தன்னுடைய வேலை மும்முரத்திலும், விடுமுறையிலும் கூட எனக்காகத் தனியாக வேலை செய்து, நடுவில் நான் குறுக்கிட்டதையும் பொறுத்துக் கொண்டு எனக்கு மிரட்டல் விடுத்து என்னை தொந்திரவு கொடுப்பதில் இருந்து தடுத்துத் தன் வேலையைத் திறம்படவும், வெற்றிகரமாயும் முடித்துத் தந்த திரு நாகை சிவாவிற்கு நன்றி எதுவும் கிடையாது. தமிழ் மணத்தில் போய்ப் பதிவு செய்வது வரை செய்து விட்டு வந்திருக்கிறார் மனுஷன். அவருக்குப் போய் நன்றியாவது, ஒண்ணாவது. ஒண்ணும் இல்லை. தினம் எழுதும்போது நினைத்துக் கொள்வேன், இது அவரால் வந்தது, அதான் எழுதறோம்னு. சும்மாத் தட்டச்சுப் பண்ணிட்டு நான் பேர் வாங்கறதே பெரிசுன்னா இதெல்லாம் என்ன?
எல்லாரும் எல்லாமும் வசதியாப் பண்ணிக் கொடுத்துப் பின் நான் அதிலே எழுதறதுக்குப் பாராட்டோ, பின்னூட்டமோ வாங்கறது கூடத் தப்புன்னு என் மனசாட்சி சொல்கிறது. ஆனால் ஆசை யாரை விட்டது? அது பாட்டுக்குப் பின்னூட்டம் வந்திருக்கானு எதிர்பார்க்கும். நம் எழுத்துக்கு ஒரு அங்கீகாரம், நம்ம "ego" விற்கு ஒரு திருப்தி. நல்லாத் தெரியும். இருந்தாலும் அதை நிறுத்த முடியாது. பின்னூட்டம் வரலைன்னா ஏன் வரலைனு மனசு கேட்கும். உடனே போய் ரொம்ப நெருங்கியவர்கள்னா ஏன் வரலியானு கேட்போம். உண்மையா எழுதிப் பின்னூட்டம் வாங்கறவங்களுக்கு இல்லை இது. என் மாதிரி விஷயமே இல்லாமல் எழுதறதுக்குக் கூடப் பின்னூட்டம் எதிர்பார்க்கிறது அதிகம் இல்லையா? அதுக்காக யாரும் இந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் கொடுக்காமல் இருக்க வேண்டாம். வழக்கம் போல வந்து தலையிலே அடிச்சிக்கிட்டுப் போயிடுங்க! :-)
கீதா,
ReplyDeleteபிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
இன்னும் நிறைய எழுதி மகிழ்ச்சியா இருக்கணும்.
//தலையிலே அடிச்சிக்கிட்டுப் போயிடுங்க//
ReplyDeleteஅடிச்சு கிட்டாச்சு. போதுங்களா?
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
//தலையிலே அடிச்சிக்கிட்டுப் போயிடுங்க//
ReplyDeleteஅடிச்சுக்கிட்டாச்சு. போதுங்களா?
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
இதுபோன்ற பதிவுகளுக்குப் பின்னூட்டம் எதுவும் எழுதமாட்டோம்.
ReplyDelete(நாகை சிவாவிற்கு நன்றி என்று தலைப்பிட்டுவிட்டு உள்ளே நன்றி எதுவும் சொல்லமாட்டோம் என்பதுபோல) :-)))
so sweet - it is nice to read a honest post with no hypocrisy
ReplyDeleteஎனக்கு கூட ஒரு சந்தேகம், இந்த விஷயங்கள் எல்லாம் சாம்பு மாமா சொல்ல சொல்ல நீங்க டைப் பண்றீங்களோ? கரெக்ட்டா? ;)
ReplyDeleteviyaasar solla solla pillaiyaar ezhuthara maathiri!
ரொம்ப நன்றி வள்ளி., வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும்.
ReplyDeleteஅடப் பாவமே இளா,
ReplyDeleteஇரண்டு தரம் தலையிலே அடிச்சுக்கிட்டா தலையிலே என்ன இருக்கும்? :D
ஹி,ஹி,ஹி, லதா,
ReplyDeleteசரியாப் புரிஞ்சுக்கிட்டீங்க, பின்னே பின்னூட்டம் வேணும்னா சொல்றது? :D
known stranger: Thank you for the comments.
ReplyDeleteஅம்பி,
ReplyDeleteசந்தேகம் வந்தாலும் பொருந்தற மாதிரி வரணும். சென்னை எப்போ வருவீங்க ? ஒரு நாள் பூரா இருந்து பாருங்க, தெரியும், யார் டைப் பண்ணறதுன்னு. இது உண்மையான statement என்பதால் no smiley.
கீதா, உங்கள் வலைபக்கத்திற்கு அடிக்கடி வரமுடிவதில்லை. மன்னிக்கவும். இனி வர முயற்சிக்கிறேன். எனக்கும் முன் போல் உங்கள் பதிவுகளை படிக்க முடியவில்லையே என்று ஒரு வருத்தமும் உள்ளது.
ReplyDeleteஆமா, உங்களை வயசானவர் வயசானவர்னு ஒவ்வொரு பதிவுக்கும் அம்பி கலாய்கிறாரே, என்னாச்சு.. ஒரு பொய்யை பலதடவை சொன்னால் உண்மை ஆகிவிடும்ங்கிற மாதிரி அவர் ஒரு தனி போராட்டமே நடத்திகிட்டு இருக்கார்.. நீங்களும் பதிலுக்கு ஒரு அம்பி எதிர்ப்பு படை ஆரம்பிச்சு, ஒரே நாளில் எல்லா வலைப்பூவிலும் அம்பியை எதிர்த்து ஒரு பதிவு போட்டு அசத்தலாமே..
அசின் கார்த்திக்
ஒரு மேட்டரும் இல்லைனா கூட ஏதாவது மொக்கை போட்டு ஒரு போஸ்ட் போடனும்னு எவ்வளவு ஒரு ஈடுபாடு உங்களுக்கு :-)
ReplyDeleteகார்த்திக்,
ReplyDeleteபலமுறை வேண்டுகோள் விடுத்ததும் இல்லை நீங்க வரீங்க, பார்க்கலாம். அதுதான் ஒவ்வொரு முறையும் நான் அம்பியை வன்மையாக எதிர்த்துக் கொண்டு வருகிறேனே, நீங்க படிக்கிறதில்லைனு புரியுது, இதிலிருந்தே! :D
ஹெல்லோ, ச்யாம்,
ReplyDeleteஉங்க TBI பேச்சுக்களைப் போடுங்க, அப்புறம் பார்க்கலாம், யார் நல்ல பதிவு போடறாங்க, யார் மொக்கைனு. எழுத விஷயம் இல்லைனு சொல்லுங்க ஒத்துக்கறேன். புகையாதீங்க! :D
இதுக்கு எல்லாம் ஒரு தனி பதிவு போடனுமா! என்னமோ போங்க.
ReplyDelete