எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, April 30, 2019

மஹாலக்ஷ்மியின் சகோதரர் இருக்கும் இடம்!

அதற்கடுத்து அவர் அழைத்துச் சென்ற இடம் உயரத்தில் இருக்கும் கோயில் என்றார். நான் உடனே படிக்கட்டுகள் இருக்கும் என நினைத்து அப்படி என்றால் வேண்டாம், விட்டுடுங்க, என்னால் ஏற முடியாது என்றேன். அவர் இல்லை, மலை மேல் இருப்பதால் அப்படிச் சொன்னேன் எனக் கூறிவிட்டு சஹ்யாத்திரி மலைத்தொடரின் ஒரு பகுதியான ரத்னகிரி மலை மேல் ஏற ஆரம்பித்தார். இது கோலாப்பூர் நகரில் இருந்து சுமார் 20 முதல் 25 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.  மலையின் மேல் சுமார் 3200 அடி உயரத்தில் உள்ளது இந்தக் கோயில். இந்தக் கோயிலில் மும்மூர்த்திகளும் சேர்ந்து பிரதிஷ்டை கொண்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. தத்தாத்ரேயர் கோயில் எனவும் சிலர் சொல்கின்றனர்.

இந்தக் கோயிலின் முக்கிய மூலவர் மும்மூர்த்திகளும் சேர்ந்தவர் எனவும் சொல்லப்படுகிறார். கேதார்நாத் என இந்தக் கோயிலை அழைத்துள்ளனர். இறைவன் கேதாரேஸ்வரர் என்னும் பெயரிலும் அழைக்கப்பட்டுள்ளார். ஜோதிர்லிங்க ஸ்தலங்களைப் போல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்கின்றனர்.  ரத்னாசுரன் என்னும் அசுரனை மும்மூர்த்திகளும் சேர்ந்து வதம் செய்ததாக ஐதிகம். மேலும் மூவரும் அங்கே பஞ்ச கங்கை நதிக்கரைக்கு வந்து தவம் செய்த மஹாலக்ஷ்மிக்கும் அசுரர்களை வதம் செய்த போது துணையாக இருந்தனர். ஆகையால் இந்த மூர்த்தியை மஹாலக்ஷ்மியின் சகோதரர் எனச் சொல்லுகின்றனர். இவரே ரக்தபீஜனை அழிக்கவும் உதவினார் என்கின்றனர். கருவறையில் மூலவர் நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கிறார்.

இந்தக் கோயிலுக்குச் சென்ற மலைப்பாதை வளைந்து வளைந்து பல கொண்டை ஊசி வளைவுகளுடன் இருந்தது. வண்டி சென்ற வேகத்தில் படம் எடுக்க முடியவில்லை என்பதோடு காமிராவில் மூடித் திறப்பதில் பிரச்னை தீரவில்லை. மறுபடி மறுபடி தொந்திரவு. எனினும் ஒரு சில படங்கள் கோயிலில் எடுத்தேன். அங்கே நுழையும் போது காணப்பட்ட காமதேனுவின் சிலை!





கோயில் பல சிறு கோயில்களைத் தன்னுள்ளே கொண்டிருக்கிறது. ஆனால் நாங்கள் தரிசித்தது முக்கிய மூலவரைத் தான். கோயிலின் தொன்மையும் மிகப் பழமை வாய்ந்துள்ளது.


சுற்றுப் பிரகாரத்தில் காணப்பட்ட காட்சிகள்



விரைவில் இந்தக் கோயிலில் தரிசனம் முடித்துக் கொண்டு கீழே இறங்கினோம். நகரில் இருக்கும் அரண்மனையும் அதனுள்ளே இருக்கும் ம்யூசியமும் பார்க்க வேண்டும் என்பதால் விரைவாகக் கீழே இறங்கினோம். இந்த அரண்மனைக்குள் நுழைய அனுமதிச் சீட்டு உண்டு. அதோடு இங்கே கட்டாயமாய்ப் படம் எடுக்கக் கூடாது. பலவிதமான நிபந்தனைகள் போட்டுவிட்டும், அதை எழுதியும் போட்டிருக்கின்றனர். உள்ளே நுழையும்போதும் காவலாளி வற்புறுத்திச் சொல்கிறார்.



இந்த அரண்மனை பத்தொன்பதாம் நூற்றாண்டில் கட்டி இருக்கின்றனர். இதைத் தவிர்த்தும் அரண்மனைகள், கோட்டைகள் இருப்பதால் இதைப் புதிய அரண்மனை, புதிய பாலஸ் என அழைக்கின்றனர். ஆங்கிலேய ஆட்சிக்காலத்துக் கோலாப்பூர் அரசரின் காலத்தில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்ச்சிகளின் படங்கள், ஓவியங்கள், சித்திரங்கள், சந்திப்புகள், அரசர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், அவர்களின் அந்தக் கால கட்டத்து உடைகள், அணிமணிகள், அலங்காரங்கள், ராணிகளின் சிற்பங்கள், ஓவியங்கள், சபா மண்டபம், தர்பார் ஹால் என அழைக்கப்பட்ட இடம்,  அந்தப்புரங்கள், படுக்கை அறைகள், வாகனங்கள் என அனைத்தும் அங்கே பாதுகாக்கப்படுகின்றன.

சில முக்கிய ஆவணங்களும் காட்சிப் பொருளாக இருக்கின்றன. ஆனால் பராமரிப்புக் குறைவு. சுத்தமும் போதாது. எல்லாம் புழுதி படிந்து, ஒட்டடைகளுடன் காட்சி அளிக்கின்றன.  எண்கோண வடிவிலான இந்தக் கட்டிடத்தில் உள்ள கடிகாரம் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்கின்றனர்.  எங்கெங்கும் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கைச் சித்திரம் ஓவியங்களாக வரையப்பட்டுக் காட்சி அளிக்கிறது. புனே, கோலாப்பூர் போன்ற இடங்களில் சத்ரபதி சிவாஜி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறார். நாங்கள் போயிருந்த சமயம் சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளோ/நினவு நாளோ தெரியவில்லை.புனே நகரே கோலாகலமாகக்கொண்டாடியது. இந்த அரண்மனையில் தற்போதைய கோலாப்பூர் மஹாராஜா இன்னமும் இருப்பதால் இங்கே படங்கள் எடுக்க அனுமதி இல்லை எனச் சொல்கின்றனர். ஒரு பகுதியில் ம்யூசியம் அமைந்துள்ளது.  ஷாஹூஜி சத்ரபதி ம்யூசியம் என அழைக்கப்படும் இதில் வைஸ்ராயின் கடிதம் ஒன்றும், கவர்னர் ஜெனரலின் கடிதமும் காணப்படுகிறது.

பஞ்சு அடைக்கப்பட்ட மிருகங்கள் ஒரு பக்கம் காட்சி அளிக்கின்றன. மன்னர்கள் பயன்படுத்திய அந்தக் காலத்து வாள்கள், சின்ன பீரங்கி போன்றவை மனதைக் கவருகின்றன. நினைவு வைத்துக் கொண்டு சொல்லுவது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. ஆனால் இந்த ம்யூசியத்திற்குப் படம் எடுக்கவும் அனுமதி கொடுத்துப் பணம் வசூலித்துக் கொஞ்சம் சுத்தமாகப் பராமரிக்கவும் ஏற்பாடு செய்யலாம். ம்யூசியம் பார்த்து முடிக்க ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் ஆகி விட்டது. மணி இரண்டுக்கும் மேல் ஆகி விட்டது. ஆகவே இந்த அளவில் நிறுத்திக் கொண்டு உணவு உட்கொண்டு அறைக்குத் திரும்பலாம் என முடிவெடுத்தோம். இன்னும் பார்க்க மிருகக் காட்சி சாலை எல்லாம் இருக்கு! ஆனால் போனால் இன்னும் நேரம் ஆகும். மறுநாள் காலை கோலாப்பூரில் இருந்து பண்டர்பூர் செல்ல ரயிலில் முன்பதிவு செய்திருந்தோம். ஆகவே இன்னும் சுற்ற முடியாது.

அவ்வளவில் வெளியே வந்து ஆட்டோவில் ஏறிக் கொண்டு உணவகத்துக்கு விடச் சொன்னோம். நல்லதொரு உணவகமாகப் பார்த்து உணவு உண்ணச் சொன்னார். உணவு என்னமோ நன்றாகத் தான் இருந்தது. ஆனால் அந்தக் காரம் தான் ஒத்துக்கலை. நான் ரொம்பச் சமர்த்தாகக் காரம் குறைவாகப் போடுனு சொல்லி இருந்தேன். அவங்க என்னடான்னா மிளகாய்ப் பொடியைக் குறைத்துவிட்டுப் பச்சை மிளகாயைத் தாளித்து விட்டார்கள். கோலாப்பூர் மசாலாவே காரத்துக்குப் பெயர் போனது! ஒரு மாதிரி சமாளித்துச் சாப்பிட்டுவிட்டு லஸ்ஸி ஒன்றும் குடித்தோம். அந்தக் காரத்துக்கு அது தான் தேவை! பின்னர் அறைக்கு வந்து ஓய்வு எடுத்துக் கொண்டு மாலை ஆறு மணி போல் ஆட்டோ ஓட்டுநரை வரச் சொன்னோம்.

மாலை ஐந்து மணி அளவில் ஓட்டலில் தேநீர் கேட்டு வாங்கிக் குடித்துவிட்டுத் தயாரானோம். சரியாக ஆறு மணிக்கு ஆட்டோ ஓட்டுநர் வந்தார். அவரிடம் பாரம்பரியக் கோலாப்பூர்ச் சேலைகள், கைத்தறி வேண்டும் எனச் சொல்லவே அவர் சுமார் நாலைந்து கிலோ மீட்டர் பயணத்தில்  கடைத்தெருவில் ஓர் கடைக்கு எதிரே நிறுத்தினார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கடைக்கு ஏறப் படிகள்! அங்கே எல்லா இடங்களிலும் படிகள் ஏறித்தான் ஆக வேண்டும். நல்ல உடற்பயிற்சி. தினம் தினம் ஏறி இறங்கினால் கால் பிரச்னை வராது! ஆனால் நாம் என்னிக்கோ இல்லை ஏற வேண்டி இருக்கு! எங்க பெண்ணின் மாமியார் 86/87 வயதில் மும்பையில் அவங்க குடியிருப்பில் நாலு மாடி ஏறி இறங்குகிறார். சுமார் 40/50 வருடம் முன்னர் கட்டிய அந்தக் குடியிருப்பு வளாகத்தில் லிஃப்ட் கிடையாது. நம்மாலோ என்னிக்கோ ஒரு தரம் அவங்களைப் போய்ப் பார்க்கையிலேயே நாக்குத்தள்ளும். :(

அது போகட்டும். படிகளில் ஏறிக் கடைக்குள் போய்க் கேட்டால் 2 ஆவது மாடி எனச் சொல்ல மயக்கமே வந்தது. திரும்பலாமானு யோசிக்கிறதுக்குள்ளாகக் கடைக்காரர் ஒருத்தரை அழைத்து இவங்களை உள்ளே உட்கார வைத்துக் கோலாப்பூர்ச் சேலைகளை மேலே இருந்து எடுத்து வந்து காட்டு எனச் சொன்னார். உள்ளே போனால் தரையில் அமர்ந்து பார்க்கும்படியான பெரிய கூடம். விதம் விதமாய்ச் சேலைகள்,சேலைகள், சேலைகள். சில பெண்கள் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.அவங்க முன்னால் சேலைக் குவியல் அம்பாரமாய்! இத்தனை பார்த்தும் அவங்க முகத்தில் திருப்தி இல்லை.கட்டி இருந்த சேலையும் சுமார் ரகம் தான்! இதைவிடவா நல்லதாய்ப் பார்க்கப் போறாங்க என நினைத்துக் கொண்டேன். நல்லவேளையாக எங்கள் இருவருக்கும் உட்கார நாற்காலி கொடுத்தார்கள்.

முதலில் கோலாப்பூர்ப் பட்டு வந்தது. ஆஹா! என்ன அழகு! பட்டுன்னா இதான் பட்டு என நினைத்துக் கொண்டே ஒரு புடைவையைத் தேர்ந்தெடுத்தேன். மிக அழகான புடைவை! ரங்க்ஸும் தலையை வேகமாக ஆட்ட அதைக்கொடுத்துப் பிரித்துக் காட்டச் சொல்லிட்டு என்ன விலைன்னு பார்த்தால்! மறுபடி மயக்கம்! விலை அதிகமில்லை ஜென்டில்மேன்! 9,500 ரூபாய்க்குள் தான். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அவ்வளவு கொடுத்தாப் புடைவை வாங்கறது? பின்னர் நான் அந்த ஊழியரிடம் கைத்தறிப் பருத்திச் சேலைகளைக் காட்டச் சொன்னதும் என்னைக் கொஞ்சம் துச்சமாய்ப் பார்த்தாரோ? நான் கண்டுக்கவே இல்லையே! நான் என்ன கோலாப்பூர் மஹாராணியா ஒன்பதாயிரம் கொடுத்துப் புடைவை வாங்க! பருத்திச் சேலைகள் வந்தன.முதலில் சாதாரண ரகம் காட்டினார்கள்.எல்லாம் கட்டம் போட்டவை. நிறமும், கட்டங்களும், விலையும் நன்றாக இருந்தாலும் நல்ல பருத்திச் சேலை இல்லை. கலப்பு ரகம்! புடைவையைப் பார்த்ததுமே தெரிந்தது. ஆனால் அறுநூறு ரூபாய்க்குள் தான். அதை ஒரு பக்கம் எதுக்கும் இருக்கட்டும்னு வைத்துவிட்டுப் பாரம்பரியச் சேலைகளைக் காட்டும்படி சொன்னேன்.

அவற்றையும் காட்டினார்கள். அவை சுமார் ஆயிரத்து ஐநூறில் இருந்து மூவாயிரம் வரை போகிறது. நான் ஆயிரத்து ஐநூறுக்குள்ளேயே இருக்கும்படியாகப் பார்த்து இரண்டு சேலைகள் எடுத்தேன். படம் முதலிலேயே போட்டு விட்டேன். இரண்டும் சேர்த்து மூவாயிரத்துக்கும் கீழே தான் வந்தது.  இங்கேயும் படம் மறுபடி போடறேன்.



பின்னர் பணம் கொடுத்துச் சேலைகளைப் பெற்றுக்கொண்டு மறுபடி ஆட்டோவுக்கு வந்தோம். அதற்குள்ளாக மணி ஏழரை ஆகிவிடவே இரவு உணவை முடித்துக் கொண்டு போகலாம் என ரங்க்ஸ் சொன்னார். அதென்னமோ தெரியலை. அவருக்கு மட்டும் வடமாநிலங்களுக்குப் போனால் தான் இட்லி, தோசை சாப்பிடும் ஆவல் அதிகமாகிறது. க்ர்ர்ர்ர்ர்ர்! ஆகவே தோசை வேண்டும் என்று சொல்லவே மறுபடி சில கிமீ ஓடி ஒரு கடையில் நிறுத்தினார் ஆட்டோ ஓட்டுநர். மொத்தக் கோலாப்பூரும் இன்னும் சிறிது நேரத்தில் இந்தக்கடையில் கூடி விடும் என்றும் அதற்குள்ளாகச் சாப்பிட்டு வரும்படியும் சொன்னார். தாவண்கெரே தோசா சென்டர் எனப் போட்டிருந்தது. அவங்க கொடுத்த மெனுவில் பட்டர் தோசை, மற்றும் செட்தோசை, பொடி தோசை, என இருந்ததில் நான் பட்டர் தோசை போதும் வயிற்றை ஒண்ணும் பண்ணாது எனச் சொல்லவே இருவருக்குமாக பட்டர் தோசைக்கு ஆர்டர் கொடுத்தார்.

உள்ளே அமர்ந்து சாப்பிட முடியாது. வெளியே பெஞ்சுகள் இருக்கின்றன. அதில் தான் உட்கார்ந்து சாப்பிடணும். ஏற்கெனவே நாலைந்து பேர் தோசைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்ததால் எங்களுக்குக் கொஞ்சம் நேரம் ஆகும் என்றார்.கன்னடக் காரர். பல வருடங்களாக இந்த தோசைக்கடையை நடத்தி வருகிறாராம். கையில் காமிராவோ, அலைபேசியோ கொண்டு போகாததின் நஷ்டம் அப்போத் தெரிந்தது.  என்ன செய்ய முடியும்? விரைவில் திரும்பப் போகிறோம் என நினைத்தோம். ஒவ்வொரு இடமும் தூரமாக அமைந்து விட்டது. சிறிது நேரத்தில் எங்களுக்கான தோசை வந்தது. 2,3 தோசைகளை ஒன்றாக்கியது போன்ற கனத்தில் ஒரு தோசை!தொட்டுக்கச் சட்னி மற்றும் உருளைக்கிழங்கு மசாலா. சாம்பாரெல்லாம் கிடையாது! தோசையை வெண்ணெயிலேயே குளிப்பாட்டி இருந்தார். நல்ல சூடாகக் கடைசி வரை இருந்தது. ஒரு தோசையே வயிறு நிரம்பியும் விட்டது. பின்னர் அருகிலிருந்த ஒரு ஜூஸ் கடையில் நான் மட்டும் ஃபலூடா சாப்பிட்டேன். அதன் பிறகு அங்கிருந்து தங்குமிடம் சென்று காலை எத்தனை மணிக்குக் கோயில் திறக்கும் எனக் கேட்டுக் கொண்டோம்.

பகல் பதினோரு மணிக்குத் தான் பண்டர்பூர் ரயில்! அதுக்குள்ளே இன்னொரு முறை மஹாலக்ஷ்மியை தரிசனம் செய்யலாமே என்னும் எண்ணம்.காலை நாலரைக்கே திறக்கும் எனவும் ஏழரை வரை கூட்டம் இருக்காது எனவும் சொன்னார்கள். ஆட்டோக்காரருக்குப் பணம் அன்றைய தினத்துக்குக் கொடுத்து அனுப்பினோம். மொத்தம் 750 ரூபாய் வாங்கிக்கொண்டார். மறுநாள் ரயில் நிலையத்தில் கொண்டு விட வருவதாகச் சொன்னார். கோயிலுக்கு வர வேண்டாம் எனவும் நாங்களே போய்க் கொள்கிறோம் எனவும் சொல்லி விட்டோம். 

65 comments:

  1. நிறைந்த செய்திகள்....

    பழைமையான அரண்மனை தானே என்ற அலட்சியம்...

    அதுதான் பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, அங்கேயே ராஜா இருக்கையில் சுத்தம் பேணலாம். என்னவோ! :(

      Delete
  2. ஆனால் பராமரிப்புக் குறைவு. சுத்தமும் போதாது. எல்லாம் புழுதி படிந்து, ஒட்டடைகளுடன் காட்சி அளிக்கின்றன//

    பணம் வசூல் செய்து கொண்டு அதை பராமரிப்புக்கு பயன் படுத்திக் கொள்ளலாம்.ம்யூசியத்திற்கு டிக்கட் கிடையாதா?

    ஊத்தப்பம் போல் தோசையா? அதுதான் சூடாய் கடைசி வரை இருந்து இருக்கிறது.

    புடவைகளில் கிளிபச்சை எல்லா வற்றிலும் வருதே! மூன்று புடவையிலும்!

    கோவில் வரலாறு, படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.




    ReplyDelete
    Replies
    1. ஊத்தப்பம் மாதிரி இருக்காது கோமதி அரசு மேடம். கொஞ்சம் முறுகலா இருக்கும். கஞ்சத்தனமின்றி தோசை ஆகும்போது வெண்ணெய் அதன்மேல் போடுவார்கள்.

      Delete
    2. வாங்க கோமதி, ம்யூசியத்திற்கு டிக்கெட் உண்டு. படம் தான் எடுக்கக் கூடாது. அதற்கும் பணம் வசூல் பண்ணிக் கொண்டு படம் எடுப்பார்களே என்னும் எண்ணத்தில் கொஞ்சமானும் பராமரிப்பு வேலை செய்யலாம். :( ஆனால் நம்மவர்களுக்குப் பழமையின் மதிப்பே தெரியாது! தோசை ஊத்தப்பம் மாதிரி இல்லை. தோசை மாதிரித் தான் பரத்தி இருப்பார்கள். ஆனால் கொஞ்சம் கனம். பொதுவாக கர்நாடகாவிலேயே தோசை நம்ம பக்கம் மாதிரி மெலிதாக இருப்பதில்லை. கொஞ்சம் கனமாகவே இருக்கிறது. அதிலும் செட் தோசை நல்ல கனமாக இருக்கும். ஆனால் இதில் வெண்ணெயைக் கொட்டி இருப்பார்கள்.

      Delete
    3. கோமதி, பச்சைக்கலரு ஜிங்குச்சா பத்தி எழுதலை! இரண்டும் வெவ்வேறு பச்சை, இங்கே காட்டி இருப்பது முந்தானையின் பச்சை. உடல் வேறே பச்சை! ஆனாலும் என்னைப் பச்சைக்கலர் அவ்வளவு விரைவில் விடுவதில்லை. என் அப்பா, நம்ம ரங்க்ஸ், பையர் யார் எடுத்தாலும் பச்சைக்கலரை முதலில் எடுத்துடுவாங்க. வேண்டாம்னாலும் கேட்பதில்லை. உனக்கு இதான் நல்லா இருக்குனு சொல்லிடுவாங்க! :(

      Delete
    4. செட் தோசை என்றால் தொட்டுக்கொள்ள வடகறி தருவார்களாமா?

      Delete
    5. இல்லை, மங்களூர், "பெண்"களூரில் செட் தோசைக்குக் குருமா அல்லது saagh தருவார்கள்.

      Delete
    6. பட்டர் தோசை ஆஹா செமையா இருக்கும் வீட்டில் செய்ததுண்டு ஒரு முறை ஹிந்துவில் இந்த தவண்கெரெ பட்டர் தோசை ரெசிப்பி வந்த நினைவு.....எங்கேயோ யார் வீட்டுக்கோ போகும் போது பார்த்த நினைவு...அப்ப தெரிந்து கொண்டு செய்தேன் என்ன வெண்ணை வெண்னை வெண்னைதான் ஹா ஹ ஹா ஹா

      செட் தோசை கனமாக இருக்கும் அதுவும் பிடிக்கும்.

      இங்கு நம் வீட்டருகில் தவண்கெரெ பட்டர் தோசை என்றே ஒரு மெஸ் போன்று சின்ன உணவம் இருக்கிறது. பென்னே தோசை!!!

      கீதா

      Delete
  3. அட்டெண்டன்ஸ் போட்டுக்கறேன். மைக்ரேன்!

    ReplyDelete
    Replies
    1. நான் சில கை வைத்தியங்கள் சொன்ன நினைவு. முயற்சி செய்து பார்த்திருக்கலாமோ? :( விரைவில் சரியாகப் பிரார்த்திக்கிறேன்.

      Delete
  4. யாத்ரீகர்கள் நிறைய பேர்களோ வருகிறார்கள் என்னும் பொழுது அதை பராமரிக்க வேண்டாமா?
    கோலாப்பூர் புடவை பர்சேசும், பட்டர் தோசையும் அருமை

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, கொஞ்சம் ஃப்ரீ ஆக ஆகி இருக்கீங்களோ? இப்போல்லாம் பதிவுகளில் சீக்கிரம் பார்க்க முடிகிறது. நல்லது தான்! புடைவை வாங்கியது குறித்து ஏற்கெனவே சொல்லிட்டேன்.

      Delete
  5. தகவல்கள் நிறைய சொன்னீர்கள் சுவாரஸ்யம்.
    நம்ம ஜிவாஜி கணேசனின் புகழ் அங்கும் பரவியது கண்டு மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, கில்லர்ஜி, சத்ரபதி சிவாஜினு பெயரை மாத்திடறேன். இவரை ஜிவாஜினு இல்லை சொல்லி இருப்பேன். :)))))

      Delete
    2. சத்ரபதியா..... நான்கூட நம்ம சூரக்கோட்டைக்காரரோன்னு நினைச்சுட்டேன்.

      Delete
    3. ஹாஹாஹா, கில்லர்ஜி! இதோ இப்போவே போய் மாத்திட்டுத் தான் மறு வேலை! :)))))

      Delete
    4. நானும் சொல்ல நினைத்தேன். எப்படியோ சிவாஜி... விஷயத்தை அதோடு நிறுத்திக் கொண்டால் சரியாய் இருக்கும்!

      Delete
    5. ஏன், இந்த சிவாஜி பத்தி எத்தனை வேணாலும் பேசலாமே! உங்க ஜிவாஜி பத்தி மட்டும் தான் பேசணுமா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  6. தாவண்கெரே பெண்ணே தோசை ஆஹா ஓஹோன்னு சொல்றாங்க... எனக்கு மூன்று வாரத்தில் எப்போதடா நம்ம ஊர் சாதா தோசையும் சாம்பாரும் பார்ப்போம் என்று ஆகிவிட்டது. வந்த மறுநாள் ரத்னா கபேயில் தோசை சாப்பிட்டபிறகுதான் அக்கடான்னு இருந்தது.

    பெங்களூர் தோசைலாம் பெங்களூர்க்காரங்களுக்குத்தான்

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லைத் தமிழரே! வெண்ணெய் தோசை நன்றாகவே இருந்தாலும் என்றாவது ஒரு நாள் சாப்பிடலாம். மற்றபடி சாம்பாரெல்லாம் அங்கே தித்திப்பு நிறைய!

      Delete
    2. தாவண்கெரே பெண்ணே தோசை சாப்பிட்டு விட்டு சென்னை வந்து ரத்னா கபே ஆணே தோசை சாப்பீட்டீர்களா நெல்லை?!!!!!

      Delete
    3. அந்த வெண்ணெய் தோசையும் நன்றாகவே இருந்தது. ஒன்று வரை சாப்பிட்டுக்கலாம். 2,3 எல்லாம் சாப்பிட முடியாது!

      Delete
    4. ஶ்ரீராம்.. எனக்கு ரத்னா கபே சாம்பார் பிடிக்கலை. ஆனா உண்மையைச் சொன்னா, எனக்கு பெங்களூர் உணவே பிடிக்கலை. (தோசை, மசால் தோசை, அரிசி ரொட்டி....). இதுக்கு என் "உணவு ருசி பிடிவாதம்" காரணம். நான் எதையும் டிரை பண்ணி அக்சப்ட் பண்ணிக்க மாட்டேன். நல்லவேளை என் பசங்க அப்படி இல்லை. எல்லோரும் புகழும் பெங்களூர் வித்யார்த்தி பவன் தோசை எனக்குப் பிடிக்கலை.

      காசி டூர்ல அங்க ஃபலூடா லஸ்ஸி டிரை பண்ணுனீங்களா இல்லையா?

      Delete
    5. வட மாநிலங்களிலேயே லஸ்ஸி நன்றாகவே இருக்கும்னாலும் உ.பியில் மத்ரா, மற்றும் பஞ்சாபில் இன்னும் சுவை!

      Delete
    6. இந்தச் சனிக்கிழமை இங்கு ஒரு இந்திய ரெஸ்ரோரண்ட்டில் சாப்பிட்டோம், அப்போ லஸி இருக்கோ என்றோம்.. இருக்கிறது என்றார்கள்..சாம்பிளுக்காக முதலில் ஒன்று கேட்போம் என ஒன்று தாங்கோஒ என்றோம்.. அது ஒன்று என்றால் ஒரு பெரீய ஜக் ஆம்ம்ம்ம்.. 4 பேர் குடிக்கும் அளவு கொண்டு வதார்கள்.. ஏற்கனவே வயிறு நிரம்பியிருந்தது, அதனால யாராலும் குடிக்க முடியவிலை.. சுவை சுத்தமாக இல்லை... மங்கோ லை..

      இதைவிட கடையில் போத்தலில் கிடைப்பதில் சுவை அதிகம் இருக்கும்.

      Delete
    7. வாங்க அதிரடி! காணாமல் போவது இல்லைனாஓடி ஓடிக் கமென்ட் போடுவது! மறுபடியும் காணாமல் போவது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒழுங்கா வாங்க! ஆமாம், சொல்லிட்டேன்.

      மாங்கோ லஸ்ஸி அம்பேரிக்காவில் நன்றாக இருக்கும். நீங்க வெறும் இனிப்பு லஸ்ஸினு கேட்டிருக்கணும். அநேகமா வெளிநாடுகளில் எல்லாம் மாங்கோ லஸ்ஸி தான் இருக்கு. ஹூஸ்டனில் ஒரு சில குஜராத்தி, பஞ்சாபி சாப்பாடுக் கடைகளில் நல்ல லஸ்ஸி கிடைக்கும்.

      Delete
    8. //வாங்க அதிரடி! காணாமல் போவது இல்லைனாஓடி ஓடிக் கமென்ட் போடுவது! மறுபடியும் காணாமல் போவது!///

      கீசாக்கா...
      செய் அல்லது செத்துப்போ... இதுதான் அதிரா:)

      Delete

    9. //கீசாக்கா...
      செய் அல்லது செத்துப்போ... இதுதான் அதிரா:)// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :(

      Delete
  7. ஃபலூடா-- இன்றிலிருந்துதான் டயட் ஆரம்பிக்கலாம்னு நினைத்தால் அதைக் கெடுத்துவிட்டீர்களே

    ReplyDelete
    Replies
    1. ஃபலூடாவுக்கும் டயட்டுக்கும் என்ன சம்பந்தம்?

      Delete
    2. இனிப்பு... ஐஸ்கிரீம்.. நட்ஸ்... இது போதாதா எடையைக் கூட்டுவதற்கு....

      Delete
    3. ஐஸ்க்ரீமோ, இல்லை உலர் பருப்பு வகைகளோ எடையைக் கூட்டாது! அதோடு இனிப்பை ஒரேயடியாக ஒதுக்கவும் கூடாது. நம்மவர் ஒரேயடியா ஒதுக்கிட்டுச் சோர்வு அதிகம் வந்து விட்டது. ஹீமோகுளோபின் குறைபாடு வந்திருக்கு! இதுக்குக் காரட், பீட்ரூட், பேரிச்சை, திராக்ஷை போன்றவை சாப்பிடணும்! ஐயோ!சர்க்கரை இருக்கேனு கவலைப்பட்டுக் கவலைப்பட்டு ஒதுக்கியதில் இப்படி ஒரு பிரச்னையும் இருக்குனு புரிஞ்சுக்கணும். எதுவும் அளவோடு இருந்தால் நல்லது!

      Delete
    4. நான் எந்த இனிப்புப் பொருளையும் ஒதுக்குவதில்லை.அளவோடு சாப்பிடுவேன். முடிந்தவரைக்கும் வீட்டு வேலைகள் அனைத்தும் நானே செய்கிறேன். இப்போ ஆறு மாசமாகத் தான் அக்கி வந்த பின்னர் பாத்திரம் தேய்க்க மட்டும் ஒரு பெண் வருகிறார். அதுவும் ஒரே வேளை. என்றாலும் நானும் சில பாத்திரங்களைத் தேய்த்து எடுத்துப்பேன். கை,கால்களுக்கு வேலை கொடுத்துக் கொண்டே இருக்கணும் என்பதில் கவனமாக இருப்பேன். சாப்பாடெல்லாம் அளவு தான்! காய்கள் மட்டும் நிறைய!ஒரு காய், ஒரு சாலட்!

      Delete
    5. வெண்ணெயோ, நெய்யோ எடையைக் கூட்டுவதில்லை. பேலியோ டயட் முறையில் உலர் பருப்பு வகைகள், காய்ந்த திராக்ஷை, உலர் பழங்கள், காய்கள் வேக வைத்து அல்லது வேக வைக்காமல், பனீர், சீஸ் போன்றவையே சைவ உணவு சாப்பிடுவோர்க்குப் பிரதான உணவு. பா.ராகவன் இது பற்றி ஒரு தொடர் எழுதிப் புத்தகமாகவும் வந்திருக்கு. தேடிப் பாருங்க கிடைக்கும். நகைச்சுவையோடு சுவையான குறிப்புக்களும் கொடுத்து எழுதி இருப்பார்.

      Delete
    6. ஆ... பலூடா... இப்பவே எனக்கும் வேணும்!

      Delete
    7. வேணாம், வேணாம், இங்கெல்லாம் ஃபலூடா சாப்பிடாதீங்க! வெறும் தண்ணியாக இருக்கும். :(

      Delete
    8. ஃபலூடாவின் சுவையே தனிதானே.. அதுவும் வெயிலுக்கு.. ஆனா அதில் சீனி அதிகம்.. எப்பவாவது குடிச்சால் ஓகே.

      கீசாக்கா தன்னைபோல எல்லோரையும் குண்டாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறா கர்ர்:) நம்பாதீங்கோ.. எண்ணெய் இனிப்பு எடுக்காதீங்கோ..:))
      ஹையோ மீ போஸ்ட்க்கு கொமெண்ட் போடோணும்:))

      Delete
    9. http://geetha-sambasivam.blogspot.com/2012/12/ இது கிட்டத்தட்ட ஃபலூடா மாதிரித் தான். சேமியா பாயசம் பண்ணினால் இதோட சேர்ப்பேன். சில சமயம் இது பண்ணும்போது சேமியா பாயசமும் செய்து சேர்ப்பதும் உண்டு. ஆனால் கடைகளில் இதற்கென விற்கும் சேமியா வேக வைத்தது,சுண்டக் காய்ச்சிய பால்,சப்ஜா விதைகள் (இது திருநீற்றுப் பச்சிலை விதைகள் என்கின்றனர்), ஜெல்லி, ரோஸ் சிரப் அல்லது ரூஹ் அஃப்ஸா, மேலே ஐஸ்க்ரீம் உங்களுக்குப் பிடித்த ஃப்ளேவரில்!

      Delete
    10. நெல்லைத் தமிழரை இனிமேல் நான் குண்டாக்க வேண்டாம் அதிரடி! :)))))

      Delete
    11. அப்பா.... என்ன சந்தோஷம் கீசா மேடத்துக்கு. ஆறு மாதம் நடைப்பயிற்சி இல்லை, தினமும் இனிப்பு... ஏழுகிலோ எடை கூடிவிட்டது.. எனக்கு "எடை" என்றாலே அலர்ஜியாகிவிட்டது.

      Delete
  8. பரவாயில்லையே... ஒரு மணி நேரத்துக்குள் இரண்டு புடவைகளை கஷ்டப்-பட்டு, விருப்பப்-பட்டு எடுத்துட்டீங்களே... நான், மனைவிக்காக புடவைகள் வாங்கும்போது ஒருபோதும் அரை மணியைத் தாண்டியதில்லை. பார்த்தவுடன் பிடிக்கணும். வாங்கிடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. இதற்கு பதில் சொல்லுவதைத் தவிர்க்கிறேன்.ஏனெனில் ஊழியர் ஒவ்வொரு முறையும் பத்துப் புடைவைகளுக்கு மேல் எடுத்துக் கொண்டு இரண்டு மாடி ஏறி இறங்க முடியாது! நேரம் பிடிக்கும்.மொத்தமாக எடுத்து வர முடியாது! நாங்க மேலே போய்ப் பார்த்தோமானால் அரை மணி என்ன பத்து நிமிஷத்தில் முடியும் விஷயம் தான்! அதோடு நாங்க சும்மா புடைவை வாங்குவதோடு நிறுத்திக்காமல் அன்றாட நிலவரம், ஊர் நிலவரம், அரசியல் நிலவரம்னு எல்லாம் பேட்டிகள் எடுப்போம். எல்லாவற்றையும் போட முடியாது!

      Delete
    2. ///நான், மனைவிக்காக புடவைகள் வாங்கும்போது ஒருபோதும் அரை மணியைத் தாண்டியதில்லை. பார்த்தவுடன் பிடிக்கணும். வாங்கிடுவேன்.///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நெலைத்தமிழன்... நாங்களும் கணவருக்காக உடுப்பு வாங்கும்போது 10 நிமிடத்தில் வாஅங்கிடுவேன்ன்:), ஆனா எனக்கு வாங்கும்போது.. எதுவும் பிடிக்காதூஊஊஊஊஊஊ அதனாலயே ரைம் எடுக்குமாக்கும்:)).

      கீசாக்கா இப்போ உங்களுக்கு எதுக்கு ரெண்டு சாறி?.. மாமாவுகு ஏன் ஒன்றும் வாங்கிக் குடுக்கவில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
    3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வந்துட்டாங்க அதிரடி! என்ன பொறாமை? இது இப்போப் புதுசா வாங்கலையாக்கும்! ஏற்கெனவே போட்டிருந்தேன். அதைத் திரும்பப் போட்டிருக்கேன்.மாமாவுக்கு வேஷ்டி மட்டும்தானே! காதியிலே அவரே வாங்கிப்பார்! நான் வாங்கினாப் பிடிக்காது!

      Delete
  9. சமீபத்தைய அரண்மனைதானே.... பணம் வாங்கிக்கொண்டு படமெடுக்க அனுமதி கொடுத்தால் என்ன? பராமரிப்பு செலவுக்கு ஆயிற்றே.

    ReplyDelete
    Replies
    1. செய்யலாம். என்னமோ அவங்களுக்கு இஷ்டமில்லை.

      Delete
  10. கேதார்நாத்தா? பெயர் சரியாத்தான் எழுதியிருக்கீங்களா? ஒரிஜினல் கேதார்நாத் பத்ரிநாத் பக்கமாச்சே

    ReplyDelete
  11. https://tamil.nativeplanet.com/kolhapur/attractions/jyotiba-temple/#overview நீங்க சொன்னதும் இணையத்தில் தேடினேன். இங்கே பார்க்கவும். மேலதிகத் தகவல்களுக்கு விக்கியையும் பார்க்கவும். Jyotiba temple is situated at a height of 3124 feet above sea level and is dedicated to Jyotiba (Dattatreya). The temple is 18 km north-west of Kolhapur.[1] According to the tradition, the original Kedareshwar temple was built by Navji Saya. In 1730, Ranoji Shinde built the present temple in its place. This shrine is 57 ft x 37 ft x 77 ft high including the spire. The second temple of Kedareshwar is 49 ft x 22 ft x 89 ft high. This shrine was constructed by Daulatrao Shinde in 1808. The third temple of Ramling is 13 ft x 13 ft x 40 ft high including its dome. This temple was constructed in circa 1780 by Malji Nilam Panhalkar.[3] The interior of the temple is ancient. There are other few temples and Light-towers in the premises.

    ReplyDelete
  12. மும்மூர்த்திகளும் சேர்ந்தவர் மஹாலக்ஷ்மிக்கு சகோதரன் முறை என்பது வினோதம்!புடைவை விலகாது முடிச்சுப்போட்டு இறுக்கிய காமதேனு சுவாரஸ்யம்.

    ReplyDelete
    Replies
    1. காமதேனு பெண் என்பதால் புடைவை கட்டி இருக்காங்க!

      Delete
  13. ஒவ்வொரு இடத்திலும் கடைப்படிகள் எற முடியவில்லை என்று நீங்கள் சொல்லும்போது எங்கள் குழுவில் வந்த 90 வயது அம்மா நினைவுக்கு வருகிறார். ஒவ்வொரு உயரப்படிகளிலும் சளைக்காமல் உட்கார்ந்து உட்கார்ந்து ஏறி இறங்கி கொண்டிருந்த அவர் முயற்சி பாராட்டப்பட வேண்டியதுதான். அவரால் ஏற்பட்ட தாமதமும் பொறுத்துக்க கொள்ளப்பட்டது!

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்றேனே தவிர்த்து நாங்களும் எத்தனை எத்தனை எத்தனை எத்தனை இடங்களில் ஏறி ஏறி ஏறி ஏறி இறங்கி இறங்கி இறங்கினு போயிட்டு வரோம்! அதைப் பாராட்ட வேண்டாமோ?

      Delete
  14. மறுபடியும் மஹாலக்ஷ்மி! தலைப்பு இப்படிக்கு கொடுத்திருக்கலாமோ!

    ReplyDelete
    Replies
    1. மறுபடியும் இரண்டாம் நாள் தரிசனத்தில் அந்தத் தலைப்புனு யோசித்து ஷெட்யூல் பண்ணி வைச்சிருக்கேன்.

      Delete
  15. எங்களையும் கோல்ஹாப்பூர் அழைத்துச் சென்று விட்டீர்கள்.
    பாவம் கால் எவ்வளவு வலித்திருக்குமோ என்று யோசிக்கிறேன். அரண்மனையும் ,காமதேனுவும் சூப்பர்.
    எல்லா ஊரிலும் பழமையை அப்படிப் போற்றுகிறார்கள்.
    நம் ஊருக்கு உண்டான சாபம் இது.
    அதுவும் சிவாஜி போன்ற வீரருக்குச் செய்ய வேண்டிய மரியாதைக்
    கொடுக்க வேண்டாமா.
    புடவைகள் பிரமாதம்.
    40 வருடங்கள் முன் நாத்தனார் கோலாப்பூர் காட்டன் நிறைய வாங்கி வருவார்.
    அயர்ன் பண்ணவே வேண்டாம்.

    இப்போது நிறைய மாறிவிட்டதோ என்னவோ.
    மிக நன்றி கீதா மா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி. கோலாப்பூர்ப் புடைவைகள் முன்னிருந்த தரம் இப்போது இருக்குமா சந்தேகமே! இப்போ மதுரைச் சுங்குடியே இல்லாமல் போய்விட்டதே! :( ஒரு காலத்தில் தறியில் உடல் நிறம், பார்டர், தலைப்பு எல்லாம் சொல்லிப் போட்டுத் தரச் சொல்லி வாங்கி இருக்கோம். சொக்கப்ப நாயக்கன் தெருவில் இப்போச் சுங்குடிக் கடைகளே இல்லை. இங்கே அவங்க சொல்வதைப் பாரம்பரியம் என நினைத்து வாங்கியாச்சு!

      Delete
  16. வணக்கம் சகோதரி

    மஹாலக்ஷ்மி அண்ணன் கதை சுவாரஸ்யமாக இருந்தது. மும்மூர்த்தி எனும் போது அதில் மஹாவிஷ்ணுவும் ஐக்கியமன்றோ! சில புராண கதைகள் குழப்பம்தான். கோவிலைப்பற்றிய செய்திகள் நன்றாக உள்ளது.
    காமதேனு சிலை அழகாக உள்ளது. தாங்கள் எடுத்த படங்களும் அருமையாக இருக்கிறது.
    அரண்மனை படம் நன்றாக வந்துள்ளது.

    மியூசியம் எப்போதுமே சுற்றிப் பார்ப்பதற்கும் கால்வலி வந்து விடும். இருப்பினும் அங்குள்ள பொருட்களை நினைவு வைத்துக் கொண்டு தாங்கள் எழுதியிருந்த விதம் சிறப்பு. சுத்தமான பராமரிப்பு செய்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

    தாங்கள் சாப்பிட்ட உணவுகளில் ஃபலூடா என்றால்... ஐஸ்கிரீம்? செட் தோசையும் அவ்வளவாக நன்றாக இருக்காது.. மசால் தோசை பரவாயில்லை என்ற ரகத்தைச் சேர்ந்தது. சாப்பிடலாம்.

    புடவைகள் நன்றாக தேர்வு செய்துள்ளீர்கள். மிகவும் அழகாக உள்ளது. மறுநாள் மீண்டும் ஒருமுறை நடையாக சென்று வர கோவில் தாங்கள் தங்கியிருக்கும் அறை அருகிலேயே உள்ளதா? ஆங்காங்கே படிகளில் ஏறி. இறங்கி வேறு கஸடப்பட்டிருப்பீர்களே.! பதிவு அருமை. தொடர்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, நான் சரியாகச் சொல்லலையோனு நினைக்கிறேன். மற்றபடி குழப்பம் எல்லாம் இல்லை. ம்யூசியம் முழுக்கப் பார்த்தோமானு எங்களுக்கும் சந்தேகம் தான். ஆனாலும் அரிய பொருட்கள். கொஞ்சம் நன்றாகப் பராமரிக்கலாம். மசால் தோசை நான் வீட்டிலேயே அடிக்கடி பண்ணுவதால் வெளியே போனால் அது சாப்பிடத் தோன்றுவதில்லை. செட் தோசை அங்கே போடவில்லைனு நினைக்கிறேன். ஃபலூடா என்றால் கொஞ்சம் சேமியா, கொஞ்சம் உலர் பருப்புகள், ஜெல்லி, நன்றாகச் சுண்டக்காய்ச்சிய பால், தேவை எனில் பழக்கலவை அதன் மேல் ஐஸ்க்ரீம் ஆகியவை போட்டுத் தருவார்கள் கடைகளிலே. நான் வீட்டிலே செய்வது கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கும். மத்தியானமாச் சுட்டி தரேன். இப்போக் கடமை இரு முறை அழைத்து விட்டது. :))))

      Delete
  17. நந்தி அழகு... முதல்படத்தில் கோபுரம் வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்கு. ஆனா ஏனைய படங்களைப் பார்க்க பழமையான கோயில்போல இருக்கே.

    படங்கள் இம்முறை ஓரளவுக்கு அழகாகவே எடுத்திட்டிங்க.. நீங்க முன்னேறிக்கொண்டே வாறீங்க கீசாக்கா.. ஸ்ரீராமைப்போல:)) ஹா ஹா ஹா.

    ReplyDelete
    Replies
    1. //படங்கள் இம்முறை ஓரளவுக்கு அழகாகவே எடுத்திட்டிங்க. // க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  18. இனிய காலை வணக்கம் கீதாக்கா..

    வந்தாச்சு! நிறைய பதிவுகள் இருக்குமே என்று பார்த்தால் இரண்டுதான் இருக்கு போல இதோ வாசித்துவிடுகிறேன்..

    கீதா

    ReplyDelete
  19. கோயில் படங்கள் அழகாக இருக்கின்றன நல்ல கலை நயத்துடன் இருக்கும் போல! அப்படம் அழகாக இருக்கிறது அக்கா.

    // ஆங்கிலேய ஆட்சிக்காலத்துக் கோலாப்பூர் அரசரின் காலத்தில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்ச்சிகளின் படங்கள், ஓவியங்கள், சித்திரங்கள், சந்திப்புகள், அரசர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், அவர்களின் அந்தக் கால கட்டத்து உடைகள், அணிமணிகள், அலங்காரங்கள், ராணிகளின் சிற்பங்கள், ஓவியங்கள், சபா மண்டபம், தர்பார் ஹால் என அழைக்கப்பட்ட இடம், அந்தப்புரங்கள், படுக்கை அறைகள், வாகனங்கள் என அனைத்தும் அங்கே பாதுகாக்கப்படுகின்றன.//

    அட என்று தோன்றி அடுத்த வரியைப் படித்ததும் ப்பூ இம்புட்டுத்தானா என்று பின்ன மெயின்டெய்ன் செய்யாமல் தூசியும் தும்புமாக இருக்கு என்றதும்...

    கீதா

    ReplyDelete
  20. நந்தி அழகாக இருக்கிறது.

    கோபுரம் சூப்பர்!!

    புடவை ஏற்கனவே பார்த்து இங்கும் பார்த்தாச்சு!

    ம்யூசியத்தில் படம் எடுக்க விட்டால் நன்றாக இருந்திருக்கும். ஓ ராஜா பரம்பரை இன்னும் இருக்கிறதா!!

    ஆங்கெல்லாம் சத்ரபதி சிவாஜியைக் கொண்டாடுகிறார்கல். நாங்கள் சென்றிருந்த போதும் ஏதோ நினைவு நாளோ இல்லை பிறந்த நாளோ ஒரே கோலாகலமாக இருந்தது..

    அடுத்த பதிவு பார்த்துவிட்டு வருகிறேன் அக்கா

    கீதா

    ReplyDelete
  21. படங்களும் விவரணங்களும் சிறப்பு. அறிந்தும் கொள்ள முடிந்தது. தொடர்கிறேன்.

    துளசிதரன்

    ReplyDelete