எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, August 26, 2006

120. எனக்கு நானே வைத்த ஆப்பு!

போன போஸ்ட் எழுதினதிலே இருந்து மனசே சரியில்லை. வழக்கமா அம்பிக்கு அல்லது வேதாவுக்கு ஆப்பு வைப்போம். இந்த முறை மாறி "நமக்கு நாமே" திட்டம் படி ஆப்பையுமா நமக்கு நாமே வச்சுக்கறது எடுத்துடலாம் போஸ்ட்டையேனு திரும்ப வந்தேன். அதுக்குள்ளே இந்த அம்பிக்கு ஒரே அவசரம். கமெண்ட் கொடுத்தாச்சு, என்னனு பார்க்க எனக்கு ஒரே அவசரம், பப்ளிஷ் பண்ணிப் பதிலும் கொடுத்தாச்சு, இருந்தாலும் எடுத்தால் தான் நிம்மதி, திரும்ப அம்பிக்கே ஆப்பு வச்சு எழுதினாத் தான் சாப்பாடு ஜீரணம் ஆகும் போல் இருந்தது. அம்பி வேறே மெயிலில் என்னைத் தானே வாரப் போறீங்க வழக்கம் போல எனக் கேட்டிருந்தாரா? அவரோட ஆசையையும் நிறைவேத்தணும் இல்லையா? இப்போ பாருங்க சரளமா எழுத வருது, போன பதிவு எழுதவே முடியலை.
சரினு திரும்பப் போஸ்ட்டை எடிட்டுக் கொண்டு வந்தா ஒரே டான்ஸ் ஆட ஆரம்பிச்சது. இது என்ன இது எல்லாம் கூட ப்ளாக்கில் நடக்குமா என்ற ஆச்சரியத்துடன் எதையோ க்ளிக் செய்தேன். பக்கமே போய் விட்டது. திரும்பக் கொண்டு வரலாமா வேண்டாமா என நினைப்பதற்குள் மூளையில் ஒரு "பளிச்". உடனே போனேன் ஜி-மெயிலுக்கு. அங்கே போனால் சூடானில் இருந்து புலி உறுமிக் கொண்டிருந்தது. கையைக் காலை வச்சுக் கொண்டு பேசாமல் இருக்கீங்களா இல்லையா? என்று ஒரே உறுமல். நிஜமாவே பயமாப் போச்சு. அப்புறம் புலியைக் கூப்பிட்டு சமாதானப் படுத்தி (என்ன வழக்கம் போல லாலிபாப் இல்லை, சிறப்புப் பரிசாகக் கடலை மிட்டாய்ப் பாக்கெட்) வாங்கிக் கொடுத்து விட்டு, நான் நிஜமாவே ஜகா வாங்கினேன். அப்புறம் இப்போ வந்து பார்த்தால் என்னோட ப்ளாக் என்று என்னால் நம்பவே முடியலை. தவிர, மேலும் சில பின்னூட்டங்களும் வந்துட்டது. காணாமல் போன பதிவும் சமர்த்தாக உட்கார்ந்திருந்தது. சரி, இது இப்படியே இருக்கட்டும்னு விட்டுட்டேன். ஆனாலும் அம்பி, வேதா இவங்களை ஒரு வழி பண்ணலைன்னா நமக்குத் தூக்கம் ஏது? அதுவும் இந்த வேதாவை நான் உ.பி.ச.வா அங்கீகரித்திருக்கிறேன். அப்பக்கூட அவங்க அம்பி கூட சேர்ந்துக்கிட்டு "சரவணா,ன்னா என்னனு தெரியலை, உங்களுக்கு வயசு ஆயிடுச்சு" னு கேலி செய்யறாங்க. நான் பாட்டுக்கு சமத்தா என் ப்ளாக் உண்டு, நான் உண்டுனு இருக்கிறப்போ எங்கேங்க சினிமா அதுவும் ரஜினி படம் பார்க்கிறது. நல்லவேளை ரொம்ப நாள் கழித்து வந்தாலும் இந்த லதா புண்ணியம் கட்டிக் கொண்டார். ரொம்ப தாங்ஸ் லதா. நாளை அம்பியையும், வேதாவையும் ஒரு வழி பண்ணிடறேன். ம்ம்ம்ம், நாளை பார்க்கலாம்.

**********************
முந்தாநாள் இந்த மாதிரித் தான் ஒரு பதிவை மீள்பதிவாக முத்தமிழ்க்குழுமத்தில் போட முயற்சி செய்யும் போது என்ன செய்தேன்னு தெரியலை. Bold வர வேண்டிய இடத்தில் கரெக்டா வருது. font எப்படி மாறிச்சுனு தெரியலை, இந்த மாதிரி எப்படி வந்ததுனு திருப்பிப் பார்த்தால் எப்படின்னும் புரியலை.
இப்போவே பாருங்க, சிவா இல்லாட்டி இந்த மாதிரி வந்திருக்காது. மறுபடி எல்லாப் பதிவும் காணாமல் போயிருக்கும். எல்லாம் அந்த வேதாளம் செய்யற வேலை. ஆனால் மற்ற யார் செய்தாலும் அவங்களுக்குச் சரியா வருது. எனக்கு மட்டும் தான் வேதாளம் வந்துடுது. ம்ம்ம்ம், சிவா, எனக்குச் சொல்லிக் கொடுக்கிறதை விடத் தானே செய்யறது சுலபம்னு கண்டு பிடிச்சுட்டார். எப்படியோ இனிமேல் ஆன்மீகப் பதிவுகள் தனியாகவும், ஆப்புப் பதிவுகள் இந்தப் பக்கத்திலேயும் வரும். சிவாவுக்கு நன்றி.

18 comments:

  1. காயத்ரி மந்திரம் சொல்லுங்க எல்லாம் சரியா போயிடும்.

    ReplyDelete
  2. உங்களுக்கு பஞ்சாயத்து பண்ண சங்கத்திலருந்து யாரும் வர மாட்டார்கள் என்பதை சங்கத்தின் சார்பில் அறிக்கை ஒன்றை ஏற்கனவே வெளியிட்டதாக செய்தி.

    ஆகவே உங்களுக்கு வயதான விஷயத்தை மேலும் மேலும் கிளறி மேலும் மேலும் நாலு பேர் தெரிந்து கொள்ள வகை செய்ய வெண்டாம் என்று..........


    அன்புடன்
    தம்பி

    ReplyDelete
  3. எனக்கு நானே வைத்த ஆப்பு!"

    ஆப்பு எங்கே ??

    பிளாக்கர் பிரச்சனையை ஆப்புனு சொன்னா எப்படி??

    இதையே பிளாக் உலகம் சொந்த செலவில் சூனியம் அப்பிடினு சொல்லும்.::)

    ReplyDelete
  4. // இந்த மாதிரி எப்படி வந்ததுனு திருப்பிப் பார்த்தால் எப்படின்னும் புரியலை.
    இப்போவே பாருங்க, சிவா இல்லாட்டி இந்த மாதிரி வந்திருக்காது. மறுபடி எல்லாப் பதிவும் காணாமல் போயிருக்கும். எல்லாம் அந்த வேதாளம் செய்யற வேலை. ஆனால் மற்ற யார் செய்தாலும் அவங்களுக்குச் சரியா வருது. எனக்கு மட்டும் தான் வேதாளம் வந்துடுது //

    வேதாளம் சொன்னது - நீங்க உங்க சரியான வயதைச் சொன்னால்தான் (16 அல்ல) இனிமேல் உங்கள் பதிவுகள் சரியாக வரும். :-)))

    ReplyDelete
  5. மஞ்சூர் ராஜா,
    நீங்க ஒருத்தர் தான் சரியான பதிலைக் கொடுத்து என்னைத் திருப்திப் படுத்தி இருக்கீங்க, மத்தவங்க பாருங்க, இவங்க எப்போ மாட்டிப்பாங்கனு காத்திட்டிருக்கிறதை!

    ReplyDelete
  6. தம்பி,
    எனக்குப் பஞ்சாயத்தா? சரியாப் போச்சு! நானே சங்கத்திலே நிரந்தரத் தலைவலி, எனக்கு நானே தான் பஞ்சாயத்துப் பண்ணிக்கணும்னு கூடத் தெரியாமல், சும்மா என் வயசைப் பத்திப் பேசி நீங்களும் அந்த அம்பி மாதிரி ஆப்புத் தம்பி ஆக வேண்டாம் என அன்புடன் எச்சரிக்கை செய்கிறேன்! :D

    ReplyDelete
  7. ஹி,ஹி,ஹி, மின்னல்,
    சொந்த செலவில் சூன்யம்ங்கிறது "வரவனையான்" முன் மொழிந்துப் பின் இளவஞ்சி வழி மொழிஞ்சிட்டதாலே இரவல் வேணாம்னு இருந்துட்டேன். அதான் நமக்குத் தெரிஞ்ச "ஆப்பையே" வச்சுக்கிட்டேன்.

    ReplyDelete
  8. You too Latha,
    just see how I am wounded! Oh God save me from these
    'AAPPUS'

    ReplyDelete
  9. வேதாள வேதா,
    நாகை சிவா நல்லாத் தான் பேர் வச்சார். அவர் செய்த உதவியிலே மிகப் பெரிய உதவி இதுதான். மறைமுகமா என்னை ஆதரிக்கிறேன்னு சொல்லாமச் சொல்லிட்டார்.
    Welcome to the Club லதாவா? எத்தனை அம்பி வந்தால் என்ன?
    எத்தனை வேதா வந்தால் என்ன?
    எத்தனை லதா வந்தால் என்ன? எத்தனை எத்தனை தம்பிகள் வந்தால் என்ன?
    மாறாதது, மாற்ற முடியாதது, மாற்றக்கூடாதது இவ்வுலகிலே எது?
    அது தலைவியின் வயசு ஒன்றுதான், அறிவீர்களா அறிவிலிகளே! :D :D :D

    ReplyDelete
  10. hmm now getting regular to your and veda page. time pass aghanumlla... entertainment - free of cost. orru serial pakara effect.

    ReplyDelete
  11. known stranger,
    grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete
  12. வேதாள வேதா,(courtesy: Nagai Siva)
    சிவாவை எலின்னு நீங்க சொல்றது கொஞ்சம் அதிகம் தான். அவர் பாருங்க உங்களை வேதாளம்னு தான் சொல்லி இருக்கார். (அம்பி, எனக்கும் நாரதி வேலை தெரியும்.)

    ReplyDelete
  13. //இனிமேல் ஆன்மீகப் பதிவுகள் தனியாகவும், ஆப்புப் பதிவுகள் இந்தப் பக்கத்திலேயும் வரும்//

    யப்பா நானும் நன்றி சிவாவுக்கு :-)

    ReplyDelete
  14. வேதா,
    பாவம், யாருக்கு என்ன நன்றி சொன்னால் என்ன? கொஞ்ச நாளில் அவரும் என்னைத் தான் ஆதரிச்சாகணும், இந்த ப்ளாக் உலக நடைமுறை அது. :D

    ReplyDelete
  15. ச்யாம்,
    எப்படிச் சொன்னாலும் உண்மை அதுதான். ஆப்புப் பதிவோட ஆன்மீகம் வந்தால் நல்லாவே இல்லைனு நினைச்சுக்கிட்டே இருந்தேனா? கார்த்திக் புண்ணியத்தைக் கட்டிக்கிட்டார். என்ன இருந்தாலும், எங்க ஊர்ப்பக்கம் இல்லையா? அந்தப் பாசம் தான்.

    ReplyDelete
  16. நான் ஆணை இட்டால் அது நடந்து விடும். அப்புறம் இந்த வேதா என்ன பண்ண முடியும்?

    ReplyDelete
  17. என்னையே வச்சி ஒரு பெரிய காமெடி சோ நடக்குது போல இங்கு. சரி நடக்கட்டும். நடக்கட்டும்

    ReplyDelete
  18. romba koorai paten - eppadi selvi, kollamkalam serrial parkama irrukkarthunnu - all in one mixture ividamee kiidaipenn yevidam allaiya vendum.

    all those making this serail succeffull here comes the sponsership from -

    ReplyDelete