எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, April 04, 2019

பயணங்கள் குறித்த விபரங்கள்! இங்கே எல்லாம் போயிருக்கீங்களா?

இந்தப் பயணங்களில் சின்ன வயசில் திருப்பதி  போனவை எல்லாம் கணக்கில் இல்லை. அதன் பின்னர் சென்னை-மதுரை போனவையும் கணக்கில் இல்லை. திருமணம் ஆன பின்னர் தினசரி வேலைக்கு அம்பத்தூர்-தண்டையார்ப்பேட்டை போனதெல்லாம் கணக்கில் இல்லை. அதன் பின்னர் நம்ம ரங்க்ஸோட வேலை மாற்றத்தின் விளைவால் எழுபதுகளில் ராஜஸ்தான் சென்றதும், அங்கிருந்து ஒவ்வொரு முறை தமிழகம் வந்ததும் கணக்கில் வரவில்லை. ராஜஸ்தானில் இருந்து சிகந்திராபாத் சென்றது, பின்னர் சென்னை வந்தது, 80களில் மைசூர், "பெண்"களூர் பார்த்துவிட்டு அங்கிருந்து கோவா சென்றது, அதன் பின்னர் பிலாய், நாக்பூர் போனதெல்லாம் கணக்கில் இல்லை. எண்பதுகளிலேயே மீண்டும் ராஜஸ்தான் மாற்றலாகிப் போனது, 3 நாட்கள் ரயிலிலேயே பயணம் செய்தது, அதன் பின்னர் அங்கிருந்து விடுமுறைக்குத் தமிழகம் வந்தப்போ முதலில் ரயில் இஞ்சின் எரிந்து போய் மாற்ற நேர்ந்தது, பின்னர் அதே ரயில் டீரெயில் ஆகி நின்றது, வழியிலேயே காட்டுக்குள் மணிக்கணக்காகக்காத்திருந்தது. அங்கேயே அடுப்பு மூட்டிப் பக்கத்துக் கிராமத்தில் இருந்து பால் வாங்கி வந்து தேநீர் போட்டுச் சாப்பிட்டது. கிராமத்துப் பெண்கள் சமைத்துக் கொண்டு வந்து கொடுத்தது எல்லாமும் பசுமையாக நினைவில் உள்ளது.

நசிராபாதில் இருந்து திங்கட்கிழமை கிளம்பும் வண்டி, வியாழக்கிழமை தான் சரியான நேரத்துக்குச் சென்றாலே சென்னை அடையும். நசிராபாத்- காச்சிகுடா புதன் மாலை வரும். புதன் மாலை சார்மினாரைப் பிடித்தால் வியாழனன்று காலை சுமார் ஒன்பது மணி அளவில் சென்னை சேரலாம். இப்போ ரயில் புறப்பாடு நேரங்கள் மாறி இருக்கலாம்.  ஆனால் நாங்களோ திங்கட்கிழமை கிளம்பி சனிக்கிழமை காலை வந்து சேர்ந்தோம்! நல்லவேளையாக அப்போ ரயில்வேயில் தபால், தந்தி அனுப்ப ஏற்பாடு செய்து தந்ததால் சென்னைக்கு எங்க அப்பாவுக்குத் தந்தி அனுப்பினோம். ரயில் கவிழ்ந்து விட்டதால் நாங்க தாமதமாக வந்து சேர்வோம் எனவும் சிகந்திராபாத் வந்ததும் மற்றொரு தந்தி அனுப்புவதாகவும் கொடுத்தோம்.இரு தந்திகளும் சரியாகப் போய்ச் சேர்ந்தன!  அப்படியும் நாங்கள் செல்லவேண்டிய ரயிலில் போக முடியாமல் அதன் பின்னர் சென்ற ஹைதராபாத் எக்ஸ்பிரஸில் நாம் பள்ளி போய் ரயில் ஏறி ஹிஹிஹி, முன் பதிவில்லாமல் சென்றதால் அங்கே போய்த் தான் ஏறிக்க முடியும். சிகந்திராபாதில் கூட்டம் அள்ளும். ஆகவே அங்கே போய்ப் போர்ட்டர் உதவியுடன் ஏறிக்கொண்டு சாமான்களையும் வைத்துக் கொண்டு ஒரு மாதிரி உட்கார்ந்து விட்டோம். பின்னர் வருபவர்கள் அவங்க பாடு! இஃகி, இஃகி, இஃகி! ஏனெனில் மறுநாளைக்கு மறுநாள் என் பெரிய மைத்துனரின் சீமந்தம்! கட்டாயம் போயே ஆகணும்!

அந்த முறைதான் முதல் முறையாக ராமேஸ்வரம்,கன்யாகுமரி, திருச்செந்தூர் ஆகிய ஊர்களுக்குப் போனோம். இவை எல்லாம் அநேகமாய் மதுரையில் என் பெரியப்பா வீட்டில் தங்கிக் கொண்டு அங்கிருந்து பேருந்துகளில் சென்றது! ரயில் பயணங்களில் வரலை. ஆனால் சுற்றுலாவில் உண்டு. சுற்றுலாக்களில் முதல் முறை ராஜஸ்தானில் இருந்தப்போ சென்ற உதய்பூர், மவுன்ட் அபு, ஜெய்ப்பூர்ச் சுற்றுலாக்களும், இரண்டாம் முறையும் நசிராபாதிலிருந்து சென்ற ஜெய்ப்பூர், சிதோட்கட் சுற்றுலாவும் இருக்கு!

அதன் பின்னர் நசிராபாதிலிருந்து ஜாம்நகர் மாற்றல் ஆகி வந்தப்போவும் ரயில் ரோகோ! பிரச்னை! ரயில் நின்று நின்று கிளம்பிக் கொண்டிருந்தது. பகல்வேளை ஆதலால் எங்களுக்கு "பே(Bay)" நால்வருக்கானது கிடைக்காமல் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு உட்காரும் இடம் மட்டும் கிடைக்க, சாமான்களைப் பார்த்து மிரண்ட சகபயணிகள் சண்டைக்கு வர, எங்களை ரயிலில் ஏற்றி விட வந்த அலுவலக ஊழியர்கள் பதிலுக்குச் சண்டை போட ராணுவ  சகோதரர்கள் ரயிலில் ஏறி எங்களுக்கு மாற்றல் ஆகி இருப்பதைச் சொல்லிப் பொறுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப் பின்னர் ஒருவழியாகச் சமாதானம் ஆனது.

ஆனால் அந்த ரயில் நின்று நின்று போனதால் அஹமதாபாதுக்கு நேரத்துக்குப் போய்ச் சேரவில்லை. அங்கிருந்து நாங்கள் ஜாம்நகர் போகவேண்டிய ரயில் கிளம்பிப் போயே போய்விட்டது! மறு ரயில் மறுநாள் காலை தான். ஆனால் இரவு பத்து மணிக்கு ஜனதா ஒன்று (அப்போல்லாம் முழுக்க முழுக்க இரண்டாம் வகுப்பு மட்டுமே இருக்கும் பெட்டிகள் கொண்ட வண்டி) ஹாப்பா என்னும் ஜாம்நகருக்கு அருகிலுள்ள ஊருக்கு இருப்பதாகவும் அதற்கு முன்பதிவு தேவை இல்லை எனவும் ஏறிக்கலாம் எனவும் ரயில்வே அதிகாரி கூறினார். கிட்ட இருந்து ஏற்றி விடுவதாயும் கூறினார். நாங்க ஜாம்நகருக்குப் போக முதல் வகுப்பில் முன் பதிவு செய்திருந்தோம். ஆனால் இப்போது போகப் போவதோ இரண்டாம் வகுப்பு முன் பதிவுகள் அல்லாத பெட்டி! உட்கார இடம் கிடைக்குமா? சந்தேகம்! ஏனெனில் அப்போது அங்கே இருந்த ஓம்காரேஸ்வரர் கோயிலில் உற்சவம் நடந்து கொண்டிருக்க சாரி சாரியாக மக்கள் நடைப்பயணமாகவும், ரயில், பேருந்துப் பயணமாகவும் காவடிகளைத் தூக்கிக் கொண்டும், தூக்காமலும் போல் பம்! என்று கோஷமிட்டுக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். இந்த அழகில் நாங்க எங்கே ஏறுவது? ஏறினாலும் எங்கே உட்காருவது? இப்படித் தான்! முதல் வகுப்பில் முன்பதிவு செய்துட்டு மூன்றாம் வகுப்பில் போவோம். இந்த மூன்றாம் வகுப்பு மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது முற்றிலும் ஒழிக்கப்பட்டு இரண்டாம் வகுப்புப் பயணிகளும் மெத்தை தைத்த இருக்கைகள் பயன்படுத்துமாறு ரயில் பெட்டிகள் மாற்றி அமைக்கப்பட்டன.

இரவு முழுவதும் கண் வேறு விழித்திருக்கணும். இரவு பத்து மணிக்கு நடைமேடைக்கு வந்த ரயிலில் ஒரு மாதிரியாக சாமான்களை ஏற்றிவிட்டு நாங்களும் ஏறிக்கொண்டோம். கையில் எடுத்துப் போகும் சாமான்கள் நிறைய இருந்தன. துணிமணிகள் கொண்ட பெட்டிகள் நாலு பேருக்கும். சமையல் பாத்திரங்கள், சமையல் சாமான்கள் அடங்கிய இரு பெட்டிகள். காஸ் ஸ்டவ், பம்ப் ஸ்டவ், திரி ஸ்டவ் போன்றவை (மண்ணெண்ணெய் இல்லாமல்) அவை ஒரு அட்டைப் பெட்டியில். ராணுவ கன்டோன்மென்ட் என்பதால் போனதும் மண்ணெண்ணெய் கிடைச்சுடும், அடுப்பெரிக்கலாம் எரிவாயு வரும் வரை! வீடும் எங்களுக்கு நாங்க போகும் முன்னரே தயாராய் இருக்கும். ஆகவே வீட்டில் போய் இறங்கினதுமே பால் காய்ச்சலாம். அதுக்குத் தகுந்தாற்போல் நாட்கள் பார்த்திருப்போம். கிளம்புவோம். ஆனால் இந்த ரயில்வேக்
காரங்களுக்குத் தான் அதெல்லாம் தெரியறதில்லை. இருந்தாலும் நாங்க ஜமாளிச்சோமுல்ல! ரயிலில் ஏறிக்கொண்டதில் எனக்கு மட்டும் இடம் கிடைக்கவில்லை. மேலும் அது பெண்கள் பெட்டி! ஆகவே நானும், பெண்ணும் மட்டும் இங்கே இருந்தோம். பையரும், அப்பாவும் அடுத்த பெட்டியில்! நடுவில் மறைப்பாகப் போட்டிருந்த மரத்தடுப்பு வழியாக அவங்க அங்கிருந்து பார்த்து ஆறுதல் சொன்னார்கள். ஆனால் எங்களுக்கோ  மனசே ஆகலை. நாங்க நாலு பேரும் எப்போவும் ஒன்றாகவே பயணிப்போம். சண்டை, பூசல், சமாதானம், வெள்ளைக்கொடி எல்லாமும் உண்டு. அது இல்லாமல் இப்போது கஷ்டமாக இருந்தது.

கூடவந்த பயணிகள் பேச்சுக் கொடுத்தார்கள். அவங்க குஜராத்தியிலும், நாங்க ஹிந்தியிலுமாகப் பேசப் பேச்சு வார்த்தை நடந்து ஒரு மனதாக எங்களுக்கு இடம் கொடுக்கத் தீர்மானித்து உட்கார இடம் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். தூங்குங்க பஹன் ஜி! சாமான்களை நாங்க பார்த்துக்கறோம்! என உபசாரங்களும் நடந்தன. அதுக்காகத் தூக்கம் வந்துடுமா என்ன? அதிகாலையில் போய்ச் சேர வேண்டியவங்க ரயிலை விட்டுட்டுப் பகல் பத்து மணிக்குப் போய்ச் சேர்ந்தோம். நேரே ஜாம்நகர் ரயில் நிலையத்தில் இறங்கி இருக்கணும். இங்கே ஹாப்பா நிலையத்தில் இறங்கிட்டோம். எங்களை வரவேற்க வந்தவங்க ஜாம்நகர் நிலையத்தில் பார்த்துட்டு வரலைனதும் வீட்டுக்குப் போயிட்டாங்க! இரண்டு பேருக்கு மட்டும் இந்த ரயிலில் எதுக்கும் பார்க்கலாம்னு தோண ஒரு ஒன் டன்னர் வண்டியில் வந்திருந்தாங்க. ஹிஹி,  எங்களைப் பார்த்து அவங்க முழிக்க, இவங்க நம்ம ஆஃபீஸ்தானானு ரங்க்ஸ் முழிக்க நாங்க தமிழில் பேசுவதைப் பார்த்து அங்கே வந்தவரில் ஓர் தமிழ்க்காரர் எங்களைக் கேட்க நாங்க தான் அவங்கனு சொல்லவே அவருக்கு ரொம்பக் கஷ்டமாப் போச்சு! ஏனெனில் எங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த வண்டி திரும்ப யூனிட்டுக்குப் போய்விட்டது. இப்போ வந்திருக்கும் வண்டியில் எங்களை எப்படி ஏற்றுவது என்பது அவங்க கவலை! எங்களுக்கோ, ஏதோ வண்டி வந்திருக்கே, முதல்லே வீடு போய்ச் சேரலாம் என்று கவலை!

அந்த வண்டியிலேயே சாமான்களை ஏற்றிக்கொண்டு வண்டியிலும் ஏறி வீட்டுக்குப் போனது எல்லாம் தனிக்கதை! ராணுவ ஒன் டன்னரில் ஏறுவது ரொம்பக் கஷ்டம்! ஆனால் அப்போல்லாம் ரொம்பவே ஜிம்பிளாக ஏறி இருக்கேன்.  குஜராத்தில் இருக்கையில் சோம்நாத், துவாரகை, அஹமதாபாத் போன்ற ஊர்கள் சுற்றிப் பார்த்ததும், சபர்மதி ஆஸ்ரமம் சென்றதும் பசுமையாக நினைவில் இருக்கு! சபர்மதி நதிக்கரை அப்போ இருந்ததையும் இப்போ சென்ற வருடம் சென்றதையும் அப்போப் பார்த்த சபர்மதியையும் நினைத்தால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். அஹமதாபாத் நகரே ஒளி வெள்ளத்தில் ஆழ்ந்திருந்ததோடு அல்லாமல் சாலைகள் மிகப் பிரமாதமாக இருந்தன. மிகப் பெரிய நகரமாக மாறி விட்டது குறிப்பிடத் தக்கது! நாங்க கடைசியாக பரோடா சென்றது 2010 ஆம் ஆண்டில்.

இன்னும் வரும்! அதுக்கப்புறமா மெதுவாத் தான் கோலாப்பூர் பத்தின கதை! :))))))

50 comments:

 1. வடை எனக்கே

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, இன்னிக்கு பஜ்ஜி தான் போட்டேன்! :)))))

   Delete
  2. ஹா... ஹா.... ஹா....

   Delete
  3. வெறும் வாழைக்காய் பஜ்ஜி மட்டும்! :))))

   Delete
 2. காட்டுக்குள் சமைத்து சாப்பிட்டு இருப்பதெல்லாம் திரில்லான விசயமே...

  வரட்டும் கோலாப்பூர் நிகழ்வுகளும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி! அத்துவானக்காட்டில் எல்லாம் வண்டி நின்று மணிக்கணக்காய் வண்டியிலேயே உட்கார்ந்து கொண்டு இருப்போம். ஆனால் அப்போல்லாம் நாங்க நாலு பேரும் சேர்ந்திருந்தோம். அப்புறமாக் காலம் மாறிப் போச்சு! இப்போ அவரவர் குடும்பங்கள்! அதிலே அவங்க சேர்ந்து இருந்தாலே போதும்னு இருக்கு!

   Delete
 3. பழைய பயணங்கள்! தொடரட்டும்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏகாந்தன், நீங்க உலகமே சுற்றி இருக்கீங்க! அதைவிடவா நாங்க போனது எல்லாம். உங்க அனுபவங்கள் நிறைந்த கட்டுரைக்குக் காத்திருக்கேன்.

   Delete
 4. ஆஹா அக்கா சூப்பர் பயணங்கள்,. மாற்றங்கள்.நானும் இப்படித்தான் மூட்டை தூக்கி நாடோடிகள் மாதிரி இருந்ததுண்டு.ஹா ஹா ஹா ஹா ஹா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா தி/கீதா, அப்படித் தான்.நினைச்சால் மூட்டை தூக்குவோம்! :)))))

   Delete
 5. அங்கேயே அடுப்பு மூட்டிப் பக்கத்துக் கிராமத்தில் இருந்து பால் வாங்கி வந்து தேநீர் போட்டுச் சாப்பிட்டது. கிராமத்துப் பெண்கள் சமைத்துக் கொண்டு வந்து கொடுத்தது எல்லாமும் பசுமையாக நினைவில் உள்ளது.//

  சூப்பர்! த்ரில்லிங்கா இருந்திருக்குமே...நாங்களும் பயணத்தில் இப்படி அடுப்பு மூட்டி கிடைத்ததை வைத்து கூட்டாஞ்சோறு செய்து சாப்பிட்டதுண்டு...

  இதிய இன்னும் கொஞ்சம் விரிவா அது எந்த இடம் என்னனு எழுதியிருக்கலாமோ அக்கா...ஸ்வாரஸ்யமா இருந்திருக்குமேன்னுதான். எத்த்னையோ பேர் நல்ல திருப்தியா இருந்தும் குறைப்பட்டுக் கொண்டே இருப்பாங்களே அதுக்காக த்தான் இப்படியான அனுபவங்கள் தெரிவது நல்லதுதானே ...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தி/கீதா, அது மஹாராஷ்ட்ராவில் பூர்ணா என்னும் பெரிய ஜங்க்‌ஷனுக்கு முன்னால் வரும் அத்துவானக் காடு! அங்கிருந்து பூர்ணா ஜங்க்‌ஷன் தான் கிட்டக்கன்னு பேரு! :))))) இதைத் தவிர்த்து மத்யப்ரதேசத்தில் சம்பல் பள்ளத்தாக்குகளில் வண்டி நின்ற அனுபவங்களும் உண்டு. அங்கிருந்து காண்ட்லா என்னும் ஊர் தான் கிட்டக்க. காண்ட்லாவில் ஒரு நாள் வண்டியை நிறுத்திடுவாங்க. காலை ஏழு மணிக்கு வந்தால் மாலை நான்கு மணிக்குத் தான் காண்ட்லாவை விட்டுக் கிளம்பும். எங்க போகியை மட்டும் கழட்டி விட்டுருப்பாங்க. அங்கே இருந்து காண்ட்லா ஊருக்குள் போய்ப் பால் வாங்கி வந்து வண்டியிலேயே காஃபி, தேநீர் எல்லாம் தயாரித்துக் கொண்டு, காலை உணவு வாங்கி வந்து சப்பாத்தி வாங்கி (அப்போல்லாம் சப்பாத்தி வாங்கினால் தால் ஃப்ரீ) ஆகையால் சப்பாத்தி மட்டும் வாங்குவோம். தால் ஃப்ரீ வாங்கிக் கொண்டு போயிருக்கும் புளிக்காய்ச்சல், ஊறுகாய்களோடு சாப்பிடுவோம். காண்ட்லாவிலேயே குளித்துத் துவைத்துத்துணி உலர்த்தினு! அப்பாடா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

   Delete
 6. ஓ எழுதியிருக்கீங்க நான் முதல்ல காட்டில்னின்னது பார்த்து உடனே ஹைலைட் பண்ணி இங்க போட்டுட்டேன் இருங்க முழுசும் வாசித்து வரேன்....

  கீதா

  ReplyDelete
 7. பீடிகை ரொம்ப பலமாயிருக்கு. நான் மெதுவா படிக்கறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஒரு வாரம் கொடுத்திருந்தேன். படிச்சீங்களா இல்லையா? :)))))

   Delete
 8. அக்கா உங்க பயணம் ரொம்பவே ஸ்வாரஸ்யம். ஒரு வீட்டையே சுமந்திருக்கீங்க. அப்போல்லாம் அப்படித்தானே இப்பத்தான் நிறைய வசதிகள் வந்தாலும் என்னவோ அப்போதைய காலம் நல்லாருந்தது போல எனக்கு மனசில் தோனும். வடக்கே ரயில்கள் அடிக்கடி ரத்தாவது, தடுக்கி விழுவது (ஹிஹிஹிஹி) ரொம்ப சகஜம் இல்லையோ?!அப்போ? புகை வண்டி தானே அதாவது எஞ்சின் கரிப்புகை வண்டிதானே அப்போல்லாம்?

  குஜராத், அஹமதாபாத் ரோட் நகரம் எல்லாம் ரொம்ப நல்லாகிருக்குனு சொன்னாங்க. சுத்தமாவும் இருக்க்னு சொன்னாங்க. என் மைத்துனர் பலவருடங்களுக்கு முன்ன அங்கதான் இருந்தாங்க. மைத்துனர் ஆனந்த் டயரில இருந்தார். அப்பவே ஊர் நல்லாருக்கும். அஹமதாபாத்ல அப்புறம் நாத்தனார் பரோடால இருந்தாங்க.


  கீதா

  ReplyDelete
  Replies
  1. இதுக்குக் காலம்பர ஏதோ பதில் கொடுத்திருந்தேன்.போகலை போல! அப்போதைய ரயில்வே நிர்வாகம் வடமாநிலங்களில் சுமார் ரகம் தான் என்றாலும் ராணுவம் என்றால் கொஞ்சம் மதிப்பு வட மாநிலங்களில் உண்டு. அனுபவ பூர்வமாக அவங்களுக்குத் தான் தெரியும், இந்திய ராணுவத்தின் மதிப்பு. எனக்கும் பெரிய நாத்தனார் பிலாயிலும், 2 ஆவது நாத்தனார் அந்தமான், கத்திஹார்(பிஹார்) போன்ற இடங்களிலும் மைத்துனர்கள் முறையே மும்பை, தில்லி எனவும் இருந்தார்கள்.:)))))) குஜராத் எப்போவுமே சுத்தம், சுகாதாரம், நிர்வாகத்தில் முதலிடம்! மும்பையும் நல்லா இருக்கும்.ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோக் காசு 18 ரூ எனில் (குறைந்த பட்சத்தொகை) 20 ரூ கொடுத்தால் மிச்சம் 2 ரூ கொடுத்துடுவாங்க! அப்போல்லாம் கரி வண்டியும் உண்டு. டீசலும் உண்டு. வெகு தூரப் பயணங்களுக்கு டீசல் தான் அதிகம்!

   Delete
 9. ரொம்ப ஸ்வாரஸியமா இருக்கு கீதாக்கா...இன்னும் விரிவாவே எழுதுங்க...

  இத்தனை சாமானையும் எப்படி ரயில்ல வைச்சீங்க? குடும்பமா போனா எல்லாரும் சேர்ந்து போறதுதான் நல்லாருக்கும் ஆளுக்கொரு பக்கமா உக்காந்தா போர்தான்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, முன்னேயே விரிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வா நிறையவே எழுதித் தள்ளிட்டேன். இப்போச் சும்மா ஒரு ரிவிஷன்! எல்லாசாமான்களையும் பயணிகள் உட்காரும் இடத்துக்கு அடியில், மேலே, கழிவறை போகும் பக்கம்னு வைச்சுட்டு உட்கார்ந்திருந்தோம். அதிசயம் என்னன்னா நினைவா எல்லா சாமான்களையும் எடுத்துக் கொண்டது தான்! எதுவும் எங்கும் காணாமல் போனதில்லை.

   Delete
 10. பயண அனுபவங்கள் அருமை.
  பசுமையான நினைவுகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி! நினைவோ ஒரு பறவை! அது விரிக்கும் தன் சிறகை! இதானே நமக்கு! :))))

   Delete
 11. பயணங்கள் நமக்கு பல அனுபவங்களை தருகின்றன.....

  உங்கள் அனுபவங்களை படிக்க மலைப்பு. தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், நீங்களும் முன்னால் ஒருவேளை படிச்சிருக்கலாம்.

   Delete
 12. எனக்கு பயணமே வாழ்க்கை...!

  ReplyDelete
  Replies
  1. வாங்க டிடி, ஆமாம், அலுப்புத் தான் வரும்! :(

   Delete
 13. முதல் பாராவில் உள்ள பயண அனுபவங்களே தலைசுற்ற வைக்கின்றன! அம்மா........டி! இவற்றில் சில அனுபவங்களை நானும் படித்த நினைவு.....

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, ஶ்ரீராம், முதல் முதல் நான் தன்னந்தனியாகப் பதினேழு வயசில் சென்னையிலிருந்து மதுரைக்குப் பயணிக்கையில் அப்போப் போய்க் கொண்டிருந்த கொல்லம் எக்ஸ்பிரஸில் (அதான் இப்போ குருவாயூர்னு நினைக்கிறேன்.) பயணித்தேன். பகல்வேளையில் சென்றால் பாதுகாப்பு எனப் பெரியப்பா அப்படி அனுப்பி இருந்தார். அந்த வண்டி திருச்சி தாண்ட முடியவில்லை. முன்னால் அடுத்தடுத்து இரண்டு வண்டிகள் கவிழ்ந்து ரயில் பாதை சீரமைக்க ஆறு மணி நேரம் ஆனது. கிளம்பின அன்று மாலை சுமார் ஐந்து மணி அளவில் மதுரை போக வேண்டியவள் மறுநாள் காலங்கார்த்தாலே போய்ச் சேர்ந்தேன். :)))) அப்பாவும், அம்மாவும் ராத்திரியெல்லாம் தூங்கவே இல்லை என்றார்கள். எனக்கு அப்போச் சின்ன வயசு என்பதால் ரொம்பவே ரசிச்சேன் அந்தப் பயணத்தை!

   Delete
 14. ​தலைசுற்ற வைக்கும் அனுபவங்கள். மதுரையிலிருந்து சென்னைக்கு வைகையில் ஒரு வன்னியர் போராட்ட நாளில் வந்ததே என் அதிகபட்ச சாதனை.

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம், காசிக்குப்போனப்போவும், ஹைதராபாத் சார்மினார் பார்க்கப் போனப்போவும் ஏற்பட்ட அனுபவங்களைச் சொன்னால் என்ன செய்வீங்களோ? :)))) காசியில் ரிக்‌ஷாக்காரரே எங்களைப் பாதுகாத்தார்!

   Delete
 15. இந்த மாதிரி அனுபவங்களை இதெல்லாம் சகஜமப்பா என்பதுபோல ஏற்றுக்கொண்டு கடந்திருக்கிறீர்கள். எனக்குப் பொறுமையே போய்விடும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், ஜகஜமாகத் தான் எடுத்துக் கொண்டு இருந்திருக்கேன். ஆனால் எங்க வீட்டில் எனக்கு டென்ஷன் பார்ட்டி எனப் பெண், பிள்ளை, மாமா எல்லோரும் சொல்லுவார்கள்.என்ன காரணம் என்றால் ஊர்களுக்குக் கிளம்பும் முன்னர் 2 நாட்கள் முன்னிருந்தே சாப்பாடு விஷயத்தில் ரொம்பவே கவனமா இருப்பேன். போகிற இடத்தில் பிரச்னை வரக்கூடாது என! கிளம்பற அன்னிக்கு அநேகமாப் பட்டினி தான். பிஸ்கட், காஃபி, டீ, பால் என எடுத்துப்பேன். திட உணவு சாப்பிடுவது 2 ஆம் பட்சம் தான்! நேத்திக்குக் கூடச் சென்னையிலிருந்து திரும்பி வந்தப்போக் காலை உணவு எடுத்துக்கலை. மத்தியானம் ரயில் பயணத்தில் எதுவும் சாப்பிடாமல் இருக்கக் கூடாது என்பதால் இரண்டு ரொட்டியும் கொஞ்சம் போல்சப்ஜியும்.ரங்க்ஸ் மோர் குடிச்சார். நான் அது கூட வேண்டாம்னுட்டேன். :))) ராத்திரி வீட்டுக்கு வந்து தோசை வார்த்துச் சாப்பிட்டோம். அப்போ இறங்கவும் இறங்கியது!

   Delete
 16. மொத்தப் பொருட்களையும் பயணத்தில் கூடவே ரயிலிலேயே ஏற்றிக்கொண்டு..... அம்மாடி... இதெல்லாம் பெரிய சாதனைகள்...

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, சாதனைனு இதை மட்டும் சொன்னால் இன்னும் ராணுவ வீரர்களின் குடும்பங்கள், அவங்க தனிப்பட்ட முறையில் ஊர் விட்டு ஊர் போவது பற்றி எல்லாம் விரிவாகச் சொன்னால் என்ன சொல்வீங்களோ? ராணுவ வீரர் ஒரு ஊரில் இருப்பார்! குடும்பம் எல்லாம் அந்த யூனிட்டின் தலைமை அலுவலகம் எந்த மாநிலத்தின் தலைமை அலுவலகமோ அங்கே குடியிருப்புக்களில் இருப்பார்கள். தபால் எல்லாம் ராணுவக் குறியீட்டில் தான் அனுப்பி வைக்கணும்! :)))) லீவ் கிடைச்சு வீட்டுக்கு வருவாங்க. திடீர்னு யூனிட்டில் கூப்பிடுவாங்க! அதெல்லாம் பார்த்தால் நாங்கல்லாம் எவ்வளவோ மேல்!

   Delete
 17. எவ்வளவு பயண அனுபவங்கள்..... எல்லாமே நினைவில் வைத்து நீண்ட இடுகைகளாக எழுதியிருக்க மாட்டீங்க.

  ஒரு பிரச்சனைன்னு வரும்போதுதான் பக்கத்துல உள்ளவங்க அன்பு, மனிதத்தனம் வெளியே வருகிறது (காட்டில் உணவு).

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லைத்தமிழரே, எல்லாமே நினைவில் வைத்து நீண்ட இடுகைகளாக ஏற்கெனவே எழுதிட்டேன். அதிலும் இந்த ஜாம்நகர், நசிராபாத் குடித்தனங்கள் எல்லாம் ரொம்பவே விபரமாக எழுதி இருக்கேன். :)))) மக்கள் பொதுவாகவே நல்லவங்க தான்! சந்தர்ப்ப சூழ்நிலைகள் தான் அவங்களை மாத்துகிறது!

   Delete
 18. 91 ல் தலைநகர் தில்லிக்குச் சென்று அங்கே இரண்டு நாள் தங்கியிருந்த பிறகு தான் அங்கிர்ந்து குவைத்திற்குச் சென்றேன்...

  அதைத் தவிர வடநாட்டுப் பயணங்கள் என்று ஏதுமில்லை...

  தங்களது பதிவுகளுக்காகக் காத்திருக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை, பத்ரிநாத் போனப்போ எங்களுக்கு முன்னால் சென்ற பேருந்து கவிழும் நிலையில்மாட்டிக்கொள்ள பின்னால் நாங்க வரிசையா நிற்க, எதிரே மேலே ஏறும் வண்டிகளும் வரிசை கட்டி நிற்க! அதெல்லாம் பெரிய கதை! இதை எல்லாம் எழுதணும்னு எனக்குப் போட்டு வைச்சிருப்பதால் இன்னிக்கும் இருந்து கொண்டு எழுதறேன்.

   Delete
 19. இந்தப்பதிவில் உள்ள சில விஷயங்களை ஏற்கனவே படித்தது போல் இருக்கிறதே? இருந்தாலும் ஸ்வாரஸ்யம்தான்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க பானுமதி, முன்னால் உள்ள பதிவுகளில், (ஆரம்பகாலப் பதிவுகள்) படித்திருக்கலாம்.

   Delete
 20. //சண்டை, பூசல், சமாதானம், வெள்ளைக்கொடி // - நானும் பெண்ணும், தடுப்புக்கு அந்தப்புறம் அப்பாவும் பையரும் - இந்த இரண்டையும் அதே வரிசைலதான் எழுதியிருக்கீங்களா?

  ReplyDelete
  Replies
  1. புரியலை! நாங்க இருந்தது பெண்கள் பெட்டி என்பதால் பக்கத்துப் பொதுப்பெட்டிக்கும் எங்க பெட்டிக்கும் நடுவில் ஒரே ஒரு மரத்தடுப்பு. அதில் உள்ள ஜன்னல் வழியாகப் பார்க்கலாம். அவங்க அங்கே இருந்தாங்க. அதான் நான் சொல்ல வந்தது.

   Delete
 21. ///வேலை மாற்றத்தின் விளைவால் எழுபதுகளில் ராஜஸ்தான் சென்றதும், ///
  ஆஆஆ பொறுக்கிட்டேன் பொறுக்கிட்டேன்ன் அப்போ கீசாக்காவுக்கு இப்போ..... சரி வாணாம் எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:) ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் தான் இன்னும் பிறக்கவே இல்லைனு ஜொள்ளிட்டே இருக்கேனே! ஆகவே இதை வைச்செல்லாம் என்னோட வயசைக் கணக்குப் பண்ணக் கூடாது! ஆமாம், ஜொள்ளிட்டேன். அப்புறமாத் தேம்ஸிலே பிடிச்சுத் தள்ளிடுவேன்.:)))))

   Delete
 22. கீசாக்காவின் இந்த போஸ்ட்டுக்கு நான் இன்னும் கொமெண்ட்ஸ் போடவில்லையோ? ஒரே கொயப்பமா இருக்கீதூஊ:)

  ReplyDelete
  Replies
  1. அதானே, கமென்ட்ஸ் போட்டீங்களா இல்லையா? இங்கே அப்போ வந்தது ஆரு? பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கே! இது அதிரடி தானே?

   Delete
 23. வணக்கம் சகோதரி

  நிறைய பயணங்கள், அதுவும் வடநாட்டு பயணங்கள் என அனுபவபட்டு இருக்கிறீர்கள். எனக்கு சென்னை தி.லிக்கு செல்லும் போது சிலசமயம் ரயிலில் கஸ்டப்பட்ட அனுபவங்கள் தவிர வேறு ஒன்றுமில்லை. ஆனால் தாங்கள் மொழிகள் தெரியாத ஊர்களிலும், சிரமத்துடன் பயணப்பட்டு சமாளித்திருக்கிறீர்கள். காட்டு பகுதிகளில் ரயில்வண்டி பழுதுண்டு தாமதித்த போதிலும் மன தைரியத்துடன் வந்த பிரச்சனைகளை எதிர் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் பொறுமைக்கும் திறமைகளுக்கும் பாராட்டுக்கள்.

  தற்சமயம் தாங்கள் பயணித்த இடங்களையும், அது குறித்த விரிவாக பதிவுகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, எங்க வீட்டில் எல்லோருக்குமே ஹிந்தி நன்றாகத் தெரியும். எனக்குக் கல்யாணத்துக்கு முன்னாடியே இருந்து ஹிந்தி எழுதப்படிக்க, பேச வரும்! ஆகவே மொழி தெரியலைனு சொல்ல முடியாது. இந்தியாவில் எங்கே போனாலும் ஹிந்தி தெரிந்தால் போதும். இன்னும் வட கிழக்கு மாநிலங்கள் பக்கம் போகலை! அங்கே ஹிந்தி அவ்வளவாத் தெரியாது என்கின்றனர். வெங்கட்டைத் தான் கேட்கணும். ஆனால் ஆங்கிலம் பேசுவாங்க அங்கெல்லாம்! ஆகவே மொழிப் பிரச்னை இருக்காது.

   Delete
 24. நீங்க தலைப்புக்கு 1,2ந்னு பாகம் குறிப்பிட வேண்டாமா.
  நான் படிக்காமல் தவற விட்டிருக்கிறேன்.
  இது எல்லாம் என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.
  இத்தனை ரயில் பயணங்கள். இத்தனை சவால்கள். கீதாமா. நாங்கள் தமிழ் நாட்டுக்குள்ளயே
  மாற்றிச் சென்றொம். அதுவும் கம்பெனி
  பொறுப்பு எடுத்துக் கொண்ட மாற்றங்கள்.
  லாரியில் ஏற்றி விட்டால் நாங்கள் போகும் போது
  உடமைகளும் வந்துவிடும்.
  மாமா கொடுத்துவைத்தவர். இவ்வளவு பொறுப்புகளை நீங்கள் சமாளித்து இருக்கிறிர்கள்.
  மனம் நிறை வாழ்த்துகள்.அடுத்த பயணத்தகவல்களை
  எதிர்பார்த்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, வல்லி, அப்படி எல்லாம் குறிப்பிட்டுச் சொல்லும்படி எல்லாம் எழுதலை. நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க!அதனால் என்ன? நானும் பதில் தாமதமாய்த் தானே கொடுக்கிறேன். ஆமாம், பொறுப்புக்கள் அதிகம்தான். ஆனால் எங்க பாக்கிங் சொல்லிக்கொள்ளும்படி, பாராட்டும் விதத்தில் இருக்கும். பொறுமையா எந்தப் பொருளும் வீணாகாமல் பாக்கிங் செய்வோம்.

   Delete