எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, November 21, 2006

157. அது ஒரு கணினி காலம்

நான் முதல் முதல் 99-ம் வருஷம் கணினி கற்றுக் கொள்ள ஆரம்பித்தது ஒரு விஜயதசமி நன்னாளில். அப்போதான் எங்களோட "செல்லம்" "மோதி" எங்களை விட்டுப் பிரிஞ்சிருந்தது. அந்தத் துக்கத்தை மறக்கவும் என்னோட கனவான medical transcription கற்கவும் தான் நான் கணினி கற்க ஆரம்பித்தேன்.எத்தனை கனவுன்னு கேக்காதீங்க. அப்துல் கலாம் இப்போ தான் சொல்றார் கனவு காணும்படி. நான் முன்னேயே காண ஆரம்பிச்சுட்டேன். அதைப் பாருங்க. இங்கே நாங்க இருக்கும் இடத்தில் கணினி கற்க இருந்த 2 நல்ல பள்ளிகளான "நிட்" என்று எல்லாராலும் சொல்லப்படும் "என்.ஐ.ஐ.டி."யும் "ஆப்டெக்" ம் இருந்தது, இதில் ஆப்டெக் வீட்டுக்க்குக் கொஞ்சம் கிட்டே. என்.ஐ.ஐ.டி யில் அப்போ மாணவர்களைத் தான் சேர்த்தார்கள். இல்லாட்டி நான் அண்ணா நகர் போகணும். நான் போகத் தயாரா இருந்தாலும் வரப் போகும் மழைக்காலத்தில் அங்கேயே இரவுக் குடி இருப்பு செய்யணும்னு என் கணவர் நினைச்சதால் (ஹிஹிஹி, அப்போ எல்லாம் மழையில் எனக்கு மூச்சு விடத் தொந்திரவு வந்தால் உடனேயே "சுந்தரம் மெடிக்கலில்'தான் அவசர சிகிச்சைப் பிரிவில் சேரும்படி இருக்கும். அதான் அவர் தவிர்த்து விட்டார்.) இங்கே நாங்க இருக்கும் இடத்திலேயே சேரலாம் என்றால் ஆப்டெகை நான் சேரப் போறேன்னு தெரிஞ்சதுமே மூடிட்டு இடம் மாத்திட்டுப் போயிட்டாங்க. என்.ஐ.ஐ.டியில் ஏகப் பட்ட கேள்விகள், பதில்கள்னு விக்கிரமாதித்தன் பதுமைகள் மாதிரிக் கேப்பாங்க. அதனாலே வேறு வழி இல்லாமல் நான் போனது ஒரு browsing centre தான். அதிலேயும் நான் வீட்டு வேலை எல்லாம் முடிச்சுட்டு எனக்கு நினைச்ச நேரம் போக முடியும்கிறது என்னைப் பொறுத்த மட்டில் ஒரு + பாயிண்ட். நான் போற நேரம் மிஷின் காலியா இருக்கணும். அப்போ எல்லாம் எல்லா வீடுகளிலேயும் கணினி இல்லையே. அதனால் எப்போவும் ப்ரவுசிங் செண்டர் எல்லாம் கூட்டமா இருக்கும்.

நான் மத்தியானத்தில் தான் போவேன். தூங்கிப் பொழுதைக் கழிக்கவேண்டாம் என்பதோடு வீட்டுக்குத் தேவையான பாங்கிங், மின்சார பில் கட்டுதல், காய்,கனி வாங்குதல், டெலிபோன் பில் கட்டுதல் எல்லாத்துக்கும் போறதுக்கும் வசதியான நேரம் அது. அப்போ ஆஸ்த்மா தொந்திரவு இருந்தாலும் கால் பிரச்னை இல்லாததால் நடராஜா சர்வீஸ்தான். என் கணவர் ஆஃபீஸ் போறப்போ கொண்டு விடறேன்னு சொன்னாலும் வேண்டாம்னு சொல்லிடுவேன். நடந்து தான் போவேன். வீட்டுக்கு வந்து மற்ற வேலை பார்க்க வசதியாக அதற்குத் தகுந்தாற்போல் நேரம் சரி செய்து கொண்டு போவேன். இது ரொம்ப நாள் நடக்காமல் திடீர்னு எனக்கு ஆஸ்த்மா அட்டாக் ஆக நான் ஆஸ்பத்திரியில் வாசம் செய்ய ஆரம்பிக்க அதுவும் நின்று போனது. ஆனால் அதுக்குள்ளே ஒரு மாதிரியா நான் மெயில் கொடுக்க ஆரம்பித்து இருந்தேன். என்னைப்பொறுத்த வரை அதே பெரிய விஷயம். அதுக்கு அப்புறம் அந்தக் கடையையும் மூடிட்டாங்க. அந்தப் பையனுக்கு, அதாவது கணினியில் என்னோட குரு "ப்ரகாஷுக்கு" "டைடல் பார்க்கில்" நல்ல வேலை கிடைத்து விட்டது. பிறகு வேறு இடத்தில் முயன்றாலும் எனக்கு செட் ஆகவில்லை. இது எனக்கு ஒரு தொந்திரவு. எல்லார் கிட்டேயும் சரியா வராது. எனக்கு மனம் பதிய வேண்டும். மனம் பதியவில்லை. ஆனால் அவசரத்துக்கு மெயில் கொடுக்க வேண்டுமென்றால் போய்க் கொடுப்பேன். அதுக்குள்ளே எங்க பையன் "எம்.எஸ்" படிக்க அமெரிக்கா போக முயல அவனுக்கு வேண்டிய கன்சல்டன்ஸியைத் தேடிப் பிடித்து, வேண்டிய முன்னேற்பாடுகள், பின்னேற்பாடுகள் எல்லாம் செய்ய வேண்டிய பொறுப்பு என்னைத் தேடி வந்தது.

ஆகவே அதுக்கான ஏற்பாடுகள் செய்யறதிலே என்னோட நேரம் போனதிலே எனக்கு என்னோட மெடிக்கல் ட்ரான்ஸ்க்ரிப்ஷன் என்பது ஒரு கனவாவே போச்சு. அதுக்குள்ளே இங்கே நாங்க இருக்கும் இடத்திலேயே மத்திய அரசு உதவியினாலே குடும்பப் பெண்கள் உள்பட பெண்கள் கணினி அறிவு பெறவேண்டும் என்று ஐ.சி.டி. என்னும் நிறுவனம் "மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன்" இணைந்து கணினி வகுப்புக்கள் ஆரம்பிக்க அதன் ஃபீஸ் கிடையாது. பரிட்சைக்கான பணம் மட்டும் கட்டினால் போதும் என்று சொல்லி பேப்பருடன் நோட்டீஸ் வர, நான் என் கணவரிடம் கேட்டுக் கொண்டு அதற்குப் போகலாம் என ஆரம்பித்தேன். அப்போ அவர் ஊட்டியில் இருந்தார். நான் சென்னையிலும்,, ஊட்டியிலுமாக இருப்பேன். சில சமயம் அவர் வருவார். சிலசமயம் நான் போவேன். பையன் பரோடாவில். பெண் யு.எஸ்ஸில். ஆகவே என்னோட கணினி அறிவு அப்போ ரொம்பத் தேவைப்பட்டது. பையனுக்கும், பெண்ணுக்கும் உடனுக்குடன் மெயில் கொடுத்துத் தகவல்கள் பரிமாற ரொம்பவே உதவியாக இருந்தது. நான் சேர்ந்த ஐ.சி.டி படிப்பும் உதவியாக இருக்குமாறு கோர்ஸில் சேர்ந்திருந்தேன். ஒரு பத்து நாள் கூட இருக்காது. குடும்பத்தில் சில நிகழ்வுகள். அதனால் ஏற்பட்ட சில மாற்றங்கள். அப்புறம் ஊட்டியில் இருந்த என் கணவருக்குத் திடீரென ரத்த அழுத்தம் அதிகமாய்ப் போகவே நான் உடனேயே ஊட்டி போகும்படி ஆகி விட்டது. கடைசியில் இந்த ரத்த அழுத்தம் திடீரென வந்ததால் மனதில் இறுக்கம் என்பதால் தான் வந்திருக்கு, வேறு ஒண்ணும் இல்லைனு டாக்டர் சொன்னாலும், ரொம்ப நாளைக்கு அது ஒரு அதிர்ச்சியாவே இருந்தது. வாயைத் திறந்து ஏதும் சொல்லிட்டால் பரவாயில்லை. சொல்லலைன்னா இப்படித்தான்ன்னு நான் எவ்வளவோ நினைச்சுப்பேன். ஆனால் அவர் வாயில் இருந்து எதுவும் வராது. என்ன செய்யறது? எல்லாம் புத்தர், ஏசு, காந்திக்கு அடுத்து இவர்தான்னு நினைச்சுப்பேன். இப்படியாகத் தானே என்னோட கணினி கற்றுக் கொள்ளும் முயற்சிக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப் பட்டது. மொத்தம் 10 நாள் போயிருந்தால் ஜாஸ்தி. அதில் என் போன்றவர்கள் என்ன கற்றுக் கொள்ள முடியும். அதிகம் போனால் மெயில் கொடுக்கவும், ப்ரவுசிங் செய்யவும்தான் முடியும். அதோட நின்னும் போச்சு. அதுக்கு அப்புறம் என்னோட காலில் பெரிய தொந்திரவாய் வர, நான் நடக்க முடியாமல் போய்க் கொஞ்ச நாள் வீட்டிலேயே "படி தாண்டாப் பத்தினி"யாக இருந்து வந்தேன். இப்போ கூட நடக்கும்போது கொஞ்சம் சிரமம்தான். எப்போ என் காலே என்னை வாரும்னு தெரியாது. இந்த அறிவை வைத்துக் கொண்டு நான் பதிவு எழுதறதே ஒரு பெரிய விஷயம் தான். ஏதோ நீங்க எல்லாம் நான் தலைவியாப் போயிட்டேனேன்னு பொறுத்துக்கிறீங்க. இப்போ கூட ஒரு ப்ராப்ளம் வந்துடுச்சு. அதைக் கேட்கத் தான் முத்தமிழுக்குப் போனேன். அங்கே போனால் நம்ம "கைப்புள்ள' சிரிக்கிறார். சிவா சொன்ன மாதிரி உங்க கணினிக்குக் கூட உங்களைக் கண்டு பயம் இல்லாமப் போச்சான்னு கேட்கிறார். ஹிஹிஹி, நான் தான் சிவா சொன்னதை அவருக்கு நினைவு படுத்தினேன்.. கொஞ்ச நாளா யாரையும் வம்புக்கு இழுக்கலியா, சாப்பாடே ஜீரணம் ஆகலை அதான். மொத்தத்திலே தலை சுத்திட்டு இருக்கு. நாளைக்குப் பார்க்கலாம். வர்ட்டா?

20 comments:

  1. நல்ல வேளை நீங்க கணினி கத்துக்கும் முயற்சிய விட்டீங்க... இல்லாட்டி அம்பத்தூர் இருக்குற எல்லா கணினி நிலையத்தையும் மூடும் நிலைமை ஏற்பட்டு இருக்கும்.
    :-)

    ReplyDelete
  2. //மொத்தத்திலே தலை சுத்திட்டு இருக்கு.//

    எங்களுக்கும் தான்.......

    ReplyDelete
  3. புலி என்ன இது? உங்க நண்பர் அங்கே உங்களைத் தேடிட்டு இருக்கார். திடீர்னு வந்து பயமுறுத்தறீங்களே? எங்கே போயிருந்தீங்க? எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?

    ReplyDelete
  4. //ஆப்டெகை நான் சேரப் போறேன்னு தெரிஞ்சதுமே மூடிட்டு இடம் மாத்திட்டுப் போயிட்டாங்க//

    ha haaa. cha, how good if that prakash might've got that job very earlier before you joined in his center. :)

    //இல்லாட்டி அம்பத்தூர் இருக்குற எல்லா கணினி நிலையத்தையும் மூடும் நிலைமை ஏற்பட்டு இருக்கும்.
    //
    puli, commentla kalakitta ley! :)

    ReplyDelete
  5. வருகை பதிவு கொடுத்தாச்சு.. அப்புறம் வந்து படிக்கிறேங்க மேடம்

    ReplyDelete
  6. நன்கு நல்ல நகைசுவை உணர்வு உங்களிடம்.நானும் உங்கள் கட்சிதான்.நான் ஏதும் படிக்கப் போனால் அடுத்த செமஸ்டர் அந்த பாடம் இல்லாமல் போய் விடும்.நான் நிறையக் கத்துக்கிட்டது என் பொண்ணுகிட்டே. இப்போ என் கிட்டே வகையா மாட்டிட்டு முழிக்கிறார் நம்ம (இன்னோஸன்ட்???) அம்பி.இமெயில் வாலன்டியரா கொடுத்துட்டு என் கொடுமை அநுபவிக்கிறார்.
    இவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவில் உங்கள் விடாமுயற்ச்சி எனக்கு மிக உற்சாகத்தைத் தருகிறது.I appreciate your perseverence.--SKM

    ReplyDelete
  7. //சேரலாம் என்றால் ஆப்டெகை நான் சேரப் போறேன்னு தெரிஞ்சதுமே மூடிட்டு இடம் மாத்திட்டுப் போயிட்டாங்க//

    எல்லோருக்கும் உங்கள பத்தி தெரிஞ்சு இருக்கு...அதுசரி அதுனால தான நீங்க தலைவி :-)

    ReplyDelete
  8. அம்பி, எனக்குப் பாடம் சொல்லிக்கொடுத்து அதனாலே அறிவு விசாலமா ஆகி அவருக்கு டைடல் பார்க்கிலே நல்ல சம்பளத்திலே வேலை கிடைச்சிருக்கு அதைப் பாராட்ட வேண்டாம்?ம்ஹும், இது கூடத் தெரியலியே!

    ReplyDelete
  9. கார்த்திக், இது கொஞ்சம் கூட நல்லா இல்லை. அசைவப் பதிவுனு தெரிஞ்சும் வந்து கமெண்ட் கொடுத்து இருக்கேன். தலைவிக்கு ஒரு கமெண்ட் கூடக் கொடுக்க முடியாம ஆஃபீஸ் வேலையா முக்கியம்? :D

    ReplyDelete
  10. SKM,
    என்ன இருந்தாலும் நம்ம ரெண்டு பேருக்கும் மண்வாசனை இருக்கே? அதான். ம்ஹும், அம்பி நல்லா மாட்டிக்கிட்டார்ங்கறீங்க. கூடிய சீக்கிரம் ஒரு வழி பண்ண வாழ்த்துக்கள். நான் எல்லாம் இப்போ அவருக்குப் பழைய அறுவை ஆகிட்டேன். இப்போ நீங்க புதுசா ஆரம்பிச்சிருக்கிறதாலே வெளுத்துக் கட்டுங்க உங்களாலே முடிஞ்சவரை. என்னோட ஆதரவு எப்போதும் உண்டு.

    ReplyDelete
  11. ஹிஹிஹி, ச்யாம், எப்படி இருந்தாலும் நான் தலைவி தானே. அது மட்டும் மாறாதது. என்றும் நிலையானது. உறுதியானது. பொன்னானது. இன்னும் என்ன என்னமோ ஆனது. :-)

    ReplyDelete
  12. //இந்த அறிவை வைத்துக் கொண்டு நான் பதிவு எழுதறதே ஒரு பெரிய விஷயம் தான்//

    shhhh appaaa.. ippavaavathu unmai therincha sari medam

    ReplyDelete
  13. //மொத்தத்திலே தலை சுத்திட்டு இருக்கு//

    unga pathivai padichcha pinnadi engalukkum ore thalai suththal thaan medam..

    //நான் சேரப் போறேன்னு தெரிஞ்சதுமே மூடிட்டு இடம் மாத்திட்டுப் போயிட்டாங்க//

    ungalai paththi orukke therinjurukku pOla..

    madam..sorry thamizhla comment pottathukku..

    ReplyDelete
  14. /வாயைத் திறந்து ஏதும் சொல்லிட்டால் பரவாயில்லை. சொல்லலைன்னா இப்படித்தான்ன்னு நான் எவ்வளவோ நினை'ச்சுப்பேன். ஆனால் அவர் வாயில் இருந்து எதுவும் வராது. என்ன செய்யறது/

    ஆமாம் ஆளைப்பார்த்தால் கையும் காலுமே ஆடும்போது அதுவும் ஊட்டி குளிரைவிட மேலான வாய் எங்கே பேசரது. எல்லாம் அடக்கம் அமரருள் உய்க்கும் குறள்தான்.

    /இந்த அறிவை வைத்துக் கொண்டு நான் பதிவு எழுதறதே ஒரு பெரிய விஷயம் /

    அப்பாடா இந்த அறிவே இந்தப் போடு போடரதுன்னா இன்னும் பூரண்மான அறிவுன்ன அவ்வளவுதான்.

    ReplyDelete
  15. தலைவியின் மணிமகுடத்தில் இன்னுமொரு வைரம் இந்தப் பதிவு. ஜாலியா இருந்துச்சு படிக்கறதுக்கு. உங்க டிரெயினிங்ல ஒரு பையனுக்கு டைடல் பார்க்கில் வேலை போட்டுக் குடுத்த நடமாடும் ஆப்டெக்கே! எங்கள் தானைத் தலைவியே! வாழ்க நீவிர்!! வளர்க நிம் கொற்றம்!!

    ReplyDelete
  16. ellaam irukkattum..mothalla ennOda "moonNu" tag-ai ezhuthunGka.. illainaa?

    ReplyDelete
  17. கார்த்திக்,
    இந்த வேதா(ள்) செய்யற வேலை. எல்லாம். சும்மா "தலைவா" "தலைவா"ன்னு கூப்பிட்டு ஊக்கம் கொடுக்கிறாங்க. ஒரே தலைவி, மாற்ற முடியாத தலைவி நான் தான் தெரியுமா? அங்கே பாருங்க, நம்ம கைப்புள்ள எப்படி விசுவாசத்தைக் காட்டி இருக்கார்.
    என்ன? என்ன? என்ன? உங்களுக்கு வேறே வேலை இல்லை. Tagலே என்னை மாட்டி விடறது தானா வேலை? ஆஃபீஸ்லே என்ன செய்வீங்க? :D

    ReplyDelete
  18. ஹிஹிஹி,சார், கல்யாண நாள் எல்லாம் கொண்டாடியாச்சா? ரொம்பவே க்ராண்டா கொண்டாடி இருப்பீங்கன்னு நினைக்கிறேன். ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கிறதாலே அப்புறம் பார்த்துக்கிறேன். அதாவது அப்புறம் கவனிச்சுக்கிறேன்னு அர்த்தம். :D

    ReplyDelete
  19. கைப்புள்ள, என்ன ஒரு அறிவு? என்ன ஒரு தன்னடக்கம்? என்ன ஒரு பெருந்தன்மை? என்ன ஒரு புலமை? ஹிஹிஹி,மேலே சொன்னது எல்லாம் எனக்குத் தான் உங்களுக்கு இல்லை. இதைப் புரிஞ்சு வச்சிருக்கிறதாலே உங்களைப் பாராட்டறேன். பாருங்க, இந்த அம்பி, சிவாவுக்கெல்லாம் தெரியவே இல்லை, இந்த மாதிரி யோசிக்க. அதான் நீங்க தலைவர். அதுவும் என்னாலேயே அங்கீகரிக்கப் பட்ட தலைவர். :)

    ReplyDelete