
சிஷ்யகே(கோ)டிங்க அனைவருக்கும் ஒரு முக்கியமான விண்ணப்பம். நான் பத்து நாளா ஊரில் இல்லை, இருந்தாலும் விட்டுப் போயிடக் கூடாதேன்னு ராமாயணம் போட ஏற்பாடு பண்ணிட்டேன். அதுக்கு நீங்க யாரும் வரதில்லைனு தெரியும், யார் யார் வரலைனு ஒரு பெரிய லிஸ்டே தயாராயிட்டு இருக்கு. உளவுப்படை தீவிரமாக வேலை செய்து அந்த லிஸ்டை எனக்கு அனுப்பி வச்சுட்டு இருக்காங்க. வராதவங்க கிட்டே இருந்து என்ன வசூல் செய்யலாம் என்று முடிவு செய்யப் படும். எடைக்கு எடை பொன்னா, வெள்ளியா, தங்கமா??? அதுக்குள்ளே, எடையையும் கொஞ்சம் ஏத்திக்கறேன். என்றாலும் நாளைக்குக் கட்டாயம் வந்து என்ன விஷயம்னு பார்த்துட்டுப் போகும்படிக் கேட்டுக் கொள்கின்றேன். இது தலைவியின் ஆணை!!!! :P ஒரு முக்கியமான நபருக்கு வாழ்த்துச் சொல்லணும் நாளைக்கு அனைவரும் வந்து, மறக்காமல் வந்துடுங்க, வந்து வாழ்த்துச் சொல்லுங்க!
ஆட்டோ அனுப்புவதற்கு ஏற்பாடு செய்து தரும் ப்ளாகருக்கு, சீச்சீ, எப்போவுமே அரசியல் நினைப்பாவே இருக்கு, தலைவின்னா,
ஆட்டோ பப்ளிஷ் பண்ண ஏற்பாடு செய்து தந்த ப்ளாகருக்குக் கோடி நன்றிகள்.
\\வராதவங்க கிட்டே இருந்து என்ன வசூல் செய்யலாம் என்று முடிவு செய்யப் படும். எடைக்கு எடை பொன்னா, வெள்ளியா, தங்கமா??? \\
ReplyDeleteமதிப்புக்குரிய தலைவி அவர்களுக்கு...இந்த கேடிங்க லிஸ்ட்டில் நான் எப்படியும் இருப்பேன் என்று தெரியும்...இப்ப எல்லாம் முன்னமாதிரி வியபரம் இல்லை...எடைக்கு எடை என்ற கனவுகள் எல்லாம் கானவேண்டாம் என்று கூறி கொள்கிறேன் ;)
\\ஒரு முக்கியமான நபருக்கு வாழ்த்துச் சொல்லணும் நாளைக்கு அனைவரும் வந்து, மறக்காமல் வந்துடுங்க\\
ரைட்டு ;)
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
ReplyDelete