எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, April 21, 2019

கோலாப்பூரின் கதையும், மஹாலக்ஷ்மி குடி கொண்ட விதமும்!

பதினெட்டு முக்கிய சக்தி பீடங்களில் கோலாப்பூரும் ஒன்று. அம்பிகை இங்கே மஹாஸ்தானத்தில் இருப்பதாகச் சொல்லுவார்கள். இந்தப் பதினெட்டும் மஹா சக்தி பீடங்கள் என அழைக்கப்படும். அதிலும் கோலாப்பூரில் தேவியின் முக்கண்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால் முழு ஆகர்ஷண சக்தியோடு தேவி இங்கே விளங்குவதாய்ச் சொல்லப்படுகிறது.  பக்தர்கள் அம்பிகையை அம்பா பாய் எனப் பிரியமுடன் அழைத்து வணங்குகின்றனர். வரலாற்று ரீதியாகப் பார்த்தால் சாளுக்கிய மன்னன் கரண்தேவால் ஏழாம் நூற்றாண்டிலேயே இது கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் சுற்றுச் சுவர்களைப் பார்த்தால் மிகப் பழமை வாய்ந்ததாகவே தெரிய வருகிறது. இந்தக் கோயிலின் கட்டிடக் கலை பிரபலமான ஹேமந்த்பதி சிற்பகலையை ஒட்டி அமைக்கப்பட்டுப் பின்னர் வந்த யாதவ வம்சத்து அரசர்களால் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் சூரியக் கதிரிகள் மூலஸ்தானத்திலுள்ள அம்பிகையின் மேல் பட்டுத் தங்கம் போல் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்தக் கோயிலைக் கரவீரபுரம் எனவும் அழைக்கின்றனர். பிரளய காலத்தில் மஹாலக்ஷ்மி தன் கரத்தை உயர்த்தி இந்தக் கோயிலைக் காத்ததால் அவ்வாறு அழைப்பதாகச் சொல்கின்றனர்.

இந்தக் கரவீரபுரத்தில் தான் கிருஷ்ணாவதாரத்தில் ஜராசந்தனிடமிருந்து தப்பி ஓடிய கிருஷ்ணனும் பலராமனும் ஒளிந்து கொண்டது. சஹ்யாத்ரி மலைத்தொடருக்குப் பின்னே இருக்கும் இந்த ஊரில் லக்ஷ்மி மஹாவிஷ்ணுவிடம் கோபித்துக் கொண்டு தனியே வந்தமர்ந்ததாகவும் ஓர் புராணக் கதை உண்டு. பிருகு முனிவரால் மார்பில் உதைக்கப்பட்ட மஹாவிஷ்ணு அதைக் கண்டு கோபம் கொள்ளாமல் பிருகு முனிவரின் காலைப் பிடித்துவிட மஹாலக்ஷ்மிக்குக் கோபம் வருகிறது. தான்குடி கொண்டிருக்கும் மார்பை ஓர் மனிதன் உதைத்து விட்டதால் தன்னுடைய செல்வாக்குப் போய்விட்டதாகவும் அஷ்ட ஐஸ்வரியங்களும் நிறைந்த தான் ஓர் மனிதனால் அவமானப்படுத்தப்பட்டதாகவும் நினைத்தாள். ஆனால் மஹாவிஷ்ணு அவளைச் சமாதானம் செய்து பார்த்தார். மஹாலக்ஷ்மி சமாதானமே ஆகவில்லை.  மஹாவிஷ்ணுவையே சபித்தாள். தன்னைப் பிரிந்து அவர் வாழும்படியும் தன்னைத் தேடி அலைய வேண்டும் எனவும் கூறினாள். பின்னர் கோபத்துடன் கரவீரபுரத்தை அடைந்து அங்கே சுவர்ணமுகி ஆற்றங்கரையில் தனித்து வாழலானாள்.

லக்ஷ்மி தன்னை விட்டுப் பிரிந்ததும் பூலோகம் வந்த மஹாவிஷ்ணு அவள் கரவீரபுரத்தில் இருப்பதை அறிந்தார். ஆனாலும் அவளைத் தேடிச் செல்லாமல்  ஶ்ரீநிவாசன் என்னும் பெயருடன் வேங்கட மலைக்கு வந்து புற்றில் வாசம் செய்தார். அங்கே வந்த பிரம்மாவும், சிவனும் மஹாலக்ஷ்மியிடம் போய் ஶ்ரீமந்நாராயணனை வைகுண்டம் திரும்ப உதவும்படி கேட்க லக்ஷ்மி மறுத்தாள்.  அப்போது லக்ஷ்மியிடம் ஹரிக்கு ஆகாரம் அளிக்க வேண்டித் தாங்கள் இருவரும் பசுவும், கன்றாகவும் ஆகப் போவதாகவும் அந்தப் பசுவையும், கன்றையும் வேங்கடமலைக்கு அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த சோழனுக்கு விற்றுவிடும்படியும் கூறவே லக்ஷ்மியும் அவ்வாறே செய்து விட்டு விஷ்ணுவைப் பற்றி நினைக்காமல் மீண்டும் கரவீரபுரம் வந்து விட்டாள். இதைக் கண்ட ஶ்ரீநிவாசன் அங்கே தனக்காகக் காத்திருந்த பத்மாவதியை மணம் முடிக்கிறார். லக்ஷ்மியை மறந்து விட, அவளுக்குக் கோபம் வந்து பத்மாவதியை மணந்ததாலும் தன்னை மறந்ததாலும் பாதாளத்தில் உள்ள கபிலரின் ஆசிரமத்தில் போய்த் தங்கிவிட்டாள்.

பத்மாவதி ஶ்ரீநிவாசனிடம் லக்ஷ்மியைத் தேடும்படி சொல்ல அவரும் லக்ஷ்மியைத் தேடுகிறார். ஆனால் லக்ஷ்மியின் சாபத்தால் அவரால் அவளை உடனே கண்டு பிடிக்க முடியவில்லை. அங்கும் இங்கும் அலைந்து திரிந்த மஹாவிஷ்ணு சுவர்ணமுகி ஆற்றின் கரைக்கு அருகே இருந்த குளத்தில் பூத்திருந்த பெரிய தாமரை மலரைப் பார்த்த வண்ணம் அங்கேயே அமர்ந்து விட்டார். கபில முனிவர் லக்ஷ்மியின் மனதை மாற்றுகிறார். பிருகு ஒரு மானிடன் எனவும் அவன் பாதம் பட்டதால் தன் பதிவிரதா தர்மத்துக்குப் பங்கம் ஏற்பட்டதாகவும் லக்ஷ்மி கூற மானிடர்கள் அனைவரும் உங்கள் குழந்தைகள். குழந்தை உதைத்தால் தாய் கோவிப்பாளா? அதனால் விஷ்ணு பிருகு முனிவர் பாதத்தைப் பிடித்து விட்டார். இது உனக்குத் தெரியாதா? நீ ஏதும் அறியாதவளா என்றெல்லாம் சொல்லத் தான் இப்போது எப்படி அவர் மார்பை அடைவது எனத் திகைப்பதாக லக்ஷ்மி கூறினாள். இப்போது புதுக் கல்யாணம் செய்து கொண்டு பத்மாவதியை அடைந்திருக்கும் ஶ்ரீநிவாசனின் மார்பில் தான் அடைக்கலம் தேடுவது முறையா எனவும் கேட்டாள்.

கபில முனிவர் அம்மா, இதுவும் உன் விளையாட்டன்றோ? பத்மாவதியாய் வந்திருப்பவளும் நீயே! இங்கே மஹாலக்ஷ்மியாய் வீற்றிருப்பவளும் நீயே! கிருஷ்ணாவதாரத்தில் பல்லாயிரக்கணக்கான கோபிகையருடன்  கண்ணன் இருக்கையிலும் நீ அவன் மார்பில் தான் இருந்தாய்! இப்போது இது என்ன விளையாட்டு? என வினவினார். அதன் பேரில் மஹாலக்ஷ்மி தான் கரவீரபுரத்துக்கு வந்து கோயில் கொள்ள வேண்டும் என்று இருந்த வேலை முடிந்து விட்டதால் தான் இனி வைகுண்டம் போய்ச் சேரலாம் என்னும் எண்ணத்துடன் ஶ்ரீநிவாசன் மார்பில் அடைக்கலம் புகுந்தாள். தாமரையில் தான் பத்மாவதியாய் எழுந்தருளியதை நினைத்து அலர்மேல் மங்கை என்னும் நாமத்துடன்  அங்கேயும் கோயில் கொண்டாள்.

இவ்வாறு தன் சக்திகள் அனைத்தையும் இங்கே கொண்டு வந்து அம்பிகை கோயில் கொண்டதால் கோலாப்பூர் எப்போவும் சுபிக்ஷமாகவே இருந்து வருகிறது.  இந்தக் கோயில் ஜைனர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது. பஞ்ச கங்கா என அழைக்கப்படும் ஐந்து நதிகளின் சங்கமக்கரையில் இந்த ஊர் அமைந்துள்ளது. இந்தப் பஞ்சநதிகளும் இங்கே உள்ள ப்ரயாக் சங்கமத்தில் இருந்து ஆரம்பிப்பதாகவும் கூறுகின்றனர்.  கசாரி நதி, கும்பி நதி, துள்சி நதி, போகாவதி நதி மற்றும் மறைமுகமாகக் கூடும் அந்தர்வாகினியான சரஸ்வதி நதி ஆகியன. இதைக் கிருஷ்ணா நதியின் துணை நதி எனச் சொல்லுவாரும் உண்டு.

கோலாப்பூர் மஹாலக்ஷ்மி கோயிலுக்கு கொங்கண அரசன்காமதேவன் என்பவன், ஷிலாஹரா, தேவகிரி யாதவர்கள் ஆகியோர் திருப்பணி செய்திருப்பதாக அறிகிறோம். சளுக்கியக் கலையைச் சார்ந்து கட்டப்பட்ட இந்தக் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னாலிருந்து உள்ளது என்பதோடு பற்பல புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதி சங்கராசாரியாரும் இந்தக் கோயிலுக்கு வந்து சென்றிருப்பதாகத் தெரியவருகிறது. சத்ரபதி ஷிவாஜி, சம்பாஜி ஆகியோரின் இஷ்ட தெய்வமாகவும் கோலாப்பூர் மஹாலக்ஷ்மி இருந்து வந்திருக்கிறாள்.
பஞ்ச கங்கா நதிக்கரை

நதிக்கரையில் உள்ள ஆஞ்சி கோயில்


இந்தக் கோயில் காடுகளை அழித்துப் பின்னர் வெளி உலகுக்கும் மக்கள் வழிபாட்டுக்கும் கர்ணதேவன் காலத்தில் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்தக் கோயிலைப் பற்றிய ஆய்வுகள் இது ஏழாம், எட்டாம் நூற்றாண்டை விட மிகப் பழமையானது எனச் சொல்கின்றனர் சரித்திர ஆய்வாளர்கள் சிலர். பூகம்பத்தின் விளைவாக இது உள்ளே புதையுண்டு இருந்ததாகவும் ஒன்பதாம் நூற்றாண்டில்  கந்தவாடி மன்னனால் கோயில் விரிவு படுத்துப்பட்டுக் கட்டப்பட்டதாகவும் அறிகிறோம். அதன் பின்னர் 12,13 ஆம்நூற்றாண்டுகளில் ராஜா ஜயசிங்கால் தென்புறத்துக் கதவும் நுழைவாயிலும் கட்டப்பட்டு அதன் பின்னர் தேவகிரி யாதவ மன்னர்களால் மஹாத்வார் என அழைக்கப்படும் முக்கிய வாயிலும் கட்டப்பட்டு இருக்கிறது.

கோயில் மிகப் பெரியதாக இருப்பதால் எல்லாப் பக்கத்து வாயில்களுக்கும் போக முடியவில்லை. பிரகாரங்களும் பெரியவை! ஆங்காங்கே தீபஸ்தம்பங்கள் இருக்கின்றன.

34 comments:

 1. படங்கள் தெளிவு. கதை சுவாரஸ்யம். தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க பானுமதி, முதல் வரவு. :) காமிராவில் எடுக்கையில் நன்றாகவே வருகிறது. என்றாலும் மஹாலக்ஷ்மி கோயிலில் படம் எடுக்கையில் காமிரா மூடாமல் கொஞ்சம் பிரச்னை! அப்புறம் தானே சரியானது. இடைப்பட்ட நேரத்தில் அலைபேசி மூலம் படங்கள் எடுத்திருந்தேன். அவற்றை இன்னமும் வலை ஏற்றவில்லை.

   Delete
 2. அப்பப்பா எத்தனை கதைகள் நம்புபவர்களுக்கு நம்பும்படியாக உள்ளதா என்பதே கேள்வி நான் ஏன் என் கருத்துகளைக்கூறி வாரிக்கட்டிக்கொள்ள வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜிஎம்பி ஐயா. உங்களுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்பது தான் தெரிந்த விஷயம் ஆயிற்றே. ஆகவே தாராளமாக உங்கள் கருத்தைக் கூறலாம். ஆனால் கோயிலின் தொன்மைக்குச் சான்றே தேவையில்லை. பார்த்தாலே தெரிகிறது.

   Delete
 3. வணக்கம் சகோதரி

  கோலாப்பூரின் கதையும், அன்னை மஹாலக்ஷ்மி குடி வந்த கதையும் ஸ்வாரஸ்யமாக எடுத்து கூறியுள்ளீர்கள். பிருகு முனிவர் கதை தெரியும் என்றாலும், விஸ்தாரமாக நீங்கள் எடுத்துக் கூறி படிக்கும் போது மிகவும் நன்றாக இருந்தது.

  படங்கள் மிகவும் நன்றாக உள்ளது. பஞ்ச கங்கா நதி மிகவும் தூய்மையாக தெரிகிறது. நதிக்கரையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலும் நன்றாக உள்ளது. அன்னை மஹாலக்ஷ்மி கோவிலைப் பற்றிய சரித்திர விபரங்கள் தெரிந்து கொண்டேன். தங்கள் பதிவின் மூலம் இங்கெல்லாம் நீங்கள் எங்களையும் அழைத்துச் செல்கிறீர்கள். தங்களுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா. அநேகமாக இந்தியா முழுவதும் இதிஹாச, புராணங்களை வைத்துச் சொல்லப்படும் கதைகளில் மாற்றம் என்பது அரிதாகவே காணப்படும். கோலாப்பூர் சக்தி பீடம் எனவும் அன்னையின் மூன்று விழிகளும் இங்கே இருப்பதால் மூன்று தேவியரும், மூன்று சக்திகளும் ஒருங்கே குடி கொண்டது எனவும் சொல்லுகின்றனர்.

   Delete
 4. ஓம் மஹா லக்ஷ்ம்யை நம:

  திருக்கோயிலைப் பற்றிய செய்திகள் அருமை,...

  ReplyDelete
  Replies
  1. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி துரை!

   Delete
 5. எனக்கும் மஹாலக்ஷ்மி பிருகு முனிவர் கதைக்குப் பிறகு என்ன செய்கிறாள் என்று எண்ணம் ஓடிக் கொண்டிருக்கும். அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

  சரித்திரம் மிக அருமை. நன்றி கீதா.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை ஒரே மாதிரியான வரலாறு/கதைகள்/புராணங்கள் தானே. சக்தி உபாசகர்கள் தேவியின் முக்கண்களும் விழுந்த இடம் என்கின்றனர்.

   Delete
 6. கோவில் பற்றிய விவரங்கள் வெகு சுவாரஸ்யம். கோவிலின் பழமை பற்றிய செய்தி மிகவும் அதிசயிக்க வைக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீராம்,

   Delete
 7. சிறப்பான தகவல்கள்.

  தகவல் பகிர்வுக்கு நன்றிம்மா...

  ReplyDelete
 8. கோலாப்பூர் இதுவரை அறிந்திராதது.. பகிர்வுக்கு நன்றிம்மா

  ReplyDelete
 9. இதுவரை கோலாப்பூர் மகாலக்‌குமி கோவிலைப் பற்றி அறிந்ததில்லை. சுவாரசியமான கதைகள். படங்களும் நன்றாக வந்திருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. அரங்கனை வந்து ஏன் பார்க்கவில்லை நெ.த.???????????????????????

   Delete
  2. ம்க்கும்.... நீங்க வெளியூர்ப்பயணமா போயிருக்கும்போது நான் ஏன் ஸ்ரீரங்கத்துக்கு வர்றேன்... இப்போ தமிழ்ப்புத்தாண்டுக்கு திருமலகிரி கோவில் (ஜெ.பி. நகர், பெங்களூர்). விரைவில் திருவரங்கம் வருகிறேன். (அப்போ நீங்க லீவு போடாம இருக்கணும். பொடிபோட்ட வகைகளை முடித்து இனிப்பு வகைகள் செய்துபார்க்க ஆரம்பித்திருக்கணும், படங்களோட இடுகை போட... எத்தனை 'ணும்')

   Delete
  3. https://sivamgss.blogspot.com/2019/04/blog-post_19.html ஹையோ, ஹையோ! நான் சொன்னது இந்தச் சுட்டிக்கு வந்து அரங்கனை ஏன் பார்க்கலைனு! முந்தைய பதிவில் உங்களைக் காணோம். அதான் கேட்டேன்.

   Delete
 10. நதியில் நீரோட்டம் இருப்பதுபோல இல்லையே..அமைதியா குளம் போன்று உள்ளதே.... நதியில் நீராடமுடிந்ததா?

  ReplyDelete
  Replies
  1. குளமும் அதாவது பழமையான ஏரி உள்ளது. அந்தப்படம் இங்கே பகிரவில்லை. இந்த மூன்று படங்களும் ஆஞ்சி தவிர்த்து ஆட்டோ ஓட்டுநர் எடுத்தார். ஆஞ்சியைப் பார்த்ததும் நான் கீழே இறங்கி வந்து ஓட்டுநரிடமிருந்து காமிராவை வாங்கிப் படம் எடுத்துக் கொண்டேன்.

   Delete
 11. இந்திய ஆலயங்களில் பெரும்பாலும் அவ்வப்போது புதிய கோவில்களை நிர்மாணித்திருந்தாலும் புனருத்தாரணம் செய்திருந்தாலும், ஒரிஜினல் மூலவர்/கோவில் பல்லாயிரக்கணக்கான ஆண்டு பழமையானது.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், சில கோயில்களின் கட்டுமானத்தைப் பார்க்கையிலேயே யூகிக்க முடியும்.

   Delete
 12. கோலாப்பூர் பற்றிய வரலாறு அருமை.
  படங்கள் அழகு.

  //கோலாப்பூரில் தேவியின் முக்கண்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால் முழு ஆகர்ஷண சக்தியோடு தேவி இங்கே விளங்குவதாய்ச் சொல்லப்படுகிறது.//

  அம்பா பாய் ஆக்ர்ஷண சக்தியால் அனைத்து மக்களுக்கும் நல்லது செய்யட்டும்.
  அம்பா நீ இரங்காய் எனில் புகழ் ஏது பாடல் நினைவுக்கு வருது.  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அரசு. கருத்துக்கும் பாடல் பகிர்வுக்கும் நன்றி.

   Delete
 13. அதிரடியும், ஏஞ்சலும் இல்லாமல் அவங்களோட விளையாட்டுச் சண்டை இல்லாமல் வலை உலகே வெறிச்ச்ச்ச்!!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 14. கோலாப்பூர் கேள்விப்பட்டுள்ளேன். இப்பதிவு மூலமாக அறியாதன அறிந்தேன். புகைப்படங்கள் பதிவிற்கு மெருகூட்டுகின்றன.

  ReplyDelete
  Replies
  1. வாங்க முனைவர் ஐயா, நான் இந்தக் கோயிலுக்கெல்லாம் நம்மால்போக முடியும் என்றே நினைத்துக் கூடப் பார்த்தது இல்லை. எல்லாம் அன்னையின் அருள்.

   Delete
 15. நதி படங்கள் செமையா இருக்கு கீதாக்கா. நானும் இக்கோயில் போயிருக்கிறேன். அப்போது கேமரா கிடையாதே அத்னால் ஃபோட்ட்டோ எடுக்கவில்லை. அப்ப சாதாரண மொபைலே கிடையாது ஹிஹிஹி

  இந்தக் கோயில் போயிருந்தாலும் இந்தக் கதைகள் எல்லாம் உங்கள் மூலம்தான் அறிகிறேன் அக்கா. ஸ்வாரஸ்யமான கதை.

  ஆஞ்சுவை மீண்டும் தரிச்சித்துக் கொண்டேன். நான் அப்ப போனப்ப நதியில் காலும் நனைத்தேன்!!

  கோயில் மிக அழகாக இருக்கும்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க தி/கீதா! படங்களை ரசித்தமைக்கு நன்றி.காமிரா என்றால் ஓரளவுக்குப் படம் வருது! அதோடு நதிப் படங்கள் எல்லாம் ஆட்டோ ஓட்டுநர் எடுத்தவை. ஆஞ்சி படம் நான்!

   Delete
 16. அழகான படங்கள் மற்றும் சிறப்பான தகவல்கள், விவரணங்கள் அறிந்து கொண்டேன்

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. நன்றி துளசிதரன்.

   Delete