எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, August 17, 2006

110. "தாதா" வேதாவின் சதி அம்பலம்

தோழர்களே, தோழியர்களே, இன்று பூரா என் இணைய இணைப்பு வேலைசெய்யவில்லை.கடைசியில் பார்த்தால் வேதாவின் சதி இது என்று அவர் தன் வாயாலேயே ஒப்புக் கொண்டு இருக்கிறார். பார்க்க:வேதாவின் இன்றைய பதிவு. அதில் வேதா தானே தன்னைத் தாதா என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

எத்தனை வேதாளங்கள் வந்தாலும் தலைவி அஞ்சா நெஞ்சுடன் அதனை எதிர்ப்பார். அம்பிக்கு நேரடியாகத் தலைவியுடன் மோதத் தெரியவில்லை. அதனால் நாரதர் வேலை பார்த்து அருமை நண்பர் ச்யாம், சிவா, கைப்புள்ள, பித்தானந்தா, திரு தி.ரா.ச. எல்லாரையும் தலைவிக்கு எதிராகத் தூண்டி விட்டிருக்கிறார். இப்படித் தூண்டிய குற்றத்திற்காக அவர் "தலைவியின் பதிவைப் போல் வேறு பதிவு இல்லை" என்று ஒரு பதிவு பூராவும் எழுத வேண்டும் என்றும், தலைவியின் பதிவுக்கு வந்து நூறு பின்னூட்டம் இட ஆட்களைத் தயார் செய்து கொண்டு வர வேண்டும் என்று கட்டளை தலைமை நிலையம் பிறப்பித்துள்ளது. மேலும் அவர் வேதாவைத் தூண்டி விட்ட குற்றத்திற்காகவும், வேதா வேதாளத்தைத் தூண்டி விட்டு தலைவியின் இணைப்பைத் துண்டித்த காரணத்துக்காகவும் தலைவியின் மூக்கைக் குத்தக் கோணி ஊசி தயார் செய்த குற்றத்திற்காகவும் இன்று முதல் தினமும் தலைவியின் பதிவில் இது நல்ல பதிவு என்று எழுதி விட்டே பின்னூட்டம் இட வேண்டும் என்றும் கட்டளை பிறப்பிக்கப் படுகிறது. இதை நாகை சிவா மேற்பார்வையில் கைப்புள்ள சிரமேற்கொண்டு செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். நாகை சிவா தன் அழுகையை நிறுத்தத் தலைவி மேற்கொண்ட முயற்சியால் அவர் அழுகை நிறுத்தப் பட்டதை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். இது பதிவு உலகின் உடனடி அவசரச் சட்டமாகப் பிறப்பிக்கப் படுகிறது. ச்யாம் தலைவியை வேண்டுகோள் விடுத்துக் கேட்டுக் கொண்டதின் பேரில் அவர் விஷயம் பரிசீலனையில் இருக்கிறது. முடிவு பின்னர் தெரிவிக்கப் படும்.

"வேதாளத்தை வெற்றி கொண்ட தலைவி வாழ்க "என்ற கோஷம் வலுக்கிறது. தலைவி நேரம் ஆகிவிட்டபடியால் வேலையாகச் சென்று விட்டார். பின்னூட்டங்களுக்குப் பதில் நாளை (இணைப்பு இருந்தால்) அளிக்கப்படும்.

15 comments:

 1. நீங்க அனுப்பின வேதாளம் என் பதிவுல் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை பாத்தீங்க இல்ல? நான் ஏதோ பிழைச்சுப்போன்னு அத திருப்பி அனுப்பினா அது உங்களுக்கே ஆப்பு வச்சுடுச்சா, இத தான் உங்கள மாதிரி வயசுல பெரியவங்க அன்னிக்கே சொல்லி வச்சாங்க 'தன் வினை தன்னை சுடும்'.:)

  //அதில் வேதா தானே தன்னைத் தாதா என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.//

  நான் எங்க ஒத்துண்டேன்? நீங்க தான் என்னைய அப்படிச் சொன்னதா நீங்க அனுப்பின வேதாளம் சொல்லித்து. அப்டியே நான் தாதான்னு நானே ஒத்துண்டா நீங்க உங்க வயசை(உண்மையான வயசை) இந்த ப்ளாக் உலகத்திற்கு உரக்க சொல்வீர்களா?:)

  ReplyDelete
 2. //தலைவியின் பதிவைப் போல் வேறு பதிவு இல்லை" //
  correct, correct, thalaiviyin Mokkai pathivu pola veru pathivu illaveee illaiiiiiiiii... :)

  ReplyDelete
 3. Neenga Ummachi Pathiyae Blogarathunaala naan Aunty nu sonnen..First Paatinu than sollalamnu nenachen:)..Nallavela nerla maatina adichuveengapola.

  ReplyDelete
 4. என்னங்க நடக்குது இங்க. அங்க போனா அவங்க உங்களுக்கு பட்ட பெயர் சூட்டுறாங்க. இங்கன வந்தா நீங்க அவங்கள தாதா ரேஞ்சுக்கு கொண்டு போறீங்க. சரி என்னமோ போங்க....

  மேற்பார்வை தானே அது நான் நல்லாவே பார்ப்பேன். உங்களுக்காக பாத்துட்டா போச்சு.

  ReplyDelete
 5. வேதா,
  gr..................வேதாளத்தின் மனதைக் கெடுத்து அதை எனக்கு எதிராக மாற்றி விட்டு இப்போ இது வேறேயா? எதுக்கு உண்மையான வயசு கேக்கறீங்கங்கறேன்? உங்க பதிவுக்கு உண்மையான பதில் பதிவு வருதா பாருங்க, எத்தனை கூட்டணி சேர்ந்தாலும் எத்தனை பேரைக் கூட்டி வந்தாலும் என்னோட வயசு "என்றும் பதினாறே" நற நற நற நற நற :D

  ReplyDelete
 6. ஆப்பு அம்பி,
  ஒரு பதிவு போடத் தெரியலை, வேதாவை எனக்கு எதிராத் தூண்டிவிட்டுத் தாய்க்குலத்தின் எதிரியாக மாறிட்டீங்க! என் பதிவு மொக்கையா? உங்களால் அதுகூடப் போட முடியாத வயித்தெரிச்சல்! :D

  ReplyDelete
 7. கமல்,
  இது யாரு புதிசாக் கரடி விடறீங்க? நான் உம்மாச்சி பத்தி எழுதறதிலேயே தெரியலை எனக்கு வயசே ஆகலைனு, கேக்க வேறே வந்துட்டீங்க! :-)

  ReplyDelete
 8. சிவா, சிவா, சிவா, சிவா, நான் காக்கையை அனுப்பியும்கூட எனக்கு எதிராக வேலை செய்யாத நல்லவர், வல்லவர், அந்த வானவில் கலர் துரோகிகளின் கூட்டணியை உடையுங்கள்.
  (சும்மா பச்சைத் துரோகினு சொன்னா நல்லாவே இல்லை, அதான் வானவில் கலர்னு சொல்லி இருக்கேன். அம்பி நல்லா இருக்கா இது? வேதா, பிடிச்சிருக்கா?)

  ReplyDelete
 9. அது சரி, சிவா, அழுகாச்சியா வருதுனு சொன்னீங்க? எப்போ அழுகையை நிறுத்தினீங்க? இந்தப் பதிவைப் பார்த்த அதிர்ச்சியிலேயா?

  ReplyDelete
 10. Nan Late a vandhalum Latesta varuven..ok neengalae othunteenga :) Athupdodum enaku..

  ReplyDelete
 11. ஒவ்வொரு தடவையும் என் பதிலைப் பார்த்து நறநறன்னு பல்லைக் கடிக்காதீங்க அப்புறம் பல்செட் விழுந்துடுச்சுனா, சாம்பு அத்திம்பேருக்குத் தான் வீண் செலவு:)

  ReplyDelete
 12. ஹேய், கமல், நான் வயசே ஆகலைனுதான் ஒத்துக்கிட்டிருக்கேன், தெரியுதா? உம்மாச்சினு குழந்தங்கதானே சொல்லும்? பெருசுங்க சொல்வாங்களா?

  ReplyDelete
 13. வேதா,
  வானவில் கலர் துரோகி, எனக்குப் பல்லெல்லாம் ஒரிஜினல். உங்களை மாதிரி செட் இல்லை. அதனால் எப்படி வேண்டுமானாலும் கடிப்பேன். நற நற நற நற நற நற
  இப்போ இம்சையைப் பார்க்கப் போறேன். பார்த்துட்டு வந்து உங்களைப் பார்த்துக்கறேன்.

  ReplyDelete
 14. ஒரு நாள் வரலனாலும் மக்கள் கரெக்ட்டா வந்து தலைவிய பிரிச்சு மேஞ்ச்சுட்டு போயிடராங்க...நான் ஒன்னும் சொல்லப்பா இந்த பதவி படுத்தும் பாடு பெரிய பாடா இருக்கு :-)

  ReplyDelete
 15. ஹி,ஹி,ஹி, ச்யாம், பதவியின் அருமை தெரிஞ்சாச் சரி. அப்படி வரணும் வழிக்கு. இதே மாதிரி அம்பிக்கும் வேதாவுக்கும் சொல்லி வைங்க!

  ReplyDelete