எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 12, 2019

சும்மா ஒரு திப்பிச வேலையும், ஒரு நல்ல வேலையும்!

தம்பி குடும்பம் போன வாரம் வந்தப்போ அவங்களுக்கு எதுக்கும் பயன்படும்னு வெந்தய தோசைக்கு அரைச்சு வைச்சிருந்தேன். என்ன? என்ன? நெல்லைத் தமிழரே, செய்முறையா?  என்னோட முறை வெந்தய தோசையே தனி! அதுக்கு அப்புறமா வருவோம்.  முடிஞ்சாச் சுட்டி தரேன். இருங்க, வரேன்!

இங்கே, பார்த்துக்கோங்க  நெல்லைத் தமிழரே, சும்மாச் சும்மாக் கேட்கக் கூடாது, செரியா?

  இப்போத் திப்பிசத்தைப் பார்க்க வேண்டாமா? அந்த வெந்தய தோசை மாவில் தம்பி மனைவி அவங்களுக்கு தோசை வார்த்தது போக மிச்சம் வைச்சிருந்தார். அதை நாங்க சென்னையிலிருந்து ஶ்ரீரங்கம் வந்தன்னிக்கு ராத்திரி எங்க இரண்டு பேருக்கும் தோசை வார்க்க எடுத்துக் கொண்டேன். இம்முறை பல்லவனும் சீக்கிரமாய் வர, உம்மாச்சி மாதிரி ஒரு ஆட்டோக்காரர் வந்து சுருக்கு வழியில் கூட்டிப் போகிறேன்னு வந்து சாமான்களையும் தூக்கிக் கொண்டு எங்களை அதிகம் நடக்க விடாமல் அழைத்துப் போனார்.  அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம்! இல்லைனா அந்த நடைமேடை முழுவதும் சுமார் அரைகிமீட்டராவது இருக்கும், நடந்து போய்ச் சுரங்கப்பாதையில் கீழே இறங்கி மேலே ஏறி, அம்மாடி, இதுக்கே மூச்சு வாங்குதே! பெட்டியை எல்லாம் தூக்கிக் கொண்டு ஏறுவதும், இறங்குவதும்?  சென்னை போனால் இந்தப் படிகளில் ஏறி இறங்க முடியலைன்னே , இதுக்காகவே நாங்க மாம்பலத்தில் இறங்காமல் எழும்பூரில் போய் இறங்கிட்டு இருக்கோம்.ஆனால் இங்கே ஶ்ரீரங்கத்தில் இறங்கித் தானே ஆகணும்! { சென்னையில் எழும்பூரில் இரண்டாவது நடைமேடையில் வெளியே வரும் பக்கம் எஸ்கலேட்டர் அருகே லிஃப்ட் இருப்பதையும் இம்முறை பார்த்தேன். ஆனால் போகலை. வெளியேறும் வழி கிட்டத்தான் இருந்தது.}

நாங்க வந்தது ஏசி என்பதால் ஒண்ணு இஞ்சின் பக்கம் வரும், இல்லைனாக் கடைசியில் கார்ட் வான் பக்கம் வரும். இறங்கறச்சே கார்ட் வான் பக்கம். எங்க பெட்டிக்கு அப்புறமா ஒரு முன்பதிவில்லாப் பயணம் செய்யறவங்க ஏறும் பெட்டி, அதுக்கப்புறமா கார்ட் வான்!  கீழே இறங்கறச்சேயே அந்த ஆட்டோக்காரர் கவனிச்சிருக்கார் போல! உடனேயே ரங்க்ஸிடம் வந்து தான் விரைவில் கொண்டு விடுவதாகச் சொல்லவே ஏற்கெனவே சுரங்கத்தை நோக்கி நடக்க ஆரம்பிச்சிருந்த என்னை ரங்க்ஸ் அழைத்தார். அந்த ஆட்டோக்காரர் சொன்னதைக் கேட்டு சபலம் வந்தாலும் எங்காவது இரண்டரை அடி உயரத்தில் படி இருக்குமோனு சந்தேகம் என்னை விடலை. அவரைக் கேட்டேன். நிச்சயமா இல்லைனு சத்தியமே பண்ணினார். ஆட்டோவில் கொண்டு விடப் பணமும் அதிகம் கேட்கவில்லை. அது வேறே சந்தேகம், கவலை. நல்லவங்களா இருப்பதில் கூட இந்தக்காலத்தில் சந்தேகப்பட வைக்குது பாருங்க! :) அவருடன் நடந்தோம். அங்கிருந்து முதல் நடைமேடை போய்ச் சிறிது தூரத்திலேயே ஓர் இடைவெளிச் சந்து தெரிய அதன் வழியே கொஞ்ச தூரத்திலேயே ஸ்டேஷன் ரோடின் ஒரு பக்கம். அங்கே ஆட்டோக்கள் நின்று கொண்டிருந்தன. நம்ம ஆட்டோக்காரர் எங்க சாமான்களை அவர் வண்டியில் வைத்துவிட்டு மறுபடி வந்து எங்களை அழைத்துச் சென்றார். ஆகவே அன்னிக்கு எட்டு நாற்பதுக்கே வீட்டுக்கு வந்தாச்சு. ஏற்கெனவே நான் வீட்டில் தான் சாப்பாடுனு முடிவு பண்ணி இருந்ததால் தோசை வார்த்துத் தக்காளித் தொக்கு (நான் மட்டும்), அவர் புளிக்காய்ச்சல், மிளகாய்ப் பொடியோடு சாப்பிட்டாச்சு.  மாவு கொஞ்சம் மிச்சம். மறுநாள் அதை வார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்கலை. 

ஆகவே நேற்றிரவு என்ன பண்ணலாம்னு மண்டை குடையவேதக்காளிகள் ஊருக்குப் போகும்போது வாங்கியவை வீணாகும் நிலையில் இருந்ததைப் பார்த்தேன்.நாம யாரு? உடனே  மண்டையில் உதித்தது ஒரு எண்ணம்! தக்காளி தோசை செய்தால் என்ன?அப்போ இருக்கிற மாவை என்ன பண்ணுவதாம்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! யோசித்ததில் மூளையில் பளீரென எல் ஈடி பல்ப் எரிய உடனடியாக அதைச் செயலாற்றத் துவங்கினேன். நல்ல தக்காளிகளாக நான்கு பொறுக்கிக் கொண்டு அதில் தக்காளியின் கண்ணை மட்டும் வெட்டி எடுத்துட்டு மிச்சத்தோடு மி.வத்தல், தேங்காய்த் துருவல், பெருங்காயம், உப்புச் சேர்த்து நன்கு விழுதாக அரைத்தேன்.

ஏற்கெனவே இருந்த மாவோடு ஒரு கிண்ணம் ரவை, ஒரு கரண்டி கோதுமை மாவு சேர்த்தேன். அரைத்த விழுதையும் போட்டுக் கலந்து விட்டுப் பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் கருகப்பிலை, கொத்துமல்லியோடு சேர்த்துக் கலந்தேன். தோசைகளாக வார்த்தேன். நேத்திக்குப் பாடு ஆச்சு. புதிய முறையில் தக்காளி தோசையும் பண்ணியாச்சு! இதை வெறும் ரவை, அரிசிமாவு, மைதா அல்லது கோதுமை மாவோடு கூட ஒரு தரம் முயற்சி பண்ணனும்னு இருக்கேன். :)))))  தொட்டுக்கக் காலம்பர வைச்ச குழம்புக் கருவடாம் போட்ட குழம்பு!

                           
                              பாத்திரத்தில் மிச்ச தோசை மாவு. பக்கத்தில் மிக்சி ஜாரில் அரைத்த தக்காளி விழுது!

               
                            கூடச் சேர்த்த ஒரு கிண்ணம் ரவையும் ஒரு கரண்டி கோதுமை மாவும்.


வெங்காயம் பொடியாக நறுக்கியது


எல்லாவற்றையும் மாவில் போட்டுக் கலக்கணும்.


இதோ தோசை வார்த்தாகி விட்டது! 


ஹிஹிஹி, இது என்ன இன்னிக்கு ஒரே சமையலா இருக்கேனு பார்த்தீங்களா?  அதே தான். ஊருக்குப் போறச்சே வாங்கி வைச்ச கத்திரிக்காயை நேத்திக்குக் கறி பண்ணினாலும் நாலு மிச்சம் இருந்தது. அதில் இன்னிக்குக் கத்திரிக்காய் சாதம் பண்ணினேன். ஆரம்பிக்கையில் படம் எடுக்கும் எண்ணமோ போடும் எண்ணமோ இல்லை. கத்திரிக்காய் வதங்கும்போது தான் படம் எடுத்துப் போடும் எண்ணம் வர சரினு கறி நிலைமையில் கத்திரிக்காய் இருக்கும்போதே படம் எடுத்தேன்.

பின்னர் அதில் சாதம், மசாலா பொடி எல்லாம் போட்டுக் கலக்கும்போது எடுத்த படம். பச்சைக் கொத்துமல்லி தூவி விட்டு வெள்ளரிக்காய்த் தயிர்ப்பச்சடியுடன் சாப்பிட்டாச்சு!

கத்திரிக்காய் சாதம் செய்யத் தேவைப் பட்ட பொருட்கள்:

மி.வத்தல் 4, தனியா அல்லது கொத்துமல்லி விதை, இரண்டு டேபிள் ஸ்பூன், இரண்டு டீஸ்பூன் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன், எள் ஒரு டீஸ்பூன்,  பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு, சோம்பு ஒரு டீஸ்பூன், சின்னத் துண்டு லவங்கப்பட்டை, ஒரு கிராம்பு, ஒரு ஏலக்காய்,  மசாலாக்களில் போடும் பூ ஒரு டீஸ்பூன் அளவுக்கு அல்லது நான்கு ஐந்து பூக்கள், தேங்காய்த் துருவல்  ஒரு டேபிள் ஸ்பூன்
ஆனால் நான் இந்தப் பொடியை இதில் சொல்லி இருக்கும் முறையில் எல்லாம் செய்து வைச்சுக்கலை. ஏற்கெனவே மிவத்தல், கொ.ம.விதையோடு கபருப்பு, உபருப்பு, மிளகு, வெந்தயம் போட்டு வறுத்து அரைத்த பொடி இருந்தது. இது எப்போவுமே என்னிடம் தயார் நிலையில் இருக்கும். ஆகவே நான் இன்று சோம்பு, மசாலாப் பூக்கள், கிராம்பு, ஏலக்காய், லவங்கப்பட்டை ஆகியவற்றை மட்டும் வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு பொடி செய்து கொண்டேன். அதைத் தனியாகவே வைத்தேன். தேங்காய்த் துருவலையும் வாணலியில் சூட்டில் போட்டுப் பிரட்டினேன். 

கத்திரிக்காய், வெங்காயம் நறுக்கிக் கொண்டு கடாயில் அல்லது அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு அதில் கடுகு, உபருப்பு, கபருப்பு, வேர்க்கடலை தாளித்துக் கொண்டு பெருங்காயம் , கருகப்பிலை சேர்த்தேன். பின்னர் வெங்காயத்தைப் போட்டு வதக்கினேன். அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்தேன். வெங்காயம் சீக்கிரம் வதங்கும். பின்னர் கத்திரிக்காய்களைப் போட்டு மஞ்சள் பொடி, கால் டீஸ்பூன் மி.பொடி, கால் டீஸ்பூன் தனியாப் பொடி போட்டு மூடி வைத்து வதக்கினேன். கத்திரிக்காய் நன்கு வதங்கியதும் தேவையான உப்பைப் போட்டுக் கூடவே சாதத்தையும் சேர்த்தேன். 


ஏற்கெனவே தயார் நிலையில் இருந்த மிளகாய், தனியா சேர்த்த மசாலாப்பொடியோடு தேங்காய்த் துருவல், புதிதாக அரைத்த கரம் மசாலாப்பொடி ஆகியவற்றை மிக்சி ஜாரில் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி விட்டு சாதத்தில் போட்டுக் கலந்தேன். தேவையான உப்பும் சேர்க்கணும் இப்போத் தான்! வேணும்னா ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டுக்கலாம். புளிப்பு வேண்டுமெனில் அம்சூர் பவுடர் அரை டீஸ்பூன் இறக்கும்போது போடலாம். அல்லது எலுமிச்சம்பழம் பிழியலாம். பச்சைக்கொத்துமல்லி பொடியாக நறுக்கித் தூவினால் கத்திரிக்காய் சாதம் தயார்! என்னிடம் அம்சூர் பவுடர் இல்லை. எலுமிச்சம்பழம் இருந்தது. ஆனாலும் சேர்க்கவில்லை. அப்படியே  சாப்பிட்டோம். நன்றாகவே இருந்தது.

45 comments:

  1. நல்லவங்களா இருப்பதில் கூட இந்தக்காலத்தில் சந்தேகப்பட வைக்குது பாருங்க! :) //

    நல்லதுக்குக் காலமே இல்லைனு சொல்றது சரிதான் போல!!! ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, ஆமாம், தி/கீதா, அந்த ஆட்டோக்காரர் வலுவில் வந்து உதவி செய்யவே கொஞ்சம் சந்தேகம் வந்தது என்னமோ உண்மைதான்! அதை நினைச்சு இப்போ வெட்கமாக இருந்தாலும் இப்போதைய காலகட்டத்தில் வலுவில் உதவிசெய்பவர்கள் அரிதாக இருக்கிறார்களே! அதிலும் ஆட்டோ ஓட்டுநர்கள்! இங்கே நாங்க வந்ததில் இருந்து சுமார் ஆறு ஆண்டுகளாக ஆதரித்து வந்த ஒரு ஆட்டோக்காரர் இப்போத் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. முத்ரா திட்டத்தின் மூலம் அவர் ஆட்டோ சொந்தமாக வாங்கவும், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் வீடு பெறவும் ஆலோசனைகள் சொல்லி இருக்கோம். எங்களிடம் உள்ள பல பயன்படாத பொருட்களை அவங்களுக்குத் தேவையா எனக்க்கேட்டுக் கொடுத்து உதவி இருக்கோம். 2,3 கைப்பைகள் இருக்குனு ஒரு நல்ல கைப்பையை ஆட்டோக்காரரின் வேலைக்குச் செல்லும் பெண்ணுக்குக் கொடுத்து என்னோட சிந்தெடிக் புடைவைகளை எல்லாம் கொடுத்துனு பல உதவிகள்! :( ஆனால் அந்தக் மனிதர் இப்போக் கறாராகப் பேசுகிறார். ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் செல்ல 80 ரூபாயில் இருந்து 90 வரை கேட்கிறார். மற்ற ஆட்டோக்காரர்கள் 60 ரூ வாங்குகின்றனர்.

      Delete
    2. இதை எல்லாம் இங்கே சொல்லி இருக்கக் கூடாது தான். ஆனால் முத்ரா திட்டம், பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் போன்றவற்றின் மூலம் பயன் பெற்றவர்களில் இவரும் ஒருவர். இவரைத் தவிர்த்தும் சிலர் பயன் பெற்றிருக்கிறார்கள். அவங்களையும் அறிவோம். ஆனாலும் மக்கள் இதை எல்லாம் நினைத்தே பார்ப்பதில்லை.

      Delete
  2. நான் வெந்தய தோசை செய்யறதுண்டு அக்கா....பு அ வெந்தயம் நிறைய போட்டு, அப்புறம் பு அ, து ப, வெந்தயம் போட்டு ஒரு வகை. வெந்தயம் நிறைய....இந்த மாவு கொஞ்சம் புளிச்சாத்தான் நல்லாருக்கும். து ப போட்டு அரைக்கறது டக்குனு புளிச்சுரும்.

    உங்க குறிப்பும் போய்ப் பார்க்கறேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இது எல்லா முறையிலும் நானும் வெந்தய தோசை பண்ணி இருக்கேன். பண்ணுகிறேன்.

      Delete
  3. இதை வெறும் ரவை, அரிசிமாவு, மைதா அல்லது கோதுமை மாவோடு கூட ஒரு தரம் முயற்சி பண்ணனும்னு இருக்கேன். :)))))//

    அக்கா நான் கியாரண்டி தரேன் ரொம்ப நல்லாருக்கும். எப்படினு கேக்கறீங்களா ஹிஹிஹிஹி...நாமும் இந்த திப்பிசம் செய்யறவங்களாச்சே. முன்னாடி எல்லாம் வீட்டுக்கு இப்படித் திடீர்னு யாராவது வந்துருவாங்க. அதாவது நான் சொல்லற கதை ஒரு 25 வருஷம் முன்ன திருவனந்தபுரத்துல இருந்தப்ப. நட்பு வட்டம் பெரிது. உறவினர் வட்டமும். அப்புறம் சென்னைலயும்.....ஸோ அப்ப இருக்கறத இப்படி கொஞ்சம் அதைப் போட்டு இதைப் போட்டு செய்யறது...இப்ப வீட்ட்டுல கொஞ்சம் செஞ்சாலே மீறுது அதையும் இப்படித் திப்பிசம் செய்யறது...ஆனா ஏனோ பதிவு போடவே வரமாட்டேங்குது.. செய்யற திப்பிசமும் மறந்து போய்டுது ஹிஹிஹிஹிஹி....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, ஒரு நாள் முயற்சி செய்யணும் தி/கீதா. இந்த முறையில் செய்த தக்காளி தோசை நம்மவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது போல. 3 சாப்பிட்டார். :)))))

      Delete
  4. நார்மலாவே ஒரு கரண்டி தோசை மாவு மீந்துச்சுனா அதுல ரவை கொஞ்சம் கலந்து வெங்காயம் போட்டு அல்லது போடாமல் ரவா தோசை செய்யறது....அதுவும் சூப்பரா வரும்.

    ஒரு முறை நீர் தோசைக்கு அரைச்சது ரெண்டாங்கெட்டானா இருந்துச்சு. உளுந்து கொஞ்சம் ஊற வைச்சு அரைச்ஹ்கு வைச்சுட்டேன் அடுத்த நாள் அதுவும் தோசையா நல்லாருந்துச்ஹ்கு.. நீர் தோசை மாவுல ரவை, கோதுமை/மைதா கலந்து தாளிச்சு நார்மலா செய்யற ரவா தோசை போல செஞ்சதுண்டு.....

    உங்க திப்பிசம் சூப்பர்!! பார்க்கவே நல்லாருக்கு.....

    அடுத்த என்னவோ வாணலில திப்பிசமா? இருங்க பார்த்துட்டு வரேன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இட்லி, தோசைக்கு அரைக்கும் மாவு எவ்வளவு மிச்சம் வருதுங்கறதைப் பொறுத்து நான் ரவாதோசையாகவோ, நீர் தோசையாகவோ, அல்லது குழி அப்பங்களாகவோ, வெள்ளை அப்பங்களாகவோ மாற்றுவேன். சில, பல சமயங்களில் பருப்பு வகைகளை ஊற வைச்சு உப்புக்காரம் சேர்த்து அந்தக் மாவில் கலந்து அடை தோசையாகவும் வார்ப்பேன். இஃகி,இஃகி நமக்குத் திப்பிசத்துக்குச் சொல்லியா தரணும்? காஞ்சீபுரம் இட்லி மாவில் கூட அடையாகப் பண்ணுவதும் உண்டு. உப்புமாக் கொழுக்கட்டை போலப் பண்ணுவதும் உண்டு. :))))

      Delete
  5. வேர்க்கடலை//

    சேர்த்தால் நலலருக்கும்னு சொல்ல வந்தேன் நீங்க கொடுத்திருந்தீங்க...

    அப்புறம் நீங்க சொல்ற பூ அன்னாசிப் பூ தானே? 5,6 நு இதழ்களைத்தானே சொல்றீங்க இல்லையா அக்கா. பூ முழுசும் நா அது டாமினேட் செய்யுமே நிறைய அதன் வாசனை.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அன்னாசிப்பூதான். ஆனால் மற்ற சாமான்களும் சரியான அளவில் சேர்ப்பதால் அதிகம் வாசனை வராது.

      Delete
  6. என்னடா இது... படிக்கறவங்களுக்கு வந்த சோதனை!

    பயண ஆரம்பம், பயணம் பற்றி ஒரு இடுகை. அடுத்த இடுகை வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், 'உணவே மருந்து' தளத்துல வரும் இடுகை. இந்த இரண்டுக்கும் இடையில் என்ன ஆச்சு....மூச்... வந்தால் வரும். வராவிட்டாலும் ஆச்சர்யமில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, நெல்லைத் தமிழரே, ஏற்கெனவே அடுத்தடுத்து ஊர் சுற்றிக் கொண்டிருக்கேன். வீட்டிலே எல்லாம் ஒழுங்கு செய்யணும். நான்கைந்து நாட்கள் வீட்டில் இல்லைனா வேலை கொஞ்சம் அதிகம் இருக்கும். இதுக்கு நடுவில் துணி துவைத்தல், வீடு பெருக்கிச் சுத்தம் செய்தல், சமையல், மத்தியானங்களில் பூத்தொடுத்தல் என இருக்கும் வேலைகள் தவிர்த்து மாலைக்கும் உணவு தயாரிப்பு வேலை இருக்கும். என்ன தான் வேலை செய்யும் பெண்மணி பாத்திரங்கள் கழுவிக் கொடுத்தாலும் அதையும் சரியா இருக்கானு பார்த்து எடுத்து வைக்கணும். இதுக்கெல்லாம் அப்புறமா இருக்கும்/கிடைக்கும் நேரத்தில் தான் கணினி!

      Delete
  7. நானும் இந்த மாதிரி தக்காளி தோசை பண்ணினேன். அவ்வளவு சரியா வரலை. அடுத்த முறை மீண்டும் செய்துபார்க்கிறேன்.

    பயணம் போயிட்டு வந்து உடனே ஏதேனும் உணவு தயார் செய்ய அலுப்பா இல்லயோ

    ReplyDelete
    Replies
    1. அலுப்பெல்லாம் இல்லை. சொல்லப் போனால் செவ்வாய்க்கிழமை பல்லவனில் வந்த அன்று இரவே வீட்டில் தான் தோசை வார்த்துச் சாப்பிட்டோம். வரும்போதே பால் பாக்கெட் வாங்கி வந்துடுவோம். ஏனெனில் பால்காரர் மறுநாள் காலை தான் வரச் சொல்லுவோம். அந்தப் பாலில் தேவை எனில் ஹார்லிக்ஸ். மறுநாள் காலை காஃபி!

      Delete
  8. அம்சூர் பொடி சேர்ப்பதுண்டு சேர்க்காட்டாலும் நல்லாருக்கும்தான். அப்புறம் இதிலேயே கத்தரி தக்காளியும் சும்மா ஒன்றோ ரெண்டோ கூட வதக்கி சேர்த்திருக்கேன். அப்புறம் நானும் வெங்காயம் வதங்கும் போது கொஞ்சூண்டு சர்க்கரை சேர்ப்பதுண்டு.

    கத்தரிக்காய் சாதம் சூப்பரா இருக்கு அக்கா...உங்க குறிப்பையும் நோட்டட். நானும் தனியா மிளகாய் மிளகு, க ப உ ப வெந்தயம் சேர்த்த பொடி வைச்சுருப்பேன்....ஆபத் பாந்தவன் இந்தப் பொடி!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கத்திரிக்காய் சாதத்தில் தக்காளி போட்டால் எங்க ரெண்டு பேருக்குமே அவ்வளவாப் பிடிக்கலை. உ.கி. பொடியாக நறுக்கித் தக்காளி, வெங்காயம் மட்டும் போட்டுச் சில சமயம் சாதம் கலப்பேன். கத்திரிக்காயோடு சேர்த்துப் போட்டதில்லை. சர்க்கரை சேர்ப்பது மசாலாப் பொடிகளின் காரத்தைக் குறைக்க மட்டுமில்லாமல் வெங்காயம் சீக்கிரம் வதங்குவதற்காகவும் தான்.

      Delete
  9. அங்கயும் போய்ப் பார்த்துவிட்டு வந்துட்டேன் அக்கா...அதேதான் கொஞ்சம் மஞ்சளா வரும் தோசை.....மூன்று முறையும் அதே. து ப போட்டுச் செய்யும் முறை நான் பாண்டிச்சேரியில் இருந்தப்ப பக்கத்துவீட்டுக்கார பாட்டியிடம் தெரிந்து கொண்டேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நான் மீனாக்ஷி அம்மா மூலம் தெரிந்து கொண்டேன். தி/கீதா.

      Delete
  10. திப்பிச வேலையும், நல்ல வேலையும் நன்றாக இருக்கிறது.
    பொருட்கள் வீணாக கூடாது, நம் வயிறும் கெடக் கூடாது, அவ்வளவுதான்.
    எதை எதையோ கலந்து பக்குவமாக செய்து சாப்பிட்டு விட்டது அறிந்து மகிழ்ச்சி.

    //மி.வத்தல் 4, தனியா அல்லது கொத்துமல்லி விதை, இரண்டு டேபிள் ஸ்பூன், இரண்டு டீஸ்பூன் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன், எள் ஒரு டீஸ்பூன், பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு//

    இதோடு தேங்காய் வறுத்து பொடி செய்து விடுவேன் மற்ற பொருட்களுடன்.

    கத்திரிக்காய் சாதம் மசலா பொருட்கள் இல்லாமல் செய்வேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, இந்தப் பொடியை அரைக்கையில் நான் கொப்பரையாகவே இருந்தாலும் தேங்காய் சேர்ப்பதில்லை. அது என்னமோ ஒரு மாசத்திலே வாசனை வராப்போல் எனக்குத் தோணும். அதனால் தேவையான பொடிக்குத் தேவையான தேங்காயை அன்றன்றே சேர்த்து மீண்டும் ஒரு முறை மிக்சி ஜாரிலோ போட்டுக் கலந்துப்பேன். சாம்பார் பண்ணினாலும் அப்படித் தான். மற்றபடி என் அம்மாவும் மசாலா சாமான்கள் போடாமலே கத்திரிக்காய் சாதம் பண்ணுவார்.

      Delete
  11. நறுவிசா திப்பிசம் செய்வது எப்படி என்று கீதா ஒரு புத்தகமே போடலாம்.

    நானும் பைத்தியக்கார தோசைன்னு கலப்படமா ஒரு தோசை செய்திருக்கிறேன்.
    பெரிய மாமியாரைத் திருப்தி செய்ய.
    எல்லாப் படங்களும் சூப்பர்.
    காமிரா நிபுணரும் ஆயாச்சு.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, வல்லி, திப்பிசம் பண்ணறது தான் நம்ம வாடிக்கையாச்சே. படங்கள் நன்றாக இருப்பதாகச் சொன்னதற்கு நன்றி. இத்தனைக்கும் அவசரத்தில் எடுத்ததால் செல்லில் தான் எடுத்தேன். சொதப்புமோனு நினைச்சேன்.

      Delete
    2. //நறுவிசா திப்பிசம் //

      வார்த்தைப்பிரயோகத்தை ரசித்தேன் அம்மா.

      Delete
  12. ம்ம்ம். திப்பிசங்கள் தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், நீங்களும் திப்பிசங்களில் நல்லதைப் பார்த்துச் செய்து பாருங்க! :)))))

      Delete
  13. பெருசா பாரம்பரிய சமையல் என்று ரஜனி படம் போல விளம்பரம் கொடுத்துட்டு எந்திரன் பார்ட் 1 போல ஒரு பொடி போட்ட சாம்பார் செய்முறையை எழுதிவிட்டு பின்னர் சாவகாசமாக வந்து பொடி போட்டதால் பொடி வகையறாக்களை எழுதிவிட்டு பின்னர் இப்போது வந்து யுரேகா நான் திப்பிசம் செய்தது நல்லா இருந்துச்சு என்று ஆர்ப்பாட்டம் வேறே. மாமா எப்படித்தான் நீங்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்று இருப்பதை சமாளிக்கிறாரோ?

    கருவடாம் போட்ட குழம்பு!
    நான் கருவாடு குழம்பு என்று படித்துவிட்டேன்.

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. ஜேகே அண்ணா, முதல்லே கண்ணாடியை மாத்துங்க, அல்லது பவர் செக் பண்ணுங்க. புடைவைகள் நிறம் தான் சரியாத் தெரியலைனு நினைச்சேன். எழுத்துமா? அதோடு நெல்லைக்குச் சொன்ன பதில் தான் உங்களுக்கும். மேலும் நான் ஏற்கெனவே எழுதி வைத்துக் கொண்டு அதைக் காப்பி, பேஸ்ட் பண்ணி ஷெட்யூல் பண்ணுவதில்லை. பாரதியார், தமிழ்த்தாத்தா போன்றோரின் பிறந்த நாள், நினைவு நாட்களில் தான் ஷெட்யூல் செய்வதெல்லாம். மற்ற தினங்களில் அப்படியே உட்கார்ந்து எழுதுவது தான். ஆகவே நேரம் எடுக்கும். முதலில் வீட்டு வேலைகள். பின்னர் நேரம் கிடைத்தால் கணினி!

      Delete
  14. தோசை ஆசையை தூண்டுதே...
    ரெண்டு தேவகோட்டை பார்....சல்....

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, தாமதமா வந்துட்டீங்களே! :)))))

      Delete
  15. தக்காளி தோசை புதிது... கத்திரிக்காய் சாதம் செய்முறைக்கு நன்றி அம்மா...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி. தக்காளி தோசை அரைச்சும் செய்யலாம். அரிசி, துபருப்பு+உபருப்பு+தேங்காய் உப்புக்காரம் சேர்த்து அரைத்து அதில் தக்காளி விழுதையும் சேர்த்து அரைத்துக் கொண்டு வெங்காயம் நறுக்கிப் போட்டுச் செய்யலாம். இது அவசரத்திற்காக நான் செய்தது! ஏற்கெனவே இருந்த மாவில்! :))))

      Delete
  16. ஆகா... அருமை...
    இதுக்கெல்லாம் கொடுத்து வெச்சிருக்கோணும்!....

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, இந்தப் பக்கம் வந்தா வாங்க! உங்களுக்கும் கொடுத்து வைச்சிருக்கும். :)

      Delete
  17. ஆகா... அருமை...
    இதுக்கெல்லாம் கொடுத்து வெச்சிருக்கோணும்!....

    ReplyDelete
  18. நாங்கள் பயணத்தில் இருந்தபோது அலஹாபாத் என்று நினைக்கிறேன் ஒரு போர்டர் நாங்க போகும் வண்டி யின் போகி ஏற்கனவே ஒரு நடை மெடையிலிருந்ததால் எங்களை சாமா ந்சகிதம் கூட்டிப்போய் வண்டியில் ஏற்றிவிட்டார் முதலில் சந்தேகம் இருந்தாலும் அவரது செயல் அன்று எங்களுக்கு மிகவும் உதவியாய் இருந்தது இப்போதெல்லாம் ரயில் பயணங்களைத் தவிர்க்கிறோம் மகன் காரில் கூட்டிப்போனால்தா பயணம் என்றாகி விட்டது

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி சார், நாங்களும் ரயில் பயணங்களைக் குறைத்து வருகிறோம். என்றாலும் சில இடங்களுக்குத் தவிர்க்க முடியறதில்லை!

      Delete
  19. தக்காளி தோசை பார்க்க நன்றாய் இருக்கிறது. சுவையான திப்பிசம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், சாப்பிடவும் நன்றாகவே இருந்தது. :)

      Delete
  20. திப்பிசம் என்று சொல்லிவிட்டு பாதிக்குப்பாதி பயணக்குறிப்புகள். என்றாலும் அந்த ஆட்டோக்காரர் மனதில் நின்றுவிட்டார்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க வேறே ஶ்ரீராம், இதையே திப்பிசப் பதிவுனு ஜேகே அண்ணா சொல்றார்! :))))) ஆட்டோக்காரர் இங்கே தான் இருக்கார். விலாசம் கொடுத்திருக்கார்!

      Delete
  21. கத்தரிக்காய் சாதம் சாப்பிட்டு நாட்கள் இல்லை, இல்லை, வருடங்கள் ஆச்சு. ம்...ஹூம்...

    ReplyDelete
    Replies
    1. நான் வாரம் ஒரு முறையேனும் ஏதேனும் கலந்த சாதம் பண்ணிடுவேன். அன்னிக்கு ராத்திரிக்குச் சப்பாத்தி வைச்சுக் கொண்டால் காலைக் குழம்பு, ரசம் மிச்சம் ஆகாமல் இருக்கும். ஆகவே மண்டையை உடைத்துக் கொண்டு யோசித்துச் செய்யணும்.


      Delete