எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, August 26, 2006

119. நான் பெற்ற விழுப்புண்கள்

இது நான் "ஆப்பு அம்பி"யோடயோ அல்லது "வேதாள வேதா" (நன்றி:நாகை சிவா) வோடயோ போட்ட சண்டையினால் வந்தது இல்லை. அன்றாடம் நான் செய்யும் திருவிளையாடலினால் ஏற்படும் விழுப்புண்கள். இதற்கு முழுக் காரணம் நான் தான். எப்படின்னு கேட்கறீங்களா? இறைவனுக்கு 64 திருவிளையாடல் தான் என்றால் எனக்குத் தினம் தினம் திருவிளையாடல்தான். அதுவும் சின்ன வயசிலே இருந்தே ஆரம்பிச்சது.
நான் ரொம்பச் சின்னப் பொண்ணாக இருந்தபோது ஹி,ஹி,ஹி, நிஜமான சின்னப்பொண்ணு, இப்போ இருக்கிற சின்னப்பொண்ணு இல்லை தோசைக்கல் எங்க அம்மா அப்போதான் அடுப்பில் இருந்து இறக்கி வைத்திருக்கிறார். உடனேயே நான் போய் "தோசை அம்மா தோசை" பாட்டுப் பாடிக் கொண்டே போய் உள்ளங்கையால் தடவி விட்டேன். அப்புறம் நடந்தது நான் சொல்ல வேண்டாம். அது மாதிரிதான் ஒருமுறை வெந்நீர் கொட்டி வலது கை இன்னும் நிறம் மாறித் தெரியும். இந்தத் திருவிளையாடல் அப்புறமும் தொடர்ந்தது. ஒரு முறை சின்னமனூரில் எங்க சித்தி வீட்டுக்குப் போயிருக்கும்போது (இது வேறே சித்தி, இவங்களும் என் அம்மாவின் தங்கை தான்) அங்கே சித்தி என்னை,"பாய்லரில் நெருப்புப் போட்டிருக்கிறேன், பிடித்து விட்டதா பார்" என்று சொல்ல நானும் போய்ப் பார்த்தேன். உள்ளே நெருப்பு கனிந்து கொண்டிருந்தது. சரி, என்று சற்று உள்ளே குனிந்து பார்த்தால் என்ன ஆச்சுனு தெரியலை முகமெல்லாம் ஒரே சூடு, உடனேயே உள்ளே சித்தி கிட்டே வந்து விவரம் கேட்க, சித்தி தலையில் அடித்துக் கொண்டார். "உன்னை யார் குனிந்து பார்க்கச் சொன்னது? அப்படியே குனிந்தாலும் இந்த மாதிரியா குனியறது? முன் தலை முடியெல்லாம் பொசுங்கிப் போச்சு, நல்லவேளை, ஒண்ணும் ஆகலை," என்றாள்.
அதுக்கு அப்புறம் எங்க வீட்டில் stove அடுப்புக் கூட வைத்துக் கொள்ளவில்லை. கரி அடுப்புத்தான். அதுவும் நான் வேலை செய்தால் சுற்றி ஒரு கூட்டமே கூட இருக்கும். கல்யாணம் ஆகி வந்த போது இந்த விஷயம் தெரியாத புக்ககத்தார் என்னை விறகு அடுப்பிலேயே சமைக்கச் சொல்ல, உடலில் எங்கே எங்கே சுட்டுக் கொண்டேன் என்ற கணக்கே இல்லை. அது தான் போதாது என்று காய் நறுக்குகிறேன் பேர்வழி என்று கையை வெட்டிக் கொண்டு நிற்பேன். நான் இந்த மாதிரிக் கையை வெட்டிக் கொண்டதில் என் கணவர் தன் சம்பளம் போதுமா band aid வாங்க என்று கவலைப் பட ஆரம்பித்து விட்டார்.
அப்புறம் எங்க வீட்டிலே அரிவாள்மணைக்குத் தடா, கத்தி எல்லாம் சாணை பிடிக்கிறது என்றால் என்னனு கேட்கும். அப்போ அப்போ என் கணவர் தீட்டி வைப்பார். தீட்டி வைத்த சில நாட்களுக்கு எனக்குக் காய் நறுக்கவும் தடா. ஆனாலும் அதையும் மீறி வெட்டுப் பட்டுக் கொண்டு வந்து நிற்பேன். எங்கள் வீட்டுப் பக்கம் இருக்கும் மருந்துக் கடைக்காரர் என் கணவரைப் பார்த்தாலே band aid எடுத்துக் கொடுக்கும் அளவு தேர்ந்து விட்டார்.
எல்லாத்தையும் மீறி நான் சுட்டுக் கொள்வது அளவே இல்லாமல் எப்போ எங்கே சுட்டுக் கொள்வேன் என்று எனக்கே ஒரு திகில் கலந்த ஆச்சர்யமாகி விட்டது. ஒரு நாள் கையில் என்றால் அடுத்த நாள் முகத்தில் எப்படி வந்தது என்றே தெரியாது சுட்டிருக்கும், யாராவது பார்த்துக் கேட்பார்கள். அப்படித்தான் ஒரு நாள் குக்கர் இறக்கும்போது சுட்டுக் கொண்டிருக்கிறேன், எனக்கே தெரியலை, எங்க பொண்ணு பார்த்துவிட்டு அலறினாள். அது சற்றுப் பெரிதாக இருந்ததால் உடனே ATS Injection போடணும்னு டாக்டர் கிட்டேப் போனோம். டாக்டருக்கே ஆச்சரியம். நிஜமாவே குக்கர் சுட்டதா என்று. எப்படிங்க இது? என்று ஆச்சரியத்துடன் கேட்க, நான் உடனேயே, "வேணும்னா ஒரு action replay வச்சுக்கலாமா?" என்று கேட்க டாக்டர் திகைத்துப் போய் விட்டார். நல்ல வேளை குடும்ப டாக்டர். அதனால் பதில் ஒண்ணும் சொல்லலை.

அதுதான் போச்சுன்னா இந்த சாமான் இருக்கே அதை எல்லாம் ஜாக்கிரதையாத் தான் வைப்பேன் ஆனால் பாருங்க தோசைத் திருப்பியோ அல்லது இரும்புக் கரண்டியோ மேடையில் வைக்கும்போது கரெக்டா சினிமாவில் வில்லன் வந்து அம்மன் சூலாயுதத்தில் மாட்டிக் கொள்வானே அந்தப் பொசிஷனில் இருக்கும். குத்தும். அல்லது கையில் இப்படி சமைக்கும்போது எனக்கு நடக்கும் ஆச்சர்யங்கள் இந்த உலகத்திலே யாருக்காவது நடக்குமா தெரியவில்லை. சமையல் என்னவோ அரை மணியில் ஆகி விடும். இந்த மாதிரிக் கஷ்டங்களால் நேரம் ஆகிறது. நேத்திக்கு இப்படித்தான் என் கணவர் கத்தியைத் தீட்டி வைத்ததைச் சொல்லவே இல்லை, கையில் அதுவும் வலது கையில் கீறிவிட்டது. அதோட தான் இப்போ தட்டச்சு செய்யறேன். நாட்டுக்காக எப்படி எல்லாம் உழைக்க வேண்டி இருக்கு, பாருங்க!
என்னோட தினம் தினம் விபத்துக்களால் சலிப்படைந்த என் கணவர் சொல்வது: உன் கையும், காலும் கட்டி விட்டு இனிமேல் நானே சமைக்கிறேன்.நான் பயத்துடன்: வேண்டாம், வேண்டாம், இனிமேல் ஜாக்கிரதையா இருக்கேன், நீங்க சமைச்சா யார் சாப்பிடுறது? அதுக்கு இதுவே பரவாயில்லை.
இப்போ குக்கர் எல்லாம் கிடையாது. எல்லாத்தையும் உள்ளே தூக்கிப் போட்டாச்சு. பின்னே எப்படி சாதம் வடிக்கிறேன்னு கேட்கறீங்களா? அது மட்டும் ரகசியம்.

13 comments:

 1. என்ன கொடுமை சரவணா இது! அதான்! அத தான் நாங்க எல்லாம் சொல்லறோம்! வயாசானலே இப்படி தான் மறதி வரும்! எதை எங்கே வெச்சோம்?னு தெரியாது. கையை காலை சுட்டுப்போம். ஒத்துக்குங்க இப்பயாவது! :)

  ReplyDelete
 2. ஆப்பு அம்பி, யார் அது சரவணன்? போனால் போகுதுனு எனக்கு நானே ஆப்பு வச்சுக்கிட்டா வயசு அது, இதுனு வந்து பேசறீங்க, புதுப் பதிவிலே புதுப் போஸ்ட் பார்த்தாச்சா? பின்னூட்டம் தான் பார்க்க முடியலை. மறதி இருந்தா இத்தனை போஸ்ட் ஒரு குறிப்புக் கூட இல்லாம எழுத முடியுமா? ம்ஹூம், என்னை நீங்க அசைக்க முடியாது. :D

  ReplyDelete
 3. //நாட்டுக்காக எப்படி எல்லாம் உழைக்க வேண்டி இருக்கு, பாருங்க!//

  உங்க உழைப்பை கொஞ்ச நேரத்துக்கு நிறுத்தி வைங்க தலைவலியே!

  ReplyDelete
 4. // என்ன கொடுமை சரவணா இது! //

  தாங்கள் இன்னும் சந்திரமுகி பார்க்கவில்லையா :-(((

  // இப்போ குக்கர் எல்லாம் கிடையாது. எல்லாத்தையும் உள்ளே தூக்கிப் போட்டாச்சு. பின்னே எப்படி சாதம் வடிக்கிறேன்னு கேட்கறீங்களா? அது மட்டும் ரகசியம். //

  அவரா ? oven-ஆ ?

  ReplyDelete
 5. Hi,Hi,Hi, Siva, I saw and hear your urumal and went for a while. Now it is O.K.

  ReplyDelete
 6. Veda, grrrrrrrrrrr. Now I am 16 years old and then I was a baby, you know? That is what I am telling? It is O.K. Who is that Saravanan? Thalaiyai pichchukkaRen, puriyalai! :D

  ReplyDelete
 7. கடவுளே, சந்திரமுகியா அது? நான் அந்தப் பாக்கியம்(!) எல்லாம் செய்ய வில்லை. படமா அது? ஒரிஜினலே பார்த்தாச்சு எத்தனையோ முறை! (ரஜினி ரசிகர்கள் மன்னிக்கவும்)

  ReplyDelete
 8. yeppa sami - village thinai arratai thothuchuu da sami

  ReplyDelete
 9. many a times more than the original the hybrid looks pretty.
  mami - intha kallam mariyachu

  ReplyDelete
 10. known stranger,
  grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

  ReplyDelete
 11. இந்த போஸ்டோட விமர்சனத்தை அம்பி,சிவா,வேதா தேவையான அளவு அலசிட்டதால..அடுத்த படிவுக்கு போறேன் :-)

  ReplyDelete
 12. Nice, my mom is also like you only.

  ReplyDelete
 13. ச்யாம்,
  நன்றி.
  @pavan's pictures,
  இது என்ன உங்க குழந்தை படமா? குழந்தை அவங்க அம்மா மாதிரி இருக்கான் போல் இருக்கே? :D

  ReplyDelete