எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, August 08, 2006

101. குண்டர் படைத் தலைவர்

ஹி,ஹி,ஹி, குண்டர் படைத் தலைவருக்குத் தனிப் பதிவு போட்டுடலாம்னு ஒரு எண்ணம். அதான்.
*********************

திரு தி.ரா.ச. அவர்களின் ஆலோசனைப்படிக் குண்டர்படைத் தலைவரைக் கூட்டிக் கொண்டு வந்து தலைவியை மிரட்ட நினைத்த அம்பி ஏமாந்தார். தலைவி குண்டர் படைத் தலைவரைச் சரியாகக் கண்டு கொண்டதில் சந்தோஷம் அடைந்த அவர், "தலைவி சொல்லே வேத வாக்கு" என்று கூறும் நிலைமைக்கு வந்து விட்டார்.
முன்னதாக அம்பியுடன் சேர்ந்து தலைவியை மிரட்ட வந்த குண்டர் படைத் தலைவர், தலைவியின் அறிவாற்றலையும், பிரச்னைகளைச் சமாளிக்கும் முறையையும், முக்கியமாக உண்மையிலேயே சின்னப் பொண்ணாகத் தலைவி இருந்ததைப் பார்த்து (!!!!!!!) வியந்தும், அம்பியிடம் இருந்து வந்த தன் நட்பை முறித்துக் கொண்டார். தலைவியின் மின்னல் வேகச் செயலாற்றும் திறமைக்குத் தலை வணங்கித் தான் தலைவியுடன் சேர்ந்து கொள்ளும் ஆசையில் தான் அம்பியுடன் வந்ததாகத் தெரிவித்தார். அவர் தம் முடிவில் மனம் மகிழ்ந்த தலைவி அவருக்கு உப்புப் பொட்டலம் பரிசளித்தார். அவரும் மிக்க மகிழ்வுடன் பெற்றுக் கொண்டு, "உப்பிட்டவரை உள்ளளவும் நினை" என்பதற்கேற்பத் தான் தலைவியிடம் மிக்க மதிப்புடனும், மரியாதையுடனும் நடந்து கொள்வதாகத் தெரிவித்தார். ஆனால் அவருக்கு எனத் தனிப் பதிவு இல்லாத காரணத்தால் தலைவி அவரைச் சீக்கிரம் வலைப்பக்கம் ஆரம்பிக்கக் கேட்டுக் கொண்டார். அப்போதுதான் தலைவி அவரையும் ஒண்டிக்கு ஒண்டி என்று ஒரு கை பார்க்க வசதியாக இருக்கும் என்பது தலைவியின் எண்ணம். குண்டர் படைத் தலைவர், தான் மிக்க ஒல்லியாக இருப்பதால் இந்தப் பெயர் வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளத் தலைவி ஒல்லியாக இருப்பவர்கள் குண்டர் படைத் தலைமையாக இருப்பது தான் நியாயம் என்று அவரைத் தேற்றினார்.
**********************

(ஹி,ஹி,ஹி, அம்பி, எப்படி இருக்கு? உங்க கூட வந்தவர் இந்த ஒரு பதிவில் மட்டும் இல்லை, இனி வரப் போகும் எல்லாப் பதிவிலும் குண்டர் படைத் தலைவர் தான். இது தான் இந்தப் பதிவுலகின் சாபக்கேடு, தமிழ் சினிமா மாதிரி.)

16 comments:

 1. As i promised to U, i kept my words.
  inimee thaan irukku ungalukku Aapu!
  unga nalla neram, intha week muzhukka work tightaa irukku. but i'll try to put a post of our meet sooon in ambi style.
  (ozhungaa ippaave maapu! mannipu! ellam ketta marupariseelanai seya padum!) :)

  ReplyDelete
 2. nothing doing. nothing doing. nothing doing. nothing doing. You did not keep your words because Mr.TRC told about our meeting in his comments. So no mannippu, or maappu or anything. write anything you like. Thakunwtha Bathil alikkappadum. எப்படி நானும் இங்கிலீஷிலும், தங்கிலீஷிலும் எழுதறேன் பாருங்க! தலைவி மன்னிப்புக் கேட்பதா?

  ReplyDelete
 3. என்ன இது அந்நியாயம். நம்ம சீனுவை குண்டர்படைத்தலைவர்னு சொல்லறதா. இதை நான் வன்மையாகா கண்டிக்கிறேன்.ஏதோ கூடவந்தவர் கொஞசம் குண்டா இருந்தார்ன்ன அதுக்குன்னு இவரை உடனே பதவி குடுத்து துக்கிவிடரதா.தலைவர் வருத்தப்படமாட்டாரா.அம்பி பொறுத்தது போதும் பொங்கி எழு
  .
  அம்பி ஏதோ வேலை, பிசி அப்படின்னு எதுக்கு நமக்கு சம்பந்தம் இல்லாத வார்த்தைகளை சொல்லவேண்டும்.கீதா மேடம் வெறே சின்ன பொண்ணு அப்படியே நம்பிட்டா என்னாவது.

  அது சரி அம்பிகிறது யாரு? எனக்கு ஒன்னுமே தெரியாது பங்களூர்,மைசூர்,தஞ்சையில் தனிக்கொடி நாட்டிய தலைவலி ஐயோ தலைவி வாழ்க

  ReplyDelete
 4. அட்ரா சக்கை அட்ரா சக்கை. இந்த ஜல்லிகட்டு நல்லா இருக்கே:) நான் இன்னும் முழுசா படிக்கல:) அப்புறம் வரேன் ஆப்பு வக்க:)

  ReplyDelete
 5. ஏனுங்க கீதாக்கா,
  தம்மாதுண்டு பத்தியில 12, 13 முறை தலைவி தலைவினு உங்க சுயப்புராணத்தையே பாடுறீங்களே. எப்படிங்க உங்களால மட்டும் இது போல கூச்சப்படாம செய்ய முடியுது.

  ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி

  ReplyDelete
 6. செய்யறதையும் செஞ்சுட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி இருந்தா சும்மா விடுவேனா? உங்க சிஷ்யன் பாடு இனிமேல் அதோகதிதான் சார்.அப்புறம் சுற்றுப் பயண லிஸ்ட்லே திருச்சி, கும்பகோணம் விட்டுடீங்களே? அம்பி சொல்லலியா?

  ReplyDelete
 7. ஹி,ஹி,ஹி, வேதா, பாராட்டுக்கு நன்றி, கடைசிலே நம்ம கட்சிக்கு வந்தீங்களே, ரொம்ப டாங்ஸுங்க.

  ReplyDelete
 8. சிவா,
  காக்காய் எல்லாம் வந்துச்சா? அது சரி, நான் தான் நமக்கு நாமே திட்டம்னு சொல்லி இருக்கேனே, வேலை இல்லாமல் இதை எல்லாம் போய் எண்ணிக்கிட்டு, மானத்தை வாங்கறீங்களே? ஒண்ணு, ரெண்டு தெரியாதுனு சொல்லுங்க, சொல்லித் தர ஏற்பாடு பண்ணலாம்.

  ReplyDelete
 9. யார பாத்து கணக்குல வீக்குனு சொன்னீங்க. மொத்தம் பதிமூனு தடவை இந்த பதிவில் தலைவி தலைவினு சுய புராணம் பாடி இருக்கீங்க.

  நீங்க என்ன பத்தி சொன்ன வார்த்தையை வாபஸ் வாங்காட்டி இதுவரைக்கும் நீங்க போட்ட 101 பதிவுக்கும் போயி நீங்க எத்தனை முறை சுயப்புராணம் பாடி இருக்கிங்கனு எண்ணி தனியா ஒரு பதிவு போட்டு விடுவேன் சொல்லிட்டேன்.

  ReplyDelete
 10. என்னாது இது ரொம்பதான் சுய புராணமா இருக்கு...புலிகேசி எல்லாம் உங்க கிட்ட பிச்சை எடுக்கனும் போல இருக்கு... :-)

  ReplyDelete
 11. hi,hi,hi Siva,
  please write a pathivu about me. you are allowed to praise my pukazh. oru thalaivinna ithu ellaam sahajam thaane!

  ReplyDelete
 12. Syam,
  It is not Suyapuranam. It is Thalaivi's Thivijaya Puranam. How is that? Hi,hi,hi,hi,.

  ReplyDelete
 13. என்ன பன்றது தலைவியா போய்டீங்க...பத்தாததுக்கு புதரகத்துகு வேற என்ன தலைவனா நியமிச்சுட்டீங்க...அதுனால நீங்க எது சொன்னாலும் சூப்பர் தான்... :-)

  ReplyDelete
 14. இங்கிருந்து புறப்பட்ட சங்கத்தின் தலைவலி, முன் ஜாக்கிரதை முத்தக்கா, பெங்களூரில் வேலை செய்வதாக பேர் பண்ணிக் கொண்டு அலையும் கலியுக நாரதரும், பெங்களூரின் தலைவலியுமான அம்பியை சந்தித்து வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தி திரும்ப வந்துள்ளதால் அனைவரும் இத்தனை நாளாக மூலையில் தூக்கி எறிந்த அவரவர் தலைவலி தைலத்தை எடுத்து வைத்துக் கொள்ளுமாறு எச்சரிக்கப்படுகின்றனர்(இனி வரும் பதிவுகளை சகித்துக் கொள்ளமாறு தங்கத் தலைவி(வலி) சார்பாக இந்த வேதாவின் வேண்டுகோள்)

  ReplyDelete
 15. ச்யாம், நீங்க தான் உண்மையான தொண்டர், குண்டர் எல்லாம். சரியா? :D

  ReplyDelete
 16. வேதா,
  சரிதான், தி.ரா.ச. சார் தலைவலித் தைலம் காண்ட்ராக்ட் எடுத்தது நேத்து சிபி சொன்னார். நிஜம் தானா? அப்போ அவர் கிட்டே கணக்குக் கேட்கணுமே! உதவிக்கு ரொம்ப டாங்ஸு (இது எப்படி இருக்கு?) :D

  ReplyDelete