எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, June 10, 2008

கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி- 57

தன் கணவன் மறைந்துவிட்டானோ என எண்ணிய சீதையின் புலம்பலும், அழுகையும் அதிகம் ஆனது. அந்த மாயத் தலையை அத்தனை தத்ரூபமாய் வடித்திருந்தான் வித்யுத்ஜிஹ்வா. தன் சிறிய மாமியார் ஆன கைகேயியின் செயலால் அன்றோ ராமன் நாட்டை விட்டுக் காட்டுக்கு வந்து, தன்னையும் பறி கொடுத்துவிட்டு இப்போது இறந்தும் போக நேர்ந்தது?? ஆஹா, ஒருவழியாய் கைகேயி, உன் ஆசை நிறைவேறியதா? உன் மகனுக்குப் போட்டி இல்லாமல் போயிற்றா??? ராமர் கொல்லப் பட்டார். குலமே நாசம் அடந்துவிட்டது. இதுதான் நீ விரும்பியதா? நான் உனக்கு என்ன கெடுதல் செய்தேன்??? என்று எல்லாம் புலம்பி மயங்குவதும், சில நேரம் தெளிந்து மீண்டும் புலம்புவதும், அந்தத் தலையின் அருகே அமர்ந்து அழுவதுமாய் இருந்தாள் சீதை! கணவன் முன்னால் இற்ந்து போக மனைவி உயிரோடு இருப்பது போன்ற துயர சம்பவம் என் வாழ்விலும் நிகழ்ந்துவிட்டதே? இது எத்தகைய கொடிய துயரம்??? உங்கள் ஆயுளைப் பற்றிக் கூறிய ஜோசியர்களின் பலனெல்லாம் பொய்த்துவிட்டதோ? குலத்தைத் தவிக்கவிட்டுவிட்டு சொர்க்கம் சென்று உங்கள் தந்தையோடு சேர்ந்தீர்களோ??? என்னைப் பார்க்க மாட்டீர்களா?? என்னோடு சேர்ந்து தர்மத்தைக் கடைப்பிடிப்பேன் என்று சொன்ன வாக்குறுதி என்ன ஆயிற்று? லட்சுமணன் கெளசலைக்கு இந்தச் செய்தியைச் சொல்லுவானோ??? நீங்களும் இறந்து, நானும் அரக்கர் பிடியில் மாட்டிக் கொண்டிருப்பதை அறிந்த பின்னரும் கெளசலை உயிரோடு இருப்பாரா??? நிச்சயம் மாட்டார். என்னைக் காக்கும்பொருட்டு சமுத்திரத்தைக் கடந்து வந்த நீங்கள் உயிரை விட நேர்ந்தது என்னாலே அன்றி வேறு என்ன காரணம்??? என் முன் பிறவியில் நான் ஏதோ ஒரு திருமணத்தைத் தடுத்திருக்க வேண்டும், அதனாலேயே எனக்கு இம்மாதிரி ஒரு துயரம் ஏற்பட்டு விட்டது. ஏ, ராவணா, என்னையும் கொன்றுவிட்டு, என் கணவரின் உடல் மீது என் உடலைப் போட்டுவிடு, இறப்பிலாவது அவருடன் நான் ஒன்றாய் இருக்கின்றேன்." என்று சொல்லும்போது, ராவணனின் பணியாள் ஒருவன் ஓடி வந்து மந்திராலோசனை சபையை மந்திரிமார்கள் அவசரமாய்க் கூட்டி இருப்பதால், ராவணன் வரவுக்குக் காத்திருப்பதாய்ச் சொல்லுகின்றான். அவ்வளவில் ராவணன் அங்கிருந்து செல்ல, அந்த மாயத் தலையும் அவனோடு சேர்ந்து மறைந்து போகின்றது.
ராவணன் மந்திராலோசனை சபையில் நுழைந்ததுமே, யுத்த முழக்கம் செய்ய அனைவரும் ஆமோதித்தனர். அப்போது பெரும் துயரத்தில் அசோகவனத்தில் இருந்த சீதையிடம் சரமை என்னும் ஓர் அரக்க குலப் பெண் வந்து ஆறுதல் சொல்லுகின்றாள்.(இவள் விபீஷணன் மனைவி எனச் சில ராமாயணங்களின் கூற்று.)ராமனை யாராலும் கொல்ல முடியாது எனவும், இதுவும் ராவணனின் தந்திரங்களில் ஒன்று, எனவே பயம் வேண்டாம் எனவும் கூறிய அவள் யுத்த முழக்கம் கேட்பதைச் சுட்டிக் காட்டுகின்றாள். படைகள் யுத்தத்திற்குத் தயாராகின்றன என்றும் எடுத்துச் சொல்கின்றாள். யுத்தத்தில் ராமரே வெற்றி பெற்று அவளை மீட்டுச் செல்வார் என்றும் உறுதி அளிக்கின்றாள். யாரும் அறியாமல் ராமரிடம் சென்று சீதையைப் பற்றிக் கூறிவிட்டு, ராமரிடமிருந்து சீதைக்கும் செய்திகளை எடுத்துவரத் தயாராய் இருப்பதாயும் தெரிவிக்கின்றாள். சீதையோ, ராவணனின் திட்டம் என்ன என்று அறிந்து வந்தால் போதும் என்று சொல்லவே அவ்வாறே அவளும் ராவணன் இருக்குமிடம் சென்று அவன் ஆலோசனைகளைக் கேட்டு வந்து சொல்கின்றாள்.ராவணனின் தாயார் அவனை சீதையை ராமனிடமே ஒப்படைக்கும்படி அறிவுரை கூறியதாகவும், இன்னும் சில வயதில் மூத்தவர்களும் அவ்வாறே ஆலோசனை கூறியதாகவும் கூறுகின்றாள். ஆனால் ராவணனோ இவை எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் போருக்கு ஆயத்தம் அடைந்ததாயும் சொல்கின்றாள். ராமர் ராவணனைப் போரில் வீழ்த்துவார் எனவும், சீதையை மீட்டுச் செல்வார் எனவும் ஆறுதல் கூறுகின்றாள்.

வானரப் படைகளின் பேரொலி கேட்கின்றது. ராவணன் தரப்பில் அரக்கர்களிடம் மனவலிமை ஏனோ குன்றத் தொடங்கியது. அரசன் செய்தது குற்றம் என அனைவருக்கும் நன்கு தெரிந்திருந்த காரணத்தால், நம்பிக்கை அவர்களிடமிருந்து அகன்றது. ஆனால் ராவணனோ தீர்மானமாய் யுத்தம் செய்வதில் இருந்தான். அவன் பாட்டனாகிய மால்யவான் ராவணனுக்கு அவன் செய்த தவறுகளை எடுத்துக் காட்டுகின்றான். படைப்புகள் அனைத்துமே இருவகையிலேயே இயங்குவதாயும், நன்மை, தீமை என்ற அந்த இருவகையிலே அரக்கர்கள் தீமையின் வழியிலேயே சென்றுவிடுவதாயும் சொல்கின்றான். தர்மத்தின் வழியிலேயே மற்றவர்கள் செல்வதால் அவர்களுக்குத் தர்மம் ஒரு பெரும்பலமாய் இருந்து காப்பதாயும் சொல்கின்றான். தர்மத்தை வளர்த்து வந்த ரிஷி, முனிவர்களைத் துன்புறுத்திவிட்டு நாம் செய்யும் யாகமோ, தவமோ நம்மைக் காப்பாற்றாது என்பதை அறிவாயாக! ராவணா, நீ பெற்றிருக்கும் வரமோ தேவர்களிடமிருந்தும், ராட்சதர்கள், அரக்கர்கள், யக்ஷர்கள் போன்றோரிடமிருந்து உனக்கு மரணம் இல்லை என்பதே. ஆனால் இங்கே வந்திருக்கும் பெரும்படையோ எனில் வானரர்களையும், மனிதர்களையும் கொண்டது என்பதை மறந்து விடாதே! அபசகுனங்களும், ரத்தமழை பொழியும் மேகங்களும் இலங்கையைச் சூழ்ந்துள்ளன. அரக்கர்களில் பலருக்கும் துர் சொப்பனங்கள் வருகின்றன. தெய்வங்களுக்கு என்று படைக்கப் படும் உணவை நாய்கள் தின்கின்றன. சூரியனைப் பார்த்து மிருகங்களும், பறவைகளும் எழுப்பும் சப்தம் கர்ணகடூரமாய் உள்ளது. ராவணா, நமக்குப் பேரழிவு காத்திருக்கின்றதோ என்று அஞ்சுகின்றேன், மேலும் மனித உருவில் விஷ்ணுவே தான் ராமனாய் வந்திருக்கின்றாரோ எனத் தோன்றுகின்றது. நினைத்துப் பார்! கடலில் எத்தகைய அற்புதமான பாலம் அமைக்கப் பட்டிருக்கின்றது இந்த ராமனின் ஆணியால். ஆலோசனைகள் செய்துவிட்டு முடிவை எடுப்பாய்." என்று கூறுகின்றான்.

கோபம் கொந்தளித்துக் கொண்டிருந்த ராவணனுக்குப் பாட்டனின் வார்த்தைகள் இன்னும் அதிகக் கோபத்தையே ஏற்படுத்தியது. பல்வேறு சாத்திரங்களையும் நன்கு கற்றுத் தேர்ந்த தன் பாட்டன், யாருடைய தூண்டுதலாலோ இவ்விதம் பேசி இருக்க வேண்டும் என்றும், அல்லது தன் பேரனாகிய தன் மீதுள்ள வெறுப்பினால் பேசி இருக்க வேண்டும் என்றும் நினைத்தான். அப்படியே பாட்டனிடம் சொல்லவும் சொன்னான். சீதையைத் திரும்பிக்கொடுப்பது என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று உறுதிபடச் சொல்லிவிட்டான், தசக்ரீவன். அவன் பாட்டனும் அவனுக்கு வாழ்த்துகளையும் ஆசிகளையும் கூறிவிட்டுச் சென்றான். சபையில் போர்த் திட்டங்கள் விவாதிக்கப் பட்டன. ராவணன் பாதுகாப்புக்கான பல்வகை உபாயங்களையும் கையாண்டு அதற்கேற்ப உத்திரவுகளைப் பிறப்பித்தான். அதே போல் ராமரும் வானரப் படையும், தாங்கள் தங்கி இருந்த இடத்தில் விவாதித்துக் கொண்டிருந்தனர். விபீஷணன், தன் அமைச்சர்களைப் பறவை உரு எடுத்துக் கொண்டு இலங்கையின் காவல் பற்றித் தெரிந்து வந்து சொல்லச் சொல்ல அவர்களும் அவ்வாறே சென்று தெரிந்து வந்து சொல்கின்றார்கள். ஒவ்வொரு வாயிலும் ஒவ்வொருவரால் பலமாய்க் காக்கப் படுகின்றது என்றும், ராவணனின் பலத்தையும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும் அறிந்து கொள்கின்றனர் அனைவரும். அனைத்தையும் கேட்டுக் கொண்ட ராமர் யார், யார், எவர் எவரை, எம்முறையில் தாக்குவது என்று முடிவு செய்து கட்டளைகள் பிறப்பிக்கின்றார்.

அதன்படி நீலன், கிழக்கு வாயிலில் நிற்கும் பிரஹஸ்தனையும், தெற்கு வாயிலின் மஹாபார்ச்வனையும், மஹோதரனையும் அங்கதனும், மேற்கு வாயிலைத் தகர்த்து உள்ளே புகும் பொறுப்பு அனுமனிடமும், ராவணனாலேயே பாதுகாக்கப் படும் வடக்கு வாயிலை ராமரும், லட்சுமணனும் தாக்குவதாயும் முடிவு செய்யப் படுகின்றது. சுக்ரீவன், ஜாம்பவான், விபீஷணன், ஆகியோர் படையின் மத்தியிலும், ஊரின் மத்தியிலும் புகுந்து தாக்க வேண்டும். வானரர்கள் அனைவரும் தங்கள் சொந்த வானர உருவிலேயே இருக்க வேண்டும். அப்போதுதான் நம் படை வீரர்களை நாம் தனியாக அடையாளம் காணலாம். ராமர், லட்சுமணன், விபீஷணன், அவனுடன் வந்திருக்கும் நால்வர் ஆகிய ஏழு பேர் மட்டுமே மனித உருவில் இருப்போம். என்று கட்டளை இடுகின்றார் ராமர். பின்னர் லட்சுமணன், விபீஷணன், சுக்ரீவன் ஆகியோர் தொடர சுவேல மலை மீது ராமர் ஏறினார். இலங்கை முற்றுகைக்கு வானரப் படை ஆயத்தம் ஆனது.

5 comments:

 1. Geetha Sambasivam!

  Nice to read the results of your labors. But I dont know why I have read them at all!

  Will it make me a good person? Suppose it does, how can a person who cant read and write, become a good person? Because, he is what he is! Or, a person whose life is consumed in eking out his mean existence on a measly wages, to fill the stomach of an innocent wife and yet more innoncent children?

  Your lucubrations are vizallukku iraththa niir. Or, to put it correctly, a luxury for a people who has nothing else to do?

  God is greater than your lucubrations. Let me sincerely ask you this question:

  what is the use of all these luxuriating books written by the godmen, the puraanaas, the vedas, the Bible stories, the gimmicks of mohamed etc.?

  What is the outcome for an ordinary person? The question is sincere. Please go over it. In case you need a separate blog topic to answer, please try and make it as such; and put in your thoughts therein. You appear to be an intelligent person. I hope your answer will be illuminating.

  I am afraid, without knowing where you are going, it is a wanton dissipation of the precious life God has gifted you!

  ReplyDelete
 2. நன்றி சங்குமுகம். உங்களுக்கு தமிழும் நன்கு வருகிறது, ஆங்கிலத்திலும் அசத்தி இருக்கிறீர்கள். நான் புதிதாய் கற்றுக்கொண்ட சில சொற்கள் கீழே.

  eking out - நீட்டித்தல்
  measly - தொடர்பில்லாத, குறைவான
  lucubrations - மாங்கு, மாங்குன்னு உழைக்கிறது
  wanton dissipation - நோக்கமற்ற செலவீனம், அநியாயத்துக்கு அழிக்கிறது

  ம்ம்ம்ம்.. எதுக்கும் இராம.கி ஒருத்தரு பதிவு (http://valavu.blogspot.com) வைச்சுருக்காரு. இந்த பின்னூட்டத்தை அப்படியே ஒற்றெடுத்து அங்கனயும் போடலாம். இன்னும் நிறைய பேர் உங்களை மாதிரி தேவைக்கு அதிகமா அக்கறை எடுத்துட்டு எழுதுறாங்க.. அடடா, பூனைக்குட்டி வெளிய வந்துருச்சே.. சரி நேரடியாவே சொல்லிடறேன். இந்த பின்னூட்டம் எழுத உங்களை எது தூண்டியதோ அது போல ஒவ்வொருவருக்கும் ஒரு ஈர்ப்பு, உந்துதல் இருக்கும். அதுனால எழுதுறாங்க. எனக்குக் கூட நீங்க பெரிய அறிவாளியாத் தான் தெரியிறீங்க. அப்புறம் ஏன் இப்படி மாங்கு, மாங்குன்னு பின்னூட்டம் போட்டு நேரத்தை அநியாயத்துக்கு செலவழிக்கிறீங்க. உங்க இடுகைகளைப் போல தலைப்போட நிறுத்தி இருக்கலாமே ;-) (சிரிப்பான் போட்டுட்டேன், கோவிக்கக் கூடாது)

  கீதாம்மா, உங்க இராமாயணம் பதிவுகளை நேத்துத் தான் பாத்தேன். மன்னிக்கணும் வலைப்பக்கம் ரொம்ப நாளா வரலை. இது போன்று யாரும் எழுதலையேன்னு நினைச்சேன். நல்ல முயற்சி. முடிஞ்ச வரை பின்னூட்டமா வெண்பா போட்டு பழகிக்கிறேன். வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. Mugavai Mainthan!

  A feedback is a representation of thoughts of an individual as a reaction. But the blogger may also take it as a representation of thoughts of one section of people who could not see eye-to-eye, not out of personal prejudices, but philosophically. The blogger can be sure that what I have expressed negatively will cross the minds of many others too. Just like your child, when you take to the Hindu goddess with twelve arms with twelve lethal weapons, innocently raises the question: "If you say, your god is all kindness, how come she is so fearsome with so lethal weapons, dad?"

  If I assume your nature from your response here as true, you will beat the child black and blue.

  Saints have asked the overwhelming Question about the existence of God. Many of them had passed through atheism, non-belief, berating of God, backsliding etc. before they arrived at their conclusions, which, today, you and Geetha Sambasivam are propogating using modern technology. Nathimoolamum Rishimoolamum asingkamaaha irukkum.

  It is pure hypocrisy for anyone to assume that he has become certain of god; and one's knowledge of god and all that is pukka correct. If correct, there wont be many religions today. Which means, what is true to you, is false to someone. I did not question your belief in God; but wondered why that takes a particular path?

  Lets therefore get rid of the illusion that a feedbacker with a negative view is necessarily a man to hate; a man to be charged with malice.

  You have not done that exactly; but I fear that there runs an undercurrent of impatiencce and intolerance just as one feels when something happens contrary to one's liking.

  Maangku maangku feedback is really an indicator that you have been read seriously. If we dont raise such questions, you will be complacent that there is a total agreement with all that you write.

  Please remember Mr Mainthan. In matters like God, there is no last word said by man. Mankind is still struggling with the basic concept of God and all that. It is not possible to say the last word. Because, the last word will limiit the God. Since God is ineffable, all that we have understood may be likened to the experience of the five blind brothers with the elephant. Thus, God remains supreme tightly keeping Himeself as a great Engima beyond the comprehensiion of man. We must therefore be humble in such matters.

  Geetha Sambasivam shows more maturity in her long rejoinder, to which my reply is due still.

  ReplyDelete
 4. அய்யா சங்குமுகம், நீர் யாரோ எவரோ தெரியாது. என்னைப் பொறுத்த வரை தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடனே பங்கேற்கிறேன்.

  பின்னூட்டம் வராமையைக் காட்டி பதிவரின் உழைப்பு வீண் என்ற வகையில் குறிப்பிட்டு இருந்தீர்கள். பதிவர்களுக்கு பின்னூட்டம் என்பது மூச்சுக் காற்று. அவரவர் விருப்பத்தில் எழுதும் பதிவில் உங்களுக்கு எது தேவையோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். அதை விடுத்து பின்னூட்டம் குறித்து விமர்சிப்பது தவறு எனக் கருதினேன். பதிவருக்கு என் ஆதரவை தெரிவிக்கும் நோக்கில் என் கருத்தை தெரிவித்தேன்.

  இரண்டாவது முறையாக என் கருத்தை வலியுறுத்தியதில்லை.
  நீங்கள் காயப்பட்டிருப்பது போல் தெரிகிறது. மன்னிக்கவும்.

  அன்பை வளர்ப்பதே மானுடம் என்றுமதனை
  பண்பாய்ப் பெறுதல் நன்று.

  ReplyDelete
 5. அய்யா மைந்தன்!

  பின்னூட்டம் வந்ததோ வரவில்லையோ, நான் என் கருத்தைச் சொன்னேன். விழலுக்கு இறைத்த நீர் என்றால் என்ன?, எப்போது அப்படி ஆகிறது? என்று என் மடல்களின் காணப்படுகிறது. அதற்கு அவர் விளக்கம் சொன்னார். உம்மைப் போல உதாசீனப் படுத்தவில்லை. எனவே, எதிர்மறைக் கருத்தை நோக்கும் மனமுதிற்சி அவரிடம் கண்டேன்.

  ஆனால் நும் முதிற்சி எப்படி இருக்கிறது? மற்றவர் ஒருவரின் பதிப்பில் பின்னூட்டம் போட்டவனுக்கு நீர் பதில் பின்னூட்டம் போட்டு, 'இங்கு எழுதாதே, வேறு எங்காவது போய் எழுது' என்று சொல்லி, இன்னொருவரின் வலைபதிவின் அடையாளத்தை தருகிறீர். வரம்பு மீறிய செயலல்லவா இது? இதுதான் அன்பான செயலா? இது எங்கு கற்ற நாகரீகம்?

  யார் யார் மனத்தையும் புண்படுத்தவில்லை. எதிர்மறைக் கருத்துகளெல்லாம் மனத்தை காயப்படுத்தும் என்றால், வலைபதிவுகள் தொடங்கக்கூடாது. வீட்டுக்குள், 'சிவமே' என இருந்து கொண்டால் நன்று.

  அன்பு என்ன என்றால் என்ன? எதிர்மறைக் கருத்தைச் சொன்னால், அது அன்பை குறைத்து விடுமா? இங்கு என்ன காதல் பண்ண வந்தோமா, இல்லை கருத்தைச் சொன்ன வந்தோமா?

  அன்பைச் சொல்லுவதற்கும் இலக்கியம்தான் தேவைப் படுகிறது. ஒரு சின்ன விஷயத்தைச் சொல்ல பெரும் பண்டைத் தமிழ்க்கவிதை இல்லாமல் சொல்லமுடியவில்லை. இதைத்தான் நான் ஆன்மீக வலைபதிவாளரிடம் காண்கிறேன். நுமக்குத் தெரிந்த இலக்கிய ஞானத்தைக் காட்ட இறைவன் இங்கு கருவியாகிறான். ஆழ்வார்களும் நாயன்மார்களும் இலக்கியம் எழுதவில்லை. ஆனால், அவர்களை இலக்கியமாக்கி, அவர்களின் நோக்கததையே சிதைக்கிறார்கள் இந்த ஆன்மீக வலைபதிவாளர்கள் என்பதே என் மனக்குறை. எத்தனை பேருக்கு இலக்கியம் தெரியும்? யாருக்கு எழுதுகிறேம்? யாரிடம் போய் இந்த பெருமாளையும், சிவனையும் பற்றிப் பேசுகிறோம்? தெரிந்தவனிடமா? தெரியாத பாமரனிடமா? அந்தக் காலத்தில் எல்லாவற்றையும் மறைத்தார்கள் பாமரர்களிடமிருந்து. இன்றுமா?

  'பொய்ந் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும், அழுக்கு உடம்பும்,
  இன் நின்ற நீர்மை இனி யாம் உறவாமை உயிர் அளிப்பான்,
  என் நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்! இமையோர் தலைவா
  மெய்ந் நின்று கேட்டருளாய், அடியேன் செய்யும் விண்ணப்பமே!'

  இது இலக்கியம் அல்ல. கதறல். இதை எழுதியவர் தன் உணர்ச்சிகளால் தம் இறைவனை வழிபட்டுவிட்டு போய்ச்சேர்ந்துவிட்டார். இன்று நாம் அதை வைத்து, அவரின் உணர்ச்சிகளில் சிறிதளவாவது நமக்கு வருமா என்றுதான் முயற்சிக்கலாம். இதை விட்டுவிட்டு, ஆன்மிக வலைபதிவுகார்கள் இலக்கிய ஸ்டாக் மார்கெட்டு நடத்தி, பாமரனை விரட்டுகிறார்கள். உணர்ச்சியே ஆன்மீகம் ஆகும். அதுவே பக்தனை உருவாக்கும்.

  போதுமடா சாமி. இவர்கள் ஆன்மீகம் நமக்குத் தேவை இல்லை. இதற்கு, ஆர்.எஸ்.எஸ் பிளாக்கு தேவலை!

  ReplyDelete