மறுமொழி எழுத வேண்டும்.( நான் பிராமணர்களின் எதிர்ப்பாளன் இல்லை. எனது வாழ்வில் பங்களிப்பு செய்தவர்களில் பிராமண நண்பர்களும் உண்டு )

    ReplyDelete
    Replies
    1. வாங்க தமிழ் இளங்கோ ஐயா! நான் உங்களை அப்படி எல்லாம் பிராமண எதிர்ப்பாளர் என நினைக்கவே இல்லை. அப்படியானவர்களைக் கண்டால் மௌனமாகச் சென்று விடுவேன். என் சகோதரனிடம் சொல்வது போல் உங்களிடம் சொல்லலாம் என்பதாலேயே உங்கள் பதிவில் விரிவான கருத்துக்களைப் பதிந்தேன்.

      Delete
  8. அங்கேயே படித்தேன். நிறைய தெரிந்து கொண்டேன். வணக்கங்களுடன் மனதார்ந்த பாராட்டுகள். தனி இடுகையாகக் கொடுத்திருப்பதும் நல்ல செயல். நண்பர் திரு தமிழ் இளங்கோ அவர்களின் பதிவினால்தான் இவ்வளவு விவரம் தெரிய வருகிறது. அவரும் மனமாச்சர்யங்கள் இன்றி நடுநிலையுடனேயே பதிவிட்டிருந்தார். இருவருக்கும் பாராட்டுக்கள்.

    ஏகாந்தன் ஸார் பின்னூட்டத்தை வரிக்கு வரி வழிமொழிகிறேன். என்னால் பின்னூட்டம் கூட அப்படி யோசித்துத் தர இயலவில்லை!

    நண்பர் ஜோதிஜி அங்கே சொல்லியிருந்த புத்தகங்கள் இரண்டும் பற்றி கூகிள் செய்து பார்த்தேன். படிக்கவேண்டும்! இங்கும், அவரது பின்னூட்டமும் இன்னும் விவரங்கள் தருவதாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், உங்கள் பதிவுகளிலேயே ப்யூடிஃபுல் ட்ரீ புத்தகம் குறித்துச் சொன்ன நினைவு! ஆனால் ஜிஎம்பி சாரின் பதிவில் நிச்சயம் கொடுத்திருந்தேன். சுட்டியோடும் கொடுத்திருந்தேன். தேவையானால் உங்களுக்குச் சுட்டி அனுப்புகிறேன். படித்தால் நன்கு புரிந்து கொள்வீர்கள். மற்றபடி பாராட்டுக்களுக்கு நன்றி.

      Delete
  9. நிறையவிஷயங்களை அலசி ஆராய்ந்துள்ளீர்கள். பல விஷயங்களை தெரிந்து கொண்டேன் .எல்லாவற்றிக்கும் சாட்சி இருந்து கொண்டேதான் இருக்கிறது. எதையும் மறந்தோ ,மறைக்கவோ, மறுக்கவோ,முடியாது தெளிவான பதிவு

    ReplyDelete
    Replies
    1. வாங்க பூவிழி, மிக்க நன்றி. நான் எழுதியது கொஞ்சமே கொஞ்சம்! எழுதாமல் விட்டவை பல. அதிலும் இந்தக் கோயில் பிரசாதங்கள், சிறப்பு தரிசனக் கட்டணம் என எழுத ஆரம்பித்தால் எங்கேயோ போயிடும்! :)

      Delete
  10. கீதாக்கா அங்கும் சரி இங்கும் மீண்டும் வாசித்து நிறைய தெரிந்து கொண்டேன். நிறைய வாசிப்பும் சேகரிப்பும் தெரிகிறது. மனமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்! அக்கா!

    ReplyDelete
    Replies
    1. வாங்க தில்லைகத்து/கீதா, மிக்க நன்றி பாராட்டுக்கு!

      Delete
  11. கீதாக்கா அங்கும் சரி இங்கும் மீண்டும் வாசித்து நிறைய தெரிந்து கொண்டேன். நிறைய வாசிப்பும் சேகரிப்பும் தெரிகிறது. மனமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்! அக்கா!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கீதா, நான் பொதுவாக இம்மாதிரிச் செய்திகள், தகவல்கள், வரலாற்றுச் சேகரங்கள், அது குறித்த தகவல்கள் என்றால் முதலில் அதைப் படித்துக் குறித்துக் கொள்வேன். நினைவில் இருந்துவிட்டால் அது சமயத்தில் உதவியும் செய்து விட்டால் நன்றாகத் தான் இருக்கிறது! இப்போது நடந்ததும் அப்படியே!

      Delete
  12. ( மேடம் அவர்களுக்கு நன்றி. ஒரு பதிவினால் உங்களுக்கும் எனக்கும் இடையே இவ்வளவு கருத்து பரிமாற்றங்கள் வரும் என்று நான் எதிர் பார்க்கவில்லை. உங்கள் வாசகர் வட்ட நண்பர்கள் என்னைத் தவறாக நினைத்து விடக் கூடாது என்பதால் அங்கே எனது பதிவினில் சொல்லப்பட்ட எனது மறுமொழிகளையே இங்கும் தொகுத்து தந்து இருக்கிறேன் )

    மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மூத்த வலைப்பதிவர் கீதா சாம்பசிவம் அவர்களின் அன்பான நீண்ட கருத்துரைகளுக்கு நன்றி. ’அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சொல்லப்பட்ட தீர்ப்பை ஒட்டியே இந்த பதிவை எழுதி இருக்கிறேன். மற்றபடி பிராமணர்களின் கலாச்சாரத்தையோ அல்லது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியோ எழுதியது அல்ல. நான் பிராமணர்களின் எதிர்ப்பாளன் இல்லை. எனது வாழ்வில் பங்களிப்பு செய்தவர்களில் பிராமண நண்பர்களும் உண்டு

    // ஆகமம் கற்காமல் யாரும் அர்ச்சகர் ஆக முடியாது. மேலும் கோயில்களில் வழிபாடு செய்யும் சிவாசாரியார்களுக்கும் எங்களைப் போன்ற சாதாரண பிராமணர்களுக்கும் பெரும் வேறுபாடுகள் உண்டு. சிவாசாரியார்கள் வேதம் மட்டும் கற்காமல் ஆகமம், கோயில் வழிபாட்டு முறைகள் போன்றவற்றோடு சிவ தீக்ஷையும் பெற்றிருப்பார்கள். அத்தகையோரே பெரிய கோயில்களில் கருவறைக்குச் சென்று வழிபாடுகள் நடத்த முடியும். மற்றவர்கள் அவருக்குத் துணையாக உதவிகள் செய்யலாம். இந்தப் படிப்பும் சுமார் பனிரண்டு வருடங்கள் படித்தாக வேண்டும். //

    எனக்குத் தெரிந்து பெரியகோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும்போது, மற்ற அரசு வேலைகள் நியமனம் செய்வதில், பொதுவெளியில் விளம்பரம் செய்து அதிகாரிகள் / எழுத்தர்களை பணியில் அமர்த்துவது போல செய்வது கிடையாது. இந்த அர்ச்சகர் வேலைக்கான தகுதித் தேர்விற்கு எங்கு படித்து சான்றிதழ் பெற வேண்டும், தகுதித் தேர்வை நடத்துவது யார் போன்றவற்றில் வெளிப்படைத் தன்மை கிடையாது. பெரும்பாலும் அர்ச்சகர் என்றால், பிறப்பால் பிராமணர்கள் மட்டுமே என்பதே முடிவாக இருப்பதால் இதில் மற்றவர்கள் அதிகம் சிரத்தை காட்டுவதில்லை.

    மேலும் அறநிலையத்துறை சாராத பல கோயில்களை பல ஜாதியினரும் கட்டியிருந்தாலும், கொஞ்சம் வசதியான கோயில்களில் பலரும் ஒரு குருக்களை அல்லது அர்ச்சகரை நியமனம் செய்யும்போது, நிரந்தரமாகவோ அல்லது அவ்வப்போது பூஜை செய்யவோ யாரை ஏற்பாடு செய்து கொள்கிறார்கள் என்பது வெளிப்படை. ( அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள கோயில்களுக்கும் இது பொருந்தும். )

    // அப்படிப் படித்துக் கோயிலில் உள்ளே சென்று வழிபாடு செய்யும் தகுதி படைத்த நாடார் குல இளைஞர் ஒருவர்தென் மாவட்டத்தில் இருக்கிறார். //

    இது நான் அறியாத தகவல். அய்யா வைகுண்டர் கோயில் பற்றி கேள்விப் பட்டு இருக்கிறேன்.

    Xxxxxx

    // பெரும்பாலும் சரியான புரிதல் இல்லாமலேயே உங்கள் பதிவு எழுதப் பட்டிருக்கிறதோ என எண்ணுகிறேன். //

    ஆகம விதிகள் பற்றிய புரிதல் எனக்கு இல்லாமல் இல்லை. நான் திருச்சி நேஷனல் கல்லூரியில் தமிழ் எம்,ஏ படித்தபோது எங்களுக்கு கம்பராமாயணம் (முழுவதும் ) மற்றும் சைவசித்தாந்தம் இரண்டையும் முக்கிய பாடங்களாக ( Main Subject )வைத்து இருந்தனர். நான் இரண்டையும் பட்ட மேற்படிப்புக்கான பாடங்களாக கருதி படிக்கவில்லை.; இரண்டிலும் ஒன்றிப் போய்தான் படித்தேன். திருச்சி மலைக்கோட்டையில் ஒரு மடத்தில் ( தாயுமானவர் மடம் என்று நினைக்கிறேன் ) சைவ சித்தாந்த வகுப்புகள் சிலவற்றிற்கு சென்று குறிப்புகளும் எடுத்து இருக்கிறேன். எனவே திடீரென்று எனக்கு தோன்றியதை எழுதிவிடவில்லை.

    // இப்படிச் சொல்வதற்கு என்னை மன்னிக்கவும். வேறு யார் எழுதி இருந்தாலும் இப்படிச் சொல்லி இருப்பேனா என்பது சந்தேகம். இங்கே சொல்லலாம் என்று தோன்றியதாலேயே சொல்லி இருக்கேன். //

    மேடம் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. எனது வலைத்தளத்தில் உள்ள குற்றம் குறைகளை சுட்டிக்காட்ட, திருவிளையாடல் படத்தில் ஒரு பாடலில் ‘தமிழுக்கு உரிமை உண்டு என்று சொல்வதைப் போல உங்களுக்கு உரிமை உண்டு.

    கட்டண தரிசனம் என்பது அறநிலையத் துறையால் நிர்ணயம் செய்யப்படுவது என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.

    மேலும் உங்கள் பதிவினில் நீங்கள் சுட்டிக் காட்டிய உங்களுடைய பதிவுகளுக்கு, எனது பதிவினில் உள்ள ” திருமூலர் சொல்லும் ஆகமச் சிறப்புகள் ‘ விவரங்களே போதும் என்று நினைக்கிறேன்.

    Xxxxx

    ஆகமவிதிகள் கற்றுத்தரும் பள்ளிகள் சென்னையிலும் திருச்சியிலும் இருப்பதனை உங்களுடைய இந்த கருத்துரை மூலம் தெரிந்து கொண்டேன். இங்குள்ள (திருச்சியில்) நண்பர்களிடம் கேட்டு விவரம் தெரிந்து கொள்கிறேன்.

    // சம்ஸ்கிருதப் புலமை இருந்தால் தவிர ஆயுர்வேதம் படிக்கவும் முடியாது! //

    இப்போது ஆயுர்வேத மருத்துவப் படிப்பு என்பது ஆங்கிலத்திலும், தமிழிலும் வந்து விட்டது. எனது உறவினர் ஒருவர் AYURVEDIC PHYSICIAN

    Xxxxxxx

    ReplyDelete
  13. மேடம் அவர்களுக்கு நன்றி. மேலே டாக்டர் கே.கே.பிள்ளை அவர்கள் எழுதிய நூல் குறித்து, நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களுக்கு சொல்லிய மறுமொழியையே இங்கும் சொல்ல விரும்புகிறேன்.

    // நான் இந்த நூல் முழுவதையும், கல்லூரி மாணவனாக இருந்தபோது ஒருமுறையும், அப்புறம் சொந்தமாக விலைக்கு வாங்கிய பின் இருமுறையும் படித்து இருக்கிறேன். அவ்வப்போது மேற்கோள்கள் சம்பந்தமாகவும் படிப்பதுண்டு. எனக்குத் தெரிந்து இந்த நூலில் டாக்டர் கே.கே.பிள்ளை அவர்கள் எந்த ஒரு சார்பாகவும் எழுதவில்லை என்றே நினைக்கிறேன். //

    Xxxxxxx

    // ஆகவே தமிழ் பிராமணர்கள், வடக்கே இருந்து வந்தவர்கள் என்றெல்லாம் இல்லை. வடக்கே இருந்தும் வந்திருக்கிறார்கள் பிராமணர்கள் உள்படப் பெருவாரியான மக்கள் என்ற பொதுவான பொருளிலே தான் எடுத்துக் கொள்ளலாம். ஒரு சிலர் குறிப்பிட்ட வழிபாடுகளுக்கென வடக்கே இருந்து வரவழைத்திருக்கலாம். //

    மேடம் அவர்களுக்கு நன்றி. நீங்கள் இங்கே இவ்வாறு குறிப்பிட்டதற்கும், டாக்டர் கே.கே.பிள்ளை அவர்கள் அங்கே அவரது நூலில் , தமிழ்நாட்டு பிராமணர்கள், அயல்நாட்டு பிராமணர்கள் என்ற தலைப்பில் சொன்ன கருத்துக்களுக்கும் பெரிதாக வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.

    Xxxxxx

    மேலே களத்தில் கருத்துரையாடல் மூலம் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட, மேடம் அவர்களுக்கும், ஜோதிஜி அவர்களுக்கும் நன்றி. பிராமண எதிர்ப்பு, பிராமணர்களின் விழிப்புணர்வு, பிராமணர் அல்லாதா மற்றவர்களுக்கு கல்வி மறுக்கப் பட்டமை, மகேந்திரவர்மன், பிராமணர் அல்லாத மற்றவர்கள் பூணூல் அணிந்தமை, குடும்பமரம் என்று பல்வேறு தகவல்கள்.

    // நம் குடும்பத்தில் ஆறு தலைமுறைகள் வரைக்கும் கண்டவர் அவர்களைப் பற்றி முழுமையாக விபரங்கள் அறிந்தவர் லட்சத்தில் பத்துபேர்கள் இருப்பார்களா? என்பது சந்தேகமே. என்னால் எங்கள் குடும்பத்தில் நான்கு தலமுறைக்கு மேலே செல்ல முடியவில்லை. அவர்கள் யார்? எங்கேயிருந்தது வந்தார்கள்? யாருடன் தொடர்பு வைத்திருந்தார்கள். இன கலப்பு உருவானதா? இதையெல்லாம் யோசித்துப் பாருங்கள். இங்கே யாருமே சுத்தமில்லை என்ற எளிய ஏற்றுக் கொள்ள கடினமாக உள்ள விசயம் தான் நமக்குக் கிடைக்கும். //

    என்ற ஜோதிஜி அவர்களது கருத்தினை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். இன்றைய நிலையில், இந்தியாவில் நாம் நமது சாதிச் சான்றிதழில் எவ்வாறு குறிக்கப் பட்டு இருக்கிறமோ அந்த ஜாதிதான். மதமாற்றம் என்பது போல ஜாதிமாற்றம் என்பதற்கும் சட்டத்தில் அனுமதி இருக்குமானால் இங்கே நிறையபேர் மாறி விடுவார்கள்.

    “நாலாம் தலைமுறையைப் பார், நாவிதனும் சித்தப்பன் ஆவான்” என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.

    Xxxxxxx

    ( மேலும் இதற்கான மறுமொழிகளை நீங்கள் எனது பதிவினில் சொல்லி இருப்பதை இப்போதுதான் பார்த்தேன். இனிமேல்தான் அவற்றை படிக்க வேண்டும். வாதப் பிரதி வாதங்கள் குறித்து நான் அதிகம் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. இதனால் வலைபதிவர்கள் என்ற முறையில் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.. எப்போதும் உங்கள் வலைத்தளத்தினை தொடர்கின்றேன். நன்றி. )

    ReplyDelete
    Replies
    1. எவ்விதமான மனவேறுபாடும் இல்லை ஐயா! நான் வாதம், விவாதம் என்றெல்லாம் நினைக்காமல் என் தரப்புக் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளேன். அவ்வளவே! நீங்கள் உங்கள் கருத்தைச் சொல்கிறீர்கள். இந்த அளவிலேயே நான் இவற்றைப் பார்க்கிறேன். உங்கள் நல்லெண்ணம் குறித்தும் உங்கள் பெருந்தன்மை குறித்தும் நன்கு அறிவேன்.

      Delete
  14. >>> ஒரு சர்ச்சைக்குரிய, விபரமறிந்தோரும் எளிதில் எடுத்துப்பேச விரும்பாத, ஆனால் உள்ளூர நினைத்து மருகும், தெளிவுபடுத்த விரும்பும் ஒரு விஷயத்தைத் தயங்காது, தைரியமாக எடுத்துக் கையாண்டிருக்கிறீர்கள்..<<<

    திரு. ஏகாந்தன் அவர்களது கருத்தினை நானும் வழிமொழிகின்றேன்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி துரை.செல்வராஜு அவர்களே!

      Delete
  15. >>> தமிழகத்தை எடுத்துக் கொண்டால் நாடார் கிறிஸ்தவர்கள், தலித் கிறிஸ்தவர்கள், வன்னியர் கிறிஸ்தவர்கள் என்று மதம் மாறிய பிரிவினர்கள் எல்லோரும் அவர்களது ஜாதியை கிறிஸ்தவ ஜாதியாக மாற்றி ஜாதி கிறிஸ்தவர்களாகவே வாழ்கிறார்கள்.<<<

    திரு ஜோதிஜி அவர்களுக்கு நன்றி..

    கூடவே சிவ - வைணவ பெயர்களையும் வைத்துக் கொள்கின்றார்கள்..

    தற்போது வாழும் இஸ்லாமிய நாட்டில் கூட பல பிரிவுகள்...
    Arab Bedouin - Bedu மக்களுக்கு மதிப்பில்லை.. அவர்களுடன் மண உறவுகள் கிடையாது..
    பொதுவெளியில் சில விஷயங்களைப் பேசமுடியாது..

    ஆனால், கல்லடி படுவது நாம் தான்..

    ReplyDelete
    Replies
    1. //ஆனால், கல்லடி படுவது நாம் தான்..// இருக்கலாம் ஐயா. துரை செல்வராஜூ அவர்களே, பிறர் மேல் ஒற்றை விரலை நீட்டும் முன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கும் மற்ற விரல்களை மறக்கலாமா? முதலில் நம்மை நாம் சரி செய்து கொள்வோம். பின்னர் மற்றவர்கள் தானாகச் சரியாவார்கள்.

      Delete
  16. //இப்போது ஆயுர்வேத மருத்துவப் படிப்பு என்பது ஆங்கிலத்திலும், தமிழிலும் வந்து விட்டது. எனது உறவினர் ஒருவர் AYURVEDIC PHYSICIAN..//

    இதனால் என்ன பயன் என்று தெரியவில்லை. சன் டிவியில் ஒரு பெரியவர் காலை நிகழ்ச்சியாக மூலிகை வைத்தியம் பற்றிச் சொல்கிறார். தவறாது பார்ப்பது என் வழக்கம். மூலிகைகளுக்கு ஆங்கில தாவரப் பெயர்கள் சொல்வார். ஆங்கில மருத்துவத்தில் கையாளக் கூடிய சிகிச்சைகளுக்கு நேரான மூலிகை வைத்தியங்கள், வியாதிகள் என்று அவர் விவரிக்கும் பொழுது மருத்துவத் துறையில் அவருக்கிருக்கும் கரைகண்ட ஞானம் நம்மை வியக்க வைக்கும். அலோபதி மருத்துகள், அவற்றின் பெயர்கள் எல்லாம் ஜெர்மானிய மொழி சார்ந்தவை நமக்குத் தெரியும். ஆங்கிலத்தில் டாக்டர் படிப்பு என்று ஒரு வசதிக்காக சொல்கிறோமே தவிர அந்தப் படிப்பு தரும் கல்வி வேறொரு மொழி வழி வந்தது என்பது தெளிவு.

    ReplyDelete
    Replies
    1. வெளியே சொல்லலாமா என்னனு தெரியலை. ஆனால் பெயர் சொல்லாமல் குறிப்பிடுகிறேன். எனக்குத் தெரிந்த வலைப்பதிவர் பெண் அவரின் தாய்க்குப் புற்று நோய் இரண்டாம் நிலையில் இருந்தது. அவர் ஆங்கில மருத்துவம் எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக சித்த/ஆயுர்(?) எதுனு நினைவில் இல்லை. வைத்தியம் செய்து கொண்டு இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதைக் குறித்து அவர் மகளான அந்த வலைப்பதிவர் பகிர்ந்து கொண்டிருந்தார். ஆகவே நம்முடைய வைத்திய முறையில் இல்லாத மருத்துவமே இல்லை! ஆனால் நம்மிடம் சரியான புரிதல் இல்லை! ஆயுர்வேதத்தில் அறுவை சிகிச்சை கூட உண்டு! ஜாம்நகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக் கூடங்களை எல்லாம் பார்த்திருக்கோம்.

      Delete
    2. ஆயுர்வேத மருத்துவத்தை குறைத்துச் சொல்வதற்காக நான் இதைச் சொல்லவில்லை.
      நான் சொன்னது மொழி பற்றி. ஆயுர்வேத மருத்துவ ஞானம் என்பது அது எந்த மொழியில் பிறந்ததோ அந்த மொழி வார்த்தை உச்சரிப்பில் எந்த மொழியிலும் இருக்கலாம்.
      திரிபலா சூரணம், அஸ்வகந்தாதி லேகியம் இப்படி.
      ஆயுர்வேதத்தைத் தமிழில் படிக்கிறேன் என்று அஸ்வகந்தாதியை குதிரை லேகியம் என்று தமிழ் படுத்தினால் தான் ஆபத்து. அஸ்வகந்தாதி லேகியத்தின் மூலப்பொருட்களே வேறு.
      நான் ஹைஸ்கூலில் படிக்கும் பொழுது (1956) கார்பன்-டை-ஆக்ஸைடு என்று தான் எழுதுவோம்.
      ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் என்று எழுதும் பொழுது, தண்ணீர்க்கான HO2 (ஹெச் ஓ டூ) என்பதான கலப்பு விகிதம் சுலபமாகப் புரியலாம்.
      கார்பன்-டை-ஆக்ஸைடை, கரியமிலவாயு என்று அடுத்த காலத்தில் சொல்லிக் கொடுத்தார்கள்.
      தமிழ் வழிக் கல்வியில் இப்பொழுது அதற்குப் பெயர் என்ன என்று தெரியாது.

      Delete
    3. வாங்க ஜீவி சார், நானும் மருத்துவம் குறித்தே சொல்லி இருக்கேன். ஏன் எனில் சித்த மருத்துவத்தைப் போல் ஆயுர்வேத மருத்துவமும் சிறப்பானது என்று சொல்வதற்காகவே! நீங்கள் சொல்கிறாப்போல் அஸ்வகந்தாவைக் குதிரை லேகியம்னு படிச்சால் அர்த்தமே மாறும். அதுவும் புரிகிறது. ஆனால் நான் என்னளவில் அத்தகைய தமிழில் ஆன புத்தகங்களையோ, ஆங்கிலப் புத்தகங்களையோ இன்னும் பார்க்கவில்லை! அல்லது பார்க்க நேரிடவில்லை! :)

      Delete
    4. ஆனால், பாருங்க, இந்த கடவுள் விஷயமே வேறு.

      முருகா காப்பாத்துப்பா
      ஷண்முகா காப்பாத்துப்பா
      அழகா காப்பாத்துப்பா
      ஆறுமுகா காப்பாத்துப்பா
      திருச்செந்தூர் வாழ் தெய்வமே காப்பாத்துப்பா
      வட பழனி ஆண்டவரே காப்பாத்துப்பா
      பழனி ஆண்டவரே காப்பாத்துப்பா
      சிவபெருமானின் இளைய மகனே காப்பாத்துப்பா
      கணபதியின் தம்பியே காப்பாத்துப்பா

      -- என்று வழிபடும் பொழுது தான் மனதுக்கு நெருக்கமாகவும் வழிபடுவது புரிவதாகவும் இருக்கிறது.
      (என்னைப் பொருத்தமட்டில்)

      Delete
    5. மீள் வரவுக்கு நன்றி ஜீவி சார். என்னைப் பொறுத்தவரை பிள்ளையாரே இது என்ன வேலைனு சத்தம் போடறது தான்! அப்போத் தான் நெருக்கம் வருது! :)

      Delete
    6. இதுவும் மொழிக்காகத் தான் சொன்னேன். தாய்மொழிதான் நெஞ்சோடு பேசுகிறது. நம்மை ஆட்டுவிக்கிறது... நெருக்கத்திற்குத் துணையாக இருக்கிறது..

      எனக்கும் முருகனுக்கு அடுத்து பிள்ளையார். முழுமுதற் கடவுளோடு வேண்டுதல்கள் நிறைவுறும்.
      என்னோட பிள்ளையார் வரிசையில் வெளிநாட்டுப் பிள்ளையார் எல்லாம் வருவாங்க.. நாஷ்வெல், நியூபர்க், அட்லாண்டா என்று..

      என் நலத்தோடு எல்லோரின் நலத்திற்காகவும் வேண்டிக் கொள்வேன். அதில் நம் பதிவுலக லிஸ்ட் பெரிது.. நீங்களும் அந்த லிஸ்டில் சேர்த்தி.

      Delete
  17. என்ன அப்படி கேட்டு விட்டீங்க? நான் தான் இருக்கேன்ல. நமக்கு பொதுவெளி உள்வெளி எல்லாமே ஒன்னு தான். நீங்க கேட்டது முஸ்லீம் சார்ந்த சில விசயங்கள். பிடிங்க.

    ReplyDelete
    Replies
    1. மீள் வருகைக்கு நன்றி ஜோதிஜி!

      Delete
  18. தமிழக அரசு, தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களை ஏழு வகையாகப் பிரித்துள்ளது.

    1. அன்சார்
    2. தக்கானி முஸ்லீம்
    3. துதிகுலா
    4. லப்பைகள் (இராவுத்தர் மற்றும் மரைக்காயர் உட்பட)
    5. மாப்பிள்ளா
    6. ஷேக்
    7. சையத்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் லப்பைகள், ராவுத்தர்கள், மரைக்காயர்கள் மிகுதியாக உள்ளனர். மரைக்காயர்கள் என்பவர்கள் மரக்கலங்களில் வணிகம் செய்து வந்தவர்கள் (செய்ய வந்தவர்கள் அல்ல, செய்து வந்தவர்கள்). மரக்கலம் + ஆயர் என்னும் வார்த்தை, மரக்கலாயர் என்று மாறி, மரைக்காயர் என்று மருவியுள்ளது. இன்றும் வணிகம் சார்ந்த தொழிலே ஈடுபட்டு வருகின்றனர்.

    யானைகளை வைத்து பராமரிப்பவர் மாவுத்தன் என்று அழைக்கப்பட்டார். அதுபோல் குதிரைகளை பராமரிப்பவர் ராவுத்தர் என்று அழைக்கப்பட்டார். பாண்டிய மன்னனின் குதிரைப் படை குதிரைகளை பராமரிப்பதும், குதிரைகளை வாடகைக்குக் கொடுப்பதும் அவர்களது தொழிலாக இருந்தது. இன்று பெரும்பாலானோர், வியாபாரம் உள்ளிட்ட வேறுத்தொழில்களுக்கு சென்றுவிட்டாலும், திருமணங்களுக்கு குதிரைகளை வாடகைக்கு விடும் சிலர் இருக்கின்றனர்.

    இவ்விரு பிரிவினரும் இங்கே பிறந்து, இங்கேயே வாழ்ந்து வருபவர்கள். அப்துல்லா கூறியதுபோல் தேவர் சாதியிலிருந்து இருந்து மாறியவர்கள். மரைக்காயர்கள், செட்டியார்களாக இருந்து இஸ்லாமியர்களாக மாறியவர்களாக இருக்கக்கூடும் என்றொரு கருத்தும் நிலவுகின்றது.

    இஸ்லாம் அறிமுகமானப் பொழுதில் இஸ்லாத்தை பரப்ப வந்தவர்கள் அரபி மொழிப் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை யாரேனும் அழைத்தால், வருகிறேன் என்பதை அரபியில் 'லப்பைக்கும்' என்று கூறுவார்கள். லப்பைக்கும் என்னும் வார்த்தைதான் சுருங்கி லப்பை என்று ஆகிவிட்டது. அவர்கள் இங்கேயே திருமணம் புரிந்து இங்கேயே வாழத்தொடங்கிவிட்டனர். தமிழர்களோடு செய்த திருமணத்தின் காரணமாக, அரபி மொழி பேசுவது குறைந்து தமிழே அவர்களது முதன்மையான மொழியாகியது. காலப்போக்கில் அவர்களது வாரிசுகள் அரபி அறியாதவர்களாகவே ஆகிப்போயினர். அப்துல்லா கூறியிருக்கும் அரபியை தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமியர்கள் யாரும் தமிழகத்தில் கிடையாது என்பது இவர்களுக்கும் பொருந்தும்.

    கடற்கரையோரம் வசிக்கும் மீனவர்களும் இஸ்லாத்திற்கு மாறினர். அவர்களுக்கென்று தமிழக அரசு தனியாக சாதிப் பட்டியலில் இடம் ஒதுக்கவில்லை. ஆனால், இஸ்லாமியர்களிடையே அவர்கள் அலாக்கரை மக்கள் என்று அறியப்பட்டனர். அவர்கள் கடற்கரையோரம் வசித்ததால் (அலை + கரை) அலைக்கரை என்னும் வார்த்தை பேச்சுவழக்கில் அலாக்கரை என்று வழங்கப்படுகின்றது.

    ReplyDelete
    Replies
    1. இந்த விபரங்கள் எல்லாம் ஓரளவுக்கு அறிந்திருக்கிறேன்.

      Delete
  19. இது தவிர இஸ்லாமியர்களிடையே நிலவும் இன்னொரு பாகுபாடு தமிழ் முஸ்லிம், உருது முஸ்லிம் பிரிவுகள். உருது பேசும் முஸ்லிம்கள் தமிழ் பேசும் முஸ்லிம்களை அவர்களுக்குக் கீழானவர்களாகத்தான் பார்க்கின்றனர். உருது முஸ்லிம்களின் வீட்டு வாசலில் To Let போர்ட் தொங்கினால், (Only for Urdu Muslims) என்னும் அடைப்புக்குறியை பார்க்க முடியும். முஸ்லிம் லீக் தவிர்த்த இஸ்லாமியக் கட்சிகள் தங்களுக்கான தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளிடம் கேட்கும்பொழுது, தஞ்சாவூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம் என்று கேட்பார்களே தவிர, உருது முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் வேலூர் தொகுதியைக் கேட்க மாட்டார்கள்.

    நீங்கள் கூறியிருக்கும் அவர்களது மொழிப்பற்று என்பதை விடவும், தாம் பேசும் விஷயம் கூட இருக்கும் உருது தெரியாத நபருக்கு தேவையற்றது என்னும் தொனியிலேயே அமைந்திருக்கும். நிறுவன நிர்வாகத்தின் மேல்நிலையில் இருக்கும் சிலரைத் தவிர மற்ற உருது முஸ்லிம்கள் மூன்றாம் நபர் தாம் பேசுவதை அறிந்துகொள்வதால் எந்தப் பயனும் இல்லை என்னும் நிலையிலேயே தம்முள் உருது மொழியில் பேசிக்கொள்வார்கள்.

    இன்னொரு வகை முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். அவர்கள் போரா முஸ்லிம் என்று அழைக்கப்படுவார்கள். அவர்களது பள்ளிவாசலில் போரா முஸ்லிம்கள் தவிர வேறு யாரும் தொழ முடியாது. வாசலிலேயே ஒருவர் காவலுக்கு இருப்பார். புதிதாக யாரும் தெரிந்தால், தனியே அழைத்து இது உங்களுக்கான பள்ளி இல்லை; வெளியே செல்லுங்கள் என்று கூறிவிடுவார். அப்படியும் இவர்களது பார்வைக்குத் தப்பி யாரேனும் அப்பள்ளியில் தொழுதுவிட்டால், அவர்கள் சென்ற பின்பு அவ்விடத்தை கழுவி விடுவார்கள். (செம்மங்குடி சீனிவாச அய்யங்கார் நினைவுக்கு வருகின்றாரா?)

    ReplyDelete
    Replies
    1. எங்கள் வீட்டுக் குழந்தைகள் உணவு உண்ணவில்லை என்றாலோ வேறு பிரச்னை என்றாலோ நாங்கள் குழந்தையும் கையுமாகப்போய் நிற்பது மசூதிகளின் வாசலில் தான்! அதனால் நல்ல பலன் இருப்பதையும் கண்டிருக்கோம். சின்ன வயசில் எனக்கு அக்கி வந்திருந்தப்போ என்னை குணமாக்கியது மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு கடை வைத்திருந்த உருளைக்கிழங்கு சாயபு என்பவர் தான்! :)

      Delete
  20. இவை எல்லாம் பல ஆண்டுகளுக்கு முன் அலசி ஆராய்ந்து முடித்தாகி விட்டது. இன்னமும் பல தகவல்கள் வேண்டுமென்றால் இந்த பதிவின் பின்னூட்டத்தை முழுமையாகப் படித்துப் பார்க்கவும். குறைந்தபட்சம் அரை நாட்கள் உங்களுக்கு ஆகும். ஆனால் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்.

    http://deviyar-illam.blogspot.com/2011/01/blog-post_17.html#comment-form

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாய் உங்கள் பதிவில் வந்து படிக்கிறேன் ஜோதிஜி!

      Delete
  21. “நாலாம் தலைமுறையைப் பார், நாவிதனும் சித்தப்பன் ஆவான்” என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.

    அற்புதம். நிஜவாழ்க்கையில் பார்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? அதைப் பகிர முடிந்தால் பகிரலாமே! எங்களிடமும் சுமார் ஏழு தலைமுறை வரை உள்ள வம்சாவளி உள்ளது! அந்த ஏழாம்/அல்லது முதலாம் தலைமுறைக்காரர் திருநெல்வேலி பாபநாசத்திலிருந்து இங்கே கும்பகோணம் அருகிலுள்ள பரவாக்கரைக்கு வந்திருக்கார்! அதன் பின்னர் அவருடைய வம்சம் அங்கேயே நிரந்தரமாகக் குடியேறி உள்ளது! எங்க பொண்ணு Family Tree "குடும்ப மரம்" என்று படம் வரைந்து ஆரம்பத்திலிருந்து இப்போது வரை உள்ளவர்களைக் குறித்து எழுதி வைத்திருக்கிறாள்.

      Delete
  22. அன்பின் ஜோதிஜி அவர்கள் வழங்கியுள்ள தகவல்களுக்கு நன்றி..
    தெரிந்திருந்த விஷயங்களை மீண்டும் சில புள்ளி விவரங்களுடன் தெரிந்து கொண்டேன்..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. மீள் வருகைக்கு நன்றி துரை செல்வராஜு அவர்களே!

      Delete
  23. அன்பின் ஜோதிஜி அவர்கள் குறிப்பிட்டுள்ள போரா முஸ்லீம்கள் (குஜராத்திகள்) இங்கே குவைத்தில் அதிகமாக இருக்கின்றனர்.. இவர்களின் அதிகமான வர்த்தக நிறுவனங்கள் அவர்களுடையது.. இவர்கள் தொழுமிடம் தனியாக இருக்கின்றது.. தொழுகைக்கு தூய வெள்ளை உடையுடன் தான் வருவார்கள்...

    ReplyDelete
    Replies
    1. துரை செல்வராஜு! போரா முஸ்லீம்கள் வடக்கே அதிகமோ?

      Delete
  24. முதலில் எனக்கு பிராமணன் யார் என்னும் சந்தேகமே வருகிறதுஅந்தக்காலத்தில் இன்னின்னவருக்கு இன்னின்ன பணிகள் என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது பிராமணன் என்பவன் செய்ய வேண்டிய கடமைகள் வகுக்குக பட்டன தங்களுக்காக உழைத்து வாழக்கூடாது என்பதும் அதில் ஒன்று பிச்சை எடுத்து உண்ண வேண்டும் என்றெல்லாம் இருந்தது இப்போதோ பிறப்பால் பிராமணன் என்பவர்கள் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் காரியங்களெதையும் செய்வதில்லை வணிகராக க்‌ஷத்திரியனாக சூத்திரராக என்று எங்கும் பணி செய்கிறார்கள் இவர்களுக்கு இந்த பிராமணன் என்னும் முத்திரை தேவையா இன்னும் நிறையவே எழுதலாம் ஆனால் நீளமாக எழுதி விட்டால் படிப்பவர்கள் எங்கே? இப்படி பிராமணன் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் மனதில் எங்கேயோ தாம் உயர்ந்தவர் என்னும் எண்ணம் வேரூன்றி இருக்கிறது அதுவே அவர்களை மற்றவர் மீது ஆதிக்கம்செய்ய வைத்திருக்கிறது ஆனால் காலம் மாறிவருகிறது வாழ்க்கையின் அர்த்தங்களே மாறி இருக்கிறது பெரும்பாலான எண்ணங்கள் ஏதோ பெர்செப்ஷனின் அடிப்படையில்தான் வருகிறது அதுவும் இந்த ஆகம விதிகள் கோவில் கட்டுமான முறைகள் பற்றியே சொல்வதாக பெர்செப்ஷன்
    பகவத் கீதை ஒன்பதாம் அத்தியாயத்தில் பதினேழாவது சுலோகத்தில் / இந்த ஜகத்தின் தந்தை,தாய்,பாட்டனாரவனும் , கர்ம பலனைக் கொடுப்பவனும், அறியத்தக்கவனும்,தூய்மை செய்பவனும்,ஓங்காரம், ரிக் சாமம் யஜுர் வேதங்கள் ஆகின்றவனும் நானே.என்று மூன்று வேதங்கள் பற்றியே கூறப்பட்டிருக்கிறது அது கீதை காலத்தில் அதர்வண வேதம் பற்றிக் கூறவில்லை இந்த ஆகம விதிகள் அதர்வணக் கொள்கையோ என்று நினைக்கத் தோன்றுகிறது மாறிவரும் காலத்திற்கு ஏற்ப வேற்று சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது சமீபத்திய தீர்ப்பு பல வழக்கங்களும் ஏதோ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது அதன் மூல காரணங்கள் மறக்கப்படுகின்றன யாரோ எங்கோ சொல்லி இருக்கிறார்களென்பதால் நடைமுறை விஷயங்களில்லாமல் போவதில்லை என்னவெல்லாமோ எழுதத் தோன்றுகிறது பின் தான் இதுபின்னூட்டம் என்பதுநினைவுக்கு வந்தது

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி சார், இங்கே பிராமணன் குறித்த பேச்சே இல்லை. கோயில் அர்ச்சகர்கள், பட்டாசாரியார்கள், குருக்கள் போன்றோரைக் குறித்தே பேச்சு! மற்றபடி கீதையில் கண்ணன் சொல்லி இருப்பதை அவரவர் மனப்போக்கிற்கு ஏற்ப கருத்துக் கொள்ள முடியும்! பொதுவாக நம் இதிகாச, புராண, வேதாந்தங்களின் போக்கே அது தான். ஒவ்வொன்றாகச் சந்தேகங்களை சொல்லிச் சொல்லித் தெளிய வைப்பது! ராமாயணம் படிக்கையில் வேறே ஒரு ஸ்லோகத்தின் பொருள் புரியும்! மற்ற ஸ்லோகங்கள் படிக்கையில் வேறொன்றின் பொருள் புரியும்! உபநிஷத்துக்களின் சாரம் ராமாயணம் படித்தால் புரிய ஆரம்பிக்கும் என்பார்கள்.

      Delete
  25. அறிந்து கொண்ட விஷயங்களை தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள். பின்னூட்டங்களும் அருமை. பலர் எழுத தயங்கும் விஷயங்களை திருப்பூர் ஜோதிஜி எழுதி உள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பானுமதி. உங்கள் கருத்தை இப்போத் தான் கவனிக்கிறேன்.

      Delete
  26. நண்பர் திரு. ஜோதிஜி அவர்களின் பின்னூட்டங்கள் பிரமிப்பூட்டுகின்றன... வாழ்த்துகள் ஜி

    ReplyDelete
  27. ரொம்ப நாள் கழிச்சு நல்ல உரையாடல்.. ஜோதிஜிக்கு ஸ்பெஷல் நன்றி..

    ReplyDelete
    Replies
    1. நன்றி எல்கே வரவுக்கும் கருத்துக்கும்!

      Delete
  28. ஜிஎம்பி சார் மொழி பிரச்சனை இல்லை.. சில சமயம் , தேவர் மாதிரி முருகனை திட்டக் கூட செய்வேன்..

    ReplyDelete
    Replies
    1. எல்கே, மொழிப் பிரச்னை குறித்துச் சொல்லி இருப்பது எழுத்தாளர் ஜீவி அவர்கள். :)

      Delete