எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, April 13, 2019

ஶ்ரீராமனுக்கு ஜெயமங்களம்!

இன்று ஶ்ரீராமநவமி. ஶ்ரீராமனுக்கு ஜன்ம தினம். பாவம் ராமன்!   ஓர் அரசகுமாரனாகப் பிறந்து காட்டில் வாழ்ந்தான். மனைவியைப் பிரிந்தான்.  மனைவியோடு மீண்டும் சேர்ந்ததும் மீண்டும் பிரிவதற்காகவே! இப்படி வாழ்நாள் முழுவதும் உழன்றுவிட்டுப் பின்னர் போய்ச் சேர்ந்தான். இருந்தவரையிலும் தான் ஓர் அவதார புருஷன் என்பதை அறிந்தவன் இல்லை. நல்ல கடுங்கோடையில் பிறந்திருக்கிறான்.  அவன் பிறந்த நாள் எல்லோரும் அசுபம் எனக்கருதும் நவமி திதியில் வருகிறது. பெரும்பாலும் ஜன்ம நக்ஷத்திரங்களே பிறந்தநாளைக்கு என எல்லோருக்கும் வைத்திருக்க நம் முக்கியமான இஷ்ட தெய்வங்கள் ஆன ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் திதியைத் தான் எடுத்துக் கொள்கிறோம்.  சிவனுக்கும், விஷ்ணுவுக்குமோ முறையே திருவாதிரை, திருவோணம் ஆகிய நக்ஷத்திரங்கள் சிறப்பித்துச் சொல்லப்படுகின்றன.

 ஒரு சில ஊர்களில் ஶ்ரீராமனின் பிறந்தநாளைப்  பங்குனி அமாவாசை அன்றிலிருந்து  ஆரம்பித்துக் கொண்டாடி தசமியோடு முடிப்பார்கள். அன்று பட்டாபிஷேஹம் செய்வார்கள். ஆனாலும் ஶ்ரீராமநவமிப் பிரசாதங்கள் எனில் மிகவும் எளிமையானது. இந்தக் கோடைக்கு ஏற்றது. பருப்புப் பாயசம், சுண்டல், நீர்மோர், பானகம். இவை தான். வடை தட்டுவது எல்லாம் நம் தேவைக்கு ஏற்ப. உடலுக்குத் தேவையான சக்தியை அளிக்கும் விதத்தில் பிரசாதங்கள். அநேகமாய் நாம் கொண்டாடும் அனைத்துப் பண்டிகைகளின் பிரசாதங்களும் இப்படித் தான் அந்த அந்தப் பருவத்துக்கு ஏற்றாற்போன்ற தானியங்கள் அடங்கிய உணவு வகைகளாகவோ அல்லது பக்ஷண வகைகளாகவோ இருக்கும்.  அதிலும் உடலுக்குத் தேவையான சத்துக்களைக் கொடுக்கும் உணவாகவும் இருக்கிறது. பானகம் அருந்துவதால் தாகம் தணிவதோடு இல்லாமல் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கவும் செய்யும்.வேக வைத்துச் சாப்பிடும் சுண்டல் மூலம், கால்ஷியம் எனப்படும் சுண்ணாம்புச் சத்துக் கிடைக்கும். புரதம், இரும்புச் சத்து குறித்துச் சொல்லவே வேண்டாம். நீர்மோர் அஜீரணத்தைப் போக்குவதோடு உடலில் ஏற்படும் உப்புச் சத்துக்குறைவையும் போக்குகிறது. கோடைக்கு இவை ஏற்றவை!

இதே கிருஷ்ணன் பிறந்த நாள் எனில் நல்ல கடும் மழைக்காலத்தில் நள்ளிரவில் வரும்! அவன் பிறந்ததும் அஷ்டமி திதியில். கடுக் முடுக் எனக் கடித்துச் சாப்பிடும்படியான பக்ஷணங்கள். குழந்தையாகப் பல லீலைகள் புரிந்ததாலும் சாப்பாடு, பாயசம், பக்ஷணம், பால், வெண்ணை, மோர், தயிர் போன்றவற்றில் ஈடுபாடு இருந்ததாலும் பெரும்பாலும் அவற்றை ஒட்டியே நம் பிரசாதங்கள் இருக்கின்றன. அதிலும் மழைக்காலக் குளிருக்கென உடலைச் சூடு பண்ணும் விதத்தில் அமைந்த பிரசாதங்கள். எனினும் கண்ணன் மானுடனாகப் பிறந்தாலும் தன் ஒவ்வொரு செய்கையிலும் அவன் தான் அவதாரம் என்பதைக் காட்டிக் கொண்டே இருந்தான்.

கிருஷ்ணனோ எனில் ஶ்ரீராமனுக்கு நேர்மாறாகவே இருந்தான். ஒருதாரக் கொள்கையுடன் ராமன் இருந்தான் எனில் கிருஷ்ணனுக்கோ ருக்மிணி, சத்யபாமை, ஜாம்பவதி என மூன்று மனைவியர். போதாக்குறைக்கு ராதை என்னும் கோபிகா ஸ்த்ரீ. இவளைத் தவிர்த்தும் கோபிகைகள் அனைவரும் கண்ணனையே நினைத்தனர் என்பது தனி விஷயம். அதன் தத்துவார்த்தமும் வேறே! ஆனாலும் கிருஷ்ணனை ஓர்ஸ்த்ரீலோலனாகச் சித்திரிக்க இந்தக் கருத்தைப் பலர் எடுத்துக் கையாளுகின்றனர். மீராபாய் தன்னைச் சந்திக்க மறுத்த ஹரிதாஸிடம் சொன்னதைப் போல கிருஷ்ணனின் ராஜ்ஜியத்தில் அவன் ஒருவனே புருஷன்! மற்ற அனைவருமே பெண்டிர் தான்! இதன் உள்ளார்ந்த பொருளைப் புரிந்து கொள்ளுதல் கொஞ்சம்கடினம்.  எப்படி ஆனாலும் நாம் நம் வாழ்வில் ஶ்ரீராமனையும், கிருஷ்ணனையும் மறக்காமல் இருந்து வருகிறோம். நாம இப்போ வந்த வேலையைப் பார்ப்போமே!

இன்னிக்கு ஶ்ரீராமநவமிக்கு எங்க வீட்டில் செய்த பிரசாதங்கள் படத்துடன் வெளியிடப்படுகிறது.  எங்க வீட்டு ராமர் தான் இணையத்தில் ரொம்பவே பிரபலமாச்சே. என்றாலும் மறுபடி அவர் படத்தைப் போடுகிறேன்.


ராமர் மேலே, கீழே ஶ்ரீதேவி, பூதேவி சமேதரான பெருமாள்


   பிரசாதங்கள், சாதம், பருப்பு, பாயசம், உளுந்து வடை, பாசிப்பருப்புச் சுண்டல், நீர் மோர், பானகம். வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய்.  சுண்டலையே தொட்டுக்க வைச்சுண்டாச்சு என்பதால் வேறே காய் பண்ணலை! நாளை தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.  காலையிலே நாளைக்கு வர முடியாது.

அதோடு கோலாப்பூர் போனது, சென்னைப் பயண விபரங்கள் எல்லாம்  மெதுவாகத் தான் வரும். உடனே எல்லாம் எழுத நேரமில்லை.  வேறே வழியே இல்லை. நெல்லைத் தமிழர் பொறுத்துக்கத் தான் வேண்டும். வீட்டில் வேலையும் முக்கியம். அதோடு பண்டிகைகளும் வேறே!  ஒரு காலத்தில் இந்த "எண்ணங்கள்" வலைப்பக்கமே 2,3 பதிவுகள் போட்டிருக்கேன். இப்போக் கணினியில் உட்காரும் நேரமும் குறைவு! 

30 comments:

  1. ஸ்ரீ ராம தரிசனம் இனிமை....

    நல்லறமும் நட்பும் நாடெங்கும் தழைத்திட நல்லருள் புரிவானாக..

    ReplyDelete
    Replies
    1. நல்வரவு துரை.இப்போத் தான் உங்க பதிவுகளுக்குப் போயிட்டு வரேன்.

      Delete
  2. கணினியில் தான் இருக்கின்றீர்களா!...

    வாழ்க நலம்....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்,இப்போ மூடப் போறேன். திரும்பி வர ஒரு மணி நேரமாவது ஆகலாம். :)

      Delete
  3. உங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் கில்லர்ஜி!






      Delete
  4. ராமதரிசனம் அருமை. என்னடா... நல்லாவே படம் எடுத்திருக்காங்களே... பாராட்டிடவேண்டியதுதான் என்று நினைத்தால், அடுத்த படம், வடை/புளியோதரை... நன்றாக வரவில்லை...கொஞ்சம் அசங்கிவிட்டது போலும்.

    தலைப்பு, 'ஸ்ரீராம சந்த்ரனுக்கு ஜெய மங்களம்' என்று வைத்திருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. வடை/புளியோதரை... நன்றாக வரவில்லை.. //உளுந்து வடை, பாசிப்பருப்புச் சுண்டல்,//

      Delete
  5. நாளைய மெனு ரெடியா?

    ReplyDelete
    Replies
    1. பண்டிகை நாட்களில் சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாக ரொம்ப எளிமையான சாப்பாடாகவே செய்கிறேன். மெனுவெல்லாம் என் மாமனாரோடு போய்விட்டது. அவருக்கு எல்லாப் பண்டிகை நாட்களிலும் பாயசம், பச்சடி 2 வகை, கோசுமலி 2 வகை, கறி 2 வகை, கூட்டு, பிட்லை,மோர்க்குழம்பு, வடை, தித்திப்பு பக்ஷணம் எல்லாம் பண்ணச் சொல்லுவார். சாப்பிடவும் செய்வார். எங்களால் பாயசம் வைச்சாலே சாப்பிட முடியறதில்லை. அதோடு குழந்தைகளும் இல்லை! ஆகையால் பண்டிகையைக் குறைக்காமல் ஒரு பாயசம், வேப்பம்பூப் பச்சடி, கறி ஏதேனும் ஒன்று, சாம்பார், ரசம் ஆகியவை மட்டுமே! வடை கூட யோசித்துத் தான் பண்ணணும்!

      Delete
  6. தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் டிடி.

      Delete
  7. ராம நவமி சிறப்பாக கழிந்தது.

    பானகமும் நீர் மோரும் சுவையோ சுவை...

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், புத்தாண்டு வாழ்த்துகள். உங்க பதிவுகளுக்கு வரணும். இப்போத் தான் அரியர்ஸ் க்ளியர் பண்ணிக் கொண்டு வரேன். :)))))

      Delete
  8. எங்கள் வீட்டில் பருப்பு பாயசம், வடை பருப்பு, பானகம், நீர் மோர். நைவேத்தியம். ஸ்ரீராம நவமி அன்று இத்தனை ராம ஜபம் செய்தேன், ராமாயணம் படித்தேன் என்றும் சொல்லலாம், ஆனால் அது நமக்கும் ராமனுக்கும் உள்ள பிரத்யேக விஷயம் இல்லையா?
    இனிய விகாரி வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்! பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு வாழ்த்துகள் பானுமதி!

      Delete
  9. அன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் தாமதமான புத்தாண்டு வாழ்த்துகள் துரை!

      Delete
  10. நம் வீட்டிலும் நேற்றே பிரசாதம் படைப்பு. சிலர் இன்றுதான் கொண்டாடுகின்றனர்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் கீதாக்கா!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா. பாஞ்சராத்ர ஆகமத்தைப் பின்பற்றுபவர்கள் புத்தாண்டு அன்றே ஶ்ரீராமநவமி கொண்டாடினார்கள். ஆகவே இந்த வருஷம் இரண்டு.

      Delete
  11. கிருஷ்ணனையும் ராமனையும்பற்றி உட்பட்டாங்காகப் பேசுபவர்கள் அன்றும் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். இந்த அவதாரங்களும் திருப்பிப் பிறக்கும்! நாக்கு நீண்ட மனிதர்கள்.. நாராசமாகப் பேசத்தான் செய்வார்கள். பொருட்படுத்தவேண்டியதில்லை.

    ராம, கிருஷ்ண அவதார தாத்பர்யத்தை உண்மையான ஆவலோடு, களங்கமற்ற மனதோடு அறிய முற்படுபவர்கள் நிறைய அறிந்துகொள்வார்கள். அதன் ஆன்மிக அனுபவத்தில் திளைப்பார்கள். இப்படிப்பட்டவர்களும் இருந்தார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள்.

    சரி, கோலாப்பூர் கதய ஆரம்பியுங்க..

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏகாந்தன், என்னோட பதிவுகளையும் நீங்க படிப்பது சந்தோஷமா இருக்கு. கிருஷ்ணனும், ராமனும் திரும்பிப் பிறப்பது குறித்து காகபுஜண்டர் சொன்னதைப் பற்றிப் படிச்சிருக்கேன், வெகு நாட்கள் முன்னர். ஒவ்வொரு முறை ராமாவதாரம், கிருஷ்ணாவதாரத்துக்கும் தூக்கிப் போடும் கற்களையும் எத்தனைனு எண்ண முடியுமானு யோசிப்பது குறித்தும் படிச்சேன். மறுபடியும் தேடிப் பிடிச்சுப் படிக்கணும். எங்கே இருக்குனு தான் தெரியலை!

      கோலாப்பூர் கதையை ஆரம்பிச்சாச்சே!

      Delete
  12. நவமி, அஷ்டமி போன்றவை அசுப நாட்கள் என்று எப்போதிலிருந்து சொல்கிறார்கள்? ராமன் காலத்தில் இதை எல்லாம் பார்த்திருப்பார்களா?

    ReplyDelete
    Replies
    1. இல்லை, ஶ்ரீராம், நவமி திதியும் , அஷ்டமி திதியும் அப்படிக் கேட்டுக் கொண்டதாக பௌராணிகர்கள் கூற்று. எந்த அளவுக்கு உண்மை என்பதைக் கேட்டு/பார்த்து சொல்லுகிறேன்.

      Delete
  13. ஸ்ரீராமநவமிக்கு நாங்கள் பயணத்தில் இருந்தோம் என்றாலும், இந்தப் பயணத்தில் அயோத்தி சென்று வந்தது நிறைவு.

    ReplyDelete
    Replies
    1. அயோத்தி தரிசனம் கிடைத்தது குறித்து மகிழ்ச்சி! அங்கே அந்தத் தென்னிந்தியக் கோயில் போனீங்களா?

      Delete
    2. தென்னிந்தியக் கோவிலா... அப்படிப் போனதாக நினைவில்லை. கட்டுமானத்திற்கு தயாராய் இருக்கும் செங்கல், தூண்கள் உள்ளிட்டவை சேர்த்து வைத்திருக்கும் இடம்.. ஸ்ரீராம பட்டாபிஷேக கோவில் (சீதை சமையலறை இருக்கும் இடம்) அப்புறம் ஹனுமான் கோவில், ராம் ஜென்ம பூமி.

      Delete
    3. சரயு நதிக்கரையில் தான் அந்தக் கோயில். மற்ற விபரங்கள் தேடித் தரேன். நீங்க அந்தக் கோயில் போகலைனு நினைக்கிறேன்.நீங்க சொல்லும் கட்டுமானத்துக்குத் தயாராய் இருக்கும் கோயிலை நாங்களும் பார்த்திருக்கோம். அதே போல் ஒன்று ஆக்ராவிலும் கட்டிக்கொண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்டே இருக்கின்றனர்.

      Delete
  14. புத்தாண்டுக்கு எங்கள் பயண கேட்டரர் வேப்பம்பூபச்சடி செய்து கொடுத்தது சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நாங்க ட்ராவல் டைம்ஸ் மூலம் போனப்போ யுகாதி/குடி பட்வா ஆகியவை வந்தன. பாயசம், வடையோடு சாப்பாடு போட்டார்கள்.

      Delete