எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, August 18, 2006

111. அசராமல் போட்ட பதிவு.

9-ம் தேதி ஊரில் இருந்து வந்ததும் வராததுமா VSNL கிட்டே இருந்து தொலைபேசி அழைப்பு. நிரந்தரமாய் வேலை முடிந்திருக்கிறதாயும் இனிமேல் தடை இல்லா சேவை என்றும் சொன்னார்கள். ஆஹா, ஊருக்குப் போய்விட்டு வந்ததுக்கு உடனேயே பலன், அதுவும் வேதாளம் நேரில் செய்ய முடியாது என்று சொல்லி இருந்தாலும் வேலையை முடித்துக் கொடுத்திருக்கிறதே என்று சந்தோஷப்பட்டேன்.

சந்தோஷம் ஒரு 4 நாள் கூட நீடிக்கவில்லை. அடிக்கடி இணைப்புப் போய்விட்டுப் போய்விட்டு வர ஆரம்பித்தது. ஆனால் உடனே வந்து விடும். சரி நாம் ஏதோ தப்புப் பண்ணி இருப்போம் என நினைத்தால், எக்ஸ்ப்ளோரர் தகராறு. This programme is not responding. Send error report. என்று செய்தி வர ஆரம்பித்தது. சரி, என்று அதையும் பண்ணி விட்டு மறுபடி இணைப்பு வாங்கி மீண்டும் உலாவப் போனால் 2 ஜன்னல் திறந்ததுமே நகரவே மாட்டேன் என அடம். அன்னிக்கு இப்படித்தான் மனுவின் "நாச்சியார்" வலைப்பக்கம் பார்க்கும்போது பெருச்சாளிக்குட்டியால் எத்தனை முறை scroll செய்தாலும் நகரவே இல்லை. அப்புறம் கணினியை மூடுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இப்படியே தொந்திரவு ஜாஸ்தியாப் போய் முந்தா நாளில் இருந்து இணைப்புப் போய்விட்டது.

பார்த்தால் வேதா "வேதாளத்தை" இங்கே அனுப்பி இருக்கிறார். அது என்னிடம் பயந்து கொண்டு சத்தம் போடாமல் இணைப்பைத் துண்டித்து விட்டுப்போயே போய் விட்டது. அப்புறம் தொலைபேசி மூலம் Tata Indicon Broadband service centre-ஐக் கூப்பிட்டுக் கத்தினால், அவங்க அசைந்தே கொடுக்கவில்லை. O.K. Madam, Sorry Madam, Sorry for the inconvenience Madam இதுக்கு மேலே அவங்களுக்குப் பேசவே தெரியலை. புகாருக்கான நம்பரைத் தந்தாங்க. என் அண்ணன் வீட்டுக்குப் போயிட்டேன் அங்கே போய் இணைப்பைப் பார்க்கலாம்னு.

போன உடனே ஃபோன், இவர்தான். VSNL ஆளுங்க வந்திருக்காங்கனு. பாதிலே எப்படி வரமுடியும்? நீங்களே பார்த்துக்குங்க, வரேன்னு சொல்லிட்டு வீட்டுக்கு வந்தப்புறம் இணைப்பு வந்திருந்தது. சரினு அம்பியோட பதிவைப் போய் ஏதாவது "ஆப்பு" "ஆப்பு" ங்கிறாரே அதுக்கு அர்த்தம் தெரியுமானு கேட்டுட்டு வரலாம்னு போனேனா? மனுஷன், ஒரு நல்லபொண்ணு வேதாவைத் தூண்டி விட்டிருக்கிறார் எனக்கு எதிரா1 :D "பொறுத்தது போதும், பொங்கி எழு" னு என் மனசாட்சியே என்னைத் தூண்ட அங்கிருந்து வேதாவின் பதிவுக்குப் போனால் தான் விஷயம் வருது மெள்ள. வேதா "வேதாளத்தை" அனுப்பியது எல்லாம்.

உடனேயே என் பதிவுக்கு வந்து ஒரு பதில் கொடுத்தேனே இல்லையோ, கணினி நகரவே இல்லை, மறுபடி இணைப்புப் போயிடுச்சு. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைன்னு மூடி வச்சுட்டு உட்கார்ந்தேன். இன்னிக்குத்தான் ஒரு நல்ல வேதாளம் மூலம் என் இணைப்பு மறுபடி வந்துட்டது. (எத்தனை நாளுக்குனு தெரியலை). இப்போ ஓடுது, பார்க்கலாம். ஆப்பு அம்பி, பார்த்தீங்களா? யார் என்ன செஞ்சாலும் அசராமல் பதிவு போடுவேன். உங்களை எல்லாம் விடறதா இல்லை.:D

24 comments:

 1. போடுங்க போடுங்க அசராம பதிவைப் போடுங்க. பாவம் உங்களால ஓடி ஆடி வேலை தான் செய்ய முடியாது, ஏதோ உட்கார்ந்துண்டே இந்த வேலையாவது செய்யுங்க:) நாங்களும் வந்து வந்து படிச்சு பார்த்துட்டு போறோம். பின்ன உங்க வயசுக்கு இந்த மரியாதை கூட செய்யலேன்னா எப்படி? வேதாளம் கூட அது தான் செஞ்சது:) ஏதோ என்னை நல்ல பொண்ணுன்னு நீங்களே ஒத்துக்கட்டதனால இதோட விடறேன். உடனே வேதா ஜகா வாங்கிட்டான்னு ஒரு அவசர பதிவு போட்றாதீங்க:) ஊரே கை கொட்டி சிரிக்கும்:)

  ReplyDelete
 2. வேதா, தெரியாம சொல்லிட்டேன் நல்ல பொண்ணுனு, வாபஸ் வாங்கிட்டேன், என்னைப் பார்த்தா ஆடி ஓட முடியாதுங்கறீங்க? நான் அசராமல் பத்து நாள் சுத்திட்டு வந்ததுக்கு அப்புறமுமா? அம்பி பேச்சைக் கேட்கவே கேட்காதீங்க :D

  ReplyDelete
 3. ஹி, ஹி, நல்லா வேணும்!
  வேதாவை உங்க கட்சிக்கு நீங்க இழுத்து கிட்டாலும் உங்க வயசு பத்தின விஷயத்தை அவள் ஒத்துக்கவே மாட்டா! so try out some ather trick. :)

  ReplyDelete
 4. Tata indicom...மகா மோசமான சர்வீஸ்.
  வலைபூவை பார்க்கமுடியவில்லை,தமிழ்மனம் போகமுடியவில்லை.
  ஏண்டா போட்டோம் என்று இருக்கிறது.
  இப்பொதைக்கு ஏர்டெல் பரவாயில்லை போல் உள்ளது.

  ReplyDelete
 5. நீங்க என்னைக்கு தான் அசந்து இருக்கீங்க பதிவு போட இன்னிக்கு அசர. இத படிக்குற நாங்க நித்தமும் அசந்து போகின்றோம்

  ReplyDelete
 6. ஆப்பு அம்பி,
  தி.ரா.ச. சாரும் என் கட்சிக்கு வந்துட்டார், அப்புறமும் என்ன தெனாவட்டு? பேசாமல் உங்க தோல்வியை ஒத்துக்குங்க!
  வயசு என்ன வயசு? வேதா அதெல்லாம் கண்டுக்கவே மாட்டாங்க! இளமை இதோ இதோ, புதுமை இதோ இதோனு பாட்டுப் பாடச் சொல்றாங்க!

  ReplyDelete
 7. வாங்க வடுவூர் குமார்,
  முன்னாலே வந்திருக்கீங்கனு நினைக்கிறேன், என்னோட வலைப்பக்கம் காணாமப் போன அன்னிக்கு, அப்புறம் வரவே இல்லை. ரொம்ப நன்றி வந்ததுக்கு. ஆனால் சேவை என்றால் உடனே வந்து சரி செய்து தருகிறார்கள் Tata Indicom-ல். நான் எவ்வளவு சத்தம் போட்டாலும் பொறுமையாகப் பதில் சொல்கிறார்கள். 2 மணி நேரத்துக்குள் வந்து attend செய்தாலும் மறுபடி ஒரு மாசத்துக்கெல்லாம் போயிடுது. என் அண்ணன் வீட்டில் BSNL அங்கே நினைத்தபோது இணையம் வரும், வராமலும் போகும். யாரும் வந்து பார்ப்பதும் இல்லை.

  ReplyDelete
 8. ஹி,ஹி,ஹி,ஹி, சிவா,
  ரொம்ப நன்றி பாராட்டுக்கும், நான் சின்னப் பொண்ணுனு ஒத்துண்டதுக்கும். அம்பிகிட்டே போய் மறக்காமல் சொல்லிடுங்க. உங்க பதவி உங்க கிட்டேயே இருக்கும்படிப் பார்த்துக்கிறேன். :D

  ReplyDelete
 9. //இத படிக்குற நாங்க நித்தமும் அசந்து போகின்றோம் //

  சரியா சொன்ன பங்காளி...எப்பிடித்தேன் தினமும் ஒரு பதிவு சளைக்காம போடுராங்களோ...சின்ன வயசா இருகறதுனாலதேன் முடியுது...

  (யக்கோவ் பதவி உயர்வு ஏதும் உண்டா) :-)

  ReplyDelete
 10. அம்பி கதி அதோகதி.ஆனா ஆடிகாத்துலே அம்மியே(அம்பியே)பறக்கும்போது இலவம் பஞ்சு மதிரி நல்ல மனசுடைய அவர்....... கதி நினைச்சாலே ......பயமா இருக்கு வேதா

  ReplyDelete
 11. அம்பி சொன்ன மாதிரி எதுல வேணாலும் உங்களோட சமரசம் பண்ணிப்பேன், ஆனா சின்ன பொண்ணு காமெடி ஒன்னு பண்றீங்க பாருங்க அத மட்டும் நம்மளால தாங்க முடியாது:) யார் கட்சி மாறினாலும் நாங்க எல்லாம் தனித்து நின்னு கெலிப்போமுல்ல:)

  ReplyDelete
 12. ஹி,ஹி,ஹி, ச்யாம், ஏற்கெனவே உங்களுக்குக் கல்யாணம் ஆகிக் குழந்தை இருக்கு, இல்லைன்னா கல்யாணம் கழகத்தோட செலவிலே நடத்தலாம். இப்போ ஒண்ணும் கெட்டுப் போகலை, மறுபடி உங்க குழந்தைக்கு ஒரு பேர் வச்சாப் போச்சு! :D
  இதைவிடப் பதவி உயர்வு ஒரு பெரிசா?

  ReplyDelete
 13. @தி.ரா.ச,
  ஏன் சார், நீங்க இங்க வந்து கீதாவுக்கு வக்காலத்து வாங்கினாலும், நீங்க எங்கெல்லாம் அவங்க காலை வாருகிற பின்னூட்டம் போட்டுள்ளீர்கள் என்று எனக்கும் தெரியும்:)) அம்பி உனக்கு தெரியுமா?:)

  ReplyDelete
 14. தி.ரா.ச. சார், ரொம்ப நன்றி ஒத்து ஊதறதுக்கு.

  @அம்பி, ஆப்பு அம்பி, உங்க வேலை அதுவும் நாரதர் வேலை இங்கே நடக்காது.

  ReplyDelete
 15. நற நற நற நற நற

  வேதா, அம்பியோட சந்தர்ப்பவாதக் கூட்டணியை மறந்துடுங்க. பாருங்க ஒருத்தர் ஒருத்தரா என் கட்சிக்கு வராங்க!

  ReplyDelete
 16. வேதா,
  அம்பியோட சேர்ந்து நீங்களும் நாரதி ஆகிறதுக்கு எனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லை. உங்க மூஞ்சிலே வழியற அசடைத் துடைச்சிட்டுப் போங்க, அம்பியோட ஒத்து ஊதறதுக்கு. ஏற்கெனவே வழியற அசடாலே அம்பி தவிக்கிறார், எங்கே திருப்பி விடறதுனு, நீங்க மாட்டினீங்க! :D

  ReplyDelete
 17. வேதா நான் பாட்டுக்கு (பாபனாசம்) சிவனேன்னு இருக்கேன் என்னை வம்பிலெ மட்டிவிடாதே.கீதா பொண்ணு எவ்வளவு அழகா காவேரியோடு ஐக்கியமாகி அப்படியே நைஸா கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு கூட்டிண்டு வந்துட்டா அதுவும் பாட்டுவேறு "பச்சை நிறமே பச்சை நிறமே".என்ன ஒரு நல்ல பதிவு. இந்த அம்பிமேட்டர்லே என்னை போட்டுகுடுத்துட்டே.இனிமே வா உன் பதிவிலே வந்து கவனிக்கறேன்.

  ReplyDelete
 18. யாரு நான் நாரதியா? என்னமோ போங்க நானாவது நேர்மையா இருக்கேன். சில பேர் மாதிரி இங்க ஒரு மாதிரியும், மத்த இடத்துல வேற மாதிரியும் பேசற்தில்ல:) பாவம் நீங்க தான் ஏமாற போறீங்க:) வயசான காலத்துல இதெல்லாம் தேவையா?

  ReplyDelete
 19. ஹி,ஹி,ஹி,ஹி, சார், கட்சி மாறினதிலே ரொம்ப சந்தோஷம். @ஆப்பு அம்பி,& நாரதி வேதா, என் திறமை இப்போ தெரியுதா?உங்களாலே ஒண்ணும் பண்ண முடியாது! ட்ட்ட்ட்ட்ட்ட்டட்டடடடங்க்க்க்க்க்க்க்க்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் (ம்யூசிக் போட்டிருக்கேன் கொண்டாட)

  ReplyDelete
 20. வேதா,
  ரொம்பத்தான் அவையடக்கத்துடன் உங்களை நேர்மைனு சொல்லி இருக்கீங்க! நீங்க என்னைப் பத்திப் பதிவு போட்ட உடனே எனக்கு மெயில் கொடுத்து பார்க்கச் சொன்னது யாருனு நினைக்கறீங்க? உங்க ஆப்பு அம்பிதான் அவர் தான் உங்ககிட்டே ஒரு மாதிரியும், என் கிட்டே வேறு மாதிரியும் சொல்றார். சும்மாச் சும்மா வயசாயிடுச்சுனு சொல்லாதீங்க, நான் சின்னப் பொண்ணுனு ஒத்துக்குங்க1 :D

  ReplyDelete
 21. ஹலோ மேடம் ரொம்ப தான் புத்திசாலின்னு நினைப்பு உங்களுக்கு:) அம்பி உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவார்னு எனக்கும் தெரியும்:) நான் பதிவு போட்டவுடனே வந்து நீங்க பதில் சொல்லும் போதே நான் கண்டுபுடிச்சிட்டேன்:) இதெல்லாம் ஜகஜம்:)
  ஒத்துக்க மாட்டேன் ஒத்துக்க மாட்டேன்:)

  ReplyDelete
 22. நான் ஒண்ணும் என்னைப் புத்திசாலின்னு சொல்லவே இல்லையே! அதான் வலை உலகமே சொல்லுதே! ஹி,ஹி,ஹி,ஹி, இது எப்படி இருக்கு?

  ReplyDelete
 23. சகிக்கலை:)

  ReplyDelete
 24. வேதா, ரொம்ப டாங்ஸு, ஹி,ஹி,ஹி, எரியுது போலிருக்கே! :D

  ReplyDelete