Kolhapur Mahalakshmi Temple
மஹாலக்ஷ்மி கோயில் சக்தி பீடங்களில் ஒன்று.இந்தக் கோயில் மஹாலக்ஷ்மியான அம்பிகைக்கு மஹாஸ்தானமாக விளங்குகிறது. இங்கே போய் ஒரு முறையாவது அம்பிகையை வழிபடவேண்டுமென்பது நீண்ட காலமாக இருந்து வந்ததொரு ஆவல். அதோடு கூடவே பண்டரிபுரமும் போகணும் என்னும் ஆவல். ஏற்கெனவே பண்டரிபுரம் சென்று வந்ததை எழுதினேன்.
இங்கே பார்க்கவும்
ஆனாலும் இன்னொரு முறை பாண்டுரங்கனையும் தரிசிக்கும் ஆவல். கோலாப்பூரிலிருந்து பண்டர்புர் என அழைக்கப்படும் பண்டரிபுரம் கிட்டக்கவும் இருக்கிறது. பண்டரிநாதனைத் தொட்டு அவன் கால்களில் நம் தலையைக் கிடத்தித் தொட்டு வணங்கலாம். பக்தர்களுக்கு அருள்பாலிக்கவே அவன் நின்ற வண்ணமே காத்திருக்கிறான். இந்த இரு கோயில்களுக்கும் போக வேண்டிக் கடந்த மூன்று வருஷங்களாகத் திட்டம் போட்டுப் போட்டுக் கிளம்பவே முடியலை. 2016 ஆம் வருஷம் ஏக அமர்க்களமாகப் போய் விட்டது. பின்னர் 2017 மே மாதம் அம்பேரிக்காவில் இருந்து வந்ததில் இருந்து மாமியாரின் விசேஷங்கள் முடிய வேண்டிக் காத்திருந்தோம்.
அதன் பின்னர் சென்ற வருடம் ஃபெப்ரவரி மாதம் அஹமதாபாத் அருகே இருக்கும் மாத்ருகயா சென்று வந்தோம். அதைப் பற்றி எழுதவில்லை. பின்னர் குஞ்சுலு வந்தது. அடுத்தடுத்துச் சில, பல நிகழ்ச்சிகள். வீடு விற்றல், வாங்குதல், உடம்பு படுத்தல்னு காலம் ஒரு வருஷம் ஓடியே போயாச்சு. ஆகையால் இம்முறை நம்ம ரங்க்ஸ் என்னிடம் கேட்காமலும், சொல்லாமலும் அவரே மண்டையை உடைத்துக் கொண்டு கோலாப்பூருக்கும், பண்டரிபுரத்துக்கும் எப்படிப் போவது, எப்படி வருவது என்பதைத் தீர்மானித்துக் கொண்டார். தீர்மானித்த பின்னர் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா ஒப்புக்கு நம்ம கிட்டே ஒப்புதல் கேட்கிற மாமூல்படி ஒப்புதல் கேட்டுவிட்டு எப்போன்னே தெரியாத ஓர் நாள் பயணங்களுக்கு முன்பதிவு செய்து தரும் ஓர் ஏஜென்டிடம் சென்றார். அவர் வழக்கமாக எங்கள் விமானப்பயணங்களுக்கெல்லாம் பயணச்சீட்டு வாங்கித்தருவார். ஐந்தாறு வருஷமாகப் பழக்கம் தான். அவங்க கிட்டேப் போய்த் திருச்சி--சென்னை--புனே, பின்னர் புனே--சென்னை--திருச்சி எனத் தேதிகள் குறிப்பிட்டுப் பயணச் சீட்டு வாங்கி வந்து விட்டார். புனேயிலிருந்து கோலாப்பூர் செல்லவும் சஹ்யாத்ரி எக்ஸ்பிரஸில் இரவு ஏசியில் படுக்கை இருக்கைச் சீட்டு வாங்கிட்டார். கோலாப்பூர் வரை போயிடலாம்.
பண்டரிபுரம் போவது எப்படி? மண்டையைக் குடைந்து கொண்டு ஆராய்ந்து கோலாப்பூரில் இருந்து பண்டரிபுரம் செல்லும் ரயில்களின் நேரங்களை ஆராய்ந்தால் எல்லாம் காலை வேளையிலோ அல்லது இரவு நேரங்களிலோ இருந்தது. ரொம்பக் கஷ்டப்பட்டு ஒரு ரயிலைக் கண்டுபிடித்தால் அது கோலாப்பூரிலிருந்து நாக்பூருக்குப் பண்டரிபுரம் வழியாகச் செல்வது தெரிய வந்தது. உடனே அதற்குச் சீட்டு வாங்கிட்டோம். பின்னர் பண்டரிபுரத்திலிருந்து புனே வருவதற்கு 23 ஆம் தேதி மாலை ஓர் விரைவு வண்டி இருக்கவே அதில் பயணச் சீட்டு வாங்கினோம். எல்லாமே ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டன. அதோடு இல்லாமல் திருச்சியில் இருந்து கிளம்பும் நாளன்று புனேக்கு மதியம் பனிரண்டு மணிக்கே போய் விடுவதால் இரவு ஒன்பதரைக்கு அல்லது பத்து மணிக்குக் கோலாப்பூர் வண்டி வரும் வரை எங்கே தங்குவது? புனேயில் ரயில்வே தங்குமிடத்தில் ஆன்லைனில் புக் செய்யப் போனால் இருவருக்கான படுக்கை கொண்ட அறைகள் ஆன்லைனில் முன்பதிவு இல்லை என்றே வந்தது. ஒண்ணுமே புரியாமல் டார்மிட்டரி கேட்க, அதிலும் ஏசி புக் செய்தால் நான் ஏசி தான் கிடைத்தது. சரினு அதைப் பதிவு செய்துட்டோம். மற்றபடி கோலாப்பூர் போய் அங்கே தங்கும் விஷயத்தையும், பண்டரிபுரம் போனதும் அங்கே தங்குமிடத்தையும் பார்க்கணும்.
இது இப்படி இருக்க ஒருநாள் அதாவது நாங்க கிளம்புவதற்குச் சுமார் பதினைந்து அல்லது 20 நாட்கள் முன்னர் நாங்க பண்டரிபுரத்திலிருந்து புனே செல்ல முன்பதிவு செய்திருந்த ரயிலை ரத்து செய்துவிட்டதாகத் தகவல் வந்தது. ஙே!!!!!!!!!!!!!! ஒண்ணும் புரியலை! பண்டரிபுரத்திலிருந்து புனே வருவது எப்படி? மறுநாள் பதினோரு மணிக்குத் தான் சென்னைக்கு விமானம் என்றாலும் முதல் நாள் இரவுக்குள்ளே அங்கே போய் இருந்தால் தானே மறுநாள் காலை கிளம்ப முடியும்? ஒவ்வொரு ரயிலாக மறுபடி ஆய்வு செய்து சனியன்று காலை 11-20 மணிக்கு சோலாப்பூரிலிருந்து புனே செல்லும் ரயிலில் சாதாரணப் பெட்டியில் இடம் கிடைக்க அதை முன் பதிவு செய்து கொண்டோம். ஏசி கிடைக்கவில்லை. ஆனால் பண்டரிபுரத்திலிருந்து சோலாப்பூர் போயாகணும். எதில் செல்வது? அரசாங்கப் பேருந்துகளை நம்பக் கூடாது என்றனர். தனியார் பேருந்துகள் மிகவும் குறைவு என்றனர். ரொம்ப யோசித்து ஒரு கார் அல்லது ஆட்டோ கிடைத்தால் அதில் போகலாம் என முடிவு செய்து கொண்டோம். நடக்கப் போவதை அறியாமலேயே! ஹாஹா, காரில் போவதெனில்2,000 ரூபாயும் ஆட்டோ எனில் 1500 ரூபாயும் ஆகுமாம். ரயிலில் வாங்கி இருந்த பயணச்சீட்டின் விலை 200 ரூபாய்க்குள்ளாக. மண்டைக்குடைச்சல் ஆரம்பம் ஆனது. ஆனாலும் குறித்த நாளில் புனேக்குக் கிளம்பிட்டோமுல்ல!
இப்போதெல்லாம் விமானப் பயணங்களில் சாப்பாடு கொடுப்பதில்லை. விலைக்கு வாங்க வேண்டும் என்பதோடு பெரும்பாலும் நூடுல்ஸ், போஹா,ப்ரெட் சான்ட்விச் போன்றவையே தருகின்றனர். விமானத்தில் கொடுக்கும் காஃபியைக் குடிப்பதை விடக் காஃபி குடிப்பதையே நிறுத்திடலாம். ஆகவே நாங்க புதன் கிழமை காலை கிளம்பும் முன்னர் இட்லி வார்த்துச் சட்னி அரைத்து எடுத்துக் கொண்டு ஃப்ளாஸ்கில் வழக்கம் போல் காஃபியும் எடுத்துக் கொண்டு கிளம்பினோம். திருச்சி விமானநிலையத்தின் வழியே நாங்கள் இதுவரை பயணித்ததில்லை. இதான் முதல் முறை! நாங்க போகும்போதே செக் இன் ஆரம்பம் ஆகி விட்டது. வழக்கம் போல் ரெட் டாக்சியில் தான் போனோம்.220 ரூ தான் ஆகி இருந்தாலும் ஓட்டுநர் விமான நிலையத்திற்குக் கொடுக்கணும் என 60 ரூ தனியாக வாங்கிக் கொண்டார். இது கொஞ்சம் ஒரு மாதிரியாகத் தான் இருந்தது. ஏனெனில் உள்ளே நுழையும்போது எதுவும் கொடுக்காமல் தான் வந்தார். ஆனாலும் எதுவும் சொல்லாமல் பணத்தைக் கொடுத்துவிட்டு உள்ளே போனோம்.
போர்டிங் பாஸ் வாங்கும்போதே சென்னையில் ஏறவேண்டிய நுழைவாயில் எண் , இருக்கை எண் எல்லாம் இங்கேயே போட்டுக் கொடுத்துட்டாங்க. சாமான்களையும் காபினிலே வைக்க வேண்டாம் எனவும் புனேயில் பெற்றுக்கொள்ளுங்கள் எனச்சொல்லிக் கார்கோவுக்கு அனுப்பிட்டாங்க. ஆகவே கையில் எதுவும் இல்லை. சாப்பாடும், என்னோட கைப்பையும் தான். பின்னர் பாதுகாப்புச் சோதனை முடிந்து விமானம் ஏற வேண்டிய நுழைவாயில் எண்ணிற்குச் சென்றோம். முன்னரே மொபைல் டாட்டா ஆன் செய்திருந்தேன். ஆனாலும் வேலை செய்யவில்லை. அங்கே இங்கே நுழைந்து குடைந்து பின்னர் ரோமிங்கிலும் வைத்தேன். கொஞ்ச நேரம் வந்தது. பின்னர் விமானத்தில் ஏறிவிட்டதால் அதிகம் அதில் கவனம்செல்லவில்லை. திருச்சி--சென்னை 45 நிமிஷம் னு பேர் தான்! ஒன்றரை மணி ஆக்கிடறாங்க. அதே சென்னை-புனே ஒரு மணி நேரம்! கரெக்டாப் போயிடுது!விமானத்தில் ஏற ஏரோ பிரிட்ஜ் இல்லை. ஆகவே விமானத்தில் ஏறுவதற்குப் பேருந்தில் தான் அழைத்துச் செல்கின்றனர். எல்லாம் அசோக் லேலண்ட் பேருந்துகள். கௌதமன் சார் நினைவு வந்தது.
அரண்மனை முற்றத்து பவானி கோயிலின் வெளியே காணப்பட்டவை
ஷாஹ்ஜி மஹராஜ்! நிஜம்மா இப்படி இருந்திருப்பாரா? தெரியலை!
பலங் என அழைக்கப்படும் படுக்கை
ஆஹா.... கோல்ஹாபூர் பயணம் துவங்கி விட்டதா... மகிழ்ச்சி. தொடர்கிறேன்.
ReplyDeleteவிமானத்தில் தரும் உணவு.... மோசம் தான். காஃபி படு மோசம்! நான் இப்போதெல்லாம் விமானப் பயணத்தில் அவர்களே கொடுத்தாலும் வேண்டாமெனச் சொல்லி விடுகிறேன்.
வாங்க வெங்கட், ஏர் இந்தியாவில் மட்டும் தான் அவர்களே உணவு கொடுத்து வருகிறார்கள்/வந்தார்கள். மற்ற விமானங்களின் சேவையில் உணவு விலைக்குத் தான்! ஏர் இந்தியாவும் இப்போதெல்லாம் தரம் கெட்டு விட்ட உணவு வகைகளையே தருகின்றனர்.
Deleteவிமானத்தில் டிக்கோடு சாப்பாடும் உண்டு என்றாலும் கூட நன்றாக இருப்பதில்லை. நம் கையே நமக்குதவி! ஹா ஹா
ReplyDeleteகோல்ஹாப்பூர் பயணக் குறிப்புகள் ஆரம்பம் சூப்பர். புனே சென்று அங்கிருந்து கோல்ஹாப்பூர், பண்டரிபுரம், அங்கிருந்து சோலாப்பூர் கொஞ்சம் நல்ல தூரமாச்சே அக்கா. கிட்டத்தட்ட ஒன்றரிய மணி நேரம் ஆகும்னு நினைக்கிறேன். அதான் அப்படி சார்ஜ் கேட்டிருக்காங்க...
கீதா
வாங்க தி/கீதா, எல்லா விமான சேவைகளிலும் டிக்கெட்டோடு உணவு கொடுப்பதில்லை, ஏர் இந்தியா தவிர்த்து. அவங்களும் இப்போக் கொஞ்சம் மாற்றி இருக்காங்க! இங்கே சென்னை-மதுரை, மதுரை-சென்னை செல்லும் தேஜஸ் விரைவு வண்டியில் கூட ஷதாப்தி, ராஜ்தானி போல உணவு டிக்கெட்டோடு இல்லை. உணவு தேவை எனில் நாம் டிக்கெட் வாங்கும்போதே முன்பதிவு செய்து சைவமா, அசைவமா என்றெல்லாம் கொடுக்கணும். உணவு தேவை இல்லை எனில் No food option click செய்யணும்.
Deleteஎப்படிப் போனோம் என்பதைப் பற்றி விரிவாக எழுதும்போது வரும். ஆனால் ஒரு பிரச்னை என்னன்னா கோல்ஹாப்பூர் என்று போட்டால் ஆன்லைனில் பயணச் சீட்டு வாங்க முடியறதில்லை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதுக்குப் பெயரை மாத்தி ஷாஹ்ஜி மஹராஜ்னு என்னமோ வைச்சிருக்காங்க! சுருக்கமான Code KOP என்பது மட்டும் மாறவில்லை. அதே போல சோலாப்பூரை நம்ம ரங்க்ஸ் ஷோலாப்பூர் என்றே சொல்ல நானும் அப்படியே தட்டச்ச, அப்படி எல்லாம் ஊரே இந்தியாவில் இல்லைனு ஐஆர்சிடிசி சொல்ல, உனக்குப் போடத் தெரியலைனு ரங்க்ஸ் என்னைத் திட்ட! அப்புறமா எப்படியோ கண்டு பிடிச்சேன்! இவர் உடனே ரயில் நம்பரைப் போடு வரும் என்பார்! அதெல்லாம் போட்டால் வராது என்றால் புரிஞ்சுக்கவே மாட்டார்! இந்த ஆன்லைன் பயணச் சீட்டு வாங்கறதுக்குள்ளே ஒரு பிரளயம் தான்! :)))))
Deleteஅப்புறம் எப்படி சோலாப்பூர் போனீங்க அக்கா?
ReplyDeleteமலைக்கு மேலே விமானம் கொஞ்சம் தாழ்வாகப் பறக்கும். அது வழி செல்லும் விமானங்களில் பைலட் சொல்லுவது வழக்கம்.
கீதா
ஹாஹாஹா, சோலாப்பூர் போன விபரம் பின்னால் வரும். பொதுவாக விமானங்கள் தாழ்வாகப் பறப்பதையே நான் விரும்புவேன். ரொம்ப உயரப் பறந்தால் turbulence ஜாஸ்தியா இருக்குனு தோணும். புனேயில் இறங்கறதுக்குள்ளே அரை மணி நேரம் இந்த turbulence ஒரு வழி பண்ணி விட்டது. வெளிநாடுகள் போகிறச்சே கேட்கவே வேண்டாம்! :(
Deleteசாதாரணமாக தாயாரை சேவித்து விட்டுதான், பெருமாளை சேவிக்க வேண்டும் என்பார்கள், நீங்கள்தான் வித்தியாசமானவர் ஆயிற்றே{ ;)} அதனால் தாயாருக்கு முன்னாள் பெருமாள் தரிசனம் போலிருக்கிறது.
ReplyDeleteஹாஹாஹா, பானுமதி, கீழத்திருப்பதியும் தெரிஞ்சது. அதனால் அலர்மேல் மங்கையையும் பார்த்தோம். :))))
Deleteவிமானத்தில் கொடுக்கப்படும் காஃபியைவிட சாலையோரம் சைக்கிளில் காஃபி விற்பவருடையது சுவையானதே...
ReplyDeleteசரியாச் சொன்னீங்க கில்லர்ஜி!
Delete/உள்ளே நுழையும்போது எதுவும் கொடுக்காமல் தான் வந்தார்.// - இல்லை கீசா மேடம்... டாக்சிகள் உள்ளே நுழைந்து வெளியே 10 நிமிடங்களுக்குள் போயிடணும். ஏதேனும் காரணத்தால் துளி தாமதமானாலும் 60 ரூபாய் கட்டணும்னு இருக்கும்னு நினைக்கறேன். சென்னைல இன்ஞும் ஜாஸ்தி. அதனால நான், கடகடவென சாமான்களை டாக்சியிலிருந்து எடுத்து உடனே செட்டில் பண்ணி அனுப்பிடுவேன்.
ReplyDeleteநாங்களும் வேகமாய்த் தான் எடுப்போம். ஆனால் நுழையும்போதே அங்கிருக்கும் பூத்தில் பணம் கொடுத்துப் பாஸ் வாங்கிக் கொண்டே பயணிகளை இறக்கி விடும் இடம் போக வேண்டும். இவர் அந்தச் சீட்டையே வாங்கலை!
Deleteஉண்மை. ஜீவி ஸாரை வழியனுப்பும்போது எனக்கும் அனுபவம் ஏற்பட்டது.
Deleteஅந்தப் பாஸ்வாங்காமல் உள்ளே போக முடியாது; கூடாது! ஆனால் திருச்சி என்பதால் அந்த ஓட்டுநர் சமாளித்திருப்பார் என என் கருத்து.
Deleteஎப்படி பிரயாணத் திட்டங்கள் போட்டிருக்கீங்க. ரொம்ப ஆச்சர்யமா எனக்கு இருக்கு. எல்லாம் திட்டமிட்டபடி போய், இரயில் கேன்சல் ஆனால், வேறு திட்டம் என்று மாற்றி ---- மாமா பெரிய ஆளுதான் இதில். பாராட்டுகள் (அவருக்கு... உங்களுக்கில்லை ஹாஹா)
ReplyDeleteபாராட்டு யாருக்கானால் என்ன? என் ஒத்துழைப்பு இல்லாமல் அவரால் திட்டம் போடவும் முடியாது! அதோடு கூடியவரை நிறைவேறிவிடும்படியான சிறிய திட்டங்களே போடுவோம். ரொம்பப் பெரிசா எல்லாம் போறதில்லை.
Delete//புனேயில் பெற்றுக்கொள்ளுங்கள் // - இது எப்படிப் பண்ணறாங்கன்னு புரியலை. புனே வரைக்கும் விமானமா? நடைமேடை, இருக்கை எண் - இதெல்லாம் படித்து இரயில் பயணத்தையும் விமானப் பயணத்தையும் குழப்பிக்கிட்டீங்களோன்னு நினைத்தேன்.
ReplyDelete//நடைமேடை,// கவனக்குறைவு. இருக்கை எண்// சரியே!
Delete//புனேயில் பெற்றுக்கொள்ளுங்கள் // - இது எப்படிப் பண்ணறாங்கன்னு புரியலை. புனே வரைக்கும் விமானமா? // கீழே பதில். பதிவை ஒழுங்காப் படிக்காமலேயே கருத்துச் சொல்றீங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Delete//அவங்க கிட்டேப் போய்த் திருச்சி--சென்னை--புனே, பின்னர் புனே--சென்னை--திருச்சி எனத் தேதிகள் குறிப்பிட்டுப் பயணச் சீட்டு வாங்கி வந்து விட்டார்.//
யு.எஸ்.போகும்போதும் மற்ற வெளிநாடுகள் விமானம் மாற்றிச் செல்கையில் எல்லாமும் இப்படித் தானே. கடைசியா எங்கே இறங்கறோமோ அங்கே பெட்டிகளைப் பெற்றுக் கொள்வோமே! அது போலத் தான் இதுவும்.
இதுல எனக்கு ஒரு அனுபவம். 24 மணி நேரத்துக்குள் பிரயாணம் முடிகிறது என்றால், அதாவது புறப்படும் இடத்திலிருந்து கடைசியாக அடையும் இடம், நம்மைக் கேட்காமலேயே செக்கின் லக்கேஜ் கடைசியாக இறங்கும் இடத்துக்குச் சென்றுவிடும். நான் ஒரு தடவை பஹ்ரைனிலிருந்து துபாய் போ, அங்கு வெளியில் சென்று 8 மணி நேர வேலைக்குப் பிறகு, திரும்ப சென்னை செல்லவேண்டும். என் கவனக்குறைவால், பெட்டியை நேரா சென்னைக்கு லேபல் போட்டுட்டாங்க. துபாய் சென்றபிறகு பெட்டி வரவில்லை என்பது தெரிந்துதான் எனக்கு விஷயம் புரிந்தது. பெட்டியில்தான் டாகுமெண்ட்ஸ் எல்லாம் துபாயில் மெக்சிகோ விசா அடிப்பதற்கு இருக்கு. அப்புறம் அவங்கள்ட பேசி 1 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து என் பெட்டியைப் பெற்றுக்கொண்டேன்.
Deleteஉங்கள் கவனக்குறைவுனு நீங்களே சொல்லிட்டீங்க! பொதுவாக நாங்க ட்ரான்சிட்டிலேயே இருப்பதால் சாமான்கள் நேரே நாங்க இறங்கும் இடம் வந்துடும். நடுவில் எங்கும் போவதில்லை. துபாய் வழி போனாலும்! அங்கே உறவினர்கள்/நண்பர்கள்னு இருக்காங்க! ஆனாலும் போனதில்லை.
Delete//பனிரண்டாவது நடைமேடை // - அட ஆண்டவா.... GATE என்பதை இப்படித் தமிழ்ப்படுத்தி இருக்கீங்களே.. 'நுழைவாயில்' என்பதுதான் விமானங்களைப் பொறுத்தவரையில் சரியான தமிழ்ச்சொல்.
ReplyDeleteகவனக்குறைவு!
Deleteபயண ஆரம்பம் அமர்க்களமா இருக்கு. பேசாம மிளகாய்ப்பொடி தடவின இட்லிகள் கொண்டுபோனீங்களோ? சென்னை விமானநிலையத்தில் (எந்த விமானநிலையத்திலும்) சாதா போண்டாவே 100 ரூபாய்னு கூசாம விலை வைத்திருப்பாங்களே... நான் விமான நிலையத்தில் சாப்பிடுவது வெகு வெகு அபூர்வம். பசங்கள் என்னோட வந்தால், அவங்கள்ட காசு மட்டும் கொடுத்துடணும், வேற கேள்வியே கேட்கமாட்டேன்... இல்லைனா இதைச் சாப்பிட்டேன் இவ்வளவு காசு என்று சொன்னால் எனக்கு 'வயித்தெரிச்சலா' இருக்கும்...ஹாஹா
ReplyDelete
Delete//மிளகாய்ப்பொடி தடவின இட்லிகள் கொண்டுபோனீங்களோ? // கண்ணாடியை மாற்றவும். :P :P :_P
//காலை கிளம்பும் முன்னர் இட்லி வார்த்துச் சட்னி அரைத்து எடுத்துக் கொண்டு ஃப்ளாஸ்கில் வழக்கம் போல் காஃபியும் எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.//
லக்னோ விமான நிலையத்தில் காஃபி 70 ரூபாய்க்கும், தேநீர் 60 ரூபாய்க்கும் கிடைக்கிறது. திரும்பி வரும்போது பார்த்ததில் இங்கே புனேயிலும் காஃபி 30 ரூபாய்க்குக் கிடைத்தது. அப்போவே வாங்கி வைச்சிருக்கணும். சமோசா எல்லாம் 30 ரூபாய் தான் புனே விமான நிலையத்தில்! ரொம்பச் சீக்கிரம்னு நினைச்சு வாங்காமல் விட்டோம்! :( சென்னையில் தீட்டிட்டாங்க தீட்டி!
Deleteஹையோ ஹையோ... சட்னிலாம் நீர்க்க இருந்து (தேங்காயிலிருந்து தண்ணீர் பிரிந்து) பாத்திரத்தின் வெளியே வந்துவிடாதோ? அதுக்கு நீங்க சப்பாத்தி, எலுமிச்சை கார ஊறுகாய் எடுத்துச் சென்றிருக்கலாம்.
Deleteமிளகாய்ப் பொடி சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்காமல் சட்னி செய்து எடுத்துப் போனோம். அது நீர்க்க இருக்கும்னு உங்களுக்கு யார் சொன்னா? பாத்திரத்தில் எடுத்துப் போனதாகவும் யார் சொன்னாங்க? சப்பாத்தியோடு எலுமிச்சை ஊறுகாயெல்லாம் சாப்பிடும் வழக்கம் இல்லை. ஆவக்காய் ஓக்கே. தொக்கு ஓக்கே. வெஜிடபுள் ஊறுகாய் ஓகே!
Deleteஇனிய காலை வணக்கம் கீதா. இத்தனை பெரிய பயணத்திட்டமா.
ReplyDeleteசாமி.... ரொம்பப் பொறுமை.
நானும் நடைமேடை பார்த்துக் குழம்பினேன்.உங்க ஷெட்யூல் பார்த்தே
அதிசயப் பட்டேன். பிரமாத ப்ளானிங்க்.
மாமாவுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.
பலங்க் இது எந்த ஊரில் .
திருப்பதிப் பெருமாள் தரிசனம் அமோகம்.
கோலாப்பூருக்கு சிங்கம் வேலை விஷயமாகப் போய்
வந்தார்.
மஹாலக்ஷ்மி வெகு அழகு.
"நடைமேடை" கவனகுறைவு வல்லி. நுழைவாயில் எண் 12 இல் புனேக்கு விமானம் ஏறினோம். அதே நுழைவாயிலில் தான் திரும்பி வரச்சே திருச்சிக்கும் விமானம் ஏறினோம்.
Deleteஅஹா ப்ரமாதம். அட்டகாசம். நானும் இவரும் இப்படித்தான் சில இடங்களுக்கு பயணம் மேற்கொள்வோம். எல்லாம் அவர் பார்த்துக்குவார் என்பதால் எனக்கு அதிகம் வொர்ரீஸ் வந்ததில்லை. :)
ReplyDeleteஆஹா, வாங்க தேனம்மை! வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteபயண அனுபவம் ஜெட் வேகத்தில் செல்கிறது.
ReplyDeleteபடங்கள் நன்றாக இருக்கிறது.
கோலாபூர் மஹாலட்சுமி, விட்டலன் தரிசனம் செய்து விட்டேன்.
பயண அனுபவங்கள் வியக்க வைக்கிறது.
தொடர்கிறேன் பதிவை.
வாங்க கோமதி! வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteஓ... மாத்ரு கயா அகமதாபாத் அருகே உள்ளதா? வேறெங்கோ என்று படித்த நினைவாய் இருந்தது.
ReplyDeleteஆமாம்,ஶ்ரீராம், பயணம் சுகமாக இருந்தாலும் அங்கே மாத்ருகயாவிலும் அஹமதாபாதில் ஏர்போர்ட்டில் இருந்து மாத்ருகயா வரையிலும் பின்னர் அஹமதாபாத் விமானநிலையத்துக்கும் வண்டி ஓட்டிக் கொண்டு வந்த டாக்சி ஓட்டுநர் மூலமும் கசப்பான அனுபவங்கள்/நினைவுகள்! அதனாலேயே அதைக் குறித்து எதுவும் பகிரவே இல்லை! :(
Deleteஇது மாதிரி இணைப்பு ரயில்கள் ரத்தானாலோ, தாமதமானாலோ டென்ஷன் ஆகிவிடும்! எப்படி சரிசெய்து கொள்வது என்று குழப்பம் ஆகிவிடும். துணிந்து இறங்கிவிட்டீர்கள் போல...
ReplyDeleteஎங்களுக்குப்பல முறை ரயிலையே விட்டு விட்டு அடுத்த ரயில் பிடித்துப் போன அனுபவங்கள் எல்லாம் உண்டு. அதிலும் நசிராபாதில் இருந்து சிகந்திராபாத் வரும்போது வண்டி தாமத்தால் சிகந்தராபாத் அல்லது ஹைதராபாத் நாம்பள்ளியிலிருந்து கிளம்பும் சென்னை விரைவு வண்டியைப் பல முறை விட்டிருக்கோம். பின்னர் அடுத்த வண்டியைப் பிடித்து முன்பதிவில்லாப் பெட்டியில் சென்ற அனுபவங்கள் உண்டு.
Deleteவிமான நிலையங்களில் இலவச வைஃபை இருக்குமே... உபயோகப்படுத்திக் கொள்ளலாமே.. வேகமாகவே இருந்தது.
ReplyDeleteஶ்ரீராம், இலவச வைஃபை இருக்குத் தான். ஆனால் சில சமயங்களில் பிரச்னையாக இருக்கு! அதான் அந்தப் பக்கமே போகலை!
Deleteஷாஹ்ஜி மஹராஜ் சாப்பாட்டுப் பிரியராய் இருப்பார் போல!
ReplyDeleteஅடடே... விமானத்திலிருந்து பெருமாள் தரிசனமா?
ஆமாம், விமானத்திலிருந்து பெருமாள் தரிசனம்.
Delete//ஆகையால் இம்முறை நம்ம ரங்க்ஸ் என்னிடம் கேட்காமலும், சொல்லாமலும் அவரே மண்டையை உடைத்துக் கொண்டு கோலாப்பூருக்கும், பண்டரிபுரத்துக்கும் எப்படிப் போவது, எப்படி வருவது என்பதைத் தீர்மானித்துக் கொண்டார். //
ReplyDeleteஎந்த மாதம், என்ன தேதி என்றெல்லாம் சொல்லவில்லையே...
ஹாஹாஹா, கண்டு பிடிங்க, பார்க்கலாம்.
Delete