// சந்தேக புத்தி கொண்ட லட்சுமணனுக்கு உடனேயே இதில் ஏதோ சூது என மனதில் படுகின்றது. //
எதையும் தெளிவாக ஆராய்ந்து முடிவெடுக்கும் எனச் சொல்லி இருக்கலாமோ?
'சந்தேக புத்தி கொண்டவன்' என வர்ணித்தால், பின்னர், சீதையும், இவனை இப்படியே விளித்ததில் தவறில்லை என்ற பொருள்படுமே!
இது திரு எஸ்கே அவர்கள் லட்சுமணன் பற்றி நான் எழுதியதுக்கு வருத்தப் பட்டிருக்கின்றார். ஆனால் வால்மீகி அப்படித் தான் எழுதி உள்ளார் என்பதைக் கீழ்க்கண்ட மொழி பெயர்ப்பில் இருந்து காணலாம். மேலும் "லட்சுமணன் கோடு" அதாவது லட்சுமண் ரேகா என்ற ஒன்றைப் பற்றியும் கேட்டிருக்கிறார். அதுவும் வால்மீகியில் இல்லை. இது பற்றி விரிவான விளக்கம் தருகின்றேன். தேவைப் பட்டால்.
//But Lakshmana became incredulous on seeing it and said to Rama, "I believe this deer to be that Maareecha, the demon." [3-43-5]//
கூகிளாண்டவர் தயவால் மேற்கண்ட மேற்கோள் வால்மீகி ராமாயணத்தின் மொழிபெயர்ப்பு படிக்கிறவர்களின் வசதிக்காக ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன். திரு எஸ்கே அவர்கள் லட்சுமணனைச் சந்தேகம் நிறைந்த என எழுதியதற்கு வருந்தி இருக்கின்றார். வால்மீகி ஒரு மனிதனின் கதையைத் தான் எழுதி இருக்கின்றார். யாரையும் மிகைப்படுத்திச் சொல்லவில்லை என்பதை மீண்டும் நினைவு கூருகின்றேன்.
//கூகிளாண்டவர் தயவால் மேற்கண்ட மேற்கோள் வால்மீகி ராமாயணத்தின் மொழிபெயர்ப்பு படிக்கிறவர்களின் வசதிக்காக //
ReplyDeleteமொழிபெயற்ப்பு தானே! என்னவோ வால்மீகியே கூகிளில் எழுதியதை கண்டுபிடிச்ச மாதிரி சொல்றீங்க. :P
அந்த மொழிபெயற்பாளர் எந்த அளவு நம்பகமானவர்?, அல்லது அவர் தவறா மொழி பெயர்த்து இருக்கலாம் இல்ல?
சந்தேக புத்தி என்று சொல்வதை விட "முன்னெச்சரிக்கை குணம் கொண்ட" என மொழி பெயர்த்து இருக்க வேண்டும்.
நீங்க கூட "முன்னெச்சரிக்கை முத்தக்காவாச்சே!" :D
வீரவேல் ! வெற்றிவேல் !
ReplyDeleteகீதா,
எஸ்கே சொல்லுவதுதான் சரி. உங்களது மொழிபெயர்ப்பு தவறு.
நீங்கள் கொடுத்திருக்கும் ஆங்கில வரிகளை கவனியுங்கள். "become incredulous" என்று இருக்கிறது. "being incredulous" என்று இல்லை.
அதாவது, லக்ஷ்மணன் சந்தேகப்பட்டான் என்றுதான் பொருள். "சந்தேகப்புத்தியுள்ள லக்ஷ்மணன்" என்பது "சந்தேகமடைந்த லக்ஷ்மணன்" என்பதில் இருந்து எவ்வளவு வேறுபட்டது என்பது உங்களுக்கு சொல்லித் தரவேண்டியதில்லை.
வந்தேமாதரம் !
என்னமோ ஐபிஎல்லில் டெக்கான் சார்ஜர்ஸ் பத்தி பதிவோன்னு வந்தேன். இந்த மேட்டர் எல்லாம் எனக்கு என்ன தெரியும். ஓரமா நின்னு வேடிக்கை பார்க்கறேன்.
ReplyDelete