எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, August 22, 2006

116.கைப்புள்ள போட்ட ஒப்பந்தம்

தோழர்களே, தோழியர்களே, பாருங்க எப்படி அன்பாக் கூப்பிடறேன்னு, என்னப் போய்

வயசாச்சு அது இதுனு இந்த மொக்கை ஸ்பெஷலிஸ்ட் அம்பி பேச்சைக் கேட்டுக்கிட்டு

கைப்புள்ள மாதிரி மனசை மாத்திக்காதீங்க! அது என்னன்னு கேட்கறீங்களா? சொல்றேன்
கேளுங்க.

நான் களப்பணி ஆற்றப் போனதும் அங்கே வெற்றிக்கொடி நாட்டி வந்ததும் அனைவரும் அறிவீர்கள். ஆனால் இந்தக் கைப்புள்ள மட்டும் பிரிவுபசார விழாவுக்கோ, அல்லது

வெற்றி விழாவுக்கோ வரவே இல்லை. அப்போவே தலைவி நினைச்சார், ஏதோ சூது

இருக்குது இதிலேன்னு.ஆரம்பத்தில் இருந்து தலைவியை ஆதரித்த அவர் கடைசிலே

பார்த்தால் அம்பி கூடப் போய்ச் சேர்ந்திருக்கிறார். (இல்லைமுதலில் இருந்தே தான்)

வந்துடுச்சுங்க இந்த மன சாட்சி கூடக்கூடப் பேசறதுக்கு. சும்மா இரு. நான் தான் சொல்றேன்

இல்ல? இந்த அம்பி ஏதோ விஷமம் செய்து கைப்புள்ளயிடம் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்.

தலைவி பாவம் ஒண்ணும் தெரியாத அப்பாவியாக "மாற்றான் வலைப்பூ பதிவும் நல்லது" என்று

அம்பியோட பதிவு, கைப்புள்ளயோட பதிவு, வேதாவோட பதிவு, சிவாவோட பதிவு, இங்கே வரவே வராத ச்யாமோட பதிவு, கார்த்திக்கோட பதிவு, மின்னல் தாத்தாவோட பதிவு, சின்னக்குட்டியோட பதிவு, தி.ரா.ச.வோட பதிவு (அவர் எங்கே எழுதறார், பாவம் 60 வயசு

ஆயிடுச்சா, எழுத முடியலை.என்ன, என்னை மாதிரிச் சின்னப் பொண்ணுங்களாலே முடிஞ்சது

அவராலே முடியாது. விட்டுடுவோம்.) னு எல்லார் பதிவுக்கும் போய்ப் பின்னூட்டம்

இட்டுட்டு வந்தா இந்தக் கைப்புள்ள அம்பி கிட்டே அவரோட பதிவிலே நாம போட்ட

ஒப்பந்தம் நினைவிருக்கானு கேட்கிறார்.

கைப்புள்ள,

கோப்பெருஞ்சோழனும்,பிசிராந்தையாரும் போலவும், அவ்வையும், அதியமானும் போலவும் இருந்த நம் நட்பை இப்படி முறிச்சிட்டீங்களே இந்த அம்பியோட போட்ட

ஒப்பந்தத்தாலே, இது நியாயமா? தர்மமா? (ம..சா.:- இங்கே ஒரு விஷயம், இவங்க அவ்வைன்னதும், அவ்வையோட ஃபோட்டோ போட்டு இவங்க இப்படித்தான்னு சொல்லுங்க)

grrrrrrrrrrrrrr ஏ மனசாட்சி, உண்மையிலே சொல்லு, நான் என்ன அவ்வை K.B.சுந்தராம்பாள் போலவா இருக்கேன்? நீ ஏதாவது சொல்லி வைக்காதே. அந்த இளா காதிலே

விழுந்துடப் போகுது. அப்புறம் சுந்தராம்பாள் ஃபோட்டோவைத் தூசி தட்டி எடுத்துட்டு

வந்துடுவார். உன்னை முதல்லேஒழிச்சுக் கட்டணும்.

சரி, சரி, விஷயம் என்னன்னா கைப்புள்ள கட்சி மாறிட்டார்.அப்படி இருந்தாலும் தலைவி இது

காலத்தின் கட்டாயம் என்று பெருந்தன்மையுடன் அவரைக் குற்றம் சொல்லவில்லை.

பின்னூட்டம் மட்டும் போட்டால்போதும் என்று விட்டு விட்டார். அம்பி செய்த துரோகத்துக்கு

அவர் பங்களூர் மஹா நாட்டைப் பற்றி எப்பவுமே எழுதக்கூடாது என்றும் கட்டளை

பிறப்பித்திருக்கிறார். இதைக் கேட்ட "நாகை சிவா" மீண்டும் விம்மி விம்மி அழ ஆரம்பித்து

விட்டார். ச்யாமும், வேதாவும் "மலர்ந்தும் மலராத" பாட்டைப் பாடி அவரைத் தூங்க

வைத்தார்கள். ஆனால் அவர் தூங்காமல் அந்தப் பாட்டைக் கேட்ட மாத்திரத்தில் கண்ணீரை

நிறுத்தி விட்டு "இனிமேல் சூடானை விட்டுட்டு வரவே மாட்டேன். எனக்கு நல்லா வேணும்." என்று கத்திக் கொண்டே ஓடி விட்டார். இப்போ தலைவிக்கு எதிரிகளே இல்லை.

ஏன் என்றால் அவர் மட்டும் தானே இருக்கிறார். வேறே யாரும் வரவே மாட்டேங்கறாங்களே. பயந்து கொண்டு ஓடறாங்களே! இப்போ தலைவி அவங்க தனக்குத் தானே பாராட்டு விழாவும் எடுத்துக்கப் போறாங்க. அது பற்றிய அறிவிப்பு கூடிய விரைவில்.

அம்பி,
இந்த மொக்கை எப்படி?

கைப்புள்ள

உங்களைச் சேர்த்துக்கலைன்னு வருத்தப்பட்டீங்களே? ஒரு தனிப்பதிவாவே போட்டுட்டேன்.

இருந்தாலும் கொஞ்சம் திருப்தியா வரலை. அடுத்ததிலே பார்த்துக்கலாம். தயாரா இருங்க.

இந்தப்பதிவு இரண்டு முறை வந்தால் நான் பொறுப்பு இல்லை. வேதாளத்தோட வேலை. மறுபடி முருங்கை மரம் ஏறி விட்டது.

24 comments:

 1. தலைப்பைக் காணோம். காக்கா கொண்டு போச்சு, அவங்க அவங்களுக்குப் பிடிச்ச தலைப்பை வச்சுக்குங்க.

  ReplyDelete
 2. //நான் களப்பணி ஆற்றப் போனதும் அங்கே வெற்றிக்கொடி நாட்டி வந்ததும் அனைவரும் அறிவீர்கள். ஆனால் இந்தக் கைப்புள்ள மட்டும் பிரிவுபசார விழாவுக்கோ, அல்லது

  வெற்றி விழாவுக்கோ வரவே இல்லை. //

  ஓஹோ! இது தான் காரணமா? கைப்புள்ளன்னு ஒருத்தன் இருக்கானா இல்லையான்னு நம்ம பக்கம் எட்டிப் பாக்காம இருந்ததுக்கு இது தான் காரணமா? இப்பத் தான் புரியுது.

  ReplyDelete
 3. //தலைவி பாவம் ஒண்ணும் தெரியாத அப்பாவியாக "மாற்றான் வலைப்பூ பதிவும் நல்லது" என்று

  அம்பியோட பதிவு, கைப்புள்ளயோட பதிவு//

  இது டூப்பு. அப்பட்டமான டூப்பு

  ReplyDelete
 4. //என்ன, என்னை மாதிரிச் சின்னப் பொண்ணுங்களாலே முடிஞ்சது

  அவராலே முடியாது. விட்டுடுவோம்.)//

  இதுவும் டூப்பு.
  :)

  ReplyDelete
 5. //அவ்வையும், அதியமானும் போலவும் இருந்த நம் நட்பை இப்படி முறிச்சிட்டீங்களே இந்த அம்பியோட போட்ட

  ஒப்பந்தத்தாலே, இது நியாயமா? தர்மமா?//

  இது உண்மை. ஆனா போன தடவை கொடுத்த நெல்லிக்கனிகளுக்கே இன்னும் நீங்க பின்னூட்டம் போடலை. அதுனால தான் அம்பி பக்கம் போயிட்டேன்...அவராச்சும் எதோ கும்தலக்காவா பஞ்சாப் மாநிலத்து நியூஸ் பேப்பர் நடனம் பத்தி எல்லாம் சொல்லறாரு.

  ReplyDelete
 6. மண்டை குழம்பி போச்சு இத படிச்சு,

  சூடா ஒரு சாயா குடிக்க போறேன் :-(

  ReplyDelete
 7. //அவ்வையும், அதியமானும் போலவும் இருந்த நம் நட்பை இப்படி முறிச்சிட்டீங்களே//

  correct, neenga avaiyaar thaan! engkal thanmaana singam! mahaanubaavulu TRC sir dhairiyaamaaga avarudaiya photovai thanathu postil pottu ullaar. athai polaa neengal ungal postil poda thayaaraa? (mudhalil pic poda theriyumaa? he hee)
  intha kelvikku bathil varattum paarpoom. kothikirathu nenjam, thudikirathu meesai, adhai adakku! adakku! enkirathu namathu natpu & thamizh marabu!
  pongi ezhu siva,veda & syam,
  paarthaayaa syam, pathavi Aasai un kannai maraithu vittathu, ippo purinthu kondaayaa ethir katchiyin sathiyai! :)
  kaipullaikum enakkum irukkum natpu koperuncholanukkum, pisiraanthaiyaarukkum ulla natpu pola, :)

  ReplyDelete
 8. //அம்பியோட பதிவு, கைப்புள்ளயோட பதிவு, வேதாவோட பதிவு, சிவாவோட பதிவு, இங்கே வரவே வராத ச்யாமோட பதிவு, கார்த்திக்கோட பதிவு, மின்னல் தாத்தாவோட பதிவு, சின்னக்குட்டியோட பதிவு, தி.ரா.ச.வோட பதிவு (அவர் எங்கே எழுதறார், பாவம் 60 வயசு //

  இதில் என்னோடப் பதிவு இல்லையே why? why? why?

  ReplyDelete
 9. நீங்க சங்கம் பக்கம் வர்றதே இல்லன்னு தலக் கைப்புள்ள ஒரே அழுவாச்சி... இப்போக் கூட அவர் போட்டப் புதிர் ஒண்ணுத்துக்கும் பதில் தெரியாமப் புலம்பிக்கிட்டு இருக்கார்.. அக்கா நீங்க வந்து உதவக் கூடாதா?

  ReplyDelete
 10. தலைப்பு தானே வேணும், இந்தாங்க - அவ்வையின் புலம்பல்!

  ReplyDelete
 11. பிளாக் எழுதி வாழ்வாரே வாழ்வார் மற்றெலாம் நம் ஆழ்வார் என்று ஐயன் வள்ளுவன் சொன்னபடி வாழும் தலைவியே...

  நமக்கு நாமே திட்டத்தை கலைஞ்ஞர்க்கு அப்புறம் அமல் படுத்தி தனக்கு தானே பாராட்டு விழா எடுத்து...என்ன சொல்ல... எழுத்து.. வார்த்த வரமாட்டேங்குது...

  என் அருமை சகோதரி வேதா மீதிய பார்த்துக்குவா...(சகோதரி கரக்டா ஆப்பு வெச்சுட்டு போம்மா) :-)

  ReplyDelete
 12. ஒண்ணுமே புரியலைங்கோ! இப்ப நீங்க திட்டறீங்களா! இல்ல வேற ஏதாவது சொல்ல வறீங்களா! பாரதிராஜா மாதிரி குழப்பறீங்களே!
  கண் பார்வை குறைதல், பேச்சு குழறல் மட்டுமில்ல, எழுதும்போது கூட கை நடுங்கும் - வயசானால்!

  "நடுக்கம் கண்டதோ என் பேனா,
  என் அறிவும் வயசும் இனிப்பான தேனாம்!" -ன்னு இதுக்கு பதில் சொல்லிடாதீங்க!

  உங்க உண்மையான வயசு என்னனுதான் இந்த உலகத்துக்கு பறைசாற்றுங்களேன்! :)

  ReplyDelete
 13. கைப்புள்ள,
  நைஸாக் குட்டறீங்க! :-) புரியுது. ஆனால் தலைவிக்குக் கடமைகள் நிறைய இருக்குனும் புரியணுமே!

  ஹி,ஹி,ஹி கைப்புள்ள,
  மானத்தை வாங்காதீங்க, நான் பின்னூட்டம் தான் கொடுக்கலியே தவிர, சங்கத்தின் நடவடிக்கைகளை அவ்வப்போது கண்காணித்து வருகிறேன். நம்ம "நாகை சிவா"வைக் கேளுங்க.

  எது டூப்பு? நற நற நற நற நற

  ஹி,ஹி,ஹி, அம்பி பக்கம் அதான் போனீங்கனு தெரியும் எனக்கு.

  ReplyDelete
 14. தம்பி,
  இஞ்சி, ஏலக்காய் போட்டுக் குடிங்க, நானும் வரேன் டீ குடிக்க.

  ReplyDelete
 15. ஆப்பு, அம்பி,
  கைப்புள்ளக்கும் எனக்கும் உள்ள நட்பு கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார்னு நான் ஏற்கெனவே சொல்லிட்டேன். இதுலே கூடவா காப்பி, டீ எல்லாம்? அவர் போட்டோ போட்டார்னா நான் போடணுமா என்ன? (இன்னும் சின்னப் பொண்ணு ஃபோட்டோவா பார்த்துட்டு இருக்கேன். பேபி கல்யாணி பரவாயில்லையா?) :D

  ReplyDelete
 16. தேவ்,
  இப்போதானே குழந்தை பிறந்திருக்கு? உங்களைக் கஷ்டப்படுத்த வேணாமேனுதான். அடுத்த பதிவிலே சேர்த்து வச்சு ஒரு பிடி பிடிக்கிறேன்.

  ReplyDelete
 17. ஹி,ஹி,ஹி, அவர் போட்ட புதிரைப் பார்த்துத் தலை சுத்தித் தானே இந்தப்பக்கம் வந்துட்டேன். அது எல்லாம் எப்பவோ படிச்சாச்சு. பின்னூட்டம் போடலைன்னா சங்கப் பக்கம் வரலைனு நினைக்காதீங்க. இந்த மாத "அட்லஸ் வாலிபர்" யாருங்கிறதிலே இருந்து பார்த்துக்கிட்டே இருக்கேனாக்கும். தலைவின்னா சும்மாவா?

  ReplyDelete
 18. ஆப்பு அம்பி, Grrrrrrrrrrrrrrrrrrrrrr

  ReplyDelete
 19. ச்யாம்,
  ஹி,ஹி,ஹி, ரொம்பப் புகழறீங்க. உங்க பதவிக்கு ஒண்ணும் ஆபத்து இல்லை. உங்க பாசமலர் இப்போ நம் கையில். இன்னிக்குப் பதிவைப் பாருங்க, புரியும்.

  ReplyDelete
 20. இந்தியத் தேவதையே,
  எனக்குக் கடவுள் அருளாலே அது எல்லாம் ஒண்ணும் இல்லைம்மா. என் வயசு தானே "அது மட்டும் ரகசியம்." ;D

  ReplyDelete
 21. அம்பி நீ எங்கேயோஓஓஓஒ.......... போயிட்டே.இப்போ பாவம் கீதா மேடம் ஆடிபோய்ட்டாங்க.
  அவங்களுக்கு கையும் ஓடலை காலும் ஓடலை. வயசாச்சுஇல்லே.எல்லா பக்கத்திலேருந்தும்
  அம்புகள் சரமாதிரியா வருது.

  ReplyDelete
 22. ஹி,ஹி,ஹி, தி.ரா.ச. சார்,
  எனக்கு எல்லாம் சரியாத்தான் இருக்கு. அதான் தினமும் பதிவு போட்டுட்டு இருக்கேனே? அம்பிக்கும் உங்களுக்கும் தான் பாவம், என்ன செய்யறது? வயசாச்சு! :D

  ReplyDelete
 23. விழுந்து விழுந்து சிரித்தேன்..

  ReplyDelete
 24. ரொம்ப நன்றி, டெல்ஃபைன். வருகைக்கும் ரசிப்புக்கும்.

  ReplyDelete