கருவிலியில் இருந்து பரவாக்கரை நுழையும் போது முதலில் பெருமாள் கோவில் வரும் என்று என்னுடைய 115-ம் பதிவில் மாணிக்கேஸ்வரர் கோவிலைப் பற்றிக் கூறும்போது எழுதி இருந்தேன் அல்லவா? அந்தப் பெருமாளைப் பற்றி இப்போது. இவரைப் பற்றியும் திருமூலர் தன் திருமந்திரத்தில் கூறி இருக்கிறாராம். திருமந்திரம் 190-ம் பாடலில்,
"வேங்கடநாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத்துள்ளே விளையாடு நந்தியை
வேங்கடம் என்றே விரகறியாதவர்
தாங்க வல்லாருயிர் தாமறியாரே."என்று திரு சு.செளந்திர ராஜன் கூறுகிறார்.(அவருடைய இனிஷியல் "க" என்று நானாகப் போட்டு விட்டேன். இன்று தான் அவர் புத்தகம் பார்த்ததில் சு.செளந்திரராஜன் என்று புரிந்தது. தவறுக்கு மன்னிக்கவும்.) இந்த வேங்கடநாதன் கோவில் யார் கட்டினது, எப்போ கட்டினது என்று எல்லாம் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் என் மாமனாரின் பாட்டனுக்குப் பாட்டன் காலத்தில் இருந்து எங்கள் குடும்பம் பரம்பரை அறங்காவலர்களாக இருந்து வந்திருக்கின்றனர். என் மாமனாரின் பாட்டி குடும்பம் இங்கே விஷ்ணு கோவிலும், அந்தப் பாட்டியின் தங்கை குடும்பம் கருவிலியில் சிவன் கோவிலும் பராமரித்து வந்திருக்கிறார்கள். என் மாமனாரின் அண்ணா இருந்த சமயம் கும்பாபிஷேஹம் செய்வித்திருக்கிறார். பெருமாளுக்கு என்று நிலங்கள், இடம், தேர்முட்டி கோவிலில் பூஜை செய்யும் பட்டருக்கு வீடு என்று எல்லாம் இருந்து வந்தது. ஆனால் என் மாமனார் தன்னால் நிர்வகிக்க முடியாது என்பதாலும், அரசாங்கம் எல்லாக் கோவில்களையும் தன் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்த நேரம் தன் அறங்காவலர் பதவியை விட்டு விட்டார். அதற்குப்பின் வந்த யாரும் ஊரில் தங்கிப் பெருமாளுக்குப் பூஜை செய்யவில்லை. இங்கேயே இருந்த பட்டாச்சாரியாரும் வேறு ஊருக்குப் போய்விட வேறு ஊரில் இருந்து வந்தவர் நினைத்த நேரம் வர, பெருமாள் தனக்கு எப்போ குளியல், எப்போ படையல் எதுவும் தெரியாமல் திகைத்துப் போய் விட்டார்.
ஸ்ரீதேவி, பூதேவி சமேதரான பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆன இவர் மிக அழகான உருவமும் வேண்டியவர்க்கு வேண்டியதைத் தரும் உள்ளமும் கொண்டவர். மாமனார் கருவிலியில் இருந்தவரை அவ்வப்போது நடந்த பூஜையும் இப்போது சுத்தமாக இல்லாமல் போய் விட்டது. 41/2 அடி உயரத்தில் இருக்கும் பெருமாள் உற்சவ மூர்த்தங்களுடன் அருள் பாலிக்கிறார். இடது பக்கம் சிறிய ஆஞ்சனேயர் சன்னதி உண்டு. தற்சமயம் ஆஞ்சனேயர் சன்னதியில் ஆரம்பித்து அரச மரம் வேர் விட்டுப் பரவு சுற்றுச் சுவர் எல்லாம் இடிந்து மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கிறது கோவில். கோவிலின் வெளிப்பிரகாரத்தில் முட்களும், பாம்புகளும், புதர்களும் மண்டிக்கிடக்கிறது. உள்ளே சன்னதியிலோ வவ்வால்களின் குடித்தனம்.
எப்போதாவது நாங்கள் போகும் சமயம் கோவிலைத் திறந்து வைக்கச் சொல்வது உண்டு, நாளாவட்டத்தில் கோவில் திறக்கக்கூட ஆள் இல்லாமல் போய் அந்த ஊரிலேயே போஸ்ட் ஆஃபீஸில் வேலை பார்க்கிறவர் பரிதாபப்பட்டுக் கோவிலைத் திறந்து வைத்து அபிஷேஹமும், நைவேத்யமும் ஒருமுறையாவது செய்து வந்தார். அவர் தாயின் உடல் நலம் குன்றியதால் அவரும் தற்சமயம் ஊரில் இல்லை. கோவிலின் நிலங்கள் போனவழி தெரியவில்லை. கோவிலின் முன்னே இருந்த தேர்முட்டி மற்றும் அதைச் சார்ந்திருக்கும் இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு விட்டது. வேங்கடநாதன் தன் மனைவியருடனும், அத்யந்த சிநேகிதனான அனுமனுடனும் கோவிலில் சிறைப்பட்டு விட்டார். அவரை விடுவிக்கும் வழி தான் தெரியவில்லை. ஊர்க்காரர்கள் ஆக்கிரமிப்பை அகற்றும் முயற்சி பலிக்க வில்லை. எல்லாம் தெரிந்த அந்த இறைவன் இதை அறிய மாட்டானா என்ன? அவனுக்கு அவன் தான் வழி தேடிக்கொள்ள வேண்டும். மூன்று முறை நாங்கள் முயற்சித்தும் புனருத்தாரண வேலை ஆரம்பிக்க முடியவில்லை. பொறுப்புப் பெரிதாக இருப்பதால் எல்லாரும் பயப்படுகிறார்கள். பூனைக்கு யார் மணி கட்டப் போகிறார்கள் புரியவில்லை.
It will happen soon. let us hope for the best. Do inform me when renovation work starts. anil maathiri ethaavathu uthavalaame!nu oru aasai thaan. :)
ReplyDeleteஅம்பி,
ReplyDeleteபண உதவி செய்ய நிறையப் பேர் வருவாங்க தெரியும், ஆனால் மத்தது? நான் என்ன சொல்ல வரேன் புரியுதா? முதலில் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட வேண்டுமே? அதுக்குத் தான் என்ன செய்யறது யாருக்கும் புரியலை.
+
ReplyDeleteபல ஊர்களில் கோவில்கள் இந்த நிலையில் தான் உள்ளது. எங்களூரிலும் கொறட்டி---திருப்பத்தூர்---ஜோலார்பெட் அருணகிரியால் பாடல் பெற்ற தலம் இப்படித்தான் இருந்தது.ஆனால் இப்போது ஊரைச்சேர்ந்த வெளியூரில்/வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களின் முயற்ச்சியினால் புணர் உத்தாரணம் செய்து இபொழுது நான்கு வேளை பூஜை நடைபெறுகிறது. அதுபோல் ஏதாவது உங்களூரிலும் நடக்கவேன்டும்
ReplyDeleteமின்னல்,
ReplyDeleteநானும் வந்து இந்த மாதிரிப் போட்டுட்டுப் போறேன்.
@தி.ரா.ச.
ReplyDelete@வேதா, எல்லாருடைய பிரார்த்தனையும் பலித்து வேங்கடநாதன் ஒருவேளையாவது சாப்பிட வேண்டும்.
கீதா சாம்பசிவம் said...
ReplyDeleteமின்னல்,
நானும் வந்து இந்த மாதிரிப் போட்டுட்டுப் போறேன்.
/./
பத்து பின்னுட்டம் போட சொன்னிங்க
ஆனா பணம் வந்து சேரல அதனால்தான்
:)
சீக்கிரம் நடக்கும் என்று நம்பிக்கை வைப்போம்...நடக்கும்
ReplyDeleteமின்னல்,
ReplyDeleteதலைவிக்குப் பணம் வசூலிச்சுத் தான் தருவாங்க, தலைவிகிட்டேயேவா பணம் கேட்பாங்க? சரியாப் போச்சு போங்க! :D
ச்யாம்,
ReplyDeleteஇந்தப் போஸ்ட் போட்ட நேரம் வேங்கடவன் ஒருவேளை சாப்பிட ஏற்பாடு நடந்து வருகிறது, கோவிலும் புனருத்தாரணம் செய்யப் பிரார்த்திப்போம்.