ஹி,ஹி,ஹி, ஹி,ஹி, 100 அடிச்சுட்டேன். 100 பதிவுங்க வேறே ஒண்ணும் இல்லை. என்ன கேட்கறீங்க? படிக்கும்போது 100 வாங்கினேனா என்றா? அதான் இப்போ 100 வாங்கறேன் இல்லை. பழசை எல்லாம் கிளறக்கூடாது. இப்போ நம்ம முப்பெரும் விழா பற்றி ஒரு அறிக்கை.
*************
வ.வா.சங்கத்தின் நிரந்தரத் தலைவலியும், இத்தனை நாள் வெளியே போய் எல்லாருக்கும் நிம்மதியைக்கொடுத்தவருமான நம் தலைவி தன் சூறாவளிச் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தலைமையகம் திரும்பினார். அவர் அம்பியுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கை வெற்றிகரமாகக் கையெழுத்திடப்பட்டதற்கும், தமிழ் நாட்டின் தண்ணீர் தாகத்தைத் தீர்த்ததற்கும், 100 பதிவுகள் போட்டதற்கும் சேர்த்து அவருக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் முப்பெரும் விழா எடுக்கப்படுகிறது. நேரமும், விழாக் காணும் இடமும் பின்னர் அறிவிக்கப்படும். இப்போது தலைவியின் வெற்றிப் பயணத்தின் விவரங்கள் வருமாறு:
முன்னதாகத் தலைவி கடந்த 30-ம் தேதி பங்களூரில் அம்பியுடன் ஒரு சந்த்திப்பிற்கு ஏற்பாடு செய்துவிட்டுப் போனது அனைவரும் அறிந்ததே! தலைவி பங்களூர் வந்து அடைந்ததும், திரு அம்பி அவர்கள், தன் குண்டர் படைத் தலைவருடன் தலைவியைத் தேடி அலைந்தார். அம்பி எதிர்பார்த்ததோ ஒரு குடுகுடு கிழவியை. பல் எல்லாம் போய்த் தலை நரைத்துக் கையில் ஒரு தடியுடன் ஒளவையார் ரேஞ்சுக்குக் கற்பனை செய்து வைத்திருந்த அம்பி தலைவியைக் காண முடியாமல் திணறினார். ஆனால் தலைவி அம்பியை இனம் கண்டு கொண்டார். தலைவியைத் திணற அடிப்பதற்காக அம்பி மாறு வேஷத்தில் வந்திருந்தாலும், அவர் அணிந்திருந்த டீ-ஷர்ட்டில் இருந்த கறுப்பு நிறத்தை வைத்து அவர் மறைமுகமாகத் தலைவிக்குக் கறுப்புக்கொடி காட்ட முயல்வதைத் தலைவி புரிந்து கொண்டார். எனினும் பெருந்தன்மையுடன் மன்னித்தார். தலைவியைக் குழப்ப நினைத்த அம்பியும், குண்டர் படைத் தலைவரும் தங்கள் பெயரை மாற்றிச் சொன்ன போதிலும் தலைவி சரியாக அவர்களை இனம் கண்டார். தலைவியின் அறிவு இப்படி பட்டொளி வீசிப் பிரகாசிப்பதைக் காணச் சகியாத அம்பி தலைவியிடம் தான் smart ஆக இருப்பதாகப் பெருமை அடித்துக் கொள்ள, தலைவி அவரை முறுக்கு மீசையுடன் ஆஜானுபாகுவாகத் தான் கற்பனை செய்து வைத்திருந்ததை கூறுவதற்கு rough and tough என்ற வார்த்தையைப் பிரயோகம் செய்யவே அம்பியின் கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர் வழிந்து ஓடிக் கர்நாடகாவில் கிருஷ்ணராஜசாகரம், கபினி போன்ற அணைகளில் நீர் நிரம்பி வழிவதால் கர்நாடகாவின் பொதுப்பணித்துறைக்கு அந்தத் தண்ணீரைத் தமிழ் நாட்டிற்குத் திருப்பி விடக் கட்டளை இட்டார். தமிழ் நாட்டில் காவிரியின் எல்லாக் கிளை நதிகளிலும் தண்ணீர் ஓட ஆரம்பித்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாய அணித் தலைவர் திரு இளா அவர்கள் தலைவிக்குக் "காவிரி கொண்டாள்" என்ற பட்டம் அளிக்கத் தீர்மானித்துள்ளார்.
அம்பியுடன் தலைவி போட்ட ஒப்பந்தம் சுமுகமாகக் கையெழுத்திடப்பட்டது. அம்பி ரேஞ்சுக்கு "சோபியா லாரன்", "எலிசபெத் டெய்லர்" போன்ற நடிகைகள் போதும் என்று தலைவி முடிவு செய்ய அம்பி இன்னும் கொஞ்சம் அவர்கள் இருவருக்கும் முன்னால் நடிக்க வந்தவர்களாகப் பாருங்கள் என்று தலைவியிடம் விண்ணப்பம் செய்து கொண்டார். தலைமையகம் திரும்பியதும் அதைப் பற்றிப் பரிசீலிப்பதாகத் தலைவி வாக்குறுதி அளித்தார். இதன் பின் தலைவி தமிழ் நாட்டின் காவிரி பாயும் மாவட்டங்களின் நீர் வரத்தையும், மற்ற விவரங்களையும் கண்டு களிக்கத் தமிழ்நாடு திரும்பினார்.
தலைவியின் இந்தத் திக்விஜயம் வெற்றிகரமாக முடிந்தது கண்டு சங்கப் பெருமக்கள் களிப்பு அடைந்திருக்கிறார்கள். தலைவி சுற்றுப் பயணம் செல்லும்போது நடந்த பிரிவு உபசார விழாவில் தாமதமாகக் கலந்து கொண்ட "நாகை சிவா" விற்குத் தலைவி முன்னம் அளிப்பதாக ஒப்புக் கொண்ட பரிசுகளை ரத்து செய்து விட்டுத் தற்சமயம் ஒரு பழைய சினிமா போஸ்டரும், சில பல காக்கைகளும் அனுப்பி வைத்தார். (சிவா, வந்ததும் ஒரு பதிவு போடுங்க, பராசக்தி படத்துக் "கா, கா" பாட்டைப் போட்டு, புரிஞ்சுப்பேன், காக்கை வந்ததை.)
***********
சங்கக் கண்மணிகளும், முத்தமிழ்க்குழும உடன்பிறப்புகளும், தமிழ்மகள்க் குழுமச் செல்வங்களும், மற்றும் உள்ள எல்லாச் சங்கப் பிள்ளைகளும் பெருமளவில் திரண்டு வந்து விழாவைச் சிறப்பிக்கும்படிக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
இதுவரை காணாமல் போய் நம்மையெல்லாம் மகிழ வைத்த தலைவி 15 வயதாக குறைதுக்கொண்டு வந்து விட்டார்கள்.எல்லோருக்கும் என் செலவில் ஒரு டைகர் பாம் இலவசம்.அம்பியின் தம்பியைப்பார்த்து அம்பி என்று ஏமாந்தகதை தனி.அம்பி இந்த "மொக்கை பதிவு" என்பதை கட் பன்னி ரெடியா வச்சுக்கலாம் எல்லாபதிவுகளுக்கும் போடலாம்.இந்த 100 வது பதிவை விட்டுடு.ஒரு 1 ரெண்டு 0 0 எல்லாம் வாங்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?
ReplyDeleteஎல்லா கஷ்டங்களையும் மீறி 100 பதிவு என்பது அமர்களமான விஷயம்.கங்கிராட்ஸ்.
Behind every successful woman ther should be a omnipotent successful husband.
VAAZHTHUKKAL.
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteசங்கத்திலே ஏதாவது பதவி (தலைவர் பதவி மாதிரி மட்டுமே) தருவதாக இருந்தால், விழாவில் கலந்து கொள்ள ரெடி.
முன்னாடியே வாழ்த்து சொல்லிவிட்டேன் இருந்தாலும் இப்பவும்
ReplyDeleteசொல்லுகிறேன்
வாழ்த்துக்கள்
படிச்சுட்டு நல்லா இருந்தா மீண்டும் வருவேன் வாழ்த்து சொல்ல....::)))
செஞ்சுரியடித்து முப்பெரும்விழா காணும் வ.வா.சங்கத்தின் நிரந்தரத்தலைவி(வலி)க்கு வ.வா.ச.வளைகுடா கிளை சார்பில்
ReplyDeleteவாழ்த்துக்கள்.
தி.ரா.ச. சார்,
ReplyDeleteநான் ஒண்ணும் ஏமாறலை. அம்பி இதுமாதிரி ஏதாவது பண்ணப் போறார்னு ஜாக்கிரதையாக இருந்தேனாக்கும். அம்பி மாதிரி நான் ஒண்ணும் மொக்கைப் பதிவு போடலை.
அது சரி, ஒரு பொண்ணு, அதுவும் சின்னப் பொண்ணுத் தனியா ஜெயிச்சு வந்தா நீங்க ஆண்குலம் credit எடுத்துக்குவீங்களே! :D
Thank You Sir for your greetings and encouraging me by commenting my writings.
sibi,
ReplyDeleteமறக்காமல் வந்து வாழ்த்துச் சொன்னதுக்கு நன்றி.
துபாய்வாசி,
ReplyDeleteசொர்க்கத்திலே இருந்து திரும்பியாச்சா? வாழ்த்துக்களுக்கு நன்றி.
அப்புறம் இந்தப் பதவி, பட்டம் எல்லாம் "நமக்கு நாமே" திட்டத்தின் மூலம் தான்,. அரசு சொல்றதை நான் சரியாப் புரிஞ்சு வச்சிருக்கேன், நீங்க புரிஞ்சுக்கலை, வறண்ட பகுதியில் இருக்கீங்க இல்லையா அதான். :D
மின்னல் தாத்தா,
ReplyDeleteநீங்க எத்தனை முறை வந்து வாழ்த்துச் சொன்னாலும் இந்தப் பேத்திக்குச் சந்தோஷம் தான். இப்போ கை நடுங்காம எழுதறீங்க தானே? :D
ஹி,ஹி,ஹி, துபாய் ராஜா,
ReplyDeleteநீங்க துபாய்க்கு ராஜா, அதனாலே பெருந்தன்மையா என்னைத் தலைவியா ஏத்துக்கிட்டீங்க. ரொம்ப நன்றி. கிளைக் கணக்கு எல்லாம் அனுப்பி வைங்க, பார்க்கலாம். :D
உங்க வாழ்த்துக்களுக்கு நன்றி.
hi,hi,hi,hi,hi,hi,hi,hi,hi,hi,hi,hihi,hi,hi,hi,hi,hi,hi,hi,hi,hi,hi,hi,இன்னிக்கு எல்லாரையும் பார்த்து ஏகத்துக்கு இளித்ததில் இப்படியே போயிடுச்சு. நாளைக்குச் சரியாகும்னு நினைக்கிறேன்.
ReplyDeleteஇதெல்லாம் சரி. சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் (இருந்த?) நீங்கள் நான் அட்லஸ் வாலிபராக தேர்ந்தெடுக்கப் பட்ட மாதம் முழுதும் காணாமல் போன மர்மம் என்ன?
ReplyDelete(100 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்)
சதத்துக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete//கிளைக் கணக்கு எல்லாம் அனுப்பி வைங்க, பார்க்கலாம். :D//
ஆகா நெசமாவே தலைவலி தான் போல இருக்கே ;-)
வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇ.கொ.
ReplyDeleteஅதெல்லாம் காணாமல் போகலை. சூரியனுக்கு முன்
அட, நான் தான் சூரியன் சந்திரன் ஒளி எடுபடாதே? உங்க பதிவையும் எல்லாரும் படிக்கணுமே(ரொம்ப அலட்டல்தான் ) அடைப்புக்குறிக்குள் வழக்கம் போல் மனசாட்சிங்க, கண்டுக்காதீங்க, முதல்முறை வந்திருக்கீங்க, வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்க அட்லஸ் வாலிபர் அறுவை எல்லாம் படிச்சேன். சங்கக் கண்மணியா இருந்துட்டு இதெல்லாம் படிக்காமல் எப்படி?
இ.கொ.
ReplyDeleteதவிர நான் சுற்றுப் பயண ஏற்பாடுகளில் ரொம்ப பிசி. எங்கே எல்லாம் போய் சங்கக் கொடியை நாட்டிட்டு வந்திருக்கேன்னு வரப் போற பதிவுகளிலே பாருங்க.
நன்மனம்,
ReplyDeleteவாங்க, வரும்போதேவா கணக்குக் கேட்பது? உளவுப் படைங்கறதை நிரூபிக்கிறீங்களே? சும்மா இருங்க, யாராவது இன்னும் கேட்கப் போறாங்க.
ரொம்ப நன்றி, சிவமுருகன், முடிஞ்ச போது வாருங்கள். உங்கள் ஆன்மீகப் பசிக்கும் ஓரளவு தீனி (யானைப் பசிக்குச் சோளப் பொரி போலக்) கிடைக்கும்.
ReplyDeleteஅடிச்சு புடிச்சு, ப்பளாக்கர் இடம் மல்லுக்கட்டி சண்டையிட்டு, அப்படி, இப்படினு ஒரு 100 பதிவு போட்டு வீட்டீர்கள்.
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள்.
//"நாகை சிவா" விற்குத் தலைவி முன்னம் அளிப்பதாக ஒப்புக் கொண்ட பரிசுகளை ரத்து செய்து //
அறிவித்த பரிசை ரத்து செய்வது தலைவிக்கு அழகு அல்ல.
//பராசக்தி படத்துக் "கா, கா" பாட்டைப் போட்டு, புரிஞ்சுப்பேன், காக்கை வந்ததை.//
அந்த காக்கையை இது தானா?
:))))))
சிவா,
ReplyDeleteபரிசு அளிப்பது, ரத்து செய்வது எல்லாம் தலைவியின் ஏகபோக உரிமை. காக்கைப் பதிவு போடுங்க, பின்னூட்டம் 200-க்கு நான் பொறுப்பு.
Grrrrrrrrrrrrrrrrr. வேதா, பாராட்டுக் கொடுத்தது வாபஸ். அது என்ன சும்மா என்னைப் பார்த்து வயசானாவங்கனு சொல்றது? :D
ReplyDelete//
ReplyDeleteஅது என்ன சும்மா என்னைப் பார்த்து வயசானாவங்கனு சொல்றது? :D
//
40 வருசமா இதையே சொல்லுரீங்க :))
இன்னும் இதையே எத்தனை நாளுக்கு (வருசுத்தக்கு) சொல்லுவீங்க..
Grrrrrrrrrrrrrrrrr. மின்னல் தாத்தா,
ReplyDeleteநான் பதிவு எழுத ஆரம்பிச்சே 4 மாசம் தான் ஆகுது. 40 வருஷமாஆஆஆஆஆஆஆஆஆ?கடவுளே, கடவுளே, இப்படி ஒரு தாத்தா சொல்லலாமா?