எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, August 20, 2006

114. 30. மடத்துத் தெரு, கும்பகோணம்

இந்த முறை ஊருக்குப் போன போது மனதைப் பாதித்த பல விஷயங்கள் இருந்தன. இந்த 30, மடத்துத் தெரு, கும்பகோணம் என்ற விலாசம் "தேவன்" கதைகளைப் படித்தவர்களுக்குப் புரியும். இது "துப்பறியும் சாம்பு" வின் மனைவி "வேம்பு"வின் வீடு இருந்ததாகக் கதையில் குறிப்பிடுவார் திரு தேவன் அவர்கள். இந்த விலாசம் எங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்த ஒன்று. தமிழே தெரியாத என் பெண்ணுக்கும், பையனுக்கும் தமிழ்க்கதைகள் அறிமுகமானது நான் அவர்களுக்குத் தேவன் அவர்களின் கதைகளைப் படித்துச் சொன்னதில் தான். உயிரோட்டத்துடன் இருக்கும் அவர் கதைகளில் என் குழந்தைகளுக்குப் பிடித்தது "துப்பறியும் சாம்பு"வும் "கல்யாணியும்" தான். அதிலே கல்யாணியின் காதலன் சுந்தரம் போலீஸில் மாட்டிக் கொண்டு முழிக்கும் இடம் எத்தனை முறை படித்தாலும் அவர்களுக்கு அலுக்காது. அதே போல் அக்கா, தம்பி இருவருக்கும் உலகச்சண்டை முற்றும் போல் இருந்தால் நான் கையில் எடுக்கும் ஆயுதமும் இதுதான். "சாம்பு படிக்கப் போறேன். யார் வராங்க?" என்பேன். ஹிஹிஹி, என் மாமனாரில் இருந்து வந்து விடுவார்கள் கதை கேட்க. அதிலே அடிக்கடி சாம்பு சொல்லும் கும்பகோணம் பற்றிய விவரங்களிலே ஒரு முறை மாதுளம்பழக் கூடையைத் தன் மனைவியின் விலாசம் சொல்லி சாம்பு அனுப்பச் சொல்லுவான். அப்போ எல்லாம் அது ஏதோ கற்பனை என்று நினைத்திருந்த என் குழந்தைகள் இரண்டு பேரும் அவங்க அப்பாவும், தாத்தாவும், அப்படி ஒரு விலாசம் உண்மையிலே உண்டு என்று சொன்னதும், சாம்பு வீட்டைப் பார்க்கணும்னு ரொம்ப ஆசைப் பட்டார்கள்.

தற்செயலாக என் கணவரின் அத்தை அந்த வீட்டிற்குக் குடித்தனம் வர, விடுமுறைக்குக் குழந்தைகளுடன் குஜராத்தில் இருந்து வந்திருந்த நான் அவர்களை அழைத்துக் கொண்டு அந்த வீட்டிற்குக் கூட்டிச் சென்றேன். இருவருக்கும் சாம்புவை நேரில் பார்த்த சந்தோஷம். இத்தனைக்கும் கதை சொல்லிக் கேட்டதுதான். ஒவ்வொரு இடமாகப் போய்ப் பார்த்து, இந்த இடத்தில் சாம்பு இது பேசி இருப்பான், இந்த இடத்தில் தான், "அடி, வேம்பு," என்று கூப்பிட்டிருப்பான், இந்த இடத்தில் தான் தன் பையனைக் கண்டித்துக் கிளியைக் கையில் வாங்கி இருப்பான் என்று ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்தார்கள். சாம்புவிற்குக் கெளரவம் கொடுத்த கும்பகோணம் டவுன்ஹாலுக்கும் போக ஆசைப் பட்டார்கள். போக நேரம் இல்லாமல் போய் விட்டது. இவரோட அத்தை, அத்தை பையன், அவங்களோட பொண்ணு எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம். இவங்க இரண்டு பேரோட ஈடுபாட்டைப் பார்த்துட்டு. அதுக்கப்புறம் அவங்க பேச்சிலே எல்லாம் இந்த வீடு பற்றி வரும். அதுக்கு அப்புறம் என் கணவரோட அத்தை டபீர் தெருவிற்குப் போய் விட்டார்கள். இருந்தாலும் மடத்துத் தெரு வீட்டை மறக்க முடியவில்லை. என் பையன் போன முறை வந்த போது சாம்பு வீட்டைக் காட்டணும் என்று நினைத்தேன். ஆனால் கும்பகோணத்தில் தங்க வில்லை. இப்போது வந்தால் காட்ட முடியாது. வீடு முற்றிலும் இடித்து விட்டார்கள். சாம்பு வீடு ஒரு கனவாகி போய் விட்டது.

19 comments:

 1. காஞ்சி ஸ்ரீமடத்துக்கு எதிரே சற்றுத் தெற்கே இருக்கிறது, மேற்குறிப்பிட்ட விலாசம். தற்சமயம் இடித்து விட்டார்கள், தெருவும், பரபரப்பான கடைத்தெருவாகி விட்டது.
  முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 2. ம்ம்ம்ம்ம்ம்ம், எல்லாரும்மும் ஊர் நினைவு வந்துட்டதற்கு நான் காரணம் ஆகி இருக்கிறேன். ஊர்ப் பக்கம் வந்து பார்த்துட்டுப் போங்களேன்.

  ReplyDelete
 3. திருவலஞ்சுழியில் வலம் சுழித்துச் சென்ற காவேரி ஆதி சேஷனால் ஏற்பட்ட பிலத்துவாரத்தில் புகுந்து மறைய ஹேரண்ட முனிவரின் தியாகத்தினால் வெளியே மேலே வந்த இடம் தான் "மேலக்காவேரி" என்ற பெயர் பெற்றிருக்கிறது. அந்தப் பதிவிலே இதை எழுத மறந்திருக்கிறேன். இப்போது மேலக்காவேரி என்ற பெயரைப் பார்த்ததும் நினைவு வருகிறது.

  ReplyDelete
 4. கும்பகோணத்தில் இருக்கும்போது மடத்து தெருவழியாக காவேரிக்கு சென்றுவிட்டு என் நண்பன் திரு. நாராயணனுடனும்,அவன் தம்பி கல்யாண சுந்தரத்துடனும் (ஆடிட்டர்) அரட்டை அடித்த நாட்கள் நினைவுக்கு வருகிறது.அப்புறம் வரும் வழியில் வெங்கட்டா லாட்ஜில் பொங்கலும் கொத்சுவும்,காபியும் சாபிட்டது நினைவுக்கு வருகிறது. மறைந்த எனது அத்யந்த நண்பர் லக்ஷிமி விலாஸ் பசும்பால் காபி ஹோட்டல் ஓனர் ராமமூர்த்தியின் அன்பும் உபசாரமும் நெஞ்சிலேயே நிலைத்து நிற்கிறது.
  வயது 60 தை நெருங்கினாலே ஞாபகசக்தி குறையும். இது எல்லாம் சகஜம்.அதனாலே 3 பதிவுக்கு அப்பறம் நீங்கள் அதுக்கு கொசுறு போட்டு வயசானதை உறுதி பண்ணிக்கனமா.?
  அப்பறம் இந்த பதிவிலே அடிக்கடி ஒருமையில் சாம்பு சாம்பு என்று வருகிறதே அது துப்பறியும் சாம்புவைத்தானே. ...சந்தேகம்தான் தப்பாக நினைக்காதீர்கள்

  ReplyDelete
 5. என் பழைய நினைவுகளையும் கிளறிவிட்டீர்கள்.
  என் மாமா (திரு. நாராயணசுவாமி அய்யர்) (என் தாயின் ஒரே சகோதரன்) கும்பகோணம் மடத்துத் தெருவில் தான் வசித்தார். அவர் காஞ்சி மடத்தில் ஒரு எழுத்தராகப் பணியாற்றினார்...

  அவர் வீட்டுக்குச் சில முறை போயிருக்கிறேன்..

  நன்றி...
  அன்புடன்,
  சீமாச்சு..

  ReplyDelete
 6. varikku naalu thadavai saambu! saambu! nu naisaa enga saambu maama perai sonna mookai pathivu geetha mademai naan vanmaiyaaga kandikiren! :)

  veda, jothiyila aikiyaamaagikoo!

  ReplyDelete
 7. தி.ரா.ச. சார், Grrrrrrrrrrrrrrrrrrrrrrrr. எல்லாத்துக்கும் இது தான் பதில். இப்படி சேம் சைட் கோல் போலறீங்களே? :D

  ReplyDelete
 8. ஹி,ஹி,ஹி, சீமாச்சு, சின்னப் பசங்களுக்கே இப்படித்தான் ஞாபகசக்தி நிறைய இருக்கும், என்னை மாதிரி, ரொம்ப நன்றி, வந்ததுக்கும், பின்னூட்டம் விட்டதற்கும்.

  ReplyDelete
 9. ஆப்பு அம்பி எம்.எஸ்.
  நான் அப்படித்தான் சொல்லுவேன். இதுதான் இப்போ சின்னப் பொண்ணுங்களோட ஸ்டைல். நான் சின்னப் பொண்ணு, அதான் சொல்றேன். ம்ஹும், இது தெரியலியே!

  ReplyDelete
 10. ஹயாத்,
  வெளிநாட்டில் இருப்பவங்களுக்குத் தான் தாய் நாட்டின் அருமை அதுவும் பிறந்த ஊர் நினைவு அதிகம் இருக்கும். என்ன செய்யறது? வயித்துப் பிழைப்பு, வேறே தேசம் போக வேண்டி இருக்கு.

  ReplyDelete
 11. //வயது 60 தை நெருங்கினாலே ஞாபகசக்தி குறையும். இது எல்லாம் சகஜம்.அதனாலே 3 பதிவுக்கு அப்பறம் நீங்கள் அதுக்கு கொசுறு போட்டு வயசானதை உறுதி பண்ணிக்கனமா.?
  //
  he hee, 60 vathaa? korachu solliteenga sir, mademku 70 and above. :D
  //அப்பறம் இந்த பதிவிலே அடிக்கடி ஒருமையில் சாம்பு சாம்பு என்று வருகிறதே அது துப்பறியும் சாம்புவைத்தானே. ...சந்தேகம்தான்//
  Great men think alike. same doubt thaan enakkum!

  ReplyDelete
 12. ஆப்பு அம்பி,
  தி.ரா.ச. தன்னைப் பத்தித் தானே சுய விமரிசனம் (வயசு 60னு) கொடுத்திருக்கிறார். இது புரியாமல் என்னதான் படிக்கிறீங்களோ? என்னை மாதிரி புத்திசாலியாகவும், ஞாபகசக்தியுடனும் இருக்கிறது கஷ்டம் தெரியுமா? நான் என்ன குறிப்பு வைத்துக் கொண்டா எழுதறேன்? தமிழ்ப் பிரவாகம் எடுத்து ஓடுது பாருங்க, உங்களால் முடியுமா? Great men think alike? அவர் சொல்றதைப் பார்த்து நீங்களும் சொல்லிட்டு இது வேறே!

  ReplyDelete
 13. வேதா,grrrrrrrrrrrrrrrrrr இன்னும் 40 வருஷம்லாம் ஆகலை அதுக்கு எவ்வளவோ வருஷம் பாக்கி இருக்கு. இப்போ சின்னப் பொண்ணுங்க கல்யாணம் ஆனதும் கணவனைப் பேர் சொல்லித் தான் கூப்பிடறாங்க, அது கூடத் தெரியாம இருக்கீங்க, அதான் நானும் சொன்னேன். என்ன உங்களுக்கு ஒரு 52 வயசு ஆச்சா? :D

  ReplyDelete
 14. அதெல்லாம் சும்மா, ப்ரொஃபைல்ல போடறது எல்லாம் நிஜ வயசா என்ன? :D

  ReplyDelete
 15. நாங்க என்ன கூரைமேலெ ஏறிண்டு நாந்தான் சின்னபொண்ணுனு கூவரமான்னாஅதுவும் பேத்தி கல்யாணத்துக்கு போய்ட்டு. ப்லொக்லெ 60 கலயாணம் பண்ணின்ட ஓரே நாள் நாந்தான்.வேதா, அம்பி நல்ல சான்சு விடாதீங்கோ.

  ReplyDelete
 16. வேதா, நேத்து உங்க பிறந்த நாளா?முன்னாலேயே ஏன் சொல்லலை? எத்தனாவது பிறந்த நாள்? ஒரு 60 இருக்குமா? :D

  ReplyDelete
 17. கடவுளே, தி.ரா.ச. சார்,
  எந்தப்பேத்தி கல்யாணத்துக்கு எப்போப் போனேன்? ஓ, உங்க பேத்தி கல்யாணத்துக்கு வந்ததைச் சொல்றீங்களா?
  உங்களுக்கு முன்னாலேயே டோண்டு சார் 60-ம் கல்யாணம் பண்ணிண்டாச்சு!
  திடீர்னு கட்சி மாறி வேதா, அம்பியை வேறே துணைக்கா?
  @வேதா, நேத்திக்கு மெயிலில் அம்பி பத்தி சொன்ன விஷயம் லீக் ஆயிடும், ஜாக்கிரதை! :D
  @அம்பி, ஏற்கெனவே நேரம் சரியில்லை, பார்த்து. :D

  ReplyDelete
 18. ஹி,ஹி,ஹி, வேதா,
  இந்தக் கஷ்டம் எல்லாம் வேணாம்னுதான் நான் ப்ரொஃபைலில் வயசே குறிப்பிடலை. இது எப்படி இருக்கு? :D

  ReplyDelete