எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, June 03, 2008

வாழ்த்த வாருங்கள் தோழர்களே, தோழியர்களே!

தங்கத் தலைவியின் மூத்த தொண்டரும், நீண்ட நெடு நாட்களாய்த் தலைவியின் "மொக்கை"களை மனமுவந்து ஆதரிப்பவரும் ஆன "அதியமான் நெடுமானஞ்சி" சமீபத்தில் "தங்கமணிக்கஞ்சி" என்ற பெயர் மாற்றம் செய்யப் பட்டு, ஒரு வருஷம் நிறைவு பெறுவதை உத்தேசித்து, அவருக்குத் தொண்டர்கள், குண்டர்கள், சிஷ்யகேடிகள், உளவுப்படையினர், தலைவியின் தொழில் நுட்ப விரோதிகள், சீச்சீ, தொழில் நுட்ப நண்பர்கள் அனைவரும் வந்து இங்கே தங்கள் மேலான வாக்குகளை, சீச்சீ, இப்படிப் போடக் கூடாது இல்லை, ம்ம்ம்?/ தங்கள் மேலான வாத்துக்களை, சீ, இதுவும் இல்லையே??? வாழ்த்துகளைச் சொல்லும்படிக் கேட்டுக் கொள்கின்றேன். சங்கத்தின் சிங்கம் ஆன நம் கைப்புள்ள அவர்களுக்குத் திருமண ஓராண்டு நிறைவு நாளான இன்று அவர் என்றும்போல் இதே போல் மாவாட்டிக் கொண்டும்,
ஐஸ்க்ரீம்???? தெரியலையே?? செய்து கொண்டும், வரும் விருந்தாளிகளை உபசரித்துக் கொண்டும்
சூடான சாதத்திற்குத் தொட்டுக் கொள்ள வத்தல், வடகம் பொரித்துப் போட்டுக் கொண்டும், இன்னும் பல தொண்டுகள் செய்து கொண்டும்
தங்கமணியின் ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வெளியே வரக் கூடாது என்ற பேரன்பினால், தானே வெங்காயம் நறுக்குவதைத் தொடர்ந்து கொண்டும்,
சாம்பாரா இது?? சகிக்கலையே?தங்கமணிக்கு எப்படி இருக்கும்? ஒழுங்கா சாம்பார் கூட வைக்கத் தெரியலை? என்ன படிச்சிருக்கீங்க போங்க! இது என்னோட கமெண்ட்! என்றாலும் சாம்பாரை ஒழுங்காக வைக்கத் தெரிந்து கொண்டும்,
புலவு???? கொஞ்சம் பார்க்கிறாப்போல இருக்கு??? இதிலே மசாலா எல்லாம் ஒழுங்கா அரைச்சிருக்கீங்களா? மிக்சி இருக்கு இல்லை? அப்புறம் என்ன ஒழுங்கா அரைக்கிறதுக்கு??? புலவிலே எத்தனை தினுசு இருக்கோ, அத்தனையும் கற்றுக் கொண்டு ஒழுங்காய்ச் செய்து போட்டுக் கொண்டும்
கிடைக்கும் இடைவெளியில் ஆபீச்சுக்கும் போய் ப்ளாக் எழுதுதல், ஜி-சாட்டில் சாட்டுதல் போன்றவைகளையும் இடைவிடாப் பணியாகச் செய்து கொண்டு தங்கமணியோடு நூறாண்டு வாழ வாழ்த்துகள்.

ஜூன் மாதம் 3-ம் தேதி கைப்புள்ள திருமண முதலாண்டு நிறைவு.

மனம் நிறைந்த வாழ்த்துகள் மோகன்ராஜ்&திருமதி மோகன்ராஜ்!

11 comments:

  1. எங்கள் தல, கைப்புவுக்கு மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள்.

    @geetha madam, அதுக்குள்ள ஊர்லேருந்து வந்தாச்சா? இல்ல இதுவும் பினாமியின் வேலையா? :p

    ReplyDelete
  2. //ஜூன் மாதம் 3-ம் தேதி கைப்புள்ள திருமண முதலாண்டு நிறைவு.

    மனம் நிறைந்த வாழ்த்துகள் மோகன்ராஜ்&திருமதி மோகன்ராஜ்!//

    சரியான சமயத்துலதான் வந்திருக்கேன்.வாழ்த்துக்கள்:)

    ReplyDelete
  3. hai,

    MANY MANY MANY MANY HAPPY ANIVERSARIES TO YOU.

    இன்று போல் என்றும் அன்போடு பல ஆண்டுகள் வாழ என்னோட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. ஆம், என் ஆமென்!

    ReplyDelete
  5. மோகன் தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. ஊரில் இல்லாது போனாலும் இந்த "டெல்லி பையனை" நினைவில் வைத்துக் கொண்டு தொழில்நுட்ப சிக்கல்களை எல்லாம் மீறி எங்களை வாழ்த்தி பதிவிட்ட தங்களின் அன்புக்கு என்று இந்த அதியமான் அடிமை.

    எல்லா புகழும் தலைவிக்கே :)

    மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  7. //சாம்பாரா இது?? சகிக்கலையே?தங்கமணிக்கு எப்படி இருக்கும்? ஒழுங்கா சாம்பார் கூட வைக்கத் தெரியலை?//

    அது ரசம்...நீங்க நெனைக்கிற அந்தளவுக்கு நான் மோசமில்லை
    :)

    ReplyDelete
  8. ஆகா... மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள் தல ;))


    இது வாழ்த்து பதிவு தானா...!!!!

    ReplyDelete
  9. இனிய மணநாள் வாழ்த்துகள்! திரு/திடுமதி.மோடன்ராஜ். :)

    ReplyDelete
  10. ம்ம்ம்ம், வாழ்த்த வரச் சொன்னாக் கூட யாரும் ஒழுங்கா வந்து வாழ்த்தலை???? க்ர்ர்ர்ர்ர்ர்ர்., கொஞ்ச நாள் இல்லைனா இப்படியா கை கழுவறது? :P

    @அம்பி, "ஆட்டோ" பப்ளிஷிங்குனு ஒண்ணு இருக்கே, தெரியாது?? இதெல்லாம் பினாமிக்கு வராதே? நம்ம கைவண்ணம் கூடவா தெரியலை??? என்ன போங்க????? ஊருக்குப் போகும் முன்னாலேயே போட்டு செட்டிங் பண்ணி வச்சாச்சு! முந்தின பதிவைப் படிச்சிருக்கலாம், ஆனால் உங்களுக்குத் தான் பதிவைப் படிச்சுட்டுக் கமெண்டணும்னே தெரியாதே???? :P

    ReplyDelete