எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, August 12, 2006

105 வேதாளத்திடம் நான் போட்ட மந்திரம்

ஹி,ஹி,ஹி, எல்லாரும் படிச்சிருப்பீங்களே, நான் விக்கிரமாதித்தன் வழிபட்ட கோவிலுக்குப் போனதும், அங்கே வேதாளத்தைப் பார்த்ததும், அப்போ என்ன நடந்ததுன்னா? (ம.சா: ஹி,ஹி,ஹி, எனக்குத் தெரியும், எல்லாரும் இவங்களுக்கு ஆதரவு தெரிவிக்கணும்னு கேட்டுக்கிட்டாங்க.) நீ, சும்மா இரு. கூடக்கூடப் பேசாதே, இது நான்.
அங்கே வேதாளத்தைப் பார்த்தேனா, அப்போ நான் அதனிடம் சில கேள்விகள் கேட்கலாம்னு நினைச்சேன். என்னோட முதல் கேள்வி :வ.வா.சங்கத்தின் நிரந்தரத் தலைவலி பட்டத்தை எப்படித் தக்க வைத்துக் கொள்வது என்றுதான். (ம.சா: தக்க வச்சுக்கறது என்ன நீதான் யாருக்கும் விட்டே கொடுக்கலியே, திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டிருக்கியே, அவங்க வேணாம்னாலும் நீ விட மாட்டியே!)

மனசாட்சியை அலட்சியம் செய்து விட்டு இரண்டாவது கேள்வி: அதிகப் பின்னூட்டம் வாங்க என்ன செய்யறது? (ம.சா: நீ எழுதற விஷயத்தையும் ஒருத்தர் படிச்சுட்டுப் பின்னூட்டம் கொடுக்கறதே பெரிசு. இதிலே அதிகம் வேறே வேணுமா? நீ என்ன நாகை சிவா மாதிரி குருவி, கொசு இதைப் பத்தியா பதிவு போடறே, பின்னூட்டம் வேணுமாம், பின்னூட்டம்) ஷ்ஷ்ஷ்ஷ், என்னோடயே இருந்துட்டு எனக்கு எதிரா வேலை செய்யற உன்னை என்ன செய்யறது? இந்த அம்பி தங்கிலீஷ் எழுதிட்டு, அதிலே முடி வெட்டறதையும், தன்னோட டிசம்பர் மாதப் பிறந்த நாள் வாழ்த்துக்கு இப்போவே அச்சாரம் போட்டும் எழுதறார். இதிலே என்னை வேறே மிரட்டல், உங்களுக்கு இருக்கு, உங்களுக்கு இருக்குன்னு, கடைசிலே பார்த்தால் மனுஷனுக்குப் பயம் வந்துட்டது போலிருக்கு. ஹி.ஹி.ஹி. ஊரை விட்டுப் போயிட்டார். சொல்லவே இல்லை. (ம.சா: ஆமாம், உன்னோட பதிவில் பின்னூட்டம் கொடுக்க யாருமே இல்லை. இதிலே தெனாவட்டா?)

அம்பி ஊருக்குப் போயாச்சு. கார்த்திக் ஆஃபீஸ் பிரச்னை. வேதாவும் வரதில்லை. நாகை சிவா காக்காய் அனுப்பிச்ச கோவத்தில் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. மின்னல் தாத்தா, சின்னக்குட்டி,தி.ரா.ச. இவங்களையும் காணோம். மனசு, நன்மனம் இவங்க எல்லாம் உளவுப் படை வேலையிலே ரொம்ப பிசி. இல்லாட்டி வருவாங்க. (ம.சா: ஆமாம் வருவாங்க, காத்துக்கிட்டிரு, மனு என்ன ஆச்சு? அவங்க இப்போ வராங்களா? எல்லாரும் உன் பதிவைக் கண்டாலே ஓடறாங்க, புரிஞ்சுக்கோ.) Grrrrrrrrrrrrr. இந்தா மனசாட்சி, நீ தமிழ் சினிமா மாதிரி எனக்குப் புத்தி எல்லாம் சொல்ல வேணாம்.(ம.சா. ஆமாம், என்னை அடக்கு, கைப்புள்ள வராரா? அதுக்கு என்ன சொல்றே? உன்னோட பிடுங்கல் தாங்காமல் தான் ஒருத்தர் பித்தானந்தாவா மாறிட்டார்.மறைக்காதே என் கிட்டே) ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் சும்மா இருக்க மாட்டே? கைப்புள்ள தலைவர், தலைவர் எல்லாம் அடிக்கடி வர மாட்டாங்க, நான் இப்போ எப்போவாவது தானே சங்கப் பக்கம் தலை காட்டறேன். அது மாதிரிதான். சிபிக்குத் தமிழ் எழுத முடியலை. மறந்து போச்சோ என்னமோ? நான் "குமார காவியம்" னு கேட்டாலே ஒரு மாதிரி பார்க்கிறார். என்னோட மூணாவது கேள்வி வேதாளத்துக் கிட்டே: என்னோட ப்ளாக்கர் பிரச்னை அடிக்கடி பண்ணுதே, அது எப்போ சரியாகும்?

மேற்கண்ட மூன்று கேள்விகளையும் வேதாளத்திடம் கேட்க நினைத்து வேதாளத்தின் சன்னதிக்குப் போய் வேதாளத்திடம் முறையிட்டேன். "வேதாளத் தலைவரே, என்னோட ப்ளாக் என்னும் வேதாளம் எனக்குக் கொடுக்கும் தொந்திரவு போனாலே போதும். அதுக்கு ஏதாவது செய்ய மாட்டியா?" என்று மனமுருகிப் பிரார்த்தனை செய்தேன். வேதாளம் என் கண் முன் தெரிந்தது. உடனே அதனிடம் என் கோரிக்கையை வைத்தேன். வேதாளம்," எனக்குக் கேள்வி கேட்டுத்தான் பழக்கம். பதில் சொல்லிப் பழக்கம் இல்லை." என்றது. ஒரு மாறுதலுக்காக இம்முறை நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லுமாறு வேதாளத்திடம் கோரிக்கை வைத்தேன். என்னோட எல்லாக் கேள்விகளையும் கேட்ட வேதாளம் திரு திரு திரு என விழித்தது. "என்ன, வேதாளம் பதிலே சொல்லலியே?" என்று நான் கேட்க அது பயத்துடன் என்னைப் பார்த்து,"ஆமாம், நீ யார்? " என்றது. "ஏன் கேட்கிறாய்? நான் கீதா சாம்பசிவம்கிற பேரிலே எழுதறேனே, நீ பதில் சொன்னால் உன்னைப் பற்றியும் எழுதுவேன்," என்றதும், வேதாளம் "ஆளை விடு, நீ சங்கத் தலைவியோ, அல்லது தலைவலியோ, உனக்குப் பின்னூட்டம் வருமோ வராதோ, அது கூடப் பரவாயில்லை.உன்னாலே இத்தனை பேர் ஊரை விட்டுப் போயிட்டாங்க. அதுவும் ஒருத்தர் பித்தானந்தாவாகிட்டார். தவிர, இந்த ப்ளாக்கர் வேதாளம்னு சொல்றியே, அதைப் பார்த்தால் பயமாயிருக்கு. நீ முதலில் இடத்தைக் காலி பண்ணு. விக்கிரமாதித்தா, இவங்க கிட்டே இருந்து என்னைக் காப்பாத்து." என்று கதறிக் கொண்டு போய்விட்டது.

19 comments:

  1. வந்தேன்.... படித்தேன்.... பின்னூட்டம் இட்டேன்.....

    எப்படிங்க இந்த "சின்ன வயசுல" இப்படி ஒரு நாளைக்கு ஒரு பதிவுனு போட முடியுது....

    வேதாளத்தையும் துரத்திட்டீங்களே, இது நல்லா இல்ல :-)

    ReplyDelete
  2. ஹி,ஹி,ஹி, நன்மனம்னா நன்மனம்தான். சின்ன வயசுன்னு ஒத்துக்கிட்டின்ங்களே, ரொம்ப டாங்ஸு. வேதாளத்தை நான் எங்கே துரத்தினேன், அதுவே நம்மளைப் பார்த்துப் பயப்படுதே! :D

    ReplyDelete
  3. //வ.வா.சங்கத்தின் நிரந்தரத் தலைவலி பட்டத்தை எப்படித் தக்க வைத்துக் கொள்வது என்றுதான்//
    சங்கம்: அதை யாரும் கேட்க மாட்டாங்க, புடுங்கிக்கவும் மாட்டாங்க. அது எப்பவுமே உங்களுக்குதான்.

    வேதாளம்: ஆமா சங்கத்து பக்கமே போறது இல்லே அப்புறம் என்ன தலைவலி பல்வலின்னுகிட்டு..

    ReplyDelete
  4. ////அதிகப் பின்னூட்டம் வாங்க என்ன செய்யறது? //
    சங்கம்: பின்னூட்டத்தை மட்டும் நினைச்சு எழுதவேண்டாம்.மக்கள் படிச்சு, ரசிச்சு இங்க வந்தாவே போதும்.

    வேதாளம்: பின்னூட்டா கயமைத்தனம் போலீஸ் புடிச்சுட்டு போவனுமா?

    ReplyDelete
  5. //ப்ளாக்கர் பிரச்னை அடிக்கடி பண்ணுதே, அது எப்போ சரியாகும்? //

    சங்கம்: இந்த மாதிரி கேள்விகளுக்கு நம்ம கைவசம் ரெடிமேடா பதில் வெச்சு இருக்கோம்ல.

    வேதாளம்: அட எனக்கே பதில் தெரியாத கேள்வி, உங்களுக்கு எப்படி தெரியும், அப்படி என்னப்பா பதிலு

    சங்கம்: ஓ, அதுவா அதுக்குப் பேரு, எஸ்கேப்பு, அப்பீட்டு

    ReplyDelete
  6. ஹி,ஹி,ஹி,விவசாயி,
    வேதாளம் உங்க கிட்டே வந்துடுச்சா? அதான் பதிலே இல்லை. உங்க கிட்டேயாவது பதில் சொல்லி இருக்கே! நல்லாவே பயமுறுத்தி இருப்பீங்க போல் இருக்கு.

    ReplyDelete
  7. கீதா, பதிவு பார்த்தேன். யாருமே ஊரில இல்லியா. நம்ப முடியலியே.
    என் போஸ்ட் படிக்க ஆள் தேடணும். வ.வா.சங்கத்தலவலிக்கே இந்தப் பிரச்சினையா.

    அதென்ன அவுட்டேஜ் ஒண்ணு
    சொல்லி மூணு நாளா ப்ளாக்கர் சரியில்லை. இல்லை எனக்குத் தான் சரிபண்ணத் தெரியலையோ.

    மனசாட்சியைக் கொஞ்சம் பேசாம இருக்க சொல்லுங்க.

    ReplyDelete
  8. வேதாளத்தையே மிரட்டுற அளவுக்கு நீங்க பெரிய ஆள் ஆகி வீட்டீர்களா.
    ஹும் நடத்துங்க.

    பாத்துங்க ரொம்ப தொல்லை குடுக்காதீர்ங்க. உங்க முதுகில் வந்து ஏறிக்க போகுது.

    ReplyDelete
  9. ஆனான பட்ட வேதாளமே உங்ககிட்ட ஜகா வாங்கிருச்சுன்னா இந்த அம்பி எல்லாம் ஜுஜுபி... :-)

    ReplyDelete
  10. ஆமாம் அப்படியே வேதாளத்துடன் பேசிகிட்டே பாதாளம் வரை போய்பாத்துட்டு வந்து ஒரு பதிவு போடலாமே.
    வேதாளத்திடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நீங்கதான்.அப்போ பட்டி பக்கத்தில் இல்லையோ?

    ReplyDelete
  11. ஓ!! வாழ்த்துக்கள்!!
    ரொம்பத்தான் கலக்குறீங்க!
    அய்யோ நான் வேற ஒண்ணும் சொல்லமாட்டேன்!!லெப்ட் அண்ட் ரைட் வாங்கீடுவீங்கப் போல இருக்கு!!!

    ReplyDelete
  12. மனு, என்ன புலியைக் கூட்டிட்டு வந்து பயமுறுத்தறீங்க? :D
    அதெல்லாம் என்னோட மனசாட்சி எனக்குக் கட்டுப் படாதே? :D

    ReplyDelete
  13. வேதா, வேதா, வேணாம், வேதாளத்தையே மிரள வைத்த தலைவிகிட்டேயா மோதா? (சும்மா எதுகை, மோனைக்காக) மோதல்? :D. வயசை எல்லாம் வேதாளம் கிட்டே யாராவது கேப்பாங்களா? (உண்மையைச் சொல்லிட்டா என்ன ஆகிறது?) :D

    ReplyDelete
  14. சிவான்னா சிவா தான். காக்கையே போதும் இல்லையா? அடுத்த பரிசு என்னன்னு யோசிக்கிறேன். அது எங்கே என் முதுகிலே ஏறும்? நான் விரட்டி பயமுறுத்தி இல்ல இருக்கேன்!

    ReplyDelete
  15. ச்யாம், உங்கள் அருமை நண்பர், தங்கத் தலைவர், அசின் அம்பி கிட்டே இதைத் தெரிவிக்கவும்.

    ReplyDelete
  16. ஹி,ஹி,ஹி, சார்,
    பட்டி, விக்கிரமாதித்தன் எல்லாம் எம்மாத்திரம்? வேதாளமே பயந்து போயிடுச்சே! பாதாளத்திலே எல்லாம் போய்ப் பார்த்தாச்சு சார்.

    ReplyDelete
  17. நடேசன் சார்,
    முதல் முறை வந்ததுக்கே இப்படி நடுங்கறீங்க? இன்னும் இருக்கே, இங்கே அவங்க அவங்க மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்க, நீங்களும் துணைக்கு இருந்தா அவங்களுக்கும் தைரியம். வாங்க சார், பயப்படாம! :D

    ReplyDelete
  18. ஆனால் நீங்க இவ்வளவு பெரிய ஆள் என்றுத் தெரியாமல் போய்விட்டதே!!
    ஏதோ இப்பத்தான் புதுசா எங்க குழுவிற்கு வந்திருக்கீங்கன்னு நினைச்சேன்!!அய்யோ உடனே போய் எல்லோர் கிட்டேயும் சொல்றேன்!!
    ஆனால் எனக்கு நக்கல் நடேஷ் என்று ஒரு பட்டமும் உண்டு ஜாக்கிறதை!!கூப்பிட்டுவிட்டு பின்னால் வருத்த படாதீங்க!!

    ReplyDelete
  19. ஹி,ஹி,ஹி, நடேசன் சார்,
    எல்லாம் ஒரு அவை அடக்கம் காரணமாத்தான் அடக்கி வாசிச்சேன். நம்ம $செல்வனைக் கேளுங்க, சொல்வார்.
    வருத்தமா? அதெல்லாம் இல்லை, இங்கே பார்த்தீங்க இல்லை,எல்லாம் துண்டைக் காணோம்,துணியைக் காணோம்னு ஓடறதை, அது மாதிரி தான் இருக்கும்.

    ReplyDelete