எண்ணங்கள், எண்ணங்கள், எண்ணங்கள்.
தமிழ் பேசும் வலை உலகின் ஒரே சிறந்த வலைப் பதிவு, எண்ணங்கள்.
உங்கள் அபிமான எழுத்தாளி "திருமதி கீதா சாம்பசிவம்" எழுதும் "எண்ணங்கள்."
வலை உலகிலே ஒரு எடுத்துக்காட்டு "எண்ணங்கள்"
இன்றே படியுங்கள் "எண்ணங்கள்'
நவரசத்தையும் சேர்த்துத் தரும் ஒரே வலைப் பதிவு "எண்ணங்கள்'
இந்தப் பதிவைப் படிப்பதின் மூலம் நீங்கள் பெறும் நலன்கள் எண்ணற்றவை. நீங்கள் தமிழ்மணத்தைச் சேர்ந்தவரா? கவலையை விடுங்கள். உங்களுக்கு ஒரு பின்னூட்டம் கியாரண்டி. உங்கள் அபிமான எழுத்தாளரே வந்து பின்னூட்டம் இடுவார். தேன்கூட்டைச் சேர்ந்தவரா? கவலை வேண்டாம். நிச்சயம் அவருடைய வாக்கு உங்கள் எழுத்துக்கே. முத்தமிழ்க் குழுமத்தைச் சேர்ந்தவரா? உங்களைப் பற்றி ஒரு சிறப்புக் குறிப்புக் கொடுக்கப் படும். இத்தனை சலுகைகளை அறிவிக்கும் ஒரே பதிவு "எண்ணங்கள்." உங்கள் ஆதரவு பெற்ற ஒரே வலைப் பதிவு "எண்ணங்கள்."
தயாரிப்பு வடிவமைப்பு" : திரு மஞ்சூர் ராஜா, ராஜா, ராஜா.
தலைப்பு, மற்றும் பெயர் எழுத்துரு மாற்றம்: திரு நாகை சிவா, சிவா, சிவா, சிவா, (மேலும் சிறப்புத் தகுதி கொசுவையும், குருவியையும் பதிவு போடுவது. தற்சமயம் காக்கைப் பதிவு எதிர்பார்க்கப் படுகிறது.)
கெளரவப் பின்னுட்டாளர்கள்: திரு அசின் அம்பி. (மொக்கைப் பதிவுச் சிறப்பாளர். அசினைத் தியாகம் செய்த பண்பாளர். அசினுக்குத் தம்பியாகி சிறந்த சகோதரப் பாசத்தைக் காட்டியவர்.அப்போ அப்போ தலைவியை உங்களுக்கு இருக்கு என்னோட பதிவிலே என்று மிரட்டி விட்டு ஒன்றுமே எழுதாமல் ஊருக்குப் போய்விடும் நல்லவர், வல்லவர்.)
திரு கார்த்திக் முத்துராஜன்: தலைவியின் சுற்றுப் பயணத்திற்காக அலுவல் வேலையை விட்டு விட்டுப் போஸ்டர் அடித்தவர். அலுவல் வேலையா, தலைவியின் சேவையா என்ற கேள்வி வந்த போது தலைவியின் சேவையே பெரிது என்ற முடிவில் போஸ்டர் வெளியிட்டார். ஆஃபீஸில் நிஜமாகவே வேலை வரும் என்று கனவு கூடக் காணாதவர், இப்போ யு.எஸ். போய் என்ன செய்யப் போகிறாரோ?
நிரந்தரப் பின்னூட்டாளர்கள்:பாசமலர்களான செல்வி வேதா, மற்றும் புதரகத் தூதுவர் திரு ச்யாம் அவர்கள்.
இரண்டு பேருக்கும் பாசத்துக்காக உருகவே மற்றவர் வலைப் பதிவை உபயோகிப்பார்கள். :D வலை உலகின் பாச மலர்களான இவர்கள் இருவரும் தலைவி என்ன எழுதினாலும் மறுத்து எழுதுவதிலும் தலைவியை கால் வாருவதிலும் புகழ் பெற்றவர்கள். :D
அடிக்கடி வருபவர்கள்; திரு தி.ரா.ச. அவர்கள். இவர் செய்த ஒரு தப்பினால் தான் தலைவி இந்த அளவு ரம்பம் போட ஆரம்பித்து விட்டார் என்று எல்லாப் பின்னூட்டாளர்களும் இவர் மேல் கோபத்தில் இருப்பதாகக் கேள்வி. தலைவியைப் புகழ்ந்து வேதாளத்தைக் கட்டவிழ்த்து விட்டு விட்டோம் என்று இவர் நொந்து கொள்ளாத நாள் இல்லை.
விவசாயி திரு இளா: ஏண்டா இவங்க பதிவுக்கு வரோம்னு நொந்து போன இன்னொரு ஆள். விவசாய அணித் தலைமையே வேண்டாம் என்று விட்டு விட்டுப் போகிற அளவு நொந்து போய் விட்டாராம்.
மற்றும் அடிக்கடி வருபவர்கள் பட்டியலில் திரு மனசு, (ஆளே காணோம், கொஞ்ச நாளா, 9தாராவை விட்டுட்டு வேறே யாரையோ பத்தி எழுதப் போறார்னு கேள்வி.)
திரு நன்மனம், (உண்மையிலேயே நன்மனமான இவருக்கு என்ன எழுதுவது என்று தெரியாததால் இவர் பதிவில் ஒண்ணுமே இல்லை, புதுசாக. முழிக்கிறார்.)
மின்னல் தாத்தா: வேண்டாத வேலை எல்லாம் செய்யறார். மக்கள் தொகை கணக்கெடுப்பு இப்போ எதுக்கு? ஆனால் இவர் வயசைப் பார்க்கறச்சே பொறுமையாக் கணக்கு எடுத்திருக்கிறாரேனு வியப்பு வருது.
எப்போதாவது எட்டிப் பார்க்கும் மனு, மற்றும் படித்து விட்டுப் பின்னூட்டம் இடாமல் செல்லும் துளசி போன்றவர்கள் வருவது இந்த ஒரே பதிவுதான்.
மேலும் இந்தப் பதிவுக்கு வரும் பின்னூட்டாளர்கள் பயன்பெறும் வகையில் இன்னொரு தகவல்: "குமாரகாவியம்" என்ன ஆச்சுனு கேள்வி கேட்டே திரு சிபி அவர்கள் பித்தானந்தா ஆகி இருப்பதும் இவர்தம் தனிச் சிறப்பு. பித்தானந்தாவின் "பின்" நவீனத்துவமும், "பின்" மொழிகளும், தத்துப் பித்துவமான கவிதையுமே தலைவியின் இந்தப் பதிவின் பெருமைக்குச் சிறந்த சாட்சி. "பின்" நவீனத்துவம் என்றால் ஹேர்பின்னா? ஸேஃப்டி பின்னா என்பதை வாசகர்கள் ஊகத்துக்கே விடுகிறேன். இந்த வசதி வேறே எந்தப் பதிவிலும் கிடைக்காது. யோசியுங்கள். முத்தமிழ்க் குழுமத்தில் இருந்து வந்தவர்கள் கூடத் தலைவியின் திறமையையும், அறிவுச் சுடர் விட்டுப் பிரகாசிப்பதையும் கண்டு வியந்து போற்றிப் பாராட்டி இருப்பதைக் கண்டு களிக்கலாம்.
ஆகவே வலை உலகத் தோழர்களே, தோழியரே, உங்கள் வருகையால் நீங்கள் நிச்சயம் பயன் பெறுவீர்கள். எல்லாம் இலவசம். இலவசம், இலவசம்.
பின்னூட்டம், பின் மொழிகள், தத்துப்பித்துவம் எல்லாம் கிடைக்கும் ஒரே வலைப் பதிவு இதுதான்.
நான் குமர காவியத்தை மறப்பதும், தாங்கள் அடிக்கடி (கனவில் கூட) நினைவூட்டுவதும் வாடிக்கையான ஒன்றாக விட்டது.
ReplyDeleteஇப்போது உங்கள் கனவில் கூட என்னைப் பார்த்தால் குமர காவியம் பற்றித்தான் கேட்கிறீர்கள் என்று கேள்பிப் பட்டேன்.
ஹி,ஹி,ஹி, சிபி, என்னோட இன்னொரு பேர் விடாக்கண்டி, கொடாக்கண்டி.
ReplyDeleteஎன்னத்த சொல்லு
ReplyDeleteஒரே அழுக்காச்சியா வருது.
ஒரு ஒரமா வர்கார்ந்து அழுதுட்டு நாளைக்கு வந்து பின்னூட்டம் போடுறேன்.
ஒரு சிறு மாற்றம். வேதாளத்தை புகழ்ந்து தலவியை கட்டவிழ்த்து விட்டேன்.
ReplyDeleteநான் ஒரு 3 நாளு ஊர்ல இல்லைனா, உடனே ஊரை விட்டு போயிட்டான் அம்பி!னு சொல்லிட வேண்டியது.
ReplyDeleteவாங்கி விட்டீர்களாஆஆ? குங்குமம்! ரேஞ்சுக்கு சுயபுராணம் இருக்கே! தில்லானா மோகனாம்பாள் படத்துல டி.ஸ். பாலயா சொல்ற மாதிரி, "அடேங்கப்பா! ஆட்டம் ஜாஸ்த்தியா இருக்கே!" :)
சிவா,
ReplyDeleteஇதுக்கே அழுதா அப்புறம் எப்படி மிச்சத்துக்கெல்லாம் என்ன செய்யப் போறீங்க? இப்போ தானே ஆரம்பம்.
தி.ரா.ச. சார்,
ReplyDeleteநான் சொல்ல நினைச்சதும் அதுதான். மாத்தி எழுதிட்டேன், ஹி,ஹி,ஹி,ஹி, திருத்தத்துக்கு ரொம்ப டாங்ஸு.
அம்பி, அம்பி, பயந்துண்டு ஊரை விட்டுப் போயிட்டுத் தெனாவட்டு வேறேயா? ஒரு சின்னப் பொண்ணு வேறே எப்படி இருப்பா? ஆடுவா, பாடுவா, குதிப்பா, என்ன செய்வீங்க?
ReplyDeleteஆகா விளம்பரம் எல்லாம் பலமா இருக்கு...இலவசம் ஒன்னும் இல்லயா...எண்ணை தேய்ச்சு குளிப்பவர்களுக்கு சீய்க்காய் இலவசம்..அப்படினு போடுங்க பிச்சுகிட்டு போகும்... :-)
ReplyDeleteஎன்னாத்துக்கு என் பாசமலர வம்புக்கு இழுக்கறீங்களோ...வேதா வாம்மா வா வந்து இவங்களுக்கு பதில் சொல்லீட்டு போ :-)
ReplyDeleteவேதா, அங்கே போய் அம்பியைத் தூண்டிவிட்டுட்டு இங்கே வந்து எனக்குப் பொறாமைங்கறீங்களா? எனக்கு ஒண்ணும் வைரமூக்குத்தி வேண்டாம். (அதான் அம்பி வாங்கித் தரப் போறாரே, அவர் கல்யாணத்துக்கு எனக்குப் பரிசி தரார்.) விளம்பரம் இல்லாத உலகே இல்லை, அதான் நானே ஒரு சுய விளம்பரம் கொடுத்துக்கிட்டேன். எல்லாம் "நமக்கு நாமே" திட்டம்தான். யாருக்குப் புரியுது என்னோட புத்திசாலித்தனம்?
ReplyDeleteபதிவுக்கு பதிவு வித்யாசம்,..
ReplyDeleteபடிக்க படிக்க சுவாரஸ்யம்,,
உங்கள் எண்ணங்கள்..
இப்போது விற்பனையில்
படித்து விட்ட்ட்ட்டீடீடீடீர்களா!!!!!!
தம்பி, என்னோட விளம்பர ஆலோசகரே, வருக, வருக, இத்தனை நாள் எங்கே போனீங்க? உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
ReplyDeleteஇந்த லிஸ்டில் என் பெயரை விட்டுவிட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன். உங்க பேச்சு 'கா'.
ReplyDelete:))
கைப்புள்ள,,உங்க பேரை வேணும்னு விடலை. நீங்க என்னோட பிரிவு உபசார விழாவுக்கும் வரலை, வெற்றி விழாவுக்கும் வரலையா, அதான் நான் தலைவி(தலைவலி) ஆச்சே, கோவிச்சுக்கிட்டேன். :D.
ReplyDeleteஉண்மையில் சேர்க்கணும்னு தான் நினைச்சேன். சரியான பிடி கிடைக்கலை. அடுத்த முறை பாருங்க, நல்லா வாரிடறேன்.
//இத்தனை நாள் எங்கே போனீங்க? //
ReplyDeleteஅத்த ஏன் கேக்கறிங்க :((
தம்பி,
ReplyDeleteஏன் என்ன ஆச்சு? உங்க வீட்டுக்கு இதோ உடனேயே வரேன்.
//பிரிவு உபசார விழாவுக்கும் வரலை, வெற்றி விழாவுக்கும் வரலையா, அதான் நான் தலைவி(தலைவலி) ஆச்சே, கோவிச்சுக்கிட்டேன். :D.//
ReplyDeleteஅடடா! தலைவி மனம் கோணற மாதிரி நடந்துக்கிட்டேனா? மன்னிச்சுக்கங்க. இனிமே தப்பு நடக்காம பாத்துக்கறேன்.
ஆனாலும் கார்த்திக் உங்களுக்கு வச்ச "இணைய உலக மம்மி" கட்டவுட்டை எல்லாம் வந்து பாத்துட்டு "உய் உய்"னு சவுண்டு(விசில் விட்டதா) தான் ஞாபகம்.
:)
கைப்புள்ள,
ReplyDeleteஅங்கே போய் சவுண்டு விட்டா எப்படி? இங்கே தலைமைக் கழகத்தில் வந்துல்ல சொல்லணும்? இந்த அடிப்படைப் பாடம் கூடத் தெரியலை? நீங்க இன்னும் கைப்புள்ள தான்.